• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

Recommended Posts

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவுத் தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்திருந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 • 20200502_093006-1024x473.jpg?189db0&189d
 • 20200502_095322-1024x473.jpg?189db0&189d
 • 20200502_092711-1024x473.jpg?189db0&189d
 • IMG-20200502-WA0016-1024x768.jpg?189db0&
 • 20200502_092820-1024x473.jpg?189db0&189d
 
https://newuthayan.com/நவாலி-சிலோன்-மிசன்-இடு/

Share this post

Link to post
Share on other sites

மாவீரரின் கல்லறைகளை சேதப்படுத்திய இராணுவத்தின் செயலுக்கும், இவர்களின்  இந்த ஈன செயலுக்கும் வித்தியாசம் இல்லை. வாழ்வை முடித்து மண்ணில் அமைதியில் உறங்குபவர்களை, ஏன் இப்படி அலைக்கழித்து தம்மையே இழிவு படுத்திக்கொள்கிறார்கள்? 

Share this post

Link to post
Share on other sites

போதையில் திரியும் சொறிலங்கா ராணுவம் இதையும் மாவீரர் கல்லறை என்டு நினைச்சிருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இப்படியான செய்தி போனவருடமும் படித்த சேதிபோல இருக்கு 

தற்போது மயானங்களில் கல்லறைகள் கட்டத்தடை எங்கள் பகுதியில் கட்டியது மட்டும் இருக்கிறது காரணம் இடப்பற்றாக்குறை 

எங்கள் ஊரில் பெட்டி கூட மண்ணில் புதைப்பதில்லை அதை மயானத்தின் ஒரு பகுதியில் எரித்துவிட்டு வருவோம் சில நேரம் மீள் சுழற்ச்சிக்கு எடுத்து செல்கிறார்கள் சிலர் அதனால் 

Share this post

Link to post
Share on other sites

சிலர் ராணுவத்தின்மீது போட்டுவிட்டு தப்ப பார்க்கிறர்கள்। உண்மையை ஏற்றுக்கொள்ள சிலருக்கு கஷ்ட்டமாக இருக்கிறது। இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு எது உண்மை என்று தெரியும்। இதுதான் கிறிஸ்தவர்களின் நிலைமை। மயானத்தில் கூட நிம்மதியாக இருக்கமுடியாது நிலைமை। 

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, Kapithan said:

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

கல்லறைகள் போற்றப்படுகின்றன. கல்லறைகளை பஸ்ஸிலோ எந்த வாகனத்தில் போனாலும் பிரார்த்திக்கின்றது வழக்கம், இது பலர் சிங்களவர் கூட.

சிங்கள காடையர் எங்கள் மாவீர ர்களது கல்லறைகளை உழுது இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டார்கள், அனுபவிப்பார்கள் சாக முதல்😡😡

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, உடையார் said:

குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தலைநகரம் உட்பட பல இடங்களில் நடாத்திய சூத்திரதாரிகள்  யார் என இன்னமும் தெரியா நிலையில், அவர்களின் வேலையாக ஏன் இருக்காது? 

Share this post

Link to post
Share on other sites

தமிழின விரோதிகளின் செயல்கள் கடும் கண்டனத்துக்குரியது.

இவை தமிழின விரோதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளாக இருக்கும் சாத்தியம் அதிகம்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஒரு கைகூலிக் கும்பல் இவ்வாறான நாசகார வேலைகளை செய்ய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் இன்னொரு கைகூலிக் கும்பல் இதை திரித்து சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஈடுபட முயல்வதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.

 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம்। இதில் கருது எழுதுபவர்களின் கருத்திலிருந்து யார் இதை உண்மையாய் செய்தவர்கள் என்பது நல்ல அறிவுள்ளவர்களுக்கு விளங்கும்। களவெடுத்த கள்ளன் களவெடுத்ததை ஒத்துக்கொள்ளவா போகிறான்। இன்னும் உடைச்சிப்போட்டு மத்தவனை கை நீட்டுங்கோ। அதுக்கும் பச்சை குத்த ஒரு கூடடம் இருக்கு।தொப்பி அளவாக இருந்தால் போட்டுக்கொள்ளவும்।  

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஒரு கைகூலிக் கும்பல் இவ்வாறான நாசகார வேலைகளை செய்ய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் இன்னொரு கைகூலிக் கும்பல் இதை திரித்து சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஈடுபட முயல்வதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.

மிக அருமையான கருத்து. தொப்பி அளவா உள்ளவர்கள் படபடப்பில் தூக்கி போட்டுவிட்டனர்.

Share this post

Link to post
Share on other sites
On 3/5/2020 at 06:54, Vankalayan said:

சிலர் ராணுவத்தின்மீது போட்டுவிட்டு தப்ப பார்க்கிறர்கள்। உண்மையை ஏற்றுக்கொள்ள சிலருக்கு கஷ்ட்டமாக இருக்கிறது। இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு எது உண்மை என்று தெரியும்। இதுதான் கிறிஸ்தவர்களின் நிலைமை। மயானத்தில் கூட நிம்மதியாக இருக்கமுடியாது நிலைமை। 

இப்படித்தான் வவுணதீவு பொலிஸரணில் இருந்த பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதும் அது முன்னாள் புலி உறுப்பினர் எனவும் அவர்கிளிநொச்சியிலிருந்து வந்தவர் எனவும் கதைகள் அடிபட்டு கைதும் நடந்தன ஆனால் ஷகரானின் தாக்குதலின் பின்னரே அந்த தாக்குதலை செய்தவர்கள் யாரென கண்டுபிடிக்க முடிந்தது.

இனங்களுக்குள் சண்டையை தூண்டுபவர்கள் எங்கேயும் இருக்கலாம்  இதே தாக்குதல் போன வருடம் நடந்து உங்களுக்கு தெரியுமா வங்காலயன் 

Share this post

Link to post
Share on other sites

jaffna.jpg

நவாலியில் அமெரிக்கன் சிலோன் மிசனின் இடுகாட்டில் கல்வெட்டுகள் சேதம் – ஐவர் கைது

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

குறித்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://athavannews.com/நவாலியில்-அமெரிக்கன்-சில/

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இப்போது தெரியுதனே யார் இந்த அநியாயத்தை செய்தது என்று। இப்போது தொப்பியுடனேயே ஓடி விடுவார்கள்। இனி என்ன குடித்து விட்டு வெறியில் (மத) வந்து செய்தார்கள் என்று தொப்பியை மாற்றிவிடுவார்கள்। இந்த தி மு க காரரை திருத்தவே முடியாது। இருந்தாலும் இந்த காவலிகள் சடடப்படி தண்டிக்கப்பட வேண்டும்। எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Vankalayan said:

எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

சாட்டையடி. இது பைபில் வசனம்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Vankalayan said:

இப்போது தெரியுதனே யார் இந்த அநியாயத்தை செய்தது என்று। இப்போது தொப்பியுடனேயே ஓடி விடுவார்கள்। இனி என்ன குடித்து விட்டு வெறியில் (மத) வந்து செய்தார்கள் என்று தொப்பியை மாற்றிவிடுவார்கள்। இந்த தி மு க காரரை திருத்தவே முடியாது। இருந்தாலும் இந்த காவலிகள் சடடப்படி தண்டிக்கப்பட வேண்டும்। எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவார்; ஆனால் கேதீஸ்வரத்தில் ஆதரத்துடன் நடந்த அப்பட்டமான வன்செயலுக்கு அண்ணர்  வாயே திறக்க மாட்டார்.

அதேபோல் அடாவடி மினிஸ்ட்டரின் ஆக்கள் மன்னார் முழுவதும் கிறிஸ்த்தவ மத சிலைகளை உடைத்த போது தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அண்ணருக்கு வராத கோபம் இங்க மட்டும் வந்து விடும்.

On 2/5/2020 at 16:26, Kapithan said:

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

சமய ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் என்றும்  இருந்ததில்லை, ஆனால் இதை ஊக்குவிக்க சில கும்பல்கள் முயல்கின்றன.

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, Dash said:

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவார்; ஆனால் கேதீஸ்வரத்தில் ஆதரத்துடன் நடந்த அப்பட்டமான வன்செயலுக்கு அண்ணர்  வாயே திறக்க மாட்டார்.

அதேபோல் அடாவடி மினிஸ்ட்டரின் ஆக்கள் மன்னார் முழுவதும் கிறிஸ்த்தவ மத சிலைகளை உடைத்த போது தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அண்ணருக்கு வராத கோபம் இங்க மட்டும் வந்து விடும்.

சமய ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் என்றும்  இருந்ததில்லை, ஆனால் இதை ஊக்குவிக்க சில கும்பல்கள் முயல்கின்றன.

Dash சமய ரீதியாக நான் அறிந்தவரை பிரச்சனைகள் இருந்ததில்லை, இப்பதான் சிலரின் தூண்டுதல்களால் இது நடக்கின்றது.

உங்களுக்கும் தெரிந்திருக்கும் மனிப்பாயில் எப்படி ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்று

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

அது குழப்பங்களை உருவாக்க முயலும் கயவர்களின் கட்டுக்கதை.அதை தான் அவர்கள் கொஞ்ச காலமா இங்க உள்ள பாதாள குழுக்களின் உதவியுடன் செய்து வருகின்றனர்.

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

மேலே உள்ள சில மத வெறியர்களின் கருத்தை வைத்து யார் செய்தார்கள் என்று நல்லாகவே தெரிகின்றது। கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this