Jump to content

இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு

meenatchi-thirukalyanam-online  
 

மதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

அதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நித்திய பூஜைகளுடன் மே 4-ம் தேதி(நாளை) காலை 9.05 மணியிலிருந்து 9.29 மணிக்குள் சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, 4 சிவாச்சாரியார்கள் மட்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை வீட்டிலிருந்தபடியே பக்தர்கள் தரிசிக்க நாளை காலை 8.40 மணிமுதல்10.15 மணிவரை ‘இந்து தமிழ்’ஆன்லைனில் ஏற்பாடு செய்துள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க https://www.hindutamil.in/special/meenakshithirukkalyanam எனும் வலைப்பக்கத்தில் இணைந் திருங்கள்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/552563-meenatchi-thirukalyanam-online.html

 

Link to comment
Share on other sites

திருமணமாகி வாழ்த்துக்கள்  தொடங்கும் புது மண தம்பதியர்களுக்கு  வாழ்த்துக்கள். 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎂🎂🎂🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

 

சென்னை,
 
மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் என்றால் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் தனது கையில் கென்டியை சுமந்து, மீனாட்சி பட்டணத்திற்கு செல்வார்.
 
இதே வேளையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தன் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாணத்தில் பங்கேற்பர். இதில் குன்றத்து பவளக்கனிவாய் பெருமாள், தனது தங்கை மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுப்பார். இத்தகைய நடைமுறை காலம் காலமாக நடைபெற்று வந்துள்ளது.
 
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவதற்கு முதல் நாளே திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு செல்வது மரபு. அந்த வகையில் நாளை, திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி பாரம்பரிய வழக்கப்படி இன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க சகல பரிவாரங்களோடு பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்ல வேண்டும்.
 
ஆனால் ஊரடங்கு காரணமாக சாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆகவே பவளக்கனிவாய் பெருமாள் தன் தங்கையின் திருக்கல் யாணத்தில் தாரை வார்த்து கொடுக்காத நிலை வர லாற்றிலேயே முதல் முறையாக கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத் துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று இருந்தால் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல் யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று தாரை வார்த்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அம்மனின் திருக்கல்யாணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வேண்டுகோளுக் காகவும் உற்சவமூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில
மதுரையை ஆளும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவம்  காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெற்றது.  வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. 4 சிவாச்சாரியர்கள் மட்டுமே இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
 
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவம் நேரடியாக பார்க்க முடியாத பக்தர்களின் கவலையை போக்கும் வகையில் யு டுயூப் சேனலில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீனாட்சிக்கும், பிரியாவிடை அம்மனுக்கும் மாலை மாற்றி திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை யுடுயூப்பில் பார்த்து பெண்கள் பக்தி பரவசத்துடன் தாலி மாற்றிக்கொண்டனர்.
 
ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் முகூர்த்த நேரத்தில் பெண் பக்தர்கள் புது தாலி மாற்றிகொள்வார்கள். கோவிலில் மஞ்சள் சரடு கொடுப்பார்கள். இந்த ஆண்டு பெண் பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்து பெண் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரலையில் பார்த்து தாலி மாற்றிக்கொண்டனர்.
 
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகமவிதிப்படி கோவில் வளாகத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து மதுரை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இருப்பினும் பக்தர்கள் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் பல நூறு ஆண்டுகளாக இடைநில்லாமல் நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆகமவிதிப்படி நடைபெற உள்ளது.
 
இதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசுவரூபம் நடைபெறும். அதன்பின்னர் கள்ளழகர் ஆண்டாள் சன்னதி முன்பாக எழுந்தருள்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு எதிர் சேவை, அலங்கார சேவை, 10 மணிக்கு தங்கக்குதிரை வாகன சேவையும், 12 மணிக்கு சைத்ரோ உபசார சேவையும் நடைபெறும்.
 
தொடர்ந்து அன்று பகல் 1.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கருட சேவையும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் மற்றும் புராணம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு, இரவு 8 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் இருப்பிடம் செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
 
அழகர் மலையிலேயே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியும் நேரலையில் ஒளிபரப்பாகிறது
 
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/04141338/Meenakshi-Thirukalyanam-Chithirai-Festival-Wont-See.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் சுருங்கியிருக்கலாம், ஆனா விருந்து சுருங்காது!- பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை நிர்வாகி பேட்டி

madurai-meenatchi-thirukalyanam  
 

மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்தின் பிரம்மாண்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடந்த ஆண்டு ஒரே நாளில் சுமார் 90 ஆயிரம் பேர் அந்த விருந்தில் பங்கேற்றார்கள். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவே நின்றுபோயிற்று. ஆனாலும், கரோனாவால் உணவின்றித் தவிப்போருக்குப் படியளந்துகொண்டிருக்கிறாள் அன்னை மீனாட்சி. 15 நாட்களாக நடக்கும் இந்த விருந்து, ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று அறிவித்திருக்கிறது, பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை. அதன் நிர்வாகி சாமுண்டி விவேகானந்தனுடன் பேசினேன்.

திருக்கல்யாண விருந்தை கரோனா நிவாரணமாக மாற்றும் யோசனை எப்படி வந்தது?

மீனாட்சி திருக்கல்யாணத்தப்ப அன்னதானம் வழங்குறதை 30 வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கோம். இந்தவாட்டி நாமயெல்லாம் ஊரடங்கால முடங்கியிருக்கோம். இந்த நேரத்துல நண்பர் ஒருத்தர், “நாங்க கரோனா நிவாரணம் வழங்கப்போறோம், மளிகைப் பொருட்கள் வாங்கித் தர்றீங்களா?”ன்னு கேட்டாரு. “சரிங்க பட்டியல் அனுப்புங்க”ன்னு சொன்னேன். அதேநேரத்துல, “ஏன் இந்த வேலைய நாமே செய்யக் கூடாது. மளிகைப் பொருட்களா தர்றதுக்குப் பதில், சமைச்சே கொடுத்திடலாமே?”ன்னு தோணுச்சி. பள்ளி வளாகத்துல உணவு பரிமாறக் கூடாது, மொத்தப் பொட்டலங்களாகத்தான் வழங்கணும், கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு ஆட்சியர் அனுமதி தந்தார். முதல் ஆர்டர் கொடுத்ததே மதுரை மாநகராட்சி ஆணையர்தான். “மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள வீடற்றவர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு 1,200 உணவுப் பொட்டலங்கள் தேவை” என்றார். அதன்படி, சித்திரை 3 ராத்திரிலருந்து சமைச்சுக்கொடுக்க ஆரம்பிச்சோம்.

பாதுகாப்பு வழிமுறைகளை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள்?

சமையல்காரங்க 15 பேரு, தன்னார்வலர்கள் 55 பேருன்னு அத்தனை பேரும் முகக்கவசம், கையுறை அணிஞ்சுதான் வேலை செய்யறோம். தினமும் மருத்துவக் குழுவினர் வந்து, அத்தனை பேரோட உடல்நிலையையும் பரிசோதிக்கிறாங்க. வழக்கமா மீனாட்சி கல்யாண விருந்துக்குப் பெரிய பெரிய பணக்காரங்கள்லருந்து ரேஷன் சேலை கட்டிய ஏழை மூதாட்டி வரைக்கும் யார் என்ன சமையல் பொருட்களைக் கொடுத்தாலும் வாங்கிக்குவோம். ஆனா, கூட்டம் கூடுறதைத் தவிர்க்குறதுக்காகவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளோட யோசனைப்படியும் அந்த நடைமுறையை மாத்திட்டோம். இன்ன வேணும் என்று மொத்தமாக உபயதாரர்களிடம் சொல்லிவிடுகிறோம். அவர்களே வாங்கித் தருகிறார்கள்.

இப்போது எத்தனை பேருக்குச் சமையல் நடக்கிறது?

பசியில் வாடுவோருக்கும், நோய்த் தடுப்புப் பணியில் இருப்போருக்கும் காவல் துறை, மாவட்ட நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையிலருந்தும் வாங்கிட்டுப் போறாங்க. 1,200-லருந்து படிப்படியா கூடி, இப்ப தினசரி 7,000 பொட்டலங்க போகுது. ரவா கிச்சடி, சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, இட்லி, ஃபிரைட் ரைஸ், புளியோதரை என்று ஒவ்வொரு நேரத்துக்கும் வேறவேற உணவுகளைத் தயாரிக்கிறோம். மதிய, இரவு உணவு மட்டுமே பொட்டலமாக வழங்குறோம். தூய்மைப் பணியாளர்களின் வேலை காலை நேரம்தான் என்பதால், அவர்களுக்கு மட்டும் பரிமாறுகிறோம். அன்னை மீனாட்சி மற்றவர்களுக்கெல்லாம் உணவுப் பொட்டலம் வழங்குகிறாள். தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும்தான் உட்கார வைத்துப் பரிமாறுகிறாள்.

கல்யாண விருந்து, கரோனா நிவாரணப் பணி. என்ன வித்தியாசம்?

திருக்கல்யாணத்துக்கு ஒவ்வொரு நேரத்துக்கும் குவிண்டால் கணக்குல சமையல் நடக்கும். இப்ப ஒரு நாளைக்கே ஆயிரம் கிலோ அரிசிக்கு உட்பட்டுதான் சமையல் நடக்குதுங்கிறதால, நின்னு நிதானிச்சு சுவையா சமைக்க முடியுது. திருக்கல்யாணத்துல நடக்கிறது விருந்து; இது பசியமர்த்தும் பணி. அதுவும் பஞ்சத்துக்கு நிகரான பேரிடர் காலத்துல. மத்தபடி சாதி, மதம் வேறுபாடில்லாமத்தான் எல்லா மக்களுக்கும் எப்போதும்போல எல்லாம் நடக்குது. நேத்தைக்கூட அழகர்கோவில் அப்பன்திருப்பதி பக்கம் நரிக்குறவர் காலனியிலருந்து ஒரு வேண்டுகோள் வந்துச்சி. உடனே, எறநூறு பொட்டலங்களை அனுப்புனோம். ஊரடங்கு முடியுற வரைக்கும் இந்தப் பசியமர்த்துற வேலை போகும். இதெல்லாம் நாங்க செய்யல. அன்னை மீனாட்சிதான் படியளக்குறா, நாங்க வெறும் கரண்டிதான். பேப்பர்ல போட்டோ போடுறதா இருந்தாக்கூட அவளோட படத்தையே போடுங்க.

https://www.hindutamil.in/news/opinion/columns/552710-madurai-meenatchi-thirukalyanam-2.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு எதிராக: முகநூலில் கருத்து பதிவிட்ட 8 பேர் மீது வழக்கு

8-arrested-for-abusing-meenkashi-thirukalyanam  

மதுரை

மதுரையில் எளிமையாக நடந்த மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கரோனா தடுப்பு ஊரடங்கால் இவ்வாண்டு நடைபெற வேண்டிய பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோயில் பட்டர்கள் மற்றும் மிக குறைந்த நபர்களை கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி கடந்த 4-ம் தேதி நடந்தது. இந்நிகழ்வை ஆன் லைன் மூலம் பக்தர்கள் பார்க்க, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்நிலையில் மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை கொச்சைப் படுத்தும் வகையிலும், இந்து மதத்தை பின்பற்றுவோரை அவ மதிக்கும் நோக்கிலும் முகநூலில் சில எதிரான தகவல்களை ஒருசிலர் பதிவிட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மதுரை யிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் குவிந்தன. மீனாட்சி கோயில் காவல் நிலையத்திற்கு ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் அனுப்பிய ஆன்லைன் புகாரின்பேரில், 6 பேர் மீது வழக்கு பதிவு, சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரிக்கின்றனர்.

இதே போன்று மதுரை எஸ்எஸ்.காலனி காவல் நிலையத்திலும் வழக்கறிஞர் சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் ஆன்டோ லியோனி, கலீம் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.hindutamil.in/news/crime/555702-8-arrested-for-abusing-meenkashi-thirukalyanam-1.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.