Jump to content

எப்பொழுது பாடசாலைகள் திறக்கப்படும்? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?


Recommended Posts

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் -கல்வி அமைச்சு அனுப்பியுள்ள ஆலோசனை

கொரோனா அச்சுறுத்லை அடுத்து மூப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலைமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய குறித்த வழிகாட்டலை தயாரிப்பது அவசியமாகும்.

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144404?ref=imp-news

Link to comment
Share on other sites

மாணவர்களின் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்டை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பொது தேர்தல் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளமையினால் பரீட்சைகள் தாமதமாகுமா என பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்தவர், “நாட்டின் தற்போதைய நிலைமையை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இன்னமும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தீர்மானம் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144603?ref=imp-news

Link to comment
Share on other sites

நான்கு கட்டங்களாக கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் முழுமையான விபரம்!

வடமாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வடமாகாணத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தலுக்காக மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வடமாகாண கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மற்றும் அலுவலர்களுடன் கடந்த மே 21ம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய அரசினால் அறிவிக்கப்படும் திகதியில் இருந்து 4 கட்டங்களாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

முதலாவது கட்டமாக பாடசாலைகளை தயார்படுத்தும் துப்புரவு செய்தலும் (01 வாரம்) இதில் அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைச் சமூகத்தினரின் பங்கேற்புடன் கைகழுவும் நிலையம், நீர் வசதிகளை ஏற்படுத்தல், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக சிரமதானம் மேற்கொள்ளல்.

அத்துடன் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கான புதிய நேரசூசிகள் தயாரிப்பு, பாடங்களை நடாத்துதல் தொடர்பாக ஆசிரியர்களுடன் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ளல், சமூக இடைவெளியைப் பேணக்கூடியவாறு ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருக்கத்தக்கவாறு ஏற்பாடு செய்தலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களைப் பிரித்து இரு வேளை பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் திட்டமிடலை மேற்கொள்ளலும்.

இரண்டாம் கட்டமாக தரம் 10, 11, 12, 13 வகுப்புக்களை ஆரம்பித்தல் (2 வாரங்கள்) இதில் தரம் 10, 11, 12, 13 வகுப்புக்களை ஆரம்பித்தலும் நாளொன்றுக்கு தரம் 12, 13 இற்கு 4.30 மணித்தியாலங்களும் பாடங்கள் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக தரம் 5, 6, 7, 8 என்பவற்றை ஆரம்பித்தல் (01 வாரம் இதில் தரம் 5, 6, 7, 8, 9 வகுப்புகளை ஆரம்பித்து தரம் 5 இற்கு நாளொன்றுக்கு மூன்று மணித்தியாலங்களும் தரம் 6 தொடக்கம் 11 வரை 4 மணித்தியாலங்களும் 12, 13 இற்கு 4.30 மணித்தியாலங்களும் பாடசாலைகளை நடாத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக நிலைமைகளை அனுசரித்து பாடசாலையின் சகல நடவடிக்கைகளையும் வழமையான நிலைக்குக் கொண்டு வருதல். அதாவது தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்றவறாகவும் கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும் மாணவர் வரவு, ஆசிரியர் வரவு மற்றும் வழமையான நேரசூசி அமுலாக்கம் என்பவற்றை நியம நிலைக்குக் கொண்டு வருவதுடன் பாடசாலையின் சகல செயற்பாடுகளையும் அதன்பிரகாரம் தொடர்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள், கை கழுவும் செயற்பாடு, முகக்கவசம் அணிந்திருத்தல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதுடன் பாடசாலையில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு சுகவீனம் ஏற்படும் ஓர் நிலையில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பிலும் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களாலும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையைத் திறப்பது தொடர்பில் அரச அறிவித்தலை எதிர்பார்த்துள்ளோம்.

பாடசாலைகளில் கைகழுவும் நிலையங்கள், நீர்வளங்கல் வசதிகள், சுகவீன அறை ஏற்படுத்தல் என்பவற்றிற்காக மத்திய கல்வி அமைச்சினது 9.9 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின் பிரமாணங்களுக்கு அமைய பாடசாலைகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வெப்பநிலை அளவிடும் கருவி, சுகவீன ஓய்வு அறைக்கான தளபாடங்கள் என்பன நேரடியாக மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவை தொடர்பில் கிடைக்கப்பெறும் உரிய நிதி பாடசாலைகளுக்கு விடுவிக்கப்படும்.

இதன் பொருட்டு பாடசாலைகளில் கைகழுவும் நிலையம் மற்றும் நீர் வழங்கல் வசதிகளை ஏற்படுத்தும் ஒத்துழைப்புக்காக வடமாகாணத்தின் 35 கல்விஅ கோட்டங்களிலும் தலா ஒவ்வொரு பாடசாலை வீதம் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க அமைப்பும் கிளிநொச்சி, துணுக்காய் ஆகிய கல்வி நிலையங்களின் மொத்தம் 75 பாடசாலைகளுக்கு இலங்கை சேவ் த சில்ரன் அமைப்பும் மற்றும் கிளிநொச்சியின் 12 பாடசாலைகளுக்கு கொய்கா (KOICA) செயற்திட்டத்தின் கீழ் OFERR நிறுவனமும் முன்வந்துள்ளன.

கொவிட் - 19 பரவல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட வசதிகள் பாடசாலைகளில் போதுமானவை அல்ல என்பதுடன், இவற்றை ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் விசேட உதவிகளும் போதுமானவை அல்ல.

எனவே இது தொடர்பில் பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் முதலான சகல சமூக நிறுவனங்களும் தத்தமது பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144671

Link to comment
Share on other sites

மூடர்களின் கேலிக் கூத்துகளை ஒத்த சிங்கள-பௌத்த அரசின் கேலிக் கூத்துகளை அறிய இந்த திரியில் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புக்களே போதுமானது.

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி வெளியானது - முழு விபரம் உள்ளே

கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் திறக்கப்பட உள்ளது.

ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில் பாடசாலைகள் 4 கட்டங்களாக திறக்கப்பட உள்ளன.

முதற்கட்டம்

இதன்படி ஜூலை 29ஆம் திகதி முதற்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை அதிபர் ,ஆசிரியர் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை தரவுள்ளனர்.

இரண்டாவது கட்டம்

இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக ஜூலை 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது தரம் 13, தரம் 11, தரம் 5 ஆகிய வகுப்புகள் ஆரம்பமாகும்.

மூன்றாம் கட்டம்

ஜூலை 20ஆம் திகதி 12 மற்றும் 10ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

நான்காம் கட்டம்

ஜூலை 26ஆம் திகதி தரம் 3,4,6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.

முதலாம், இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் .

அத்துடன், உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செப்டம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 6ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறும்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இணைய வழிக் கல்வியை எதிரியாக பார்க்க வேண்டாம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144875?ref=imp-news

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி குறித்து ஆராய குழு நியமனம்

Exam.jpg

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அதிபர்களுடாக அமைச்சிற்கு வழங்குமாறு அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்த கருத்துகள் மற்றும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் இம்முறை உயர்தரப் பரீட்சையை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினத்தில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியில் பரீட்சையை நடத்த முடியும் என பல தரப்பினரும் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/உயர்தரப்-பரீட்சையை-நடத்த/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.