Jump to content

கால்நடைகளுக்குத் தக்காளி: கடும் விலை சரிவால் பயிரிட்ட தொகை கூடக் கிடைக்காத விரக்தியில் விவசாயிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கால்நடைகளுக்குத் தக்காளி: கடும் விலை சரிவால் பயிரிட்ட தொகை கூடக் கிடைக்காத விரக்தியில் விவசாயிகள்

farmers-are-in-upset

ஓசூர் பகுதியில் தக்காளி உற்பத்தி அதிகரித்த நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அவற்றை விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியாமல் தேக்கமடைந்துள்ளதால் மொத்த விலையில் ரூ.1க்கும் சில்லறை விலையில் ரூ.5க்கும் தக்காளி விலை சரிவடைந்துள்ளது. இதனால் பயிரிட்ட செலவு கூடக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கால்நடைகளுக்குத் தக்காளியை உணவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக தக்காளி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், பீட்ரூட் உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் தரமான மற்றும் சுவைமிகுந்த காய்கறிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி உற்பத்தி அதிகரித்தும், விற்பனையில் சரிவும் ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கான வெளியூர்ச் சந்தை முற்றிலுமாகக் குறைந்துள்ளதே காரணமாகும். குறிப்பாக தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பொதுவாக ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டு மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.10 என்ற விலையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லாபம் ஈட்டி வந்த விவசாயிகளுக்கு தற்போது தக்காளியின் விலை, மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.1 முதல் ரூ.2 வரை விலை சரிவடைந்துள்ளதால், உரச் செலவு, பறிப்புக் கூலி உள்ளிட்ட பயிரிட்ட செலவு கூடக் கிடைக்காமல் தோட்டத்தில் நன்கு விளைந்துள்ள தக்காளிகளைக் கால்நடைகளுக்கு உணவாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கெலமங்கலம் ஒன்றியம், ஜக்கேரி ஊராட்சி, மல்லேபள்ளம் கிராமத்தில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி சிவப்பா கூறியதாவது:

''இங்கு 3 ஏக்கரில் தக்காளி பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தில் தக்காளிச் செடிகள் நாற்று நடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களில் பலன் கொடுக்க ஆரம்பித்து தொடர்ந்து அடுத்த 3 மாதங்கள் வரை பலன் கொடுத்து வரும். ஒரு ஏக்கரில் 40 டன் முதல் 50 டன் வரை தக்காளி அறுவடை செய்யலாம். இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்குக்கு முன்பு வரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வந்தது.

வெளியூர்களுக்கும் தக்காளிகளை அனுப்பி வந்தோம். ஊரடங்கு அறிவித்த பிறகு தக்காளி தேக்கமடைந்து விலை குறைந்துவிட்டது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.1 க்கு கூட வாங்க ஆளில்லை. இதனால் நன்கு விளைந்துள்ள தக்காளியை அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே விட்டு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை குறைந்துள்ளதால் தக்காளியை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இப்பகுதியில் தக்காளி பயிரிட செலவு செய்த விவசாயிகளுக்கு வாங்கிய கடனைக் கூட கொடுக்கமுடியாமல் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியாத தக்காளியை அறுவடை செய்தாலும் கூலி கொடுக்க வழியின்றி தக்காளி தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகிறோம். ஆகவே தக்காளி பயிரிட்டு பெரும் இழப்பைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்''.

இவ்வாறு விவசாயி சிவப்பா கூறினார்.

இதுகுறித்து சூளகிரி உதவி வேளாண் அலுவலர் தமிழ்வேந்தன் கூறுகையில், ''நடப்பாண்டில் சூளகிரி, ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி விளைச்சல் இருமடங்காக உயர்ந்துள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க முடியாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விலை சரிவடைந்துள்ளது'' என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/552779-farmers-are-in-upset-2.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.