Sign in to follow this  
மோகன்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கல்

Recommended Posts

யாழ் இணையத்தினால் கடந்த வருடம் விளம்பரப்பகுதி ஒன்று தொடக்கப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகள் அனைத்தும் தாயகத்திற்கே வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.விபரம் இங்கே

அந்த வகையில் கடந்த வருடத்திலிருந்து கிடக்கப்பெற்ற பணம் அனைத்தும் TNRA அமைப்பிற்கு நேரடியாக கிடைப்பதற்குரிய வழிவகையினைச் செய்திருந்தோம். ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் பணம் ஒரு திட்டத்திற்குரியதாக போதுமானதாக வரும் போது அதை யாழ் இணையத்தின் பெயரில் ஒரு திட்டமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும் என TNRA அமைப்புடன் கதைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் இன்றைய நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு மக்களின் உடனடித் தேவைக்கு கிடைக்கப்பெற்ற பணத்தின் ஒரு பகுதி உலர் உணவுப் பொருட்களாக வழங்கப்பட்டுள்ளது.

Quote

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர்உணவு வழங்கல்

கொரோனாவின் தாக்கமும் ஊரடங்கும் தொடர்ந்து அமுலில் இருப்பதால் தொடர்ந்தும் மக்கள் உணவுத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல தன்னார்வ உதவி நிறுவனங்கள் தீவிரமாக செயற்பட்டுவருகின்ற நிலையிலும் சில குடும்பங்கள் அங்காங்கே இந்த உதவிகளை பெற்றுக் கொள்ளாமல் தவித்து வந்தனர்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் குறிஞ்சாமுனை, புளியடிமடு, கன்னங்குடா, நாவற்குடா போன்ற இடங்களில் இனங்காணப்பட்ட 30 குடும்பங்களுக்கு இன்று தலா 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.


இதற்கான நிதியுதவியை யாழ் இணையத்தள விளம்பர சேவையினூடாக எமது உறவுகள் எமக்கு வழங்கியிருந்தனர். யாழ் இணையத்தளத்திற்கும் விளம்பர சேவையினூடாக எமக்கு உதவிவழங்கிய உறவுகளுக்கும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் மனதார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


ஊரடங்கு, கொரோனா தொற்று, பொருட்களுக்கான தட்டுப்பாடு, அநியாய விலை போன்ற நெருக்கடிகள் மத்தியிலும் உதவி சென்றடையாத குடும்பங்களை இனங்கண்டும், பொருட்களை கொள்வனவு செய்து பொட்டலங்கள் செய்து மக்களிடம் சேர்ப்பித்த நண்பன் கோணேசுக்கும் அவரது குழுவினருக்கும் எமது நன்றி கலந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
TNRA நிர்வாகம்
04.05.2020

 

tnra.png

94932556_1166358417035313_3150456368150872064_n.jpg95280717_1121713358168788_278908501823062016_n.jpg95488837_268878174248321_1579524177868619776_n.jpg95598637_534441184100562_887872213707915264_n.jpg

 

யாழ் இணையத்திற்கு விளம்பரம் / அறிவித்தல் தந்த நிழலி, தொடர்ச்சியாக விளம்பரங்களைத் தரும் வல்வை சகாரா, உடையார் (விளம்பரத் தொகையுடன் மேலதிகத் தொகையும் வழங்கியிருந்தார்) மற்றும் மக்களுக்கான உதவி வழங்கவென துல்பன் 100USD, தமிழ்சிறி199USD வழங்கியிருந்தனர். இவர்களுக்கான நன்றிக் கடிதம் TNRA அமைப்பினால் எனக்கு தரப்பட்டுள்ளது. அவை இவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

96161737_229203041697013_7500779461814517760_n.jpg

95877971_567900860773239_4914618625979056128_n.jpg

95762801_361041174856956_8993636607013683200_n.jpg

95596931_678714742916596_599742034848251904_n.jpg

95558137_885760731922567_5563103982676606976_n.jpg

95392794_257897018685228_1919835885797376000_n.jpg

95326493_238167920602646_1704475088725737472_n.jpg

  • Like 13
  • Thanks 6

Share this post


Link to post
Share on other sites

தேவையான சேவை.. தொடர வாழ்த்துக்கள். 

Share this post


Link to post
Share on other sites

சேவைக்கு நன்றி.  எம்மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

காலத்தின் தேவை அறிந்து கொடை கொடுத்த வள்ளல்களுக்கு பாராட்டுக்கள்.

அதை உரிய இடங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் கொண்டு போய் சேர்த்த யாழ் இணையத்துக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இரண்டு  நாட்களில்....  "மின்னல்"  வேகத்தில் செயல்பட்டு,
பாதிக்கப் பட்ட மக்களை... தேர்வு செய்து, 
அவர்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, 
சந்பந்தப் பட்ட மக்களிடம் கையளித்த...  TNRA அமைப்பினருக்கும்,  
யாழ். இணையத்திற்கும், நன்றிகள் பல. 
👏

பொருட்களை... கொண்டு போய் சேர்ப்பித்த, வேகம்... பிரமிக்க வைக்கின்றது. :)

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

சம்பத்தபட்ட  அனைவருக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.....!   💐

Share this post


Link to post
Share on other sites

தொடரட்டும் யாழ் கள நல்லுள்ளங்களின் சேவை ..பங்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ...

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்திற்கும் TNRA கும் பாராட்டுக்கள், உங்கள் சேவை தொடரட்டும்

Share this post


Link to post
Share on other sites

நேற்று எனக்கு, TNRA  ஒன்றியத்தினரால்... பணம் கிடைத்தமைக்கான, 
நன்றிக் கடிதம் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. 

விரைந்து செயல் பட்டமைக்காக TNRA நிர்வாகத்தினருக்கும், 
சேவையாளர்களுக்கும்... மிகவும்  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

TNRA  ஒன்றியத்தினரால்... பணம் கிடைத்தமைக்கான, 
நன்றிக் கடிதம் யாழ் இணைய பொறுப்பாளர் மோகனால் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. தொடர்ந்தும் இணைந்திருப்போம். யாழ் இணையத்தின் பணி தொடரட்டும். இணைந்து செயற்படும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

எனக்கும்  TNRA  ஒன்றியத்தினரால்  பணம் கிடைத்தமைக்கான, 
நன்றிக் கடிதம் யாழ் இணைய பொறுப்பாளர் மோகண்ணாவால்  அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. நன்றிகள் அனைவருக்கும் 

Share this post


Link to post
Share on other sites

மிகமிக அர்த்தமுள்ள பணிகள் தொடரட்டும்!

Share this post


Link to post
Share on other sites

பயனுள்ள சேவை 

Share this post


Link to post
Share on other sites

மிகச்சிறப்பான முயற்சி, சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this