Jump to content

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் : மட்டக்குளி பள்ளிவாசல் ஒன்றில் இயங்கிய அலுவலகத்துக்கு சீல் - பல ஆவணங்கள் மீட்பு


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் நடாத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் , கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2 ஆம் மாடியில் உள்ள அறையொன்றில் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அங்கிருந்து பல ஆவணங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்டவை சி.ஐ.டியால் மீட்கப்பட்டதாகவும், தற்போது அவ்வறைக்கு சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வீரகேசரியிடம் தெரிவித்தார்.

இதனைவிட குறித்த சந்தேக நபரின் அமைப்பின் பிரதான அலுவலகம் புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதுவும் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்விரு இடங்களில் இருந்தும் மீட்கப்பட்ட ஆவணங்கள், பற்றுச் சீட்டுக்கள், புத்தகங்கள், சஞ்சிகளை சிறப்பு குழு ஆராய்ந்து வருவதாகவும், அவ்வமைப்புக்கு நிதி அளித்தவர்கள் உள்ளிட்ட விடயங்களை கண்டறிய விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு நபர் ஒருவரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தது. கைது செய்யப்ப்ட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த நபர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ள நிலையில், அதன் நிதி ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ய பயிற்சி நெறிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகள் வளவாளர்களாக வந்து சென்றுள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளின் போது பயிற்சி நெறிகளுக்கு பொறுப்பாளராகவும் குறித்த நபரே செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது.

இந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள அடிப்படைவாத போதனை முகாம்களில், பயங்கரவாதி சஹ்ரான், சங்ரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் சி.ஐ.டி. எனும் குற்ற விசாரணைத் திணைக்கள சிறப்புக் குழுவின் விசாரணைகளின் கீழ் இருந்த இந்த அரச சார்பற்ற நிறுவன பொறுப்பாளரான சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகள் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவினால் இவ்விசாரணைகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேலதிக விசாரணைகளை சி.ரி.ஐ.டி.யினர் ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.

இதனைவிட கொழும்பு காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள சங்கிரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.

இந்நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்ப்ட்டது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகள் தற்போது 14 சிறப்புக் குழுக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தற்போதும் 93 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் அட்டத்தின் கீழ் அந்த சிறப்புக் குழுக்களின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11 பொலிஸ் குழுவினரும், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்களும் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இதுவரை மொத்தமாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்ப்ட்ட சந்தேக நபர்கள் 198 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அதில் 120 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கடடினார்.

https://www.virakesari.lk/article/81365

Link to comment
Share on other sites

இப்படியே போனால் எல்லா பள்ளிகளுக்கும் சீல் வைக்க வேண்டி வரும்போல। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

இப்படியே போனால் எல்லா பள்ளிகளுக்கும் சீல் வைக்க வேண்டி வரும்போல। 

இதை நம்மமொழியில்  அரோகாரா என்று சொல்லலாமா

Link to comment
Share on other sites

ஈஸ்டர் தாக்குதல்; 2 இடங்களுக்கு சீல்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பள்ளிவாசல் ஒன்றுக்கும் புத்தளம் பகுதியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்குச் சொந்தமான நிலையமொன்றுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த பள்ளிவாசல் கற்பிட்டி பிரதேசத்தில் கைதான சந்தேக நபருக்குரியதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஈஸ்டர்-தாக்குதல்-2-இடங்களுக்கு-சீல்/175-249746

Link to comment
Share on other sites

22 hours ago, alvayan said:

இதை நம்மமொழியில்  அரோகாரா என்று சொல்லலாமா

நிச்சயமாக। இருந்தாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 மனுக்கள் விசாரணைக்கு

cropped-71-696x393-1.jpg?189db0&189db0

 

ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விவாதம், எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல்ஆரம்பிக்க உயர்நீதிமன்றம் இன்று (12) தீர்மானித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியலால் தசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதற்கமைய இந்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதங்களை நடத்துவதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்களை அனைத்து தரப்பினரும் மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது

 

https://newuthayan.com/உயிர்த்த-ஞாயிறு-தாக்குத-13/

 

Link to comment
Share on other sites

15 hours ago, உடையார் said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 மனுக்கள் விசாரணைக்கு

cropped-71-696x393-1.jpg?189db0&189db0

 

ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விவாதம், எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல்ஆரம்பிக்க உயர்நீதிமன்றம் இன்று (12) தீர்மானித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் விசேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியலால் தசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதற்கமைய இந்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதங்களை நடத்துவதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்களை அனைத்து தரப்பினரும் மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது

 

https://newuthayan.com/உயிர்த்த-ஞாயிறு-தாக்குத-13/

 

இதட்கு ஒரு சரியான முடிவு காணாமல் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை விடமாடடார்।

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைக் குழப்ப முனைப்பு; ரஞ்சித் ஆண்டகை விசனம்

bishp-300x154.jpgஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதற்கு ஒரு சிலர் முனைவதாகக் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அமரபுற பீடத்தின் தலைவர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அவர் அங்கு நேற்று சென்றிருந்தார்.

இதன் போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/43027

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டுதாரியிடம் 32 வங்கிக் கணக்குகள்

1590202338-kingsburry-2.jpg?189db0&189db0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (22) தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் இதனை வெளிப்படுத்தினார். மேலும் அவர்,

கிங்ஸ்பெரி விருந்தக தாக்குதல் நடத்தியவர் ஷஹ்ரான் ஹஷிமின் சாரதியான மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என அடையாளம் காணப்பட்டார்.

தாக்குதலுக்கு முன்தினம் இரவு, தாக்குதல்தாரி சிவப்பு காரில் ஹோட்டலுக்கு வந்ததாக தெரிவித்து அது குறித்த சி.சி.டி.வி காட்சிகளை அவர் ஆணைக்குழுவில் முன்வைத்தார்.

அவ்வாறு வருகைத்தந்தவர் ஹோட்டலின் வரவேற்பாளர்களிடம் சென்று மூலையில் உள்ள கவுண்டரைப் பற்றி விசாரித்தாகவும் அவர் அவ்வாறு விசாரிக்க காரணம் சிசிடிவி கெமராக்களில் அகப்படாதிருக்கவே என அவர் தெரிவித்தார்.

அவ்வாறு வருகைத்தந்தவரிடம் அந்த சந்தர்ப்பத்திலும் வெடிப்பொருட்கள் இருந்தனவா என ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர் அந்த சந்தர்ப்பத்திலும் வெடிப்பொருட்கள் அவரிடம் இருந்தாகவும் அவரின் உடலை அல்லது அவரின் பயண பையை பரிசோதிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் குண்டுதாரி ஹோட்டலின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு அறைக்குச் சென்றதாக அவர் சாட்சியம் வழங்கினார்.

அதே நாளில் இரவு 8.59 அளவில் குண்டுதாரி ஹோட்டலில் இருந்து புறப்பட்டதாகவும் ஹோட்டலுக்கு அவர் கொண்டு வந்த பைக்கு பதிலாக வேறு பையை வெளியில் எடுத்துச் சென்றதை அவதானித்தாகவும் அவர் கூறினார்.

பின்னர் அவர் காலி முகத்திடல் பக்கம் சென்று வாடகை வாகனம் ஒன்றை பெற்று இரவு 9.25 அளவில் கொலன்னாவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.

அவர் கடையில் இருந்து உணவு மற்றும் பானம் வாங்கியதாகவும், கொலன்னாவையில் உள்ள ஜயந்தி மாவத்தையில் உள்ள தனது வாடகை வீட்டிற்குச் சென்றதாகவும் அவர் சாட்சியம் அளித்தார்.

குண்டுதாரி முன்பு கிராண்பாஸ், பாணந்துறை, மட்டக்குளிய மற்றும் தெமடகொடையில் வாடகைக்கு தங்கியிருந்தாகவும் தெரிவித்தார்.

குண்டுதாரி தனது வீட்டில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை இருந்தாகவும் அதன் பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் கருப்பு கைப்பையுடன் கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு திரும்பி வந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.

மேலும் அவர் 2010 ஆம் ஆண்டு முதல் 14 கையடக்க தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தியதாகவும் அவற்றில் 11 சிம் அட்டைகள் அவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு ஒத்திகையிலும் குண்டுதாரி பங்கேற்றதாக குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க மேலும் சாட்சியம் வழங்கினார்.

https://newuthayan.com/கிங்ஸ்பெரி-ஹோட்டல்-குண்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.