Jump to content

மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் சுருங்கிவரும் உலகில் மாறிக்கொண்டே இருக்கின்றது. 

பெங்களூரில் வரிசையில் பொறுமையாக நின்று மது வாங்கும் மங்கையர்களுக்கு ஒரு சல்யூட்👍🏾
 அருகில் நிற்கும் ஆண்களுக்கும், பொலிஸாருக்கும் பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்பது ஒன்றும் புதினமாகப்படவில்லை. ஆனால் பல தசாப்தங்களாக மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுபவர்கள் பெண்கள் மது அருந்துவதையும், மது வாங்க வரிசையில் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகின்றார்கள். இவர்கள் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்த கலாச்சாரமும் பண்பாடும்தான் இப்பவும் தாம் வாழ்ந்த இடங்களில் இருப்பதாக மண்ணுக்குள் தலையை புதைத்து இருக்கும் தீக்கோழிகள் போன்றவர்கள்.  தலைகள் மண்ணுக்குள் இருப்பதே நல்லது😜

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

... மது என்பது எல்லோருக்குமே தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்..

test.jpg

       பின் ஏன் சார் மப்புறுப்பினாராகினீர்கள்..? 🙄😋

(தவறாக எண்ண வேண்டாம்..!) 

34 minutes ago, குமாரசாமி said:

...இஞ்சையும் சம உரிமை இல்லையா சார்? 😎

கட்டைகளிசான் போட்டு தண்ணியடிச்சால் சம உரிமயாய் இருக்குமோ?

ஜீரணிக்க மனம் மறுக்கிறது.. என்ன செய்வது..?

தாய்க்குலம் வாழ்க..!  :)

Link to comment
Share on other sites

பண்டித் சேதுராமன் சொல்லியிருக்கிறார், உலகம் அழிவதற்கான அடையாளங்கள் உலகில் தோன்றும். அதில் ஒன்று, பெண்கள் ஆட்சியில் உலகம் இருக்கும்.

Link to comment
Share on other sites

 

ஆண்களுக் பெண்களும் இயற்கையிலே வேறுபட்டவர்களாம். அதனால் சம உரிமை இல்லையாம். ஒரு சில பித்தர்களின் வாதம் இது. 

ஆண்களின் அணிந்த அதே சீருடைகளுடன் அதே ஆயுதங்களுடன்  ஆணுக்கு நிகராக சில சமயங்களில் ஆண்களை விட திறமையாக  மாதக்கணக்காக வருடக்கணக்காக காட்டிலுலும் கடலிலும் இராபகலாக கண்விழித்து  போரிடும் போது பெண்கள் சம‍மானவரார்களாக தெரிந்தார்கள். ஆண்களை விட ஆக்ரோசமாக போரிட்டு வெற்றிகளை குவித்த போது அவர்கள்  வேறுபாடு தெரியவில்லை. கடலுக்கு அடியில் வெடிகுண்டான வெடித்த போது சம‍மாக தெரிந்தார்கள். இலக்குகளை தேடி கரும்புலிகளாக சென்ற போது அவர்கள் பலவீனமானவர்களாக தெரியவில்லை. ஏனென்றால் சுயநலம். அவர்களின் உழைப்பில் நாம் வாழலாம் என்ற சுலநலம். அவர்கள் உயிரைக்கொடுத்து போராடிய போது, தமது அவயங்களை இழந்து போராடியதால் கிடைத்த வெற்றியை தாம் தண்ணியடித்து கொண்டாடாலாம்.

ஆனால் பெண்கள் மதுபானம் வாங்கினால் மட்டும் ஐயோ கலாச்சாரம் போய்விட்டது  அவர்கள் இயற்கையில் பலவீனமானவர்கள் என்று புலம்பல். மதுவுக்கு அடிமையானால் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது பாதிப்பு தான். அடிமையாகமல் சந்தோசத்திற்காக அளவுடன் பாவித்தால் ஆணுக்கோ பெண்ணுக்கோ அது சந்தோசம் தான் . இதுவே இயற்கை.  அது அவரவர் விருப்ப‍ம். 

 

Edited by tulpen
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை ஆணோ, பெண்ணோ மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவை சிற்றின்பமேயானாலும், அளவுடனேயானாலும் தவறுதான். இதில் சிறிய தவறு, பெரிய தவறு என ஏதுமில்லை..!:)

'இவை தீங்கானவை' என ஆயிரம் விளம்பரங்கள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை அரசும், சான்றோர்களும் படிச்சு படிச்சி சொன்னாலும் மண்டையில் ஏற்றிக்கொள்ளாதவர்களை பற்றி என்ன சொல்வது..? 😡

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

ஆண்களுக் பெண்களும் இயற்கையிலே வேறுபட்டவர்களாம். அதனால் சம உரிமை இல்லையாம். ஒரு சில பித்தர்களின் வாதம் இது. 

ஆண்களின் அணிந்த அதே சீருடைகளுடன் அதே ஆயுதங்களுடன்  ஆணுக்கு நிகராக சில சமயங்களில் ஆண்களை விட திறமையாக  மாதக்கணக்காக வருடக்கணக்காக காட்டிலுலும் கடலிலும் இராபகலாக கண்விழித்து  போரிடும் போது பெண்கள் சம‍மானவரார்களாக தெரிந்தார்கள். ஆண்களை விட ஆக்ரோசமாக போரிட்டு வெற்றிகளை குவித்த போது அவர்கள்  வேறுபாடு தெரியவில்லை. கடலுக்கு அடியில் வெடிகுண்டான வெடித்த போது சம‍மாக தெரிந்தார்கள். இலக்குகளை தேடி கரும்புலிகளாக சென்ற போது அவர்கள் பலவீனமானவர்களாக தெரியவில்லை. ஏனென்றால் சுயநலம். அவர்களின் உழைப்பில் நாம் வாழலாம் என்ற சுலநலம். அவர்கள் உயிரைக்கொடுத்து போராடிய போது, தமது அவயங்களை இழந்து போராடியதால் கிடைத்த வெற்றியை தாம் தண்ணியடித்து கொண்டாடாலாம்..

    நியாயமான மனத்தாங்கல்கள்..! vil-super.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

பண்டித் சேதுராமன் சொல்லியிருக்கிறார், உலகம் அழிவதற்கான அடையாளங்கள் உலகில் தோன்றும். அதில் ஒன்று, பெண்கள் ஆட்சியில் உலகம் இருக்கும்.

ஜோஸியத்தில் நம்பிக்கை வைத்தால் சேதுராமன் ஞானியாகத்தான் தெரிவார்!

இதையும் படியுங்கள்.. 

கொரோனா வைரஸ் தொற்று பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுபாட்டில் இருப்பது எப்படி?

நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. 

மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன. இவர்கள் தலைமைத்துவத்துக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகின்றனர் என ஃபோர்ப்ஸில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது.

https://www.bbc.com/tamil/global-52429393

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. 

பெண்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் குறைவு என முற்றுப்புள்ளி வைக்கின்றார்கள். அந்த நாடுகள் சுகாதார வசதிகளிலும் பொருளாதார வசதிகளிலும் முன்னேறிய நாடுகள்.அதை விட அரசியலிலும் ஸ்திரதன்மை கொண்டவை.மக்களும் அரசியல் சட்டங்களை அதிகம்  மதித்து நடப்பவர்கள்.எத்தியோப்பியா சோமாலியா போன்ற வறுமை எல்லைக்கோட்டுக்கு கீழே இல்லாத நாடுகள். 
சுலபமாக சொல்லப்போனால் அந்த பெண்மணிகள் கட்டிமுடித்து  சகல வசதிகளும் உள்ள வீட்டை சேதாரம் இல்லாமல் வைத்திருக்கின்றார்கள்.அதுவும் பின்னணியில் பலம் வாய்ந்த ஆண் அறிவுஜீவிகளின் அனுசரணையுடன்......😁

Link to comment
Share on other sites

மானுட சமுதாயத்தின் வளர்சசியில் பெண்களும் ஆண்களும் சம பங்கு வகித்தனர் என்றே வரலாற்று  ஆய்வுகள் கூறுகின்றன. உடலளவில்  சற்று வலிமை கொண்டவரகள் என்பதை தவிர மற்றய விடயங்களில் வேறுபாடு இல்லை என்பதே ஜதார்த்தம். ஈழவிடுதலைப் போரிலும் அதனை துல்லியமாக அவதானிக்க முடிந்தது.விடுதலைப்புலிகளின் பல வெளியீடுகளில் மனித வாழ்வியலில் பெண்களின் சமத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டதை வாசித்துள்ளேன்.     அப்படி இருக்க இப்போதும்  சிலர் சமூகத்தில் சம பங்கானவர்களை பலவீனமானவர்களாக கருதுவது  அவர்களின் அறியாமையின்  வெளிப்பாடு. 

பால்ய விவாகங்களை கடைப்பிடித்து கணவன் இறந்தவுடன் பெண்பிள்ளைகளை குழந்தைகள் என்று கூட பார்க்காமல் நெருப்பில் தூக்கி போட்ட கேடுகெட்ட கலாச்சாரத்தை புனித இந்து கலாச்சாரம்  என்று ஆங்கிலேயரிடம் வாதிட்ட அறிவிலிக் கூட்டமும் ஒருகாலத்தில் இருந்தது. அது முடியாமல் போன போது அவர்களை வெள்ளைப் புடவை கட்ட வைத்து  சமூகத்தில் இருந்து  குடும்்ப கொண்டாட்டங்களில் இருந்து ஒதுக்கி வைத்து  மனரீதியில் துன்புறுத்தும் அறிவிலிக் கலாச்சாரத்தை புனிதம் என்று கூறும் அறியாமை இன்றும் உள்ளது. 

தாம் வகுத்த  கேடு கெட்ட கலாச்சார கோட்பாடுகளை பாதுகாக்கும் பொறுப்பை பெண்களுடம் மட்டும் ஒப்படைப்பது பண்பாடற்ற செயல். ஒரு விடயம் தவறு என்றால் யார் செய்தாலும் தவறு. சரி என்றால் யார் செய்தாலும் சரி.  

விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்து எழுதி சம்பந்தனை எப்போதும் திட்டும் சிலர் இந்த விடயத்தில் புலிகளின் கோட்பாடுகளை மறந்து  சம்பந்தன் கால கோட்பாடுகளை ஆதரிப்பது அவர்களின் புலிகளை ஆதரிப்பதாக கூறுவது வெறும் போலி என்பதை புலப்படுத்துகின்றது. 

Edited by tulpen
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

 

இந்தி, தெலுங்கு படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா. சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை டைரக்டு செய்தவர். இந்த படம் தமிழில் வந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவது வழக்கம். தற்போது பெண்கள் மது வாங்குவதை கேலி செய்து, எதிர்ப்பில் சிக்கி உள்ளார்.

கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் கர்நாடகாவில் மதுக்கடைகள் முன்னால் கூட்டம் அலைமோதியது. இளம்பெண்களும் மது வாங்க திரண்டனர். அவர்களுக்கு தனி கியூவை உருவாக்கி இருந்தனர். பெண்கள் மது வாங்க கியூவில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த புகைப்படத்தை ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “மதுபான கடைகள் முன்னால் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பேசி வருகிறோம்” என்று கேலி செய்து கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசினர்.

View image on Twitter

 

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா கருத்துக்கு பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும் உரிமை இருக்கிறது. குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு’ என்று கூறியுள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/06082620/1489622/Ram-Gopal-Varma-Slammed-For-Tweet-On-Women-Outside.vpf

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

95612175_1767256950094449_4886022665002811392_o.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=E1-BNY-YLIIAX9F-ZVZ&_nc_ht=scontent-frt3-1.xx&oh=7c180bd7e67d00787d5605810a97d62f&oe=5ED63817

இந்த நாடு, எங்க சார்... போய்க்கிட்டிருக்கு.... 🤠

 

 

95357988_629205164476099_2810339754816569344_n.jpg?_nc_cat=103&_nc_sid=dbeb18&_nc_ohc=N3ulQK92hLMAX-KN7KA&_nc_ht=scontent-frt3-2.xx&oh=14ab11eb2b4a029e27c87e6ad288f501&oe=5ED79AE4

இப்படியெல்லாம்... யாரு வளர்க்குறா? அவங்களே... வளர்ந்துகுறாங்க.  😄

 

 

95271264_2885984871520413_4036089937529929728_n.jpg?_nc_cat=104&_nc_sid=dbeb18&_nc_ohc=1tpqu9EMSEUAX85Sr13&_nc_ht=scontent-frt3-1.xx&oh=5dfa3d6940da1f56fa9a9b9bd2852d5f&oe=5ED65222

இன்னுமா... இந்த நாடு, வல்லரசு ஆகல😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

95955826_1768196833333794_2779007521715650560_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=5w_bz44wVX8AX_AjJtO&_nc_ht=scontent-frt3-1.xx&oh=3b38642c5d97c756bd13b5299c6ca000&oe=5ED5F9F0

 

96216878_2888103007975266_2820561781276016640_o.jpg?_nc_cat=109&_nc_sid=dbeb18&_nc_ohc=NzwvaE8yJAEAX8KDvjq&_nc_ht=scontent-frt3-1.xx&oh=39ba94c1ea7db1b819c7b17a5b4f63fe&oe=5ED948BF

ஆண்வர்க்கமே.... உனக்குத்  தெரியாமல்,  நீ... ஒவ்வொரு உரிமையாய், 
இழந்து கொண்டு இருக்கிறாய்,  இனியாவது விழித்துகொள். விழிப்புணர்வு பதிவு 😂😂😂

Link to comment
Share on other sites

15 hours ago, tulpen said:

ஆண்களுக் பெண்களும் இயற்கையிலே வேறுபட்டவர்களாம். அதனால் சம உரிமை இல்லையாம். ஒரு சில பித்தர்களின் வாதம் இது. 

மனித இனம் இயற்கையோடு ஒட்டிவாழ்வதை விட்டு வேறுபட்டு வாழ்வதற்கு முயன்றதால்தான் இன்று கொரோனாவந்து அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது. 

2 hours ago, tulpen said:

மானுட சமுதாயத்தின் வளர்சசியில் பெண்களும் ஆண்களும் சம பங்கு வகித்தனர் என்றே வரலாற்று  ஆய்வுகள் கூறுகின்றன.

சமமாக அல்ல, உயர்வாகவே பெண்களைப் பெரும் சக்தியாகப் பார்த்து வளர்த்துவந்த இனம்தான் தமிழினம். சக்தியைப் பெண்ணாகவும், இயற்கையை அன்னையாகவும், பூமியைத் தாயென்றும் போற்றிவந்ததுதான் வரலாறு. சக்தியைப் பாதுகாத்து அதனை ஒரு கட்டுக்குள் வைத்திராதுவிட்டால் அது அனைத்தையுமே அழித்துவிடும் என்பதை இன்றைய விஞ்ஞான அறிவுலகிலும் காணலாம். இந்தக்கட்டுப்பாட்டை அடக்குமுறையாகப் பார்ப்பவர்களுக்கு அது அடக்குமுறைபோலவே தெரியும். உலக உயிரினங்களின் அனைத்துக் குணங்களையும் ஒருசேரக்கொண்ட உயிரினம் மனித இனம். அதில் நல்ல குணங்களுடையோரும் உண்டு, கெட்ட குணங்களுடையோரும் உண்டு. நல்ல குணங்களுடையோர், அன்றும் இன்றும் என்றும் பெண்களை உயர்வாகவே பார்த்து மதிப்பளித்து வருகிறார்கள். அப்படி நல்ல குணம்கொண்ட மனிதர்களை வரலாற்றைப் படித்ததினால் மட்டும் அல்ல, எங்கள் வாழ்நாளிலேயே கண்டோம், பிரபாகரனிலும் அவன் படைகளிலும்.  

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

மனித இனம் இயற்கையோடு ஒட்டிவாழ்வதை விட்டு வேறுபட்டு வாழ்வதற்கு முயன்றதால்தான் இன்று கொரோனாவந்து அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளது. 

அப்படியானால் 1800 காலப்பகுதியில் கொலரா போன்ற கொள்ளை நோய்கள் வந்து எமது தாயகத்தில் பெருமளவு மக்கள் இறக்க என்ன காரணம்?  போலியோவால் பெருமளவு சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்போது எமது தாயகத்தில் இயற்கைக்கு விரோதமாக மக்கள் வாழ்ந்தார்களா? 

இரண்டாவது பகுதி  உங்களது பதிலில்  பூமி தாய், சக்தி என்பதெல்லாம் வெறும் வெட்டிப் பெருமைகள் மட்டுமே. இங்கு எனது பெண்பிள்ளை தனியே இரவு  கடைசித் தொடரூந்தில் பல முறை பாதுகாப்பாக வீடு திரும்பி உள்ளார். நீங்கள் கூறும் தாயாக சக்தியாக பெண்களை வழிபடும் நாடுகளில் எனது பெண் பிள்ளையை தனியே  செல்ல ஒரு  நாள் கூட விட முடியாத நிலை தான் அங்கு நிலவுகிறது. 

 ஆகவே தாயாக மதிக்கிறோம் சக்தியாக மதிக்கிறோம்  என்று வெறுமனே புலுடா விடுவதை நிறுத்தி சக மனிதராக நண்பியாக நினைத்தாலே போதும். 

Edited by tulpen
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

அப்படியானால் 1800 காலப்பகுதியில் கொலரா போன்ற கொள்ளை நோய்கள் வந்து எமது தாயகத்தில் பெருமளவு மக்கள் இறக்க என்ன காரணம்?  போலியோவால் பெருமளவு சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்போது எமது தாயகத்தில் இயற்கைக்கு விரோதமாக மக்கள் வாழ்ந்தார்களா? 

இரண்டாவது பகுதி  உங்களது பதிலில்  பூமி தாய், சக்தி என்பதெல்லாம் வெறும் வெட்டிப் பெருமைகள் மட்டுமே. இங்கு எனது பெண்பிள்ளை தனியே இரவு  கடைசித் தொடரூந்தில் பல முறை பாதுகாப்பாக வீடு திரும்பி உள்ளார். நீங்கள் கூறும் தாயாக சக்தியாக பெண்களை வழிபடும் நாடுகளில் எனது பெண் பிள்ளையை தனியே  செல்ல ஒரு  நாள் கூட விட முடியாத நிலை தான் அங்கு நிலவுகிறது. 

 ஆகவே தாயாக மதிக்கிறோம் சக்தியாக மதிக்கிறோம்  என்று வெறுமனே புலுடா விடுவதை நிறுத்தி சக மனிதராக நண்பியாக நினைத்தாலே போதும். 

தமிழர்கள் நாங்கள் ஒருநாளல்ல இருநாளல்ல பல நூறு வருடங்களாக அரசை இழந்து, உரிமையை இழந்து, மரபுவழி மாறி அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் ஐரோப்பியருக்கு அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருந்தோம். பெரும் போற்றுதலுக்கு உரியவனாக விளங்கும் தமிழ் அரசன், ராச ராச சோழன்கூட தமிழ்மரபைத் தொடரமுடியாது ஆரியகலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு வாழும் துர்ப்பாக்கியத்திற்கு உள்ளானவனே. இந்த வரலாற்றின் ஊடாகவே உங்கள் விரக்தியையும் நான் நோக்குகிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.