Jump to content

யாழில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-1582-720x450.jpg

யாழில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது.

ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த துஷாரா தேனுவர என்ற பெண் வீட்டினை அமைத்து வழங்க முன் வந்திருந்தார்.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை தனது பிறந்த தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) அந்தப் பெண் கையளித்தார்.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீட்டினை திறந்து வைத்து குறித்த பெண்ணிடம் ஒப்படைத்தார்.

குறித்த நிகழ்வில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

IMG-1581-384x288.jpg IMG-1576-384x288.jpg IMG-1580-384x288.jpg

http://athavannews.com/யாழில்-முதியவருக்கு-இராண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஜே/263 கிராம சேவையாளர்

உந்த விதானைக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் என்ன பகை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

IMG-1582-720x450.jpg

யாழில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது

எனக்கு செய்தியையும் படத்தையும் பார்க்க இராணுவ ஆட்சி நடக்கிற நாடு மாதிரியே கிடக்கு...
பாகிஸ்தானிலை கூட உப்புடிக்காணேல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உந்த விதானைக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் என்ன பகை ?

சரியான கேள்வி 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செய்து கொடுத்த நபருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதானைமார் செய்யிற அடாவடி கொஞ்சமல்ல. ஒரு ஊரில் ஏழைகளுக்கு வீட்டுத் திட்டம் என்று அறிவித்தார்கள். அந்த ஊரில் வீடில்லாமல் ஓரிரண்டு குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கு வீட்டுத் திட்டம் வரவில்லை என்று அறிவித்து விட்டு, ஏற்கெனவே வீடுள்ள ஒருவர். ஒரு பிள்ளை.  அந்த ஊர்  விதானையார்,  அவரிடம் போய் உந்த வீட்டை உங்கள்  பிள்ளையின் பெயரில் எழுதிவிட்டு, இருக்கிற மிச்சக் காணியில் உங்கள் பெயரில் வீட்டுத்திட்டம் பதியுங்கள். என்று கூறி வீடு கொடுத்தார்.  ஒரு சிறு காணியில் இரண்டு வீடுகள்  இவ்வாறே வவுனியாவில் உள்ள பிள்ளையின் பெயரில் வீட்டை எழுதிப்போட்டு, நீங்கள் வீடு இல்லை என்று பதியுங்கள். நான் வீட்டுத் திட்டம் தாறேன். என்று உள்ளவர்களுக்கே கொடுத்தார்கள். எல்லோரும் இடம் பெயர்ந்து போய், மீண்டும் சொந்த இடம் வந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஒருசிலர் வெளி மாவட்டங்களில் நிரந்தரமாக குடியேறி, அங்கேயே நிவாரணங்களும் பெற்று, வசதியாய் இருந்தவர்களில் தனக்கு வேண்டியவர்களை, அந்த விதானையார், தன் இடத்திற்கு அழைத்து, உறவினர் வீடுகளில் சிலநாட்கள் தங்கவிட்டு, மீள  குடியேறியவர்கள் என்று பதிந்து நிவாரணம் வழங்கப்பட்டது. அவர்களும் அதை பெற்றுக்கொண்டு, மீண்டும் தம் இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். அதே இடத்தைச் சேர்ந்த வறிய குடும்பம் ஒன்றிற்கு  நீங்கள் இடம்பெயர்ந்து  இருந்த இடத்து விதானையிடம் துண்டு வாங்கி வந்தாற்தான் நிவாரணம். என்று விட்டார். அவர்கள் காசை செலவழித்து அங்கேயும், இங்கேயும் அலைந்து திரிந்து விட்டு, எதுவும் வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். இன்னொரு ஊரில் குறிப்பிட்ட ஒருவருக்கு  வந்த நிவாரணப் பொருட்களை அவருக்கு மறுத்து, தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு வழங்கினார் காரணம். அவர்கள் ஏழைகள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இவர்கள் வேண்டாதவர்கள். ஏழைகள், ஏழைகளாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒரு சிலதை மட்டுமே இங்கு குறிப்பிடுள்ளேன். இவ்வாறு பல நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

12 hours ago, பெருமாள் said:

உந்த விதானைக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் என்ன பகை ?

Link to comment
Share on other sites

12 hours ago, பெருமாள் said:

உந்த விதானைக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் என்ன பகை ?

விதானயருக்கு எதாவது கமிஷன் கொடுத்திருந்தால் செய்திருப்பார்। அநேகமான விதானமாரை பார்த்திருக்கிறேன் , இவர்கள் ஈரல் பழுதாகி ரத்த வாந்தி எடுத்துதான் சாவார்கள்। மக்களின் பணத்தை எடுத்து குடித்து அழிந்து போவார்கள்। 

Link to comment
Share on other sites

21 hours ago, குமாரசாமி said:

எனக்கு செய்தியையும் படத்தையும் பார்க்க இராணுவ ஆட்சி நடக்கிற நாடு மாதிரியே கிடக்கு...
பாகிஸ்தானிலை கூட உப்புடிக்காணேல்லை

கோத்தாவின் ஆட்சி நீண்ட நாள் நிலைக்கும் என நான் நினைக்கவில்லை; இந்த கொரோனா பிரச்சனை மத்தியிலும் இவர் தேர்தல் நடாத்த அல்லல்படுவது அதுக்காக தான்; அதே போல் அமேரிக்காவில் ஆட்சி மாற்றம் வந்தால் கோத்தாவின் பாடு திண்டாட்டம் தான். அதனால் தான் எப்படியாவது நிலைமை தனக்கு சாதகமாக இருக்கும் போது அரசியலமபை மாற்றலாம் என படாத பாடுபடுகிறார்.

இங்க யாழ் களத்தில கோத்தாவின் முகவர் ஒருவர் சைவ கத்தோலிக்க மோதலை உருவாக்க இரவு பகலாக பாடுபடுவதை பார்த்தால் புரியவில்லையா?

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

முற்றிலும் உண்மை!

கோட்டா, ராஜபக்ச கோஷ்டி கொஞ்ச பேருக்கு பணத்தை அள்ளிக்குடுத்து நிறைய இடத்துல ஊடுருவ விட்டிருக்காங்களாம்.

மனோகணேசன் கட்சிக்குள்ளயும் அப்பிடி ஒராளை புகுத்தி இருக்கிறதா இன்டைக்கும் ஒராள் விபரமா சொன்னார்.

Link to comment
Share on other sites

On 6/5/2020 at 03:38, Vankalayan said:

விதானயருக்கு எதாவது கமிஷன் கொடுத்திருந்தால் செய்திருப்பார்। அநேகமான விதானமாரை பார்த்திருக்கிறேன் , இவர்கள் ஈரல் பழுதாகி ரத்த வாந்தி எடுத்துதான் சாவார்கள்। மக்களின் பணத்தை எடுத்து குடித்து அழிந்து போவார்கள்। 

வங்காலையான் நீங்கள் பகடிக்கு சொன்னீர்களோ தெரியாது. ஆனால் உண்மையில்  எமது ஊரில்இரண்டு விதானைகள் குடியினால் ரத்தவாந்தி எடுத்து இறந்னர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2020 at 11:38, Vankalayan said:

விதானயருக்கு எதாவது கமிஷன் கொடுத்திருந்தால் செய்திருப்பார்। அநேகமான விதானமாரை பார்த்திருக்கிறேன் , இவர்கள் ஈரல் பழுதாகி ரத்த வாந்தி எடுத்துதான் சாவார்கள்। மக்களின் பணத்தை எடுத்து குடித்து அழிந்து போவார்கள்। 

நானும் பல பழைய விதானைமாரின் பரிதாபமான சாவை கண்டிருக்கிறேன். ஆனால் யாரும் திருந்துகிறார்களில்லை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 08:00, tulpen said:

வங்காலையான் நீங்கள் பகடிக்கு சொன்னீர்களோ தெரியாது. ஆனால் உண்மையில்  எமது ஊரில்இரண்டு விதானைகள் குடியினால் ரத்தவாந்தி எடுத்து இறந்னர். 

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லுமாம்...:cool:

Link to comment
Share on other sites

20 minutes ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லுமாம்...:cool:

கொன்றது தெய்வம் இல்லை. தொட்ட கையெழுத்ததுக்கும் லஞ்சமா வாங்கின சாராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தன் வினை தன்னைச் சுடும். அதையும் வசதியாய் தெய்வத்தின் மேல் சுமத்தி, நாம் தப்ப முயற்சிக்கிறோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.