Jump to content

கடிதங்களின் கவலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடிதங்களின்கவலை..!

எங்களை இப்போது

எவருக்கும் தெரிவதில்லை

தொழில் நுட்பமென்னும்

தூரதேசம் பேச, எழுத..

பல நுட்பம் வந்ததனால்

எங்களை இப்போது

எவருக்கும் தெரிவதில்லை.

 

அந்தக்காலத்தின்-நாம் 

அன்பின் பாலங்கள்..

பிரிந்து வாழ்ந்தாலும்

பிரியமுடன் வாழ்ந்தாலும்

எங்களைத்தான் எதிர் பார்த்தே

ஏக்கமுடன் இருப்பார்கள்.

 

ஊர் விட்டுத் தள்ளிப்போன

உறவுகளின் உணர்வுகளை

வேர் இருக்குமிடம்பார்த்து

விருப்போடு நாம் வருவோம்.

 

அந்தகிராமத்தின்

அதிகாரிகளை தெரியாது

ஆனால்..

குஞ்சு குருமான்கள்,இளம்

 குடலை, பெரியோர்கள்

எல்லோர்க்கும் தெரிந்த முகம்

எமை காவும் தபால் காரர்

 

விசில் அடித்து கேட்டாலோ

பெல்லடித்துக் கேட்டாலோ

கடிதம் வருகுதென்று

கடப்பை மட்டும் ஓடிவந்து

இல்லையென்று மனமுடைந்து

எமை பேசி போனவர்கள்

அடுத்தநாள் கிடைத்துவிட்டால்

அதைச்சொல்லி மகிழ்வார்கள்

 

வெறுப்போடு போனமகன்

வீம்போடு போனமகள்

என அழுது புலம்பும்- பெற்றோர்

எமை பார்த்தே உயிர் வாழ்வார்.

 

வருந்திக்கிடக்கின்ற

வயதான காலத்திலும்

பேத்தி அவள்போட்ட-என்ர

பிரியமுள்ள கடிதமென்று

உற்றார் உறவுகட்கு-எம்மை

உரித்துரித்து காட்டிப்பல

சந்தோஷ மகிழ்சியில

சாஎட்டிப் போனதப்போ..

 

வெளிநாடு போன அப்பா-குளிரில்

வேலைகளில் விறைத்தாலும்-தன்

பிஞ்சுக்குழந்தைகளின்

கொஞ்சுமொழிக்கடிதமென்று

நெஞ்சில் எமை அணைத்தே

நிமதியாய் தூங்குவார்கள்.

 

தந்தி என்றொரு அண்ணன்

தபால் காட்டெனும் ஒரு தம்பி

எந்தன் உடன் பிறப்பே..

அண்ணனுக்கு வேலை

கிரமத்தை

அழவைத்து பார்ப்பதுவே

 

நத்தார்,புதுவருடம் 

நம் உழவர் பொங்கலென

அத்தனைக்கும் 

வாழ்த்துக்கூற..

அங்கு நிற்பான் என் தம்பி

 

எத்தனைதான் எழுத்துக்கள்

என்மேலே பதிந்தாலும்-காதல்

இதயத்தால் எமைத்தொட்ட

காயிதமாய் நாமிருந்தால்

 

அவர் அவர் ஒளித்துவைத்து

அணுவணுவாய் எமைரசித்து-நாம்

உருக்குலைந்து போனாலும்

ஒட்டியொட்டி வாழவைப்பார்.

 

வைபரென்றும்,வற்சாப்பென்றும்

வையகத்தில் பல விஞ்ஞானம்

எழுதி அளிப்பதுவே-கையில்

எமைப்போல இருப்பதில்லை

 

பசுமையான அக்காலம்-அன்பு

பாசத்தால் நிறைந்திருந்தோம்

சிந்தித்துப்பார்க்கின்றோம் அந்த

சிறப்பில்லை இக்காலம்.

 

என்றாலும்..

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.

-பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.  அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள்  கோபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பசுவூர்க்கோபி said:

 

அந்தகிராமத்தின்

அதிகாரிகளை தெரியாது

ஆனால்..

குஞ்சு குருமான்கள்,இளம்

 குடலை, பெரியோர்கள்

எல்லோர்க்கும் தெரிந்த முகம்

எமை காவும் தபால் காரர்

-------

தந்தி என்றொரு அண்ணன்

தபால் காட்டெனும் ஒரு தம்பி

எந்தன் உடன் பிறப்பே..

அண்ணனுக்கு வேலை

கிரமத்தை

அழவைத்து பார்ப்பதுவே

--------

-பசுவூர்க்கோபி-

Sundayobserver.lk: Features | Postal services hit by labour shortage 

தொலைபேசி இல்லாத காலங்களில்....
மரணச் செய்திகளை காவி வந்த,  தந்தியை மறக்க முடியாது.
தபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து, 
கையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.

நல்லதொரு பகிர்வு,  பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 18:25, நிலாமதி said:

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.  அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள்  கோபி

ஊக்கம் தரும் உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 18:41, தமிழ் சிறி said:

Sundayobserver.lk: Features | Postal services hit by labour shortage 

தொலைபேசி இல்லாத காலங்களில்....
மரணச் செய்திகளை காவி வந்த,  தந்தியை மறக்க முடியாது.
தபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து, 
கையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.

நல்லதொரு பகிர்வு,  பசுவூர்க்கோபி.

உங்களின் பழய நினைவுகள் எனக்கு கிடைத்த உரமென நினைக்கின்றேன் உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது
இப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெயரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றி பசுவூர்க்கோபி 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலட்டை - தமிழ் விக்கிப்பீடியா

தபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

கடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது
இப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெயரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றி பசுவூர்க்கோபி 👍

அந்தப் பொற்காலத்தை நினைவூட்டியிருக்கிறீர்கள் ஐயா உளமார்ந்த நன்றிகள்.

9 hours ago, suvy said:

அஞ்சலட்டை - தமிழ் விக்கிப்பீடியா

தபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....!   👍

உங்களுக்கும் மகிழ்ச்சியோடு நெஞ்சார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.