nunavilan

வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான இந்திய பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன்: அக்தர்

Recommended Posts

வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான இந்திய பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன்: அக்தர்

 

 

 

    by : Anojkiyan

08f76e3551440e40138d14dde29389c3-720x450

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘என்னிடம் உள்ள அறிவைப் பரப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் கற்றுக்கொண்டது பந்துவீச்சுப் பயிற்சி பற்றி தான். அதனை அடுத்தவர்களுக்குக் கற்றுத் தர ஆர்வமாக உள்ளேன்.

இப்போதுள்ள பந்துவீச்சாளர்களை விடவும் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை என்னால் உருவாக்க முடியும். தற்போதுள்ள துடுப்பாட்ட வீரர்கள், பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷத்தை இரசிக்கிறார்கள்’ என கூறினார்.

http://athavannews.com/வாக்குவாதத்தில்-ஈடுபடக்/

Share this post


Link to post
Share on other sites

இவ‌ரே ஒரு காமெடிய‌ர் /

இவ‌ர் க‌ட‌சியா விளையாடின‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ரின் ப‌ந்தை ம‌ற்ற‌ அணி வீர‌ர்க‌ள் அடிச்சு நொருக்க‌ , மீதி உல‌க‌ கோப்பை விளையாட்டில் விளையாட‌ அப்ப‌ இருந்த‌ க‌ப்ட‌ன் ச‌யிட் அப்பிரிட்டி வாய்ப்பு குடுக்க‌ல‌ இவ‌ருக்கு /

வ‌சிம் அக்ர‌ம்
முக‌மர் அமிர் , இவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது இவ‌ர் பெரிய‌ திற‌மையான‌ ப‌ந்து வீச்சாள‌ர் கிடையாது 😉

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இங்கே இருந்து பேரப்பிள்ளையுடன் கொஞ்ச நாளைக்கு அனுபவியுங்கள். நானும் அந்த கலர்ஐ பார்த்தேன், ஏனென்று புரியவில்லை, உப்பு குறைவாக போட்டத்துக்கு ஏன் வர்ணம் தீட்டினீர்கள்? 
    • இந்த வயதில் இதெல்லாம் சகஜம்தானே. 90களில் கூட நாங்கள் குஸ்பு ...80களில் ஸ்ரிதேவி...70களில் கே ஆர் விஜயா.. யாழில் கூட ரசிகன் என்னும் பெயரில் ஒருவர் இருக்கின்றார்
    • கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்வதற்காக புதிய செயலணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? Rajeevan Arasaratnam May 25, 2020கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்வதற்காக புதிய செயலணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?2020-05-25T11:07:24+00:00 கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை முற்றுமுழுதாக அபகரிக்கும் நோக்கத்துடனேயே தொல்லியலுடன் தொடர்புபட்ட இடங்கள் குறித்து ஆராய்வதற்கான செயலணி பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ளது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். கிழக்குமாகாணத்தில் துரித காணி அபகரிப்பை மேற்கொள்வதற்காக பௌத்த ஆலோசனை சபையை சந்தித்த ஜனாதிபதி அந்த பொறுப்பை பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான செயலணியிடம் வழங்கியுள்ளார் என தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். புனித பூமி என்ற போர்வையில் பௌத்தவிகாரைகளை அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்களை அடிப்படையாக வைத்து காணிகள் அபகரிக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் 247 இடங்களும்,திருகோணமலையில் 74 இடங்களும்,மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட55 இடங்களும் பௌத்த மதத்துடன் தொடர்புiடைய பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலங்களில் தமிழர்களின் பெருமளவு நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இடங்களை அபகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் காணிகளை முற்றுமுழுதாக அபகரித்து இலங்கையை முற்றுமுழுதாக சிங்கள தீவாக மாற்றுவதற்கான செயற்பாடு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முற்றுப்புள்ளிவைக்கப்படவேண்டுமென்றால் வடக்குகிழக்கு சேர்ந்த தமிழர் தேசம் அங்கீரிக்கப்படவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மட்டுமாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/43323
    • நான் உருளைகிழங்கு பணிஸ் படம்  போடவில்லை, கொம்பு பணிஸ் செய்முறை போட்டேன், அடுத்த முறை செய்வதற்கு கவனிக்கவில்லை, தண்ணியோ எண்ணை பட்ட மாதிரியிருக்கு😀
    • ஜனாதிபதியை கடுமையாக விமர்சிக்கும் இரு இராஜதந்திரிகள்; சர்வதேச அளவிலும் எதிரொலிக்குமா?   தயான் ஜயதிலக்க மற்றும் தமாரா குணநாயகம் ஆகிய இருவரும் கடுமையான ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள். இவர்கள் இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், ஜயதிலக்க இலங்கைக்கான பிரான்ஸின் தூதராகவும், தமாரா குணநாயகம் இலங்கைக்கான கியூபாவின் தூதராக பணியாற்றியுள்ளனர். தமாரா குணநாயகம் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நீண்டகால நண்பி. போர் வீரர்களின் நினைவு விழாவில் போது கோத்தாபய நிகழ்த்திய உரையை இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். “நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து பணிப்புரியும் இராணுவத்தினருக்கு ஒரு போதும் நான் மன அழுத்தத்தைக் கொடுக்க மாட்டேன். நாட்டுக்குப் பங்கம் விளைக்கும் வகையில் சர்வதேச நிறுவனங்களோ அல்லது அமைப்புகளோ தொடர்ந்து செயற்பட்டால் இலங்கை அதன் உறுப்பினர்களிடமிருந்து விலக ஒருபோதும் தயங்காது” என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார். இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை சபை மட்டுமே தொடர்ந்து ஏற்றுக்கொண்டன. ஐ.நா மனித உரிமை சபைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை இயல்பாகத் தெரிகிறது. தமாரா குணநாயகம் அறிவிப்பு கோத்தா தனது கருத்தினை தெரிவித்த மறுநாள் தமாரா குணநாயகம் அறிக்கை ஒன்றில் இவ்வாறு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் அறிக்கையில் தெரியவருவது ஐக்கிய நாடுகள் சபைக்கு தவரான கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நிச்சயமாக இராணுவத்தைப் பாதுகாப்பதற்குச் சர்வதேச உதவி தேவை. இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக இல்லை. இது ஒரு அவதானிப்பு நிலை மட்டுமே. எனவே, ”வெளியேறுவது” குறித்து கேள்வி எழும்புவதில்லை. யு.என்.எச்.ஆர்.சியில் இருந்து முழுமையாக விலகுவதற்கான ஒரே வழி ஐ.நா.வை விட்டு வெளியேறுவதுதான். ஜனாதிபதி சர்வதேச அமைப்புகளைப் பற்றி எந்த அறிவும் இல்லாதவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “எங்களைப் போன்ற குறைந்த சக்திவாய்ந்த நாடுகளின் நலன்கருதியே ஐ.நா.சாசனம் நிறுவப்பட்டுள்ளன. அதன் பலவீனங்கள் ஏதுவாக இருந்தாலும், குறைந்த சக்திவாய்ந்த நாடுகள் மற்றும் எங்களைப் போன்ற முன்னாள் காலனித்துவ இறையாண்மையை வெளிப்புற குறுக்கீடு, ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கு எதிராகப் பாதுகாக்கக்கூடிய ஒரே நிறுவனம் இதுதான்.” இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, “ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகுவது உலகின் ஒருதலைப்பட்ச பார்வையைப் பலப்படுத்தும். சுயாதீன மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளின் இருப்பு ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் உள்ள குறிக்கோள்களையும் கொள்கைகளையும் மதிக்க வேண்டும். இந்த அறிக்கை டொனால் ட்ரம்ப் பிளேக் உலக சுகாதார அமைப்பை விட்டு வெளியேறுவதாக அச்சுறுத்தியது போன்றது.” எனவும் தாமரா கூறியுள்ளார். தயான் ஜயதிலக்க கோத்தாவின் அரசியல் மையத்தை குறிவைத்து ஒரு தாக்குதலை நடத்தியுள்ளார். “பொத்துவில் கடல் பகுதியில் அமைந்துள்ள விகாரை பற்றிய தகவலைத் திரட்டுவதற்கா பாதுகாப்பு அமைச்சர், இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட தூதுக்குழுவை அனுப்பியதைக் குறிக்கும் வகையில் கடந்த மே 21 ஆம் திகதி பத்திரிக்கை ஒன்றுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதில் உள்ளடக்கியவை “தூதுக்குழு ஜனாதிபதி ராஜபக்ஷனால் அனுப்பப்பட்டது என்ற உண்மையைக் குறிப்பிட்டு, குறித்த தூதுக் குழு பற்றிய விபரங்களைத் தெரிவிக்கையில், விமானப்படை தளபதி மாத்திரமே குறைவாக இருந்தது. இந்நிலையில் தேசியப் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்க கூடியவகையில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதை பற்றி ஆரம்பத்திலே ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த அரச திட்டம் சிங்கள- பௌத்த பிரதேசத்தில் சிங்கள -பௌத்த நிறுவனங்களிடையே இதுபோன்ற ஒரு சர்ச்சை எழுந்திருந்தால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் அங்குச் சென்று ஒரு இராணுவ தளத்தை அமைப்பது சாத்தியமில்லை என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார். கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் பல இன, பல மத, பன்மொழிப் மக்கள் காணப்படுகிறார்கள் இந்த பகுதியில் இவ்வாறான நடவடிக்கை எடுத்திருந்தால், அதாவது, பொலிஸ் சோதனை சாவடி, பொதுவான பொலிஸ் தொலைப்பேசி சுற்றிவளைப்பு ஆரம்பிப்பது சரியான மற்றும் விகிதாச்சார அடிப்படையில் வரவேற்பைப் பெற்று இருந்திருக்கும் என அவர் தெரிவித்தார். கடற் பகுதியிலுள்ள விகாரைக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோதமாக முறையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் ஏன் குற்றவாளிகள் மீது வழக்கு தொடராமல் இருக்கிறார்கள்? உலகில் இராணுவத்தின் அரசு இறுதியில் பிரபல்யமாகும். ஆனால் இப்போது இலங்கையில் முதன்மை தன்மையாக பிரபல்யமாகியுள்து என ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தயான் ஜயதிலகே கீழே பல கேள்விகளை எழுப்பியுள்ளார் அதற்கான பதில் அந்த கேள்விக்குள்ளே உள்ளடக்கியுள்ளது. “புதிய ஆட்சியின் கீழ் தேசியப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றிய வரையறைகள் மாற்றப்பட்டுள்ளதா? “தேசிய”, “அரசு”, “பாதுகாப்பிற்கு”, “பாதுகாப்பு” மற்றும் “அச்சுறுத்தல்” தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் வரையறைகள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளனவா? “வன்முறை மோதல் அல்லது ஆயுதம் ஏந்திய எதிரிகளின் தொடர்பு இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அமைச்சு, இராணுவமும் பிராந்தியம் / சிவில் மோதல் செயற்பாடுகளில் தலையிடுவதற்குத் தனது பங்கை மாற்றியுள்ளதா? “உலகளாவிய விதிமுறை என்னவென்றால், ஒரு மோதல் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் பிராந்திய மோதல்களைக் கையாளுகிறது. ஆயுத வன்முறையின் ஒரு குறிப்பிட்ட அளவு தீவிரம் இருக்கும்போதுதான் ஆயுதப்படைகள் அழைக்கப்படுகின்றன. ஒரு மூலோபாய பிரச்சினை அல்லது குறைந்தபட்சம் ஆயுத அச்சுறுத்தல் இல்லாத நிலையில், ஒரு பொலிஸ் நிலையத்திற்குப் பதிலாக ஏன் ஒரு இராணுவ தளத்தை அமைக்க வேண்டும்? “பல இன, பல மத, பன்மொழி சூழலில், பாதுகாப்பு பிறசேர்க்கைகளில் மற்றும் இராணுவ ஆயுதங்களில் அடையாளம் மற்றும் செயற்பாடுகளில் இப்போது வித்தியாசமாக வரையறுக்கப்பட்டுள்ளதா? அத்துடன், ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் இருந்த இராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் அடையாளம், பங்கு, செயற்பாடு, தன்மை, அதன் வாள் மற்றும் கேடயம் ஆகியவற்றைத் தீவிரமாக வேறுபடுத்தியுள்ளதா? “அப்படியானால், புனரமைப்பு முடிந்ததும், அதற்கு வழிவகுக்கும் சித்தாந்தமும், அரசின் இறுதி வடிவமும் எதை வெளிப்படுத்தும்? ” இந்த கேள்விகளுக்கு அவர் நேரடியான பதிலை அளிக்கிறார். ராஜபக்ஷவின் “புதிய அரசியலமைப்பின் கீழ், இலங்கை அரச ஆயுதங்கள், புதிய நோக்குதலையும் தன்மையும் ஒரு பரிமாணமாகும் ஒரு மத, ஒருமொழி, ஒரு கலாச்சார மேலாதிக்கத்தின் கருவியாக முறைப்படுத்தப்படும்.” பொத்துவில் கடல் பகுதியில் அமைந்துள்ள விகாரை தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கான கோத்தாபய ராஜபக்ஷவின் புகைப்படத்தை ஜயதில விளக்குகிறார்: இதில், ஆளுநர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, மற்றும் பௌத்த துறவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அரசு ஏற்கெனவே சிங்கள-பௌத்த அரசாகச் செயற்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது. மூன்று முக்கிய நாடுகளில் இலங்கைக்கான இலங்கை தூதராக இருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் திட்டத்தின் மீதான கடுமையான தாக்குதல் இது. இது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எதிரொலிக்கும். நன்றி: ராவய தமிழில் ; தயா http://thinakkural.lk/article/43235