Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Boys Locker Room - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் - நடந்தது என்ன?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Boys Locker Room - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் - நடந்தது என்ன?

சுஷீலா சிங் பிபிசி செய்தியாளர் 
#BoysLockerRoom:Getty Images சித்தரிக்கும் படம்

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது #BoysLockerRoom. 

புகைப்பட பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த குழுவில், சிறுமிகளின் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுகிறார்கள், அநாகரீகமான கருத்துகளைக் கூறுகிறார்கள், பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுகிறார்கள். 

இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி போலீசாருக்கு ட்வீட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற குழுவை சில சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர், அதில் அவர்கள் சிறுமிகளின் ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்வதற்கான திட்டங்களைப் பற்றியும் இங்கு விவாதிக்கிறார்கள். 

சில பெண்கள் இந்த குழுவில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றங்களின் சில ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர், அதன் பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. 

 

 

Breaking -

DCW chief @SwatiJaiHind issues notice to Instagram and Delhi Police in the matter of a group named "boys locker room" being used by some miscreants to share objectionable pictures of minor girls and planning illegal acts such as rape of minor girls. #boyslockerroom

View image on TwitterView image on Twitter
 
 
 
 

 

அந்த ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்த சுவாதி மாலிவால், காவல்துறை மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார், உடனடியாக எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். 

சுவாதி மாலிவாலின் ட்வீட்டுக்குப் பிறகு, டெல்லி போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. சைபர் கிரைம் பிரிவு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுவாதி மாலிவால்Getty Images சுவாதி மாலிவால்

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு டி.சி.பி அளித்த அறிக்கையில், "இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார். 

BoysLockerRoom குழுவில் உள்ள நபர்களின் உண்மையான அடையாளம் காவல்துறையினரிடம் இல்லை என்றும் அவர் கூறுகிறார். 

15 வயது சிறுவன் ஒருவன் இந்த வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மனநிலை மாற வேண்டும்"

@Tripathiharsh02 என்ற பயனர் ட்விட்டரில் இவ்வாறு எழுதுகிறார்: "சட்டம் கடுமையானதாக இருக்க வேண்டும், ஆனால் மக்களின் மனநிலையை மாற்றுவது அதைவிட முக்கியம். பெண்களை ஒரு பொருளாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும், இதை இளைஞர்களுக்கு புரிய வைத்தால் மட்டுமே அவர்களுக்கு சிந்தனையை மாற்ற முடியும். 

 

 

Making strict laws is important but changing people's psychology is just as important.
Objectification of women must stop and it can only be done by educating youth.#boyslockeroom

View image on TwitterView image on TwitterView image on Twitter
 
 
 
 

 

"இந்தியாவில் #BoysLockerRoom குறித்த கதை எனக்கு அச்சமூட்டுகிறது. 16 வயது சிறுவர்கள் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதாக அச்சுறுத்துகிறார்கள். அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்? பெண்களை இழிவுபடுத்துபவர்களையும், அவர்களை தாழ்வாக நினைப்பவர்களையும், பெண்களை ஒரு பொருளாகவும் நினைப்பவர்களையும் ஏதாவது செய்யுங்கள்" என்று @MarketerAditi எழுதுகிறார்.

 

 

The #boyslockeroom story in #India has me shook. It is downright appalling that 16 year old boys discuss raping women. What are they learning?? And to those saying #notallmen ...well do something about then ones that objectify, degrade and treat women this way.

View image on Twitter
 
 
 
 

 

சட்டம் என்ன சொல்கிறது?

முடக்கநிலையின்போது, குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது பெற்றோருடன் அதிகம் பேசவோ முடியாது, இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த 40 நாட்களாக இணையதளம் மட்டுமே அவர்களுக்கு ஒரேயொரு வழியாக இருக்கிறது. அதில் பெரும்பாலான குழந்தைகள் தவறான வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர் என்று சைபர் நிபுணர் பவன் துக்கல் கூறுகிறார். 

"BoysLockerRoom உடன் தொடர்புடையவர்கள் சிறார்களாகத் தோன்றுகிறார்கள். ஆனால் அவர்களில் பெரியவர்களும் இருக்கலாம். அப்படியிருந்தால் சட்டப் பிரச்சனை பெரிதாக இருக்காது. இணையதளத்தில் சிறுமிகள் அல்லது பெண்களின் புகைப்படங்களை வைத்து ஆபாசமாக எழுதினாலும், இப்படிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டாலும், பாலியல் பலாத்கார அச்சுறுத்தலை விடுத்தாலும், அவை ஐ.டி சட்டத்தின் பிரிவு 67 ன் கீழ் தண்டனைக்குரியவை. இந்தச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்." 

#BoysLockerRoom: கைது நடவடிக்கை அவசியம் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கைGetty Images

"இந்த விவகாரத்தில் மைனர் சிறுமிகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்திருப்பதை பார்க்க முடிகிறது. இது, சைல்டு போர்னோகிராஃபி தடுப்பு சட்டத்தின் கீழ் வரும். `சைல்டு போர்னோகிராஃபி' என்பது, புகைப்படங்கள், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகள் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டிருந்தாலும், அது குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் புகைப்படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும் சட்ட விரோதமானது. அதுமட்டுமல்ல, சிறியவர்களைப் போல பெரியவர்கள் நடித்திருந்தாலும் அது `சைல்டு போர்னோகிராஃபி' எனும் வகைப்பாட்டில்தான் வரும். சைல்டு போர்னோகிராஃபி என்பது அருவருப்பான குற்றமாகும். இதற்கு ஐடி சட்டப்பிரிவு 67 பி-இன் கீழ் ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கத்தக்கது" என்று சைபர் நிபுணர் பவன் துக்கல் கூறுகிறார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, இதுபோன்ற குற்றத்தைச் செய்பவருக்கு 354 ஏ மற்றும் 292 சட்டங்களின் கீழும் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு ஒரு ஆழமான குற்றவியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகள் இந்த விவகாரத்திற்கு பொருந்தலாம் என்றும் பவன் துக்கலின் கருதுகிறார்.

இந்த விவகாரமானது, சிறுமிகளின் புகைப்படங்களை உருவாக்கி, தவறான மின்னணு பதிவுகளை உருவாக்குவது பற்றியும் உள்ளது.

"இதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் இருக்கலாம், ஒன்று மக்களை ஏமாற்றுவது, மற்றொன்று ஒரு பெண்ணின் மதிப்பு-மரியாதை மற்றும் நல்லெண்ணத்தையும் கெடுப்பதாக இருக்கலாம்" என்று பவன் துக்கல் கூறுகிறார். 

இந்த குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 468 மற்றும் 469 பிரிவுகளின் கீழ் வருவதாக அவர் கூறுகிறார். 

#BoysLockerRoom: கைது நடவடிக்கை அவசியம் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கைGetty Images

தவறான பதிவுகளை வெளியிடுவது அல்லது பரிமாற்றம் செய்வது போன்றவை சட்டப்பிரிவு 468 இன் கீழ் வரும். இதற்கு ஏழாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அதேபோல, சட்டப்பிரிவு 469இன் கீழ் ஒருவரின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் தவறான பதிவுகளை வெளியிடுவது, எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குவது போன்றவை அடங்கும். 

பவன் துக்கலின் கூற்றுப்படி, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்றால், அவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், நெட்வொர்க் சேவை வழங்குநர்கள் அரசு கேட்கும்போது தேவையான தகவல் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே இந்த விஷயத்தில் போலீசார் இன்ஸ்டாகிராமிடம் இருந்து தகவல்களை பெறவேண்டும்.

#BoysLockerRoom பயனர்கள் இன்ஸ்ட்ராகிராமில் லாக்-இன் (உள்நுழைந்த) செய்த இடத்திலிருந்து காவல்துறையினருக்கு ஐ,பி முகவரிகள் கிடைத்தால், அவர்கள் பல்வேறு சேவை வழங்குநர்கள் மூலமாகவும் தனிநபர்களை அடையாளம் காணலாம். 

 

 

https://www.bbc.com/tamil/india-52543135

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாயிஸ் லாக்கர் ரூம் விவகாரம்: சிறுமியால் உருவாக்கப்பட்ட போலி கணக்கு திடுக்கிடும் தகவல்

பாயிஸ் லாக்கர் ரூம் விவகாரம்: சிறுமியால் உருவாக்கப்பட்ட போலி கணக்கு போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பதிவு: மே 11,  2020 09:03 AM
புதுடெல்லி
 
இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம் ' என்ற குழு உருவாக்கி அக்குழுவில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் வகுப்பு தோழிகள் மற்றும் சிறுவயது பெண்களின் ஆபாச படங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுடன் படங்களுக்கு மதிப்பெண்ணும் வழங்கி வந்துள்ளனர்.
 
மாணவர்கள் அநாகரீகமான கருத்துக்களை கூறுவது, பாலியல் கொடுமை செய்வது பற்றி பேசுவது உள்ளிட்டவை இதன் மூலம் அரங்கேறியுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி மகளீர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
 
இதனை அடுத்து சுவாதி மாலிவாலின் வேண்டுகோளை அடுத்து டெல்லி போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளனர். சைபர் கிரைம் பிரிவு, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது.
 
விசாரணையில்  'சித்தார்த்' என்ற கற்பனையான பெயர் சமூக வலைதள பயன்பாட்டில் ஒரு போலி சுயவிவரத்தை சிறுமி ஒருவர் உருவாக்கி உள்ளார். ஸ்னாப்சாட் உரையாடல் உண்மையில் ஒரு பெண் (அனுப்புநர்) மற்றும் ஒரு பையன் (ரிசீவர்) இடையே உள்ளது என்று தெரியவந்துள்ளது, அதில் சிறுமி 'சித்தார்த்' என்ற கற்பனையான ஸ்னாப்சாட் கணக்கு மூலம் அரட்டை செய்திகளை அனுப்பி உள்ளார். இந்த உரையாடல் சிறுவனின் 'மதிப்புகள் மற்றும் தன்மையை' சோதிப்பதற்காகும்.
 
ஒரு ஆண் நபரின் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் திட்டத்தை அரட்டையில் பரிந்துரைத்தார். ஒரு போலி, கற்பனையான அடையாளத்தைப் பயன்படுத்தி அவர் அத்தகைய அரட்டை செய்திகளை அனுப்புவதன் நோக்கம், ரிசீவர் பையனின் எதிர்வினை மற்றும் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை சரிபார்க்க வேண்டும் வேண்டும் என்பதற்காக மட்டுமே என தெரியவந்து உள்ளது.
 
இது குறித்து மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட மாட்டாது என்று போலீசார் தெரிவித்தனர். "ஒரு போலி ஐடியை உருவாக்குவது தவறு என்றாலும், அவரது நோக்கம் தீங்கிழைக்கவில்லை, எனவே நாங்கள் எந்த புகாரையும் பதிவு செய்யவில்லை" என்று ஒரு அதிகாரி செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு தெரிவித்து உள்ளார்.
 
சிறுமியும் பையனும் பாய்ஸ் லாக்கர் ரூம் கணக்குடன் இணைக்கப்படவில்லை, ஆனால் அவர்களின் ஸ்னாப்சாட் தொடர்புகளின் ஸ்கிரீன் ஷாட் இன்ஸ்டாகிராம் குழுவில் உள்ளவர்களுடன் சேர்ந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு கலந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்
 
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நீங்கள் தந்த இணைப்பில் சீமான் நேரடியாக பேசும் வீடியோ ஒன்று உள்ளது ஹிட்லர் பாணியிலேயே ஹிட்லரை புகழ்ந்து பேசுகிறார் சீமான்.
  • நெருக்கடி என்ன – தீர்வு என்ன? (பகுதி 2) 11. இலங்கை பெருமளவில கடன்பட்டுள்ளதல்லவா? இந்த கடன் நெருக்கடியை தீர்ப்பது எப்படி?   இலங்கை அரசாங்கம் பெருமளவில் கடன்பட்டுள்ளது. இலங்கை செலுத்த வேண்டிய கடன் ரூ.12 டிரில்லியன் அல்லது அன்னளவாக 65 பில்லியன் அமெரிக்க டொலர் எனக் கூறப்படுகிறது. அதில் வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டிய கடன 55 பில்லியன் டொலர்;. அதில் 14 வீதம் சீனாவிற்கு, 12 வீதம் ஜப்பானுக்கு, 14 வீதம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு மற்றும் 11 வீதம் உலக வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் மொத்த மதிப்பு 87 பில்லியன் டொலர் என்பதால் கடன் விகிதம் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 78 வீதமாகும். கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதைப் பற்றி பேசுவதற்கு முன்பு, கடன் நெருக்கடி தோன்றிய விதம் குறித்து பேச வேண்டும். இலங்கை அதிகமாகக் கடன் பெற்றிருப்பது பணம் சம்பாதிக்கும் திட்டங்களுக்காக அல்ல. அடித்தள வசதிகளுக்காகவும், அன்றாட நுகர்விற்காகவுமே கடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிரவும் பழைய கடனை செலுத்துவதற்காகவும் புதிதாக அடிக்கடி கடன் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த கடன் நெருக்கடியானது உலக பரிமாணத்தில் நவதாராள முதலாளியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. அதேபோன்று மூலதன திரட்சியோடும் சம்பந்தப்பட்டுள்ளது. மூலதனத்திற்கு அதிகமாக உபரியை பெற்றுக் கொள்வதாயிருந்தால், உழைப்பிற்காக வழங்கும் ஊதியத்தை குறைக்க வேண்டும். அதாவது மூலதன திரட்சியானது உழைக்கும் மக்களின் பங்கை குறைத்தும், அதுவரை அனுபவித்து வந்த உரிமைகளைக் கூட பறித்தும், கல்வி – சுகாதாரச் சேவை போன்ற சமூக பாதுகாப்புச் சேவைகளுக்குள் மூலதனத்தை நுழைவிப்பதற்காக உழைக்கும் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இப்படியாக பொருளாதாரத்தின் இலாபத்திலிருந்து அடிமட்ட மக்களுக்குக் கிடைக்கும் பங்கு குறையும் போது சமூகத்தின் கீழ் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் சிதைகிறது. அதாவது, அவர்களது வாங்கும் சக்தி குறைந்து நுகர்வுகளின் தரம் சிதைகிறது. பின்பு, முதலாளித்துவத்தினால் மிகை உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும், சேவைகளையும் விற்க முடியாமல் சந்தை செயற்பாடுகள் முடங்கிவிடும். இப்படியாக சந்தை செயற்பாடு பலவீனமடையும் போது மூலதன நகர்வு தடைபடுவதால் பொருளாதார வீழ்ச்சிக்கு முகம் கொடுக்க நேரிடும். சுருக்கமாகச் சொல்வதாயின், மூலதனமானது அதன் இலாபத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கும் போது அதன் இலாபம் சரிந்துவிடும்.   இந்தப் பிரச்சினையானது முதலாளியத்தினது முரண்பாடாகும். இதை தடுப்பதாயின் சமூகத்தின் வாங்கும் சக்தியை, விலைக்கு வாங்கும் ஆற்றலை குறையவிடாமல் ஒரளவு உயர்ந்த மட்டத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசை மையப்படுத்திய முதலாளித்துவமானது இதற்காக அரச தலையீட்டுடன் சமூ நலனோம்புகைகளை முன்னெடுக்கப்பட்டன. உதாரணமாக 1948 – 1978க்கிடையில் இலங்கை அரச ஏகபோக முதலாளித்துவம் செயற்பட்ட காலத்தில் இலவசக் கல்வி, இலவச சுகாதாரச் சேவை, இபோச – புகையிரத சேவைகள் போன்ற அரச தலையீட்டுடன் நடைபெற்ற இலாபகரமான சேவைகள், ஓய்வூதியம்- சேலாப நிதியம் போன்ற முதியோருக்கான பாதுகாப்புச் சேவைகள், வறிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்காக அரசி, மண்ணெண்ணெய் துணிகள், உலர் உணவுகள் ஆகிய கூப்பன் முறையினால் வறியோர் நிவாரணம் வழங்கப்பட்டது.    நிலவிலிருந்தாவது அரிசியை கொண்டு வருதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகளின் பின்புலத்தில் பொருளாதார உபாயம். உழைக்கும் மக்களுக்கு தேசிய வருமானத்தில் பிரிந்து செல்லும் பங்கு குறைந்தாலும் இந்த அரச நலனோம்புகைகள் ஊடாக வறிய மக்கள் கூட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றனர். ஆதலால் சந்தை செயற்படத் துவங்கியது. அரசாங்கம் முன்வந்து நலனோம்புகைகளை வழங்கியமையால் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தது. ஆனால் அந்த முறையானது மூலதன விரிவாகத்திற்கும், உலக மூலதன சுழற்சிக்கும் தடையாக இருந்தமையால் 1973 பொருளாதாரச் சரிவு போன்ற நெருக்கடிகள் உருவாகின. இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக 1978லிருந்து இலங்கையிலும், அதற்கு சமகாலத்தில் உலகிலும் நாடுகளின் எல்லைகளை உலக மூலதனத்திற்கு திறந்துவிடும் புதிய தாராள முதலாளித்துவ உபாயங்கள் நீர்த்து விடப்பட்டன. அதன்போது சமூக பாதுகாப்பு சேவைகள் உட்பட சகல துறைகளும் மூலதனத்திற்காக திறந்து விடப்பட்டு அவை விற்பனைப் பண்டங்களாக்கப்பட்டன. அதேபோன்று, அரசாங்கம் பொருளாதாரம் மீதான தனது தலையீட்டைக் குறைத்து நலனோம்புகைகளை வெட்டியது. எனவே, உழைக்கும மக்களின் வாங்கும் சக்தி குறைந்தமையால் அவர்களுக்கு மாற்றீடொன்று தேவைப்பட்டது. அந்த மாற்றீடானது மிகை நுகர்வு  வெறியை கோட்பாடாக நிர்மானித்தமை மற்றும் அந்தப் பொருட்கள் மற்றும் சேவைகளை விலைக்கு வாங்குவதற்காக கடன் வாங்கும வாழ்க்கைக் கலாசாரம் பழக்கப்படுத்தப்பட்டமை, கடன் பெற்று நுகர்வதற்கு அரச மட்டத்திலிருந்தே சமூகம் வழி நடத்தப்பட்டது. ஆகவே, அரசு மக்களின் வாழ்க்கை மட்டத்தை உயர்ந்த நிலைக்கு கொண்ட வரவேண்டிய பொறுப்பிலிருந்து  அரசாங்கம் மெதுவாக விலகியது.   இது தொடர்பில் சில உதாரணங்களை பார்ப்போம். அரசு பொது போக்குவரத்தில் தனது பொறுப்பை மெதுவாக கைவிட்டதோடு, வங்கிக் கடன் அல்லது லீசிங் அல்லது பினான்ஸ் முறைகளின் மூலம் தனியார் வாகனமொன்றை விலைக்கு வாங்க மக்களுக்கு ஆர்வமூட்டியது. அரிசிக் கூப்பன் உட்பட உணவிற்கான அரசின் தலையீடுகள் குறைக்கப்பட்ததோடு, உழைக்கும் மக்கள் 3 மாதங்களில் பெறும் வருமானத்தை பிணை வைத்து, இன்று நாம் பயன்படுத்தும் கடன் அட்டை அல்லது கிரடிட் காட் போன்றவற்றை சமூகக் கலாசாரமாக கொண்டு வரப்பட்டது. சமீபகாலமாக இலவச சுகாதாரச் சேவையை படிப்படியாக குறைத்து சுகாதாரக் காப்புறுதி முறையை அறிமுகஞ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார முறை, அரச ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறை ஆகியன் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இலவசக் கல்விக்கா வாய்ப்புகளை விரிவாக்குவதற்குப் பதிலாக தனியார் உயர் கல்வி நிறுவனங்களை திறந்து, அவற்றிற்கு கீழ்மட்ட வர்க்கத்தை தூண்டுவதற்காக மாணவர்க்கான கடன் முறையொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியும் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. ஓய்வூதியத்திற்கு பதிலீடாக சிரேஷ்ட பிரஜைகளுக்கான காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. வீடில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக வீட்டுக் கடன் மற்றும சொத்துக்களுக்கான கடன் போன்றவை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. சிறு கைத்தொழில்கள் மற்றும் சுய தொழிலுக்கான அரச அனுசரணையும், கூட்டு மக்கள் அமைப்புகளின் பொறுப்புகள் குறைக்கப்பட்டு நுண் கடன் முறையை அறிமுகப்படுத்தினாலும், அது பேரழிவாக ஆகியுள்ளது. நவதாராள முதலாளித்துவ உபாயங்களுக்குள் உழைக்கும் மக்களிடமுள்ள பொருளாதாரத்தின் பங்கு மேலும் குறைக்கப்படுவதோடு, சந்தையில் பொருள் வாங்குவதற்காக மக்கள் கடனை பயன்படுத்துகின்றனர்.    மேலும் மேலும் கடன் பெற்று பொருட்களை வாங்க மக்களைத்  தூண்டும் ஆட்சியாளர்களே கடன் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பது நகைச்சுவையாக உள்ளது. அதை விட நகைச்சுவை என்னவென்றால, சமூகப் பாதுகாப்பு சேவைகளின் பொறுப்புடமையிலிருந்து அரசு விலகும் போது, அவை விற்பனைப் பண்டங்களாக ஆக்கப்படும்போது, அதற்காக கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துப் போது, அதனை வரவேற்று, அவற்றிற்கு எதிரான அமைப்புகளை அவதூறு செய்யும் இவர்கள், கடனை செலுத்தும் முறையை கூறுமாறு இடதுசாரிகளுக்கு சவால் விடுவது. சமூகத்தை கடனாளியாக்கி வாங்கும் சத்தியை அதிகரிக்கும் மற்றும் கடன் சுமையால் மக்கள் தற்கொலை செய்யுமளவிற்கு அல்லது பித்துப் பிடிக்கச் செய்து அதன் ஊடாகவும் நிதி மூலதன ஏகபோகங்களை கொழுக்கச் செய்யும் ஒட்டுமொத்த முறையையுமே மாற்ற வேண்டும். இந்த கடன் நெருக்கடி இதற்கு அப்பாலும் வளர்ச்சியடை இடமளிக்கக் கூடாது. அதற்காக மூலதன அபிலாஷையின் மூலம் வழிநடத்தப்படும் பொருளாதாரத்திற்குப் பதிலாக சமூகத் தேவைகளினல் ஒழுங்கமைக்கப்படும் பொருளாதாரம் அவசியமாகும். இந்த பொருளாதார முறையைத் தான் நாங்கள் சோஷலிஸம் என்கிறோம். - தொடரும் http://poovaraasu.blogspot.com/2020/08/2.html
  • தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா? புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஒக்டோபர் 01 தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஹர்த்தாலையும் நடத்தி முடித்திருக்கின்றன.    தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்கு அரசியல் ரீதியாகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில், ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும் அதன் ஊடாகச் சர்வதேசத்துக்குச் செய்தி சொல்வதும் மாத்திரம், அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது.   தமிழ் மக்களின் அரசியல் எழுச்சி என்பது, ஒற்றுமையாக ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டின் போக்கிலேயே நிகழ்ந்து வந்திருக்கின்றது. ஏனெனில், தமிழ் அரசியல், குறிப்பாகத் தமிழ்த் தேசிய அரசியல், பௌத்த சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிராக எழுந்த ஒன்று.    அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலுக்கும், அதன் ஓரணித் திரட்சிக்கும் சுதந்திர இலங்கையைத் தாண்டிய வரலாறு உண்டு. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம், அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்றிருந்தால், அரை நூற்றாண்டுக்கு முன்னரேயே, தமிழ் மக்கள் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.    தேர்தல் மேடைகளில் உதிர்க்கப்படும் ஒற்றுமை, ஓரணிக் கோரிக்கை என்பன தர்க்க ரீதியானவை இல்லை. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும், சனக்கூட்டங்களின் ஜனநாயக அடிப்படைகளோடு பலம் பெறும் நடைமுறைகள்தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம், எல்லாவற்றையும் பெற்றுத் தந்துவிடாது என்பதுதான் கள யதார்த்தம்.    ஒற்றுமையையும் ஓரணித் திரட்சியையும் தாண்டி, நடைமுறைக் களத்தைப் புரிந்து கொண்ட அரசியலுக்குத் தலைமைகளும் கட்சிகளும் அதன் பின்னால் திரளும் தரப்புகளும் தயாராக வேண்டும்.   ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேர்தல்களைக் குறிவைத்த அரசியல். அது, தூரநோக்கோ, அரசியல் உரிமைகளுக்கான இலக்குகளையோ கொண்டிருக்கவில்லை. தேர்தல் வெற்றி என்கிற ஒற்றைச் சிந்தனையையே அதிகம் கொண்டிருக்கின்றது.  தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் கட்சிகள், மக்களின் நம்பிக்கையை இழந்து, தோற்றுப்போன சந்தர்ப்பங்களில், தங்களைப் பலப்படுத்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தோற்றமும் கூட, அவ்வாறான பின்னணிகளைக் கொண்டவைதான். இன்றைக்கும் அப்படியான நிலையொன்று தோன்றியிருக்கின்றது.  அதன்போக்கில், தோற்றுப்போன தரப்புகளும் அதன் தலைவர்களும் ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரையில், ஏக தலைமைத்துவக் கோசத்தோடு இயங்கிய கூட்டமைப்பு, குறிப்பாகத் தமிழரசுக் கட்சி, இன்றைக்கு ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளோடு இணக்கமான நிலையெடுத்திருப்பது, அதன் போக்கிலானது என்பதுதான் பொதுவான உணர்நிலை.  திலீபனுக்கான நினைவேந்தல் என்பது, தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினை என்கிற காரணத்தால், மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகள், தவிர்க்க முடியாத சூழலில், மாவை சேனாதிராஜாவின் அழைப்பை ஏற்றிருக்கின்றன. ஓரணியில் சேர்ந்திருக்கின்றன என்கிற நிலையைத்தாண்டி, அதில் புரிந்து கொள்ளக் கூடிய அம்சங்கள் ஏதும் இல்லை. அப்படியான நிலையில், வாய்ப்பேச்சில் மாத்திரம் ஒற்றுமை, ஓரணித் திரட்சி என்கிற விடயங்களுக்கு, என்ன வகையிலான முக்கியத்துவம் இருக்கின்றது?   எந்தவோர் அரசியலும் அதுசார் போராட்டங்களும், சொந்த மக்களிடம் அங்கிகாரத்தைப் பெறாமல், பிறதரப்பிடம் அங்கிகாரத்தைப் பெற முடியாது. தமிழ்த் தேசிய அரசியலின் ஓரணித் திரட்சி என்பது, சொந்த மக்களிடம் சந்தேகங்களுக்கு அப்பாலான அங்கிகாரத்தைப் பெற வேண்டும். அது, சுயநல அரசியல் நோக்கங்களுக்கு அப்பாலான தலைமைத்துவங்களாலேயே சாத்தியப்படும்.  மாறாக, வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்த நகர்வு என்றால், அது அயோக்கியத்தனமான நடவடிக்கை. அது, மக்களை இன்னும் இன்னும் சோர்ந்துபோக வைக்கும்.    தமிழ் மக்கள், போராட்டங்களுக்கு உள்ளாலேயே வந்தவர்கள். அவர்களுக்கு, எந்தவகையான போராட்ட வடிவங்களும் புதியவை அல்ல! அதன் கடந்த கால அடைவுகள் குறித்தும் தெளிவான அனுபவங்கள் உண்டு.  அப்படியான நிலையில், அடையாளப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதால், என்ன பலன் என்கிற கேள்வியை, மக்கள் கேட்கும் கட்டத்தை நோக்கி நகர்த்திவிடக் கூடாது என்பதை, அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.  போராட்டங்கள் எல்லாமும் வெற்றியைப் பெறுவதில்லைத்தான். ஆனால், ஏற்கெனவே தோற்றுப்போன போராட்ட வடிவங்களை, மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னால், அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். அதுதான், புதிய வடிவிலான போராட்டத்தையும் அதற்கான உத்திகளையும் உருவாக்க உதவும். அவை, சர்வதேசத்தையும் அரசாங்கத்தையும் அந்தரமான நிலைக்குத் தள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும்.   தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்றது முதல், அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் ஹர்த்தாலும்  புறக்கணிப்புப் போராட்டமும் இருக்கும் ஒன்று! இவற்றைத் தாண்டி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தையும் நடத்தி இருக்கின்றது.  அப்படியான நிலையில், இந்தப் போராட்ட வழிமுறைகளின் இன்றைய வடிவம், என்ன கட்டங்களில் நோக்கப்படுகின்றது, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது பற்றியெல்லாம், தெளிவாக ஆராய வேண்டும். அதைவிடுத்து, ‘போர் வெடிக்கும்’ என்கிற கோஷங்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. மாறாக, அவ்வாறான நிலைகள், சொந்த மக்களிடத்திலேயே தீண்டத்தகாத ஒன்றாகவே மாறும்.   ஆயிரம் நாள்களைத் தாண்டி நீண்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், தமிழ் மக்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை, ஓர் உதாரணமாகக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வலியுறுத்தி, ஆரம்பித்த போராட்டமொன்று, காலம் செல்லச் செல்ல, போராட்டக்காரர்களுக்குள்ளேயே பல உடைவுகளைச் சந்தித்து நின்றது.  ஒரு போராட்டத்தை, அதன் உன்னதங்களின் போக்கில் நோக்காமல், சுயநல அரசியலுக்காகக் கட்சிகளும் அதன் தலைமைகளும் கையாள முற்பட்டமையே, அந்தப் போராட்ட வடிவத்தை அதிகமாகப் பாதித்தது. ஒரு கட்டத்தில், தமக்கிடையிலேயே போராட்டக்காரர்கள் முட்டி மோதிக்கொள்ளும் நிலை உருவானது. யாரை நோக்கி, போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்கிற கட்டம் மாறியது. தென் இலங்கை அதைக் கண்டு மகிழ்ந்து, கொண்டாடியது.   அதுபோல, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களுக்கு, ஆரம்பக் கட்டங்களில் ஆதரவளித்த மக்கள், காலம் செல்லச் செல்ல, அதிலிருந்து எட்டவிலகத் தொடங்கினார்கள். ஏனெனில், நீண்டு செல்லும் போராட்டமொன்றில், முழுமையாக அர்ப்பணிக்கும் அளவுக்கான காலமும் நேரமும் மக்களுக்கு இல்லை. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு, வாழ்வாதாரம் என்கிற நெருக்கடி, சொல்லிக் கொள்ளாத அளவுக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில், போராட்டத்துக்கு மனப்பூர்வமாக ஆதரவளித்தாலும், தொடர்ச்சியாக அதில் பங்கெடுத்தல் என்பது, சிக்கலான ஒன்றாக மாறுகின்றது. அது, அவர்களின் நாளாந்த நெருக்கடி. இவற்றையெல்லாம், தமிழ்த் தேசிய அரசியல் அனுபவமாகவும் படிப்பினையாகவும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.    திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்தான கேள்விக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பதிலளித்திருக்கின்றார்.  ஒற்றுமையானதும் ஓரணித் திரட்சியுடனான போராட்டம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பதற்கு முன்னால், ‘எதிரி’ எவ்வாறான சிந்தனைகளோடு இருக்கிறான் என்பதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால்தான், அதற்கு ஏற்ற மாதிரி அரசியலையும் அதற்கான போராட்ட வடிவங்களையும் வடிவமைக்க முடியும்.  “நீங்கள் ஹர்த்தால் நடத்தினால், ஒன்றும் ஆகப்போவதில்லை. கடந்த காலப் பதிலையே வழங்குவேன்” என்கிற இறுமாப்புள்ள ஆட்சியாளர்களிடம், அவர்கள் மறுதலிக்க முடியாத அரசியலுக்குள் சிக்க வைக்கும் போராட்டத்தை வடிவமைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அது, மீண்டும் முதலாவது படியில் கால் வைப்பதாக இருந்தாலும் பரவாயில்லை.  ஏனெனில், வாய்ஜாலங்களால் ஒன்றும் ஆகப்போதில்லை. அதனால், அரசியலை உளப்பூர்வமாகவும் அர்த்தபூர்வமாகவும் முன்னெடுக்கும் தரப்புகளாக, தமிழ்த் தலைமைகள் எழ வேண்டும். இல்லையென்றால், வரப்போகும் பேரழிவுகளுக்கு அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகள்-ஒற்றுமைப்பட்டால்-மட்டும்-போதுமா/91-256185
  • நான் உருவாக்கிய கட்சி கண் முன்னால் அழிவடைந்து செல்வத பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை – வி.மணிவண்ணன் இன்று தன்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை என்றும் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என மேலும் தெரிவித்தார். கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன் என்றும் எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றும் நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக திசை திருப்ப முற்பட்டபோது அதனை கட்சிக்குள் இருந்து தான் கடுமையாக எதிர்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்த போதும் அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த தன்னை கடுமையாக எதிர்த்தார்கள் என தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/நான்-உருவாக்கிய-கட்சி-கண/
  • இல்லையப்பா, உந்த படமும் ஏறீட்டு. ஆனா படத்தை பார்த்தும் செய்தி விளங்கேல்ல. என்ன நடந்தது ?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.