Jump to content

சமூக இடைவெளியும், கொரோனா வைரஸும்: 2 மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூக இடைவெளியும், கொரோனா வைரஸும்: 2 மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?

டேவிட் ஷுக்மென் பிபிசி அறிவியல்பிரிவு செய்தியாளர் 
கோப்புப்படம்Getty Images

பணியிடங்களில் ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலகில் பல நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை அலுவலகங்களில் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பலர் நம்புகின்றனர்.

அதே நேரம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதால், முடக்கநிலைக்குப் பிறகு பணியிடங்களுக்கு திரும்பி செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டியது அவசியமில்லை என அலுவலகங்கள் முடிவுசெய்தால் தினசரி வாழ்க்கை எளிதாக இருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

விரைவில் இது தொடர்பாக அறிவியலாளர்களின் சமீபத்திய ஆய்வுகள் வெளிவர உள்ளன. இந்த ஆய்வறிக்கை வைரஸ் பரவுவது குறித்து இது வரை நாம் தெரிந்துகொள்ளத பல அபாயகங்களை சுட்டிக்காட்டும். இது பலருக்கு வைரஸ் குறித்த பயத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

சமூக இடைவெளி குறித்து அறிவியல் என்ன சொல்கிறது ?

சமூக இடைவெளி என்பது வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதத்தில் வரையறுக்கப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால் வைரஸ் தொற்று உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.

உலக சுகாதார நிறுவனம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கியுள்ளது. வேறு சில நாடுகளில் 1.5 மீட்டர் என்றும் 1.8 மீட்டர் என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கின்றனர். பிரிட்டனில் 2 மீட்டர் சமூக இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.

சமூக இடைவெளியும் கொரோனா வைரஸும் : 2 மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?Getty Images

ஆனால் உண்மையில் இடைவெளியைப் போலவே மற்றொருவருடன் நாம் தொடர்பில் இருக்கும் நேரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று உள்ளவர்களுடன் ஒரு நிமிடம் முகத்திற்கு நேராக நின்று உரையாற்றுவதே ஆபத்துதான். ஒரு மீட்டர் இடைவெளியில் 2 வினாடிகள் நின்று ஒருவரை பார்ப்பதும் 2 மீட்டர் இடைவெளியில் ஒரு நிமிடம் உரையாடுவது ஒரே அளவு ஆபத்தானது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

2 மீட்டர் சமூக இடைவெளி எவ்வளவு பழமையான விதிமுறை ?

நமக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக 1930களிலேயே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டுள்ளது.

இருமல் அல்லது தும்மல் காரணமாக வெளிவரும் எச்சில் நீர்துளிகள் காற்றில் கரைந்து விடும். அல்லது புவி ஈர்ப்பு சக்தியால் கீழே விழும். பெரும்பாலும் எச்சில் துளிகள் ஒரு மீட்டர் அல்லது இரண்டு மீட்டர் தூரத்துக்குள் தரையில் விழுந்துவிடும்.

இதனாலேயே ஒருவர் இருமும்போது நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தீர்கள் அல்லது தரை வழியாக தொற்று பரவியதா என்ற சந்தேகம் எழுகிறது. பொதுவாக தரை மற்றும் மேஜை நாற்காலிகளின் மேற்பரப்பில் படிவதன் மூலமே வைரஸ் தொற்று பரவுவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் எச்சில் துளிகளின் மூலம் மட்டும் பரவுவதில்லை என்று கூறுகின்றனர். தொற்று உள்ளவர்களின் மூச்சுக் காற்று சுற்றுச்சூழலில் உள்ள காற்றில் கலக்கும்போது தூரத்தில் இருப்பவர்களுக்குகூட வைரஸ் பரவுகிறது என கூறப்படுகிறது. காற்றில் உள்ள சிறிய துகள்களான ஏரோசோல்ஸ் மூலமும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என அறிவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீனாவின் மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் கொரோனா நோயாளிகள் இருந்த இடத்தில் இருந்து நான்கு மீட்டர் தொலைவிலும் தரையில் மற்றும் சுற்றி இருந்த பொருட்களிலும் வைரஸ் இருப்பது தெரியவந்தது. எனவே இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 4 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது நல்லது என்கின்றனர்.

Banner image reading 'more about coronavirus'

ஆனால் அமெரிக்காவில் உள்ள ஆய்வகங்கள் ஏரோசோல்ஸ் மூலம் வைரஸ் பரவுகிறது என்ற ஆராய்ச்சி முடிவுகளை ஏற்க மறுக்கின்றன. மேலும் இரண்டு மீட்டர் இடைவெளிக்கு மேல் பரவும் வைரஸுக்கு தீவிர நோய் பாதிப்பை உண்டாக்கும் சக்தி இருக்குமா என்பதும் சந்தேகம்தான் என்று அமெரிக்க ஆய்வகங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இருப்பதை விட வெளியில் இருப்பது பாதுகாப்பானதா ?

எதிர்பாராத விதமாக வீடு அல்லது ஒரு கட்டடத்தின் உட்புறத்தில் இருப்பதை விட வெளிப்புறத்தில் இருப்பது பாதுகாப்பானது என அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். இதனாலேயே ஊரடங்கு உத்தரவு தளர்த்தபட்ட பிறகு முதலில் அனுமதிக்கப்படும் தொழில்களில் கட்டுமானப் பணி முதலில் இடம் பெறுகிறது.

இது தொடர்பான உண்மைகளைக் கண்டறிய ஜப்பானில் 110 கோவிட்-19 நோயாளிகளுக்கு எப்படி வைரஸ் பரவியது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இயற்கையான சூழலில் காற்றில் கலந்து வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே இருந்தது. 

வீட்டிற்குள் அல்லது பணியிடங்கள் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம். இதனால் ''வெளிப்புறத்தை விட உட்புறத்தில் வைரஸ் அதிகம் பரவுவதே கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட பாதிப்புகளுக்கு காரணமாக அமையும்'' என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்Getty Images

முகக்கவசம் அணிவதால் சமூக இடைவெளியை தவிர்க்கலாமா ?

அடுத்த கட்டமாக கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்தப்போகிறது என்பது தெரியாமல் அரசுகள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி வருகின்றன. அனைவரும் முக கவசம் வாங்க வேண்டும் அல்லது வீட்டிலேயே தயாரித்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்படுகிறது.

ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுள்ளது. 

ஸ்காட்லாந்து அரசாங்கம் மருத்துவர்கள் அணியும் முக கவசங்களை பொதுமக்கள் யாரும் வாங்கி அணியவேண்டாம். ஆனால் வீட்டிலேயே ஒரு முக கவசம் தயாரித்து அனைத்து பொது மக்களும் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.

 

சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழலில் முக கவசம் அணிவது பலரை பாதுகாப்பாக உணர செய்யும். அதனால் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

https://www.bbc.com/tamil/science-52528780

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.