Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அழகிய வீடு | 1070 sq feet, 2.5 cent இடத்தில ...

எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும்  குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர.

நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும்.  பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........

ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!

 • Like 6
 • Haha 1
Link to comment
Share on other sites

 • Replies 277
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

Condition

1) எக் காரணம் கொண்டும் இங்கே இருந்துகொண்டு அங்கே வீடுகட்ட நினைக்கக் கூடாது. வீடுகட்டப்போறீங்களா ? களத்தில (நிலத்தில) நில்லுங்கோ.  😎

உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை என்பதற்கும் மேலால் இது என்னுடைய சொந்த அனுபவம். 😢

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

Condition

1) எக் காரணம் கொண்டும் இங்கே இருந்துகொண்டு அங்கே வீடுகட்ட நினைக்கக் கூடாது. வீடுகட்டப்போறீங்களா ? களத்தில (நிலத்தில) நில்லுங்கோ.  😎

உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை என்பதற்கும் மேலால் இது என்னுடைய சொந்த அனுபவம். 😢

100% உண்மை..... ஒரு மதில் கட்ட வெளிக்கிட்டு இன்னும் கட்டி முடியல்ல.....வளவுக்க சேர்ந்த குப்பையை அகற்ற ட்ராக்ட்டருக்கு சொல்லி அவன் ஓருமுறை வந்து அள்ளிக்கொண்டு போனவன்தான் பிறகு ஆளைக் காணேல்ல. சிலதுக்கு ஆசைப்படலாம் தப்பில்லை.ஆனால் நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று சொல்லேலாது.....!   🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  தலையங்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள்.நானும் இது பற்றி ஒரு திரி ஆரம்பிக்க இருந்தேன்.
பல தரப்பிலும் விவாதிக்கக்கூடிய தலைப்பு.👍

புலம்பெயர் மக்கள் மத்தியில் ஊரில் வீடு கட்டுவது பந்தாவாகவும் பார்க்கப்படுகின்றது.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

Condition

1) எக் காரணம் கொண்டும் இங்கே இருந்துகொண்டு அங்கே வீடுகட்ட நினைக்கக் கூடாது. வீடுகட்டப்போறீங்களா ? களத்தில (நிலத்தில) நில்லுங்கோ.  😎

உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை என்பதற்கும் மேலால் இது என்னுடைய சொந்த அனுபவம். 😢

இங்கே நின்றுகொண்டு கட்டுற மடை வேலையை நான் செய்யமாட்டன். 😀

21 minutes ago, suvy said:

100% உண்மை..... ஒரு மதில் கட்ட வெளிக்கிட்டு இன்னும் கட்டி முடியல்ல.....வளவுக்க சேர்ந்த குப்பையை அகற்ற ட்ராக்ட்டருக்கு சொல்லி அவன் ஓருமுறை வந்து அள்ளிக்கொண்டு போனவன்தான் பிறகு ஆளைக் காணேல்ல. சிலதுக்கு ஆசைப்படலாம் தப்பில்லை.ஆனால் நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று சொல்லேலாது.....!   🤔

எனது நண்பி ஒருவரும் வீடு கட்ட ஆரம்பித்து இன்னும் முடியேல்லை. சாப்பிட்டவுடன் இரண்டு மணித்தியாலம் நித்திரை கொண்டுவிட்டுத்தான் வேலை செய்வார்களாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நல்லதொரு  தலையங்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள்.நானும் இது பற்றி ஒரு திரி ஆரம்பிக்க இருந்தேன்.
பல தரப்பிலும் விவாதிக்கக்கூடிய தலைப்பு.👍

புலம்பெயர் மக்கள் மத்தியில் ஊரில் வீடு கட்டுவது பந்தாவாகவும் பார்க்கப்படுகின்றது.

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
இணையவன் போட்டதுபோல களிமண்ணால் கட்டலாமோ?அதுக்கான வசதி அங்கு இருக்கா என்றும் யோசிச்சனான்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

1) இங்கே நின்றுகொண்டு கட்டுற மடை வேலையை நான் செய்யமாட்டன். 😀

2) எனது நண்பி ஒருவரும் வீடு கட்ட ஆரம்பித்து இன்னும் முடியேல்லை. சாப்பிட்டவுடன் இரண்டு மணித்தியாலம் நித்திரை கொண்டுவிட்டுத்தான் வேலை செய்வார்களாம்.

1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ☹️)

தவறு நிகழக் கூடிய இடங்கள்.

உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி

1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர்.

2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம்.

3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை

எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிறேன். தவறுகளிருப்பின் விடயமறிந்தவர்கள் தாராளமாகத் திருத்தலாம்.  😀

35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
இணையவன் போட்டதுபோல களிமண்ணால் கட்டலாமோ?அதுக்கான வசதி அங்கு இருக்கா என்றும் யோசிச்சனான்.

வதிவிட உரிமையைப் பெற இரண்டு வழிகளுண்டு.

1) 2.5 மில்லியன் ரூபாய்களை வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் (?) நீண்டகால வைப்பிலிடல். 

2) கல்வி அடிப்படையிலான அனுமதி

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

100% உண்மை..... ஒரு மதில் கட்ட வெளிக்கிட்டு இன்னும் கட்டி முடியல்ல.....வளவுக்க சேர்ந்த குப்பையை அகற்ற ட்ராக்ட்டருக்கு சொல்லி அவன் ஓருமுறை வந்து அள்ளிக்கொண்டு போனவன்தான் பிறகு ஆளைக் காணேல்ல. சிலதுக்கு ஆசைப்படலாம் தப்பில்லை.ஆனால் நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று சொல்லேலாது.....!   🤔

ஐயா சுவி,

கூறுவதற்குக் கடினமாக இருக்கிறது.

 தெரிந்த ஒரு கட்டட ஒப்பந்தக்காறரை, எனது நண்பனுக்கு வீடு கட்டுவதற்காக அறிமுகப்படுத்தி இரண்டு வருடங்கள். வீடு கட்டத் தொடங்கி ( வட்டக்கச்சி, கிளிநொச்சி)  ஒன்றரை வருடங்கள். வீடு கட்டி அரைவாசியில் நிற்கிறது. செலவோ நாற்பதைத் தாண்டிவிட்டது. 

நண்பனின் முகத்திலும் முழிக்க முடியவில்லை, அவன் வயதான பெற்றோரின் முகத்திலும் முழிக்க முடியவில்லை(போராளி குடும்பம். இறுதி யுத்தத்தில் போராளி காணாமல் போனார்). இன்று காலையும் தொலைபேசி அழைப்பு வந்தது. ஒப்பந்தக்காறர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கிறாரில்லை என்று. 

😡😡

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அழகிய வீடு | 1070 sq feet, 2.5 cent இடத்தில ...

எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும்  குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர.

நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும்.  பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........

ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!

முகநூல் வழியாக இப்படியான கிராபிக்ஸ் வீடுகள் பல உலா வருகின்றன. அதில் 70 இலட்சம் வீடு கட்ட வேணுமாம்... அதுவும் 7 இலட்சம் தள்ளுபடியின் பின். உண்மை பொய் தெரியாது. 

ஒருவேளை அக்கா அப்படியான கிராபிக்ஸ் வீடுகளை பார்த்திட்டு மயங்கி இருப்பா போல. 

நிச்சயமா நீங்கள் ஒன்றை கட்டலாம். ஆனால்.. கட்டும் செலவு.. இப்போ முன்னரை விட அதிகமாகலாம். 

ஊரில் வீடு கட்டும் போது ஒப்பந்த அடிப்படையில் கட்டுவது நல்லம். நாள் கூலி அடிப்படையில் கட்டினாலோ.. திருத்தங்கள் செய்தாலோ.. செலவு அதிகம் முடியும்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் கட்டினாலும் கட்டி முடியும் வரை ஒரு நம்பிக்கையானவரின் அல்லது நம்பிக்கையானவர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். 

மேலும் காசு கைக்கு போகாட்டில்.. அங்கு வேலை நடக்காது. எனவே காசைக் கையில் வைச்சுக் கொண்டு தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அதுவும் மொத்தக் காசையும் ஒரே தடவையில் கொடுத்தீர்கள் என்றாலும் வேலை நடக்காது. முடிக்கப்படும் வேலைக்கு ஏற்ப திட்டம் திட்டமாக காசு கொடுக்கப்பட்டால் நன்று.

வீடு கட்ட மட்டும் 70 இலட்சம். இதில் இன்ன பிற பொருட்கள்.. தளபாடங்கள்.. அதிநவீன சாதனங்களுக்கு அவர்கள் பொறுப்பில்லை என்பார்கள். எனவே எல்லாவற்றையும் ஆரம்பத்தில் பேசிட்டு.. சரியான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்வதும்.. அந்த ஒப்பந்தக்காரர் தகுதியானவரா என்பதை அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக மிக மிக முக்கியம். 

ஊரில் இப்ப நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள். அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வீடு கட்டுகிறீர்கள் என்று தெரிந்தால்.. காசை நல்லாக் கறக்கலாம் என்று தான் வேலை செய்வார்கள். எனவே.. உள்ளூரில் இருந்து கொண்டு வீடு கட்டுவது போலக் காண்பிப்பது நல்லம். 

Edited by nedukkalapoovan
 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

ஐயா சுவி,

கூறுவதற்குக் கடினமாக இருக்கிறது.

 தெரிந்த ஒரு கட்டட ஒப்பந்தக்காறரை, எனது நண்பனுக்கு வீடு கட்டுவதற்காக அறிமுகப்படுத்தி இரண்டு வருடங்கள். வீடு கட்டத் தொடங்கி ( வட்டக்கச்சி, கிளிநொச்சி)  ஒன்றரை வருடங்கள். வீடு கட்டி அரைவாசியில் நிற்கிறது. செலவோ நாற்பதைத் தாண்டிவிட்டது. 

நண்பனின் முகத்திலும் முழிக்க முடியவில்லை, அவன் வயதான பெற்றோரின் முகத்திலும் முழிக்க முடியவில்லை(போராளி குடும்பம். இறுதி யுத்தத்தில் போராளி காணாமல் போனார்). இன்று காலையும் தொலைபேசி அழைப்பு வந்தது. ஒப்பந்தக்காறர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கிறாரில்லை என்று. 

😡😡

ஊரில் வீடு கட்டுவதாயின் நம்பிகையான சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும். அவர்களின் மேற்பார்வையின் மூலமே வீடு கட்டுவது நல்லது.இல்லையேல் சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பண கதைதான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஊரில் வீடு கட்டுவதாயின் நம்பிகையான சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும். அவர்களின் மேற்பார்வையின் மூலமே வீடு கட்டுவது நல்லது.இல்லையேல் சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பண கதைதான்.

பெற்றோர், வயதானவர்கள்,

வட்டக்கச்சியில் , வாடகை வீட்டில்தான் தற்போது நிற்கின்றனர். 🤥

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
இணையவன் போட்டதுபோல களிமண்ணால் கட்டலாமோ?அதுக்கான வசதி அங்கு இருக்கா என்றும் யோசிச்சனான்.

ஒரு வயதுக்கு பிறகு நோய்நொடியில்லாத ஆக்கள் போய் இருக்கலாம். புலம்பெயர்ந்த ஆக்களின்ரை உடம்புவாசி இப்ப இரண்டும் கெட்டான் நிலை.அதுகும் 60 வயதுக்கு மேலை எண்டால் கொஞ்சம் யோசிக்க வேணும்.

 மண் வீட்டிலை இருந்தால் கொட்டில் வீட்டிலை இருக்கிற சனம் எண்டு நக்கல் அடிக்கிற கூட்டம் இப்பவும் அங்கை இருக்கோ தெரியாது.😁

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உழைப்பில் நம்பிக்கை இல்லாத, களவு, கொள்ளையில் நம்பிக்கையுள்ள, அவர்களிடம் பங்கு வாங்கிக் கொண்டு அவர்களை இயங்க விடும், சிங்கள போலீசுக்காரர்கள் இருக்கும் வரை, வெளிநாட்டினர் அங்கே போய் தங்குவது கனவு தான்.

வருத்தம் ஏதும் வந்தால், மருத்துவ செலவு, ஒரே மாதத்தில் அங்கிருந்து கிளம்ப வைக்கும். இல்லாத வருத்தத்தினை இருப்பதாக சொல்லி, அதனை சுகப்படுத்தி விட்டதாக சொல்லி பணம் பறிக்கும் கோஸ்ட்டிகளும் உண்டு.

Link to comment
Share on other sites

மெசொபொத்தேமியா 

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
 
ன்னுடைய முதல் தெரிவு  முள்ளியவளை- தண்ணீற்று  நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர்.

 வதிவிட பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சிறீலங்காவில் காணியும் பழைய அடையாள அட்டையும் இருந்தால் இரட்டை குடியுரிமை அவசியமில்லை. ஆனால் அவதானமாக இருக்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கு நகர சபையிடம் planning permission எடுக்க வேண்டும். அதுவே  2000 சதுர அடிக்கு மேல் என்றால் urban development authority இடம் எடுக்க வேண்டும். 

Planning permission &  மின்சார இணைப்பு ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது அடையாள அட்டை அவசியம்.

UC அல்லது UDA மற்றும் EB க்கு அலைய வேண்டி வரும்

Edited by MEERA
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kaalee said:

எண்டாலும் சொந்த ஊரிலை இருக்குமாப்போலை வராது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓர் சட்ட அங்கீகாரம் இல்லாது தொடங்காதீர்கள்...

Edited by MEERA
Link to comment
Share on other sites

குமாரசாமி

 • மப்புறுப்பினர்

எண்டாலும் சொந்த ஊரிலை இருக்குமாப்போலை வராது.

எது உங்கட சொந்த ஊர் ?

எனக்கென்று ஒரு சொந்தஊர் இல்லை . இதுவரை ஒரு முப்பது ஊருக்குமேல இருந்திதுடன். என்ன ஒரு மாசத்தில எல்லாம் பழகிடும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kaalee said:

 என்னுடைய முதல் தெரிவு  முள்ளியவளை- தண்ணீற்று  நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர்.

பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பாதையில் புதுக்குடியிருப்பு போகுமுன், எனது குடும்பத்துக்கு பல ஏக்கர் காணி உள்ளது. 2016ல் போய் பார்த்தபோது திருகோணமலை தம்பலகாமம் பகுதி அகதிகள் குடியிருந்தார்கள்.

தமக்கு அங்கு காணி இல்லை,  இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இங்கு அரச பெர்மிட் உடன் இருப்பதாக சொன்னார்கள். DDC அலுவலகத்தில், தாம் பெர்மிட் கொடுத்தது உண்மைதான் என்றும், ஆனாலும் உடையவர்கள், ஒரிஜினல் உறுதியுடன் வந்தால், அந்த பெர்மிட் கான்செல் ஆகும் என்றார்கள்.

2019ல் போனபோது, அவர்கள் பலருக்கு தம்பலகாமம் காணிகள் திருப்பி கிடைத்து விட்டன. ஆனாலும் ஆசை, இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று விசாரித்து அறிந்தேன்.

ஏரியா விதானையார் காதுக்குள் குசுகுசுத்தார். கணவன் இல்லை என்று மனைவி ஒரு துண்டையும், மனைவி இல்லை என்று கணவன் ஒரு துண்டையும், தனித்தனியாக பிடித்து பல தம்பதிகள் பெர்மிட்  வாங்கி உள்ளனராம்.

பக்கத்தில் இருந்த காணிக்காரர், 25 ஏக்கரில், 5 ஏக்கரை பகிர்ந்து கொடுத்து, 20 ஏக்கரை எடுத்துக் கொண்டிருக்கிறார். கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாக்களித்ததால் கொடுக்க வேண்டி வந்தது. ஆனால் அவர்கள் அந்த 5 ஏக்கர் காணியை பெறும் அளவுக்கு, தனக்கு சொல்லப்படத்தை போல ஏழ்மையானவர்கள் அல்ல. தான் ஒரிஜினல் உறுதிக்காரனாக எழுதிக் கொடுக்க, பெர்மிட்டுடன் விற்க முடியாத காணிகளை, அடுத்த மாதமே வித்து விட்டு கிளம்பி விட்டார்களாம்.

நல்ல செம்பாட்டு மண்.... அவர்களுக்கு கொஞ்சம் காணி கொடுக்கலாம் என்று எமது குடும்பம் நினைக்க, முழுசா, ஆள் வைத்து விசாரித்தே கொடுங்கள்...வித்து விட்டு கிளம்பி விடுவார்கள். பெர்மிட்டுடன் அவ்வாறு விக்க முடியாது... அவர்களிலும் பார்க்க ஏழ்மையான நிலையில் பலர் உள்ளனர் என்கிறார் அவ்வூர் காரர் ஒருவர்.

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இப்படி பலர் ஆக்கிரமித்துகொண்டிருக்கின்றார்கள், வசதியிருந்தும். சிலருக்கு விதனை அரசியல் வாதிகளின் செல்வாக்கு வேறு. நன்றாக விசாரித்து ஏழைகளுக்கே கொடுங்கள், என்றென்னும் உங்களை மறக்கமாட்டார்கள், உங்களுக்கும் மன நிம்மதி

இனி ஊரில் போய் இருக்க எம்மால் முடியுமா? இரண்டு தோனியில் கால் வைத்த நிலையில்தான் நாங்கள் இப்ப. அங்கு பாதுகாப்புமில்லை, இடைக்கிடை போய்வர சரி.

நிரந்தரமாக தங்குவதின்றால், ஒரு பழைய வீட்டில் வருடம் தங்கி நிலைமைகளை அவதானித்து புதுவீடு கட்டுவது நல்லது.

நான் இங்குதான் பெரியகாணி வாங்கி தோட்டம் வைத்து நிம்மதியாக வாழ ஆசை. ஊருக்கு இடைக்கிடை போய் வரலாம்.

ஊரில் இப்ப எல்லாரும் வியாபர நோக்குதான், சொந்த உறவுகள் கூட, யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ☹️)

தவறு நிகழக் கூடிய இடங்கள்.

உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி

1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர்.

2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம்.

3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை

எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிறேன். தவறுகளிருப்பின் விடயமறிந்தவர்கள் தாராளமாகத் திருத்தலாம்.  😀

வதிவிட உரிமையைப் பெற இரண்டு வழிகளுண்டு.

1) 2.5 மில்லியன் ரூபாய்களை வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் (?) நீண்டகால வைப்பிலிடல். 

2) கல்வி அடிப்படையிலான அனுமதி

தோட்டக்காணிதான் இருக்கு. ஆனால் அதற்குள் வீடுகட்டுவது சாத்தியமா என்று தெரியவில்லை.
வதிவிட உரிமை என்று இதைக் குறிப்பிடுகிறீர்கள்?? நாம் வைத்திருப்பது யேர்மன் மற்றும் பிரித்தானிய கடவுச் சீட்டுகள். அவற்றுடன் வெளிநாட்டவருக்கான வதிவிட உரிமை தருவார்களா?? எத்தனைநாட்களுக்கு ??? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

முகநூல் வழியாக இப்படியான கிராபிக்ஸ் வீடுகள் பல உலா வருகின்றன. அதில் 70 இலட்சம் வீடு கட்ட வேணுமாம்... அதுவும் 7 இலட்சம் தள்ளுபடியின் பின். உண்மை பொய் தெரியாது. 

ஒருவேளை அக்கா அப்படியான கிராபிக்ஸ் வீடுகளை பார்த்திட்டு மயங்கி இருப்பா போல. 

நிச்சயமா நீங்கள் ஒன்றை கட்டலாம். ஆனால்.. கட்டும் செலவு.. இப்போ முன்னரை விட அதிகமாகலாம். 

ஊரில் வீடு கட்டும் போது ஒப்பந்த அடிப்படையில் கட்டுவது நல்லம். நாள் கூலி அடிப்படையில் கட்டினாலோ.. திருத்தங்கள் செய்தாலோ.. செலவு அதிகம் முடியும்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் கட்டினாலும் கட்டி முடியும் வரை ஒரு நம்பிக்கையானவரின் அல்லது நம்பிக்கையானவர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். 

மேலும் காசு கைக்கு போகாட்டில்.. அங்கு வேலை நடக்காது. எனவே காசைக் கையில் வைச்சுக் கொண்டு தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அதுவும் மொத்தக் காசையும் ஒரே தடவையில் கொடுத்தீர்கள் என்றாலும் வேலை நடக்காது. முடிக்கப்படும் வேலைக்கு ஏற்ப திட்டம் திட்டமாக காசு கொடுக்கப்பட்டால் நன்று.

வீடு கட்ட மட்டும் 70 இலட்சம். இதில் இன்ன பிற பொருட்கள்.. தளபாடங்கள்.. அதிநவீன சாதனங்களுக்கு அவர்கள் பொறுப்பில்லை என்பார்கள். எனவே எல்லாவற்றையும் ஆரம்பத்தில் பேசிட்டு.. சரியான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்வதும்.. அந்த ஒப்பந்தக்காரர் தகுதியானவரா என்பதை அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக மிக மிக முக்கியம். 

ஊரில் இப்ப நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள். அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வீடு கட்டுகிறீர்கள் என்று தெரிந்தால்.. காசை நல்லாக் கறக்கலாம் என்று தான் வேலை செய்வார்கள். எனவே.. உள்ளூரில் இருந்து கொண்டு வீடு கட்டுவது போலக் காண்பிப்பது நல்லம். 

வீடு கட்டுவது தொடர்பான அனைத்து வேலைகளும் எனக்கும் கணவருக்கும் அத்துப்படி இங்கு. ஆனால் அங்கு வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்தால் போதும் நாமே எல்லாம் செய்யலாம்.

சிறிய வீடுகள் ஒன்றும் இணையத்தில் கிடைக்காததாலேயே இந்தப் படத்தை வேறு வழியின்றிப் போட்டேன். எனது கணவர் குடும்பம் முன்னர் வன்னியில் இருந்தபோது களிமண் கல் அரிந்து கட்டிய வீட்டிலேயே இருந்ததாகக் கூறினார். நாம் அங்கு போய் நின்றுகொண்டுதான் வீடு காட்டுவோம் நெடுக்ஸ்.

அடுத்த பிரச்சனை வைத்தியம். நாம் வெளிநாட்டிலேயே மெடிக்கல் இன்சூரன்ஸ் போட முடியுமா??? அங்கு போய் இருப்பதற்கு ???

8 hours ago, குமாரசாமி said:

ஒரு வயதுக்கு பிறகு நோய்நொடியில்லாத ஆக்கள் போய் இருக்கலாம். புலம்பெயர்ந்த ஆக்களின்ரை உடம்புவாசி இப்ப இரண்டும் கெட்டான் நிலை.அதுகும் 60 வயதுக்கு மேலை எண்டால் கொஞ்சம் யோசிக்க வேணும்.

 மண் வீட்டிலை இருந்தால் கொட்டில் வீட்டிலை இருக்கிற சனம் எண்டு நக்கல் அடிக்கிற கூட்டம் இப்பவும் அங்கை இருக்கோ தெரியாது.😁

எமக்கு வயதுபோட்டுது என்னும் மனப் பயம் தான் எம்மை எதுவுமே செய்ய விடாமல் முடக்குவது. நாம் சனம் நக்கலடிப்பதைக் கணக்கிலேயே எடுக்கமாட்டோம்

8 hours ago, Nathamuni said:

உழைப்பில் நம்பிக்கை இல்லாத, களவு, கொள்ளையில் நம்பிக்கையுள்ள, அவர்களிடம் பங்கு வாங்கிக் கொண்டு அவர்களை இயங்க விடும், சிங்கள போலீசுக்காரர்கள் இருக்கும் வரை, வெளிநாட்டினர் அங்கே போய் தங்குவது கனவு தான்.

வருத்தம் ஏதும் வந்தால், மருத்துவ செலவு, ஒரே மாதத்தில் அங்கிருந்து கிளம்ப வைக்கும். இல்லாத வருத்தத்தினை இருப்பதாக சொல்லி, அதனை சுகப்படுத்தி விட்டதாக சொல்லி பணம் பறிக்கும் கோஸ்ட்டிகளும் உண்டு.

நாம் ஆடம்பரமாக வாழ்ந்தால்த்தான்மாற்றவர் கண்ணைக் குத்தும். எம்மூரில் எம் சமூகதத்துடன் வாழமுடியாதா என்ன ???

8 hours ago, Kaalee said:

மெசொபொத்தேமியா 

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
 
ன்னுடைய முதல் தெரிவு  முள்ளியவளை- தண்ணீற்று  நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர்.

 வதிவிட பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே 

என் கணவர் வன்னியைத்தான் நல்ல இடம் எனக் கூறுகிறார். ஆனால் தெரியாத ஊரில் நாம் போய் இருப்பது பாதுகாப்பானதா ???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தோட்டக்காணிதான் இருக்கு. ஆனால் அதற்குள் வீடுகட்டுவது சாத்தியமா என்று தெரியவில்லை.
வதிவிட உரிமை என்று இதைக் குறிப்பிடுகிறீர்கள்?? நாம் வைத்திருப்பது யேர்மன் மற்றும் பிரித்தானிய கடவுச் சீட்டுகள். அவற்றுடன் வெளிநாட்டவருக்கான வதிவிட உரிமை தருவார்களா?? எத்தனைநாட்களுக்கு ??? 

தோட்ட காணிக்குள் வீடு கட்ட அனுமதி குறித்து தெரியவில்லை, ஆனால் நெல்வயல் எனில் அனுமதி இல்லை.  

உங்களுக்கு இலங்கை பிறப்பு சான்றிதழ் இருந்தால், இலகுவாக, 12 மாத வதிவிட விசா தருவார்கள். யாழ்ப்பாணத்திலே பெறலாம். குடும்பத்தில் வயதானவைர்களை பராமரிக்க போவதாக காரணம் சொல்லலாம்.

55 வயதுக்கு மேல் பண முதலீடு, கல்வி தகுதி தேவையில்லை. பிறப்பு சான்றிதழ் இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

உங்களுக்கு சிறீலங்காவில் காணியும் பழைய அடையாள அட்டையும் இருந்தால் இரட்டை குடியுரிமை அவசியமில்லை. ஆனால் அவதானமாக இருக்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கு நகர சபையிடம் planning permission எடுக்க வேண்டும். அதுவே  2000 சதுர அடிக்கு மேல் என்றால் urban development authority இடம் எடுக்க வேண்டும். 

Planning permission &  மின்சார இணைப்பு ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது அடையாள அட்டை அவசியம்.

UC அல்லது UDA மற்றும் EB க்கு அலைய வேண்டி வரும்

எம்மிடம் பழைய அடையாள அட்டைதான் இருக்கு. புதிது தரமாட்டார்களே.
அதென்ன UC, UDA, EB கொங்சம் விளக்கமாகக் கூறுங்கள்

4 minutes ago, Nathamuni said:

தோட்ட காணிக்குள் வீடு கட்ட அனுமதி குறித்து தெரியவில்லை, ஆனால் நெல்வயல் எனில் அனுமதி இல்லை.  

உங்களுக்கு இலங்கை பிறப்பு சான்றிதழ் இருந்தால், இலகுவாக, 12 மாத வதிவிட விசா தருவார்கள். யாழ்ப்பாணத்திலே பெறலாம். குடும்பத்தில் வயதானவைர்களை பராமரிக்க போவதாக காரணம் சொல்லலாம்.

55 வயதுக்கு மேல் பண முதலீடு, கல்வி தகுதி தேவையில்லை. பிறப்பு சான்றிதழ் இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இது நல்ல செய்தியாக இருக்கிறதே. ஆனால் புதிதாகக் காணி வாங்குவது என்றால் எப்படி ???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர், இங்கேயே building வேலைகள் செய்பவர். இங்கே இருந்து கீட்சின் பிட்டிங்ஸ் மலிவா வாங்கி, அனுப்பி, நண்பருடன் போய், திருநெல்வேலி கேம்பஸ் ரோடில், பழைய வீட்டினை தானே நின்று திருத்தி, 35 ரூம் கட்டி, சிங்கள மாணவிகளுக்கு வாடைக்கு விட்டுள்ளார். அட்டாச் பாத்ரூம், கிச்சன் டிவி உடன், ரூமுக்கு உணவு அனுமதி இல்லை, CCTV பாதுகாப்பு, வாசலில் செக்யூரிட்டி என, சிங்கள பெற்றவர்கள் இடையே ஆர்வம் உண்டாகி, 2022 வரை waiting list.

நீங்கள் செய்ய முடிந்தால், முடடாள் வேலைக்கு ஆளைப்பிடித்து, இங்கிருந்து, ஆங்கிலோ ஏசியன் போன்றன மூலம், தேவையான பொருட்களை அனுப்பி, போய் நின்று செய்யுங்கோ.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ், குறிகளும் ஒற்றும் January 23, 2022 அன்புள்ள ஜெ.. எழுத்து குறித்த அடிப்படையான ஒரு கேள்வி.முற்றுப்புள்ளி , காற்புள்ளி போன்றவை ஆரம்ப கால தமிழில் இல்லை… போக போக தமிழில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறித்து ஒரு தெளிவு இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.. உதாரணமாக விகடன் போன்ற பத்திரிகைளில் எல்லா வாக்கியங்களிலுமே ஓர் ஆச்சர்யக்குறியை போட்டு விடுவார்கள்… ஒரு முறை பாலகுமாரன் எழுத்தை இப்படி ஆச்சர்யக்குறி போட்டு “ அழகு படுத்திய”  ஒரு பத்திரிக்கையைக் கடுமையாக சாடி இருந்தார் வாக்கியங்களின் நடுவே ஒரு பிராக்கெட்டை சேர்த்து  சுஜாதா அழகாக காமெடி செய்வார்…அடுத்தடுத்த முற்றுப்புள்ளிகள் வைப்பதன் மூலம் ஒ ஸ்லோனசை (நிதானத்தன்மை) ஏற்படுத்துவதை சிலர் செய்கிறார்கள்.இந்த அலங்காரங்கள் தேவை இல்லை என்று சொல்வோரும் உண்டு உங்கள் நிலைப்பாடு என்ன அன்புடன் பிச்சைக்காரன் *** அன்புள்ள பிச்சைக்காரன், நலம்தானே? மொழியின் எழுத்து வடிவத்திற்கும் அதன் உச்சரிப்பு வடிவத்திற்கும் உள்ள உறவென்பது நேரடியானது அல்ல. உச்சரிப்பு என்பது வேறு எழுத்து வேறு. ஓர் எழுத்துவடிவத்தை இன்ன உச்சரிப்பு என ஒரு சூழலில் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்வதனால் அப்படி பயன்பாடு கொள்கிறது. இந்த பொதுப்புரிதலால்தான் மொழி இயங்குகிறது. முகம் என்னும் சொல்லில் உள்ள கவும் கலம் சொல்லில் உள்ள க வும் வேறு வேறு. சம்ஸ்கிருதம், அதைப் பின்பற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வேறு வேறு க உண்டு. நமக்கு இல்லை. சிலர் அதை தமிழின் பெரிய குறையாகக் கண்டு  எழுத்துக்களின் மேலே அடையாளம் போடுவது, கீழே கோடு போடுவது போன்று பல முயற்சிகளை முன்வைத்ததுண்டு. ஆனால் நமக்கு வெவ்வேறு க ஆக அதை வாசிக்க எந்த தடையும் இல்லை. உச்சரிப்பை அப்படியே எழுதிவிடவேண்டும் என்பவர்கள் மொழி செயல்படும் விதத்தை அறியாதவர்கள். மொழியின் எழுத்துவடிவம் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மாறிவிடுகிறது. மாறியாகவேண்டும். அதற்கான பல தேவைகள் காலப்போக்கில் உருவாகிக்கொண்டே இருக்கும். வியப்பு என்னவென்றால், அதேபோல மொழியின் உச்சரிப்பும் மாறிவிடுகிறது என்பதே. தமிழ் மொழியின் உச்சரிப்பு மாறியிருப்பதை சினிமாக்களை கண்டாலே உணரலாம். பழைய ஒலிப்பதிவுகளைக் கேட்டால் இன்னும் துல்லியமாக உணரலாம். பழைய சங்கீதக்காரர்கள், தலைவர்களின் சொற்பொழிவுகளை இன்று கேட்டால் அவை காலத்தின் வேறொரு கரையில் ஒலிப்பவையாகப் படுகின்றன. நூறாண்டுகளுக்கு முன்புள்ள தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் மென்மையாக, சம்ஸ்கிருத எழுத்துக்களான ஹ ஷ போன்றவை துல்லியமாக ஒலிப்பவையாக உள்ளது. அதன்பின் ஓங்கிய உச்சரிப்பும், வல்லினம் மிகுந்த ஓசையும் உருவாகி வந்தன. காரணம் வானொலி அறிவிப்புகள் மற்றும் மேடைப்பேச்சு ஆகியவை என நான் ஊகிக்கிறேன். அழுத்தமாகச் சொல்லவேண்டிய தேவை அவற்றுக்கு இருந்தது. அவை பொதுப்பேச்சை பாதித்தன. சென்ற முப்பதாண்டுகளில் தமிழ் உச்சரிப்பு மீண்டும் மென்மையாகியிருக்கிறது. ஆங்கிலத்திற்குரிய மென்மை இது. ஆங்கில உச்சரிப்பை இளமையிலேயே பள்ளிகளில் கற்பிக்கிறார்கள். தமிழ் அந்த உச்சரிப்பில் சென்றமைகிறது. சொன்னான் என்னும் சொல் தமிழில் இருபதுகளில் ஷொன்னான்என்றும், எண்பதுகளில் ச்சொன்னான் என்றும் இன்று ஸொன்னான் என்றும் ஒலிக்கிறது. எல்லா காலத்திலும் ஓர் உச்சரிப்பு ‘எலைட்’ ஆனது என கருதப்படுகிறது. உயர்குடி, உயர்தளத்திற்குரியது என. [எல்லா மொழிகளிலும் அப்படித்தான்] மக்கள் அதை நோக்கிச் செல்கிறார்கள். அதுவே பொதுப்போகாக ஆகிறது. இன்று  ஆங்கில உச்சரிப்புடன் பேசுவது படித்தவர், நாகரீகமானவர் என்னும் சித்திரத்தை அளிக்கிறதென கருதப்படுகிறது. ஆகவே மொழியின் மாற்றங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அதன் சாராம்சமான கலையிலக்கியம், சிந்தனைகள், சொல்வளம் ஆகியவை அழியாமலிருக்கின்றனவா , தொடர்ந்து கற்கப்படுகின்றனவா என்று தான் பார்ப்பேன். எனில் அம்மொழி வாழ்கிறது. இலக்கணப்பிடிவாதம் மொழிக்கு எதிரான ஒரு பழமைவாத மனநிலை. கலையிலக்கியங்கள், சிந்தனைகளில் ஆர்வமோ அறிதலோ இல்லாதவர்களின் செயல்பாடு அது.அவர்கள் மொழியை தேங்கவைப்பவர்கள், அழிப்பவர்கள். தமிழில் புள்ளி அடையாளங்கள் ஆங்கிலம் வழியாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வந்தமைந்தவை. பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் உருவாக்கிய பாடநூல்கள் வழியாகவும்; நாளிதழ்களின் செய்திமொழியாக்கங்கள் வழியாகவும் அவை அறிமுகமாகி பரவலாயின. ஆனாலும் இலக்கணவாதிகள் பலர் அவற்றை நூறாண்டுகள் வரை ஏற்காமலிருந்தனர். தமிழுக்கு அவை ஒவ்வாதன என கருதினர். அத்தகையவர்கள் எண்பதுகளிலும் தங்கள் இதழ்களில் முற்றுப்புள்ளிகளைக்கூட பயன்படுத்தவில்லை. நான் அவர்களின் இதழ்களில் அன்று எழுதியிருக்கிறேன். இந்தப் புள்ளிஅடையாளங்களை போடுவதில் தமிழில் பெரிய சிக்கல் உள்ளது. ஆங்கில மொழி கூட்டுச் சொற்றொடர்கள் அமைக்க ஏற்றது. ஆகவே அரைப்புள்ளி, கால்புள்ளி போட்டு எழுதிக்கொண்டே செல்லலாம். சொற்றொடர்களில் குழப்பம் வராது. தமிழ்ச்சொற்றொடர்களில் எழுவாயில் தொடங்கி பயனிலையில் முடிவதுபோல ஒரு வட்ட அமைப்பு இன்றியமையாதது. இல்லையேல் பொருட்குழப்பம் அமையும். ஆகவே கால்புள்ளி அரைப்புள்ளிகளை போட்டு சொற்றொடர்களை நீட்டிச்செல்ல முடியாது. அதேபோல பலவகையான மொழியியல்புகள் தமிழுக்கு உண்டு. அவை குறைபாடுகள் அல்ல, மொழியின் தனித்தன்மைகள். ஆகவே இன்னொரு மொழியின் சொற்றொடர் அமைப்பை அப்படியே தமிழுக்கு கொண்டுவரலாகாது. சோதனைகள் செய்யலாம், தமிழ்ச் சொற்றொடர்களை மாற்றலாம். ஆனால் தமிழின் ஒலியழகும், சொற்றொடரின் அடிப்படைகளும் சிதையாமல் அதைச் செய்யவேண்டும். தமிழ் புனைவெழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாகச் சொற்றொடர் அமைப்பில் பல பயிற்சிகளை, முன்தாவல்களைச் செய்து வருகிறது. சில முயற்சிகள் பிழையானவை என்பதை மறுப்பதற்கில்லை. மொழியாக்கங்கள் வழியாக விசித்திர விளைவுகளும் உருவாகியிருக்கின்றன. ஆனால் இந்த முயற்சிகளின் வழியாகவே மொழி முன்னகர்கிறது. வாழும் மொழி தன் இயல்கைகளின் இறுதி எல்லைகளில் முட்டித் ததும்பிக் கொண்டிருக்கும் இது ஒருபக்கம் என்றால் ஒற்றெழுத்துக்கள் மறுபக்கச் சிக்கல். ஒற்றெழுத்துக்கள் நமக்கு பழந்தமிழில் இருந்து வந்தவை. பழந்தமிழ் என்பது செய்யுளால் ஆனது. உரைநடை அன்று இல்லை. இருந்தாலும் அது ஒருவகை செய்யுள்நடையே. நவீன அச்சுத் தொழில்நுட்பமே தமிழில் உரைநடையை உருவாக்கியது. ஆகவே உரைநடைக்குரிய தனி இலக்கணம் தேவையாக ஆயிற்று. அவற்றை உருவாக்கிய முன்னோடிகள் ஒற்றுக்களை என்ன செய்வதென திணறினர். இன்றும் அந்த திணறல் நீடிக்கிறது. வல்லினம் மிகும் இடங்களில் எல்லாம் ஒற்று போடுவதென்பது இயந்திரத்தனமான புரிதல். அப்படித்தான் இன்றும் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கிறார்கள். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்றுப்போடுவது’ என எழுதுவார்கள். ஒற்று போடுவதற்கும் ஒற்றுப்போடுவதற்கும் இடையே மாபெரும் பொருள்வேறுபாடு உண்டு. அதை புறவயமாக வரையறை செய்வது கடினம். எழுதுபவனே முடிவு செய்யவேண்டும். சொல்லிப்பார்க்கவேண்டும், உச்சரிப்பில் அழுத்தம் இருந்தால் ஒற்று போடுவது அவசியம் என்பது ஓர் எளிய புரிதல். இரண்டு சொற்கள் ஒரே சொல்லாக இணைந்து பொருள் அளிக்குமென்றால் ஒற்று தேவை என்பது இன்னொரு புரிதல். மேலே சொன்ன சொற்றொடரிலேயே ’ஒற்று தேவை’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டியதில்லை. ஆனால் ’ஒற்றுத்தேவையை சமாளிக்கவேண்டும்’ என்றால் ஒற்றெழுத்து போடவேண்டிய தேவை உண்டு. மூன்றாவதாக ஒரு சிக்கல் உண்டு. சொற்களைப் பிரிக்கலாமா? இந்தியாவின் பழமையான மொழியிலக்கணங்கள் எல்லாமே சொற்புணர்ச்சிக்கான நெறிகளை முன்வைப்பவை. சொற்களை சேர்த்து ஒற்றைச் சொல்லாக எழுதுவதும் சொல்வதும் பழைய மொழியின் இயல்புகள். சம்ஸ்கிருதம் இன்றும் அவ்வாறே செயல்படுகிறது. ஆகவே அது புழக்கத்திற்கு அரிய மொழியாக போல உள்ளது. இன்று சம்ஸ்கிருதச் சொல்லாட்சி கண்டேன். பரோக்ஷாபரோக்ஷாலங்காரிதம். [மறைமுகமாகவும், மறைமுகமல்லாமலும் சொல்லப்பட்ட அழகு கொண்டது]. பழகிவிட்டால் வாசித்துக்கொண்டே செல்வோம். ஆனால் இவ்வகைச் சொல்லாட்சி நவீன மொழிக்குரியதல்ல. பண்டைய தமிழ் உரைகளைக் கண்டால் இப்படித்தான் தமிழிலும் எழுதியிருக்கிறார்கள் என்று அறியலாம். ‘தத்தமூர்திகளிலேறித்தனித்துப்புகுங்காலை’ என உ.வே.சா சீவகசிந்தாமணி உரையில் எழுதுகிறார். புழக்கத்திலுள்ள மொழிகளெல்லாம் இந்தக் கூட்டுத்தன்மையை தவிர்க்க போராடிக்கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நவீன மொழி தனித்தனிச் சொற்களால் ஆனது. மலையாளம் கன்னடம் எல்லாம் அதன்பொருட்டு பலகாலமாக முயல்கின்றன. தமிழ்மொழிக்கு இயல்பாகவே பொருட்குழப்பம் இல்லாமல் தனிச்சொற்களாக பிரியும் தன்மை உண்டு. அது நமக்கு இருக்கும் நல்வாய்ப்பு. ’நமக்கிருக்கும்’ என எழுதலாம். ஆனால் அதற்கு ஒரு தனியான ஒலித்தேவை இருக்கவேண்டும். இல்லையேல் நமக்கு இருக்கும் என எழுதுவதே சரியானது. ஏனென்றால் வருங்காலத்தில் உருவாகும் தானியங்கி மொழியாளுகைக்கு அதுவே உகந்தது. ’நமக்கிருக்கும்’ என்பது ஒரு சொல், ’நமக்கில்லாத’ என்பது இன்னொரு சொல் என்றால் மொழியில் சொற்கள் பல மடங்கு பெருகுகின்றன. ’நமக்கு’ ’இருக்கும்’ ’நமக்கு’ ’இல்லாத’ என பிரித்துக்கொண்டால் அவை மூன்று சொற்கள்தான். ஆகவே சில நெறிகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். புள்ளிக்குறியீடுகளை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தவேண்டும். வியப்புக்குறி மேற்கோள்குறி போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். காற்புள்ளி அரைப்புள்ளியை தேவையென்றால் மட்டுமே போடவேண்டும். ஒற்றெழுத்துக்களை தவிர்ப்பதே நம் நோக்கமாக இருக்கவேண்டும். சொற்கள் இணையவேண்டும் என்றால், செவியில் ஒலியழுத்தம் விழவேண்டும் என்றால் மட்டுமே ஒற்றுகளை போடவேண்டும். சொற்களை கூடுமானவரை பிரித்தே எழுதவேண்டும். சொற்களின் இணைவு ஒரு சிறப்பான பொருள்கோடலுக்கு தேவை என்றால் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். ’இப்படி எழுதினால் அப்படி படித்துவிடுவார்களே’ என்று பிலாக்காணம் ஆரம்பிப்பவர்கள் உண்டு. எழுதப்படுவனவற்றை மாற்றிப் பொருள்கொண்டு மேதாவி மாதிரி பேசுவது தமிழ்ச்சூழலுக்கு உரிய மடமைகளில் ஒன்று. அவ்வண்ணம் பேசுபவர்கள் தமிழறிந்தோர் அல்ல, பெரும்பாலும் அறைகுறைகள். எந்த சொற்றொடரையும் அப்படி மாற்றிப் பொருள்கொள்ள இயலும். மொழியின் எழுத்துவடிவில் இருந்து பொருள் எடுத்துக்கொள்வதற்கு ஒரு சமூகப்பழக்கம் உண்டு. ஒரு பொதுப்புரிதல் அது. அதற்குள் ஒவ்வொரு ஆசிரியனும் , ஒவ்வொரு நூலும் வாசகனுடன் கொள்ளும் உரையாடல் வழியாக ஒரு புரிதல்களம் உருவாகிறது. அந்த பொருட்களங்களில்தான் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் பொருட்கோடல் நிகழ்கிறது. அந்த புரிதல்களத்துக்கு வெளியே இருந்து ஒருவர் வந்து  ‘நான் இப்படி பொருள் கொண்டால் என்ன செய்வாய் ?” என்று கேட்டால் ‘உனக்கு இங்கே என்ன வேலை, வெளியே போடா’ என்பதே பதிலாக இருக்க முடியும். ஜெ பிகு: இவை என் மொழிக்கொள்கைகள். ஆனால் என் நூல்களும் என் தளமும் முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருப்பவை அல்ல. அவை வெவ்வேறு நண்பர்களால் மெய்ப்புநோக்கப் படுபவை. அவர்களின் பார்வைக்கேற்ப அவை மாற்றப்பட்டிருக்கும். அவற்றை முழுமையாக மீண்டும் திருத்தும் நேரம் எனக்கில்லை. எழுதியவற்றை மீண்டும் வாசிப்பது எனக்கு கடினமானது. என் உள்ளம் முன்னால் பாய்ந்துகொண்டே இருப்பது.     https://www.jeyamohan.in/159561/
  • இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கை - யதீந்திரா ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கடிதம் இந்திய தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களில் இந்தியாவை நோக்கி முதல் முதலாக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டுக் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றனர். கடந்த பன்னிரெண்டு வருடகால தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் அனைத்துமே மேற்கு நோக்கியதாக மட்டுமே இருந்தது. அதாவது, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களே ஒரேயொரு பிரதான விடயமாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இ;வாறானதொரு சூழலில்தான், பிரதான தமிழ் கட்சிகள் ஒன்றாக இந்தியாவையே நோக்கி சென்றிருக்கின்றன. இந்த இடத்தில் இதன் பின்னணி பற்றி சிறிது பார்ப்பது பொருத்தமென்று எண்ணுகின்றேன். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றும் – தமிழரசு கட்சிக்கு அடுத்த நிலையில் பாராளுமன்ற ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியுமான, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இந்த முயற்சியை ஆரம்பித்திருந்தது. இதன் பிரதான ஒருங்கிணைப்பாளராக டெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி செயற்பட்டிருந்தார். பின்னர், டெலோவின் முயற்சியுடன் கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான, சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும் (புளாட்) இணைந்து கொண்டது. இது தொடர்பான முதலாவது சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில், கூட்டமைப்பில் அதிக பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருக்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குகொள்ளவில்லை. அதே வேளை, தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் டெலோவின் முயற்சியை பொது வெளிகளில் விமர்சித்திருந்தார். அதாவது, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியாது என்னுமடிப்படையில் அவருடைய விமர்சனம் அமைந்திருந்தது. ஆனால் பின்னர் தமிழரசு கட்சியும் டெலோவின் முயற்சியுடன் இணைந்து கொண்டது. பல கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகின்ற போது, பலருடைய கருத்துக்களையும் உள்வாங்க வேண்டியது ஒரு ஜனநாயக நெறிமுறையாகும். அந்த அடிப்படையில்தான், தற்போது இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதம் பூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கையும் கடிதத்தில் இருக்கின்றது 13ஜை மட்டும், ஓரு கோரிக்கையாக முன்வைக்கக் கூடாதென்று வாதிட்ட தமிழசு கட்சியின் சொற்களும் கடிதத்தில் இருக்கின்றன. ஆனால் இந்த முயற்சி எந்த இலக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ, அந்த இலக்கு நிறைவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டெலோவின் முயற்சி வெற்றிபெற்றிருக்கின்றது. அண்மைக்காலமாக, இந்தியாவை தவிர்த்துச் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பின் தீர்மானங்கள் அமைந்திருந்தன. சம்பந்தன் இதனை திட்டமிட்டு செய்ததாக இந்தக் கட்டுரையாளர் கருதவில்லை. அதே வேளை, சுமந்திரனின் தூண்டுதலால் இது நிகழ்ந்ததாகவும் இந்த கட்டுரையாளர் கருதவில்லை. சுமந்திரன் அரசியலுக்கு முற்றிலும் புதியவர். கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு அவருக்கு முதல் முதலாக கிடைத்த போது, அது அவருக்கு ஒரு பரவசத்தை கொடுத்திருக்கலாம். அவர்களுடன் உரையாடி விடயங்களை மிகவும் இலகுவாக வெற்றிகொள்ளலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சுமந்திரன் மிகவும் வீறாப்பாகவே ஊடகங்களை எதிர்கொண்டிருந்தார். தீர்வை நெருங்கிவிட்டதான ஒரு பார்வையே அவரது பேச்சுக்களில் தெரிந்தது. இறுதியில் என்ன நடந்தது? ஆனால் இந்தக் கட்டுரையாளர் உட்பட பலரும் எதிர்வு கூறியதற்கு அமைவாகவே விடயங்கள் நடந்தேறின. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு தீர்மானகரமான சக்தி. இது தொடர்பில் எனது பத்தியில் பல்வேறு சந்தர்பங்களில் பதிவு செய்திருக்கின்றேன். இலங்கையின் உடனடி அயல்நாடாக இ;ந்தியா இருப்பதும் – ஏற்கனவே இந்த பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்து, இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு விடயத்தை முன்வைத்திருப்பதும் பிரதான காரணங்களாகும். இதனை சாதாரணமாக புறம்தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களால் எக்காலத்திலும் செயற்பட முடியாது. இது நமது விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்ட விடயமல்ல. மாறாக, இந்த பிராந்தியத்தின் அரசியல் யதார்த்தம். இந்த யதார்த்தின் அடிப்படையில்தான் விரும்பமில்லாமிட்டாலும் கூட, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவின் தலையீட்டை அனுமதித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன் பின்னர், ஜே.ஆர் டைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் – அதாவது, இந்தியா இந்த பிராந்தியத்தின் முதன்மையான சக்தி. நாங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாங்கள் இந்தியாவுடன் செல்ல வேண்டும் அல்லது பிறிதொரு வலிமையான சக்தியோடு செல்ல வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 35 வருடங்கள் சென்றுவிட்டது. இந்தக் காலத்தில், இலங்கைத் தீவிலும், ஈழத் தமிழர் அரசியலிலும், உலகளாவிய அரசியல் போக்குகளிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முன்னோக்கி செல்வதற்கான பிரகாசமான எந்தவொரு தெரிவையும் காண முடியவில்லை. மீளவும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நோக்கியே திரும்ப வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இந்த இடைப்பட்ட காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இந்தியா ஒரு பிராந்திய சக்தியென்பதும் – அது எப்போது வேண்டுமானாலும், இலங்கை விடயத்தில் தலையீடு செய்யும் வல்லமையை கொண்டிருக்கின்றது என்பதிலும் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. பனிப் போர் காலத்தில் – அமெரிக்கா, சோவியத் யூனியனை முடக்குவதற்காக, சீனாவுடனான உறவை வலுப்படுத்தியது. இன்று சீனாவை ஒரு வறையறைக்குள் முடக்குவதற்கான அமெரிக்க மூலோபாயத்தின் பிரதான பங்காளியாக இந்தியா இருக்கின்றது. உலக அரசியலில் முன்னர் சோவியத் யூனியன் இருந்த இடத்தில், இப்போது சீனா இருக்கின்றது – சீனா இருந்த இடத்தில் இப்போது, இந்தியா இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியாவை விலத்திக் கொண்டு ஈழத் தமிழர்களால் எங்கு ஓட முடியும்? இந்த பின்னணியில்தான் இந்தியாவின் ஈடுபாட்டை மீளவும் தமிழர் பிரச்சினையில் ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் தேசிய கட்சிகள் இந்த வரலாற்று நகர்வை மேற்கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டு வருடங்களாக அரசியல் தீர்வு நோக்கி மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்ற நிலையில்தான், இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான கோரிக்கையொன்றுடன் புதுடில்லியை ஈழத் தமிழர்கள் அணுகியிருக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை ஒரு இறுதியான அரசியல் தீர்வாக கட்சிகள் முன்வைக்கவில்லை. உண்மையில் இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கும் நகர்வானது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விடயமே அல்ல. இது அடிப்படையில் இந்தியாவின் தலையீட்டை கோருகின்ற – இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் பயணிக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் ஒரு தந்திரோபாய முன்னெடுப்பாகும். தமிழ் கட்சிகள் இவ்வாறானதொரு முடிவுக்கு சடுதியாக வரவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மேற்குலகத்தை நோக்கி பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவை முன்வைத்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் என்போர் ஏட்டிக்கு போட்டியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் – இதுவரையில் எட்டு பிரேரணைகள் இலங்கையின் மீது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 2012இல் அமெரிக்க அனுசரனையுடன், இலங்கையின் மீதான முதலாவது பொறுப்பு கூறல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. ஆனாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் என்ன முன்னேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன? சிலர் கூறலாம் கூட்டமைப்பு விடயங்களை சரியாக கையாளவில்லையென்று. ஆட்சி மாற்றத்தை கூட்டமைப்பு உச்சளவில் பயன்படுத்தியிருக்கலாம் என்னும் கருத்தில் இந்த கட்டுரையாளருக்கு முழுமையான உடன்பாடுண்டு. ஆனால் சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதற்கு கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என்றால் அது தவறானது. ஏனெனில் சமஸ்டித் தீர்விற்காக சிறிலங்கா அரசை இறங்கிவரச் செய்யக் கூடிய எந்தவொரு பலமும் கூட்டமைப்பிடம் இல்லை. அதே வேளை சர்வதேச நீதிப் பொறிமுறையை கூட்டமைப்பு பயன்படுத்தவில்லை என்னும் விமர்சனத்திலும் உண்மையில்லை. ஏனெனில், கூட்டமைப்பு என்னதான் உரத்துப் பேசியிருந்தாலும் கூட, இப்போது இருக்கின்ற நிலைமைக்கு மேல் பெரிதாக எதுவும் நடந்திருக்காது. ஆனால் வாய்ப்புக்களை உச்சளவில் பயன்படுத்தி எடுக்கக் கூடியதை எடுத்துக் கொள்வது என்னும் தந்திரோபாய அடிப்படையில் கூட்டமைப்பு செயற்பட்டிருக்கவில்லை என்று கூறினால் அது சரியானது. தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி கோரிக்கை முன்வைத்ததை ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்திற்குள் தமிழ் மக்களின் அபிலாஸைகளை முடக்க முற்படுகின்றனர் என்பதுதான் அவர்களது விமர்சனத்தின் அடிப்படையாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியே இவ்வாறான விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது, இந்தியாவிற்கு உரித்தான விடயமொன்றுடன் செல்வதுதானே சரியானது. இந்த அடிப்படையில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் கொண்வரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை கையிலெடுக்க வேண்டியிருக்கின்றது. பிரதமர் மோடிக்கான கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்ற கட்சிகள் மிகவும் தூரநோக்குடனும், தந்திரோபாயமாகவும்தான் இந்த விடயத்தை கையாண்டிருக்கின்றன. ஆனால் இந்த விடயத்தை விமர்சனம் செய்வோரிடம் ஒரு அடிப்படையான தவறுண்டு. அதாவது, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று கூறுவோரை, விமர்சிப்பவர்கள்- சர்வதேச அழுத்தங்களின் அச்சாணியாக கருதப்படும், ஜெனிவா பிரேரணைகள் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்துவதை வசதியாக மறந்துவிடுகின்றனர். இந்த உண்மையை மக்கள் மத்தியில் திட்டமிட்டு மறைக்கின்றனர். 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இறுதியாக கொண்டுவரப்பட்ட 46ஃ1 தீர்மானத்திலும் 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை மாகாண சபைகள் இயங்குவதற்கான சூழலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் இந்த பிரேரணைகளையுமல்லவா தமிழர் தரப்புக்கள் நிராகரிக்க வேண்டும்? எனவே இங்கு அடிப்படையில் பிரச்சினையாக இருப்பது, 13வது திருத்தச்சட்டமா அல்லது, இந்தியாவை நோக்கி செல்வதா? தற்போது ஒரு நேர்கோட்டில் சந்தித்திருக்கும் பிரதான தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் காலத்தை சரியாக விளங்கிக் கொண்டு செயற்பட்டிருக்கின்றன. ஆனால் இத்துடன் கட்சிகளின் பணி முடிந்துவிடவில்லை. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உண்டு. அதனை விளங்கிக்கொண்டு புதுடில்லியை நோக்கி தொடர்ந்தும் செயற்படுவதற்கான முன்னெடுப்புக்களையும் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.   http://www.samakalam.com/இந்தியாவை-நோக்கி-ஒரு-கோர/
  • சில பேர்வழிகளை எங்கு சென்றாலும் அவர்களை திருத்தமுடியாது. எவ்வளவு தான் முன்னேறிய சனநாயக நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் சோமாலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும்  மதவாத, பழங்குடி மனநிலையில்( Tribal mentality) தான் இருப்பார்கள். 🤪
  • அவை யார் காலைநக்கியாவது தங்கடை வேலையைப் பாப்பினம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.