Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய வீடு | 1070 sq feet, 2.5 cent இடத்தில ...

எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும்  குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர.

நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும்.  பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........

ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Condition

1) எக் காரணம் கொண்டும் இங்கே இருந்துகொண்டு அங்கே வீடுகட்ட நினைக்கக் கூடாது. வீடுகட்டப்போறீங்களா ? களத்தில (நிலத்தில) நில்லுங்கோ.  😎

உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை என்பதற்கும் மேலால் இது என்னுடைய சொந்த அனுபவம். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

Condition

1) எக் காரணம் கொண்டும் இங்கே இருந்துகொண்டு அங்கே வீடுகட்ட நினைக்கக் கூடாது. வீடுகட்டப்போறீங்களா ? களத்தில (நிலத்தில) நில்லுங்கோ.  😎

உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை என்பதற்கும் மேலால் இது என்னுடைய சொந்த அனுபவம். 😢

100% உண்மை..... ஒரு மதில் கட்ட வெளிக்கிட்டு இன்னும் கட்டி முடியல்ல.....வளவுக்க சேர்ந்த குப்பையை அகற்ற ட்ராக்ட்டருக்கு சொல்லி அவன் ஓருமுறை வந்து அள்ளிக்கொண்டு போனவன்தான் பிறகு ஆளைக் காணேல்ல. சிலதுக்கு ஆசைப்படலாம் தப்பில்லை.ஆனால் நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று சொல்லேலாது.....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  தலையங்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள்.நானும் இது பற்றி ஒரு திரி ஆரம்பிக்க இருந்தேன்.
பல தரப்பிலும் விவாதிக்கக்கூடிய தலைப்பு.👍

புலம்பெயர் மக்கள் மத்தியில் ஊரில் வீடு கட்டுவது பந்தாவாகவும் பார்க்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

Condition

1) எக் காரணம் கொண்டும் இங்கே இருந்துகொண்டு அங்கே வீடுகட்ட நினைக்கக் கூடாது. வீடுகட்டப்போறீங்களா ? களத்தில (நிலத்தில) நில்லுங்கோ.  😎

உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை என்பதற்கும் மேலால் இது என்னுடைய சொந்த அனுபவம். 😢

இங்கே நின்றுகொண்டு கட்டுற மடை வேலையை நான் செய்யமாட்டன். 😀

21 minutes ago, suvy said:

100% உண்மை..... ஒரு மதில் கட்ட வெளிக்கிட்டு இன்னும் கட்டி முடியல்ல.....வளவுக்க சேர்ந்த குப்பையை அகற்ற ட்ராக்ட்டருக்கு சொல்லி அவன் ஓருமுறை வந்து அள்ளிக்கொண்டு போனவன்தான் பிறகு ஆளைக் காணேல்ல. சிலதுக்கு ஆசைப்படலாம் தப்பில்லை.ஆனால் நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று சொல்லேலாது.....!   🤔

எனது நண்பி ஒருவரும் வீடு கட்ட ஆரம்பித்து இன்னும் முடியேல்லை. சாப்பிட்டவுடன் இரண்டு மணித்தியாலம் நித்திரை கொண்டுவிட்டுத்தான் வேலை செய்வார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நல்லதொரு  தலையங்கத்தை ஆரம்பித்திருக்கின்றீர்கள்.நானும் இது பற்றி ஒரு திரி ஆரம்பிக்க இருந்தேன்.
பல தரப்பிலும் விவாதிக்கக்கூடிய தலைப்பு.👍

புலம்பெயர் மக்கள் மத்தியில் ஊரில் வீடு கட்டுவது பந்தாவாகவும் பார்க்கப்படுகின்றது.

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
இணையவன் போட்டதுபோல களிமண்ணால் கட்டலாமோ?அதுக்கான வசதி அங்கு இருக்கா என்றும் யோசிச்சனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

1) இங்கே நின்றுகொண்டு கட்டுற மடை வேலையை நான் செய்யமாட்டன். 😀

2) எனது நண்பி ஒருவரும் வீடு கட்ட ஆரம்பித்து இன்னும் முடியேல்லை. சாப்பிட்டவுடன் இரண்டு மணித்தியாலம் நித்திரை கொண்டுவிட்டுத்தான் வேலை செய்வார்களாம்.

1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ☹️)

தவறு நிகழக் கூடிய இடங்கள்.

உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி

1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர்.

2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம்.

3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை

எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிறேன். தவறுகளிருப்பின் விடயமறிந்தவர்கள் தாராளமாகத் திருத்தலாம்.  😀

35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
இணையவன் போட்டதுபோல களிமண்ணால் கட்டலாமோ?அதுக்கான வசதி அங்கு இருக்கா என்றும் யோசிச்சனான்.

வதிவிட உரிமையைப் பெற இரண்டு வழிகளுண்டு.

1) 2.5 மில்லியன் ரூபாய்களை வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் (?) நீண்டகால வைப்பிலிடல். 

2) கல்வி அடிப்படையிலான அனுமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

100% உண்மை..... ஒரு மதில் கட்ட வெளிக்கிட்டு இன்னும் கட்டி முடியல்ல.....வளவுக்க சேர்ந்த குப்பையை அகற்ற ட்ராக்ட்டருக்கு சொல்லி அவன் ஓருமுறை வந்து அள்ளிக்கொண்டு போனவன்தான் பிறகு ஆளைக் காணேல்ல. சிலதுக்கு ஆசைப்படலாம் தப்பில்லை.ஆனால் நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று சொல்லேலாது.....!   🤔

ஐயா சுவி,

கூறுவதற்குக் கடினமாக இருக்கிறது.

 தெரிந்த ஒரு கட்டட ஒப்பந்தக்காறரை, எனது நண்பனுக்கு வீடு கட்டுவதற்காக அறிமுகப்படுத்தி இரண்டு வருடங்கள். வீடு கட்டத் தொடங்கி ( வட்டக்கச்சி, கிளிநொச்சி)  ஒன்றரை வருடங்கள். வீடு கட்டி அரைவாசியில் நிற்கிறது. செலவோ நாற்பதைத் தாண்டிவிட்டது. 

நண்பனின் முகத்திலும் முழிக்க முடியவில்லை, அவன் வயதான பெற்றோரின் முகத்திலும் முழிக்க முடியவில்லை(போராளி குடும்பம். இறுதி யுத்தத்தில் போராளி காணாமல் போனார்). இன்று காலையும் தொலைபேசி அழைப்பு வந்தது. ஒப்பந்தக்காறர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கிறாரில்லை என்று. 

😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அழகிய வீடு | 1070 sq feet, 2.5 cent இடத்தில ...

எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும்  குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர.

நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும்.  பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........

ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!

முகநூல் வழியாக இப்படியான கிராபிக்ஸ் வீடுகள் பல உலா வருகின்றன. அதில் 70 இலட்சம் வீடு கட்ட வேணுமாம்... அதுவும் 7 இலட்சம் தள்ளுபடியின் பின். உண்மை பொய் தெரியாது. 

ஒருவேளை அக்கா அப்படியான கிராபிக்ஸ் வீடுகளை பார்த்திட்டு மயங்கி இருப்பா போல. 

நிச்சயமா நீங்கள் ஒன்றை கட்டலாம். ஆனால்.. கட்டும் செலவு.. இப்போ முன்னரை விட அதிகமாகலாம். 

ஊரில் வீடு கட்டும் போது ஒப்பந்த அடிப்படையில் கட்டுவது நல்லம். நாள் கூலி அடிப்படையில் கட்டினாலோ.. திருத்தங்கள் செய்தாலோ.. செலவு அதிகம் முடியும்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் கட்டினாலும் கட்டி முடியும் வரை ஒரு நம்பிக்கையானவரின் அல்லது நம்பிக்கையானவர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். 

மேலும் காசு கைக்கு போகாட்டில்.. அங்கு வேலை நடக்காது. எனவே காசைக் கையில் வைச்சுக் கொண்டு தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அதுவும் மொத்தக் காசையும் ஒரே தடவையில் கொடுத்தீர்கள் என்றாலும் வேலை நடக்காது. முடிக்கப்படும் வேலைக்கு ஏற்ப திட்டம் திட்டமாக காசு கொடுக்கப்பட்டால் நன்று.

வீடு கட்ட மட்டும் 70 இலட்சம். இதில் இன்ன பிற பொருட்கள்.. தளபாடங்கள்.. அதிநவீன சாதனங்களுக்கு அவர்கள் பொறுப்பில்லை என்பார்கள். எனவே எல்லாவற்றையும் ஆரம்பத்தில் பேசிட்டு.. சரியான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்வதும்.. அந்த ஒப்பந்தக்காரர் தகுதியானவரா என்பதை அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக மிக மிக முக்கியம். 

ஊரில் இப்ப நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள். அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வீடு கட்டுகிறீர்கள் என்று தெரிந்தால்.. காசை நல்லாக் கறக்கலாம் என்று தான் வேலை செய்வார்கள். எனவே.. உள்ளூரில் இருந்து கொண்டு வீடு கட்டுவது போலக் காண்பிப்பது நல்லம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

ஐயா சுவி,

கூறுவதற்குக் கடினமாக இருக்கிறது.

 தெரிந்த ஒரு கட்டட ஒப்பந்தக்காறரை, எனது நண்பனுக்கு வீடு கட்டுவதற்காக அறிமுகப்படுத்தி இரண்டு வருடங்கள். வீடு கட்டத் தொடங்கி ( வட்டக்கச்சி, கிளிநொச்சி)  ஒன்றரை வருடங்கள். வீடு கட்டி அரைவாசியில் நிற்கிறது. செலவோ நாற்பதைத் தாண்டிவிட்டது. 

நண்பனின் முகத்திலும் முழிக்க முடியவில்லை, அவன் வயதான பெற்றோரின் முகத்திலும் முழிக்க முடியவில்லை(போராளி குடும்பம். இறுதி யுத்தத்தில் போராளி காணாமல் போனார்). இன்று காலையும் தொலைபேசி அழைப்பு வந்தது. ஒப்பந்தக்காறர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கிறாரில்லை என்று. 

😡😡

ஊரில் வீடு கட்டுவதாயின் நம்பிகையான சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும். அவர்களின் மேற்பார்வையின் மூலமே வீடு கட்டுவது நல்லது.இல்லையேல் சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பண கதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஊரில் வீடு கட்டுவதாயின் நம்பிகையான சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும். அவர்களின் மேற்பார்வையின் மூலமே வீடு கட்டுவது நல்லது.இல்லையேல் சுண்டங்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பண கதைதான்.

பெற்றோர், வயதானவர்கள்,

வட்டக்கச்சியில் , வாடகை வீட்டில்தான் தற்போது நிற்கின்றனர். 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
இணையவன் போட்டதுபோல களிமண்ணால் கட்டலாமோ?அதுக்கான வசதி அங்கு இருக்கா என்றும் யோசிச்சனான்.

ஒரு வயதுக்கு பிறகு நோய்நொடியில்லாத ஆக்கள் போய் இருக்கலாம். புலம்பெயர்ந்த ஆக்களின்ரை உடம்புவாசி இப்ப இரண்டும் கெட்டான் நிலை.அதுகும் 60 வயதுக்கு மேலை எண்டால் கொஞ்சம் யோசிக்க வேணும்.

 மண் வீட்டிலை இருந்தால் கொட்டில் வீட்டிலை இருக்கிற சனம் எண்டு நக்கல் அடிக்கிற கூட்டம் இப்பவும் அங்கை இருக்கோ தெரியாது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உழைப்பில் நம்பிக்கை இல்லாத, களவு, கொள்ளையில் நம்பிக்கையுள்ள, அவர்களிடம் பங்கு வாங்கிக் கொண்டு அவர்களை இயங்க விடும், சிங்கள போலீசுக்காரர்கள் இருக்கும் வரை, வெளிநாட்டினர் அங்கே போய் தங்குவது கனவு தான்.

வருத்தம் ஏதும் வந்தால், மருத்துவ செலவு, ஒரே மாதத்தில் அங்கிருந்து கிளம்ப வைக்கும். இல்லாத வருத்தத்தினை இருப்பதாக சொல்லி, அதனை சுகப்படுத்தி விட்டதாக சொல்லி பணம் பறிக்கும் கோஸ்ட்டிகளும் உண்டு.

Link to comment
Share on other sites

மெசொபொத்தேமியா 

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
 
ன்னுடைய முதல் தெரிவு  முள்ளியவளை- தண்ணீற்று  நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர்.

 வதிவிட பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சிறீலங்காவில் காணியும் பழைய அடையாள அட்டையும் இருந்தால் இரட்டை குடியுரிமை அவசியமில்லை. ஆனால் அவதானமாக இருக்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கு நகர சபையிடம் planning permission எடுக்க வேண்டும். அதுவே  2000 சதுர அடிக்கு மேல் என்றால் urban development authority இடம் எடுக்க வேண்டும். 

Planning permission &  மின்சார இணைப்பு ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது அடையாள அட்டை அவசியம்.

UC அல்லது UDA மற்றும் EB க்கு அலைய வேண்டி வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kaalee said:

எண்டாலும் சொந்த ஊரிலை இருக்குமாப்போலை வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் சட்ட அங்கீகாரம் இல்லாது தொடங்காதீர்கள்...

Link to comment
Share on other sites

குமாரசாமி

  • மப்புறுப்பினர்

எண்டாலும் சொந்த ஊரிலை இருக்குமாப்போலை வராது.

எது உங்கட சொந்த ஊர் ?

எனக்கென்று ஒரு சொந்தஊர் இல்லை . இதுவரை ஒரு முப்பது ஊருக்குமேல இருந்திதுடன். என்ன ஒரு மாசத்தில எல்லாம் பழகிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kaalee said:

 என்னுடைய முதல் தெரிவு  முள்ளியவளை- தண்ணீற்று  நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர்.

பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பாதையில் புதுக்குடியிருப்பு போகுமுன், எனது குடும்பத்துக்கு பல ஏக்கர் காணி உள்ளது. 2016ல் போய் பார்த்தபோது திருகோணமலை தம்பலகாமம் பகுதி அகதிகள் குடியிருந்தார்கள்.

தமக்கு அங்கு காணி இல்லை,  இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இங்கு அரச பெர்மிட் உடன் இருப்பதாக சொன்னார்கள். DDC அலுவலகத்தில், தாம் பெர்மிட் கொடுத்தது உண்மைதான் என்றும், ஆனாலும் உடையவர்கள், ஒரிஜினல் உறுதியுடன் வந்தால், அந்த பெர்மிட் கான்செல் ஆகும் என்றார்கள்.

2019ல் போனபோது, அவர்கள் பலருக்கு தம்பலகாமம் காணிகள் திருப்பி கிடைத்து விட்டன. ஆனாலும் ஆசை, இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று விசாரித்து அறிந்தேன்.

ஏரியா விதானையார் காதுக்குள் குசுகுசுத்தார். கணவன் இல்லை என்று மனைவி ஒரு துண்டையும், மனைவி இல்லை என்று கணவன் ஒரு துண்டையும், தனித்தனியாக பிடித்து பல தம்பதிகள் பெர்மிட்  வாங்கி உள்ளனராம்.

பக்கத்தில் இருந்த காணிக்காரர், 25 ஏக்கரில், 5 ஏக்கரை பகிர்ந்து கொடுத்து, 20 ஏக்கரை எடுத்துக் கொண்டிருக்கிறார். கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாக்களித்ததால் கொடுக்க வேண்டி வந்தது. ஆனால் அவர்கள் அந்த 5 ஏக்கர் காணியை பெறும் அளவுக்கு, தனக்கு சொல்லப்படத்தை போல ஏழ்மையானவர்கள் அல்ல. தான் ஒரிஜினல் உறுதிக்காரனாக எழுதிக் கொடுக்க, பெர்மிட்டுடன் விற்க முடியாத காணிகளை, அடுத்த மாதமே வித்து விட்டு கிளம்பி விட்டார்களாம்.

நல்ல செம்பாட்டு மண்.... அவர்களுக்கு கொஞ்சம் காணி கொடுக்கலாம் என்று எமது குடும்பம் நினைக்க, முழுசா, ஆள் வைத்து விசாரித்தே கொடுங்கள்...வித்து விட்டு கிளம்பி விடுவார்கள். பெர்மிட்டுடன் அவ்வாறு விக்க முடியாது... அவர்களிலும் பார்க்க ஏழ்மையான நிலையில் பலர் உள்ளனர் என்கிறார் அவ்வூர் காரர் ஒருவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இப்படி பலர் ஆக்கிரமித்துகொண்டிருக்கின்றார்கள், வசதியிருந்தும். சிலருக்கு விதனை அரசியல் வாதிகளின் செல்வாக்கு வேறு. நன்றாக விசாரித்து ஏழைகளுக்கே கொடுங்கள், என்றென்னும் உங்களை மறக்கமாட்டார்கள், உங்களுக்கும் மன நிம்மதி

இனி ஊரில் போய் இருக்க எம்மால் முடியுமா? இரண்டு தோனியில் கால் வைத்த நிலையில்தான் நாங்கள் இப்ப. அங்கு பாதுகாப்புமில்லை, இடைக்கிடை போய்வர சரி.

நிரந்தரமாக தங்குவதின்றால், ஒரு பழைய வீட்டில் வருடம் தங்கி நிலைமைகளை அவதானித்து புதுவீடு கட்டுவது நல்லது.

நான் இங்குதான் பெரியகாணி வாங்கி தோட்டம் வைத்து நிம்மதியாக வாழ ஆசை. ஊருக்கு இடைக்கிடை போய் வரலாம்.

ஊரில் இப்ப எல்லாரும் வியாபர நோக்குதான், சொந்த உறவுகள் கூட, யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ☹️)

தவறு நிகழக் கூடிய இடங்கள்.

உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி

1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர்.

2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம்.

3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை

எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிறேன். தவறுகளிருப்பின் விடயமறிந்தவர்கள் தாராளமாகத் திருத்தலாம்.  😀

வதிவிட உரிமையைப் பெற இரண்டு வழிகளுண்டு.

1) 2.5 மில்லியன் ரூபாய்களை வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் (?) நீண்டகால வைப்பிலிடல். 

2) கல்வி அடிப்படையிலான அனுமதி

தோட்டக்காணிதான் இருக்கு. ஆனால் அதற்குள் வீடுகட்டுவது சாத்தியமா என்று தெரியவில்லை.
வதிவிட உரிமை என்று இதைக் குறிப்பிடுகிறீர்கள்?? நாம் வைத்திருப்பது யேர்மன் மற்றும் பிரித்தானிய கடவுச் சீட்டுகள். அவற்றுடன் வெளிநாட்டவருக்கான வதிவிட உரிமை தருவார்களா?? எத்தனைநாட்களுக்கு ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

முகநூல் வழியாக இப்படியான கிராபிக்ஸ் வீடுகள் பல உலா வருகின்றன. அதில் 70 இலட்சம் வீடு கட்ட வேணுமாம்... அதுவும் 7 இலட்சம் தள்ளுபடியின் பின். உண்மை பொய் தெரியாது. 

ஒருவேளை அக்கா அப்படியான கிராபிக்ஸ் வீடுகளை பார்த்திட்டு மயங்கி இருப்பா போல. 

நிச்சயமா நீங்கள் ஒன்றை கட்டலாம். ஆனால்.. கட்டும் செலவு.. இப்போ முன்னரை விட அதிகமாகலாம். 

ஊரில் வீடு கட்டும் போது ஒப்பந்த அடிப்படையில் கட்டுவது நல்லம். நாள் கூலி அடிப்படையில் கட்டினாலோ.. திருத்தங்கள் செய்தாலோ.. செலவு அதிகம் முடியும்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் கட்டினாலும் கட்டி முடியும் வரை ஒரு நம்பிக்கையானவரின் அல்லது நம்பிக்கையானவர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். 

மேலும் காசு கைக்கு போகாட்டில்.. அங்கு வேலை நடக்காது. எனவே காசைக் கையில் வைச்சுக் கொண்டு தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அதுவும் மொத்தக் காசையும் ஒரே தடவையில் கொடுத்தீர்கள் என்றாலும் வேலை நடக்காது. முடிக்கப்படும் வேலைக்கு ஏற்ப திட்டம் திட்டமாக காசு கொடுக்கப்பட்டால் நன்று.

வீடு கட்ட மட்டும் 70 இலட்சம். இதில் இன்ன பிற பொருட்கள்.. தளபாடங்கள்.. அதிநவீன சாதனங்களுக்கு அவர்கள் பொறுப்பில்லை என்பார்கள். எனவே எல்லாவற்றையும் ஆரம்பத்தில் பேசிட்டு.. சரியான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்வதும்.. அந்த ஒப்பந்தக்காரர் தகுதியானவரா என்பதை அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக மிக மிக முக்கியம். 

ஊரில் இப்ப நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள். அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வீடு கட்டுகிறீர்கள் என்று தெரிந்தால்.. காசை நல்லாக் கறக்கலாம் என்று தான் வேலை செய்வார்கள். எனவே.. உள்ளூரில் இருந்து கொண்டு வீடு கட்டுவது போலக் காண்பிப்பது நல்லம். 

வீடு கட்டுவது தொடர்பான அனைத்து வேலைகளும் எனக்கும் கணவருக்கும் அத்துப்படி இங்கு. ஆனால் அங்கு வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்தால் போதும் நாமே எல்லாம் செய்யலாம்.

சிறிய வீடுகள் ஒன்றும் இணையத்தில் கிடைக்காததாலேயே இந்தப் படத்தை வேறு வழியின்றிப் போட்டேன். எனது கணவர் குடும்பம் முன்னர் வன்னியில் இருந்தபோது களிமண் கல் அரிந்து கட்டிய வீட்டிலேயே இருந்ததாகக் கூறினார். நாம் அங்கு போய் நின்றுகொண்டுதான் வீடு காட்டுவோம் நெடுக்ஸ்.

அடுத்த பிரச்சனை வைத்தியம். நாம் வெளிநாட்டிலேயே மெடிக்கல் இன்சூரன்ஸ் போட முடியுமா??? அங்கு போய் இருப்பதற்கு ???

8 hours ago, குமாரசாமி said:

ஒரு வயதுக்கு பிறகு நோய்நொடியில்லாத ஆக்கள் போய் இருக்கலாம். புலம்பெயர்ந்த ஆக்களின்ரை உடம்புவாசி இப்ப இரண்டும் கெட்டான் நிலை.அதுகும் 60 வயதுக்கு மேலை எண்டால் கொஞ்சம் யோசிக்க வேணும்.

 மண் வீட்டிலை இருந்தால் கொட்டில் வீட்டிலை இருக்கிற சனம் எண்டு நக்கல் அடிக்கிற கூட்டம் இப்பவும் அங்கை இருக்கோ தெரியாது.😁

எமக்கு வயதுபோட்டுது என்னும் மனப் பயம் தான் எம்மை எதுவுமே செய்ய விடாமல் முடக்குவது. நாம் சனம் நக்கலடிப்பதைக் கணக்கிலேயே எடுக்கமாட்டோம்

8 hours ago, Nathamuni said:

உழைப்பில் நம்பிக்கை இல்லாத, களவு, கொள்ளையில் நம்பிக்கையுள்ள, அவர்களிடம் பங்கு வாங்கிக் கொண்டு அவர்களை இயங்க விடும், சிங்கள போலீசுக்காரர்கள் இருக்கும் வரை, வெளிநாட்டினர் அங்கே போய் தங்குவது கனவு தான்.

வருத்தம் ஏதும் வந்தால், மருத்துவ செலவு, ஒரே மாதத்தில் அங்கிருந்து கிளம்ப வைக்கும். இல்லாத வருத்தத்தினை இருப்பதாக சொல்லி, அதனை சுகப்படுத்தி விட்டதாக சொல்லி பணம் பறிக்கும் கோஸ்ட்டிகளும் உண்டு.

நாம் ஆடம்பரமாக வாழ்ந்தால்த்தான்மாற்றவர் கண்ணைக் குத்தும். எம்மூரில் எம் சமூகதத்துடன் வாழமுடியாதா என்ன ???

8 hours ago, Kaalee said:

மெசொபொத்தேமியா 

 நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை.
 
ன்னுடைய முதல் தெரிவு  முள்ளியவளை- தண்ணீற்று  நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர்.

 வதிவிட பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே 

என் கணவர் வன்னியைத்தான் நல்ல இடம் எனக் கூறுகிறார். ஆனால் தெரியாத ஊரில் நாம் போய் இருப்பது பாதுகாப்பானதா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தோட்டக்காணிதான் இருக்கு. ஆனால் அதற்குள் வீடுகட்டுவது சாத்தியமா என்று தெரியவில்லை.
வதிவிட உரிமை என்று இதைக் குறிப்பிடுகிறீர்கள்?? நாம் வைத்திருப்பது யேர்மன் மற்றும் பிரித்தானிய கடவுச் சீட்டுகள். அவற்றுடன் வெளிநாட்டவருக்கான வதிவிட உரிமை தருவார்களா?? எத்தனைநாட்களுக்கு ??? 

தோட்ட காணிக்குள் வீடு கட்ட அனுமதி குறித்து தெரியவில்லை, ஆனால் நெல்வயல் எனில் அனுமதி இல்லை.  

உங்களுக்கு இலங்கை பிறப்பு சான்றிதழ் இருந்தால், இலகுவாக, 12 மாத வதிவிட விசா தருவார்கள். யாழ்ப்பாணத்திலே பெறலாம். குடும்பத்தில் வயதானவைர்களை பராமரிக்க போவதாக காரணம் சொல்லலாம்.

55 வயதுக்கு மேல் பண முதலீடு, கல்வி தகுதி தேவையில்லை. பிறப்பு சான்றிதழ் இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

உங்களுக்கு சிறீலங்காவில் காணியும் பழைய அடையாள அட்டையும் இருந்தால் இரட்டை குடியுரிமை அவசியமில்லை. ஆனால் அவதானமாக இருக்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கு நகர சபையிடம் planning permission எடுக்க வேண்டும். அதுவே  2000 சதுர அடிக்கு மேல் என்றால் urban development authority இடம் எடுக்க வேண்டும். 

Planning permission &  மின்சார இணைப்பு ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது அடையாள அட்டை அவசியம்.

UC அல்லது UDA மற்றும் EB க்கு அலைய வேண்டி வரும்

எம்மிடம் பழைய அடையாள அட்டைதான் இருக்கு. புதிது தரமாட்டார்களே.
அதென்ன UC, UDA, EB கொங்சம் விளக்கமாகக் கூறுங்கள்

4 minutes ago, Nathamuni said:

தோட்ட காணிக்குள் வீடு கட்ட அனுமதி குறித்து தெரியவில்லை, ஆனால் நெல்வயல் எனில் அனுமதி இல்லை.  

உங்களுக்கு இலங்கை பிறப்பு சான்றிதழ் இருந்தால், இலகுவாக, 12 மாத வதிவிட விசா தருவார்கள். யாழ்ப்பாணத்திலே பெறலாம். குடும்பத்தில் வயதானவைர்களை பராமரிக்க போவதாக காரணம் சொல்லலாம்.

55 வயதுக்கு மேல் பண முதலீடு, கல்வி தகுதி தேவையில்லை. பிறப்பு சான்றிதழ் இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இது நல்ல செய்தியாக இருக்கிறதே. ஆனால் புதிதாகக் காணி வாங்குவது என்றால் எப்படி ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர், இங்கேயே building வேலைகள் செய்பவர். இங்கே இருந்து கீட்சின் பிட்டிங்ஸ் மலிவா வாங்கி, அனுப்பி, நண்பருடன் போய், திருநெல்வேலி கேம்பஸ் ரோடில், பழைய வீட்டினை தானே நின்று திருத்தி, 35 ரூம் கட்டி, சிங்கள மாணவிகளுக்கு வாடைக்கு விட்டுள்ளார். அட்டாச் பாத்ரூம், கிச்சன் டிவி உடன், ரூமுக்கு உணவு அனுமதி இல்லை, CCTV பாதுகாப்பு, வாசலில் செக்யூரிட்டி என, சிங்கள பெற்றவர்கள் இடையே ஆர்வம் உண்டாகி, 2022 வரை waiting list.

நீங்கள் செய்ய முடிந்தால், முடடாள் வேலைக்கு ஆளைப்பிடித்து, இங்கிருந்து, ஆங்கிலோ ஏசியன் போன்றன மூலம், தேவையான பொருட்களை அனுப்பி, போய் நின்று செய்யுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.