Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பரந்தனில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பாதையில் புதுக்குடியிருப்பு போகுமுன், எனது குடும்பத்துக்கு பல ஏக்கர் காணி உள்ளது. 2016ல் போய் பார்த்தபோது திருகோணமலை தம்பலகாமம் பகுதி அகதிகள் குடியிருந்தார்கள்.

தமக்கு அங்கு காணி இல்லை,  இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இங்கு அரச பெர்மிட் உடன் இருப்பதாக சொன்னார்கள். DDC அலுவலகத்தில், தாம் பெர்மிட் கொடுத்தது உண்மைதான் என்றும், ஆனாலும் உடையவர்கள், ஒரிஜினல் உறுதியுடன் வந்தால், அந்த பெர்மிட் கான்செல் ஆகும் என்றார்கள்.

2019ல் போனபோது, அவர்கள் பலருக்கு தம்பலகாமம் காணிகள் திருப்பி கிடைத்து விட்டன. ஆனாலும் ஆசை, இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று விசாரித்து அறிந்தேன்.

ஏரியா விதானையார் காதுக்குள் குசுகுசுத்தார். கணவன் இல்லை என்று மனைவி ஒரு துண்டையும், மனைவி இல்லை என்று கணவன் ஒரு துண்டையும், தனித்தனியாக பிடித்து பல தம்பதிகள் பெர்மிட்  வாங்கி உள்ளனராம்.

பக்கத்தில் இருந்த காணிக்காரர், 25 ஏக்கரில், 5 ஏக்கரை பகிர்ந்து கொடுத்து, 20 ஏக்கரை எடுத்துக் கொண்டிருக்கிறார். கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாக்களித்ததால் கொடுக்க வேண்டி வந்தது. ஆனால் அவர்கள் அந்த 5 ஏக்கர் காணியை பெறும் அளவுக்கு, தனக்கு சொல்லப்படத்தை போல ஏழ்மையானவர்கள் அல்ல. தான் ஒரிஜினல் உறுதிக்காரனாக எழுதிக் கொடுக்க, பெர்மிட்டுடன் விற்க முடியாத காணிகளை, அடுத்த மாதமே வித்து விட்டு கிளம்பி விட்டார்களாம்.

நல்ல செம்பாட்டு மண்.... அவர்களுக்கு கொஞ்சம் காணி கொடுக்கலாம் என்று எமது குடும்பம் நினைக்க, முழுசா, ஆள் வைத்து விசாரித்தே கொடுங்கள்...வித்து விட்டு கிளம்பி விடுவார்கள். பெர்மிட்டுடன் அவ்வாறு விக்க முடியாது... அவர்களிலும் பார்க்க ஏழ்மையான நிலையில் பலர் உள்ளனர் என்கிறார் அவ்வூர் காரர் ஒருவர்.

என் கணவருக்கும் 4 ஏக்கர் காணி இருந்தது வன்னியில். 2017 போய் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை.

Link to post
Share on other sites
 • Replies 275
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

2017 2018   திருகோணமலையில்....   Kitchen  3D  

அநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட

எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும்  குளிரற்ற

Posted Images

Posted (edited)
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எம்மிடம் பழைய அடையாள அட்டைதான் இருக்கு. புதிது தரமாட்டார்களே.
அதென்ன UC, UDA, EB கொங்சம் விளக்கமாகக் கூறுங்கள்

இது நல்ல செய்தியாக இருக்கிறதே. ஆனால் புதிதாகக் காணி வாங்குவது என்றால் எப்படி ???

UC - Urban Council

UDC - Urban Development Council

EB - Electricity Board ( வீடு கட்டும்போதே, சோலார் பேனலுக்கும் திட்டமிடுங்கள்)

நான் கேள்விப்பட்டது சரியாயின், காணி மோசடிகள் காரணமாக, (அதாவது வெளிநாடுகளில் இருப்போர் தமக்கு வித்ததாக, கள்ள உறுதி முடித்து, அதனை காட்டி, தமது பெயரில் பதிவு செய்து, பின்னர் வித்துவிடுவது. வெளிநாட்டுக்காரர் உறுதியுடன் வந்தால், கதை கந்தல்), விற்பவர், காணி பதிவகத்தில், விற்கப்படும் காணி, தனக்கு உரிமையானது என நிரூபித்து, அந்த செர்டிபிகேட்டுடன், வரும் அடுத்த உறுதிக்காரரின் பத்திரமே பதிவாகும்.

இது நல்ல திட்டம். பிரகிராசிமார் தெரிந்தால் விசாரியுங்கள்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் கணவருக்கும் 4 ஏக்கர் காணி இருந்தது வன்னியில். 2017 போய் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை.

சும்மா போய் பார்த்து வருவதால் பிரயோசனம் இல்லை.

போய், நிண்டு, காணி பதிவகத்தில, விசாரித்து, முகவர் அமர்த்தி, விசாரித்துப் பிடிக்க வேணும்.

அவையள் பக்கத்துக் காணிகள், பதிவுகள் எல்லாம் பார்த்து, எது உறுதியோடு இருந்தது, எது பெர்மிடோட இருக்குது எண்டு பிடித்து இதுதான் எண்டு சொல்லுவினம்.

சரியான ஆள பிடித்தால், அவரே எல்லா வேலையும் பார்ப்பார்.

Foreigners can freely buy properties as long as they are willing to pay the Land Tax for foreigners at 100% of the property value. An alternative is to lease the land for 99 years, bringing the tax down to 7%. When buying property, it is important to hire a lawyer, who will prepare the contract.
Land Tax: 100%
Property Survey Fee: 0.10%
Stamp Duty: 3% - 4%

வெளிநாட்டுக்காரர் காணி வாங்க 100% வரி கட்ட வேண்டும்.

அதாலை  தான், சொத்துப்பத்து வைத்திருப்போர், 3 லட்சம் கட்டி குடியுரிமை எடுத்தல் புத்திசாலித்தனமானது. 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ட‌ நாட்டு பெண்ச‌ன் ப‌ற்றி  என‌க்கு தெரியாது தாயே , ஆனால் இந்த‌ நாட்டில் பெண்ச‌ன் எடுத்தா மூன்று மாச‌த்துக்கு ஒரு முறை இங்கு வ‌ந்தே ஆக‌னும் /

ஊரில் நீங்க‌ள் போய் நேரில் க‌ட்டுவ‌து தான் ந‌ல்ல‌ம் , இப்ப‌வே க‌ட்டி போட்டு உங்க‌ட‌ உற‌வுக‌ளின் கையில் வீட்டை குடுத்தா வீடு வீடு மாதிரி இருக்காது , 

நெடுங்கால‌ போவான் அண்ணா சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌டுது , எதிர் கால‌த்தில் எப்ப‌டி இருக்க‌னும் என்று இப்ப‌வே நினைப்ப‌து த‌ப்பில்ல‌ ,  சூழ் நிலைக‌ளை யோசிச்சு ந‌ல்ல‌ முடிவை எடுங்கோ /

வீடு கானி பிர‌ச்ச‌னைக‌ள் ப‌ற்றி அதிக‌ம் கேள்வி ப‌ட்டு இருக்கிறேன் , ஊரில் இருக்கும் உற‌வுக‌ள் அடுத்த‌வேண்ட‌ வீட்டை த‌ங்க‌ட‌ வீடு என்று சொந்த‌ம் கொண்டாடின‌ம், ஆனால் அந்த‌ வீட்டுக்கு சொந்த‌க் கார‌ர் க‌ன‌டாவில் , திருட்டு த‌ண‌மாய் அடுத்த‌வையின் கானிக‌ளை கூட‌ ஆட்டைய‌ போட்ட‌ ஆட்க‌ளும் இருக்கின‌ம் இப்ப‌டி ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் இருக்கு / அப்ப‌டியான‌ பிர‌ச்ச‌னைக‌லுக்கை போகாம‌ எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் ந‌ட‌ந்தா ம‌கிழ்ச்சி 👏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர் மக்கள் மத்தியில் ஊரில் வீடு கட்டுவது பந்தாவாகவும் பார்க்கப்படுகின்றது.

தாத்தா அடுத்த‌ வென்னைக‌ள் என்ன‌ க‌தைச்சாலும் இந்த‌ காதால் கேட்டு ம‌ற்ற‌ காதால் விடுவ‌து ந‌ல்ல‌ம் / 

உங்க‌ளுக்கு ஒரு ஆசை இருந்தா அத‌ நீங்க‌ள் என்ன‌ விம‌ர்ச‌ன‌ம் வ‌ந்தாலும் உங்க‌ட‌ ஆசையை நிறைவேற்ற‌னும் தாத்தா , நீங்க‌ள் வாழ்வ‌து உங்க‌ளுக்காக‌ உங்க‌ குடும்ப‌த்துக்காக‌ , 

திண்ட‌ சோறு செமிக்காட்டி எங்க‌டைய‌லுக்கு அடுத்த‌வையை ப‌ற்றி வெட்டியா க‌தைக்கிற‌து தான் வேலை / உப்ப‌டியான‌ ஆட்க‌ளை வீட்டு நீண்ட‌ தூர‌ம் த‌ள்ளி வ‌ந்திட்ட‌ன் , என் வ‌ழி த‌னி வ‌ழி என்ற‌ ரேஞ்சில் போய்கிட்டு இருக்கிறேன் /  தூற்றுவார் தூற்ற‌ட்டும் போற்றுவார் போற்ற‌ட்டும்  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருந்து ஒரு அண்ணர் வீடுகட்டினார்   தம்பிக்கு காசு அனுப்பினார் அண்ண தம்பியும் வீடு கட்டின படங்கள் மாபிள் வச்ச படங்கள் பால்கனி படங்கள் எல்லாம் கட்டின போட்டோக்களை அண்ணனுக்கு அனுப்பி வைத்தார் அண்ணர் ஊருக்கு வந்து பார்த்த போது அந்த வீடு அண்ணனுக்கு சொந்தமான காணியில் கட்டப்படவில்லை 

தம்பியின் சொந்தக்காணியில் கட்டப்பட்டது இதனால் அண்ணன் இறந்த போன சம்பவம் எங்கேயோ கேட்ட செய்தி எனக்குள்  ஞாபகம் வருகிறது 

எதற்கும் சட்ட திட்டங்களை ஆராயுங்கள் வெளிநாடு என்றால் குப்பை எடுக்க கூட காசை எதிர்பார்ப்பார்கள் , கரண்ட் , தண்ணீர், சுற்றிவர மதில் சுவர் அமைக்க, ஒரு மரக்கிளை ,மரம் தறிப்பதென்றால் கூட அனுமதி   ஆயிரம் கேள்விகள் எழும்  வீட்டின் வரைபடம் அதற்கு செலவாகும் தொகை அதற்காக பிரதேச செயலகத்தில் வரிகட்டி அனுமதி பெறல் எக்கச்சக்கம் இருக்கு அக்கோய்

Link to post
Share on other sites
Posted (edited)
27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எதற்கும் சட்ட திட்டங்களை ஆராயுங்கள் வெளிநாடு என்றால் குப்பை எடுக்க கூட காசை எதிர்பார்ப்பார்கள் , கரண்ட் , தண்ணீர், சுற்றிவர மதில் சுவர் அமைக்க, ஒரு மரக்கிளை ,மரம் தறிப்பதென்றால் கூட அனுமதி   ஆயிரம் கேள்விகள் எழும்  வீட்டின் வரைபடம் அதற்கு செலவாகும் தொகை அதற்காக பிரதேச செயலகத்தில் வரிகட்டி அனுமதி பெறல் எக்கச்சக்கம் இருக்கு அக்கோய்

இங்கேயும் அதேதான்...

வீட்டில் சிறிது மாறுதல், பின்னால் உள்ள, மரத்தினை வெட்டுதல் போன்ற சகலத்துக்கும் அனுமதி தேவை.

காசு கொடுத்துதான் அலுவல் பார்க்கமுடியும். அதேபோல வேலை செய்கிறேன் எண்டு காசை வாங்கி கொண்டு சுத்துற ஆட்கள் இங்கே தாராளமாக உண்டு.

பிபிசி யில் இப்படி ஏமாந்த ஆட்களை பத்தி, rougue traders என்கிற நிகழ்ச்சியே உண்டு.

ஏதோ அங்கே மாத்திரம் தான் இருக்கு எண்டு இல்லை. உலகம் முழுக்க ஏமாறுறவன் இருக்கும் வரையில், ஏமாத்துறவனும் இருப்பான்.

இங்கே இப்போது checkatrader.com என்ற தளம் பிரபல்யமாய் வருகிறது.

ஒரு மின்சார வேலைக்கு ஆள் தேவை என்றால் இங்கே போய் பார்த்தால், நம்ம ஏரியாவில், லிஸ்ட் பண்ணி இருக்கிற ஒருத்தர் குறித்து, முன்னரே வேலை வாங்கியவர்கள் கொடுத்த அபிப்பிராயம் குறித்து வாசித்து, பிடித்தால் நாமும் அழைக்கலாம். 

அபிப்பிராயபடி ரேட்டிங் இருக்கும். ரேட்டிங் நல்லா இருந்தால் அவரது கட்டணமும் அதிகமாக இருக்கும். குறைவாக இருக்குதே என்று பார்த்தால் வேலை முடிப்பார்கள், தரம் இருக்காது.

அந்த தளத்தில் பதிந்த ஒருவர் குறித்து பின்புல செக்கிங் செய்தே எடுத்துக் கொள்வர். ஆகவே கிரிமினல் இருக்க மாட்டார்கள். அவர்களும் மிக கவனமாக வேலை செய்வார் என்பதால், ஒரு நம்பிக்கையாக நாமும் ஆட்களை கூப்பிடலாம்.
 
Edited by Nathamuni
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிரச்சனையான காலத்தில் நிறைய மோசடிகள் யாழ் எங்கும் நடைபெற்றது. இப்ப டவுண் பக்கம் ஏமாத்தி காணி வீடு பெயர் மாற்றுவது , விற்பது அவ்வளவு சுலபம் அல்ல. அத்துடன் அடிக்கடி கைமாறாத காணிகளை ஏமாற்றி மாத்தி எழுதுவதும் வைப்பதும் கஸ்டம் .அம்மா எனக்கு வீடு மாத்தி எழுத 4 முறை power attorney அனுப்ப வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒரு பிழை கண்டு பிடித்தார்கள்.உறுதி இல்லாதவர்கள் பக்கத்து காணி விபரங்களை குடுத்தால் உங்களது உறுதிகளின் பிரதியை பெற்றுக்கொள்ளலாம்.

இப்பத்து யாழில் வீடு கட்டுவது போன்ற தொழில் செய்பவர்களில் குடித்துவிட்டு வேலை செய்பவர்கள் தான் அதிகம். நிறைய ஏமாத்து வேலைகளும் நடக்குது. சிலபேர் ரோட்டு பெருபிப்பதற்காக தடை செய்யப்பட்ட நிலத்தில் களிமண் அல்லது temporary கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டுகிறார்கள் . ரோட்டு கட்டும்போது உடைத்துவிடுவதாக சொன்னால் சரியாம்.நான் இப்ப இரண்டு மாதங்களுக்கு முன் தான் நல்ல ஒரு bulider யை கண்டுபிடித்து plan எல்லாம் கீறி estimate போட்டு , பிறகு ஒரு agriculture officer யை பிடித்து தோட்டம் அமைக்க ஒழுங்கு பண்ணி வேலை தொடங்கும் நேரத்தில் Lockdown வந்திட்டுது. விரைவில் துடங்கலாம் என்று இருக்கிறேன். 100 வருட நாற்சார் வீட்டை அதன் பழமை மாறாமல் திருத்த  இந்த ஒரு builder தான் உடன் பட்டார். வீடு கட்டும்போதோ திருத்தும்போதோ கட்டாயம் நம்பிக்கையான ஒருவர் மேற்பார்வையில் தான் செய்ய வேண்டும். ஒருத்தரும் இல்லாதவர்களுக்கு கட்டிடம் காட்டும் பொது மேற்பார்வை பார்க்க, maintenance செய்ய என்று தனியாக ஆக்கள் இருக்கினம். UK இல் இருந்து போன ஒருவரும் எப்படி பொறுப்பெடுத்து செய்வதாக கேள்விப்பட்டேன்  வெளிநாடு என்று கேள்விப்பட்டாலே   எல்லாவற்றுக்கும் கட்டணம் கூடும். அதற்கு முழுப்பொறுப்பும் வெளிநாட்டில் இருந்து  போகும் நாம் தான் காரணம். அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் நாம். நான் எப்பொழுது போகும்போதும் எனது சுற்றங்களுக்கு விளங்கப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கு அது விளங்குவதில்லை.

யாருக்காவது தேவைப்பட்டால் விபரம் அறியத்தருகிறேன். வீட்டுக்குத்தேவையான  பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக அனுப்பவும் முடியும். புது பொருட்களாக பெட்டியில் இருந்தால் tax அடிப்பார்கள்.

Dual citizenship எடுக்க 1850 USD fees . அப்ளிகேசன்  போட 20$. மிச்சம் கிடைத்த  பிறகுதான் கொடுப்பது. நான்  டிசம்பரில் apply பண்ணினேன். ஒன்லைனில் பார்த்தபோது processing என்று போட்டிருக்கு.

நிறையப்பேர் குளிர் காலங்களில் மட்டும் ஊரில் இருந்துவிட்டு summer ற்கு  திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடர்ந்து அங்கு இருக்க நிறையபேருக்கு கஸ்டம் . உடல் நிலை சரியில்லாதவர்கள் போயிருப்பது என்பது மிகவும் கடினம். சிறு உடல்நல பிரச்சனைகள் என்றால் அங்கு நல்ல மருத்துவ வசதிகள் இருக்கு. நானும் போய் யாழ் மருத்துவ கல்லூரியில் கொஞ்ச காலம் பணியாற்றலாம் என்று யோசிக்கிறேன். சும்மா போய் இருப்பது மிகவும் கடினம். எத்தனையோ வகையில் எமது மக்களுக்கும் உதவுகிற மாதிரி ஏதாவது செய்யலாம் .

மற்றது அங்கு போய் இருப்பதானால் இந்த மொழிப்பற்று ,  விடுதலை உணர்ச்சி எல்லாவற்றையும் இங்கேயே விட்டுட்டு சந்தோஷமாக வாழ மட்டும் தான் போகவேண்டும். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். நான் அம்மாவிடம் சொன்னேன், வீடு வேலைமுடிந்ததும் ஒரு அலரி மரம் நட்டு  புத்த சிலை ஒன்றயும் தோட்டத்தில் வைக்கப்போகிறேன் என்று. அத்துடன்  சிங்களம் கதைக்கத்தெரிந்தாலும் இப்ப எழுத வாசிக்க கற்றுக்கொள்கிறேன் ( self-learning ). இது எனது பார்வையில் சரி என்று பட்டாலும் எல்லோரும் இதற்கு உடன்படமாட்டார்கள்.

Edited by nilmini
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தம்பியின் சொந்தக்காணியில் கட்டப்பட்டது இதனால் அண்ணன் இறந்த போன சம்பவம் எங்கேயோ கேட்ட செய்தி எனக்குள்  ஞாபகம் வருகிறது 

அண்ணன் இறக்கவில்லை.. குடும்பத்தோடு கனடாவில் இருந்து புதிய வீட்டிற்கு குடியேறப் போன போது வீடு கட்டப்பட வேண்டிய இடத்தில் இல்லாததால்.. மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்.

பின்னர் ஊடகங்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்து தம்பி தான் தன் சொந்தக் காணியில் கட்டி இருந்த அந்த வீட்டை அண்ணனுக்கு கொடுத்ததாக அந்தச் செய்தியை இங்கு யாழில் படித்தது ஞாபகம். 

Link to post
Share on other sites
8 minutes ago, nilmini said:

அத்துடன்  சிங்களம் கதைக்கத்தெரிந்தாலும் இப்ப எழுத வாசிக்க கற்றுக்கொள்கிறேன் ( self-learning ). இது எனது பார்வையில் சரி என்று பட்டாலும் எல்லோரும் இதற்கு உடன்படமாட்டார்கள்.

சிங்கள மொழி கற்க எனக்கும் விருப்பம். அந்த தள விபரங்களை தாருங்கள். நன்றி.

வேலையில ஒரு சிங்கள பெட்டைக்கு கடதாசி போட வேண்டி இருக்குது எண்ட ரகசியத்தை ஒருக்காலும் சொல்ல மாட்டேன்.

கந்தர்மடத்தில், இரண்டொரு நாற்சார் வீடுகள் இருக்கிறது தெரியும்.

எதுவாக இருக்கும் எண்டு யோசிக்கிறேன்... தமிழ் சிறியர் கண்டு பிடிப்பார் பொறுங்கோ. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

21 minutes ago, nilmini said:

யாருக்காவது தேவைப்பட்டால் விபரம் அறியத்தருகிறேன். வீட்டுக்குத்தேவையான  பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக அனுப்பவும் முடியும். புது பொருட்களாக பெட்டியில் இருந்தால் tax அடிப்பார்கள்.

ஊரில் இப்ப தேவையான எல்லா நவீன உபகரணங்களும் உள்ளன. வெளிநாட்டில் இருந்து கொண்டு போகும் சில பொருட்கள் அங்குள்ள சூழ்நிலைக்கு அதிக காலம் தாக்குப் பிடிக்கமாட்டாது. 

குறிப்பாக.. ஒரு உதாரணம்.. யாழ் குடா தண்ணீரில் அதிக கல்சியம் உண்டு. அதனால்.. குளியலறை சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு போய் பொருத்தினால்.. ஒரு 6 மாதத்தில் எல்லாம் அடைத்து.. போய் விடும்.  அதுமட்டுமன்றி பொருட்களுக்கான கால உத்தரவாதம் முடிய முன்னரே அது பழுதடையும் என்றால்.. பொருளை தூக்கி வீசத்தான் வேண்டும். ஆனால் ஊரில்.. வாங்கினால்.. பொருட்களுக்கு ஏற்ப கால உத்தரவாதம் இருக்கும். அதற்கு பழுதானால்.. மாற்றித் தருவார்கள்.. அல்லது இலவசமாக திருத்தி தருவார்கள். 

மேலும் பொருட்கள் வாக்கும் செலவு.. கப்பலில் அனுப்பும் செலவு.. எனி கப்பல் போய் சேர எடுக்கும் காலம்..  இடையில் சுங்கவரிக்காரன் பிரச்சனை கொடுத்தால்.. அதனை தாண்ட கொடுக்க வேண்டிய கப்பம் தண்டம்.. எல்லாமே கூடுதல் சுமை.

அதிலும்.. ஒப்பந்த அடிப்படையில் கூலி மற்றும் பொருட்களை உள்ளடக்கி ஒப்பந்தம் போட்டுக் கொள்வதும்..  அவர்களின் கொள்வனவின் போது நீங்கள்/ உங்கள் நம்பிக்கைக்குரியவர் பிரசன்னமாகி தரமானதை கொள்வனவு செய்வதை கண்காணித்து வலியுறுத்துவது மிக அவசியம். 

ஒப்பந்த அடிப்படையில் என்றால்.. நீண்ட காலம் இழுத்தடிக்காமல்.. வேலையை முடிக்கப் பார்ப்பார்கள். 

Edited by nedukkalapoovan
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

UC - Urban Council

UDC - Urban Development Council

EB - Electricity Board ( வீடு கட்டும்போதே, சோலார் பேனலுக்கும் திட்டமிடுங்கள்)

நான் கேள்விப்பட்டது சரியாயின், காணி மோசடிகள் காரணமாக, (அதாவது வெளிநாடுகளில் இருப்போர் தமக்கு வித்ததாக, கள்ள உறுதி முடித்து, அதனை காட்டி, தமது பெயரில் பதிவு செய்து, பின்னர் வித்துவிடுவது. வெளிநாட்டுக்காரர் உறுதியுடன் வந்தால், கதை கந்தல்), விற்பவர், காணி பதிவகத்தில், விற்கப்படும் காணி, தனக்கு உரிமையானது என நிரூபித்து, அந்த செர்டிபிகேட்டுடன், வரும் அடுத்த உறுதிக்காரரின் பத்திரமே பதிவாகும்.

இது நல்ல திட்டம். பிரகிராசிமார் தெரிந்தால் விசாரியுங்கள்.

விசாரிக்கிறேன்.

11 hours ago, Nathamuni said:

வெளிநாட்டுக்காரர் காணி வாங்க 100% வரி கட்ட வேண்டும்.

அதாலை  தான், சொத்துப்பத்து வைத்திருப்போர், 3 லட்சம் கட்டி குடியுரிமை எடுத்தல் புத்திசாலித்தனமானது. 

எனக்கு அங்கத்தே குடியுரிமை எடுக்க ஏலாது ஏனெனில் ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளேன்.

6 hours ago, பையன்26 said:

உங்க‌ட‌ நாட்டு பெண்ச‌ன் ப‌ற்றி  என‌க்கு தெரியாது தாயே , ஆனால் இந்த‌ நாட்டில் பெண்ச‌ன் எடுத்தா மூன்று மாச‌த்துக்கு ஒரு முறை இங்கு வ‌ந்தே ஆக‌னும் /

பென்ஷன் எடுக்கிற வயதில அங்கு போய் என்ன செய்வது ???😃

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டிலிருந்து ஒரு அண்ணர் வீடுகட்டினார்   தம்பிக்கு காசு அனுப்பினார் அண்ண தம்பியும் வீடு கட்டின படங்கள் மாபிள் வச்ச படங்கள் பால்கனி படங்கள் எல்லாம் கட்டின போட்டோக்களை அண்ணனுக்கு அனுப்பி வைத்தார் அண்ணர் ஊருக்கு வந்து பார்த்த போது அந்த வீடு அண்ணனுக்கு சொந்தமான காணியில் கட்டப்படவில்லை 

தம்பியின் சொந்தக்காணியில் கட்டப்பட்டது இதனால் அண்ணன் இறந்த போன சம்பவம் எங்கேயோ கேட்ட செய்தி எனக்குள்  ஞாபகம் வருகிறது 

எதற்கும் சட்ட திட்டங்களை ஆராயுங்கள் வெளிநாடு என்றால் குப்பை எடுக்க கூட காசை எதிர்பார்ப்பார்கள் , கரண்ட் , தண்ணீர், சுற்றிவர மதில் சுவர் அமைக்க, ஒரு மரக்கிளை ,மரம் தறிப்பதென்றால் கூட அனுமதி   ஆயிரம் கேள்விகள் எழும்  வீட்டின் வரைபடம் அதற்கு செலவாகும் தொகை அதற்காக பிரதேச செயலகத்தில் வரிகட்டி அனுமதி பெறல் எக்கச்சக்கம் இருக்கு அக்கோய்

என்ன நீங்களே இப்பிடிப் பயப்படுத்திறியள்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஏற்கனவே கட்டியிருக்கிற வீட்டை வாங்குவது நல்லது போல் இருக்கே.ஆனால் எமது விருப்பத்துக்கு அமையாது அது.

Link to post
Share on other sites
Posted (edited)
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு அங்கத்தே குடியுரிமை எடுக்க ஏலாது ஏனெனில் ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளேன்.

அதிலை என்ன பிரச்னை. நீங்களே சட்டம் உருவாக்குகிறீர்களா?

உங்களுக்கு இலங்கை பிரஜா உரிமை தருவது, ஜெர்மனி, பிரிட்டன் போல எதோ ஒருவகை மனிதாபிமான சலுகை அடிப்படையில் அல்ல. 

அது அங்கே பிறந்த உரிமையின் அடிப்படையில்... ஆகவே உங்களுக்கு வேறு குடியுரிமைகள் இருப்பது பிரச்னை இல்லை.

01. Dual Citizenship is applicable to: A person whose citizenship of Sri Lanka has ceased under section 19, 20 or 21 of the Citizenship Act, No 18 of 1948 or a person whose Citizenship of Sri Lanka is likely to cease.

இலங்கை தூதரகத்துக்கு ஒரு போனை போட்டு, விசாரியுங்கோ. 3க்கும் 5கும் இடையே தான் இந்த பிரிவு திறந்திருக்கும்.

அப்படி இன்னொரு குடியுரிமை தான் வைத்திருக்கலாம் என்றால், ஜெர்மனி குடியுரிமையை விடலாம் தானே?

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

Dual citizenship எடுக்க 1850 USD fees . அப்ளிகேசன்  போட 20$. மிச்சம் கிடைத்த  பிறகுதான் கொடுப்பது. நான்  டிசம்பரில் apply பண்ணினேன். ஒன்லைனில் பார்த்தபோது processing என்று போட்டிருக்கு.

நிறையப்பேர் குளிர் காலங்களில் மட்டும் ஊரில் இருந்துவிட்டு summer ற்கு  திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடர்ந்து அங்கு இருக்க நிறையபேருக்கு கஸ்டம் . உடல் நிலை சரியில்லாதவர்கள் போயிருப்பது என்பது மிகவும் கடினம். சிறு உடல்நல பிரச்சனைகள் என்றால் அங்கு நல்ல மருத்துவ வசதிகள் இருக்கு. நானும் போய் யாழ் மருத்துவ கல்லூரியில் கொஞ்ச காலம் பணியாற்றலாம் என்று யோசிக்கிறேன். சும்மா போய் இருப்பது மிகவும் கடினம். எத்தனையோ வகையில் எமது மக்களுக்கும் உதவுகிற மாதிரி ஏதாவது செய்யலாம் .

மற்றது அங்கு போய் இருப்பதானால் இந்த மொழிப்பற்று ,  விடுதலை உணர்ச்சி எல்லாவற்றையும் இங்கேயே விட்டுட்டு சந்தோஷமாக வாழ மட்டும் தான் போகவேண்டும். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். நான் அம்மாவிடம் சொன்னேன், வீடு வேலைமுடிந்ததும் ஒரு அலரி மரம் நாடு புத்த சிலை ஒன்றயும் தோட்டத்தில் வைக்கப்போகிறேன் என்று. அத்துடன்  சிங்களம் கதைக்கத்தெரிந்தாலும் இப்ப எழுத வாசிக்க கற்றுக்கொள்கிறேன் ( self-learning ). இது எனது பார்வையில் சரி என்று பட்டாலும் எல்லோரும் இதற்கு உடன்படமாட்டார்கள்.

என் கணவர் சொன்னார் உன்னை நம்பி அங்கே போய் இருக்கவும் பயம்.அங்க போய் நீதி நியாயம் கதைக்கிறதெண்டாலோ அரசியல் கதைக்கிறதெண்டாலோ நான் வரமாட்டன் எண்டு சொல்லுறார்.😀

அதோட பெரிய உடல்நல பிரச்சனைகள் வந்தால்த்தான் பிரச்சனை.

மற்றது ஒரு மொழியைப் படிப்பது நல்லதுதானே.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

சிங்கள மொழி கற்க எனக்கும் விருப்பம். அந்த தள விபரங்களை தாருங்கள். நன்றி.

வேலையில ஒரு சிங்கள பெட்டைக்கு கடதாசி போட வேண்டி இருக்குது எண்ட ரகசியத்தை ஒருக்காலும் சொல்ல மாட்டேன்.

கந்தர்மடத்தில், இரண்டொரு நாற்சார் வீடுகள் இருக்கிறது தெரியும்.

எதுவாக இருக்கும் எண்டு யோசிக்கிறேன்... தமிழ் சிறியர் கண்டு பிடிப்பார் பொறுங்கோ. 

சிங்களம் கற்பது தமிழ் கற்பதிலும் பார்க்க  சுலபம். எனக்கு சிறு வயதில் இருந்தே கதைக்க தெரிந்த தாலும்  சிங்களம் எழுத படிக்கச் கொஞ்ச காலம் டியூசன் போனதாலும் சிங்களத்தில் ஓரளவுக்கு பரிச்சயம் இருக்கு. சமையல் ஆர்வம் அதிகமாதனால் YouTube இல் சிங்கள ரெசிபிக்களை கேட்டு அதில் தெரியாத சொற்களை  google Translator மூலம் type பண்ணி  copy பண்ணி ஒரு word document இல் சேர்த்து  வைத்திருக்கிறேன். அத்துடன் சிங்கள நகைச்சுவை clips உம் நல்லது. அன்றாட தேவைக்கு என்பதால் முறையாக படிக்கச் வேண்டிய அவசியம் இல்லை. http://ebooks.lib.ntu.edu.tw/1_file/IA/201102/50.pdf. இதை படிக்கச் உதவியாக வைத்திருக்கலாம். https://www.youtube.com/channel/UCLGEs0xVFq6CpLyFot0uo0g இந்த தம்பியும் சிங்களம் படிப்பிக்கிறார். Apeamma  என்ற சமையல் வீடியோக்களும் நல்லம். S inhala teledrama old என்று YouTube இல் அடித்து பார்க்கவும். எனது அனுபவத்தில் இப்படி படித்தால் விரைவில் சிங்களம் கதைக்க, வாசிக்க முடியும். நான் சிலோனுக்கு திரும்ப போற ஐடியா இருப்பதால் கொஞ்சம் கூட படிக்கிறேன் .

சிங்கள பெட்டையளுக்கு கடிதம் எழுதிய யாழ் பெடியனுகள் நிறைய. Join the club . ஒகே இந்த ரகசியத்தை நான் ஒருவருக்கும் சொல்லமாட்டேன். 😆

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு அங்கத்தே குடியுரிமை எடுக்க ஏலாது ஏனெனில் ஏற்கனவே இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளேன்.

நாதர் சொன்ன கணக்கா எங்கடை ஆக்கள் தற்துணிவான சட்டங்களை இயற்றி தங்களின் தொலைபேசிகளுக்குள்ளால்.. மற்றவர்களுக்கும் சொல்லி மாறி மாறி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது அதிகம்.

நீங்கள் பிற நாட்டு/நாடுகளின் குடியுரிமை கொண்டிருந்தாலும்.. பிறந்தது சொறீலங்காவில் என்ற அடிப்படையில்.. இழக்கப்பட்ட சொறீலங்காவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.  நீங்கள் 150 நாட்டு குடியுரிமை வைத்திருந்தாலும்.. பிறப்பால் நீங்கள் சொறீலங்கன். நீங்கள் பிறந்த இடம் அல்லது நாடு என்பது எந்த நாட்டு பாஸ்போட்டிலும் சொறீலங்காவில் ஓர் ஊர் அல்லட்து சொறீலங்காவாத்தான் இருக்கும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அப்படி இன்னொரு குடியுரிமை தான் வைத்திருக்கலாம் என்றால், ஜெர்மனி குடியுரிமையை விடலாம் தானே?

16 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை பெற்ற பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் முன்னதாக பென்ஷன் எடுக்கலாம் என்னும் ஓர் சட்டம் யேர்மனியிலிருந்து. இப்ப அதில் மாற்றங்கள் செய்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. நேரில் தான் அங்கு சென்று விசாரிக்க வேண்டும். அதனாலதான் அங்கத்தையவதிவிட உரிமையை விட விருப்பம் இல்லை.

1 minute ago, nedukkalapoovan said:

நாதர் சொன்ன கணக்கா எங்கடை ஆக்கள் தற்துணிவான சட்டங்களை இயற்றி தங்களின் தொலைபேசிகளுக்குள்ளால்.. மற்றவர்களுக்கும் சொல்லி மாறி மாறி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது அதிகம்.

நீங்கள் பிற நாட்டு/நாடுகளின் குடியுரிமை கொண்டிருந்தாலும்.. பிறந்தது சொறீலங்காவில் என்ற அடிப்படையில்.. இழக்கப்பட்ட சொறீலங்காவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.  நீங்கள் 150 நாட்டு குடியுரிமை வைத்திருந்தாலும்.. பிறப்பால் நீங்கள் சொறீலங்கன். நீங்கள் பிறந்த இடம் அல்லது நாடு என்பது எந்த நாட்டு பாஸ்போட்டிலும் சொறீலங்காவில் ஓர் ஊர் அல்லட்து சொறீலங்காவாத்தான் இருக்கும். 

நான் எடுக்க முடியும். ஆனால் இரண்டு வதிவிட உரிமைகளை வைத்துக்கொண்டு மூன்றாவதாகவும் ஒன்றை எடுக்க முடியாது

6 minutes ago, nilmini said:

சிங்களம் கற்பது தமிழ் கற்பதிலும் பார்க்க  சுலபம். எனக்கு சிறு வயதில் இருந்தே கதைக்க தெரிந்த தாலும்  சிங்களம் எழுத படிக்கச் கொஞ்ச காலம் டியூசன் போனதாலும் சிங்களத்தில் ஓரளவுக்கு பரிச்சயம் இருக்கு. சமையல் ஆர்வம் அதிகமாதனால் YouTube இல் சிங்கள ரெசிபிக்களை கேட்டு அதில் தெரியாத சொற்களை  google Translator மூலம் type பண்ணி  copy பண்ணி ஒரு word document இல் சேர்த்து  வைத்திருக்கிறேன். அத்துடன் சிங்கள நகைச்சுவை clips உம் நல்லது. அன்றாட தேவைக்கு என்பதால் முறையாக படிக்கச் வேண்டிய அவசியம் இல்லை. http://ebooks.lib.ntu.edu.tw/1_file/IA/201102/50.pdf. இதை படிக்கச் உதவியாக வைத்திருக்கலாம். https://www.youtube.com/channel/UCLGEs0xVFq6CpLyFot0uo0g இந்த தம்பியும் சிங்களம் படிப்பிக்கிறார். Apeamma  என்ற சமையல் வீடியோக்களும் நல்லம். S inhala teledrama old என்று YouTube இல் அடித்து பார்க்கவும். எனது அனுபவத்தில் இப்படி படித்தால் விரைவில் சிங்களம் கதைக்க, வாசிக்க முடியும். நான் சிலோனுக்கு திரும்ப போற ஐடியா இருப்பதால் கொஞ்சம் கூட படிக்கிறேன் .

சிங்கள பெட்டையளுக்கு கடிதம் எழுதிய யாழ் பெடியனுகள் நிறைய. Join the club . ஒகே இந்த ரகசியத்தை நான் ஒருவருக்கும் சொல்லமாட்டேன். 😆

உங்களுக்கு ஏற்கனவே அம்மொழியின் அறிமுகம் உள்ளதால் கற்பது இலகுவாகும். எனக்கு மனம் முழுவதும் அவர்கள் மேலும் அந்த மொழிமேலும் துவேசம் இருக்கவே செய்கிறது.🙂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எடுக்க முடியும். ஆனால் இரண்டு வதிவிட உரிமைகளை வைத்துக்கொண்டு மூன்றாவதாகவும் ஒன்றை எடுக்க முடியாது

வதிவிட உரிமை வேறு குடியுரிமை வேறு.

மேலும்.. நீங்கள் இரண்டு நாட்டிலும் சொறீலங்கா குடியுரிமையை இழக்கவில்லை. எந்த நாட்டில் சொறீலங்கா குடியுரிமையை விட்டு அந்த நாட்டுக் குடியுரிமைக்கு போனீர்களோ... அங்கு தான் சொறீலங்கா குடியுரிமை இழக்கப்பட்டுள்ளது. ஆகவே மீளவும் அந்த இழந்த குடியுரிமையை பெறலாம். உங்களிடம் ஆயிரம் குடியுரிமை இருந்தாலும்.. முதலாவதாக மாற்றிப் பெற்ற குடியுரிமை நாட்டில் தான் பிறந்த நாட்டின் குடியுரிமை இழக்கப்பட்டிருக்கும்.

இப்படித்தான் சட்டம் பார்க்கிறது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

வதிவிட உரிமை வேறு குடியுரிமை வேறு.

மேலும்.. நீங்கள் இரண்டு நாட்டிலும் சொறீலங்கா குடியுரிமையை இழக்கவில்லை. எந்த நாட்டில் சொறீலங்கா குடியுரிமையை விட்டு அந்த நாட்டுக் குடியுரிமைக்கு போனீர்களோ... அங்கு தான் சொறீலங்கா குடியுரிமை இழக்கப்பட்டுள்ளது. ஆகவே மீளவும் அந்த இழந்த குடியுரிமையை பெறலாம். உங்களிடம் ஆயிரம் குடியுரிமை இருந்தாலும்.. முதலாவதாக மாற்றிப் பெற்ற குடியுரிமை நாட்டில் தான் பிறந்த நாட்டின் குடியுரிமை இழக்கப்பட்டிருக்கும்.

இப்படித்தான் சட்டம் பார்க்கிறது. 

நாம் யேர்மன் நாட்டுக் குடியுரிமை எடுத்தபோது அவர்கள் கூறினார்கள் நீங்கள் இலங்கைக் குடியுரிமையையும் வைத்த்திருப்பீர்களானால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும்போது நாம் உடனே முன்வரமாட்டோம். எமது நாட்டுக்கு குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் உங்களுக்கு உடனே உதவுவோம் என்று. அதனாலேயே அப்போது 93 இல் நாம் இலங்கைக்கு குடியுரிமை தேவையில்லை என்று எண்ணினோம். ஆனால் தற்போதைய யேர்மன் சட்டதில் நாம் ஐரோப்பிய நாடுகள் ஒன்றின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு வெளியே வேறு எந்த நாட்டுக்கு குடியுரிமை பெற்றாலும் யேர்மன் குடியுரிமையை இழந்துவிடுவோம்.

நான் மாறி வதிவிட உரிமை என்று எழுதிவிட்டேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.pngspacer.pngspacer.png

52 minutes ago, Nathamuni said:

சிங்கள மொழி கற்க எனக்கும் விருப்பம். அந்த தள விபரங்களை தாருங்கள். நன்றி.

வேலையில ஒரு சிங்கள பெட்டைக்கு கடதாசி போட வேண்டி இருக்குது எண்ட ரகசியத்தை ஒருக்காலும் சொல்ல மாட்டேன்.

கந்தர்மடத்தில், இரண்டொரு நாற்சார் வீடுகள் இருக்கிறது தெரியும்.

எதுவாக இருக்கும் எண்டு யோசிக்கிறேன்... தமிழ் சிறியர் கண்டு பிடிப்பார் பொறுங்கோ. 

இதுதான் வீடு வாசல். ஆலடி சந்தியில் இருக்கு. சிறி உறவினர் தானே. சிறிக்கு வீடு தெரியும். 35 வருடங்களாக பொம்மர்கள் எல்லாத்துக்கும் தப்பி வந்தவர் போனவர் என்று எல்லோரும் எமக்குத்தெரியாமலேயே வீட்டில் இருந்து, தாங்களே வாடைக்கு பிரித்து குடுத்து உழைத்த வீடு. இந்தியன் ஆமி, சிலோன் ஆமி என்று எல்லோரும் இருந்து அம்மம்மாவின் தளபாடங்கள், ஐம்பொன் பாத்திரங்கள் என எல்லாவற்றயும் எடுத்து செல்ல, சிலர் வண்டில் கொண்டு வந்து பாரமான தளபாடங்கள் எல்லாம் எடுத்து சென்றுவிட்டார்கள். கோபர் பேட்டி உற்பட ஒரு சில நல்ல சாமான்கள் தப்பிட்டுது . spacer.png

13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் யேர்மன் நாட்டுக் குடியுரிமை எடுத்தபோது அவர்கள் கூறினார்கள் நீங்கள் இலங்கைக் குடியுரிமையையும் வைத்த்திருப்பீர்களானால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும்போது நாம் உடனே முன்வரமாட்டோம். எமது நாட்டுக்கு குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் உங்களுக்கு உடனே உதவுவோம் என்று. அதனாலேயே அப்போது 93 இல் நாம் இலங்கைக்கு குடியுரிமை தேவையில்லை என்று எண்ணினோம். ஆனால் தற்போதைய யேர்மன் சட்டதில் நாம் ஐரோப்பிய நாடுகள் ஒன்றின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு வெளியே வேறு எந்த நாட்டுக்கு குடியுரிமை பெற்றாலும் யேர்மன் குடியுரிமையை இழந்துவிடுவோம்.

நான் மாறி வதிவிட உரிமை என்று எழுதிவிட்டேன்

அமெரிக்க நியூசிலாந்து குடிமக்கள் எத்தனை குடியுரிமையும் பெறலாம். எனக்கு இது இரண்டும் உள்ளது ஸ்ரீலங்கா மூன்றாவது 

Edited by nilmini
 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுமோ, உங்கள் முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்...அளவான வீடு கட்டி ,உங்கள் விருப்பமான தோட்டம் செய்து மனதிற்கு பிடித்த வாழ்க்கை வாழுங்கள்...முதல் போய் வாழ கொஞ்ச கஸ்டமாய் இருக்கும்...அயலவர்கள் உங்களை ஏற்பதற்கும், நீங்கள் அங்கத்தையே வாழ்க்கைக்கு இசைந்து போவதற்கும்....ஆனால் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால் அங்கு ஏற்று கொள்வார்கள் 
 
20 hours ago, உடையார் said:

இப்படி பலர் ஆக்கிரமித்துகொண்டிருக்கின்றார்கள், வசதியிருந்தும். சிலருக்கு விதனை அரசியல் வாதிகளின் செல்வாக்கு வேறு. நன்றாக விசாரித்து ஏழைகளுக்கே கொடுங்கள், என்றென்னும் உங்களை மறக்கமாட்டார்கள், உங்களுக்கும் மன நிம்மதி

இனி ஊரில் போய் இருக்க எம்மால் முடியுமா? இரண்டு தோனியில் கால் வைத்த நிலையில்தான் நாங்கள் இப்ப. அங்கு பாதுகாப்புமில்லை, இடைக்கிடை போய்வர சரி.

நிரந்தரமாக தங்குவதின்றால், ஒரு பழைய வீட்டில் வருடம் தங்கி நிலைமைகளை அவதானித்து புதுவீடு கட்டுவது நல்லது.

நான் இங்குதான் பெரியகாணி வாங்கி தோட்டம் வைத்து நிம்மதியாக வாழ ஆசை. ஊருக்கு இடைக்கிடை போய் வரலாம்.

ஊரில் இப்ப எல்லாரும் வியாபர நோக்குதான், சொந்த உறவுகள் கூட, யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். 

அவுசில் இருப்பது கிட்டத்தட்ட ஊரில் இருப்பது மாதிரித் தான் உங்களுக்கு ஊரில் போய் இருக்க வேண்டும் என்று விருப்பம் இல்லாததில் ஆச்சரியம் இல்லை 🙂
 
1 hour ago, nilmini said:

பிரச்சனையான காலத்தில் நிறைய மோசடிகள் யாழ் எங்கும் நடைபெற்றது. இப்ப டவுண் பக்கம் ஏமாத்தி காணி வீடு பெயர் மாற்றுவது , விற்பது அவ்வளவு சுலபம் அல்ல. அத்துடன் அடிக்கடி கைமாறாத காணிகளை ஏமாற்றி மாத்தி எழுதுவதும் வைப்பதும் கஸ்டம் .அம்மா எனக்கு வீடு மாத்தி எழுத 4 முறை power attorney அனுப்ப வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒரு பிழை கண்டு பிடித்தார்கள்.உறுதி இல்லாதவர்கள் பக்கத்து காணி விபரங்களை குடுத்தால் உங்களது உறுதிகளின் பிரதியை பெற்றுக்கொள்ளலாம்.

இப்பத்து யாழில் வீடு கட்டுவது போன்ற தொழில் செய்பவர்களில் குடித்துவிட்டு வேலை செய்பவர்கள் தான் அதிகம். நிறைய ஏமாத்து வேலைகளும் நடக்குது. சிலபேர் ரோட்டு பெருபிப்பதற்காக தடை செய்யப்பட்ட நிலத்தில் களிமண் அல்லது temporary கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டுகிறார்கள் . ரோட்டு கட்டும்போது உடைத்துவிடுவதாக சொன்னால் சரியாம்.நான் இப்ப இரண்டு மாதங்களுக்கு முன் தான் நல்ல ஒரு bulider யை கண்டுபிடித்து plan எல்லாம் கீறி estimate போட்டு , பிறகு ஒரு agriculture officer யை பிடித்து தோட்டம் அமைக்க ஒழுங்கு பண்ணி வேலை தொடங்கும் நேரத்தில் Lockdown வந்திட்டுது. விரைவில் துடங்கலாம் என்று இருக்கிறேன். 100 வருட நாற்சார் வீட்டை அதன் பழமை மாறாமல் திருத்த  இந்த ஒரு builder தான் உடன் பட்டார். வீடு கட்டும்போதோ திருத்தும்போதோ கட்டாயம் நம்பிக்கையான ஒருவர் மேற்பார்வையில் தான் செய்ய வேண்டும். ஒருத்தரும் இல்லாதவர்களுக்கு கட்டிடம் காட்டும் பொது மேற்பார்வை பார்க்க, maintenance செய்ய என்று தனியாக ஆக்கள் இருக்கினம். UK இல் இருந்து போன ஒருவரும் எப்படி பொறுப்பெடுத்து செய்வதாக கேள்விப்பட்டேன்  வெளிநாடு என்று கேள்விப்பட்டாலே   எல்லாவற்றுக்கும் கட்டணம் கூடும். அதற்கு முழுப்பொறுப்பும் வெளிநாட்டில் இருந்து  போகும் நாம் தான் காரணம். அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் நாம். நான் எப்பொழுது போகும்போதும் எனது சுற்றங்களுக்கு விளங்கப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கு அது விளங்குவதில்லை.

யாருக்காவது தேவைப்பட்டால் விபரம் அறியத்தருகிறேன். வீட்டுக்குத்தேவையான  பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக அனுப்பவும் முடியும். புது பொருட்களாக பெட்டியில் இருந்தால் tax அடிப்பார்கள்.

Dual citizenship எடுக்க 1850 USD fees . அப்ளிகேசன்  போட 20$. மிச்சம் கிடைத்த  பிறகுதான் கொடுப்பது. நான்  டிசம்பரில் apply பண்ணினேன். ஒன்லைனில் பார்த்தபோது processing என்று போட்டிருக்கு.

நிறையப்பேர் குளிர் காலங்களில் மட்டும் ஊரில் இருந்துவிட்டு summer ற்கு  திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடர்ந்து அங்கு இருக்க நிறையபேருக்கு கஸ்டம் . உடல் நிலை சரியில்லாதவர்கள் போயிருப்பது என்பது மிகவும் கடினம். சிறு உடல்நல பிரச்சனைகள் என்றால் அங்கு நல்ல மருத்துவ வசதிகள் இருக்கு. நானும் போய் யாழ் மருத்துவ கல்லூரியில் கொஞ்ச காலம் பணியாற்றலாம் என்று யோசிக்கிறேன். சும்மா போய் இருப்பது மிகவும் கடினம். எத்தனையோ வகையில் எமது மக்களுக்கும் உதவுகிற மாதிரி ஏதாவது செய்யலாம் .

மற்றது அங்கு போய் இருப்பதானால் இந்த மொழிப்பற்று ,  விடுதலை உணர்ச்சி எல்லாவற்றையும் இங்கேயே விட்டுட்டு சந்தோஷமாக வாழ மட்டும் தான் போகவேண்டும். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். நான் அம்மாவிடம் சொன்னேன், வீடு வேலைமுடிந்ததும் ஒரு அலரி மரம் நட்டு  புத்த சிலை ஒன்றயும் தோட்டத்தில் வைக்கப்போகிறேன் என்று. அத்துடன்  சிங்களம் கதைக்கத்தெரிந்தாலும் இப்ப எழுத வாசிக்க கற்றுக்கொள்கிறேன் ( self-learning ). இது எனது பார்வையில் சரி என்று பட்டாலும் எல்லோரும் இதற்கு உடன்படமாட்டார்கள்.

உங்கள் சேவை அங்குள்ள மக்களுக்கும் பயன்படட்டும் நில்மினி ...மனமுவந்த பாராட்டுக்கள் ...அங்கு போய் அரசியல் கதைக்காமல் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழலாம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் யேர்மன் நாட்டுக் குடியுரிமை எடுத்தபோது அவர்கள் கூறினார்கள் நீங்கள் இலங்கைக் குடியுரிமையையும் வைத்த்திருப்பீர்களானால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும்போது நாம் உடனே முன்வரமாட்டோம். எமது நாட்டுக்கு குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் உங்களுக்கு உடனே உதவுவோம் என்று. அதனாலேயே அப்போது 93 இல் நாம் இலங்கைக்கு குடியுரிமை தேவையில்லை என்று எண்ணினோம். ஆனால் தற்போதைய யேர்மன் சட்டதில் நாம் ஐரோப்பிய நாடுகள் ஒன்றின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு வெளியே வேறு எந்த நாட்டுக்கு குடியுரிமை பெற்றாலும் யேர்மன் குடியுரிமையை இழந்துவிடுவோம்.

நான் மாறி வதிவிட உரிமை என்று எழுதிவிட்டேன்

 1. If a German citizen acquires a non-EU or non-Swiss citizenship with the permission (Beibehaltungsgenehmigung or BBG) of the German Government (e.g., existing relative ties or property in Germany or in the other country or if the occupation abroad requires domestic citizenship for execution). The voluntary acquisition of a non-EU or non-Swiss citizenship without permission usually means the automatic loss of the German citizenship (but see Point 4). The permission is not necessary if the other citizenship is of another EU country or of Switzerland or if dual citizenship was obtained at birth.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மனம் முழுவதும் அவர்கள் மேலும் அந்த மொழிமேலும் துவேசம் இருக்கவே செய்கிறது

அப்படி ஒரு உணர்வு இல்லாவிட்டால் நாம் மனிதர்களே இல்லை. எனது எல்லா சிங்கள நண்பர் நண்பிகளிடமும் எனது அதிருப்தியை சொல்லியிருக்கிறேன். எனது அமெரிக்கா மாணவர்கள் , மற்றும் என்னுடன் வேலை செய்யும் எல்லோருக்கும் எமது பிரச்சனை பற்றி எப்போது சொல்வேன். எமது மக்கள் உயர்வடைய என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். மேலும் செய்வதற்கும் இருக்கிறேன் . இந்த காரணங்களால் நான் இந்த இனப்பிரச்சினையை எனது தலைக்கோ மனத்துக்கோ கொண்டுசெல்வதில்லை. பட்ட பாடு போதும். 

Edited by nilmini
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2020 at 19:52, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!

இப்பவே போய் இறங்கிடுங்கோ, மனுஷன் பின்னால ஓடி வந்திடுவார் 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

நான் இங்குதான் பெரியகாணி வாங்கி தோட்டம் வைத்து நிம்மதியாக வாழ ஆசை. ஊருக்கு இடைக்கிடை போய் வரலாம்.

அவுஸ்திரேலியாவில்  இருப்பதால் உங்களுக்கு ஊர் மாதிரியே இருக்கலாம். நிறைய சனமும் இருக்கு. இங்கு Florida , Hawaii  யாழ்ப்பாணம் மாதிரிதான் . ஆனால்  எமது மக்கள் ஆங்காங்கே தான் இருக்கிறார்கள். 

21 minutes ago, ரதி said:

உங்கள் சேவை அங்குள்ள மக்களுக்கும் பயன்படட்டும் நில்மினி ...மனமுவந்த பாராட்டுக்கள் ...அங்கு போய் அரசியல் கதைக்காமல் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழலாம் 

நன்றி ரதி. போவதும் உரிய அடுக்குகள் இப்பதான் துடங்கி இருக்கிறேன். உண்மைதான் எல்லா வகையாகவும் முயன்று  எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். இப்ப எமக்கும் எம் மக்களுக்கும் நிம்மதி ஒன்றுதான் தேவை. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.