Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

19 hours ago, nilmini said:

இப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill  எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன். 

அக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து  ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
நான்போனது 2012 ல் 

Link to comment
Share on other sites

 • Replies 277
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Posted Images

31 minutes ago, Kaalee said:

அக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து  ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
நான்போனது 2012 ல் 

தம்பி நான் சாதாரணமான ஒரு ஆளாக லைனில் நின்றுதான் போனானான். ஒரே ஒரு ஆயுதம் சிங்களம். அவ்வளவுதான். சுமந்திரன் வீட்டுக்கு விசிடிங் மட்டும்தான். படித்த படிப்பும் , பள்ளிக்கூடமும் எனது வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே உதவியது. இப்படி சிறு சிறு வேலைகள் செய்ய அல்ல. அதுதான் சொன்னேனே சிக்கலான விடயங்கள் கொஞ்சம் கஸ்ரம் என்று. அதற்கு தெரிந்த ஆக்கள் தேவை. இந்தியா இலங்கை ஒப்பிடும்போது இந்தியாவில் செலவாகுடன் போனால் ஸலாம் போடுவார்கள். ஆனால் இலங்கையில் செல்வாக்கு அப்படி வேலை செய்வதில்லை. மேல்மட்ட ஆட்களுக்கு அது பொருந்தும். நான் சாதாரண குடும்பம் தான் . அங்கங்கே கொஞ்ச செல்வாக்கு இருந்திருக்கு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

தம்பி நான் சாதாரணமான ஒரு ஆளாக லைனில் நின்றுதான் போனானான். ஒரே ஒரு ஆயுதம் சிங்களம். அவ்வளவுதான். சுமந்திரன் வீட்டுக்கு விசிடிங் மட்டும்தான். படித்த படிப்பும் , பள்ளிக்கூடமும் எனது வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே உதவியது. இப்படி சிறு சிறு வேலைகள் செய்ய அல்ல. அதுதான் சொன்னேனே சிக்கலான விடயங்கள் கொஞ்சம் கஸ்ரம் என்று. அதற்கு தெரிந்த ஆக்கள் தேவை. இந்தியா இலங்கை ஒப்பிடும்போது இந்தியாவில் செலவாகுடன் போனால் ஸலாம் போடுவார்கள். ஆனால் இலங்கையில் செல்வாக்கு அப்படி வேலை செய்வதில்லை. மேல்மட்ட ஆட்களுக்கு அது பொருந்தும். நான் சாதாரண குடும்பம் தான் . அங்கங்கே கொஞ்ச செல்வாக்கு இருந்திருக்கு

இலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம் 

 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

இலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம் 

அதுதான் உண்மை 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிலோனிலை கொலை செய்தாலும் செல்வாக்கு இருந்தால் தப்பிடலாம்.இது நான் கண்ணால் கண்ட அனுபவங்கள்.🕵🏾‍♂️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தக் கதை பெரிய கதை 😃

என் பேர் போட்டுத்தான் வீட்டு கேற் போட்டது முதல் வீட்டுக்கு. அப்ப அது என்னதுதானே😂

அதுவும் சரிதான் 

அப்படி என்றால் அந்தக் கேட் உங்களுக்குத்தான். அதை  நீங்கள் கழட்டிக்கொண்டு போகலாம்....ஆனால் வீட்டுக்க வரக்கூடாது.....அது உங்கட கடைசி தங்கச்சிக்குத்தான்....அதைக் காட்டித்தான் மற்றக்  குமர்களையும் கரை சேர்க்க வேண்டும்......!   🔪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 08:40, சுவைப்பிரியன் said:

என்ன சுமே அத்திவாரம் வெட்ட தொடங்கியாச்சா.கெதியா வாங்கோ எங்களுக்கும் பொழுது போகும்.

ஏன் நீங்கள் அங்கேயா இருக்கிறியள் ??? எங்கே என்று சொன்னால் பக்கத்திலேயே காணி பார்க்கிறன் 😂

On 8/5/2020 at 10:01, Kadancha said:

ஓர் இறைமையுள்ள அரசின் நிலப்புலத்தில் உங்களின் பிரசன்னம் இருக்கும் வரைக்கும், நீங்கள் வேறு எந்த நாட்டின் குடி உரிமை வைத்து இருந்தாலும், நீங்கள் உட்படுவது அந்த அரசின் ஆளும் உரிமைகும்  அதன் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே.

இதுவே, இறைமையுள்ள அரசும், அதன் இறைமையுள்ள நிலப்புலத்தின்  அடிப்படை. இதற்கு விதி விலக்கு, பெரும்பாலும் வலோற்கரமாக அளிப்பது, un security council இல் நிறேவேற்றப்படும் peace and  security resolutions under chapter 7.     

எனவே, சொறிலங்காவில் உங்களுக்கு பிரச்னை என்றால், ஜேர்மன் (இந்த குடி உரிமையை நீங்கள் அநேகமாக இழப்பீர்கள் சொறி லங்காவின் குடியுரிமை பெற்றால்)   அல்லது UK உதவ முயற்சிக்கலாம். இது கூட உறுதியாக சொல்ல முடியாது. அதை ஏற்பதும், நிராகரிப்பதும் சொறிலங்காவின் முடிவு.     

உங்களின் பிரசன்னம் இருக்கும் நாட்டில்  (சொறி லங்கா) உங்களுக்கு குடியுரிமை இருக்குமாயின், வேறு எந்த குடியுரிமை உள்ள அரசும், அது பிறப்பால் dual ஆக இருந்தாலும், கதைப்பதற்கு கூட முன்வராது.    

எல்லாத்தையும் கேட்க தலை சுத்துது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 07:58, தனிக்காட்டு ராஜா said:

ஓ கோ நன்றி நானும் படிச்ச ஞாபகம் அதான் எழுதினேன் அது பத்திரிகையிலா அல்லது யாழிலா என ஞாபகம் இல்லை 

 

கட்டியிருக்கிற வீட்டை வாங்கி நமக்கு தகுந்தால் போல் மாற்றியும் அமைக்கலாம் பல வழிகள் உண்டு ஆனால் இங்கே மீதிக்காலம் முழுவதும் வாழும் முடிவை திடமாக எடுங்கள் பிறகு ஏன்டா இங்கு வந்தோம் என மனம் வருந்தக்கூடாது நடக்கும் சம்பவங்களை வைத்து சொல்கிறேன் ஏனென்றால் வெளிநாடுகளில் வாழ்ந்து பழகியவர்களுக்கு சிறு சம்பவங்கள் கூட மன உளைச்சலை உண்டாக்கும்  பக்கத்து வீட்டுக்காரன் சொப்பினில் குப்பையை கட்டி நம்ம வாசலில் வச்சிட்டு போவான் கேட்டால் சண்டை பிடிப்பான் நீங்கள் நான் வச்சத பார்த்தீங்களா என்று

 

சனம் நடமாட்ட

காலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்

2 hours ago, suvy said:

அப்படி என்றால் அந்தக் கேட் உங்களுக்குத்தான். அதை  நீங்கள் கழட்டிக்கொண்டு போகலாம்....ஆனால் வீட்டுக்க வரக்கூடாது.....அது உங்கட கடைசி தங்கச்சிக்குத்தான்....அதைக் காட்டித்தான் மற்றக்  குமர்களையும் கரை சேர்க்க வேண்டும்......!   🔪

தங்கைக்கு வேறு வீடு சீதனமாக கொடுத்தாச்சு 😃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்

அங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை.

மேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார். 

என்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும். 

வீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும்.

ஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது. 

 

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தங்கைக்கு வேறு வீடு சீதனமாக கொடுத்தாச்சு 😃

அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு 
ஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை 
சக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார 
ரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு 
நன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா?
அல்லது அப்படி எண்ணுவது தவறா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 13:49, nilmini said:

பிரச்சனையான காலத்தில் நிறைய மோசடிகள் யாழ் எங்கும் நடைபெற்றது. இப்ப டவுண் பக்கம் ஏமாத்தி காணி வீடு பெயர் மாற்றுவது , விற்பது அவ்வளவு சுலபம் அல்ல. அத்துடன் அடிக்கடி கைமாறாத காணிகளை ஏமாற்றி மாத்தி எழுதுவதும் வைப்பதும் கஸ்டம் .அம்மா எனக்கு வீடு மாத்தி எழுத 4 முறை power attorney அனுப்ப வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒரு பிழை கண்டு பிடித்தார்கள்.உறுதி இல்லாதவர்கள் பக்கத்து காணி விபரங்களை குடுத்தால் உங்களது உறுதிகளின் பிரதியை பெற்றுக்கொள்ளலாம்.

இப்பத்து யாழில் வீடு கட்டுவது போன்ற தொழில் செய்பவர்களில் குடித்துவிட்டு வேலை செய்பவர்கள் தான் அதிகம். நிறைய ஏமாத்து வேலைகளும் நடக்குது. சிலபேர் ரோட்டு பெருபிப்பதற்காக தடை செய்யப்பட்ட நிலத்தில் களிமண் அல்லது temporary கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டுகிறார்கள் . ரோட்டு கட்டும்போது உடைத்துவிடுவதாக சொன்னால் சரியாம்.நான் இப்ப இரண்டு மாதங்களுக்கு முன் தான் நல்ல ஒரு bulider யை கண்டுபிடித்து plan எல்லாம் கீறி estimate போட்டு , பிறகு ஒரு agriculture officer யை பிடித்து தோட்டம் அமைக்க ஒழுங்கு பண்ணி வேலை தொடங்கும் நேரத்தில் Lockdown வந்திட்டுது. விரைவில் துடங்கலாம் என்று இருக்கிறேன். 100 வருட நாற்சார் வீட்டை அதன் பழமை மாறாமல் திருத்த  இந்த ஒரு builder தான் உடன் பட்டார். வீடு கட்டும்போதோ திருத்தும்போதோ கட்டாயம் நம்பிக்கையான ஒருவர் மேற்பார்வையில் தான் செய்ய வேண்டும். ஒருத்தரும் இல்லாதவர்களுக்கு கட்டிடம் காட்டும் பொது மேற்பார்வை பார்க்க, maintenance செய்ய என்று தனியாக ஆக்கள் இருக்கினம். UK இல் இருந்து போன ஒருவரும் எப்படி பொறுப்பெடுத்து செய்வதாக கேள்விப்பட்டேன்  வெளிநாடு என்று கேள்விப்பட்டாலே   எல்லாவற்றுக்கும் கட்டணம் கூடும். அதற்கு முழுப்பொறுப்பும் வெளிநாட்டில் இருந்து  போகும் நாம் தான் காரணம். அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் நாம். நான் எப்பொழுது போகும்போதும் எனது சுற்றங்களுக்கு விளங்கப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கு அது விளங்குவதில்லை.

யாருக்காவது தேவைப்பட்டால் விபரம் அறியத்தருகிறேன். வீட்டுக்குத்தேவையான  பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக அனுப்பவும் முடியும். புது பொருட்களாக பெட்டியில் இருந்தால் tax அடிப்பார்கள்.

Dual citizenship எடுக்க 1850 USD fees . அப்ளிகேசன்  போட 20$. மிச்சம் கிடைத்த  பிறகுதான் கொடுப்பது. நான்  டிசம்பரில் apply பண்ணினேன். ஒன்லைனில் பார்த்தபோது processing என்று போட்டிருக்கு.

நிறையப்பேர் குளிர் காலங்களில் மட்டும் ஊரில் இருந்துவிட்டு summer ற்கு  திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடர்ந்து அங்கு இருக்க நிறையபேருக்கு கஸ்டம் . உடல் நிலை சரியில்லாதவர்கள் போயிருப்பது என்பது மிகவும் கடினம். சிறு உடல்நல பிரச்சனைகள் என்றால் அங்கு நல்ல மருத்துவ வசதிகள் இருக்கு. நானும் போய் யாழ் மருத்துவ கல்லூரியில் கொஞ்ச காலம் பணியாற்றலாம் என்று யோசிக்கிறேன். சும்மா போய் இருப்பது மிகவும் கடினம். எத்தனையோ வகையில் எமது மக்களுக்கும் உதவுகிற மாதிரி ஏதாவது செய்யலாம் .

மற்றது அங்கு போய் இருப்பதானால் இந்த மொழிப்பற்று ,  விடுதலை உணர்ச்சி எல்லாவற்றையும் இங்கேயே விட்டுட்டு சந்தோஷமாக வாழ மட்டும் தான் போகவேண்டும். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். நான் அம்மாவிடம் சொன்னேன், வீடு வேலைமுடிந்ததும் ஒரு அலரி மரம் நட்டு  புத்த சிலை ஒன்றயும் தோட்டத்தில் வைக்கப்போகிறேன் என்று. அத்துடன்  சிங்களம் கதைக்கத்தெரிந்தாலும் இப்ப எழுத வாசிக்க கற்றுக்கொள்கிறேன் ( self-learning ). இது எனது பார்வையில் சரி என்று பட்டாலும் எல்லோரும் இதற்கு உடன்படமாட்டார்கள்.

சிங்களவர்கள் மீதோ சிங்கள மொழிமீதோ எமக்கு விரோதம் இல்லை 
எமது மண்ணில் அழிக்கப்படும் தமிழ் மொழியும்  தமிழ் உயிர்களும்தான் 
எமக்கு அடிப்படை பிரச்சனை. எமது மாவீர்கள் சிந்திய குருதியின் மணத்தை 
அதில் வாழும் மனிதர்கள் மறந்தாலும் அந்த மண் ஒரு போதும் மறக்கபோவதில்லை.
அது வெறும் மண்ணாக மட்டும் இல்லை எமது பாதி உயிராகவும் இருக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்களோ? அமெரிக்கர்களோ? எக்காலத்திலும் மாறப்போவதில்லை 
ஒரு சாரர்  கொஞ்சம் மனம் மாறி கொள்வார்கள் அதுவும் தமது வாழ்வை நிவர்த்தி செய்யும் ஒரு சுயநல போக்குதான். அவர்கள் சிங்கள ஆதிக்கத்தையோ வெள்ளையின வெறியையோ பெரிதாக எதிர்க்க போவதில்லை காரணம் அவர்களுக்கு அதில் லாபம் என்று ஏதும் இருக்க போவதும் இல்லை. 
இப்போதைய அமெரிக்க வெள்ளையின துவேஷிகள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? டிராம் அதிபராக வரும் முன்பும் அவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்போது வெளிப்படையாக வெளியில் வருகிறார்கள் அவளவுதான். 

உணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும் 
அதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே? 
சிங்கள ஆதிக்க வெறியாலும்  துரோகங்களாலும் எமது மண்ணும் மொழியும் நாளும் நாளும் 
பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

இங்கிருந்தும் ஒன்றும்  வெட்டி புடுங்க போவதில்லை அங்கு போய் நாலு சிங்களவருக்கு 
எடுத்து சொல்லி அவர்களாவது புரிந்துகொண்டால் பெரும் வெற்றி என்று நீங்கள் எண்ணுவதும் சரியானதுதான். 

வலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது 
குட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும் 
ஒரே மாதிரி வலித்திருந்தால் ...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும் 
என்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது. 

 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

உணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும் 
அதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே?

உண்மை தான்.

யாழ் நகர சந்தைப் பகுதிக்குச் செல்கிறேன்.  நயினாதீவுக்கு சென்றுவிட்டு திரும்பும் சிங்களக் குடும்பங்கள். அங்கு தான் கருவாடு முதலாய் நிறைய பனம்பொருட்களை வாங்குகிறார்கள். அவர்கள் சாதாரணமாகத் தான் நின்றார்கள். ஆனால் இரண்டு சிங்கள இராணுவத்தினர் சீருடையில் வந்தனர். ஒருவர் கையில் ஆயுதம். மற்றவர் உயர் அதிகாரி போலும். அவர் அந்தச் சிங்களவர்களோடு கதைத்து விட்டு நாங்கள் நின்று விலை பேசிக் கொண்டிருந்த கடைக்குள் நுழைகிறார். எந்த அனுமதியும் இன்றி அந்தக் கடைக்காரரிடம் அதிகாரத் தொனியில்.. விலைகளை விசாரிக்கிறார். கடைக்காரரும் பதறி அடிச்சுக் கொண்டு எங்களை கவனிப்பதை தற்காலிகமாக விடுத்து.. அந்த இராணுவ அதிகாரியையும் அவருடன் வந்த குலாமையும் கவனிக்கிறார். வெளிநாடுகளில் இப்படியான ஒரு நிகழ்வு நிகழின்.. நாமோ.. வெள்ளைகளோ சும்மா இருக்கமாட்டோம். கியூவில் நின்று வாங்கோ என்று தான் சொல்லுவோம். ஆனால்.. அங்கு அப்படியல்ல.

ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது ஹிந்திய இராணுவம் பொருட்கள் வாங்க வந்தாலும் இப்படி பொதுமக்களை இடித்துத்தள்ளிவிட்டு தாங்கள் முன்னுக்குப் போய் வாங்கியதை நான் கவனிக்கவில்லை. ஆனால் சிங்கள இராணுவத்திடம் யாழ் நகரில் பொருட்கள் வாங்கும்.. போது திமிர் அதிகம். ஆனால்.. இதனை கொழும்பில்.. தெற்கில் அவதானிக்க முடியவில்லை. அங்கு மக்களோடு மக்களாக கியூவில் நின்று தான் வாங்கிறார்கள்.

உண்மையில் அந்தச் சம்பவம் அடிமனதில் ஒரு ஆத்திரத்தை உண்டு பண்ணினாலும்.. அனாதரவான எம்மால்.. அதைத் தட்டிக்கேட்க முடியாத சூழல். பொறுமையாக நின்று அந்தக் கும்பல் பேரம் பேசிப் போன பின்.. நாங்கள் எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். அப்போது அந்த தமிழ் கடைக்காரர் சொன்னார்.. இது இப்ப இங்க சாதாரணம். சீருடையில்.. ஆயுத்தோடு வந்து அடிமாட்டு விலைக்கு கேட்பாங்கள். பயந்து கொடுப்பம் என்று. எங்களுக்கு கட்டுபடியாகாட்டி எப்படிக் கொடுக்கிறது. ஏதோ சொல்லிச் சமாளித்துவிடுகிறோம் என்றார்.

இப்படியான சூழலில்.. நிச்சயம் வெளிநாட்டில் இருந்து போகும் உணர்வாளர்களுக்கு கோபம் அடக்கமுடியாத அளவுக்கு எழும்.. கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.. ஊரில் இருக்க வேண்டின். ஏனெனில்.. எமது கோபத்தை அவர்கள் உணரும் வழிக்குக் காட்ட அங்கு நியாயமான வழியில்லை.. இப்போ. 

Edited by nedukkalapoovan
 • Like 1
Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

 

வலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது 
குட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும் 
ஒரே மாதிரி வலித்திருந்தால்
...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும் 
என்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது. 

கோடியில் ஒரு வார்த்தை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

Link to comment
Share on other sites

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்

வாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும் 😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும் 😉

இதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......!   🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

அங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை.

மேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார். 

என்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும். 

வீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும்.

ஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது. 

 

பார்ப்போம் எனக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளது என்று

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.

என் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள்  கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

 • Like 1
 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

பொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு 
ஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை 
சக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார 
ரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு 
நன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா?
அல்லது அப்படி எண்ணுவது தவறா? 

அப்படி எண்ணுவது தவறா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டதாக எண்ண முடியவில்லை. உங்களைப்போல் யோசித்ததும் இல்லை.

 

10 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

நான் யாழில் பொருட்கள் வாங்கிவிட்டு வரும்போது ஒரு வயதுபோன சிங்கள வியாபாரி ஒரு கூடையை என்முன் நீட்டி வாங்குபடி கூற நான் வேண்டாம் என்று நகர சிங்களத்தில் பெரிதாக எதோ திட்டிக்கொண்டேயிருந்தான். நான் திரும்பிப் பார்த்துவிட்டு பதில் கூறாது வந்தேன்.ஏனெனில் திட்டியது எனக்கு விளங்காதது. அடுத்தது நான் விடுமுறையில் சென்றிருந்தது. இன்றுவரை அவனைத் திருப்பித் திடடவில்லையே என்னும் ஆதங்கம் எனக்கு உண்டு.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும் 😉

உதெல்லாம் ஒரு விஷயமே இல்லை 😃

 

2 hours ago, suvy said:

இதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......!   🤔

நாம் எவர்க்கும் அஞ்சோம் 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள்  கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

வீட்டுக்கு வீடு வாசல் படி ....😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

சிங்களமும் இல்லை.... ஆங்கிலமும் இல்லை.... தமிழும் இல்லை.

கோதாரி பிடித்த காசு இருந்தால் எல்லா வேலையும் நடக்கும்....

கொழும்பில் ஒரு நண்பர்.... ஒன்றாக படித்தவர்... சிங்கள பெண்ணை கலியாணம் கட்டி உள்ளார். 

நானும், இன்னோரு நண்பரும் அவரது வீட்டுக்கு போயிருந்தோம். விஸ்கி.... மேல் வீட்டிலிருந்து ஒரு சுங்க அதிகாரி சிங்களவர் இணைந்தார்.

என்னுடன் கூட வந்த நண்பருக்கு.... இரட்டை குடியுரிமை விண்ணப்பம் இழுபட்டுக் கொண்டே போனது தொடர்பில் விசனத்துடன் பேசினார்.

கேட்டுக்கொண்டிருந்த சிங்களவர்.... அது ஒண்டும் பிரச்னை இல்லை.... எண்டு போனை போட்டு.... பேசி விட்டு... நாளைக்கு இந்த இடத்துக்கு போய்... இந்த ஆபிசரை பாருங்கோ என்று சொல்லி விட்டு... போகும் போது.... ஒரு விஸ்கி போத்தலுடன் போங்கோ என்று கண்ணடித்தார்.....

மறு நாளே அலுவல் முடிந்தது.

On 11/5/2020 at 01:32, உடையார் said:

இலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம் 

 

On 11/5/2020 at 03:40, nilmini said:

அதுதான் உண்மை 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

இதை வச்சே 10 கதை எழுதலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை வச்சே 10 கதை எழுதலாம்.

சரி உசுப்பேத்தியாச்சா? அக்காவின்ரை 10 நாள் நித்திரை கெட்டுது போ......:(

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பொது வேட்பாளருக்கான ஓட்டம் புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்றிட்டங்களை எதிரணிக்குள் இருக்கும் பல்வேறு தரப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. இவர்களுக்குப் போட்டியாக ராஜபக்‌ஷர்களை ஏற்கெனவே தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னை மீண்டும் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். ஆட்சியில் இருக்கும் தலைவருக்கு எதிராக, பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஓட்டத்தில், எப்போதுமே ஒருவர் அல்லது இருவரைச் சுற்றியே, எதிரணியும் சிவில் சமூக கட்டமைப்புகளும் ஒளிவட்டங்களை வரைய ஆரம்பிக்கும். ஐக்கிய தேசிய கட்சியின் இரு தசாப்தகால ஆட்சியைத் தோற்கடிப்பதற்காக, சந்திரிகா குமாரதுங்கவை எதிரணிகள் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டன. அவரை, சமாதானத்தின் தேவதையாகவே தென் இலங்கை முன்னிறுத்தியது. அதனை, வடக்கிலும் கிழக்கிலும் நம்ம வைக்கும் அளவுக்கான ஒருங்கிணைப்பு, எதிரணியிடம் அப்போது காணப்பட்டது. அதுதான், ஐ.தே.கவை சுமார் இரு தசாப்தகாலம், எதிரணியில் உட்கார வைக்கக் காரணமானது. 2002இல் ரணில், இரண்டு ஆண்டுகள் ஆட்சியைப் பிடித்தாலும், ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, ஆட்சியை ஆட்டி வைத்தார். பாராளுமன்றத்தைக் கலைக்கவும் செய்தார். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், ராஜபக்‌ஷர்கள் யுத்த வெற்றிவாதத்தில் திளைத்துக் கொண்டு நடத்திய தேர்தல்களில், தன்னால் வெற்றி பற்றி சிந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் ரணில், இன்னொரு யுத்த வெற்றி வீரரான சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக மாற்றினார். ராஜபக்‌ஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய இராணுவத் தளபதியை, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் பொது வேட்பாளராக தமிழ்த் தேசிய கட்சிகளை ரணில் ஏற்க வைத்தார். சிங்கக் கொடியை சம்பந்தன் ஏந்தி, பொன்சேகாவுக்காகப்  பிரசாரம் செய்யும் காட்சிகள் அரங்கேறின. தமிழ் மக்களும் அந்தத் தேர்தலில், பொன்சேகாவுக்கு ஓரணியில் திரண்டு வாக்களித்தார்கள். ஆனால், அப்போது பொது வேட்பாளர் யுக்தி வெற்றியளிக்கவில்லை. ரணில் தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காக பொன்சேகாவை பகடையாக்கினார். ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தன. அதுவும் தேர்தல் அறிவிக்கப்படும் இறுதி நாள்கள் வரையில், எதிரணி தயார்படுத்தும் பொது வேட்பாளர் யார் என்பதை, ராஜபக்‌ஷர்களுக்கு தெரியாமல், எதிரணியில் உள்ளவர்கள் மிக மிக இரகசியமாகப் பேணியமை, ராஜபக்‌ஷர்களின் தோல்விக்கு காரணமானது. அது, மாத்திரமல்லாமல், மஹிந்த ஆட்சியில் மிக முக்கியமான நபராக,  அனைத்து ராஜபக்‌ஷர்களாலும் மதிக்கப்பட்ட மைத்திரியை, அவர்களுக்கு எதிராகவே பொது வேட்பாளராகத் தயார்படுத்தியமை, தென் இலங்கை மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, முழு இலங்கையிலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. அது, ராஜபக்‌ஷர்களை தோற்கடிப்பதற்கான அலையை தோற்றுவிக்கவும் காரணமானது. நல்லாட்சி உருவாகவும் 18ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கவும் வித்திட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்தோடும் பகிரப்பட்டது. அதன்மூலம் ஜனநாயக ஆட்சிக்கான தத்துவம் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால், ஆட்சித் தலைவர்களாக இருந்த மைத்திரியும் ரணிலும் தங்களுக்குள் முரண்பட்டு, நல்லாட்சியை இடைநடுவில் போட்டுடைத்தபோது, ராஜபக்‌ஷர்களின் மீள்வருகை உறுதி செய்யப்பட்டது. 69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்று, மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்த போது, குறைந்தது ஒரு தசாப்தகாலத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி பற்றிய கனவைக் காணும் வாய்ப்பு இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால், அந்த நிலையை சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்கள் இல்லாமல் செய்தனர். இன்றைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். யார் யாரெல்லாம் ராஜபக்‌ஷர்களை நாட்டின் பாதுகாவலர்களாக முன்னிறுத்தினார்களோ, அவர்கள் எல்லாமும் நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களின் ஆட்சி, இப்படியே இன்னும் சில மாதங்களுக்கு நீடித்தால், நாடு முழுமையாகத் திவாலாகிவிடும் என்று தென் இலங்கை சக்திகள் நம்பத் தொடங்கிவிட்டன. இந்தக் கட்டத்தில் இருந்துதான், பொது வேட்பாளருக்கான ஓட்டம் சூடுபிடித்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களைத் தோற்கடித்துவிட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேயே அவர்களுக்கு ஆதரவளித்து, ஆட்சியில் பங்காளியாகிவிட்ட மைத்திரிக்கு, மீண்டும் பொது வேட்பாளராகும் ஆசை வந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளை விட, அரசாங்கத்தை அதிகமாக விமர்சித்து வருபவர் மைத்திரிதான். ஆனால், அவரது கட்சி இன்னமும் அரச பங்காளியாகவே இருக்கின்றது. கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, இறுதி நேரத்தில் தன்னைப் பொதுவேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் மைத்திரியிடம் இருக்கலாம். அவ்வாறான எண்ணம் அவரிடத்தில் இருப்பதை, ராஜபக்‌ஷர்கள் ஏற்கெனவே கண்டுகொண்டதால், அவரைத் தன்னுடைய முக்கிய அமைச்சர்களைக் கொண்டு, அதிகமாக விமர்சிக்க வைத்தனர். முன்னாள் ஜனாதிபதி, ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியின் தலைவர் என்கிற வரைமுறைகள் தாண்டி, மைத்திரியை நோக்கி, பாராளுமன்றத்தில் அமைச்சர்கள்  கைகளை நீட்டினார்கள். ஒரு கட்டம் வரையில் பொறுமை காத்த மைத்திரி, தனக்காக யாரும் வாதாட இல்லாத நிலையில், தானே தனக்காகக் களமாடத் தொடங்கினார். அதன் அடுத்த கட்டமாகத் தன்னைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் பணிகளைத் தொடங்கினார். ஆட்சியில் பங்காளிகளாக இருந்தாலும், தங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல, ராஜபக்‌ஷர்கள் நடத்துகிறார்கள் என்கிற வெப்பியாராம், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், முக்கியஸ்தர்களிடம் தொடர்ச்சியாக இருந்தது. அப்படியான நிலையில்தான், மீண்டும் மைத்திரியை பொது வேட்பாளராக்கும் திட்டத்துக்கு அவர்கள் வலுச் சேர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், மைத்திரி தன்னை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்த போதிலும், அவரை எதிர்க்கட்சிகள் எதுவும் சீண்டவே இல்லை. ஏற்கெனவே ஜனாதிபதியாகி, ஒரு கட்டத்தில் ராஜபக்‌ஷர்களிடம் ஆட்சியைக் கையளிக்க முனைந்தமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான சிக்கல் என, மைத்திரி மீதான அதிருப்தி, ஐக்கிய மக்கள் சக்தியிடம் நீடிக்கின்றது. அத்தோடு, தொடர்ச்சியாக நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாத ஒரு சிக்கலை, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தங்களது கட்சிக்கு வெளியில் இருந்து வேட்பாளர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. இந்தக் கட்டத்தைப் ஏற்கெனவே புரிந்து கொண்ட சம்பிக்க ரணவக்க, தான் அங்கம் வகித்த ஜாதிக  ஹெல உறுமயவிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.  சஜித் பிரேமதாஸவுக்கு பௌத்த பீடங்களிடம் செல்வாக்கு இல்லை. அந்தப் புள்ளியில் தன்னைப் பௌத்தத்தின் காவலனாக அடையாளப்படுத்துவது இலகுவானது. தென் இலங்கையில் கடும்போக்கு சக்திகள் தன்னை ஆதரிக்கும் என்கிற விடயங்களை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகலாம் என்பது  சம்பிக்க ரணவக்கவின் எதிர்பார்ப்பு. அதை முன்னிறுத்தியே, அவர் புதிய செயலணியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறார். ஆனால், சஜித் பிரேமதாஸ தனக்குப் பதிலாக இன்னோருவரை வேட்பாளராக ஏற்கும் நிலையில் இல்லை. ராஜபக்‌ஷர்கள் மீதான மக்களின் அபிமானம், பெரும் வீழ்ச்சிப் புள்ளியில் இருக்கின்ற நிலையில், அதைப் பயன்படுத்தாதுவிட்டால், என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவரது எண்ணம். அதை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் சரியாகச் செயற்படவில்லை என்கிற எண்ணம், கட்சியினரிடத்திலும் மக்களிடத்திலும் காணப்படுகின்றது. அது, இன்னொரு புறத்தில் சந்திரிகா குமாரதுங்கவை களத்தில் இறக்கியிருக்கின்றது. மைத்திரியைப் பொது வேட்பாளராக்கியதில் தன்னுடைய பங்கு இருந்ததைக் காட்டிலும், இம்முறை கிங்மேக்கராகத் தன்னை உயர்த்தும் கட்டத்தில் சந்திரிக்கா நிற்கிறார். அதற்காக, ஏற்கெனவே ராஜபக்‌ஷர்களால் பழிவாங்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துகிறார். அது தவிர, தென் இலங்கையின் முற்போக்கு சக்திகள், வழக்கமாகவே அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு 30 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஆரம்பித்திருக்கின்ற பொது வேட்பாளருக்கான ஓட்டம், எவ்வாறு முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ராஜபக்‌ஷர்கள் தற்போது வீழ்ச்சிப் பாதையில் இருந்தாலும், அவர்களைத் தோற்கடிப்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல; அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். முதலில், ஆளுமையுள்ள ஒருவரை எதிரணிகள் ஓரணியில் நின்று தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், ராஜபக்‌ஷர்கள் யுகம், இருண்ட யுகமாகத் தொடரும்.     https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொது-வேட்பாளருக்கான-ஓட்டம்/91-290044
  • நூறுகதை நூறு சினிமா: 58 – காதல் July 24, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் சினிமா தொடர்கள் சினிமா யதார்த்தம் என்பது எப்போதும் கேள்விக்குரியது நிஜநிகர் என்ற ஒன்று சினிமாவில் இல்லவே இல்லை. -க்ரிஸ்பின் க்ளோவர் சினிமா எதையும் பூடகமாய்ச் சொல்லும். நேரடியாகப் பேசுவதன் கடினத்தை அனாயாசமாகக் கையாளும். அது தனி மனிதர்களின்மீது எய்யப்படும் ஒற்றை அம்பைப்போலத் தோற்றமளித்தாலும்கூட நிசத்தில் அது கூட்டத்தின்மீது கட்டவிழ்க்கப் படுகிற கண்ணீர்ப்புகைக் குண்டினை ஒத்தது. சினிமா காலம் கடந்த பிற்பாடும் கேள்வியெழுப்பும். அது ஒரு நிழல் நீதி மன்றம். இயல்புக்கு அருகே சினிமா உருவாக்கம் வருகையில் நல்லதோர் யதார்த்தப் படம் உண்டாகிறது. எதிர்பார்ப்புக்கு மேலாக நிசத்தின் அருகே அமர்விக்கப்படுகையில் கண்ணுறும் ரசிகன் விதிர்விதிர்க்கிறான். மற்ற எந்தக் கலையின் விளைதல்களைவிடவும் சினிமா மூலமான பண்படுத்துதலுக்கான பலாபலன் அதிகம். மேலும் சினிமா மக்களுக்கு என்றென்றும் ப்ரியமான ஊடகம். அதனை விஞ்ச அடுத்தவோர் கலை இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம்.   சமூகம் விடாப்பிடிவாதத்தோடு பற்றிக் கொண்டிருக்கிற தவறான பிடிமானங்களினின்றும் மெல்லிய சேலையை முட்பரப்பினின்றும் சின்னதொரு கிழிசலும் ஏற்பட்டுவிடாமல் அகற்றுவதுபோலவே வெகுதூரம் அழைத்துச் செல்கிற வேலையைப் பண்பாடும் கலாச்சாரமும் நிரந்தர முழக்கங்களாக வைத்திருக்கின்றன. அப்படியான முழக்கங்களை மீண்டுமீண்டும் நிகழ்த்துவதற்கு உபயோகமாகும் தொடர்சாலையாகவே அடுத்தடுத்த சினிமாக்களின் வருகை தேவையாகிறது. மாபெரிய மாற்றத்துக்கு ஒற்றை சினிமா போதவே போதாது. சினிமா என்பது மறைமுகமாகவும் நேரடியாகவும் சரி மற்றும் தவறு ஆகிய இரண்டு தரப்புக்களை ஓங்கி ஒலிப்பதான பிரச்சாரத்தைவிடாமல் செய்தவண்ணம் இருந்தே ஆகவேண்டும் அல்லாமற்போனால் சமூகம் தன்மீது குறித்த காலங்களில் பெய்ய வேண்டிய குளிர்மழை அற்றுப்போய் வெம்மையின் உக்கிரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டி வரும். சாதிகளுக்கு இடையில் நிரந்தரமாய்ப் பேணப்பட்டு வருகிற பகையும் ஒவ்வாமையும் நாடெங்கிலும் சாதி ஆணவத்திற்குப் பலியானவர்களின் கண்ணீர்வற்றாத கதைகளும் சமூகத்தின் எல்லா மௌனங்களையும் எப்போதும் ஆட்சேபித்த வண்ணம் பல கலைகளின் மூலமாகவும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன. கலை என்பது ஒரு போராட்ட முறை. கலை என்பது கலகம். எல்லாவற்றுக்கும் மாறாகக் கலை என்பது இன்றளவும் தீர்ந்திடாத வழக்குகளின் மேல் முறையீடு. கலை என்பது சமரசத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திடாத கொள்கைவாதியின் வினா. ஒயின் ஷாப் அதிபரின் செல்ல மகள் ஐஸ்வர்யாவுக்கும் மெகானிக் முருகனுக்கும் இடையில் பதின்பருவத்தின் கடைவாசலில் அன்பு பூத்துக் காதலாகிறது. வழியற்ற வழியில் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுச் சென்னை செல்கின்றனர். பெண்ணின் உறவினர்கள் நைச்சிய மௌனத்தோடு புதுமணத் தம்பதியினரை அன்போடு அரவணைப்பதுபோல பாசாங்கு காட்டித் தங்களூருக்கு அழைத்து வருகின்றனர். முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை நெருங்கியவுடன் அவளது தாலி பறிக்கப்படுகிறது. அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்தவன் அடித்து நொறுக்கப்பட்டு அவனுடலில் உயிர் மட்டும் எஞ்சுகிறது. தான் யாரென்பதையே மறந்த முருகன் நினைவுகளை இழந்து மனம் பிறழ்ந்து வாழ்வு சிதைந்து பைத்தியமாய்க் காணக்கிடைக்கிறான். தன் கணவன் குழந்தை சகிதம் அந்தச் சாலையில் எதிர்ப்படும் ஐஸ்வர்யா முருகனின் நிலை கண்டு அழுதுவெடிக்கிறாள். காதல் திரைப்படம் முற்றுப்பெறுகிறது. பாலாஜி சக்திவேலின் படைப்பு நேர்மையும் சமரசம் செய்துகொள்ளாத உருவாக்கத் திறனும் காதல் படத்தை உலகளவிலான ஒன்றாக நிகழ்த்தின. ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் சார்பாக பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய காதல் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். நா முத்துக்குமாரின் எழுத்தில் உனக்கென இருப்பேன் சாகாவரப் பாடலாயிற்று. விஜய் மில்டன் ஒளிப்பதிவு உன்னதமான இருளாகவும் இயல்பான ஒளியாகவும் காணவாய்த்தது. தண்டபாணி க்ரூரமான வில்லனாகத் தோற்றமளித்தார். பரத், சந்தியா இருவருக்கும் இடையே உலர்மலராகக் காதல் காண்பவர் நம்பகங்களின் நிரம்பிற்று. சுகுமார் சரண்யா பசங்க சிவக்குமார் ஆகியோரும் குறித்த நடிப்பை நல்கிச் சிறந்தார்கள். சாதி ஆணவம் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் விட்டு அகல வேண்டிய காட்டுமிராண்டித் தனம். அடுத்தடுத்த காலத்திற்குத் தன் மனமறைபொருளாக சாதியை மேலெழுதி வருவதும் சின்னஞ்சிறிய பிஞ்சுகளின் மனதிலும் சாதி நஞ்சைவிடாமல் புகட்டிவருவதும் ஒப்புக்கொள்ளவே முடியாத செயல்பாடுகள். என்றைக்கு மனிதன் முழுவதுமாய் சாதியினின்றும் அகலுகிறானோ அன்றைக்குத்தான் இருளற்ற புதிய ஒளியை அவனடைவதாகப் பொருள். சாதியின் வன்மத்தை காதல் திரைப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக ஒளி பாய்ச்சிற்று.   https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறு-சினிமா-58-காதல/  
  • தனிமை – மாதா சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப்போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும்தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள்,ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றிவாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத்தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது.  18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய அளவில் ஏற்றம் கண்டன. சந்தைப்பொருளாதாரம் உருவாகி முதலாளித்துவத்தின் குழந்தையாக தனிமை பிறந்தது. கடந்த ஐம்பதுஆண்டுகளில் அதிகமான விவாகரத்துகளினாலும், பிறப்பு விகிதம் குறைவினாலும், கணவன்,மனைவி இருவரும் வெளியே வேலைக்குச் செல்வதாலும் தனியாக வாழும் நபர்களின் எண்ணிக்கைஉயர்ந்துகொண்டே வருகிறது. குடும்பம் சிதைவதாலும், சமுதாய நெருக்கடிகளாலும் சிலர்தனிமையில் வாழ்கிறார்கள். சக மனிதர்களிடமிருந்து விலகியோ, விலக்கி வைத்தோஇருப்பதிலிருந்துதான் தனிமை உருவாகிறது. செய்த பாவங்களுக்குத் தண்டனையாக கூட சிலர்தனிமையை நினைக்கிறார்கள். அவர்கள் நரகத்திலோ, சுடுகாட்டிலோ, பாலைவனத்திலோஇருப்பது போல் உணர்கிறார்கள். நகரங்களின் நெருக்கமும், இரைச்சலும் தனிமையை மேலும்வளர்க்கிறது.  தற்கால தனிமை என்பது மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பது மட்டுமல்ல, தனிமைமக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள், காதலி,காதலன் உடனிருந்தாலும் கூட சிலர் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறார்கள். சமூகத்தைப்பற்றிய பயமும் தனிமையை உறுதி செய்கிறது. மனதளவில் உறுதியானவர்கள் கூட தனிமைப்பட்டுதளர்ந்துவிடுகிறார்கள். மேலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனம் விரைவில்வெறுமையடைகிறது. தனிமை என்பது காரணம் தெரியாத உடல் நலக் குறைவா? நோயியலில் இருதயக் கோளாறு, நீரழிவு நோய், சிறுநீரகப் பிரச்சனை ஆகியவற்றை விட தற்காலத்தில் பொதுவாக அறியக்கூடியதுதனிமைதான். தொற்று நோயைப் போல பரவிவரும் தனிமை எவ்வாறு உருவாகிறது, அதைத்தீர்ப்பததற்கு வழி என்னவென்று பல முனைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். தனிமை என்பது ஒருஉணர்வு. ஒரு நிகழ்ச்சியில் நூறுபேர் இருந்து, அவர்களில் நமக்கு ஒருவருமே தெரியாமல்இருந்தால் நாம் தனிமையை உணர்கிறோம்.    சுமார் 1500 பேர் உங்கள் முகநூலில் இணைந்திருக்கலாம். அதில் பாதிப்பேருக்கு மேல் “லைக்” போட்டு உங்களை தொடர விரும்பாதவர்கள். மீதியுள்ளோர் பள்ளி கல்லூரித் தோழர்கள்,குறிப்பிட்ட அரசியல், சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள், திடீர் நண்பர்கள் ஆகியோர் இருக்கலாம். இவர்களிடம் நாட்டு நடப்புகள், சமூக நிகழ்வுகள், மேற்போக்கான குடும்ப விஷயங்கள், தன்னுடைய“சாதனைகள்” ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவர்களோடு இணையம் மூலம் உரையாடல்நடத்தலாம்;. ஆனால் இவர்களெல்லாம் நமக்கு அப்பால் இருப்பவர்கள். இது படிப்படியாக உயர்ந்துபின் போதையாக மாறிவிடுகிறது. இவற்றினால் தனிமையைப் போக்க முடியாது. தனியர்களுக்குசமூகப் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, இணைய தளம் அல்ல. ஒருவர் கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார். இருபது பேர் ஒரே வீட்டில் பழகுகிறார்கள். ஒன்றாகஉணவருந்துகிறார்கள். யாரிடமும் மனதளவில் உறவு இல்லை. மனம் விட்டு பேசமுடியாது. சமூகத்தோடு இணைந்து வாழமுடியவில்லை. இதுதான் தனிமை.     ஒருவர் தனியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் நேசிக்கிறார்கள். அவர் தனிமை கிடையாது.   உதாரணமாக ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் தனியாக சோதனை செய்கிறார். பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார். ஆனல் உலகம் முழுக்க அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர்நேசிக்கிறார்கள் அது தனிமை இல்லை. மனிதனின் ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான தனிமை உண்டு. ஒவ்வொரு தனிமையும் ஒரு வகை. தனிமை மானுடனின் இயல்பான நிலை எனப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தனிமைஇல்லாமலிருப்பது சிறுவர்களாக இருக்கும் போது மட்டும்தான். இளமைக் காலத்தில் நாம் ஓர்ஆழ்ந்த தனிமையை உணர்கிறோம். நண்பர்கள் சூழ  இருந்தாலும் அந்த தனிமை கூடவேஇருக்கிறது. அதைப் போக்குவதற்கு வாசிப்பும், செயல்பாடும் சிறந்த வழியாக இருக்கும்.   நாம் ஏன்செயல்பட வேண்டும்? இரண்டு விஷயங்களை நாடுகிறோம். ஒன்று நம் இருப்பை வெளிப்படுத்தசெயல்படுகிறோம்; நம்மை பிறருக்குத் தெரிவதும், அவர்கள் நம்மை மதிப்பதும்இன்றியமையாததாக உள்ளது. நாம் சிலவற்றை சிறப்புற செய்துகொண்டிருக்கிறோம் என்று நாம்உணர வேண்டியிருக்கிறது. அங்கீகாரம், மனநிறைவு இரண்டும் தனிமையை அகற்றுபவை.      என்னால் எங்கும் தனிமையாக இருக்க முடியும். எனக்குத் தனிமைதான் பிடிக்கும் என்று சிலர்சொல்லக்கூடும். கைபேசியும், இணையதளமும் இல்லாவிடில் அத்தகைய தனிமை அவருக்குகுட்டிச் சாவாக இருக்கும். பக்கத்தில் மனிதர்கள் இல்லாமல், வம்புகளில்லாமல் வாழவேமுடியாதவர்களாக இருப்பார்கள். சமூக வலைத் தளங்களில் வம்புகளைத் தேடியலைந்துகொண்டிருப்பார்கள்.  முதுமையில் குடும்பம் எனும் பொறுப்பு இல்லாமலாகி, உறவுகள் சற்று சம்பிரதாயமானவையாக ஆகிவிடுகின்றன. ஏனென்றால் அடுத்த தலைமுறை வாழும் உலகம் நாம் புரிந்துகொள்ளமுடியாததாக, அயலானதாக உள்ளது. இலக்கு இல்லாமல், செயற்களம் இல்லாமல் இருப்பதன்சலிப்பு தனிமையை உருவாக்குகிறது. சிலர் அரசியல், சாதி, மதச் செயல்பாடுகள், குடும்பசிக்கல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள். மனதிற்குப் பிடித்தஏதாவது ஒரு துறையில் சேவையில் ஈடுபடுவது தனிமையை இல்லாமலாக்கும். இத்தனிமையின்விளைவான சோர்வை அழித்து ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும். இதில் மாற்றம் இல்லாதவர்கள்அன்றாடத்தில் சலிப்புறுகிறார்கள். குடி உட்பட சிக்கலில் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.       உலகில் உள்ள முதியவர்களில் பத்தில் ஒருவர் இந்தியாவில் உள்ளார். இதில் பாதிப் பேர்தனிமையில் வாழ்கிறார்கள். வறுமை, நோய், தனிமை ஆகியவை பெரும்பாலான முதியவர்களைப்பீடித்திருக்கிறது. இந்த மூன்றில் மனரீதியாக அதிக துயரமளிப்பது தனிமையே. பிள்ளைகள் விலகிவெளிநாடுகளுக்கு, வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். குடும்பத்தில் இருக்கும்போதே மரியாதைக் குறைவாக நடத்துதல், கவனிப்பு இன்மை, அலட்சியம் போன்றவைகள்உளவியல் ரீதியாக ஒரு மனிதனுக்கு தனிமை உணர்வை உருவாக்குகின்றன. எண்ணங்களைப்பகிர்ந்துகொள்ள முடியவில்லை. உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க முடியாமல்தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் தங்களைப் புதைத்துக் கொள்கிறார்கள். குடும்பத்திலும்,வெளியிலும் அவமானங்கள் வருகின்ற போது எதற்காக இந்த உசிரை வச்சிக்கிட்டு இருக்கனும். செத்துத் தொலைக்கலாம் என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் குடிபோதைக்கு அடிமையாகிதங்களை அழித்துக் கொள்கிறார்கள். சிலருக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது. இலக்கியத்தில் தனிமையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 1667ல் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கம் என்ற கவிதைத் தொகுப்பில் தனிமையைப் பற்றிவிவரித்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் தனிமையைப் பற்றி முதன்முதலாக வந்த செய்தி இதுதான் என அறியப்படுகிறது. ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் எழுதிய, உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான “பந்தயம்”என்ற கதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தனிமைப்பட்டு, கதைமுடிவில் பணம் பெரிதல்ல, தனிமனித வாழ்க்கையும், சுதந்திரமுமே முக்கியம் என்பதைகதாபாத்திரத்தின் மூலம் செகாவ் வெளிப்படுத்தியிருப்பார். தனிமையில் இருந்த காலத்தில் அந்தமனிதன் உலக இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் வாசித்தே தனிமையைவீழ்த்தியிருப்பான். தனிமையில் வாழ்ந்து வரும் பேக்கரி உரிமையாளரான ஒரு முதிர்கன்னி, தனது வாடிக்கையாளர் ஒருவருடன் ஒரு தலைக் காதல் ஏற்பட்டு, எதிர்பாரா முடிவாக அக்காதல் தோல்வியில் முடியும். பின்னர் அப்பெண் தனது வாழ்வாதாரமான பேக்கரித் தொழிலையும், அதன் தொடர்ச்சியானஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனிமையை வெல்லுவாள் என ஓ.ஹென்றி “சூனியக்காரியின் ரொட்டித்துண்டு” என்ற கதையில் விவரித்திருப்பார்.    தமிழில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய “தனிமை” என்ற சிறுகதையில், வயதான தாயாரை தனமையில்விட்டுவிட்டு, அவளுடைய இரண்டு பெண் மக்கள் வேலை தேடி வெளிநாடு சென்று விடுகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் வந்து விசாரித்து விட்டு, வளர்ப்பு மகளான நானே எனது பெற்றோரைவிட்டுப் பிரிவதில்லை. பெற்ற மகள்களான அவர்கள் ஏன் உங்களைத் தனிமையில் விட்டுச்சென்றார்கள் என்று கேட்பாள். தனிமை எவ்வாறு உருவாகிறது என்பதை கதாசிரியர் விரிவாகச்சொல்லியிருப்பார்.    தனிமை மன அழுத்தத்தை தணிக்கும் என்பது திசை திருப்பும் முயற்சியே. தனிமையின் சோகம்சரிசெய்யக்கூடியது தான். காலத்திற்கு காலம் தனிமை மாறுபடுகிறது. நவீன கால தனிமையைப்போக்குவதற்கு பல வழிகள் திறந்திருக்கின்றன. அதே வேளையில் பலரும் நினைப்பது போலகேளிக்கைகள், பொழுது போக்குகள் எவருக்கும் தனிமையைப் போக்குவதில்லை. நாம் வாழ்நாள்முழுக்க ஓய்வு, கேளிக்கைக்காக ஏங்கியிருந்திருப்போம். ஆகவே முதிய வயதில் முழு நேரமும்ஓய்வும், கேளிக்கையுமாக வாழ வேண்டுமென்று கற்கனை செய்திருப்போம். ஆனால் அதிகம்போனால் ஓராண்டு அவ்வாறு ஈடுபட முடியும். அதன் பின் சலிப்பே எஞ்சும். ஏனென்றால்கேளிக்கையில் நாம் பார்வையாளர்கள். எந்த வகையிலும் பங்கேற்பாளர்கள் அல்ல. வெறும்பார்வையாளர்களாக இருப்பதில் செயலின்மை உள்ளது. மானுட உடலும், உள்ளமும் செயலுக்காகவடிவமைக்கப்பட்டவை. செயலின்மையால் சோர்வும், சலிப்பும் அடைபவை. மற்ற ஈடுபாடுகளுடன்ஒப்பிடுகையில் வாசிப்பு மிக மேலானது. ஏனென்றால் அதில் நமது பங்கேற்பு இல்லாமல் முடியாது. வாசிப்பையொட்டி எழுதவும் ஆரம்பித்தால் அது செயற்களமே. ஆனால் அது அனைவராலும்செய்யக்கூடியது அல்ல.  இலக்கிய வாசிப்பு மன அழுத்தத்தை, வெறுமையைக் குறைத்து, கதையில் உலவும்பாத்திரங்களோடு உரையாட வைக்கிறது. கதையோடு இணைந்து புத்தகம் வாசிப்பவரும் புதியவாழ்க்கையை வாழ முடியும். நேருக்கு நேர் உரையாடலும், எழுதுதலும் மனிதரின் தனிமையைக்குறைக்கும். வாசிப்பதினால் உலகில் எப்போதும் தனிமையை பொழுது போக்கு அம்சமாகவே நாம்உணரலாம். வாசித்த இலக்கியக் கதாபாத்திரங்களின் அனுபவங்களை நம் அனுபவங்களாகஉணர்ந்து, அதன் நாயகர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அது அளிக்கும்வெவ்வேறு உலகங்களில் நாம் மானசீகமாக வாழலாம்.                              https://bookday.in/thanimai-article-by-matha/    
  • வேப்பவெட்டுவான் வீதி மண்கொள்ளையர்களின் தலைவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் பங்கு என்ன?  இதற்குத்தானா பிள்ளையானை தெரிவு செய்தோம்?   
  • நித்திரை கொள்ளேக்கயும் காலாட்டிக்கொண்டு இருக்கவேணும்.. இல்லாட்டி அடக்கம் பண்ணிப்போடுவாங்கள்.. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.