• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

5 hours ago, Nathamuni said:

கேட்டுக்கொண்டிருந்த சிங்களவர்.... அது ஒண்டும் பிரச்னை இல்லை.... எண்டு போனை போட்டு.... பேசி விட்டு... நாளைக்கு இந்த இடத்துக்கு போய்... இந்த ஆபிசரை பாருங்கோ என்று சொல்லி விட்டு... போகும் போது.... ஒரு விஸ்கி போத்தலுடன் போங்கோ என்று கண்ணடித்தார்.....

மறு நாளே அலுவல் முடிந்தது.

விஸ்கி போத்தல்கள் கொஞ்சம் வேலை செய்யும்தான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 11/5/2020 at 06:51, nedukkalapoovan said:

மிகவும் நல்ல விடயங்கள். எனக்குத்தெரிந்த ஒரு பத்திரிகையாளர் நண்பி நிறய குடும்பங்களை சந்தித்து பேட்டி எடுத்து பத்திரிககைகள் மற்றும் humans of Jaffna என்று முகநூலிலும் நிறய போட்டிருந்தவ. அத்துடன் எமது பிள்ளைகளுக்கு ஆங்கிலம்  படிக்க, Professional development , personal development , வெளிநாடுகளில் எவ்வாறு scholarship எடுத்து படிப்பது என்பனவும் பிரயோசனமாக இருக்கும். கைதடியில் அழகான ஒரு Siddha Teaching Hospital hospital இருக்கு. அங்கு போய்  நிறைய மூலிகைகளின் படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். அது Government subsidized hospital . நன்றாக பராமரிக்கிறார்கள். ஆனால் எமது சனம்  ஒண்டும் அங்க போய் தமது நிறய நோய்களுக்கு  நிரந்தர தெரிவு காணாமல் ஆஸ்பத்திரியில் போய் தற்காலிக நிவாரணம் தரும் மருந்துகளையே எடுக்கிறார்கள். இப்படி யாரும் போகாவிட்டால் விரைவில் மூடி விடுவார்கள். அத்துடன் வடக்கில் தொடங்கப்படும் இவ்வாறான முயற்சிகள் பெரிய அளவில் தொடங்கப்படுவதில்லை. அல்லது போதிய ஆதரவு மக்களிடம் இருந்து கிடைப்பதில்லை. அதனால் பெரிய அளவில் அவைகள் வளருவதும் இல்லை நிலைப்பதும்  இல்லை. எனக்கு இப்படி ஒரு விருப்பம் இருப்பதால் இவற்றை பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன். சரசாலை  பறவைகள் சரணாலயம் நிறைய பறவைகள் வந்து தாங்கும் இடம். அதனை மேலும் பெருப்பிக்கலாம் . மன்னார்  வங்காலை சரணாலயமும் பெரிய நிலப்பரப்பில் இருக்கு. ஆனால்  கவனிப்பு இல்லை .

Edited by nilmini
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
17 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

பிக்பாக்கெட் காரன் போல இருக்கிறது.

ஏனய்யா தமிழனாக இருக்க வேண்டும். இவர்களுடன் எக்காரணம் கொண்டும் சிங்களத்தில் பேசக் கூடாது. 

மீசை இல்லாமல், ஆங்கிலத்தில் பேசுங்கள்.... தள்ளி நின்று கொள்வார்கள்.

நான் கொழும்பில் இருந்த படியால் இவர்களை அறிவேன்.

நீங்களும் போனைப் எடுத்து, உங்கள் நண்பர் ஒரு போலீஸ் அதிகாரியின் பேசுவது போல, இங்கே ஒரு பிக்பாக்கெட் காரன் மாட்டி விடடான். உடனே வாருங்கள் என்று பிளேட்டினை மாத்திப்போடிருந்தால், நழுவி ஓடி இருப்பான்.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, suvy said:

இதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......!   🤔

எலி போல நான் டெஸ்டிங் செய்கிறேன் அண்ண மீதமானவர்கள் கவனமாக செயற்பட்டால் நல்லது 

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதெல்லாம் ஒரு விஷயமே இல்லை 😃

ஹாஹா  சும்மா பகிடிக்கு எழுதினன் யாழ் உறவுகளை காண்பதில் மகிழ்ச்சி அதுவும் ஊரில என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

சும்மா வயித்தெரிச்சலை ஏன் கிளப்புறியள் 😌

4 hours ago, சுவைப்பிரியன் said:

இதை வச்சே 10 கதை எழுதலாம்.

உங்களுக்கு விளங்குது 😂

4 hours ago, குமாரசாமி said:

சரி உசுப்பேத்தியாச்சா? அக்காவின்ரை 10 நாள் நித்திரை கெட்டுது போ......:(

அக்காவா ??????   😀😀

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எலி போல நான் டெஸ்டிங் செய்கிறேன் அண்ண மீதமானவர்கள் கவனமாக செயற்பட்டால் நல்லது 

ஹாஹா  சும்மா பகிடிக்கு எழுதினன் யாழ் உறவுகளை காண்பதில் மகிழ்ச்சி அதுவும் ஊரில என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி

🤓

Share this post

Link to post
Share on other sites
On 11/5/2020 at 15:19, nedukkalapoovan said:

இப்படியான சூழலில்.. நிச்சயம் வெளிநாட்டில் இருந்து போகும் உணர்வாளர்களுக்கு கோபம் அடக்கமுடியாத அளவுக்கு எழும்.. கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.. ஊரில் இருக்க வேண்டின். ஏனெனில்.. எமது கோபத்தை அவர்கள் உணரும் வழிக்குக் காட்ட அங்கு நியாயமான வழியில்லை.. இப்போ. 

இப்படியான சந்தர்ப்பங்களில் எமது மண்ணிலேயே நாம் இரண்டாம் தர குடிமகனாக உணரவேண்டி இருக்கும். இப்படியான சந்தர்ப்ப சூழ் நிலைகளில் நான் என்னையே ஆறுதல் படுத்திக்கொள்வேன் . எல்லாம் ஒரு வட்டம். இன்றைக்கு அவன் காட்டில் மழை . 

21 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அநேகமாக காசு களவெடுக்கத்தான் அப்படி நிண்டிருப்பான் 

Share this post

Link to post
Share on other sites
On 11/5/2020 at 07:55, குமாரசாமி said:

அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.

ஆ இது நீங்களா உங்கடை தங்கச்சியா எழுதியது?
வழமையில் ரதியிடமிருந்தே இப்படியான கேள்விகள் வரும்.

Share this post

Link to post
Share on other sites

முன் பக்கம்

E948-F84-F-85-A1-4-E75-8-DE8-119-F6-E1-B

பின் பக்கம்

90347-DC1-1-D54-465-D-AE4-C-E89-A1-AF4-B
மேலே உள்ளது தான் எனது வீடு.95 இல் நடந்த சண்டையின் போது மிகுந்த சேதாரமடைந்தது.முக்கியமான சில வேலைகளை செய்து வைத்தேன்.அந்த நேரம் மாமா(மனைவியின் தகப்பனார்)இருந்தபடியால் பணத்தை அனுப்பி செய்யக் கூடியதாக இருந்தது.இப்போ அவர் இல்லை.
             2015 17என்று இரு தடவைகள் 70 நாட்கள் விடுமுறையில் போய் நின்றேன்.வீடு வளவைப் பார்க்க கண்கள் குளமாகின.17 இல் வீடு திருத்தவென்றே போனேன்.சரியான ஆக்களை பிடிக்க முடிவில்லை.நான் நின்று செய்யுமாப் போல செய்ய ஆளுமில்லை.
              ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, ஈழப்பிரியன் said:

emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள்.

அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள்.

நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை.

ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது.

அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்)

எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை.

இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே....

சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை  திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை.

இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். 

அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது?

அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
 
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள்  கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

9 hours ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

ஒரிஜினல் பேரிலை இருந்து கொண்டு, துணிவா குடும்ப விசயங்களை, பிடுங்குப்பாடுகளை எழுதுறதோ?

கடவுளே இனி என்ன பிரச்னை வரப்போகுதோ தெரியவில்லை. புதுசா உறுப்பினர்கள் ஆக சேர்ந்து.... ஆச்சோ, போச்சோ....அப்படியே, இப்படியே.... நாங்கள் வாசிக்க மாட்டம்... எங்களுக்கு தெரிய வராது எண்டு சும்மா எழுதுவதோ.... 40 லட்ச்சத்துக்கோ தந்தனியளோ? 

என்ன கத இது.... உங்களுக்கு எங்க காணி, வீடு இருந்தது.. சொல்லங்கோ பார்ப்பம்... இது எண்ட பூட்டன்... மலேசியன் பெஞ்சனியர் தந்தது.... எண்டு வந்து நிக்காம இருந்தால் சந்தோசம்.... 😎🤑

என்ன சாமியார்.... நான் சொல்லுறது சரியே? 
 
Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, Nathamuni said:

பிக்பாக்கெட் காரன் போல இருக்கிறது.

ஏனய்யா தமிழனாக இருக்க வேண்டும். இவர்களுடன் எக்காரணம் கொண்டும் சிங்களத்தில் பேசக் கூடாது. 

மீசை இல்லாமல், ஆங்கிலத்தில் பேசுங்கள்.... தள்ளி நின்று கொள்வார்கள்.

நான் கொழும்பில் இருந்த படியால் இவர்களை அறிவேன்.

நீங்களும் போனைப் எடுத்து, உங்கள் நண்பர் ஒரு போலீஸ் அதிகாரியின் பேசுவது போல, இங்கே ஒரு பிக்பாக்கெட் காரன் மாட்டி விடடான். உடனே வாருங்கள் என்று பிளேட்டினை மாத்திப்போடிருந்தால், நழுவி ஓடி இருப்பான்.

4 hours ago, nilmini said:

இப்படியான சந்தர்ப்பங்களில் எமது மண்ணிலேயே நாம் இரண்டாம் தர குடிமகனாக உணரவேண்டி இருக்கும். இப்படியான சந்தர்ப்ப சூழ் நிலைகளில் நான் என்னையே ஆறுதல் படுத்திக்கொள்வேன் . எல்லாம் ஒரு வட்டம். இன்றைக்கு அவன் காட்டில் மழை . 

மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அநேகமாக காசு களவெடுக்கத்தான் அப்படி நிண்டிருப்பான் 

நான் இருந்த மனநிலையோ வேறு, இரு மகன்களுக்கு Dehiwala  யில் நின்றபோது டெங்கு வந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்திருந்தேன், இரவு பகல் நான் தான் வைத்தியசாலையில், இடையில் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தபோதுதான் இந்த தள்ளு முள்ளு,

நான் களைப்படைந்திருந்ததை கவனித்து நீங்கள் சொன்னமாதிரி பிட்பக்கட் அடிக்க வந்திருக்கலாம். என் பிழை சிங்களத்தில் கதைத்தது. ஆங்கிலத்தில் கதைத்திருக்கனும். 

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, உடையார் said:

இந்தமாதிரி கேசுகளுக்கு ஆங்கிலம்தான் சரி. தமிழர்களிலும் பார்க்க சிங்களவர் தான் ஆங்கிலத்தை கண்டு நடுங்குவார்கள். 

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Nathamuni said:

emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள்.

அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள்.

நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை.

ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது.

அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்)

எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை.

இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே....

சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை  திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை.

இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். 

அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது?

அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
 
நன்றி நாதம்.
இலங்கைக்கு போக முதலே இருந்த எண்ணம் வேறு இரு தடவை போனபின் இருக்கும் எண்ணம் வேறு.
ஐரோப்பாவிலிருந்து இலங்கை போவது போல அமெரிக்காவிலிருந்து போக முடியாது.பயணம் செய்யும் நேரமே ஆளை கொன்றுவிடும்.
       இன்னும் கொஞ்ச காலத்துக்கிடையில் வீடு திருத்தாவிட்டால் இடித்து தான் கட்ட வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites
On 6/5/2020 at 22:40, Kapithan said:

1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ☹️)

தவறு நிகழக் கூடிய இடங்கள்.

உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி

1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர்.

2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம்.

3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை

எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிறேன். தவறுகளிருப்பின் விடயமறிந்தவர்கள் தாராளமாகத் திருத்தலாம்.  😀

வதிவிட உரிமையைப் பெற இரண்டு வழிகளுண்டு.

1) 2.5 மில்லியன் ரூபாய்களை வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் (?) நீண்டகால வைப்பிலிடல். 

2) கல்வி அடிப்படையிலான அனுமதி

இரட்டை பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு யாருக்கும் சொல்லாமல் காணி வாங்கி உங்கள் பெயரில் எழுதலாம் பிறகு காணியைக்காட்டி இலகுவாக பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு நல்ல சட்டதரணி இலங்கையில பிடித்தால் சரி ஆண்கள் நல்லம் பெண் சட்டதரணிகள் கடிதம் எழுதவே 15000 ரூபா கேட்கினம் வெளிநாட்டுக்காரன் தானே 

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, Nathamuni said:

ஒரிஜினல் பேரிலை இருந்து கொண்டு, துணிவா குடும்ப விசயங்களை, பிடுங்குப்பாடுகளை எழுதுறதோ?

கடவுளே இனி என்ன பிரச்னை வரப்போகுதோ தெரியவில்லை. புதுசா உறுப்பினர்கள் ஆக சேர்ந்து.... ஆச்சோ, போச்சோ....அப்படியே, இப்படியே.... நாங்கள் வாசிக்க மாட்டம்... எங்களுக்கு தெரிய வராது எண்டு சும்மா எழுதுவதோ.... 40 லட்ச்சத்துக்கோ தந்தனியளோ? 

என்ன கத இது.... உங்களுக்கு எங்க காணி, வீடு இருந்தது.. சொல்லங்கோ பார்ப்பம்... இது எண்ட பூட்டன்... மலேசியன் பெஞ்சனியர் தந்தது.... எண்டு வந்து நிக்காம இருந்தால் சந்தோசம்.... 😎🤑

என்ன சாமியார்.... நான் சொல்லுறது சரியே? 
 
நான் பொய் எழுதாதபடியால் பயப்படேல்லை

11 hours ago, ஈழப்பிரியன் said:

முன் பக்கம்

E948-F84-F-85-A1-4-E75-8-DE8-119-F6-E1-B

பின் பக்கம்

90347-DC1-1-D54-465-D-AE4-C-E89-A1-AF4-B
மேலே உள்ளது தான் எனது வீடு.95 இல் நடந்த சண்டையின் போது மிகுந்த சேதாரமடைந்தது.முக்கியமான சில வேலைகளை செய்து வைத்தேன்.அந்த நேரம் மாமா(மனைவியின் தகப்பனார்)இருந்தபடியால் பணத்தை அனுப்பி செய்யக் கூடியதாக இருந்தது.இப்போ அவர் இல்லை.
             2015 17என்று இரு தடவைகள் 70 நாட்கள் விடுமுறையில் போய் நின்றேன்.வீடு வளவைப் பார்க்க கண்கள் குளமாகின.17 இல் வீடு திருத்தவென்றே போனேன்.சரியான ஆக்களை பிடிக்க முடிவில்லை.நான் நின்று செய்யுமாப் போல செய்ய ஆளுமில்லை.
              ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

உங்களுக்கு அங்கே போய்  இருக்க ஐடியா இருக்கோ அண்ணா

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் பொய் எழுதாதபடியால் பயப்படேல்லை

பொய் சுடாது...

உண்மையாயின். பொது வெளியே பகிராதீர்கள்.

நான் ஒரு உண்மையை சொன்னால், சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், யாழ் ஆ... நான் கேள்விப்படவேயில்லை... என்னது யாழ்ப்பாணம் பத்தினதோ எண்டு கதை விட.... நாதமுனியெண்டு.... என்றே தொடங்க மாட்டினம்....

உங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆகவே உண்மையை சொல்கிறேன் என்று பொது வெளியே குடும்ப கதையினை சொல்லாதீர்கள்....

சரிதானே அக்கா... 

Edited by Nathamuni
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, ஈழப்பிரியன் said:

 ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

பிற்காலத்தில் போய் வாழ்றதுக்கு நல்ல இடம். 
அங்கேயே போய் இருந்தால்  6 - 12 மாதத்துக்குள்ள சோலையா மாத்திடலாம். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு அங்கே போய்  இருக்க ஐடியா இருக்கோ அண்ணா

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, nilmini said:

நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.

நில்மினி சொன்னா நம்பமாட்டீங்க எமது வளவுக்கு பெயரே தோப்பு.

போய் இருக்காவிட்டாலும் வீடு திருத்தியே ஆகவேண்டும்.இதற்காக பலருடனும் கதைத்தேன்.வெளிநாட்டினர் என்று தெரிந்தவுடன் மனச்சாட்சி இன்றிய விலைகள்.
சரி செய்த வேலைகளைப் பார்த்தா சொதப்பல்.
நீங்கள் நல்லதொரு கட்டடக்காரரை பிடித்திருப்பதாக சொன்னீர்கள்.இவை பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமென எண்ணியுள்ளேன்.

6 hours ago, Kali said:

பிற்காலத்தில் போய் வாழ்றதுக்கு நல்ல இடம். 
அங்கேயே போய் இருந்தால்  6 - 12 மாதத்துக்குள்ள சோலையா மாத்திடலாம். 

காளி இரண்டு தோணியில் பயணம் செய்த மாதிரி தான் எனது நிலை.

இலங்கைக்கு போக முதல் இரட்டை பிரஜாவுரிமை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அங்கே இரு தடவை போய் வந்த பின் அந்த எண்ணமே இல்லை.(எப்பவும் மாறலாம்).

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

நில்மினி சொன்னா நம்பமாட்டீங்க எமது வளவுக்கு பெயரே தோப்பு.

போய் இருக்காவிட்டாலும் வீடு திருத்தியே ஆகவேண்டும்.இதற்காக பலருடனும் கதைத்தேன்.வெளிநாட்டினர் என்று தெரிந்தவுடன் மனச்சாட்சி இன்றிய விலைகள்.
சரி செய்த வேலைகளைப் பார்த்தா சொதப்பல்.
நீங்கள் நல்லதொரு கட்டடக்காரரை பிடித்திருப்பதாக சொன்னீர்கள்.இவை பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமென எண்ணியுள்ளேன்.

என்ன செய்வது அண்ணா ? அநேகமான வீட்டில் இருக்கும் மரங்களையுமே பராமரிக்க ஆட்களுக்கு பஞ்சி. எமது வீட்டில் பாக்கு , மா, கொய்யா, தென்னை எல்லாவற்றயும் வெட்டி போட்டார்கள். திரும்ப செய்யலாம் தானே? Dwarf சாதி மரங்கள் நடலாம். நான் ஒரு Agriculture officer உடன் கதைத்து வைத்திருக்கிறேன். வீடு கட்டு engineer அவரே Design , plan , building பொறுப்புக்களை எடுத்துள்ளார். இப்ப curfew வுக்கு பிறகு என்னும் வேலை தொடங்கவில்லை. முதல் கட்ட வேலைகள் 1 மாதத்துக்குள் செய்யலாம் என்கிறார். அதை பார்த்துவிட்டு உங்களுக்கு recommend விளக்கமாக எழுதுகிறேன்   விளக்குகிறேன். 

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

அண்ணா வீட்டை வடிவாகத் திருத்திவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுங்கள்.நான் எனக்கு விரும்பிய மரங்கள் நாட்டு சோலையாக்கினதுமாகும்.😃 வீடும் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் இடையிடையில்வந்து தாங்கிப் போகலாம். அதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா வீட்டை வடிவாகத் திருத்திவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுங்கள்.நான் எனக்கு விரும்பிய மரங்கள் நாட்டு சோலையாக்கினதுமாகும்.😃 வீடும் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் இடையிடையில்வந்து தாங்கிப் போகலாம். அதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

கந்தர்மடப்பக்கம்....

அது நல்ல ஐடியா..... வீட்டினை திருத்தி.... வாடகைக்கு கொடுப்பது.... இடையிடையே போய் வந்தால் சரி....

ஆனால் சொந்தக்காரர்களை அமர்த்தாமல், ஓரளவு தெரிந்தவர்களை வைத்து உங்களுக்கும் ஒரு ரூமை அட்டாச் பாத்ரூமுடன் கட்டினால் நல்லது. (lawyer மூலம் அக்ரீமெண்ட் போடணும் )

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய பிரச்னை.... sewage  சிஸ்டம் இன்னும் இல்லை. எப்ப வருமோ தெரியாது. அதுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐடியா இருப்பதாக தெரியவில்லை.

கந்தர்மடத்தில் உள்ள எனது வீட்டினை, திருத்தி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு கொடுக்கும் ஐடியா.... சிங்கள மாணவிகள்.... நல்ல பாதுகாப்பான வீடுகள் தேடி அலைகிறார்கள்...

தமிழ் சிறியர் இப்ப... நாடில கை வைத்து யோசிப்பார்... ' அட நல்ல ஐடியா...'

நில்மினி.... உங்கள் ஆலடி சந்தி வீடு, சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?

Edited by Nathamuni
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, Nathamuni said:

கந்தர்மடப்பக்கம்....

நில்மினி.... உங்கள் ஆலடி சந்தி வீடு, சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?

வணக்கம் நாதமுனி.

எனது மாமா மட்டும் தான் (தனி ஆள்) இருக்கிறார். பழைய நாற்சார வீடுதானே  என்று மடம் மாதிரி உறவினர், தெரிந்தவர் என்று எல்லோரும் மாசக்கணக்காக நின்று செல்வார்கள். இப்பதான் என்ர கைக்கு வந்திருக்கு. Vintage home மாதிரி திருத்தி அம்மம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே கொண்டுவரவேணும் என்று ஒரு ஆசை. பழைய தளபாடங்கள் யாரவது விற்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள் யாழ் உறுப்பினர்களே. கல்லுப்பாரமாக இருந்த தளபாடங்களே களவாடப்பட்டுவிட்டது .

சிங்களப்பிள்ளைகள் அதுவும் பெண் பிள்ளைகளுக்கு கொடுப்பது நல்ல யோசனை. எனக்கு Airbnb  க்கு  கொடுக்கும் ஐடியா இருக்கு. அதுக்கு மேற்பார்வை பார்க்க ஆக்கள் இருந்தால் மட்டுமே சரிவரும். ஆனால் நல்ல வருமானம் வரும். நானே சிலவேளை யோசிப்பதுண்டு. எமது வீட்டுடன் சேர்த்து எனது மச்சாள் மாரின் வீடுகளையும் Airbnd க்கு கொடுத்து பராமரித்தாலே இங்க உழைப்பதை போல வருமானம் வரும். அத்துடன் யாழில் இருந்துகொண்டு ஏதாவது சேவையும் செய்யலாம். யாழ் மருத்துக்கல்லூரியிலும் படிப்பிக்கலாம் என்று. மனம் அப்படிதான் சொல்கின்றது.

Edited by nilmini

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, nilmini said:

airbandb & booking.com இரண்டுமே நல்ல ஐடியா. ஆனால்.... அங்கு பொறுப்பான ஒருவர் இல்லாவிடில் யாவாரம் படுத்துவிடும்.

உதாரணமாக கெஸ்ட் வருமுன்னர் சுத்தம் செய்யவேண்டும். பொறுப்பானவர்... கலியான வீடு.... சாமத்தியவீடு.... அல்லது காச்சல்..... எண்டால் போக மாட்டார்....

கெஸ்ட்.... ரிவியூ போட்டு கதையை காலி பண்ணி விடுவார்கள்.

ஒருவர் முழு நேரமாகவும்.... இன்னோருவர் பகுதி நேரமாகவும் செய்யவேண்டும். போய் நின்று சுத்தம் செய்யும் முறைகள், கிளௌஸ் பாவனை.... வெளிநாட்டு சமையல் செய்து கொடுத்து.... எக்ஸ்ட்ரா வருமானம் பார்க்கும் வழி வகைகள் சொல்லிக் கொடுத்து வரவேண்டும்....

சிறப்பான வேலை.... இரண்டு மூண்டு வீடுகள் வாடைக்கு எடுத்து.... சுவியர், ஈழப்பிரியர், சுமே போல யாராவது போய் நிற்க விரும்புபவர்களின் உதவிகள் பெறுவது. தமது வீடுகளுடன் உங்களுடையதையும் கவனிப்பார்கள். அவர்களுக்கும் பொழுது போகும். 

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.