Jump to content

மீண்டும் கனேடியர்களை குறி வைப்பார்களா, இந்திய கால் சென்டர் கிரிமினல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் புற்றீசல் போல பரவிய கால் சென்டர் வியாபாரம், இந்தியர்களின் நேர்மையீனம் காரணமாகவே அழிய தொடங்கியது.

காலனி ஆதிக்கத்தினால் விளைந்த ஆங்கில மொழி புலமை, பல வங்கிகளையும், காப்புறுதி நிலையங்களையும் இந்தியா நோக்கி தனது கால் சென்டர் நிறுவங்களை நகர்த்த வைத்தது.

இதன் மூலம் பெரும் பணம் சேமிக்கலாம் என்றே அவை அங்கே சென்றன.

ஆனால், பிபிசி நிறுவனத்தின் அண்டர் கவர் ரிப்போர்டிங் மூலம், பிரிட்டனின் லோய்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் விபரத்தினை, $1000 க்கு இந்தியாவில் வேலை செய்த கால் சென்டர் ஊழியரிடம் இருந்து வாங்கி, அதனை லண்டனில் உள்ள, வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, செக் பண்ணு மாறு சொல்ல, அவையும் சரியாக இருக்கவே, அரண்டு போன லோய்ட்ஸ் பேங்க், இந்தியாவில் இருந்து மூட்டையை கட்டிக் கொண்டு வந்து சேர்ந்து விட்டது.

அதனை தொடர்ந்து ஏனைய வங்கிகளும், காப்புறுதி கம்பனிகளும் வந்து விட்டன.

அதனால் வேலை இழந்த கால் சென்டர் ஊழியர்கள், கிரிமினல் வேலை செய்யும் பகுதிக்குள் நுழைந்தனர்.

அமெரிக்கா, கனடாவில் உள்ள வாடிக்கையாளர்களை  அமெரிக்காவின் வரி அதிகாரிகள் போலவும், கனடாவில் உள்ளவர்களை revenue கனடா போலவும் அழைத்து, பயமுறுத்தி பணம் பறிக்கும் வேலையினை செய்து வந்துள்ளனர்.

இந்த வீடியோ 2017ம் ஆண்டு. வைரசினால் வேலையிழப்பு அதிகரித்துள்ள நிலையில், இது மீண்டும் தொடருமா என்பதே இப்போதுள்ள கேள்வி?

கனடியர்கள், குறிப்பாக எம்மவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிரிட்டனை பொறுத்த வரையில், கடிதம் மூலமே தொடர்பு கொள்வதால், வரி அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தொடர்பு படுத்த முடியாததால், போன் மூலம் பயமுறுத்துவது குறைவு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியர்களை காதல் வலையில் வீழ்த்தி பெரும் பணம் கொள்ளையிடும் நைஜீரியர்கள் உடன் ஒப்பிடும் போது இந்திய கிரிமினல்கள் கடுகுக்கு மாரடிக்கிறார்கள் போல இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த Jamatara நாடக தொடரை பார்த்தால் தெரியும் எப்படி அவர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்று

Jamtara – Sabka Number Ayega is an Indian crime drama web television series directed by Soumendra Padhi and written by Trishant Srivastava.[1] The story revolves around the phishing operations in the Jamtara district of Jharkhand.[2][3] It was released on Netflix on 10 January, 2020.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2020 at 13:40, Nathamuni said:

அமெரிக்கா, கனடாவில் உள்ள வாடிக்கையாளர்களை  அமெரிக்காவின் வரி அதிகாரிகள் போலவும், கனடாவில் உள்ளவர்களை revenue கனடா போலவும் அழைத்து, பயமுறுத்தி பணம் பறிக்கும் வேலையினை செய்து வந்துள்ளனர்.

                       அமெரிக்காவில் இது இன்றுவரை பெரிய பிரச்சனையாக உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மவர்களை விட ஆங்கிலம் பேசும் வெள்ளை பலர் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து ஏமாந்து போயுள்ளனர்.
                        அண்மையில் கூட எனது ஓய்வு ஊதியம் சம்பந்தமாக கொஞ்சம் விபரம் சேகரிக்கலாம் என்று சோசல் செக்குறிட்டி அலுவலகம் போனபோது தேவையான விண்ணப்பங்களும் தந்து இன்னொரு அறிவித்தல் என்று போட்ட துண்டும் தந்தார்கள்.
                        வீட்டை வந்து ஆராந்து பார்த்தால் அவர்கள் தந்த துண்டில் நாங்கள் உங்களை கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளுவோம்.எந்த ஒரு கட்டத்திலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளமாட்டோம்.உங்களை யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக இந்த இலக்கத்தை அழையுங்கள் அல்லது இந்த மின்னஞ்சலுக்கு விபரத்தை தெரிவியுங்கள் என்று இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.