Jump to content

ஐடியா ஐயாத்துரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மக்களே மகாஜனங்களே....!
பணிகின்றேன்.
உலகத்திலை இப்ப இந்த கொரோனா பிரச்சனையாலை எல்லாம்  தலைகீழாய் போச்சுது. கொரோனா கொஞ்சம் கொஞ்சமாய் குறைஞ்சாலும் எல்லாம் நோர்மலுக்கு வர இந்த வருசம் காணாது எண்டு கதைக்கினம். பள்ளிக்கூடங்கள் ஒழுங்கில்லாமல் போச்சுது.திட்டமிட்ட கலியாணவீடு சாமத்திய வீடு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் குழம்பிப்போய் கிடக்கு.வங்கியிலை எடுத்த கடன் வட்டியெல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வைச்சிருக்கினமாம்.
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்.....

இந்த 2020ம் ஆண்டை வாற வருசத்திலை இருந்து புதிசாய் தொடங்கினால் என்ன? இல்லாட்டி 2020 a எண்டு தொடங்கினால் என்ன? எனெண்டால் வருசங்கள் தேதி நாள் மணி நேரம் எல்லாம் மனிசரால் உருவாக்கப்பட்டவைதானே...? மனிசன் என்னென்னத்தையெல்லாம் மாத்தி அமைக்கேக்கை இதையும் மாத்தி அமைச்சால் என்ன?
இப்படிக்கு
பணிவன்புடன்
ஐடியா ஐயாத்துரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயாத்துரை
உங்கள் கோரிக்கை அமெரிக்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முடிவு தெரிய காலதாமதமாகும்.அதற்கிடையில் ஆர்ப்பாட்டம் அதுஇது என்று இறங்க வேண்டாம்.
நன்றி
வெள்ளைமாளிகை
ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயாத்துரை.....!

உங்களின் கோரிக்கை திருக்கணிதத்துக்கும்  வாக்கியத்துக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.....!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இந்த 2020ம் ஆண்டை வாற வருசத்திலை இருந்து புதிசாய் தொடங்கினால் என்ன? 

இப்படிக்கு
பணிவன்புடன்
ஐடியா ஐயாத்துரை

Image may contain: 1 person, indoor

ஐடியா ஐயாத்துரையின், கருத்து... நல்ல கருத்து.
அதை... வாற,  தீபாவளியில் இருந்து... ஆரம்பிக்குறோம்.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலண்டர கிழித்து போட சொல்லி ஐ.நா சபையில் இருந்து ஓடர் வந்திருக்கு தோழர்..,👍

cal.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசும் கூடாமல் அப்படியே ப்ரிசாகி நிக்கும் என்றால் எனக்கு ஓகே  😇
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ஐயாத்துரை
உங்கள் கோரிக்கை அமெரிக்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முடிவு தெரிய காலதாமதமாகும்.அதற்கிடையில் ஆர்ப்பாட்டம் அதுஇது என்று இறங்க வேண்டாம்.
நன்றி
வெள்ளைமாளிகை
ஈழப்பிரியன்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டிலும் ரம்புக்கு பின்னணியிலை இருக்கிற ஆக்கள் சொன்னால் செய்யக்கூடிய ஆள் அவர்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

வணக்கம் ஐயாத்துரை.....!

உங்களின் கோரிக்கை திருக்கணிதத்துக்கும்  வாக்கியத்துக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.....!    😁

பிளானட்ஸ் மூவிங் ப்ரொப்பளம் வரும் எண்டுவினம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, indoor

ஐடியா ஐயாத்துரையின், கருத்து... நல்ல கருத்து.
அதை... வாற,  தீபாவளியில் இருந்து... ஆரம்பிக்குறோம்.  😂

சிறித்தம்பி! உங்களுக்கு வேறை ஆள் கிடைக்கேல்லையே?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

வணக்கம் ஐயாத்துரை.....!

உங்களின் கோரிக்கை திருக்கணிதத்துக்கும்  வாக்கியத்துக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.....!    😁

வாக்கியத்துக்கு பதிலா பாக்கியத்துக்கு அனுப்பியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

வாக்கியத்துக்கு பதிலா பாக்கியத்துக்கு அனுப்பியிருக்கலாம்.

Vadivelu GIFs | Tenor

என்ரை சிவனே.....வந்துட்டாங்கள்..... எல்லாத்தையும் சமாளிச்சுத்தான் போகணும்..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 19:20, புரட்சிகர தமிழ்தேசியன் said:

காலண்டர கிழித்து போட சொல்லி ஐ.நா சபையில் இருந்து ஓடர் வந்திருக்கு தோழர்..,👍

cal.png

 

இல்லை தோழர்.......எப்பிடியோ இந்த வருசம் சுத்த வேஸ்ட்..... பிறகு ஏன் கணக்கிலை எடுப்பான் எண்டு கேக்கிறன்?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 23:20, குமாரசாமி said:

சிறித்தம்பி! உங்களுக்கு வேறை ஆள் கிடைக்கேல்லையே?

இல்லை... குமாரசாமி அண்ணா,   உங்களுடைய... ஐடியாவுக்கு,    😜
"கழுவுற மீனிலை... நழுவுற  மீனாக"  இருப்பதில்...   
இந்த,  ஐயா தான்....  சரியான ஆள். 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.