Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம்

 • பானகமுவ நிருபர்

இம்முறை வெளியான க. பொ. த சாதாரணப் பரீட்சைப் பெறு பேறுகளின் அடிப்படையில் வட மாகாணம் தொடர்ந்து ஒன்பதாவது நிலையில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் மூலமாகவே இதை மாற்றியமைக்க முடியும். தொடர்ந்து எதிர்ப்புவாத அரசியலை மட்டும் பேசிக் கொண்டிப்;பதில் எவ்விதமான அர்த்தமுமில்லை என்று சிவன் அறக்கட்டளையின் இயக்குனரும், ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கணிசமாளவு பிரத்தியேக வகுப்புக்கள் ஏனைய மாவட்டங்களில் விட யாழ்ப்பாண மாவட்டத்திலேயே நடைபெறுகிறது. 24 மணித்தியாலத்தில் 365 நாட்களிலும் முழு நேரப்படிப்பே காணப்படுகிறது. ஓய்வு நிலையில்லாமல் இப்படியான படிப்பு ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை. பிள்ளைகள் மூச்சுவிடுவதற்கு நேரமில்லை. குறிப்பாக ஓய்வு இல்லாத கல்வியே எம்முடைய தோல்விக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

யாழ்ப்பாண மாவட்ட கல்வி நிலை தொடர்பில் இம்மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் சரியானமுறையில் தலையீடுகள் செய்வதில்லை. அவர்கள் வெறுமனே எதிர்ப்புவாத அரசியலை மட்டும் பேசி தங்களுடைய இருப்பைத் தக்க வைத்து வருகின்றனர். எனவே புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாகத்தான் யாழ் மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சியை கட்டி எழுப்ப முடியும்.

யாழ் மாவட்ட தமிழ் சமுதாயம்; இந்நாட்டிலே வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் கல்வியில் பின்தங்கியவாகளாகவே காணப்படுகின்றனர். யுத்த காலத்திற்குப் பிற்பாடு இது மூடி மறைக்கப்பட்ட விடயமல்ல. வழக்கம் போல் பஸ்ஸைத் தவறவிட்டு நிற்கின்ற காட்சிகளே காட்டப்படுகின்றன. சகல வளங்களும் இல்லா விட்டாலும் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி கல்வி மேம்பாடு தொடர்பில் ஆவல் கொண்டு உழைப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். மாணவர்களின் கல்விப் பெறு பேற்றுக் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எவராக இருந்தாலும் சரி, யாழ் மாவட்டத்தின் கல்வித் தேவையின் நன்றாக உணர்ந்து செயற்படக் கூடிய நிலையில் எவரும் இல்லை.

கடந்த காலங்களில் வட மாகாண கல்வி மேம்பாட்டுக்காக எமது மூதையர்கள் அல்லும் பகலும் அயராது உழைத்தார்கள். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் ஒன்றையே கருத்திற் கொண்டு வேளைக்கு உணவெடுக்காது விடுமுறை நாட்கள் அத்தனையையும் மாணவர்களின் படிப்புக்கு என்றே தியாகஞ் செய்து அரும்பெரும் சேவை செய்தமையால் வட மாகாணத்தின் கல்விப் பெருமை எமது நாட்டிலும் மட்டுமல்ல உலகமெங்கும் பேசப்பட்டு வந்;தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் இன்று நாங்கள் ஒரு துரதிருஷ்டமான கால கட்டத்தில் இருக்கின்றோம்.

வட மாகாணத்தின் கல்வி சீர் திருத்தம் என்று கோரிக் கொண்டு சீர் திருத்தப் பணிகளை மேற்கொண்டாலும் தீரும்ப திரும்ப தோல்வி நிலையினையே காணுகின்றோம். இதுவரையிலும் ஒரு மாற்றத்தைக் காண முடியவில்லை. இன்றுள்ள அரசல்வாதிகள் கல்வியில் எப்படி புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்? வட மாகாண கல்விச் சூழலை ; நாசம் பண்ணும் செயற்பாடுகள் எவை என ஆராய்ந்து பார்த்து இதுவரையும் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும் எமது மாணவர் சமூகத்தின் எதிர்கால நலனை கருதிற் கொண்டு புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடகத்தான் ஆக்கபூர்வமான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. ;ஆகவே யாழ் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் விருத்திற்காகவும் எடுக்கின்ற முயற்சிகளும் செலவிடுகின்ற காலமும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அவையே வெற்றிக்கு வழிகோலும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

 

http://thinakkural.lk/article/40615

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய வடமாகாண கல்வி நிலவரம் குறித்து சிங்களவர்களிடம் கதைத்தபோது , அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள்। அதாவது அவர்களிடேமே ஒரு நல்ல எண்ணம் இருந்தது। எனவே கல்விமான்கள் இதை மீண்டும் ஒரு முறை சீர்தூக்கி பார்ப்பது நல்லது। புலம்பெயர் இலங்கை தமிழர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும்। பணம் மட்டுமல்ல , ஒழுக்கமும் மிக முக்கியம்। 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கும் இடையே என்ன தொடர்பு ? 🤔

ஆ....ங் .... விளங்கவேயில்லையே  😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

கல்விக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கும் இடையே என்ன தொடர்பு ? 🤔

ஆ....ங் .... விளங்கவேயில்லையே  😜

95 க்கு முதல் யாழில் இருந்த கலாச்சாரமாக இருக்குமோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

இப்போதைய வடமாகாண கல்வி நிலவரம் குறித்து சிங்களவர்களிடம் கதைத்தபோது , அவர்கள் அதை நம்ப மறுத்தார்கள்। அதாவது அவர்களிடேமே ஒரு நல்ல எண்ணம் இருந்தது। எனவே கல்விமான்கள் இதை மீண்டும் ஒரு முறை சீர்தூக்கி பார்ப்பது நல்லது। புலம்பெயர் இலங்கை தமிழர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும்। பணம் மட்டுமல்ல , ஒழுக்கமும் மிக முக்கியம்। 

முதலில் இந்த வெளி நாட்டுக்கு போகும் கலாச்சாரம் ஒழிய வேணும்; இலங்கை மண்ணில் தான் எமது வருங்காலம் என்ற சிந்தனை வர வேணும்; தாயகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் நாட்டிலும் தான். ஒருவருக்கு £20,000. கொடுத்து இங்கு வந்ததை விட அதே பணத்தை தாயகத்தில் முதலிட்டு இருந்தால் .....??

 • Like 3
Link to post
Share on other sites
12 hours ago, உடையார் said:

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாகவே வடக்கின் கல்வியை கட்டி எழுப்பலாம்; கணேஷ் வேலாயுதம்

ஊரை ஏமாத்த கணேஷ் கோஷ்டி கிளம்பி இருக்கு.

அரசியல் கலாச்சாரம் மூலம் கல்வி அபிவிருத்தியாம். இப்பிடி மோட்டு சிந்தனைக் கோஷ்டிகள் உலாவரும் வரையில் கல்வி முன்னேற்றம் கஷ்டம் தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

முதலில் இந்த வெளி நாட்டுக்கு போகும் கலாச்சாரம் ஒழிய வேணும்; இலங்கை மண்ணில் தான் எமது வருங்காலம் என்ற சிந்தனை வர வேணும்; தாயகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் நாட்டிலும் தான். ஒருவருக்கு £20,000. கொடுத்து இங்கு வந்ததை விட அதே பணத்தை தாயகத்தில் முதலிட்டு இருந்தால் .....??

அப்படி பணம் செலவழித்து கெடடவர்களும், ஏமாற்றப்படடவர்களும் நிறையவே உண்டு। அத்துடன் மூளைசாலிகளின் வெளியேற்றமும் இலங்கை தமிழர்களை நிறையவே பாதித்துவிட்ட்து।

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சீரியசாக சொல்லவில்லை, ஆனால் என் அபிப்பிராயம்: circle of life நாங்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கும் வரை அரசு மற்றவர்களிடம் வரி வாங்கி எங்களுக்கு படிப்பும், மருத்துவமும் தருகிறது. நாம் உழைக்கும் போது அடுத்த சந்ததிக்கும் முன்னர் எங்களுக்கு வரி கட்டிய முந்தைய தலைமுறைக்கும் வசதிகள் கொடுக்கிறது. பிறகு நாங்கள் வயதாகி உழைக்க இயலாமல் போகும் போது எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கட்டும் வரி எங்களுக்கு செலவிடப் படும்! இது welfare நாடுகளின் சிறப்பான திட்டம் என நினைக்கிறேன். இதில் துஷ்பிரயோகம் இருக்கும், நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல. கனடா தன் சமூக நலன் திட்டங்களை வரையறை செய்தது போல செய்தால் புதிய குடியேறிகள் துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கலாம்.  எனவே, வாழ்க்கை என்ற கணக்கு லெட்ஜரில் வரவும் செலவும் சமன் செய்யும் என்று தான் நான் கருதுகிறேன்!  
  • இந்த தடையால் பௌத்தர்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடும் (புண்ணியத்தை எந்த மீற்றரால் அளப்பது?). ஆனால், தெளிவாக அளக்கக் கூடிய தீமைகள் சில உண்டு: 1. கள்ளமாக அரச சுகாதார சேவையின் கண்காணிப்பின்றி வெட்டப் படும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது எவ்வளவு சீரியசானது? கொழும்பு வெலிக்கடை சிறைக்கருகில் இருக்கும் முனிசிபல் மாடு வெட்டும் இடத்தில் பரிசோதனைகளில் பங்கு பற்றிய அனுபவத்தின் அடிப்படையில், மனிதனுக்கு தொற்றக் கூடிய காச நோய் கிருமி முதல் வயிற்றுப் போக்குத் தரும் புழுக்கள் வரை கண்காணிப்பின்றி மக்களைச் சென்றடையும். இவை தொற்றும் மக்கள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க மாட்டார்கள்! 2. வயதான பசுக்களை விகாரையில் விடுவர். பிக்குகள் புண்ணாக்கெல்லாம் வைக்க மாட்டார்கள். வயதான மாடு கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்துச் சாகும். எனவே இந்த மாடுகளுக்கும் புண்ணியத்தில் பங்கிருக்காது!  
  • நாங்கள் பிரிட்டிஸ்காரர் கண்டியளே..... நாங்கள் எங்களுக்கு பிடுங்குப்பட்டாலும்..... நீஙகள், கனடாக்காரர், ஆஸ்திரேலியாக்காகரர், சீறீலங்கன்ஸ், இந்தியன்ஸ் எழுதிப்பதியிறத..... ஒண்டரைக் கணணால தான் வாசிக்க தொடங்குவம்..... என்ன இருந்தாலும்..... எங்கண்ட பழைய கொலணியலில இருக்கிற ஆக்கள் எண்டு ஒரு..... பார்வையெண்டு சொல்லுங்கோவன். 😜   சும்மா பகிடிக்கு 😁...உங்கள் கருத்தை ரசித்தேன். நாம சும்மா பம்பலா அப்பப்ப கதைக்கிறது தானே...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.