Sign in to follow this  
கிருபன்

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

Recommended Posts

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது.   

எதிர்காலம் குறித்த அச்சங்களும் நிச்சயமின்மைகளும் நிச்சயமாகிப் போன பொழுதொன்றில், நம்பிக்கை வைப்பதைத் தவிர வழி வேறில்லை.   

ஏன் இவ்வாறு சொல்கிறேன், இதற்கான காரணங்கள் என்ன என்று, நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம்; நம்பிக்கையோடு!   

கொரோனா வைரஸ் என்று அறியப்பட்ட கொவிட்-19 நோய்த்தொற்று, எண்ணிக்கையில்லாத கேள்விகளை, எம்மத்தியில் உருவாக்கியிருக்கிறது. ‘நாளை என்ன நடக்கும்’ என்ற கேள்வியே, எல்லோர் மனங்களிலும் உள்ளது.   

இது நியாயமான கேள்வியாகும். ஆனால், இந்தத் தொற்றை, மனிதகுலம் தாண்டி வந்ததன் பின்னர், நீண்டகால நோக்கில், என்ன நடக்கும் என்பது குறித்த புரிதலை நோக்கி, நாம் நகர்ந்தாக வேண்டும். எல்லாவகையான சாத்தியங்களும் எம்முன்னே உள்ளன.   

இந்த வைரஸ் தொற்று யாரும் எதிர்பாராதது. இது, பல வழிகளில் பல்பரிமாண அதிர்ச்சிகளை உருவாக்கியிருக்கிறது. இதிலிருந்து இந்த உலகம் மீள்வதற்கு, நீண்ட காலம் எடுக்கும்.   

மனிதகுலம் தன் வளர்ச்சியை, மேன்மையை, தொழில்நுட்ப உயர் திறத்தைக் கொண்டாடி மகிழ்ந்து இருந்த காலப் பொழுதொன்றில், ‘கொரோனா’ தன் கைவரிசையைக் காட்டியுள்ளது. கொரோனாவின் தாக்குதலை எதிர்கொள்ள, மனிதகுலம் தயாராக இல்லை என்ற உண்மை உறைத்த போது, காலம் கடந்து விட்டது. இத்தருணத்தில், இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதே பாரிய சவாலாக மாறியுள்ளது.   

பல வழிகளில், மனிதகுலம் மனிதாபிமானத்தில் இருந்தும் அடிப்படை மனித அறங்களில் இருந்தும் விலகி, நீண்ட தூரம் வந்துவிட்டதை இந்த நெருக்கடி எடுத்துக்காட்டியது. ஒரு நெருக்கடியின் போது, மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், அரசுகள் எவ்வாறு செயலாற்றுகின்றன, நிறுவனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன, ஊடகங்கள் என்ன செய்கின்றன போன்ற அனைத்தையும், வீட்டில் இருந்தே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை குறித்து எவ்வளவு தூரம் ஆழமாக நாம் சிந்தித்துள்ளோம் என்பது கேள்விக்குறியே?   

இன்றும், இலாபத்தைத் தக்க வைப்பது பற்றியும் இலாபத்தைப் பெருக்குவது பற்றியும் பலர் சிந்திக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் பாதிப்படையாமல் இருக்க, அவர்களுக்கு அரசுகள் நிதி அளிக்கின்றன; சரிந்து விட்ட தனியார் கம்பெனிகளைப் பிணையெடுக்கின்றன.   

ஆனால், அந்த அரசுகளில் வாழுகின்ற குடிமக்கள், உணவுக்கு வழியின்றி பட்டினி கிடக்கிறார்கள். மருத்துவத்துறையில் கடமையாற்றும் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறக்கிறார்கள். இதுதான், இன்றைய உலகின் சுருக்கமான வரைபடம்.   

கொரோனா வைரஸ் நெருக்கடி, முடிவுக்கு வருவது போன்ற ஒரு சித்திரம், எமக்குக் காட்டப்பட்டாலும் உண்மை அதுவல்ல; பலவழிகளில் நெருக்கடி இப்போதுதான் தொடங்குகிறது.   

வளர்ச்சி அடைந்த நாடுகள், இலங்கை போன்ற நாடுகளைப் பார்த்து, ‘மூன்றாம் உலக நாடுகள்’ என்று அழைக்கும் வழமை ஒன்று உண்டு. இந்த வைரஸ் தொற்று, இப்போது கிட்டத்தட்ட எல்லா நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகள் ஆக்கியுள்ளது.   

பசியும் பட்டினியும் வறுமையும் உலகமயமாகி உள்ளன. இது, வெறுமனே ஒரு சுகாதார மருத்துவ நெருக்கடி அல்ல; அதையும் தாண்டி, சமூகம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என, மனிதகுலத்தின் அனைத்துத் தளங்களிலும் கொரோனா வைரஸின் பாதிப்பின் தாக்கம், வெளிப்படையாகவே புலப்பட்டு நிற்கின்றது. இதை நாம் மறந்துவிடக்கூடாது; மறைக்கவும் முடியாது.   

இவற்றைக் கருத்தில் கொண்டே நாம், கொவிட்-19 இன் பின்னரான உலகம் குறித்துப் பேச வேண்டி உள்ளது. கொவிட்-19 உலக ஒழுங்கை உலுக்கியுள்ளது; இது, உலக ஒழுங்கை நெருக்கடிக்குள் தள்ளியதன் மூலம், எதிர்காலம் குறித்த புதிய சாத்தியங்களையும் நிச்சயமின்மைகளையும் உருவாக்கியுள்ளது. இவை, ஆழமான நீண்ட ஆய்வை வேண்டுவன. இவற்றின் ஒவ்வோர் அம்சங்கள் குறித்தும் பார்க்கலாம். கொவிட்-19 பற்றிய அனுமானங்களை முதலில் நோக்கலாம்.   

அமெரிக்காவைச் சேர்ந்த Center for Infectious Disease Research and Policy என்ற ஆய்வு நிறுவனம், அண்மையில் வெளியிட்ட அறிக்கையானது கொவிட்-19 எவ்வாறு முன்நகரும் என்ற வினாவுக்குப் பதிலளித்துள்ளது. அவ்வறிக்கையின்படி:   

 இந்தத் தொற்று, 18 முதல் 24 மாதங்களுக்கு நிலைக்கும் சாத்தியம் உண்டு.   

 உலகின் 60% தொடக்கம் 70% வரையிலான மக்கள் தொகையினர், இத்தொற்றுக்கான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெறும்வரை இது தொடரும்.   

 இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான குணங்குறிகளைக் காட்டுவதில்லை; அல்லது, மிகக்குறைவாகவே காட்டுகிறார்கள். இதனால் இதைக் கட்டுப்படுத்துவது கடினமானது.   

 அரசாங்கங்கள் இந்தத் தொற்று விரைவில் முடிந்துவிடும் என்று மக்களுக்குச் சொல்வதை நிறுத்த வேண்டும். மாறாக, இது நீடிக்குமிடத்து, அதற்குத் தாக்குப்பிடிப்பதற்கு மக்களைத் தயார்செய்ய வேண்டும்.   

 இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை சீராகலாம். ஆனால், 2021க்கு முன்னர் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் பயன்பாட்டுக்கு வராது.   

இவ்வறிக்கையின் சாரம் யாதெனில், கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்துவிட்டது என்று மக்கள் முடிவுகட்டாமல், அதை எதிர்கொள்ளத் தயாராகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதேயாகும்.   

இன்று, எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கின்ற கேள்வி, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில், இந்தத் தொற்று இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏன் ஏற்படுத்தியது என்பதாகும். இதற்கான பதிலை, ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.   

இந்தக் கொவிட்-19 வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காவாகும். இங்கு, மருத்துவ சேவைகளில் பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவமனைகளில் இடநெருக்கடி, ‘வென்டலேட்டர்’கள் இல்லாமை என்பன, தலையாய பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. Global Campaign on Military Spending என்ற அமைப்பு, அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்கா வாங்கும் F-35 ரக போர்விமானம் ஒன்றின் மதிப்பு 89 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தத் தொகையில், 3,244 ‘வென்டலேட்டர்’களைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டில்களுடன் கொள்வளவு செய்ய முடியும். அமெரிக்கா, இதுபோன்ற 3,000 விமானங்களை வாங்கவுள்ளது.   

இது, நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. பொதுச் சுகாதாரம் இலவசமாகவும் அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ள நாடுகள் இந்தத் தொற்றை ஓரளவு வினைத்திறனாகக் கையாண்டுள்ளன என்று சொல்லலாம்.   

கடந்த மாதம் 27ஆம் திகதி, Stockholm International Peace Research Institute தனது வருடாந்த இராணுவச் செலவீன அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டை விட, 2019ஆம் ஆண்டுக்கான இராணுவச் செலவீனம் 3.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.   

உலகளாவிய மொத்த இராணுவச் செலவீனத்தில் 38 சதவீதத்துக்கு அமெரிக்கா பொறுப்பாகின்றது. சீனா, இந்தியா, ரஷ்யா, சவூதி அரேபியா ஆகியன இந்த வரிசையில் அடுத்து வருவன. இந்தியா, முதன் முறையாக உலகளாவிய இராணுவச் செலவீனத்தில் மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது. இவை, அரசாங்கங்களின் முன்னுரிமை ஒழுங்கை விளக்க உதவுகின்றன.   

கொவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும், இந்தநிலை தொடரும் என எதிர்பார்க்கலாம். அரசாங்கங்களும் நிறுவனங்களும் இதைத் தங்களுக்கு வாய்ப்பான ஒன்றாக மாற்ற நினைக்கின்றன. அவை, அரசியல் கதையாடல்களாகவும் இலாபத்துக்கான புதிய வழிமுறைகளாகவும் வெளிப்படுகின்றன. அவற்றுக்கு, ‘கொரோனா’ என்ற முகமூடி கனகச்சிதமாகப் பயன்படுகிறது.   

இதை, நாம் முதலில் உணர வேண்டும். கொரோனா வைரஸின் பெயரால், நாம் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நோய்த்தொற்று, யாருடைய வாழ்வை மிகமோசமாகத் தாக்கியது எனில், மிகச்சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையையே ஆகும்.   

அரசியல்வாதிகளோ, கொள்கை வகுப்பாளர்களோ, சமூக ஊடகப் போராளிகளோ இதற்கான விலையைக் கொடுக்கவில்லை; சாதாரண மக்களே கொடுத்தார்கள். இனியும் அவர்களே, உழைப்பாலும் ஊதியத்தாலும் உறிஞ்சப்படுவார்கள்.   

இன்று, நாம் எதிர்நோக்கும் இந்த நெருக்கடியை, கடந்து போகவேண்டுமாயின் இரண்டு விடயங்களைச் செய்தாக வேண்டும். ஒன்று: கொவிட்-19க்குப் பின்னரான உலகைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும்; அதற்குத் தயாராக வேண்டும்.   

இரண்டு: நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். இந்தத் தொற்றுக்குப் பின்னரான உலகின் திசை வழிகள் பற்றி, அடுத்த வாரமும் நாம் பேசலாம். நம்பிக்கையோடு இருப்பதன் மிகச் சிறந்த அடையாளம், எங்கள் விவசாயிகள். இவ்விடத்தில், ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.   

மப்பன்றிக் கால மழை காணாத மண்ணிலே   

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது   

ஏர் ஏறாது, காளை இழுக்காது - அந் நிலத்தின்   

பாறை பிளந்து பயன் விளைப்பான் என்னூரான்.   

ஆழத்து நீருக்கு அகழ்வான் அவன். நாற்று   

வாழத்தன் ஆவி வழங்குவான். ஆதலால்   

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன் நெல்லு.   

தங்க நகைகள் தலைக்கணிந்த பெண்களே   

கூடிக் குனிந்து கும்மி கொட்டுவதும் காதினிக்கப்   

பாடிக் கவலை பறக்கச் செய்கின்றதும் போல்   

முற்றி, மனித முயற்சிக்கு இறை கொடுக்கும்   

பொற்காசாம் நெல்லுப் பொதி சுமந்து கூத்தாடும்   

அந்தப் பயிரின் அழகை அளந்தெழுத   

எந்தச் சொல் உண்டாம் எமக்கு? அவ்வுழைப்பாளி   

உள்ளம் நெகிழ்ந்தான்; ஒரு கதிரைக் கொத்தாக   

கிள்ளி முகர்ந்தான்; கிறுகிறுத்துப் போகின்றான்.   

வாடும் கதிருக்கு வார்க்கா முகில், கதிர்கள்   

சூடும் சிறு பயிர் மேல் ‘சோ’வென்று நள்ளிரவில்   

கொட்டும். உடன் கூடும் கொலைக்காற்றும் தானுமாய்   

எட்டுத் திசையும் நடுங்க முழங்கி எழும்.   

ஆட்டத்து மங்கையர் போல் அங்கு மொய்த்து நின்ற பயிர்   

பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய் விடவே   

கொள்ளை போல் வந்து கொடுமை விளைவித்து   

வெள்ளம் வயலை விழுங்கிற்று.   

பின்னர் அது வற்றியதும் ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி   

பற்றி, அதோ பார், பழையபடி கிண்டுகிறான்.   

சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வானத்தைப்   

பார்த்து அயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்   

வாழி, அவன்.   

ஈண்டும் முதலில் இருந்தும் முன்னேறுதற்கு   

மீண்டும் தொடக்கும் மிடுக்கு.     
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19க்குப்-பின்னரான-உலகம்-மீண்டும்-தொடங்கும்-மிடுக்கு/91-249846

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம் இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.     கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.   விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.   இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2545989
    • நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.   இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும். நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009   அப்படிபோடு அரிவாளை 🤣🤣
    • எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிவு: மே 26,  2020 04:15 AM புதுடெல்லி,  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை. சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf
    • லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?   புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுதியில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25040557/Chinese-army-detains-Indian-soldiers-in-Ladakh.vpf