Sign in to follow this  
கிருபன்

நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்)

Recommended Posts

நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி (நேர்காணல்)

May 2, 2020
H3978-L153896402_original-3-696x770.jpg

நேர் கண்டவர் : அகர முதல்வன்

எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும்  அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் வெறுக்காமலும் தமது கருத்துகளை விட்டுக் கொடுக்காமலும்  பேசலாம்  என்பதற்கு இந்நேர்காணல் ஒரு சமீபத்திய சான்று.

உங்களுடைய நாவல்களில் ’கொரில்லா’, ’ம்’ ஆகிய இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பாக ‘ம்’ நாவல் மிக முக்கியமானது. ஆனால் இதன் பிறகு வெளியான ‘பொக்ஸ்’, ‘இச்சா’ ஆகிய இரண்டு நாவல்களும் வலிந்து உருவாக்கப்பட்ட பிரதியாகவே வாசிப்பில் எனக்குத் தோன்றுகிறதே?

நான் என்ன இறைதூதரா வானிலிருந்து அருள்வாக்கோ அசரீரியோ பெற்றுச் சுளுவாக  எழுதிவிடுவதற்கு. இலக்கிய உள்ளொளி, தரிசனம் போன்றவையும் எனக்கு வசப்படாதவையே. எனவே என் எல்லா நாவல்களையும் வலிந்தே எழுதினேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். தஸ்தயேவ்ஸ்கி கூட இப்படி வலிந்தும் அச்சத்தோடும் தன்னம்பிக்கையின்றியும்தான் ‘அசடன்’ நாவலை உருவாக்கினார் எனப் படித்திருக்கிறேன். அவரது அந்தப் புலம்பலைக் குறிப்பிட்டுத்தான் எனது ‘இச்சா’ நாவலைத் தொடங்கியிருந்தேன்.

‘பொக்ஸ்’ இறுதி இன அழிப்பு யுத்தக்கால கட்டத்தை வைத்து புனைந்திருந்தீர்கள். நந்திக்கடலின் இறுதி யுத்த காலத்தை எழுதினால்தான் சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் உங்கள் பெயரை தக்க வைக்க முடியுமென உங்களுக்குள்ளேயே ஒரு நிர்பந்தத்தை உருவாக்கிக் கொண்டீர்களா?

இறுதி இன அழிப்பை மட்டுமல்லாமல், தொடக்க இன அழிப்பையும் நான் எழுதியிருக்கிறேன். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோதே, போரை எதிர்த்தும் போர் புரிந்த தரப்புகளைச் சபித்தும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். யுத்தத்தின் இறுதிக் காலங்களில் வன்னியில் நடந்தவற்றில் ஓர் துளிதான் ‘பொக்ஸ்’ நாவல். யுத்த வெற்றி எக்காளங்களும் பொய்களும் வரலாறாகப் புனையப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை எதிர்கொள்ள அந்த நாவலை எழுதினேன். அதை ‘யுத்தத்தின் உப வரலாறு’ என்று குறிப்பிட்டேன்.

ஒரு நாவலை எழுதியெல்லாம், சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் யாருமே தங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. மொண்ணைத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை ஏமாற்றி விடுவது போலவெல்லாம் தீவிர இலக்கிய வாசகர்களை ஏமாற்றி விட முடியாது அகரன்.

தமிழ் தேசியத்தின் மீது உங்களுக்கிருக்கும் கசப்பையும் ஒவ்வாமையையும் நான் அறிவேன். மொண்ணைத்தனமான கருத்துக்களை பேசுபவர்கள் எல்லா சித்தாந்த – கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் ஷோபா. அதனால் மொண்ணை மார்க்சிஸம் பேசுவபவர்கள், மொண்ணை ரொஸ்கிசம் பேசுபவர்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். நான் கேட்ட கேள்வியை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் வாசகப்பரப்பில் இறுதிக்கட்ட யுத்த காலங்களைப் பற்றிய புனைவுகளுக்கு ஒரு பெரிய அவதானம் திரும்பியிருந்த சூழலில், அப்படியொரு களத்தை நீங்களும் தேர்ந்தேடுத்தீர்களா?

%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE.jpg

பரந்துபட்ட தமிழ் வாசகப் பரப்பில் கவனமும் பாராட்டுகளும் குவிக்க விரும்பி நான் எழுதினால், புலிகளின் அரசியலை நியாயப்படுத்தி எழுதுவதே அதற்கான குறுக்கு வழியாகும். அதை நான் செய்வதில்லை. இஸ்லாமியர்களைப் பழித்து எழுதினால் அதற்கும் ஒரு திடீர் வாசகப் பரப்புள்ளது. அதையும் நான் செய்ய மாட்டேன். எழுத்தில் சமரசம், சந்தர்ப்பவாதம், சந்தை நோக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழின் பெரிய பெரிய பதிப்பகங்களெல்லாம் என் நூல்களை வெளியிடத் தயாராக இருக்கும் போதும் நான் ‘கருப்புப் பிரதிகள்’ என்ற எளிய பதிப்பத்துடன் தான் தொடர்ந்தும் பயணிக்கிறேன். நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் ஒரு துளியை நாவலாக்குவதற்கு நீங்கள் கற்பிக்க முயலும் காரணங்கள் எதுவுமே தேவையில்லை. நெஞ்சில் ஈரமும் அறமும் கொஞ்சம் எழுதத் தெரிந்திருப்பதுமே போதுமானது.

தமிழ் தேசியம் என்ற அரசியல் கருத்தாக்கத்தின் மீது எனக்கு ஒவ்வாமையும் கசப்பும் உள்ளது என நீங்கள் எப்படியொரு முடிவுக்கு வந்தீர்கள் எனத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் என்றாலே ‘புலி அரசியல்’தான் என நீங்கள் எண்ணவும் தேவையில்லை. ‘மொண்ணைத் தமிழ்த் தேசியர்கள்’ என்று நான் வகைப்படுத்தும் போதே, கூர்மையான தமிழ் தேசியர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் நிலாந்தன், இராசேந்திர சோழன் போன்றவர்கள் அத்தகையவர்கள்.

புலிகளுக்கு முன்பும் தமிழ் தேசியம் இருந்தது, பின்பும் இருக்கிறது. என் வயதுக்கு எனக்கு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ மூலம்தான் தமிழ் தேசியவாத எண்ணமுண்டாயிற்று. திராவிட இயக்கம், சோசலிஸம் போன்றவை பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். அதன் வழியேதான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். புலிகளுக்குப் பின்னும், தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு விமர்சனங்களோடும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே’ கொடுக்கிறேன்.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மிகப்பலமாக ஆதரித்து எழுதுபவன் நான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து மழுப்பலாகப் பேசிக்கொண்டிருந்த Frontline Socialist Party-யை நான் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை நியாயப்படுத்தி ஒரு தொடர் விவாதமே செய்தேன்.

ஒரு பெருந்தேசிய இனம், சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கினால், சிறுபான்மையினர் தங்களது தேசிய இன அடையாளத்தை முன்வைத்து அரசியல் மயப்படுவதையும் அணியாவதையும் யார்தான் நிராகரிக்க முடியும்? அதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் அரசியல் பாதுகாப்பு இருக்கிறது?  இலங்கையில் தமிழ் இனவழித் தேசியவாதமும் முஸ்லீம் இனவழித் தேசியவாதமும் இவ்வாறுதான் நிலைபெற்றன. மார்க்ஸியத்தில் மட்டுமல்லாமல், முதலாளித்துவ சனநாயக நெறிகளிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஓர் முக்கிய கருத்தாக்கம். பாலஸ்தீனர்களினதும், திபெத்தியர்களினதும், காஷ்மீரிகளினதும் தேசியவாத அரசியலை ஓயாமல் ஆதரிப்பவர்கள், எப்படி ஈழத்தமிழ்த் தேசியவாதத்தை மட்டும் நிராகரித்து விட முடியும்!

என்னுடைய ஒவ்வாமையும் கசப்பும் ஈழத்தமிழ்த் தேசியவாதத்தைத் தவறான பாதையில் முன்னெடுத்தவர்களைப் பற்றியது தான். தேசியத்தின் பெயரால் ‘ஏக பிரதிநிதித்துவம்’ எனப் பிரகடனப்படுத்தி சனநாயக அரசியலை மறுத்தவர்கள் மீது தான். மாற்றுக் கருத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொன்று போட்ட பாஸிஸ்டுகளின் மீது தான். சகோதர இன அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றவர்கள் மீது தான். மக்களை மனிதக் கேடயங்களாக உபயோகித்தவர்கள் மீது தான். தங்களது தவறான அரசியல் வழிமுறைகளால் மக்களைக் கொண்டுபோய் நந்திக்கடலில் தள்ளியவர்கள் மீது தான். அப்படியானால் புலிகளின் அரசியலில் நல்ல அம்சங்களே இருக்கவில்லையா? இருந்தால் சொல்லுங்கள், உங்களுடன் சேர்ந்து நானும் அந்த அம்சங்களிலாவது அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறேன்.

நீங்கள் சொல்வதுபோல மொண்ணைக் கருத்துள்ளவர்கள் எல்லாக் கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மை. மார்க்ஸியம் பேசுபவர்களிலும் மொண்ணையானவர்கள் இருப்பார்கள். இவர்களைக் குறிக்கத்தான் மார்க்ஸியத்தில் வறட்டுவாதம், காட்சிவாதம், அனுபவவாதம் போன்ற கலைச்சொற்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

“மொண்ணை மார்க்ஸியர்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்” என நீங்கள் உரைப்பது உங்களுக்குப் பெருமையளிக்கும் விசயமல்ல அகரன். விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் பகுத்துப் பேச நீங்கள் பயில வேண்டும். ரங்கநாயகம்மாவின் ”சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்ற நூல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறதல்லவா. அந்த நூலை நீங்கள் படிக்கத் தொடங்கினால், இரண்டாவது பக்கத்திலேயே உங்களுடைய இருதயம் ‘மொண்ணை மார்க்ஸியர்’ என முணுமுணுக்குமென நான் உங்களுடன் பந்தயம் கட்டத் தயாராகயிருக்கிறேன்.

உங்கள் கதைகளில் வரக்கூடிய ‘பகிடி’ மற்றும் சில விவரணைகள் நேரடியாகவே தமிழ் இயக்கங்களை கடுமையாகச் சாடின. இதன் வழியாகவும் உங்கள் மீது வாசக கவனம் திரும்பியது. உங்களுடைய சிறுகதைகளில் இந்தச் ‘சாடல் கலை’ தொடர்ச்சியாக தன்னியல்பில் வருகிறதா? அல்லது தீர்மானமாக திட்டமிட்டு எழுதுகிறீர்களா?

தமிழ் இயக்கங்களையோ போராளிகளையோ கடுமையாகச் சாடி எழுதினால் வாசக கவனம் நம்மீது திரும்பும் என்பது மனப்பிரமை. நன்றாகக் கதை எழுதினால் மட்டுமே வாசகர் கவனம் உங்கள் மீது திரும்பும். சாடுகிறேன், சங்கறுக்கிறேன் என எதையாவது கேவலமாக எழுதி வைத்தால் நேர்மையான இலக்கிய வாசகர்கள் பிளந்துகட்டி விடுவார்கள். அப்படித்தான் சாத்திரியின் ‘திருமதி.செல்வி’ கதையும் உங்களது ‘சாகாள்’ கதையையும் வாசகர்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டன.

எந்தப் போராளிகளைக் குறித்தும் இல்லாத பொல்லாத பழிகளை நான் எழுதியதில்லை. என்னைச் சுற்றியுள்ள இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையேயும், அந்த எழுத்து அறம் மட்டுமே என்னைத் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது. எந்தக் கூட்டத்திலும், எந்தப் புத்தக சந்தையிலும், எந்த நேர்காணலிலும் எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியத்தை அந்த அறமே எனக்குக் கொடுத்திருக்கிறது. 

நிற்க; நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. எல்லாமே திட்டமிடல்தான். சம்பவங்களின் தேர்வு, அவற்றை வரிசைப்படுத்தல் அல்லது வரிசை குலைத்தல், திரும்பத் திரும்ப ‘எடிட்’ செய்தல் போன்ற எழுத்துத் தொழில்நுட்பங்களின் மூலம்தான் என் பிரதிகளை உருவாக்குகிறேன்.

இந்த எழுத்துத் தொழில்நுட்பத்தை உங்களின் ‘இச்சா’ நாவல் பெருமளவில் கொண்டிருக்கிறது. உங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிற வாசகனுக்கு இதுபோன்ற ஒரே தன்மையிலான தொழில்நுட்ப எழுத்து சலிப்பை ஏற்படுத்தாது என்று எண்ணுகிறீர்களா? மேலும் கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு உங்கள் எழுத்துக்கள் பயணப்படாமல் போய்விடுமல்லவா?

“கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு” என்ற உங்களது வார்த்தைகள் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்பது போன்ற ஒரு கவித்துமான வரி எனப் புரிகிறதே தவிர, எனக்கு வேறு எதுவும் புரியவில்லை. தயவுசெய்து அடுத்த கேள்விக்குப் போகலாம்.

இன்றைக்கு தமிழ் இலக்கியம் எனும் பொதுச்சொல்லில் ஈழத்தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. அதாவது போரிலக்கியப் பிரதிகளுக்கு. அவற்றில் குணா கவியழகன், சயந்தன், தமிழ்க்கவி, ஷோபாசக்தி, தமிழ்நதி, தீபச்செல்வன், வாசுமுருகவேல் போன்றோரின் நாவல்கள் அதிகமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. சக போரிலக்கியப் பிரதிகள் குறித்து உங்களுடைய மதிப்பீடுகள் என்ன?

இந்தப்போரிலக்கியம்’ என்ற வகை குறித்து எனக்குத் தெளிவில்லை. அது போரைக் குறித்து எழுதும் இலக்கியமா அல்லது போர் நிலத்திலிருந்து எழுதும் இலக்கியமா?

 • 55557139_10218642449593927_8543575574000

போரைக் குறித்து எழுதுவதே போரிலக்கியம் என்றால் ஜெயமோகனின் ‘உலோகம், டி.டி. ராமகிருஷ்ணனின் ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ போன்றவையும் போரிலக்கிய வகைக்குள் வருமா? போருக்குள் இருந்து போரைப் பற்றி எழுதுவதே போரிலக்கியம் என்றால் முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் எழுதுபவற்றையும் போரிலக்கியம் என்றுதானே சொல்ல வேண்டும்.  நீங்கள் கொடுத்திருக்கும் ‘போரிலக்கிய’ எழுத்தாளர்கள் பட்டியலிலுள்ளவர்கள் எழுத வருவதற்கு முன்பே, இந்த  முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் போரைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆர்.எம்.நௌஸாத், சர்மிளா ஸெய்யித் போன்றவர்களின் நாவல்களெல்லாம் பேசப்படாத நாவல்கள் என்றா சொல்லப்போகிறீர்கள்?

போரினால் அனுபவங்களைப் பெற்ற தமிழர்களால் எழுதப்பட்ட நாவல்களே போரிலக்கியம் என நீங்கள் ஒரு குறுகிய வரையறையை வைத்தால் கூட, உங்கள் பட்டியலில் தேவகாந்தன், மெலிஞ்சி முத்தன், விமல் குழந்தைவேல், நொயல் நடேசன், யோ.கர்ணன் போன்றவர்கள் ஏனில்லை?  நீங்கள் கொடுத்த பட்டியலிலுள்ளவர்களுடைய நாவல்களுக்குச் சமமாகவோ அல்லது சற்றே அதிகமாகவோ இவர்களது நாவல்களும் வாசிக்கப்பட்டு பேசப்படுகின்றனவல்லவா. போரிலக்கியம் என நீங்கள் குறிப்பிடுவது ‘போர்ப்பரணி’யை அல்ல என்றே நான் நம்புகிறேன் .

ஈழத்துப்போரைப் பற்றி எழுதியிருக்கும் இலக்கியப் பிரதிகளை எப்படி நான் மதிப்பிடுகிறேன் என்பதை வேண்டுமானால் சுருக்கமாகச் சொல்லலாம். ஓர் இலக்கியப் பிரதியை மதிப்பிடுவதற்கு எழுதும் கலை, இலக்கிய அழகியல் என்பவை முக்கியமானவை எனினும் இந்தத் திறன்கள் வாய்க்கப்பெற்ற ஓர் எழுத்தாளர்; சாதியை, மத அடிப்படைவாதத்தை, இனவாதத்தை, பாஸிசத்தை நியாயப்படுத்தி ஓர் இலக்கியப் பிரதியை எழுதினால், நான் அந்தப் பிரதியை நிராகரிக்கவே செய்வேன். நீங்களும் நிராகரிப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். ஏனெனில் அது அடிப்படை மனிதநேயத்துடனும் அறத்துடனும் சம்மந்தப்பட்டது. உச்சமாக இலக்கியத்திறன் வாய்க்கப்பெற்ற எஸ்.பொவின் ‘மாயினி’ நாவலை நான் இதனாலேயே நிராகரித்தேன். மிகச்சிறந்த கவியான கி.பி. அரவிந்தனின் கடைசிக் காலத்து எழுத்துகளையும் இந்தக் காரணங்களுக்காகவே நிராகரித்து எழுதினேன். இனப்படுகொலை செய்தவர்களையோ, சனநாயகப் படுகொலை செய்தவர்களையோ நியாயப்படுத்தி இலக்கியம் எழுதுவதும் போர்க்குற்றத்தின் ஒரு பகுதியே.

போரை எதிர்த்து இலக்கியத் தரத்தோடு பிரதிகளை உருவாக்கிய ஏராளமானவர்கள் நம்மிடையே உள்ளனர்.  சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்ததற்காகச் சில எழுத்தாளர்கள் தமது உயிரையும் எங்கள் மத்தியில்தான் இழந்தார்கள். யுத்தத்தை மறுத்தும் சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தும் எழுதப்பட்ட பிரதிகளே அறம் சார்ந்த பிரதிகள். சனநாயகத்தின் குரல்வளையை அறுத்துப் போட்டவர்களைக் கடவுளாகக் கொண்டாடியும், சிறார்களைப் போரில் கட்டாயமாக இணைத்ததை மழுப்பியும், சகோதர இனத்தவர்கள் மீதான படுகொலைகளை  நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட பிரதிகள் வெறும் காகிதக்குப்பைகள். நான்கூட என்னுடைய இருபத்தைந்து வயதுக்கு முன்னால், இப்படிச் சில குப்பைகளை எழுதியிருந்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஏனெனில் இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.

‘போரிலக்கியம்’ என்ற வகைப்பாட்டில் நீங்கள் குறிப்பிடும் ஈழ எழுத்தாளர்களை சேர்த்துக்கொள்ளலாம். நான் என்னுடைய வாசிப்பின் மதிப்பீட்டில் தான் சில பெயர்களைக் குறிப்பிட்டேன். அது அவ்வளவு தான் என்ற தீர்ப்பல்ல. நீங்கள் கூறுவதைப் போல சனநாயகத்திற்கான குரல் (உங்களுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் ஏனைய இயக்கங்களையும், இலங்கை அரச பயங்கரவாதத்தையும் லேசாக சாடுவது/தொட்டுக்கொள்வது) கொடுத்து எழுதப்பட்ட சமகால பிரதிகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

என்னுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டுவது, மற்றவர்களை லேசாகச் சாடுவது, என நீங்கள் சொல்வதை நான் பணிவுடன் மறுக்கிறேன்.

நான் உங்களை ஒன்று கேட்கிறேன். இலங்கை அரசின் இனப்படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் என்னளவுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், நடிப்பாகவும், பன்னாட்டு இலக்கியக் கருந்தரங்குகளாகவும், தொலைக்காட்சி – பத்திரிகை நேர்காணல்களாகவும் தமிழ் பரப்பில் மட்டுமல்லாமல் சர்வதேசச் சமூகத்திடமும் எடுத்துச்சென்ற இன்னொரு தமிழ் இலக்கிய எழுத்தாளனைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நான் முகநூலுக்குள்ளும் மொண்ணைத் தமிழ்த் தேசியர்களுக்குள்ளும் என்னைக் குறுக்கிக்கொண்டவன் கிடையாது. என்னுடைய தளம் சற்றே பெரிது.

பொக்ஸ், ம், இச்சா நாவல்கள் நீங்கள் படித்திருப்பதாகச் சொன்னீர்கள்.. இந்த நாவல்கள் இலங்கை அரசையா.. புலிகளையா முதன்மையாக விமர்சிக்கின்றன? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

மற்றைய தமிழ் இயக்கங்களைப் பற்றி என்ன எழுதிக் கிழித்தாய் எனக் கேட்டால் அதையும் போதுமானளவுக்குக் கிழித்திருக்கிறேன். மற்றைய முப்பது இயக்கங்கள் செய்த அராஜகங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தட்டிலும், புலிகள் தனியொரு இயக்கமாகச் செய்த அராஜகங்களை மறுதட்டிலும் வைத்து ஒரு தராசில் நிறுத்துப் பார்த்தால், புலிகளின் தட்டே தாழ்வதால் அவர்களைப் பற்றித்தான் அதிக விமர்சனங்கள் எழும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்க ஆசைப்படுகிறேன். மற்றைய தமிழ் இயக்கங்களது அராஜகங்களை மூடி மறைப்பதால் எனக்கு என்ன இலாபம்? நானென்ன அந்த இயக்கங்களது முன்னாள், இந்நாள் உறுப்பினரா? என்னுடைய எந்தப் புத்தகத்துக்காவது அவர்கள் ஏதாவது கூட்டம் கீட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா? என்னுடைய எழுத்துகளைப் பரப்பினார்களா? மாறாக விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய ‘மானுடத்தின் ஒன்றுகூடல்’ நிகழ்வில்தான் என்னுடைய ‘கொரில்லா’ நாவலைப் பற்றிப் பேசப்பட்டது எனக் கேள்விப்பட்டேன். டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாவோ, சித்தார்த்தரோ எனது ஏதாவதொரு புத்தகத்தைப் படித்தார்கள் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் பொட்டு அம்மானும் வே.பாலகுமாரனும் என்னுடைய வாசகர்கள் எனப் புலிகள் இயக்கத்திலிருந்த கருணாகரன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்து சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதிகள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். பாசாங்குக்கும், ஃபாஷனுக்கும் சனநாயகம் பற்றிப் பேசாமல், உண்மையான கரிசனையோடு எழுதப்பட்ட ஊழிக்காலம், உம்மத் நாவல்களும், கருணாகரனின் கவிதைகளும், செல்வம் அருளானந்தத்தின் ‘சொற்களில் சுழலும் உலகம்’ பிரதியும், யதார்த்தனின் கதைகளும், எப்போதுமே நான் விசுவாசிக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகளும் உடனே என் நினைவுக்கு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும், சமாதனத்திற்காக யுத்தம் செய்வதாக கூறி இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்காது “கதை” சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேரவாத பவுத்த சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதத்தின் இனப்படுகொலையை உலகம் மறந்து போயிற்று. தமிழ்த்தரப்பின் அரசியல் ராஜதந்திர தோல்வியாக இதனைப் பார்க்கலாமா?

நீங்கள் தமிழ் அரசியல் தலைமைகளின் இராசதந்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். சர்வதேசம் போர்க்குற்ற விசாரணையை நடத்தாது, இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்காது என்றெல்லாம் படிப்பறிவற்ற எனக்கே தெரியும்போது, சட்டங்களைக் கரைத்துக் குடித்த சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் அது தெரியாதா! அவர்கள் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, என்றெல்லாம் மனமாரப் பொய்சொல்லி, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான  இராசதந்திர நகர்வுகளை வெற்றிகரமாகச் செய்தார்கள். இப்போது அதைப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பேசக்கூடும்.

சிவசேனை சச்சிதானந்தன், காசி ஆனந்தன் போன்றவர்களுடையது ஆன்மீக இராசதந்திரம். ‘ஈழத்தமிழர்கள் இந்துக்களே’ எனச் சொல்லி இந்தியச் சங்கிகளின் ஆதரவைப் பெறுவது அவர்களின் திட்டம். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ன  செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழலுக்காகத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது ‘தர்மத்திற்கே தண்டனையா’ என ஓர் இராசதந்திர அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் என்பது மட்டுமே என் ஞாபகத்திலுண்டு.

சர்வதேச வல்லரசு நாடுகள், தமது அரசியல் மற்றும் மூலதன நலன்களுக்காக இலங்கை அரசுடன் நல்லுறவையே கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளும், இவற்றால் இயக்கப்படும் பொது நிறுவனங்களும் இலங்கைப் பிரச்சினையில் மனிதவுரிமை மீறலைக் கண்காணிப்பது என்ற எல்லையுடனேயே தங்களை நிறுத்திக் கொண்டிருக்ககிறார்கள். அதையும் அவர்கள் சரிவரச் செய்யவில்லை. இதைத் தாண்டி அவர்கள் இலங்கை இனப் பிரச்சினையில் தலையீடு செய்யப் போவதில்லை. முதலில் இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டோமா? இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள பத்து வருட காலங்கள் போதாதா? இனி இலங்கையில் நடக்கும் எந்த அரசுக்கொள்கை மாற்றமும் நாடாளுமன்ற அரசியல் வழியேதான் நடக்கும். அதை எதிர்கொள்ளச் சிறுபான்மை இனங்களுக்குத் தேவையானவை தமக்கிடையேயான அரசியல் ஒற்றுமையும் அணித்திரட்சியுமே. 

நாடாளுமன்ற அரசியல் வழியே இலங்கையில் அரசுக்கொள்கை மாற்றம் நிகழ்ந்துவிடுமென நீங்கள் கூறுவது உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது ஷோபா. எப்படி இத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான படுகொலைகளையும், வகைதொகையற்ற வன்முறைகளையும் எந்தவித ஆட்சேபணையுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இலங்கையின் நாடாளுமன்ற அரசியல் மூலம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு விடிவு கிடைக்குமென எண்ணுகிறீர்களா? அதற்கு உங்கள் அரசியல் அறிவில் என்ன உத்தரவாதம்?

நாடாளுமன்ற அரசியல் வழியாகத்தான் இலங்கையில் அரசினுடைய கொள்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? வேறெதாவது வழியில் இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு இப்போது நம்பிக்கையில்லை.

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடைந்து அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது அற்புதமான விஷயம்தான். அது நடந்துவிடும் என்றுகூட நான் நீண்ட நாட்களாக நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, ஒரு ட்ராட்ஸ்கியக் கட்சியோடு சில ஆண்டுகள் வேலையும் செய்தேன். ஆனால் அப்படி நடப்பதற்கான எந்த அகப் – புறச் சூழல்களும் இலங்கையில் கிடையாது. இயக்கங்களின் வழியில் ஆயுதப் போராட்டத்தை எங்கள் மக்கள் முன்னெடுப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை. தவிரவும் ஆயுதப் போராட்டத்தைக் காட்டிலும் நாடாளுமன்ற அரசியல் முறையே சிறந்தது என்றே நான் இப்போது நம்புகிறேன்.

இலங்கையில் புரட்சி வரும், எழுச்சி வரும், அய்ந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்றெல்லாம் யூ-டியூபில் கணக்குள்ள எவர் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைச் சொல்வதால் இவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை. இப்படிச் சொல்பவர்களில் ஏறக்குறைய முழுப்பேருமே இலங்கைக்கு வெளியே வாழ்பவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே.

இன்று இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற அரசியலில்தான் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்றன. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட ஒரு தேர்தல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற அரசியலில் சிறுபான்மை இனங்கள் இன்னும் முற்றாக வலுவிழந்து விடவில்லை. அவர்கள் ஓரணியில் நின்றுதான் மகிந்த ராஜபக்சவைத் தோல்வியடையச் செய்தார்கள்.  ‘தமிழர்களின் வாக்குகளாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என மகிந்தவே சொன்னார். இம்முறை சனாதிபதி தேர்தலில் இன்னும் அற்புதமான முறையில் சிறுபான்மை இனங்கள் ஒருங்கே நின்று கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தார்கள். மாகாண சபைத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னேயே திரண்டார்கள். இந்த ஒற்றுமை இன்னும் வலுப்பட வேண்டும். தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்க்கட்சிகள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்கள், தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாக மாறுவதால் மட்டுமே இலங்கை அரசியல் சாசனத்திலோ அரசுக் கொள்கைகளிலோ மாற்றம் கொண்டுவர முடியும். இது நடக்காதென்றால் முழு இலங்கையும் நீண்டகாலப் போக்கில் சிங்கள மயமாக்கப்பட்டு விடும். பெரும்பான்மை இனத்தின் கீழே சிறுபான்மை இனங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த எத்தனையோ நாடுகளில் கடைசியாக இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்.பொ, உங்கள் படைப்புக்களில் பாதிப்பைச் செலுத்துகிறாரா?

என்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் அவரின் பாதிப்பு நிச்சயமாக இருந்தது. எனினும் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு எனக்கான பாணியை உருவாக்கி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அப்பையா எஸ்.பொவும், தந்தை டானியலும், கு. அழகிரிசாமியும், டால்ஸ்டாயும், பாரதியும், மகா ஸ்வேதாதேவியும், ஜெயகாந்தனும் தங்கள் எழுத்துகள் வழியே எனக்கு வாழ்க்கையைக் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் என் ஆன்மாவை நிறைத்திருக்கிறார்கள். என் எழுத்தில் மட்டுமல்ல; என் தனிப்பட்ட வாழ்க்கையில், அன்றாடச் செயற்பாடுகளில், அரசியல் அறத்தில், காதல் வாழ்க்கையில், ஏன் செக்ஸில் கூட அவர்கள் கலந்திருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு தேடல் அவசியமானது என்கிற கருதுகோள் எனக்குண்டு. நீங்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டின் சித்திரங்களை உங்கள் புனைவுகள் இன்னும் தீவிரமாக வெளிப்படுத்த தொடங்கவில்லை. ‘வெள்ளிக்கிழமை’ சிறுகதையில் அது தொடப்பட்டிருக்கிறது. ஏன் நீங்கள் பிரான்ஸை உங்களின் அனுபவங்களுக்குள்ளால் இன்னும் படைப்புக்களில் முன்வைக்கத் தொடங்கவில்லை ?

ஏனென்றால் எனக்கு பிரான்ஸ் நாட்டோடு உணர்வுபூர்மாக எந்தப் பிணைப்பும் ஏற்படவில்லை. இந்நாட்டின் மொழியை, கலாசாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு எந்த உந்துதலும் ஏற்படவில்லை. மனம் முழுவதும் ஈழத்தைச் சுற்றியே அலைகிறது. நினைவுகள், கனவுகள், கற்பனைகள் எல்லாமே தாய்நாட்டைச் சுற்றியதுதான். இது ஏதோ எனக்கு மட்டுமேயுள்ள இயல்பாக நீங்கள் கருதத் தேவையில்லை. என் தலைமுறையில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினருக்கும் பொதுவான பண்பு இது. அதுவும் பழைய இயக்கக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் அறுபது வயதைக் கிட்டத்தட்ட நெருங்குகிறார்கள்… ஆனால் இன்னமும் எண்பதுகளின் ஈழத்திலும் வெலிகடைச் சிறையிலும் இந்தியாவின் சவுக்குமரக் காடுகளிற்குள்ளுமே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

புலம்பெயர் வாழ்வின் மிக முக்கியமான பிரச்சனையை பதிலாக  கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய இலக்கிய செயற்பாட்டினைக் கடந்து நீங்கள் இன்றைக்கு ஒரு திரைப்பட நடிகரும் கூட. நடிகராக உங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள்?

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம், மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். அப்போது மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக அடையாளப்படுத்துவதற்காக, இலங்கையில் தேசிய அடையாள அட்டைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்மையில் இந்தியாவில் கடும் எதிர்ப்புக்குள்ளான CAA -NPR போன்ற சட்டமேயது. அந்தச் சட்டத்தை எதிர்த்து எங்களது கிராமத்துப் பண்டிதர் க.வ.ஆறுமுகம் ‘அடையாள அட்டை’ என்றொரு நாடகத்தை எழுதி மேடையேற்றினார். அந்த நாடகம் ஓரளவு பிரபலமானது. யாழ் முற்றவெளி அரங்கில் கூட நிகழ்த்தப்பட்டது. அந்த நாடகம் நடத்துவதற்கு காவற்துறையினரின் இடைஞ்சலுமிருந்தது. அந்த நாடகத்தில் என் ஊரவர்களே நடித்தார்கள். என் அப்பாவும் நடித்திருந்தார்.

எங்களது கிராமத்தில் எல்லோருக்குமே நடிக்கும் ஆசை இருந்தது என்றால் ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாகயிருக்கும். கிராமத் திருவிழாக்களில் நாடகமோ கூத்தோ நடத்தப்படும்போது, அதில் ஒரு பாத்திரத்தை எப்படியாவது பெற்றுவிடுவதற்கு பல இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்வோம். பத்து வயதிலேயே காலில் சலங்கை கட்டிவிட்டேன். நடிப்பது குறித்த என் கனவுகள் பெரிதாகவேயிருந்தன

‘தீபன்’ படத்துக்குப் பிறகு, சிறிதும் பெரிதுமாக பத்து பிரஞ்சு, ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளேன். மேடையிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. நடிகராக எனக்குக் கிடைத்த வரவேற்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். பிழையில்லாமல் நடிக்கிறேன் என்றுதான் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். Cannes, César, INOCA, Helpmann விருதுகளுக்காக, சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரையாகியிருந்தேன். எனினும் மகா நடிகர்கள்  விருதைத் தட்டிச் சென்றுவிட்டார்கள். சிறந்த நடிகருக்கான International Cinephile Society விருது கிடைத்தது. இவையெல்லாம் மற்றவர்கள் எழுதிய கதைகளில் நான் நடித்ததற்காகக் கிடைத்தவை. நான் திரைக்கதையில் பங்களித்து நடித்திருந்த ‘செங்கடல்’ திரைப்படம் இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டதும், ‘ROOBHA’ திரைப்படம் பால்புதுமையினர் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உரையாடல்களை உருவாக்கியதும் எனக்கு எழுத்தாளனாகவும் மகிழ்ச்சியளிப்பவை.

ஜெயமோகன், ஒரு குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக நிறைய இடங்களில் உங்களை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக வருகிற பகிடிக்கலையை அவர் பாராட்டியுமிருக்கிறார். அவரின் புனைவுகளில் உங்களுக்கு இணக்கமான பிரதி என்றால் எதனைக் கூறுவீர்கள்?

ஜெயமோகனின் பிரதிகளிலே எது பிடித்தமானது எனக் கேட்டாலே சொல்லமாட்டேனா? எதற்கு இப்படிச் சுற்றிவளைத்துக் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் பிடிபடவில்லை.

‘ஏழாம் உலகம்’ நாவலைச் சொல்வேன். நுட்பமான அவதானிப்புகளும் சித்திரிப்புகளுமாக மானுடத்தின் இழிவை முன்வைத்து, மாபெரும் குற்றவுணர்வுக்குள் நம்மைத் தள்ளி நிலைகுலையச் செய்துவிடும் நாவலது. மானுட அறங்களுள் தலையாதது ‘குற்றவுணர்வு’ என்ற கருத்து எனக்குண்டு. உலகின் மகத்தான பல நாவல்களில் இந்தத்தன்மை இருப்பதை அவதானித்திருக்கிறேன். புத்துயிர்ப்பு, ஆரண்யக், Uncle Tom’s cabin என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏழாம் உலகம் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘நான் கடவுள்’ திரைப்படத்தில்; அகோரி, அஹம் பிரம்மாஸ்மி கொலைக் கூத்துக்களை அடித்திருக்காவிட்டால் அந்தத் திரைப்படம் உலகத்தரத்துக்கு உயர்ந்து நின்றிருக்கும். அந்த நாவலுக்கும், படத்தை இயக்கிய பாலாவுக்கும், இசையமைத்த இசைஞானிக்கும் அந்த உயரத்திற்குச் செல்வதற்கான வல்லமையுண்டு.

உங்களுடைய வாசிப்பில் எப்போதும் ஞாபகத்தில் நிற்கும் புத்தகம் எது? ஞாபகத்தில் நிற்பதற்கான காரணம் என்ன?

ஆர்.கே.நாரயணன் எழுதிய ‘Malgudi Days’ நூல் குறித்து, என் சிறுவயதிலேயே கேள்விப்பட்டிருந்தேன். அதைப் படிப்பதற்கு மிகவும் ஆர்வமாகயிருந்தாலும், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாததால் படிக்க முடியவில்லை. அந்நூல் பல்வேறு உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது, நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளெல்லாம் அந்நூலைப் புகழ்ந்தன எனக் கேள்விப்பட்ட போதெல்லாம், அந்நூலைப் படித்தாக வேண்டுமென வெறியே வந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் காத்திருந்ததன் பின்பாக, சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்தேன்.

ஆனால் அந்நூலில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை மிகச் சாதாரண கதைகளே. வீரகேசரி வாரமலர்களில் இவற்றைவிடச் சிறந்த கதைகளை நான் படித்திருக்கிறேன். எதைக்கண்டு வெளிநாட்டார் இந்நூலை வணக்கம் செய்தார்கள் என எனக்கு இன்னும் புரியவேயில்லை. இந்தப் புத்தகம் இனி எப்போதும் என் ஞாபகத்தில் நிற்கும். இனி ஒவ்வொரு புத்தகத்தை வாங்கும்போதும் இந்நூலின் வாசிப்பு அனுபவம் என்னை எச்சரித்து சாக்கிரதையாக வழிநடத்தும்.

உங்களுடைய புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இல்லை. ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ ஒரு கட்டுரைத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டாலும் அதே புனைவு மொழியே இருக்கிறதே ஏன்? இதனையுமொரு பின்நவீனத்துவ செயற்பாடென விளங்கிக்கொள்ளலாமா?

பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஏன் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். அறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ நூலில் கையாண்ட விமர்சன மொழி என்னை மிகவும் பாதித்திருந்த காலத்தில்தான் எனது முதல் நீள் கட்டுரையான ‘சோவியத் சினிமாக்களும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்ற கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையில் ‘கம்பரசம்’ பாணியையே அடியொற்றினேன். கதைச் சுவாரசியத்தோடேயே கட்டுரைகளையும் எழுதிவிடலாம் எனத் தெரிந்துகொண்டேன்.

புதிய ஜனநாயகம் – கலாசாரம் இதழ்கள் கையாண்ட மொழியின் பாதிப்பும் என்னிடருந்தது. அதனால் என் விமர்சன எழுத்துகளில் அப்போது ஒரு மூர்க்கத்தனமுமிருந்தது. இப்படியாகத்தான் இன்றைய என் அபுனைவு மொழி உருவானது. இதை உங்களால் நம்பமுடியவில்லை என்றால், கூட்டுப்புழுவிலிருந்துதான் பட்டாம்பூச்சி உருவாகிறது என்பதையும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.

கொரோனா கொள்ளை நோய்க்காலத்திற்கு பின்பான உலக அரசியலில் நிறைய நெருக்கடிகள் நிகழுமென எல்லோரும் கருதுகிறார்கள். இந்த நோயின் தாக்கம் நீங்கள் வாழக்கூடிய பிரான்சிலும் தற்போது அதிகமாகவே இருக்கிறது. இதன் பிறகான உலகம் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளுமென அச்சப்படுகிறீர்கள்?

எதிர்கொள்ளப் போகும் பாரிய பொருளாதரச் சரிவு, வேலையிழப்பு, மருத்துவக் கட்டமைப்பின் சீர்குலைவு எல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்கள்தான். அதிகமும் கவனம் குவிக்கப்படாத விஷயமொன்றைக் குறித்தும் நாம் அச்சப்பட வேண்டியிருக்கிறது.

போர், அரசியல் அச்சுறுத்தல்கள், இயற்கை அழிவுகள், வறுமை போன்ற காரணங்களால் அகதிகளும் குடியேற்றத் தொழிலாளர்களும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த அகதிகளதும் குடியேற்றத் தொழிலாளர்களதும் வருகையைத் தடுக்க பலநாட்டு அரசாங்கங்கள் கடுமையாக முயன்று கொண்டேயிருந்தன. இந்தப் பேரழிவைச் சாக்காக வைத்து, அகதிகளுக்கும் குடியேற்றத் தொழிலாளர்களுக்கும் கதவுகள் முற்றாகவே மூடப்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்.

எனக்கொரு ஆசையுமுள்ளது. கடவுள் நம்பிக்கையாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னால் அவர்களுடைய முட்டாள்தனத்தை நம்பவே முடியாமலிருக்கிறது. அதிலும் கற்றறிந்தவர்கள், இலக்கியம் பயின்றோர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எப்படித் தாங்கள் கற்ற அறிவுக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் கோயில்களிலும் சேர்ச்சுகளிலும் பள்ளிவாயில்களிலும் சடங்குகளிலும் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. சக மனிதர்களும் அறிவாயுதமும் குழந்தைகளும் கொடுக்காத அரவணைப்பையும் மனநிம்மதியையும் நம்பிக்கையையுமா கடவுள் என்கிற கற்பிதம் கொடுத்துவிடப் போகிறது? ஆகக் குறைந்தது கடவுளை வணங்குவதில் எவ்வளவு நேரமும், சடங்குகளில் பொருளும் வீணாகிறது என்று கூடவா யோசிக்க மாட்டார்கள்? இது பெரும் மூடநம்பிக்கை என்றால், சிறுதெய்வ வழிபாடு எனச்சொல்லி சிறு மூடநம்பிக்கையைப் பேசுபவர்கள் தனி. பண்பாடு, மரபு எனச் சொல்லி மதங்களைப் தூக்கிப்பிடிக்கும் அறிவுஜீவிக் கிரிமினல்களுக்கும் குறைவில்லை.

கடவுள் நம்பிக்கையே அற்ற முக்கால்வாசிச் சனத்தொகையைக் கொண்ட சுவீடன், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனிதர்களெல்லாம் என்ன கெட்டுவிட்டார்கள்? அவர்களிடமும் காதலும் உறவும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கலாசாரமும் மனித மாண்புகளும் இல்லையா என்ன! இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதுபோல, மதத்தின் பெயரால் சக மனிதனையும் பெண்களையும் அவர்கள் விலக்கியா வைக்கிறார்கள்? கொன்றா போடுகிறார்கள்?

புரட்சிகளின் பின்னாக மட்டுமல்லாமல், மனிதப் பேரழிவுகளின் பின்னாலும் கூட மக்கள் கூட்டாகத் தங்களது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னாக அய்ரோப்பாவில் சனநாயகம், தனிமனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வெகுவாக அதிகரித்ததையும், உலகம் முழுவதும் காலனித்துவத்துக்கு எதிரான எழுச்சிகள் உத்வேகம் பெற்றதையும் நாம் கவனிக்கலாம்.

கண்முன்னே நடக்கும் கொரோனா என்னும் பெரும் மானுட அழிவைப் பார்த்தாவது, மூடப்பட்டு இருண்டு கிடக்கும் வழிபாட்டுத்தலங்களைப் பார்த்தாவது, இந்தக் கடவுள் நம்பிக்கையாளர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விழித்துக்கொள்ள மாட்டார்களா, மதங்களை விட்டு வெளியேற மாட்டார்களா என்ற பேராசை எனக்குண்டு.

55557139_10218642449593927_8543575574000

***

http://www.yaavarum.com/archives/5466

Share this post

Link to post
Share on other sites
On ‎07‎-‎05‎-‎2020 at 18:19, கிருபன் said:

"இராஜேந்திரசோழன்" என்பவர் ஈழத்து எழுத்தாளரா?
"திருமதி செல்வி" கதை வாசித்தனீங்களோ? , முடிந்தால் அந்த கதையை கொண்டு வந்து இணையுங்கோ.
 
Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ரதி said:

"இராஜேந்திரசோழன்" என்பவர் ஈழத்து எழுத்தாளரா?
"திருமதி செல்வி" கதை வாசித்தனீங்களோ? , முடிந்தால் அந்த கதையை கொண்டு வந்து இணையுங்கோ.
 
இராசேந்திர சோழன் தமிழக எழுத்தாளர். தேசியம் மார்க்சியம் பற்றி எழுதுபவர். அவருடைய எழுத்துக்களை படித்த நினைவு இல்லை.

சாத்திரியின் கதை யாழில் வாசித்த நினைவு. ஆனால் மட்டுறுத்துனர்களால் தூக்கப்பட்டதாகவும் ஞாபகம்!

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, கிருபன் said:

இராசேந்திர சோழன் தமிழக எழுத்தாளர். தேசியம் மார்க்சியம் பற்றி எழுதுபவர். அவருடைய எழுத்துக்களை படித்த நினைவு இல்லை.

சாத்திரியின் கதை யாழில் வாசித்த நினைவு. ஆனால் மட்டுறுத்துனர்களால் தூக்கப்பட்டதாகவும் ஞாபகம்!

நானும் வாசித்த நினைவு ...சு.ப மனைவியை பற்றிய கதையா ?

Share this post

Link to post
Share on other sites

இவரின் கூத்துப் பெரிய கூத்து. யாரோ ஒரு முகநூல் முகவர்.. மாக்ஸியம் என்றால் என்ன என்று சொல்லக் கேட்க.. தனக்கு அது தெரியாது.. 5 வருடங்கள் தாருங்கள் வாசித்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று ஒளிந்து ஓடிவிட்டாராம். முகநூலில் கழுவி ஊத்துகிறார்கள். இங்க இவருக்கு.. காவடி. 

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, nedukkalapoovan said:

இவரின் கூத்துப் பெரிய கூத்து. யாரோ ஒரு முகநூல் முகவர்.. மாக்ஸியம் என்றால் என்ன என்று சொல்லக் கேட்க.. தனக்கு அது தெரியாது.. 5 வருடங்கள் தாருங்கள் வாசித்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று ஒளிந்து ஓடிவிட்டாராம். முகநூலில் கழுவி ஊத்துகிறார்கள். இங்க இவருக்கு.. காவடி. 

அவர் தெரியாததை,தெரியாது என்று ஒத்துக் கொண்டு 5 வருட காலம் தவணை கேட்டு உள்ளார் [உங்கள் கருத்து] இது எப்படி ஓடி ஒழிவதாகும்😄.. தெரியாததை  ஒத்து கொள்வதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும் 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
3 minutes ago, ரதி said:

அவர் தெரியாததை,தெரியாது என்று ஒத்துக் கொண்டு 5 வருட காலம் தவணை கேட்டு உள்ளார் [உங்கள் கருத்து] இது எப்படி ஓடி ஒழிவதாகும்😄.. தெரியாததை  ஒத்து கொள்வதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும் 

அப்ப இவ்வளவு காலமும் தெரிந்தது மாதிரி அளந்து கிட்டு திரிந்தது....????! ஒரு மாக்ஸியம் தெரிந்தவனிடமும் மாட்டாத காரணத்தால் போலும்.

அதுபோல்.. தான் இவர்களின் எழுத்துகளும் படைப்புகளும். இதில இவர்களுக்கு பெரிய படைப்பாளின்னு அந்தஸ்து கொடுத்து தூக்கி தலையில் வைத்து ஆட ஒரு கூட்டம். 

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, nedukkalapoovan said:

அப்ப இவ்வளவு காலமும் தெரிந்தது மாதிரி அளந்து கிட்டு திரிந்தது....????! ஒரு மாக்ஸியம் தெரிந்தவனிடமும் மாட்டாத காரணத்தால் போலும்.

அதுபோல்.. தான் இவர்களின் எழுத்துகளும் படைப்புகளும். இதில இவர்களுக்கு பெரிய படைப்பாளின்னு அந்தஸ்து கொடுத்து தூக்கி தலையில் வைத்து ஆட ஒரு கூட்டம். 

அவர் இருக்கட்டும் . நீங்கள் சொல்லுங்கோ மாக்சீசம் என்றால் என்ன ?

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, ரதி said:

அவர் இருக்கட்டும் . நீங்கள் சொல்லுங்கோ மாக்சீசம் என்றால் என்ன ?

எனக்கு மாக்ஸீயத்தில் அக்கறையே கிடையாது. 

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, nedukkalapoovan said:

எனக்கு மாக்ஸீயத்தில் அக்கறையே கிடையாது. 

அவர் தன்னை எங்கேயாவது மாக்சீசவாதி என்று அடையாளப்படுத்தினாரா?...பாவம் அவரே காசுக்குக்காய் எழுதுகிறார் அவரை போய் வம்புக்கு இழுத்துக் கொண்டு 🤭

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, ரதி said:

அவர் தன்னை எங்கேயாவது மாக்சீசவாதி என்று அடையாளப்படுத்தினாரா?...பாவம் அவரே காசுக்குக்காய் எழுதுகிறார் அவரை போய் வம்புக்கு இழுத்துக் கொண்டு 🤭

இவர் பலகாலமாக தன்னை ஒரு மாக்ஸீயவாதி.. தலித்தியவாதி.. பகுத்தறிவுவாதி.. பெண்ணிலைவாதி.. புலிவாந்தி வாதி.. இப்படிப் பல பிரமானங்களை காட்டித்தான்.. தன் எழுத்துக்களை இணையத்தில் ஏற்றியவர். ஒன்றிலும் இவருக்குத் தெளிவில்லை.. என்பதை இப்ப அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால்.. அது விளம்பரமும்.. வியாபாரமும்.. ஓரளவுக்கு மேம்பட்ட பின் தான். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

நானும் வாசித்த நினைவு ...சு.ப மனைவியை பற்றிய கதையா ?

ம்

5 minutes ago, nedukkalapoovan said:

இவர் பலகாலமாக தன்னை ஒரு மாக்ஸீயவாதி.. தலித்தியவாதி.. பகுத்தறிவுவாதி.. பெண்ணிலைவாதி.. புலிவாந்தி வாதி.. இப்படிப் பல பிரமானங்களை காட்டித்தான்.. தன் எழுத்துக்களை இணையத்தில் ஏற்றியவர். ஒன்றிலும் இவருக்குத் தெளிவில்லை.. என்பதை இப்ப அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால்.. அது விளம்பரமும்.. வியாபாரமும்.. ஓரளவுக்கு மேம்பட்ட பின் தான். 

ஞானிகளுக்குத்தான் எதிலும் தெளிவு இருக்கும்😀

கல்லாதது உலகளவு என்று நெடுக்ஸிற்குத் தெரியும்தானே!

30 minutes ago, ரதி said:

அவர் தன்னை எங்கேயாவது மாக்சீசவாதி என்று அடையாளப்படுத்தினாரா?...பாவம் அவரே காசுக்குக்காய் எழுதுகிறார் அவரை போய் வம்புக்கு இழுத்துக் கொண்டு 🤭

காசுக்கு எழுதி பாரிஸில் பலஸ் கட்டத்தானே போகிறார்😉

நெடுக்ஸ் இன்னமும் மாணவப்பருவத்தில்தானே இருக்கின்றார்! அதைப் பற்றி ஜெயமோகனின் கதையொன்றில் இன்று படித்தது😎

மாணவப் பருவம் உற்சாகமானது. ஆனால் அந்த இளமை குரூரமானது தெரியுமா? சின்னக் குழந்தைகள்பலவீனமான குழந்தையை போட்டு அடிப்பதை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? மாணவர்களைப்போலஇளகியவர்களும் இல்லை, இரக்கமில்லாதவர்களும் இல்லை. அவர்களிடையே சாதி, சமூகமேட்டிமைத்தனம்எல்லாமே உண்டு. உண்மையில் இன்றைய மாணவர்களிடம் நீதியுணர்ச்சி என்பதே இருக்காது. ஏனென்றால் நம்குடும்பங்களில் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை. தொழில்நுட்பத்திற்கு வெளியே எதையாவதுவாசிக்கக்கூடிய மாணவர்கள் ஓரிருவர் கூட இல்லை. ஆகவே வேறு எந்தவகையிலும் அவர்களுக்கு அறமோநீதியுணர்வோ அறிமுகமாவதே இல்லை.

அதோடு இன்றைய உயர்கல்வி வளாகங்களில் சமத்துவம், எளியோர் உரிமை போன்ற அரசியல்கருத்துக்களுக்கே இடமில்லை. கல்லூரிகளில் இடதுசாரிக் கருத்துக்கள் கொண்ட ஒருவர் கூடஇருப்பதில்லை. அவர்கள் இடதுசாரி ஆவதெல்லாம் நல்ல வேலையில் போய் அமர்ந்தபிறகு ஃபேஸ்புக்கில்மற்றவர்களை வசைபாடுவதற்கும் தாங்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை வழியாக அடையும் குற்றவுணர்ச்சியைசமன் செய்துகொள்வதற்கும்தான்

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, கிருபன் said:

நெடுக்ஸ் இன்னமும் மாணவப்பருவத்தில்தானே இருக்கின்றார்! அதைப் பற்றி ஜெயமோகனின் கதையொன்றில் இன்று படித்தது😎

உண்மை தான். ஆனால்.. உந்த ஊருலக தத்துவ ஞானி புளிச்சமாவு ஜெயமோகன் அளவுக்கு நேசறிப் பிள்ளையாக இல்லை. 

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, கிருபன் said:

காசுக்கு எழுதி பாரிஸில் பலஸ் கட்டத்தானே போகிறார்😉

நான் அவரை அவமானப்படுத்துவதற்காகவோ அல்லது நக்கலடிப்பதற்காகவோ எழுதவில்லை ...நீங்கள் சொல்லுங்கோ மாக்சிசம் என்றால் என்ன 🙂

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, ரதி said:

நீங்கள் சொல்லுங்கோ மாக்சிசம் என்றால் என்ன 🙂

நானும் மார்க்சியத்தை படிக்கவில்லை! அதை ஒற்றை வரியில் விளங்கப்படுத்தவும் முடியாது.

மார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி. மூலதனம் எனும் நூலை எழுதினார். அதனை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் நிறைய நேரமும் ஆழ்ந்த தேடலும் தேவை. 

தோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து படித்தால் நல்லது. குறைந்த பட்சம் முன்னுரையையாவது படித்தால் மேற்கொண்டு படிக்கலாமா இல்லையா என்று தீர்மானிக்கலாம்😀

நூல்கள் இங்கே இலவசமாகக் கிடைக்கின்றன:

https://www.vinavu.com/2019/08/09/karl-marx-das-kapital-in-tamil-pdf-free-download/

தோழர் சபா நாவலன் மூலதனத்தை வாசிப்பது பற்றி எழுதியது..

மார்க்ஸ் தான் எழுதத் திட்டமிட்டிருந்தவற்றுள் எட்டில் ஒரு பகுதியையாவது எழுதி முடிக்க இயலவில்லை என்று பேராசிரியர் டேவிட் ஹார்வி கூறுகிறார். அந்தப் பகுதி மட்டுமே உலகின் இன்றை பல சிக்கல்களை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே எதிர்வு கூறியுள்ளது என்பது தான் அதன் சிறப்பு.

-முதலாளித்துவ சமூக அமைப்பு.

-வர்க்கங்கள், உழைப்புசக்தி,உற்பத்தி

-பணச்ச்சுற்று

-உற்பத்தித் திறனற்ற வர்க்கம்.

-தனியார் மயமாக்கம்.

-கடன் பொறிமுறை

-அரசு.

-உழைப்புப் பிரிவினை

– சர்வதேச உழைப்புப் பிரிவினை.

– பரிமாற்றம்.

– வரி

– அரச கடன்.

– பொதுத்துறை கடன்.

– காலனிகள்.

– உலகச் சந்தையும் நெருக்கடியும்.

– ஏற்றுமதியும் இறக்குமதியும்

போன்ற விடயங்களை ஆராயப் போவதாக கார்ல் மார்க்ஸ் மூலதனத்தை எழுத ஆரம்பிக்கிறார்.

தனது வாழ்வின் நாற்பது வருடங்களை முழுமையாக மூலதனத்தை எழுதுவதற்காக அர்பணித்துள்ள கார்மார்க்ஸ் மூலதனத்தின் வறுமையே கொன்று போட்டது.

கார்ல் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த அத்தனை விடயங்களும் இன்னமும் யாராலும் முழுமையாக முடித்துவைக்கப்படவில்லை. கார்ல்மார்க்சின் மூலதனத்தைப் புரிந்துகொள்ள முயற்சிபவர்களே அருகிப்போயிருந்த சூழல் மாற்றமடைகிறது நம்பிக்கை தருவதாக உள்ளது.
திரிபுகளையும் அழிவுகளையும், சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் முன்வந்து எதிர்கொள்ள புதிய முன்னேறிய சமூகப்பிரிவை கடந்த பத்தாண்டுகளின் உலக நெருக்கடி உருவாக்கியுள்ளது.

மூலதனத்தின் முதற்பாகத்தை விளங்கிக்கொள்வதே கடினமானது. ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று கூட புரிந்துகொள்ளக் கடினமானது. உற்பத்திப் பண்டம் குறித்தே முதல் பாகம் முழுவதும் பேசப்படுகிறது. தனது பிரஞ்சுப் பதிப்பின் முன்னுரையில் கார்ல்மார்க்ஸ் இது குறித்துக் கூறியுள்ளார்.
பிரஞ்சுப் பதிப்பைத் தொடராக வெளியட பதிப்பகத்தார் தீர்மானித்த போதே கார்ல் மார்க்ஸ் அதற்கான முன்னுரையை எழுதுகிறார். இதுவரை பொருளாதர ஆய்வுகளில் பயன்படுத்தாத பகுப்பாய்வு முறை பிரயோகிக்கப்படாமையால் ஆரம்பப் பகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவையாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார். ஆக, ஆரம்பப் பகுதிகளைப் படித்துவிட்டு நூலையே நிராகரிக்கின்ற தன்மை ஏற்படும் என எச்சரிக்கிறார்.
மூலதனத்தை மறு வாசிப்புச் செய்தல் குறித்த இந்தத் தொடரை எழுத முற்பட்ட போது ஆரம்பப் பகுதிகளை நிராகரிக்க முடியாதாயினும் இலகுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவானது.

மார்க்சிச ஆய்வு முறை குறித்த புரிதல் வாசிப்பதற்கு முன்னமே ஏற்பட்டிருந்தால் வாசிப்பு இலகுவானதாகும்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, கிருபன் said:

சுருக்கமாய் இரண்டு வரியில் எழுதுவீர்கள் என்று பார்த்தால் என்ன இது:shocked: ...மினக்கெட்டு பதில் எழுதினத்திற்கு நன்றி 

Share this post

Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இங்கு மாரிகாலங்களில் சில இடங்களில் அட்டை கால் வைக்க இடமில்லாமல் ஊர்ந்து திரியும், உங்கள் அவுஸ் விண்ணப்பமும் நிரகாரிப்பட்டுவிட்டது😀
  • கறுப்பு அட்டையை காராகவும், சிகப்பு பஸ்ஸாகவும் பார்த்து விளையாடியிருந்தா இந்த பிரச்சனை வராது.
  • நன்றி புலவர் தாங்கள் தமிழரிடையே கிறீத்துவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லையென்று கூறியதற்கு. அது உங்கள் நல் மனதைக் காட்டுகிறது. 🙏 எனது நண்பர்களில் 99%மானோர் சைவ சமயத்தவர்களே. எங்களிடையே எந்த விதமான சமயம் சார்  வேறுபாடுகளோ சாதி சார்பான வேறுபாடுகளோ எதனையும் நானும் எனது சகோதரர்களும் உணர்ந்ததேயில்லை என்பதை பெருமையுடன், நெஞ்சை நிமிர்த்திக் கூறுவேன். 😀 யாழ் மாநகர சபைக்குட்பட்ட சைவக் கோவில் ஒன்றின் நிர்வாக சபை தெரிவுக் கூட்டமொன்றிற்கு நானும் எனது சகோதரர்களும் நண்பர்கள் அனைவரும் ஒருமுறை போயிருந்தோம்.  என்னையும் எனது சகோதரர்களையும் அடையாளம் கண்டு கொண்ட தர்மகர்த்தா கூட்டத்தின் இடையில் எழுந்து நின்று எல்லோர் முன்னிலையிலும் எங்களை நோக்கி தம்பிகள் நீங்கள் வேதக்காறர் நிர்வாக சபைத் தெரிவில் வாக்களிக்க முடியாது என்று கூறினார். நான் கூறினேன் இல்லை அண்ணர் சும்மா பொடியங்களோட வந்தனாங்கள் என்று கூறி மண்டபத்திலிருந்து வெளியேற முற்பட்டோம்.  அப்போது அவர் எங்களை மறித்து, தம்பிமார் நீங்கள் போகத் தேவையில்லை. வாக்களிக்காவிட்டால் சரி என்றார். 😀 நாம் தமிழராய் இருந்த காலம் அது 😀 ஆனால்  இது உண்மையான நிலவரத்தைக் காட்டபில்லை என்பதை பின்னர் உணர்ந்தேன். ☹️ கிறீத்துவர்கள் தாங்கள் வேறுபாட்டை உணர்வதாகக் கூறும்போது உடனே நிராகரிக்காமல் ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போதுதான் இருபகுதியினருக்கும் இடையேயான புரிந்துணர்வு உண்டாகும் என நம்புகிறேன். 👍 இங்கே மேலும் ஒன்ரைத் தெளிவாகக் கூறுகிறேன். பெரும்பாலான கிறீத்துவர்கள் தங்களைத் தமிழராகத்தான் உணர்கிறார்கள். ஆனால் பாகுபடு காட்டப்படுவதும் அதை உணரும் சந்தர்ப்பங்களும்  சாதாரண நடுத்தர மக்களிடையே வெகு அரிதான சந்தர்ப்பங்கள். ஆனால் சமூகத்தின் வகுப்புப் பிரிவு நிலைகளின் உயரத்திற்குச் செல்லும்போது அந்த வேற்றுமையை உணரலாம். ☹️ இவை எனது அனுபவங்கள். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 👍
  • அது சிம்பிள் அக்கா. உந்த கொத்து ரொட்டி போடுறியள் எல்லோ... அப்படியே அட்டைக் கொத்து எண்டு ஊர்ல ஒரு புது அயிட்டத்தை போட்டு விடுங்கோ. வியாபாரமும் ஓகோ எண்டு போகும்..... அட்டையும் இல்லாமல் போயிடும்.... ஆகா.... நல்ல வருமானம், நல்ல வருமானம் என்று அத்தார் கல்லாவில காசை வாங்கிப் போடுற மாதிரியும் இருக்கும். என்ன சொல்லுறியள்?