Sign in to follow this  
கிருபன்

கொரோனா வைரஸ் மருந்து: ஆல்கஹால் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையா? அறிவியல் என்ன சொல்கிறது?

Recommended Posts

கொரோனா வைரஸ் மருந்து: ஆல்கஹால் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையா? அறிவியல் என்ன சொல்கிறது?

உண்மைப் பரிசோதனை குழு பிபிசி 
மதுபானம் வைரஸை கொல்ல உதவும் சிகிச்சையா? அறிவியல் என்ன சொல்கிறது?Getty Images

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிக்கப் போராடி வரும் நிலையில் வைரஸ் தொற்று வராமல் இருக்க, அல்லது தொற்றை குணப்படுத்த ஏராளமான உடல் நல அறிவுரைகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பயனற்றவை என்ற போதும் தீங்கும் விளைவிக்காதவை. சில அறிவுரைகள் அபாயகரமானவை.

அப்படிப் பரவலாகப் பகிரப்படும் அறிவுரைகள் சிலவற்றையும் அது தொடர்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் இங்கே பார்ப்போம்.

மது அருந்துவது கொரோனாவைத் தடுக்காது

மதுவால் கொரோனாவைத் தடுக்க முடியம் என்ற அறிவுரை அடிக்கடி பகிரப்படுகிறது. இது தவறான தகவல் மட்டுமல்ல. தீங்கு விளைவிக்கும் வாய்ப்புள்ளதும் ஆகும். 

பொது முடக்க நிலையின்போது மூடப்பட்ட மதுக்கடைகளை உடனடியாகத் திறக்கவேண்டும் என்று ஓர் அரசியல்வாதி சொன்னார். “ஆல்கஹால் மூலம் கையை சுத்தம் செய்தால் கொரோனா வைரஸை அகற்ற முடியுமானால், ஆல்கஹால் அருந்துவதால் தொண்டையில் இருக்கும் வைரஸ் நிச்சயமாக போய்விடும்” என்று கூறினார் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான பரத் சிங்.

இந்தக் கூற்றுக்கு மருத்துவ ஆதாரம் ஏதுமில்லை. மது அருந்துவது வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கான ஒரு வழியல்ல என்று தெளிவுபடுத்திய உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதால் பிற உடல்நலப் பிரச்சனைகளால் சிக்கல் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என்றும் கூறியது.

கோப்புப்படம்Getty Images

கையை சுத்திகரிக்கும் ஜெல்களில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் பயன் குறித்து மட்டுமே உலக சுகாதார நிறுவனமும், பிற அதிகாரபூர்வ அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.

மூச்சை நிறுத்துவதால் கொரோனா தொற்று உண்டா என்று சொல்லமுடியாது

மூச்சைப் பிடித்து நிறுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்ற ஒரு கூற்று பல நாடுகளிலும் பகிரப்பட்டது. இந்தியாவில் உள்ள பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார். 

 

இளைஞர்களும், ஆரோக்கியமானவர்களும் 1 நிமிடத்துக்கு மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்த முயற்சி செய்யவேண்டும் என்றும், வயோதிகர்கள், வேறு சில உடல் நலப்பிரச்சனைகள் உள்ளவர்கள் என்றால் 30 விநாடிகள் நிறுத்த முயல வேண்டும் என்றும் அவர் கூறினார். 

அப்படி நிறுத்த முடியாவிட்டால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என்று பொருள் என்று அவர் கூறினார். இந்தக் கூற்றுக்கு அறிவியல் அடிப்படை ஏதுமில்லை.

கடுகு எண்ணெய் நல்ல சிகிச்சையல்ல

மேற்சொன்னபடி மூச்சுப் பரிசோதனை செய்யும்போது மூக்குத் துவாரங்களில் சில சொட்டு கடுகு எண்ணெய் விட்டுக்கொண்டால் அந்த எண்ணெய், சுவாசப் பாதையில் இருக்கும் வைரஸை வயிற்றுக்குத் தள்ளிவிட்டுவிடும் என்றும், அங்கேயுள்ள அமிலத்தில் வைரஸ் செத்துவிடும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டார். இது தவறான கூற்று.

கோப்புப்படம்Getty Images

வட இந்தியாவில் பாபா ராம்தேவை ஏராளமானவர்கள் பின்பற்றுகின்றனர். பல பொருள்களை விற்கிற வணிக சாம்ராஜ்யத்தையே நடத்துகிறார் ராம்தேவ். 

இந்த கடுகு எண்ணெய் மூலம் கொரோனாவை விரட்டும் கூற்று தவறு என்று இந்திய அரசு நடத்திய உண்மைப் பரிசோதனையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுவிட்டது.

புறஊதா கதிர்கள் தொற்று நீக்குமா?

தொற்று நீக்கி திரவத்தை உடலில் ஊசி மூலம் செலுத்துவது பற்றி கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டது முதல் அந்தக் கூற்று பல முறை, பல நாடுகளில், பல வடிவங்களில் சமூக ஊடகங்களில் பேசப்பட்டுவிட்டது.

Banner image reading 'more about coronavirus'  

மேற்பரப்பில், வெளிப்புறத்தில் தொற்று நீக்கித் திரவத்தைப் பயன்படுத்துவது வைரஸைக் கொல்லும். ஆனால், அதே தொற்று நீக்கித் திரவத்தை உள்ளுக்கு எடுத்துக்கொண்டால் அது நஞ்சாகும். 

மரணம்கூட ஏற்படும். அது தவிர இப்படி உள்ளுக்கு எடுத்துக் கொள்வது வைரஸைக் கட்டுப்படுத்தும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.

நோயாளிகள் மீது புற ஊதாக் கதிர்களை செலுத்துவது பற்றியும் டிரம்ப் பேசினார். வெளிப்புறத்தில், மேற்பரப்பில் நேரடியாக வெயில் படும்போது வைரஸ் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்காது என்று கூற கொஞ்சம் ஆதாரம் உள்ளது. 

ஆனால், இப்படி வெயிலில் நீண்ட நேரம் நிற்பது மனித திசுக்களை சேதமாக்கும். அத்துடன் வைரஸ் உள்ளவர்களுக்கு புற ஊதாக் கதிர் ஒரு நல்ல சிகிச்சை என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 

https://www.bbc.com/tamil/science-52582669

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை.     இப்பொழுது கொரோனா என்கிற பொதுப் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக வெளியே வந்துவிட்டது. இதனால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடும். மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. முதலிலேயே குடும்பங்களில் பிரச்னைகள் உள்ள குடும்பங்களில் முரண்பாடு கூடத்தான் செய்கிறது. ஆனால், ஏற்கனவே ஆரோக்கியமாக இயங்கி வந்த குடும்பங்கள் இப்போது மிகவும் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிறன. குடும்பங்களுக்கிடையே முரண்பாடுகள் பெரியளவுக்கு அதிகரிக்காவிடினும், குடும்பங்கள் தங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும். எங்களது குடும்ப கட்டமைப்புக்கள் இன்னும் சிதைந்து போகவில்லை.எங்களுடைய கலாச்சாரத்தில் குடும்ப கட்டமைப்பு என்பது இறுக்கமானதாகவும் வலுவானதாகவும் பாதுகாப்பை தரக் கூடிய அரணாகவும் இன்னமும் இருக்கின்றது என்பது உண்மை தான். நீண்டகாலமாக நடந்த போரில் எம் மக்களுக்கு தாங்குதிறனும் அதிகரித்துள்ளது.இதனால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தன்மையும் உள்ளது. எங்கே குடும்பம் சிதையாமல் இறுக்கமாக ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு தொழிற்படுகின்ற குடும்பமாக இருக்கும் குடும்பங்களில் சுனாமிக் காலங்களிலும் சரி யுத்த காலத்திலும் சரி இப்போதும் சரி பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. http://www.nimirvu.org/2020/05/blog-post_27.html
    • அனுபவஸ்தரின் பேச்சை அசட்டை செய்வதாயில்லை. 😂
    • இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கைகள் காரணமாக 15 ஆயிரம் இந்தியர்களை இழந்ததாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் இந்தியாவின் ஹெட்லைன்டுடோ தொலைக்காட்சிக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த பேட்டி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் கலந்தாலோசிக்காமலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு அமைதிப்படைகளை அனுப்பினார். இலங்கை விடயத்தை ராஜீவ் காந்தி தவறாக கையாண்டார். இதன் காரணமாகவே இலங்கையில் 15 இந்தியர்களை இழந்தோம். யாழ்ப்பாணம் குடாநாட்டின் புவியியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான புரிதல்கள் இல்லாமாலேயே இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னேற்பாடுகள் இன்றியே அமைதிப்படையில் இலங்கை விடயத்தில் பொறுப்புகளை ஏற்றனர். அன்றைய இலங்கைக்கான இந்திய தூதுவர் திக்ஷிட் எழுதிய புத்தகத்தில் இந்த விடயங்கள் தெளிவாக இருக்கின்றன. இதனை படியுங்கள். இலங்கையில் நாம் 15 ஆயிரம் பேரை இழந்தோம். இலங்கை தொடர்பான இந்தியாவிடம் ஒருங்கிணைப்பின்றி காணப்பட்ட கொள்கைகளே இதற்கு காரணம். இந்திய பிரதமர், மத்திய அரசு, வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, புலனாய்வு பிரிவுகள். சி.பி.ஐ. இலங்கை விடயம் தொடர்பிலான வெவ்வேறான கொள்கைகளை கொண்டிருந்தன. தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர். இலங்கை தொடர்பாக தமிழகத்தின் தனியான கொள்கையை கொண்டிருந்தார். அனைத்து துறைகளிலும் சிக்கலாக காணப்பட்டன. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, இந்தியா எத்தனை கொள்கைகளை கொண்டுள்ளது என இந்திய தூதுவர் திக்ஷிடம் கேட்டிருந்தார். இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் இறுதியில் ராஜீவ் காந்தியின் படுகொலை முடிந்தது எனவும் நட்வார்சிங் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilwin.com/community/01/247136?ref=imp-news