Sign in to follow this  
கிருபன்

கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்

Recommended Posts

கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்

-மொஹமட் பாதுஷா

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையை, மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கூட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான புள்ளிவிவரங்கள், மக்கள் ஆறுதலடையும் விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதுபோலவே, தற்போதிருக்கின்ற களச் சூழலைப் பயன்படுத்தி, ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம், சட்டத் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆட்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் எடுத்து வருகின்ற எத்தனங்கள், 'சாண் ஏற முழம் சறுக்கும்' நிலைமைகளையே அவதானிக்க முடிகின்றது.

உலகில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகே, இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் ஏற்கப்பட்ட பின்னர், தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இப்போது, 'கொரோனா'வில் இருந்து வெளியேறும் திட்டமொன்றில் பயணித்து, தேர்தலுக்குள் நுழைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய சூழலில், யதார்த்தங்களாலும் நடைமுறைச் சவால்களாலும் நாடு உண்மையிலேயே கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில், செய்வதறியாது அவதிப்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

அரசாங்கத்தின் நடவடிக்கை

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வேளையில், விமானங்களின் உள்வருகை தாமதித்தே கட்டுப்படுத்தப்பட்டமை போன்ற சிற்சில தவறுகள் இடம்பெற்றிருந்தாலும் கூட, அதன் பின்னர், கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல, தமது நாட்டை முற்றாக முடக்கநிலைக்கு உட்படுத்துவதற்குத் தயங்கிய வேளையிலும் கூட, இலங்கை அரசாங்கம், ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதை ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகவும் செயற்படுத்தியது.

ஆட்சியாளர்களின் அசட்டுத் துணிச்சலான தீர்மானங்களை விட வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புத் தரப்பினரின் அர்ப்பணிப்புமிக்க சேவை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது; இன்னும் பங்காற்றி வருகின்றது.

ஆனால், எதிர்பாராத விதமாக அரசாங்கம், ஏப்ரல் 20ஆம் திகதியில் இருந்து, கட்டுப்பாடுகளைக் கட்டம் கட்டமாகத் தளர்த்தி வருகின்றது. “இலங்கையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்றபடியால், ஊரடங்கைத் தளர்த்தும் தீர்மானத்தை இப்போது எடுக்க வேண்டாம்” என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்தது.

ஆனால், அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் சுகாதார சேவைகள் பணிப்பாளரும், எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன என்ற தொனியிலேயே கருத்துகளை வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி, ஏப்ரல் 20ஆம் திகதியில் இருந்து, நாட்டின் 20 மாவட்டங்களில் ஊடரங்குடன் தொடர்புபட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் அவசரத்திலேயே அரசாங்கம் இவ்வாறு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்ததாகப் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சமகாலத்தில், தேர்தல் இப்போது அவசியமில்லை என்றும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அரசியலரங்கில் தத்தமது இலாப-நட்டங்களுக்கு ஏற்ப, ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளும் கட்சிகளால் முன்வைக்கப்பட்டன. ஆனால், தாம் தேர்தலுக்கு அவசரப்படவில்லை என்றே, அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்தது.

எதிர்பாராத நிலைமை

அரசாங்கமும் சுகாதாரத் துறையும் கொவிட்-19 விடயத்தில், எதிர்வுகூரியதற்கு மாற்றமான போக்கு, அதன் பின்னர் அவதானிக்கப்பட்டது. அதாவது, 20 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைப் பகல் வேளைகளில் தளர்த்த அரசாங்கம் முடிவெடுத்த சில மணிநேரங்களில், கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை அடையாளம் காணப்பட்டமை காரணமாக, 65 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோன்று, கொழும்பை அண்டிய பகுதிகளிலும் நாட்டின் வேறு ஒருசில பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனால், கொழும்பின் பல பகுதிகள் உள்ளடங்கலாக, மேலும் பல பிரதேசங்களைப் புதிதாக முடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏப்ரல் 20 இற்குப் பிறகு ஏற்பட்டது.

இதேவேளை, கடற்படை வீரர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. கொத்துக் கொத்தாக கடற்படை, இராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினருமாக, இதுவரை 310 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக கொழும்பிலும் படையினரிடையேயும் திடீரென இவ்வாறு கொரோனா வைரஸ் பரவியமை, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பெரும் சவாலையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

இதன்படி, 20 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்ட வேளையில், 271ஆகக் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை, இந்தப் பத்தி எழுதப்படும் வரை, 526 பேரால் அதிகரித்திருந்தது. மேலதிகமாக, இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனால், ஊரடங்கைத் தளர்த்துவதற்கு முன்னர் எடுத்த தீர்மானத்தை, அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து, வேறு விதமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது எனலாம்.

எனவே, அரசாங்கம் அவசரப்பட்டு கட்டுப்பாடுகளைத் தளத்தியிருக்கக் கூடாது என்ற விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. தேர்தலை நடத்துவதற்கு முன்னேற்பாடாகவே, இவ்வாறான தீர்மானங்களை, அரசாங்கம் அசட்டுத் துணிச்சலோடு மேற்கொள்கின்றது என்றும் சிலர் அபிப்பிராயங்களை முன்வைக்கின்றனர். ஆனால், இன்னும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாத பகுதிகளிலும், கணிசமான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 20ஆம் திகதி, கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்குக் கடுமையான ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மே 11ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்குப் பெரிதாக இதுவரை விமர்சனங்கள் எழவில்லை.

ஆக மொத்தத்தில், நாட்டை இன்னும் மூடி, முடக்கி வைக்க முடியாது என்று, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அரசாங்கம் எடுத்த நிலைப்பாட்டுக்கு இசைவாக, மே முதல் வாரத்தில் கணிசமான மக்களும் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று சொல்லலாம்.

முடக்கியதன் விளைவு

இலங்கை ஒரு சிறிய தீவு என்பதற்கப்பால், தன்னிறைவுப் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளாத ஒரு தேசமாகும். இந்நிலையில், ஒன்றரை மாதங்கள் முடக்கத்தை அமல்படுத்தியதன் விளைவாக, இலங்கையில் பல நிறுவனகள் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளில் கைவைக்கத் தொடங்கி விட்டன. இன்னும் சில நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்வது பற்றியும் ஆலோசித்து வருகின்றன.

உண்மையில், அன்றாட உழைப்பாளிகள், கூலித் தொழிலாளர்களைக் கொரோனா வைரஸ் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லைத்தான். ஆயினும், அவர்கள் சில நாள்களில் ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பிவிடுவார்கள்.

ஆனால், கொரோனா வைரஸால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டதைப் போன்றே, நமது நாட்டில் இயங்கும் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இலகுவில் மீண்டெழ முடியாத வருமான இழப்பைச் சந்தித்து நிற்கின்றன.

இது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, தேசிய வருமானம், சென்மதி நிலுவை, நிதிக் கையிருப்பு என முக்கியமான விடயங்களில், பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள், ஏற்கெனவே தென்படத் தொடங்கி விட்டன.

எனவே, நாட்டை இன்னும் மூடிவைத்திருந்தால், மீண்டெழுவதற்கு மேலும் அதிகமான காலத்தை எடுக்கும் என்று அரசாங்கம் கருதியதால்த்தான், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்தது என எடுத்துக் கொள்ளலாம்.

உப நோக்கம்

ஆயினும், இதில் அரசியல் காரணங்களும் அரசியல்சார் எதிர்பார்ப்புகளும் இருந்தன; இருக்கின்றன என்பதை, யதாத்தங்களைப் புரிந்தவர்களால் மறுக்கவும் முடியாது. அதாவது, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில், ஆட்சியாளர்கள் எந்தளவுக்கு வெற்றியடைகின்றார்கள் என்பது, அவர்களது அரசியல் வெற்றி அல்லது தோல்வியில் செல்வாக்கும் செலுத்தும் உலக ஒழுங்கு ஒன்று, இன்று உருவாகியிருக்கின்றது.

இந்த ஒழுங்கின்படி பார்த்தால், வெற்றிகரமான கொரோனா வைரஸை இலங்கை கட்டுப்படுத்தியது என்ற எண்ணம், உலக நாடுகள் மத்தியிலும் மக்களிடத்திலும் காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாஸவோ ஆட்சியில் இருந்திருந்தால் சிக்கல்கள் அதிகரித்திருக்கும் என்ற அபிப்பிராயம் பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது.

இதேநேரம், மக்களுக்குக் கட்டம் கட்டமாக, அரசாங்கத்தின் உதவிகள் சென்றடைந்துள்ளன. தேர்தல் பிரசாரங்களைச் செய்வதற்கான வாய்ப்பும் வசதியும் ஆளும் தரப்புக்கே அதிகமுள்ளது.

எனவே, இந்தப் பின்புலங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதிலிருந்து அரசியல் விளைவொன்றைப் பெற்றுக் கொள்வதாயின், தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்திருக்கலாம். இது அரசியலில் சாதாரணமான வியூகமே.

அதன்படி, நாட்டில் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டு விட்டதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைந்தமையும் அரசாங்கம் எடுத்த மேற்படி தீர்மானத்துக்கு உப காரணமாக அமைந்திருக்கலாம். இருப்பினும், தேர்தல் ஜூன் 20 இற்குத் தள்ளிப்போனமையால் கொரோனா வைரஸ் குறித்து, இன்னும் கொஞ்சம் கூடிய கவனத்தைச் செலுத்த அரசாங்கத்துக்கு அவகாசம் கிடைத்துள்ளது.

சட்டச் சிக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது, இலங்கை அரசமைப்பு குறிப்பிடுகின்ற அடிப்படை விடயமாகும். எனவே, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, இதுவரை தேர்தலொன்றை நடத்துவதற்கு ஏதுவான சூழலொன்று ஏற்படவேயில்லை என்பது, வெள்ளிடைமலை.

இந்நிலையிலேயே, மூன்று மாதங்கள் கழித்து, தேர்தலொன்றை நடத்த முடியாது எனவும் எனவே, உரிய தினத்தில் தேர்தல் நடைபெறவில்லையாயின், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட வேண்டும் என்றும் அரசியல் அரங்கில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில், நாடாளுமன்றம் கூடவில்லை என்றால் அமைச்சரவைக்கு நிதி உள்ளிட்ட விடயங்களைக் கையாளும் சட்ட ரீதியான அதிகாரமும் இல்லாது போய் விடும் சாத்தியமிருப்பதாகச் சொல்ல முடியும். எனவே, கொரோனா வைரஸ் விவகாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால், நாடாளுமன்றத் தேர்தலைத் தாமதிக்காது நடத்துவதே சிறந்த தெரிவு என்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிகின்றது.

இதற்கிடையில், “மே 10ஆம் திகதிக்கு முன்னர், நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற உத்தரவாதத்தை வழங்கினால் மாத்திரமே, ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும்” என்று, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். அதன் பின்னரான அவரது கருத்துகள், ஜூன் 20இல் வாக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என, மக்கள் நம்பும்படியாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு அடிப்படைக் காரணம், நாட்டில் வேகமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்கின்றமையும் என்னதான் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான களச் சூழலும் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்க்கும் காலஅவகாசமும் கைகூடி வராமை ஆகும்.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, நாட்டை 'வழமைக்குத் திருப்புவதில்' அரசாங்கம் கூடிய கவனத்தைச் செலுத்தும் என்றே எதிர்பார்க்க முடிகின்றது.

மனுக்கள் தாக்கல்

எப்படியிருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கொரோனா வைரஸ் மட்டுமன்றி, சட்ட ரீதியான சவால்களும் ஏற்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பைச் சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜூன் 20 எனத் திகதி குறிக்கப்பட்டுள்ள தேர்தலானது, மேலே குறிப்பிட்ட அரசமைப்பின் பல்வேறு சரத்துகளை மீறுவதாகவே மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், நாடு இன்றிருக்கின்ற நிலைமையில், சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்ற அடிப்படையில், தேர்தல் அறிவிப்புக்கான வர்த்தமானியை இரத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மார்ச் 16ஆம் திகதிக்கு மேலதிகமாக, 19ஆம் திகதி வரையும் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையிலா வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்டன என்ற விடயமும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

'சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம்' என்ற அடிப்படையில், மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸ் ஒழிப்பையும் தேர்தலையும் சமாந்தரமாக முன்னெடுக்க அரசாங்கம் நினைக்கின்றது.

இந்தப் பின்னணியில் சட்டத்தின் வளைவு சுழிவுகள், நுணுக்கங்களைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஒருவேளை அது சாத்தியப்படாமல் விட்டால், என்ன செய்வது என்பதை, நாடி பிடித்துப் பார்க்கின்ற சந்திப்பாகவும், முன்னாள் எம்.பிக்களுடனான சந்திப்பை நோக்க வேண்டியும் இருக்கின்றது.

போகின்ற போக்கைப் பார்த்தால், ஜூன் 20ஆம் திகதியோ அல்லது அதற்குச் சில நாள்களுக்குப் பின்னரோ, தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின், அத்தேர்தலை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பான முறையில், நடத்தி முடிப்பதென்பது, தேர்தல் வெற்றியைக் காட்டிலும் அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனாவுக்கும்-தேர்தலுக்கும்-இடையில்-அவதிப்படும்-அரசாங்கம்/91-249930

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம் இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.     கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.   விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.   இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2545989
  • நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.   இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும். நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009   அப்படிபோடு அரிவாளை 🤣🤣
  • எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிவு: மே 26,  2020 04:15 AM புதுடெல்லி,  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை. சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf
  • லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?   புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுதியில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25040557/Chinese-army-detains-Indian-soldiers-in-Ladakh.vpf
  • தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து Bharati May 26, 2020தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து2020-05-25T20:17:47+00:00 திருக்கோவில் நிருபர் தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும், நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் அத்தியாவசியமாதனதாகும். அதைவிடுத்து நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவ்விடயம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பொதுத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இவ்வாறான நியமனங்கள் செய்யப்பட முடியுமா? எந்தவொரு நியமனமும் இக்காலத்தில் செய்யப்பட முடியாது என்பதே பொதுவான விதியாகும். காரணம் அது வாக்காளரைக் கவர்வதற்கான அனுமதிக்கப்பட முடியாத ஒரு செயல் என்பதும், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாதிருக்கும் என்பதுமேயாகும். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் மிகவும் அலட்சியமாக, சட்டங்களை மதிக்காத வகையில் அல்லது அசட்டைத் துணிவோடு, குறிப்பிடப்பட்ட இக்காலத்தில் செய்யப்பட முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்தவண்ணமே இருக்கின்றார். தொல்லியல் இடங்கள் தொடர்பான விடயங்கள் தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால் இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத் தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டுக் கொண்டு வருகின்றது. உண்மையில், மிகவும் அவதானத்தோடும் நிதானத்தோடும் உண்மையைக் கண்டறியும் இத்துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும். இவ்வகையில் இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுனர்களாக இருக்க வேண்டும் என்பதும் முதன்மையான விடயமாக இருக்க வேண்டிய அதேவேளை இலங்கையின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் இடம்பெறுதலும் அத்தியாவசியமாதனதாகும். நடைபெற்றிருக்கும் நியமனமானது மேற்குறித்த எந்த நியமங்களையும் பின்பற்றாத ஒன்றாகவே அமைகின்றது. பொதுத் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் தனது கட்சிக்கு பௌத்த சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி அவர்கள் நடந்து கொள்கின்றார் என்பது வெளிப்படையானதாகும். பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளிலும் இராணுவ அதிகாரிகளை நியமித்து தன்னைச் சுற்றிவர இராணுவத்தினரால் ஒரு கவசத்தை அமைத்துக் கொள்கின்றார் ஜனாதிபதி என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் வெற்றியிலே ஜனாதிபதி அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த வியத்மக குழுவினர் கூட இந்த இராணுவ வளையம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. அண்மையில் சுகாதார அமைச்சு அத்துடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சுகளுக்கான செயலாளர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது அதிருப்தியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து தனது ஆதரவுப் பங்காளிகளாக ஆக்குவதில் ஜனாதிபதி அவர்கள் கொண்ட அக்கறை தான் தொல்லியல் தொடர்பிலான இந்த நியமனம் என்று சொல்லப்படுகின்றது. இந்த நாட்டின் உண்மையான பூர்வீகம் தொல்லியல் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வு நிறுவனமானது இந்த வகையில் இயங்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு ஆக்க செயற்பாட்டில் நாங்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாயிருந்தோம். அரசியலமைப்பு வரைபின் உருவாக்கத்தில் அடுத்த அங்கமாக வனத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்லியல்துறை என்பன தொடர்பான சட்டங்கள் மீளாயப்பட்டு இவை தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். வரைபின் இறுதி அங்கமாக இவ்விடயம் கையாளப்பட இருந்த வேளையிலே தான் ஒக்டோபர் 26 அரசியல் உறுதியின்மை நிகழ்வு ஏற்பட்டது. முழுக்க முழுக்க புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுக்கும் ஒரு செயலாக நாம் அதனைப் பார்த்தோம். இச்செயற்பாட்டின் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைகின்றது. பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முடியாத மக்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவிக் முடியாத இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது நாகரிக உலகம் அரசு மீது இன்னுமொரு கேள்வியைத் தொடுப்பதற்கு காலாய் அமையும். இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொட்டுக் கட்சியிலும் அதற்கு ஆதரவு வழங்கக் கூடிய கட்சிகளிலும் வேட்பாளர்களாக நிற்பவர்களும் அவற்றின் தலைவர்களும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மேற்குறித்த விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி மக்களை கேட்டுக் கொள்வதில் என்ன தார்மீக நியாயம் இருக்கின்றது என்பதை இவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பொய்மையால் மூடப்படவுள்ள எமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தடையாக இருக்கும் தங்கள் சிந்தனைகளில் அவர்கள் தெளிவடைய வேண்டும். தமிழ் மக்களை தமிழர் அரசியல், தமிழர் பாரம்பரியம், வடகிழக்கில் தமிழர்களின் இருப்பு என்கின்ற விடயங்களின் பால் அக்கறையோடும், உறுதியோடும் செயற்படுகின்ற அரசியல் சக்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களுடைய அரசியற் சிந்தனைகளை இந்தக் கடைசி நேரத்திலாவது சரியான திசைக்கு திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். http://thinakkural.lk/article/43426