Sign in to follow this  
கிருபன்

மீள் வருகை

Recommended Posts

மீள் வருகை

risan-kenya-story.jpg

வெகுகாலம் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமாவு மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகு…

கண்ணுக்கெட்டாத் தொலைவில் பிரதான வீதியின் எல்லை. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுக்குப் பின்னால் கோபத்தோடு எழுந்து வரும் புழுதி மேகம். அவன் தொலைவில் செல்லச் செல்ல புழுதி மண்டலமும் படிப்படியாக அடங்கிப் போனது என்றாலும்,  புகை போன்ற மென்மேகங்களால் வெற்று ஆகாயம் மூடப்பட்டிருந்தது. புழுதியைக் குறித்தோ, தான் பயணித்துக் கொண்டிருக்கும் பூமியைக் குறித்தோ எவ்வித உணர்வுமற்று அவன் முன்னே நடந்தான். பெருந்தெரு அவனுக்கெதிராக எழுந்து வருமொரு எதிரியைப் போன்றிருந்தது. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட எதையேனும் காணுவதைக் கொண்டோ அல்லது தான் அறிந்த யாரையேனும் சந்திப்பதை வைத்தோ தனது வீட்டுக்கருகில் வந்துவிட்டிருப்பதை அறிந்துகொள்ள இயலும் என்ற எதிர்பார்ப்போடு அவன் நேராகப் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தான். எனினும் பிரதான தெருவின் எல்லையைக் காண முடியாதிருந்தது. 

அவன் அவசரமாக நடை போட்டான். சில காலத்துக்கு முன்பு வரை அழகான நிறங்களுடன் இருந்திருக்கக் கூடுமான, தற்போது நிறம் மங்கிப் போய் கிழிந்து போயிருந்த ஆடையின் நுனி அவனது இடது கையைத் தன்னிச்சையாக தொட்டுக் கொண்டிருந்தது. அவனது வலது கையின் மணிக்கட்டினருகே மடித்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொதி. சிவப்புப் பூக்கள் அச்சிடப்பட்டிருந்த – அவை இப்பொழுது மங்கிப் போய்விட்டிருந்தன – பருத்தித் துணியால் சுற்றப்பட்டிருந்த பொதியானது கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது. அவனது நடையின் தாளத்திற்கேற்ப பொதியானது அங்குமிங்கும் அசைந்தது. விளக்க மறியலில் அவன் கழித்த கடினமான, கொடுமையான வருடங்களைப் பற்றிய கதையை அப்பொதி எடுத்துரைத்தது. 

தனது வீட்டை நோக்கிச் செல்லும் அப்பயணத்தின் போது, அவன் அடிக்கடி சூரியனைக் கூர்ந்து நோக்கினான். பாதையின் இரு மருங்கிலுமிருந்த தோட்டங்களில் நடப்பட்டிருந்த சோளம், பயற்றங்காய், அவரைச் செடிகள் வாடிப் போயிருந்தன. முழு தேசமுமே இன்னலுக்காளாகியிருப்பதைப் போலக் காட்சியளித்தது. கமாவுக்கு இது புதிதான ஒன்றல்ல. மாஉ மாஉ  புரட்சியை ஆரம்பிக்கும் முன்பிருந்தே இந்நிலைமை இப்படியேதான் இருந்தது. 

இடதுபுறத்துக்குத் திரும்பிய பாதையொன்றால் பிரதான வீதி  பிரிந்தது. அவன் சிறிது தயங்கினான். மனதை சரிப்படுத்திக் கொண்டான். இந்த நீண்ட பயணத்தின் போது, முதல் முறையாக அவனது விழிகள் பிரகாசமாக மின்னின. அப்பாதை பள்ளத்தாக்கினை நோக்கியும், அடுத்ததாக அவனது கிராமம் வரைக்கும் நீண்டிருந்தது. வீட்டின் அருகாமைக்கு வந்து சேர்ந்துவிட்டதாகத் தெரிந்து கொண்டதும், அவனது களைப்பு ஒரு கணம் தூரப் போய் விட்டது. நீலத்தால் மூடப்பட்டிருந்த பள்ளத்தாக்கு, சுற்றியிருந்த பிரதேசங்களை விடவும் செழிப்பானதாகவும் வளம் மிக்கதாகவும் காட்சியளித்தது. பசுமை மிகு விருட்சங்கள் ஹோனியா நதி இன்னும் பெருக்கெடுத்துப் பாய்வதை வெளிப்படுத்தி நின்றன. தனது இரு கண்களினாலும் நதியைப் பார்த்து உண்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவன் வேகமாக அடி வைத்து நடந்தான். 

ஹோனியா நதி இப்போதும் அமைதியாக பாய்ந்து கொண்டிருந்தது. ஹோனியா, அவன் அடிக்கடி குளிக்கச் சென்ற நதி. குளிர்நீரில் மூழ்கி, ஆடையற்றுக் குளித்த ஆறு. அவனது இதயம் உருகியது. சர்ப்பமொன்றைப் போல நகர்ந்து செல்லும் நதி அவனது விழிகளை நிறைத்திற்று. சூழவிருந்த வனம் மெலிதாக முணுமுணுக்கும் ஓசை  அவனது காதுகளின் அடியாழம் வரை சென்று ஆழப் பதிந்தது. வேதனை மிகுந்த பரவசமொன்று அவனது உடல் முழுவதும் பயணித்தது. அவன் ஒரு கணம் இறந்த காலத்தை நினைத்துக் கொண்டான். அத்தோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். நதியைச் சூழவிருந்த உலகம், அவனுக்கு அனைத்தையும் நினைவுபடுத்திக் கொடுத்ததை நதி அறியவில்லை என்றபோதிலும், ஹோனியா நதிக்கும் தனக்கும் இருக்கும் பந்தத்தை அவன் நன்கு உணர்ந்தான். 

பெண்கள் கூட்டமொன்று தண்ணீர் எடுத்துப் போக வந்திருந்தது. அவன் சடுதியாக திடுக்கிட்டுப் போனான். ஏனெனில் தனது குடியிருப்பு அமைந்திருந்த மலையில் வசிக்கும் பெண்கள் இருவரையோ அல்லது ஒருத்தியையோ அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நடுத்தர வயதைத் தாண்டும் அவள் வஞ்ஜிகு என்பவளாவாள். தான் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு பாதுகாப்புப் படையால் அவளது செவிட்டு மகன் கொல்லப்பட்ட விதம் அவனுக்கு நினைவிலெழுந்தது.

அவள் ஊருக்கே அதிர்ஷ்டமான பெண்ணாக அறியப்பட்டவள். அவளது சிரிப்பு கிராமத்துக்கே விருந்தளித்தது போல இருக்கும். அப்பெண்கள் அவனை ஒரு வீரனாக ஏற்றுக் கொள்வார்களா? மலைப் பிரதேசத்தில் அவனொரு புகழ்பெற்ற நபராக இருக்கவில்லையா? தனது தாய்நிலத்துக்காக போரிடாத ஒரு மனிதனா அவன்? ‘இதோ நான் திரும்பி வந்து விட்டேன்’, என ஓடிச் சென்று அவர்கள் முன்பு கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு. எனினும் அவ்வாறு கத்துவது தனது ஆண்மைக்கு அழகல்ல என்பதையும் உணர்ந்தான். 

‘நீங்கள் நலமா?’

பல குரல்களிலிருந்தும் பதில் கிடைத்தது. களைத்தும் மெலிந்தும்  போயிருந்த பெண்கள் அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனைச் சந்தித்தது, தமக்கு முக்கியமான ஒரு விடயமல்ல என்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். ஏன்? அவன் விளக்கமறியலில் அதிகமான காலத்தைக் கழித்திருந்ததாலா?

‘உங்களுக்கு என்னை நினைவில்லையா?’

அவ்வாறு கேட்ட போது அவனது ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனதைப் போன்று உணர்ந்தான். அவர்கள் மீண்டும் அவனைப் பார்த்தனர். ஏனைய அனைவரும் பார்ப்பதைப் போன்றே விழியோரத்தால் கொஞ்சமாகப் பார்த்தனர். 

அவனை அடையாளம் கண்டுகொள்வதை வேண்டுமென்றே அவர்கள் நிராகரிப்பதை அவன் அறிந்து கொண்டான். இறுதியில் வஞ்ஜிகு அவனை அடையாளம் கண்டுகொண்டாள். ஆனாலும் அவளது குரலில் உணர்ச்சியோ உற்சாகமோ அற்றுப் போயிருந்தது. 

‘ஓ கமாவு… நாங்கள் நினைத்தோம்… நீ….’

அவள் வாக்கியத்தை முழுவதுமாக முடிக்கவில்லை. இப்பொழுது அவனுக்கு ஏதோ புரிந்தது. அவர்கள் அனைவருமே தான் அறியாத ஏதோவொரு ரகசியத்தால் கட்டுப்பட்டிருப்பதை அவன் உணர்ந்தான். அவர்களது சந்தேகப் பார்வையின் அர்த்தம் அதுதான். 

‘ஒருவேளை நான் இப்பொழுது அவர்களில் ஒருவனாக இல்லாதிருக்கக் கூடும்’, என சலிப்போடு சிந்தித்தான். எனினும் அவர்கள் அவனிடம் புதிய கிராமம் பற்றிய தகவல்களைத் தெரிவித்தனர். மலையுச்சியில் பரந்திருந்த குடிசைகளாலான பழைய கிராமத்தை இனி காணக் கிடைக்காது. 

கவலை தரும் உணர்வுகளோடு அவன் அவர்களை விட்டு நீங்கிச் சென்றான். பழைய கிராமம் அவன் திரும்பி வரும்வரை காத்திருக்கவில்லை. தனது பழைய வீடு, நண்பர்கள் மற்றும் சுற்று வட்டாரம் குறித்த கவலையொன்று திடீரென அவனுக்குள் உருவானது. அவன் தனது தாயையும், தந்தையையும் நினைத்துக் கொண்டான் என்ற போதிலும், அவளை நினைத்துக் கொள்ளவில்லை. எனினும் எல்லாவற்றையும் கீழே தள்ளி விட்டு மீண்டும் முத்தோனி அவனது நினைவிலெழுந்தாள். 

அவனது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவனுக்குள் உணர்வுகளும் விருப்பங்களும் அதிகரித்தன. அவன் தனது நடையை துரிதப்படுத்தினான். தனது மனைவியைப் பற்றி சிந்திக்கும்போது அவன் தனது ஊர்ப் பெண்களை மறந்துபோனான். இரண்டு கிழமைகள் மாத்திரம்தான் அவன், அவளுடன் கழித்திருந்தான். அதன் பிறகு குடியேற்றவாசிகளைக் கைது செய்ய நியமிக்கப்பட்டிருந்த படை அவனைக் கொண்டு சென்றது. ஏனைய அநேகமானவர்களைப் போல, அவனும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீதி விசாரணையேதுமற்று விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்த காலம் முழுவதும் அவன் தனது கிராமம் மற்றும் தனது அழகிய மனைவி குறித்தே சிந்தித்தபடியிருந்தான். அங்கிருந்த ஏனையவர்களும் அவனைப் போலத்தான் இருந்தனர். அவர்கள் தத்தமது வீடுவாசல் குறித்தல்லாது வேறெதைப் பற்றியும் கதைக்கவில்லை. 

ஒரு தினம் அவன் முருங்காவிலிருந்து அழைத்து வந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவனோடு கல்லுடைத்துக் கொண்டிருந்தான். நிஜோர்ஜி எனப்படும் அவன் திடீரென கல்லுடைப்பதை நிறுத்தினான். நீண்ட பெருமூச்சு விட்டான். அவனது கீழிறங்கிப் போன விழிகளால் தொலைவை நோக்குவது தெரிந்தது.

‘என்னாயிற்று உனக்கு?’ என கமாவு கேட்டான்.

‘என்னுடைய மனைவி… அவளுக்குக் குழந்தை கிடைக்க இருந்தது. அவளுக்கு என்ன நடந்தது என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை’

இன்னுமொரு கைதி அவர்களோடு இணைந்து கொண்டான்.

‘எனக்கும் என்னுடைய மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டுத்தான் இங்கு வர வேண்டி வந்தது. என்னுடைய மனைவி பிரசவித்த அதே நாளில்தான் என்னைக் கைது செய்தார்கள்’

அவ்வாறான நினைவுகளோடுதான் அவர்கள் வேலை செய்தார்கள். அவர்கள் அனைவருக்குமே ஒரேயொரு எதிர்பார்ப்பே இருந்தது. அது திரும்பவும் வீடு செல்லும் நாள் பற்றியது. அப்போதுதான் மீண்டுமொரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்.

கமாவு குழந்தை பெற முன்பே தனது மனைவியை விட்டுச் செல்ல வேண்டி வந்தது. அவன், மணப்பெண்ணுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கூட இன்னும் கொடுத்து முடிக்கவில்லை. எனவே அவன் இப்பொழுது மீளச் சென்று, நைரோபிக்கு வந்து தொழிலொன்றைத் தேடிக் கொண்டு, மீதிப் பணத்தை முத்தோனியின் பெற்றோருக்குச் செலுத்த வேண்டும். உண்மையிலேயே வாழ்க்கையானது மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. அவர்களுக்கொரு மகன் பிறக்கக் கூடும். அப்போது அவனை வீட்டிலேயே வைத்து வளர்த்தெடுக்க வேண்டும். 

அவனுக்கு ஓடிச் செல்ல… இல்லை… பறந்து செல்ல அவசியமாக இருந்தது. அவன் இப்போது மலையுச்சியை நெருங்கிக் கொண்டிருந்தான். தனது சகோதர சகோதரிகளை உடனே காணக் கிடைக்க வேண்டுமென அவன் பிரார்த்தித்தான். அவர்கள் அவனிடம் கேள்விகளைக் கேட்பார்களா? எவ்வாறாயினும் அவன் அவர்களிடம் எல்லாவற்றையும் கூற வேண்டுமென்பதில்லை. சித்திரவதைகள், கற்குழிகளில் வேலை செய்த விதம், வீதிகளில் வேலை செய்த விதம், சிறிது ஓய்வெடுப்பதைக் கண்டாலும் அடித்துத் துன்புறுத்தும் விதம்… ஆமாம், அவன் மிகவும் மோசமாக துயரம் அனுபவித்திருக்கிறான். ஆனாலும் அவன் எதிர்க்கவில்லை. எதிர்க்கத் தேவைப்படவில்லையா? அது அவனது ஆத்மாவுக்கும் ஆண்மைக்கும் இழிவாக இருக்கவில்லையா?

‘எப்போதாவது ஓர் நாள் அவர்கள் போய் விடுவார்கள்’, ‘எப்போதாவது ஓர் நாள் எமது மக்கள் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்றெண்ணிய அவன் அப்போது தான் என்ன செய்வது என்பதை அறிந்திருக்கவில்லை. எவ்வாறாயினும் தனது ஆளுமையை எவராலும் தடை செய்ய முடியாதென அவன் சலிப்போடு சிந்தித்திருந்தான். 

அவன் மலையுச்சியிலேறி நின்றான். கீழே விசாலமான சமவெளி தென்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட கிராமம் அவன் முன்னாலிருந்தது. களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகள் வரிசையாக இருந்தன. மறைந்து செல்லும் சூரியனின் முன்பு குந்தியிருக்கும் மனிதர்களைப் போன்று வீடுகள் பரந்திருந்தன. அநேகமான வீடுகளிலிருந்து ஆகாயம் நோக்கிச் செல்லும் கரும் புகையானது கறுப்பு வளையங்களாக கிராமத்தை மூடி விரிந்து சென்றது.

கிராமத்தின் ஒவ்வொரு தெருவாக அவன் நடந்து சென்றான். எல்லா இடங்களிலும் புதிய முகங்களையே காணக் கூடியதாக இருந்தது. அவன் விசாரித்துப் பார்த்தான். இறுதியில் அவன் தனது வீட்டைக் கண்டுபிடித்தான். வாசலருகே முற்றத்தில் நின்று அவன் நெடிய பெருமூச்சு விட்டான். இது அவன் மீளவும் வீட்டுக்கு வந்த கணம். அவனது தந்தை முக்காலியொன்றில் சுருண்டு போய் அமர்ந்திருந்தார். அவர் இப்போது ஒரு முதியவர். கமாவுக்கு அவரைக் கண்டதும் கவலையாக இருந்தது. எனினும் அவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆமாம்… தனது மகனின் மீள்வருகையைக் காண அவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

‘அப்பா..’

முதியவர் பதிலளிக்கவில்லை. அவர் கமாவை நோக்கி புதுமையானதொரு வெற்றுப் பார்வை பார்த்தார். கமாவுக்குப் பொறுமையிருக்கவில்லை. அவன் கோபத்துக்கும் துயரத்துக்கும் ஆளானான். அவர் என்னைக் காணவில்லையா? நதியினருகே சந்தித்த பெண்களைப் போல தனது தந்தையும் புதியவரொருவரைப் போல நடந்து கொள்வாரா?

நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் குழந்தைகள் புழுதியோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து போய் நிலவு உதித்து வருவதைக் காண முடிந்தது.

‘அப்பாவுக்கு என்னை நினைவில்லையா?’

அவனிடமிருந்த எதிர்பார்ப்பு, அவனுக்குள் மூழ்கிப் போய்க் கொண்டிருந்தது. அவன் களைப்பாக உணர்ந்தான். அவனது தந்தை மரமொன்றின் இலையொன்றைப் போல நடுங்கத் தொடங்கியிருப்பதை அப்போது அவன் காண நேர்ந்தது. தனது கண்களையே நம்பாது, அவனது தந்தை அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான். அவரது விழிகளில் தெளிவாகத் தெரிந்தது பயம். 

அவனது தாயும் சகோதரர்களும் வந்தனர். அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவனது வயது முதிர்ந்த தாய் அவனது அணைத்து விம்மத் தொடங்கினாள்.

‘என்னுடைய மகன் திரும்ப வருவான் என்று எனக்குத் தெரியும். என்னுடைய மகன் செத்துப் போகவில்லை என்று எனக்குத் தெரியும்’

‘ஏன் நான் செத்துப் போய்விட்டேன் என்று யார் சொன்னது?’

‘அந்த கரஞ்ஜா. நிரோஜ்ஜியுடைய மகன்’’

அப்போதுதான் கமாவுக்கு எல்லாம் புரிந்தது. தனது தந்தையின் நடுக்கத்தின் அர்த்தம் அவனுக்கு விளங்கியது. நதியினருகேயிருந்த பெண்களின் விந்தையான நடவடிக்கைகள் குறித்து அவனுக்கு விளங்கியது. அதுவும் அவனை அசௌகரியத்துக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக இருந்தது. 

அவன் ஒருபோதும் கரஞ்ஜாவுடன் ஒரே விளக்கமறியலில் இருந்திருக்கவில்லை. எவ்வாறாயினும் அவனும் மீண்டு வந்திருக்கிறான். இப்பொழுது கமாவுக்கு முத்தோனியைப் பார்ப்பது அவசியமாக இருந்தது. ‘அவள் ஏன் இன்னும் வரவில்லை? நான் வந்துவிட்டேன் முத்தோனி. நான் இங்குதான் இருக்கிறேன்’ எனக் கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது. அவன் சுற்றி வரப் பார்த்தான். அவனது தாய் புரிந்து கொண்டாள். தமது மக்களை சடுதியாகப் பார்த்த அவள் அமைதியாகக் கூறினாள்.

‘முத்தோனி போய் விட்டாள்.’

தனது வயிற்றுக்குள் புதிதாக குளிர்ச்சியான ஏதோவொன்று  சூழ்ந்துகொண்டதைப் போல கமாவு உணர்ந்தான். கிராமத்தின் குடிசைகள் மற்றும் சமவெளி நோக்கி அவனது பார்வை விரிந்தது. நிறையக் கேள்விகளைக் கேட்க அவனுக்கு அவசியமாக இருந்தபோதிலும்  அவன் எதுவும் கேட்கவில்லை. முத்தோனி போய்விட்டதை இன்னும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆற்றினருகேயிருந்த பெண்களின் பார்வையிலும், தனது பெற்றோரின் பார்வையிலும் அவள் போய்விட்டது பற்றிய குறிப்பு இருந்தமை அவனுக்குப் புரிந்தது.

‘அவள் எமக்கொரு மகளைப் போலவே இருந்தாள். அவள் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு, அனுபவித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் நீ செத்துப் போய் விட்டதாக கரஞ்ஜா வந்து சொன்னான்.. உன் அப்பா கரஞ்ஜாவை நம்பினார். அவளும் கரஞ்ஜாவை நம்பினாள். ஒரு மாதம் கடந்திருக்கும். கரஞ்ஜா இங்கே அடிக்கடி வந்து போனான். அவனும் உன்னைப் போல கஷ்டப்பட்டவனொருவன் என்பது உனக்குத்தான் தெரியுமே.. பிறகு அவளுக்கொரு குழந்தை பிறந்தது. எங்களுக்கு அவளையும் இங்கே எம்முடன் வைத்திருந்திருக்கலாம்தான். ஆனால் இட வசதியெங்கே? சாப்பாடு எங்கே? இடத்தைக் கைப்பற்றத் தொடங்கிய நாளிலிருந்தே எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனைய பெண்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் மோசமான செயல்களையே செய்து கொண்டிருந்தார்கள். அதனால் கரஞ்ஜா அவளைக் கூட்டிப் போக நாங்கள் அனுமதித்தோம். அவர்கள் நகரத்துக்குப் போனார்கள். பலவீனமானவர்களும், வயதான பெண்களும் மட்டுமே இங்கே மிஞ்சிப் போனோம்’ என கமாவின் தாய் விளக்கினாள்.

அவன் அதற்கு செவிமடுக்கவில்லை. அவனது வயிற்றுக்குள்ளிருந்த குளிர்ச்சி கசப்பாக மாறியது. அவனுக்கு எல்லோர் மீதும், தனது தாய் தந்தை மீதும் வெறுப்பு தோன்றியது. எல்லோருமே அவனுக்கு துரோகம் இழைத்திருக்கின்றனர். கரஞ்ஜா எப்போதுமே அவனுக்கு எதிரியாக நடந்து கொண்டவன். ஐந்து வருடங்களென்பது சொற்பமான காலமல்ல. ஆனாலும் அவள் ஏன் போனாள்? இவர்கள் அவளைப் போக அனுமதித்தது ஏன்?

அவனுக்கு பேச வேண்டிய தேவையிருந்தது. அவனுக்கு அனைவர் மீதும் குற்றம் சாட்ட வேண்டியிருந்தது. நதியினருகேயிருந்த பெண்கள் மீது, கிராமத்தின் மீது, கிராமத்து மக்கள் மீது. எனினும் அவனால் பேச முடியவில்லை. வெறுப்புணர்வு அவனது தொண்டையை அடைத்துக் கொண்டது.

‘நீங்கள்…நீங்கள் அவளைப் போக விட்டுவிட்டீர்கள்..’, அவன் ஓலமிட்டான்.

‘இங்கே பார்! மகனே…மகனே’

மஞ்சள் ஒளி கொண்ட நிலா உதித்து வந்தது. அவன் குருடனொருவனைப் போல விலகி ஓடிப் போனான். திரும்பவும் அவன்  போய் நின்றது ஹோனியா ஆற்றின் அருகில்.

ஆற்றங்கரையில் நின்றிருந்த அவன் கண்டது பாய்ந்தோடும் நதியையல்ல. உடைந்து சிதறி தூள்தூளாகிப் போன அவனது எதிர்பார்ப்புக்கள் பாய்ந்து செல்லும் விதத்தைத்தான் அவன் கண்டான். மெல்லிய முனகலை எழுப்பியபடி அமைதியாக நதி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. வண்டுகளினதும் ஏனைய விலங்குகளினதும் தொடர்ச்சியான ஓசை வனத்தினுள்ளிருந்து கேட்டது. மேல் வானில் சந்திரன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் ஆடையை அகற்ற முயற்சித்தான். அவன் இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்த பொதி சடுதியாக நிலத்தில் வீழ்ந்தது. கமாவு எதையும் செய்வதற்கு முன்பே அப் பொதியானது உருண்டு சென்று ஆற்றில் விழுந்து நீரில் மிதந்து செல்லத் தொடங்கியது. 

ஒரு கணம் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு  பொதியை மீட்டெடுக்கத் தோன்றியது. அவனுக்கு எல்லாமும் உடனடியாக மறந்து போய்விட்டதா? அவனது மனைவி போய்விட்டிருந்தாள். அவள் மீது அவன் வைத்திருந்த எல்லா எதிர்பார்ப்புகளும் நொறுங்கிப் போய்விட்டன. அவனுக்குள் நிம்மதியாக உணர்ந்தான். 

ஆனால் அவ்வாறான நிம்மதி தோன்றியது எதனால் என அவனுக்குப் புரியவில்லை. நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளவிருந்த அவனது எண்ணம் மறைந்து போயிருந்தது. 

‘அவள் நான் வரும்வரை ஏன் காத்திருந்திருக்க வேண்டும்? நான் மீண்டும் வரும் வரைக்கும் எல்லாமும் ஏன் மாற்றமடையாது இருந்திருக்க வேண்டும்?’ தனது ஆடையை சீர் செய்தபடி அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.


-கூகி வா தியாங்கோ

தமிழில்: – எம்.ரிஷான் ஷெரீப்

ஆசிரியர் குறிப்புகள்:

கூகி வா தியாங்கோ:

கென்யாவில் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி 1938 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ஜேம்ஸ் கூகி என்பதாகும். அது காலனித்துவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதால் பிறகு 1967 ஆம் ஆண்டு A Grain of Wheat வெளியானதோடு தனது பெயரை கூகி வா தியாங்கோ என மாற்றிக் கொண்டார்.

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து உதித்த முதல் தர எழுத்தாளராக கூகி வா தியாங்கோ அறியப்பட்டிருக்கிறார். பல பல்கலைக்கழகங்களில் இலக்கியம் குறித்த பேராசிரியரான இவரது அரசியல் படைப்புக்களின் காரணமாக கென்யாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் இவர். 

இவரால் ஆப்பிரிக்க இலக்கியம், அரசியல் மற்றும் அடிமை வாழ்க்கை முறை குறித்து எழுதப்பட்டவை ஏராளம். அவற்றுக்கிடையில் ‘Homecoming : Essays on African and Caribbean Literature’, ‘Decolonising the Mind : The Politics of Language in African Literature’, ‘Writers in Politics’, ‘Detained : A Writer’s Prison Diary’, ‘Moving the Centre : The Struggle for Cultural Freedoms’ ஆகியவை முக்கியமானவை.

‘Weep not Child’, ‘The River Between’, ‘A Grain of Wheat’, ‘Petals of Blood’, ‘Devil on the Cross’, ‘Matigari’ ஆகியவை இவரது நாவல்களாகும். ‘Secret Lives’ இவரது சிறுகதைத் தொகுப்பு. ‘This Time Tomorrow and Other Plays’, ‘The Black Hermit’, ‘The Trial of Dedan Kimathi’, ‘I Will Marry When I Want’, ‘Mother Sing for Me’ ஆகியவை இவரது முக்கியமான நாடகத் தொகுப்புகளாகும்.

எம். ரிஷான் ஷெரீப்:

எம். ரிஷான் ஷெரீப் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், கவிஞரும், ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறார். 

இவர் இதுவரையில் ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பு,  இரண்டு  ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு நாவல்கள் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.  

இந் நூல்களுக்காக இவர் இதுவரையில் இலங்கை அரச சாகித்திய விருதுகள், இந்தியா வம்சி விருது, கனடா இயல் விருது போன்ற முக்கியமான விருதுகளை வென்றுள்ளார். இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன.
 

http://kanali.in/meel-varugai/

Share this post


Link to post
Share on other sites

காரணமற்ற சிறை வாழ்க்கை, கடந்து செல்லும் காலங்கள் எல்லாம் ஒரு மனிதனின் கனவுகளை சிதைத்து வாழ்வின் போக்கையே மாற்றி விடுகின்றன.......நல்ல கதை ....நன்றி கிருபன்.......!   😁   

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிவு: மே 26,  2020 04:15 AM புதுடெல்லி,  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை. சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf
  • லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?   புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுதியில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25040557/Chinese-army-detains-Indian-soldiers-in-Ladakh.vpf
  • தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து Bharati May 26, 2020தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்படவேண்டும்: துரைராசசிங்கம் வலியுறுத்து2020-05-25T20:17:47+00:00 திருக்கோவில் நிருபர் தொல்லியல் துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுணர்களாக இருக்க வேண்டும், நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் அத்தியாவசியமாதனதாகும். அதைவிடுத்து நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவ்விடயம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பொதுத் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இவ்வாறான நியமனங்கள் செய்யப்பட முடியுமா? எந்தவொரு நியமனமும் இக்காலத்தில் செய்யப்பட முடியாது என்பதே பொதுவான விதியாகும். காரணம் அது வாக்காளரைக் கவர்வதற்கான அனுமதிக்கப்பட முடியாத ஒரு செயல் என்பதும், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாதிருக்கும் என்பதுமேயாகும். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் மிகவும் அலட்சியமாக, சட்டங்களை மதிக்காத வகையில் அல்லது அசட்டைத் துணிவோடு, குறிப்பிடப்பட்ட இக்காலத்தில் செய்யப்பட முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்தவண்ணமே இருக்கின்றார். தொல்லியல் இடங்கள் தொடர்பான விடயங்கள் தொன்மங்களைக் கண்டறிதல் என்பவற்றுக்கு அப்பால் இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வருகின்ற வஞ்சகத் தனமான ஒரு நடைமுறையாகவே இலங்கையில் தொடர்ச்சியாகக் கையாளப்பட்டுக் கொண்டு வருகின்றது. உண்மையில், மிகவும் அவதானத்தோடும் நிதானத்தோடும் உண்மையைக் கண்டறியும் இத்துறையில் பக்கச்சார்பற்ற நடைமுறை பேணப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும். இவ்வகையில் இத்துறைக்கென நியமிக்கப்படுவோர் துறைசார் நிபுனர்களாக இருக்க வேண்டும் என்பதும் முதன்மையான விடயமாக இருக்க வேண்டிய அதேவேளை இலங்கையின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இத்துறையில் நியமனங்கள் இடம்பெறுதலும் அத்தியாவசியமாதனதாகும். நடைபெற்றிருக்கும் நியமனமானது மேற்குறித்த எந்த நியமங்களையும் பின்பற்றாத ஒன்றாகவே அமைகின்றது. பொதுத் தேர்தல் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் தனது கட்சிக்கு பௌத்த சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி அவர்கள் நடந்து கொள்கின்றார் என்பது வெளிப்படையானதாகும். பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளிலும் இராணுவ அதிகாரிகளை நியமித்து தன்னைச் சுற்றிவர இராணுவத்தினரால் ஒரு கவசத்தை அமைத்துக் கொள்கின்றார் ஜனாதிபதி என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் வெற்றியிலே ஜனாதிபதி அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த வியத்மக குழுவினர் கூட இந்த இராணுவ வளையம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. அண்மையில் சுகாதார அமைச்சு அத்துடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சுகளுக்கான செயலாளர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது அதிருப்தியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து தனது ஆதரவுப் பங்காளிகளாக ஆக்குவதில் ஜனாதிபதி அவர்கள் கொண்ட அக்கறை தான் தொல்லியல் தொடர்பிலான இந்த நியமனம் என்று சொல்லப்படுகின்றது. இந்த நாட்டின் உண்மையான பூர்வீகம் தொல்லியல் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வு நிறுவனமானது இந்த வகையில் இயங்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டே கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு ஆக்க செயற்பாட்டில் நாங்கள் இவ்விடயம் தொடர்பில் அவதானமாயிருந்தோம். அரசியலமைப்பு வரைபின் உருவாக்கத்தில் அடுத்த அங்கமாக வனத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்லியல்துறை என்பன தொடர்பான சட்டங்கள் மீளாயப்பட்டு இவை தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். வரைபின் இறுதி அங்கமாக இவ்விடயம் கையாளப்பட இருந்த வேளையிலே தான் ஒக்டோபர் 26 அரசியல் உறுதியின்மை நிகழ்வு ஏற்பட்டது. முழுக்க முழுக்க புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுக்கும் ஒரு செயலாக நாம் அதனைப் பார்த்தோம். இச்செயற்பாட்டின் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாகவே இந்த தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைகின்றது. பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முடியாத மக்களைக் கூட்டி எதிர்ப்புத் தெரிவிக் முடியாத இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது நாகரிக உலகம் அரசு மீது இன்னுமொரு கேள்வியைத் தொடுப்பதற்கு காலாய் அமையும். இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மொட்டுக் கட்சியிலும் அதற்கு ஆதரவு வழங்கக் கூடிய கட்சிகளிலும் வேட்பாளர்களாக நிற்பவர்களும் அவற்றின் தலைவர்களும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மேற்குறித்த விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி மக்களை கேட்டுக் கொள்வதில் என்ன தார்மீக நியாயம் இருக்கின்றது என்பதை இவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பொய்மையால் மூடப்படவுள்ள எமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தடையாக இருக்கும் தங்கள் சிந்தனைகளில் அவர்கள் தெளிவடைய வேண்டும். தமிழ் மக்களை தமிழர் அரசியல், தமிழர் பாரம்பரியம், வடகிழக்கில் தமிழர்களின் இருப்பு என்கின்ற விடயங்களின் பால் அக்கறையோடும், உறுதியோடும் செயற்படுகின்ற அரசியல் சக்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தங்களுடைய அரசியற் சிந்தனைகளை இந்தக் கடைசி நேரத்திலாவது சரியான திசைக்கு திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். http://thinakkural.lk/article/43426
  • எங்களை உங்கள் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்காதீர்கள்- அரசியல்வாதிகளிற்கு அனில்ஜசிங்க வேண்டுகோள் Rajeevan Arasaratnam May 25, 2020எங்களை உங்கள் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்காதீர்கள்- அரசியல்வாதிகளிற்கு அனில்ஜசிங்க வேண்டுகோள்2020-05-25T21:40:12+00:00 இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளிற்குள் இழுக்கவேண்டாம் என பொதுமக்களையும் அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்க எதிர்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் மத்தியில் விவாதங்களை முன்னெடுக்கலாம் ஆனால் தயவு செய்து எங்களை அதற்குள் இழுக்காதீர்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டிற்காக சேவையாற்றிய என்னை போன்ற அரசாங்க ஊழியர்கள் எந்த கட்சியையும் சார்ந்து செயற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து அரசாங்கங்களாலும் நாங்கள் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் ஆனால் அவர்களிடமிருந்து விலகி ஓடியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்து செயற்படாத எங்களை போன்ற அதிகாரிகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் செயற்பாடுகளை தங்களால் முன்னெடுக்க முடியும் என்றே ஜனாதிபதியின் செயலாளருக்கான தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும் தான் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினை வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன் இந்த வர்த்தமானி விதிமுறைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்கள் அதனை உணரச்செய்யவேண்டும் என அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இல்லாவிடில் இன்னும் மூன்று வாரங்களில் பாரிய நோய்பரவல் உருவாகலாம் தேர்தலை நடத்த முடியாமல் போகலாம் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் வைரசினை கட்டுப்படுத்தி விட்டோம் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது என நான் தெரிவிக்கவில்லை ஆனால் தற்போது போன்று நாங்கள் செயற்பட்டால் ஏனையநாடுகளை விடஎங்களால் வைரசினை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://thinakkural.lk/article/43441  
  • போர்க்காலத்தைப் போலவே இன்றும் உதவும் புலம்பெயர் உறவுகள்: மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் Bharati May 26, 2020போர்க்காலத்தைப் போலவே இன்றும் உதவும் புலம்பெயர் உறவுகள்: மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர்2020-05-25T20:09:41+00:00 கொரோனாவால் உயிர் இழப்புக்களோடு, கடுமையான பொருளாதார, சமூக நெருக் கடிகளையும் சந்தித்துள்ள நிலையில் கூட போர்க்காலத்தில் உதவியதைப் போலவே இன்றும் தமது உதிரத்தை உதவியாக வழங்கும் புலம்பெயர் உறவுகளின் உணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சென்னையிலிருந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் தெரிவித்துள்ளார். கனடா ஐக்கிய தமிழர் தோழமை முன்னணி என்ற அமைப்பின் நிதி ஆதரவுடன் தமிழ்நாடு சென்னையில் கொரோனா பேரிடரில் சிக்கியுள்ள புளிச்சலூர், அண்ணா நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 30 குடும்பங்கள் விகிதம் தெரிவு செய்யப் பட்டு 90 குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 888 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் வழங்கிய பின்னரே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களுக்கு வெளியில் பல்வேறு மாவட்டங்களிலும் பல ஆயிரம் குடுங்கள் சிதறி வாழ்கின்றனர். அகதி என்ற சட்டரீதியான அடையாளம் கூட இல்லாத நிலையில் அகதிகளாக இருப்பது இன்னும் துயரமானது. நாடு திரும்ப முடியாத அரசியல் சூழ்நிலைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மையோடு ஒவ்வொரு நாட்களையும் பல்வேறு கஸ்ட்டங்கள் வலிகளோடு வாழ்வதை உணரமுடிகிறது. ஒவ்வொருவரின் பிரச்னைகளும், துன்பங்களும் வெவ்வேறானவை யாரிடமும் தீர்வைப் பெறமுடியாத இருள்சூழ்ந்த வாழ்க்கை சக்கரத்திற்குள் வாழவேண்டிய நிர்ப்பந்தம். சிங்கள பேரினவாத இனஒடுக்குமுறையின் விளைவாகவே தாய் மண்ணை விட்டு பெரும் வலிகளோடு எமது மக்கள் தாய் தமிழகத்தை நம்பியே இங்கு வந்திருக்கிறார்கள். எனவே தற்போதைய இந்த நெருக்கடியான தருணத்தில் முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும் வசிக்கும் அனைத்து ஈழத் தமிழர்களின் இடைக்கால வாழ்வாதார உதவிகளோடு அடிப்படை உரிமைகளை முழுமையாக உறுதி செய்வதற்கு தமிழக மற்றும் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவால் வாழ்வாதார நெருக்கடியில் உள்ள இங்குள்ள எமது மக்களுக்கு இங்குள்ள சில அரசியல், சிவில் தரப்பினரும், புலம்பெயர் உறவுகளும் மனிதநேய த்துடன் உதவிவருவது நெருக்கடியில் உள்ள மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இருந்தாலும் இந்த உதவிகள் அனைவரையும் சென்றடையவில்லை என்போதோடு போதுமானதாகவும் இல்லை என்பது வேதனையளிக்கிறது. தாயகத்துடன் ஒப்பிடுகின்ற போது, புலம் பெயர் தேசத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகம். அங்கே உயிரிழப்பும் உறவிழப்பும் எம் மக்களை பேரவலத்தில் தள்ளியுள்ளது. எனினும் இந்த இக்கட்டான நிலையிலும் தமது வலிகளையும் தாங்கிக்கொண்டு தாயகத்திலும் தமிழகத்திலும் உள்ள உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டிவரும் புலம்பெயர் தமிழர்களின் மனிதநேயம் உண்மையில் மிக நெகிழ்ச்சியை தருகிறது. தற்போதைய உலக சூழலானது மிகவும் சவால்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. கொரோனா என்ன எத்தகைய ஆபத்தான சவால்களை நாம் பூமிப்பந்தில் சந்தித்தாலும் உலகில் நாம் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சிறீலங்கா அரசு எம்மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்புக்கான நீதியை பெறவேண்டும் என்பதில் நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயலாற்ற வேண்டும். கோத்தபாய அரசனது தமிழ் மக்களுக்கான நீதியை முழுமையாக புறம் தள்ளி இன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சிறீலங்காவின் அனைத்து சிவில் நிர்வாக அலகுகளையும் இராணுவமயப்படுத்தி தமிழர் தயக்கத் தில் கட்டமைப்பு ரீதியான இனஅழிப்பை கூர்மையாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது இலங்கையில் நடப்பது இராணுவ ஆட்சி தான் என்பதை இன அழிப்பை போர் வெற்றி நாளாக கொண்டாடும் கோத்தபாய அரசு சர்வதேச சமூகத்தை நோக்கி உரத்துக் கூறியுள்ளது. உயிரிழந்த எமது உறவுக்களுக்காக கண்ணீர் விடுவதற்கே அனுமதிக்காத அரசு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியை தரப்போவதில்லை என்ற நிதர்சனத்தை தமிழ் மக்கள் உணர்ந்து அனைத்துலக சமூகத்தினுடாக நீதியை பெறுவதற்கான சாத்தியமான உபாயங்களை இனம் கண்டு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். எமக்கான நீதியை பெறுவதில் நாம் சூழ்நிலை களை காரணம் காட்டி அக்கறையின்றி செயல்பட்டால் எம்மைப் போலவே எமது எதிர்கால சந்ததியினரும் எமது மண்ணைவிட்டு வெளியேறும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இனவழிப்பிற்கான நீதியில் தான் எமது தலைமுறையாவது அகதி என்ற அடையாளம் இன்றி எமது மண்ணில் சுதந்திரமாக வாழமுடியும்” என்றும் அவர் தெரிவித்தார். http://thinakkural.lk/article/43422