Jump to content

நானும் யாழ் இணையமும் - கோமகன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழ் இணையமும் - கோமகன்

நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப்  பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள்  சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். பலருக்குப் பலரை இன்னார் என்றே தெரியாது. ஆனால் அண்ணன் தம்பி போல் கட்டிப்பிரண்டு இருக்கின்றோம். ஐ டி க்களைப்பற்றி அறியும் ஆர்வம் எமக்கு இருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று முகநூல் ஒரு சிலரை அடையாளப்படுத்தி இருக்கின்றது அதில் முக்கியமானவர் எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. அதே வெளியில் நான் சுருக்கு சுறுக்கராக வலம்வந்து பனங்கொட்டைத்தமிழில் எழுதுவதற்கு எனக்கு ஆதர்சமாக இருந்தவர் குமாரசாமி மற்றும் சுப்பையா. இன்று இங்கு உலாத்தும் உழவாரத்தை சில வேளைகளில் நான் குமாரசாமியோ என்று கூட எண்ணுவதுண்டு. இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

இன்று இலக்கியப்பரப்பில் நட்சத்திர எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் எழுத்தாளப்பெருமக்களின் ஆதி மூலம் யாழ் இணையம் தான். அதுதான் புலம்பெயர் ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பிற்குப் பெரும்கொடையாளியாக இருந்தது. அதில் முக்கியமானவர்களை இங்கு வரிசைப்படுத்துகின்றேன். 

தமிழ்நதி 
வல்வைசஹாரா 
சந்திரவதனா 
கறுப்பி சுமதி 
சாந்தி 
நிவேதா உதயராஜன் ( மொசப்பத்தேமியா சுமேரியர் )
மயோ மனோ 
சாத்திரி 
சயந்தன் 
கானா பிரபா 
கோமகன் 
சஞ்சயன் 
ஜே கே படலை 
நெற்கொழுதாசன் 
இணுவையூர் மயூரன் 

இவர்கள் அனைவரும் தாங்கள் புனைந்த நூல்களின் அடிப்படையில் பொதுவெளியில் அறியப்பட்டவர்கள். சில பேர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முகநூலில் இட்ட பதில்

///எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. //

கோமகன் அண்ணா, இது ரொம்ப ஓவர்!

பல எழுத்தாளர்களின்/கருத்தாளர்களின் எழுத்துக்களை வாசிப்பது மட்டும்தான் நான் செய்வது. யாழ் களத்தில் புனைபெயர்களூடாக அறிமுகமான பலர் இன்று எழுத்துலகில் முன்னணியில் திகழ்வதையிட்டு எனக்கும் நிறைய பெருமிதம் உள்ளது.😀

கனதியான எழுத்துக்களைப் புரிய நுணுக்கமான வாசிப்புப் பயிற்சி அவசியம் என்று புகழ் பூத்த சிற்றிலக்கிய/பேரிலக்கிய எழுத்துவனைஞர்கள் தொடர்ந்தும் சொல்லிவருவதால் கிடைக்கும் ஐந்து நிமிட இடைவெளியிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். யாழ் களத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் எழுதுவர்களின் வாசிப்பில் இன்னும் பயில நிறைய இருக்கின்றது. 😃
 
Link to comment
Share on other sites

இதில் தமிழ் நதி, ஜே கே படலை, கறுப்பி சுமதி ஆகியோர் யாழில் முதன் முதலில் எழுதாகாமலேயே பிரபலமானவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதில் தமிழ் நதி, ஜே கே படலை, கறுப்பி சுமதி ஆகியோர் யாழில் முதன் முதலில் எழுதாகாமலேயே பிரபலமானவர்கள்.

இவர்களும் யாழில் எழுதினார்கள் என்று இன்றைக்கு தான் தெரியும் ...கறுப்பி சுமதி என்பவர் அர்ஜுன் அண்ணாவின் தங்கச்சியா?
 
5 hours ago, கிருபன் said:

நான் முகநூலில் இட்ட பதில்

///எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. //

கோமகன் அண்ணா, இது ரொம்ப ஓவர்!

பல எழுத்தாளர்களின்/கருத்தாளர்களின் எழுத்துக்களை வாசிப்பது மட்டும்தான் நான் செய்வது. யாழ் களத்தில் புனைபெயர்களூடாக அறிமுகமான பலர் இன்று எழுத்துலகில் முன்னணியில் திகழ்வதையிட்டு எனக்கும் நிறைய பெருமிதம் உள்ளது.😀

கனதியான எழுத்துக்களைப் புரிய நுணுக்கமான வாசிப்புப் பயிற்சி அவசியம் என்று புகழ் பூத்த சிற்றிலக்கிய/பேரிலக்கிய எழுத்துவனைஞர்கள் தொடர்ந்தும் சொல்லிவருவதால் கிடைக்கும் ஐந்து நிமிட இடைவெளியிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கின்றேன். யாழ் களத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்தும் எழுதுவர்களின் வாசிப்பில் இன்னும் பயில நிறைய இருக்கின்றது. 😃
 
அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

Vadivelu Thank You GIF - Vadivelu ThankYou Advocate GIFs

ஆஹா... ரதி.
இதற்குத்தான்.... யாழ். களத்தில்,  நல்ல  சட்டத்தரணிகளும் வேண்டும். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

இவர்களும் யாழில் எழுதினார்கள் என்று இன்றைக்கு தான் தெரியும் ...கறுப்பி சுமதி என்பவர் அர்ஜுன் அண்ணாவின் தங்கச்சியா?
 
அவர் உங்களை புகழுவார் ...நீங்கள் தான் அவர் கதைகளை யாழில் கொண்டு வந்து இணைக்கிறீர்கள் tw_lol:

நானும் கேட்க வேணுமெண்டு நினைச்சனான். சுமதி கறுப்பி எண்டவர் அர்ஜுன் அண்ணையின்ரை அக்காவோ தங்கச்சியோ?
"மனுசி" எண்ட குறும் படமும் நடிச்சவ எண்டு நினைக்கிறன்.:)

Link to comment
Share on other sites

வெளியே எழுதாவிட்டாலும் புத்தன், சுவி அண்ணா போன்ற சிறந்த எழுத்தாளர்களும் யாழில் உள்ளனர். சிறந்த எழுத்தாளுமை உள்ள இன்னுமொருவன் யாழுக்கு வெளியே எழுதுவதில்லை என்று எங்கோ சொன்னதாக ஞாபகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

நானும் கேட்க வேணுமெண்டு நினைச்சனான். சுமதி கறுப்பி எண்டவர் அர்ஜுன் அண்ணையின்ரை அக்காவோ தங்கச்சியோ?
"மனுசி" எண்ட குறும் படமும் நடிச்சவ எண்டு நினைக்கிறன்.:)

தங்கச்சியாய்த் தான் இருக்க கூடும் ...எல்லோரும் சொல்றத்திற்கு பயப்பிடினம் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர்கள் வரிசையில் எனது பெயரைக் கானவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் புத்தகம் பிரசுரித்தவர்களைத்தான் பட்டியல் போட்டிருக்கின்றார். ஆனால் யாழ் இணையத்தில் புனைவு எழுத்தையும், கருத்தாடல்களில் தர்க்க ரீதியாக எழுதியவர்கள்/எழுதிக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே சிறந்த படைப்பாளிகள், கருத்தாளர்கள்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சுவைப்பிரியன் said:

எழுத்தாளர்கள் வரிசையில் எனது பெயரைக் கானவில்லை.

நாமெல்லாம் சுருக்கர்ட லிஸ்ட்டில் இல்லை சுவைப்பிரியன் அண்ணா  நாமெல்லாம் சின்ன பொடியன்கள் 

சுருக்கர் இப்ப ஏன் யாழிணையத்தை பற்றியும் இணைந்து கருத்து கதை கவிதை எழுதியவர்களையும் நினைவு கூருகிறார் கிருபன் 

19 hours ago, கிருபன் said:

இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சுருக்கர் இப்ப ஏன் யாழிணையத்தை பற்றியும் இணைந்து கருத்து கதை கவிதை எழுதியவர்களையும் நினைவு கூருகிறார் கிருபன் 

கொரோனா எல்லோருக்கும் பழையவற்றை மீள் நினைவுக்குக் கொண்டுவரவும் கனகாலம் தொடர்புகள் அற்று இருப்பவர்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தவும் நேரத்தைக் கொடுத்துள்ளது.

சின்னச் சின்ன விடயங்களுக்கு கோபப்படுவதையும், இறப்பில்லாத வாழ்வு நித்தியம் என்ற இறுமாப்பையும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி இல்லாமல் ஆக்கியுள்ளது!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா நாமளும் நட்சத்திர எழுத்தாளர் லிஸ்டில் இருக்கிறமா???????????🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை ந‌ண்ப‌ன் ஜ‌முனா   எவ‌ள‌வ‌த்தை எழுதி இருக்கிறார் ,
ச‌கோத‌ர‌ர் நொடுங்ஸ் , விக‌ட‌க‌வி அண்ணா ,  க‌லைஞ‌ன் அண்ணா ,

ஜ‌முனா தொட‌ர்ந்து யாழில் எழுதி இருக்க‌னும் இன்னும் ப‌ல‌ நூறு ஆக்க‌ங்க‌ளை எழுதி இருப்பார் ,

 மேல‌ கோம‌க‌ன் எழுதின‌ ஆட்க‌ளின் பெய‌ரை விட இன்னும் ந‌ல்லா எழுத‌க் கூடிய‌ ப‌ல‌ உற‌வுள் யாழ் குடும்ப‌த்தில் இணைந்து இருந்த‌வை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 16:10, கிருபன் said:

நானும் யாழ் இணையமும் - கோமகன்

நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப்  பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள்  சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்வேன். பலருக்குப் பலரை இன்னார் என்றே தெரியாது. ஆனால் அண்ணன் தம்பி போல் கட்டிப்பிரண்டு இருக்கின்றோம். ஐ டி க்களைப்பற்றி அறியும் ஆர்வம் எமக்கு இருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் இன்று முகநூல் ஒரு சிலரை அடையாளப்படுத்தி இருக்கின்றது அதில் முக்கியமானவர் எனது எழுத்து ஆசான்களில் ஒருவரான கிருபன் ஜி. அதே வெளியில் நான் சுருக்கு சுறுக்கராக வலம்வந்து பனங்கொட்டைத்தமிழில் எழுதுவதற்கு எனக்கு ஆதர்சமாக இருந்தவர் குமாரசாமி மற்றும் சுப்பையா. இன்று இங்கு உலாத்தும் உழவாரத்தை சில வேளைகளில் நான் குமாரசாமியோ என்று கூட எண்ணுவதுண்டு. இன்றும் கூட முகநூலில் யாழ் நண்பர்கள் நிதானம் தப்பாது நாகரிகமாக கருத்தாடுவதற்குரிய பயிற்சியை யாழ் கருத்துக்களுமே தந்தது.    

இன்று இலக்கியப்பரப்பில் நட்சத்திர எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் எழுத்தாளப்பெருமக்களின் ஆதி மூலம் யாழ் இணையம் தான். அதுதான் புலம்பெயர் ஈழத்து தமிழ் எழுத்துப்பரப்பிற்குப் பெரும்கொடையாளியாக இருந்தது. அதில் முக்கியமானவர்களை இங்கு வரிசைப்படுத்துகின்றேன். 

தமிழ்நதி 
வல்வைசஹாரா 
சந்திரவதனா 
கறுப்பி சுமதி 
சாந்தி 
நிவேதா உதயராஜன் ( மொசப்பத்தேமியா சுமேரியர் )
மயோ மனோ 
சாத்திரி 
சயந்தன் 
கானா பிரபா 
கோமகன் 
சஞ்சயன் 
ஜே கே படலை 
நெற்கொழுதாசன் 
இணுவையூர் மயூரன் 

இவர்கள் அனைவரும் தாங்கள் புனைந்த நூல்களின் அடிப்படையில் பொதுவெளியில் அறியப்பட்டவர்கள். சில பேர்கள் தவறவிடப்பட்டிருக்கலாம். அறியத்தந்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன். நன்றி .

கிருப‌ன் அண்ணா , கோம‌க‌ன் என் கூட‌ முந்தி ஜாலியா எழுத‌ நான் நினைத்தேன் இவ‌ருக்கு 25 , 26 வ‌ய‌து இருக்கும் என்று , நீங்க‌ள் இணைத்த‌ இணைப்பில் அவ‌ரின் முக‌ நூல் பெய‌ர் இருக்கு உள்ள‌ போய் பார்த்தா , கோம‌க‌ன் ஜ‌யாவை விட‌ ( என்ர‌ குசா தாத்தா கொஞ்ச‌ம் இள‌மையா இருக்கிறார் )

யாழில் இருந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் என்றால்
நான்
ஜ‌முனா
ஈழ‌வ‌ன்85
சுவேஸ்
ஜீவா
சுண்ட‌ல் மாமா 😁

கூடுத‌லா யாழில் 45வ‌ய‌தில் இருந்து 65வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌வை தான் கூட‌ /
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.