-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இன்று (25) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பண கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்றோர் வீதத்தினை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு தற்போது கொரோனா தொற்று நிலமை காரணமாக வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கின்றபோது எமது இளைஞர்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை பிரதேச செயலகங்கள், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய தொழில் பயிலுநர் மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன தங்களுடைய பணிகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துத்து வருவதோடு தொழில் நுட்பம் சார்ந்த பலதரப்பட்ட விடயங்களை தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மற்றும் துறைசார் நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில் வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன எனினும் இவ் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படலாம். இவ் வேலை தேடுவோர் க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. சாதாரண தரதிற்கும் குறைந்த என்னும் பெறுபேறுகளின் அடிப்படையில் காணப்படுகின்றார்கள். மேலும் மூன்றாம் நிலை கல்வி தொடர்பான பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அனைத்து பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுகின்ற துறைசார் உத்தியோகத்தர்களை ஒருமுகப்படுத்தி இளைய சமூகத்தை சரியான பாதையில் வழிப்படுத்த இச் செயற்குழுக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட மட்டத்திற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு ஏழு உப குழுக்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com) -
இது இப்படியிருக்க சீனனின் நண்பனான இலங்கையின் இன்றைய ரூபாயின் பெறுமதி 1 C$ = Rs. 165.50. அடுத்த ஆறு மாதங்களில் .. 1 C$ = Rs. 200.00 ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கககபோ.... 😂
-
By விவசாயி விக் · Posted
அண்ணா அவ்வளவும் கடந்த 100 வருடங்களில் நடந்த நிகழ்வுகள் பெயர்கள் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனக்கு விவரண படம், சரித்திர கட்டுரைகள் என்றால் உயிர். 😀 -
By பிழம்பு · பதியப்பட்டது
அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார். குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவில் 14வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது! | Virakesari.lk -
இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா (நமது நிருபர்) இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறவில்லை. பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை. எனவே இலங்கை குறித்து கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இது இவ்வாறிருக்க இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக கனடா அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய பிரதான அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன் மற்றும் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னு ஆகியோர் இவற்றை வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று பிற்பகல் வரை 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றன. இதில் பல்வேறு உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்புரிமையற்ற நாடுகளும் உரையாற்றின. அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் உரையாற்றின. இலங்கை தொடர்பான விவாதம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் அதற்கு முன்னதான பிரதான அமர்விலேயே அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு உரையாற்றின. அமெரிக்கா ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராஜாங்க செயலர் அன்டனி பிலிங்கன் தனது பிரதான உரையில் இலங்கை தொடர்பாக குறிப்பிடுகையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறாமல் இருப்பதால் இலங்கை குறித்து கொண்டுவரப்படும் பிரேரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க வேண்டும். முக்கியமாக கடந்தகால அட்டூழியங்கள் குறித்த பொறுப்புக்கூறல்கள் போதுமானதாக இல்லை என்றார். கனடா இதேவேளை கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் பிரதான அமர்வில் உரையாற்றுகையில், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை தொடர்பில் கனடா மிக ஆழமாக கரிசனை செலுத்தி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை காப்பாளர்கள் சிவில் சமூக அமைப்புகள் போன்றன அச்சுறுத்தலுக்கு உட்படுகின்றமை தொடர்பில் கரிசனை செலுத்தி இருக்கின்றோம். அதுமட்டுமன்றி நினைவுகூரல் தொடர்பான அடக்குமுறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இருக்கின்றோம். மேலும் சிறுபான்மை மத மக்களின் சடலங்களை எரிப்பது தொடர்பான தீர்மானம் குறித்தும் சட்டத்தின் ஆட்சி படுத்தல் மோசமடைகிறது செல்கின்றமை தொடர்பாகவும் நாங்கள் அவதானம் செலுத்தி வருகின்றோம். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை இந்த மனித உரிமைப் பேரவை இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி இருக்கிறது. அந்த வகையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானம் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.