• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nedukkalapoovan

வீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும்

Recommended Posts

3 minutes ago, nedukkalapoovan said:

முதலமைச்சருக்கு தெரியாமலே இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சியில் இருந்தவர் என்ற வகையில்.. அவர் மீது பழிபோவது தவிர்க்க முடியாதது. 

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

நெடுக்ஸ் , மத்திய  அரசிற்கு தெரியாமல் ,அவர்கள் அனுமதி இல்லாமல் இவரால் உதவி இருக்க முடியாது 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ரதி said:

நெடுக்ஸ் , மத்திய  அரசிற்கு தெரியாமல் ,அவர்கள் அனுமதி இல்லாமல் இவரால் உதவி இருக்க முடியாது 

எம் ஜி ஆர் துணிச்சல் மிக்க தலைவர். அவர் உதவ எண்ணி விட்டால்.. உதவியே தீருவார். அதேவேளை எதிர்க்க தீர்மானித்தால் எதிர்த்தே தீருவார்.

மத்திய அரசை தன் சார்ப்பு ஆக மாற்றும் ஆளுமை அவருக்கு இருந்தது. கருணாநிதிக்கு அது கிடையாது. தன் குடும்பத்துக்கு சலுகை பெற விட்டுக்கொடுப்புக்களை செய்ய மட்டுமே தெரியும். 

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, nedukkalapoovan said:

எம் ஜி ஆர் துணிச்சல் மிக்க தலைவர். அவர் உதவ எண்ணி விட்டால்.. உதவியே தீருவார். அதேவேளை எதிர்க்க தீர்மானித்தால் எதிர்த்தே தீருவார்.

மத்திய அரசை தன் சார்ப்பு ஆக மாற்றும் ஆளுமை அவருக்கு இருந்தது. கருணாநிதிக்கு அது கிடையாது. தன் குடும்பத்துக்கு சலுகை பெற விட்டுக்கொடுப்புக்களை செய்ய மட்டுமே தெரியும். 

உங்கட நம்பிக்கையை ஏன் கெடுப்பான் ...அவர்களை விடுங்கள் இறந்து போய் விட்டார்கள் ...உப்ப சீமானை நம்புங்கோ துணிச்சல் மிக்கவர் , மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் மிக்கவர் ...முதலமைச்சராய் வந்தவுடன் தமிழீழம் எடுத்து தந்து விட்டு தான் ஓய்வார் 

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, ரதி said:

உங்கட நம்பிக்கையை ஏன் கெடுப்பான் ...அவர்களை விடுங்கள் இறந்து போய் விட்டார்கள் ...உப்ப சீமானை நம்புங்கோ துணிச்சல் மிக்கவர் , மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் மிக்கவர் ...முதலமைச்சராய் வந்தவுடன் தமிழீழம் எடுத்து தந்து விட்டு தான் ஓய்வார் 

சீமான் முதலமைச்சராக வரும் போது எப்படி கிழக்குக் பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கனும் என்ற தேவை ஏற்பட்டதோ.. அப்படி ஒரு தேவை இலங்கையின் வடக்குக் கிழக்கை பிரித்து தனிநாடு ஆக்க வேண்டும் என்ற நிலையை.. சர்வதேச.. சீன இராணுவ - பொருண்மிய நிலை உருவாக்குமாக இருந்தால்.. சீமானால்.. தமிழீழம் அடைவது சாத்தியமே. எல்லாம் காலத்தின் கையிலும் சீமானின் தளராத கொள்கைப் பிடிப்பிலும் தான் உள்ளது. காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். கருணாநிதி மாதிரி குடும்பத்துக்கு என்று பயன்படுத்தினால்.. அழிவு தான் மிஞ்சும். 

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, nedukkalapoovan said:

சீமான் முதலமைச்சராக வரும் போது எப்படி கிழக்குக் பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கனும் என்ற தேவை ஏற்பட்டதோ.. அப்படி ஒரு தேவை இலங்கையின் வடக்குக் கிழக்கை பிரித்து தனிநாடு ஆக்க வேண்டும் என்ற நிலையை.. சர்வதேச.. சீன இராணுவ - பொருண்மிய நிலை உருவாக்குமாக இருந்தால்.. சீமானால்.. தமிழீழம் அடைவது சாத்தியமே. எல்லாம் காலத்தின் கையிலும் சீமானின் தளராத கொள்கைப் பிடிப்பிலும் தான் உள்ளது. காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். கருணாநிதி மாதிரி குடும்பத்துக்கு என்று பயன்படுத்தினால்.. அழிவு தான் மிஞ்சும். 

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, ரதி said:

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

ஒருமித்த குடைக்குள் அல்ல.. மொட்டைகளின் குடைக்குள் எக்கத்துக் கரன ஆகிடுவிடுவினம். அதுதான் அடிமைகள் சோம்பேறிகள்.. செய்யக் கூடிய ஒரே மார்க்கம். 

Share this post


Link to post
Share on other sites

நல்ல காலம் எம்ஜிஆர் மு.வாய்க்காலுக்கு முன்னர் இறந்து விட்டார் 
 

Share this post


Link to post
Share on other sites

இரண்டுபக்கங்களை வாசிச்சே களைச்சுப்போனன் .... அப்பாடா 😀

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

ஆக உங்களுக்கே சீமானின் நம்பிக்கை இல்லை 😆...கவலைப்படாதீர்கள் இவர்களுக்கு எல்லாம் ஈழ மக்கள் சிரமம் கொடுக்க மாட்டார்கள் ...ஒருமித்த குடைக்குள் ஒன்றாய் வாழ பழகி  விடுவார்கள் 

 

1 hour ago, nedukkalapoovan said:

ஒருமித்த குடைக்குள் அல்ல.. மொட்டைகளின் குடைக்குள் எக்கத்துக் கரன ஆகிடுவிடுவினம். அதுதான் அடிமைகள் சோம்பேறிகள்.. செய்யக் கூடிய ஒரே மார்க்கம். 

எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெரும் இழப்புகளை சந்தித்து வாழும் எம் மக்களை இப்படி “அடிமைகள் சோம்பேறிகள்” என்று சொல்கிறீர்களே? நியாயமா?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

நல்ல காலம் எம்ஜிஆர் மு.வாய்க்காலுக்கு முன்னர் இறந்து விட்டார் 
 

முள்ளிவாய்கால் காலத்தில் எம்.ஜி. ஆர் இருந்திருந்தால் முன்பு செய்த உதவிகள் நன்மைகள் எல்லாம் நன்றி மறக்கபட்டு இன்று மாபெரும் துரோகிபோல்  சித்தரிக்கபட்டு திட்டி தீர்த்திருக்கப்பட்டிருப்பார். கருணாநிதி தப்பி இருப்பார்.

Share this post


Link to post
Share on other sites
On 8/5/2020 at 22:10, nedukkalapoovan said:

 

எங்களுடைய நிலைப்பாடு.. எமது போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில்.. எமது மக்களின் பணத்தை சிங்களவனும்.. அந்நியனும்.. துரோகிகளும் அனுபவிப்பதை விட.. நம்மவர்களே அனுபவிக்கட்டும்.  இல்லை அதனை சிங்களவனும் அந்நியனும் துரோகிகளும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும். இலங்கையில் 10 பணக்காரர்களுக்கு கருணா என்ற துரோகி வந்திட்டார். டக்கிளஸ் இன்னொரு பக்கம். ஏன் அவர்களிடம் போய் காசுக்கணக்கு பார்க்கிறீர்கள் இல்லை..?! பயம் போல.

எத்தனையோ புலம்பெயர் போராளிகள் மக்கள் வேலைக்குப் போக முடியாத அளவுக்கு உள வளப்பிரச்சனையோடு இருக்கிறார்கள்.. உடல் நலிவுற்றிருக்கிறார்கள்.. அதாவது தெரியுமா உங்களைப் போன்றோருக்கு..?! 

 

நெடுக்கர் இப்பத்தான் சரியான இடத்துக்கு வந்திருக்கிறார். கருணா, டக்ளஸ் போன்றோரை நாம் எப்படி துரோகிகள் என்று கூறுகின்றோமோ, அதைவிட கேவலமானவர்கள் இந்த மக்களிடமிருந்து காசு சேர்த்து ஆட்டையைப்போட்டவர்கள். அவர்கள் எப்படியாவது எமது சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்களே.

 மற்றயது நீங்கள் கூறியதுபோல் உடல், உள நலிவுற்றிருக்கும் ஊரிலுள்ளோருக்கு அவர்கள் சுருட்டிய பணத்தில் ஒரு சிறு தொகையை கொடுத்தாலே பல போராளிக்குடும்பங்கள் நிமிர்ந்திருக்கும்.

மற்றும்படி இந்த கருணாநிதி அவரது அரசியல் வாரிசுகள் எல்லாருமே கடைந்தெடுத்த சுயநலமிக்க அயோக்கியர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை!!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, nedukkalapoovan said:

இதே எம் ஜி ஆர் தான் ஒப்பரேசன் லிபரேசனின் போது உதவிகளை நேரடியாக அனுப்பினார் என்பதையும் மறக்க வேண்டாம். அதுவே இறுதியில் இந்திய - இலங்கை ஒப்பந்தம்.. ஹிந்தியப் படை வரவு வரை போனது. ஒப்பரேசன் லிபரேசனால் வரவிருந்த பெரும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.. மேலும் போராளிகளுக்கு தம்மை மீள ஆசுவாசப்படுத்த ஒரு கால அவகாசத்தை வழங்கியது. 

நெடுக்ஸ் இங்குதான் நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆபரேஷன் லிபேரேஷன் நடவடிக்கை இலங்கை அரசால் தமிழர்களை (புலிகளை) அழிக்க முன்னெடுக்கப்பட்டது. அதைசாட்டாக வைத்து உதவுவதுபோல இந்தியா உள்ளே வந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் சிறிலங்கா , இந்தியா மற்றும் பல நாடுகளின் தயவுடன்தான் நடந்தேறியது. இதை முன்னின்று நடத்தியதே சோனியா தலைமையிலான இந்தியாதான். அப்படியிருக்க இருவிடயங்களையும் ஒப்பிடுவது பொருந்தாது. ஒருவேளை கருணாநிதி தலைமையிலான திமுகவின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருந்தால் சோனியா ஆட்சி கலைந்து பிஜேபி வருவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்திருக்கும். எப்படியிருப்பினும் புலிகள் எவ்வாறாவது அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பொதுசனத்தின் சாவையாவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்!!

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

எப்போதும் தமிழன் 2009 ல் கருணாநிதியிடம் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. திமுக வெறும் 16 எம்பிகளைஏ வைத்திருந்த‍து. மிகுதி காங்கிரஸ்,பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கூட்டணிக்கட்சிகளிடம் தான் இருந்த‍து. அதேவேளை தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சி காங்கிரசின் 35 சட்ட மன்ற உறுப்பினர்களின் தயவில் தான் நடந்து கொண்டிருந்த‍து. அவ்வேளை கருணாநிதி மத்திய அரசுக்கான தனது ஆதரவை விலக்கி இருந்தாலும் மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்க சந்தர்ப‍ம் இல்லை. அதன் பின்னர் 2009  தேர்தலில் நீங்கள் கூறியபடி பிஜேபி ஆட்சிக்கு வரவில்லை.  காங்கிசே வெற்றி பெற்று பதவிக்கு வந்திருந்தததை உங்களுக்கு ஞாபகப்ப‍டுத்து கின்றேன். அதே வேளை கருணாநிதிக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டிருக்கும். ஈழதமிழருக்காக  இரண்டாம்  முறை ஆட்சியை இழந்த கருணாநிதி என்ற பெயரை மட்டும் பெற்றிருப்பார்.  அதை விட  எதுவும் நடந்திருக்காது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது புலிகளின் வலிமை இழப்போடு அதாவது  கிளிநோச்சி வீழ்ச்சியோடு  உறுதி செய்யபட்டு விட்டது. 

நீங்கள் கூறியபடி பிஜேபி ஆட்சிக்கு வந்திருந்தாலும் காங்கிரஸ் என்ன செய்த‍தோ அதையே பிஜேபியும் செய்திருக்கும் என்பது இந்திய அரசியலை அவதானிக்கும் ஒருவருக்கு நன்கு தெரியும். காங்கிரசை விட ஈழத்தமிழரை அதிகம் வெறுக்கும் கட்சி பிஜேபி என்பது அவர்களது  நகர்வுகளை கவனமாக அவதானிப்பவர்களுக்கு தெரியும்.தமிழக அரசின் பரிந்துரையின் பிறகும் எழுவர் விடுதலை தொடர்பாக தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தியே கூறிய பிறகும் பிஜேபி அரசு அவர்களை விடுதலை செய்யாது இழுத்தடிப்பதில் இருந்து அதை புரிந்து கொள்ளலாம். 

 ஈழ‍தமிழருக்கு எதிரான  அரசியல் கொள்கை  என்பது இந்திய அரசின் கட்சிகளுக்கு அப்பால் இருந்த பொதுவான இந்திய வெளியுறவுக் கொள்ளை.  1991  ல் நடந்த ராஜீவ் கொலை  ஈழத்தமிழர் போராட்டடதை அழிப்பதை நியாயபடுத்த அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு. நாமே கொடுத்த அந்த வாய்ப்பை அவர்கள் திறமையாக பயன்படுத்தினார்கள் என்பதே உண்மை. 

10 hours ago, Eppothum Thamizhan said:

நெடுக்ஸ் இங்குதான் நீங்கள் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆபரேஷன் லிபேரேஷன் நடவடிக்கை இலங்கை அரசால் தமிழர்களை (புலிகளை) அழிக்க முன்னெடுக்கப்பட்டது. அதைசாட்டாக வைத்து உதவுவதுபோல இந்தியா உள்ளே வந்தது. ஆனால் முள்ளிவாய்க்கால் சிறிலங்கா , இந்தியா மற்றும் பல நாடுகளின் தயவுடன்தான் நடந்தேறியது. இதை முன்னின்று நடத்தியதே சோனியா தலைமையிலான இந்தியாதான். அப்படியிருக்க இருவிடயங்களையும் ஒப்பிடுவது பொருந்தாது. ஒருவேளை கருணாநிதி தலைமையிலான திமுகவின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்திருந்தால் சோனியா ஆட்சி கலைந்து பிஜேபி வருவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்திருக்கும். எப்படியிருப்பினும் புலிகள் எவ்வாறாவது அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பொதுசனத்தின் சாவையாவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்!!

 

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
15 hours ago, tulpen said:

முள்ளிவாய்கால் காலத்தில் எம்.ஜி. ஆர் இருந்திருந்தால் முன்பு செய்த உதவிகள் நன்மைகள் எல்லாம் நன்றி மறக்கபட்டு இன்று மாபெரும் துரோகிபோல்  சித்தரிக்கபட்டு திட்டி தீர்த்திருக்கப்பட்டிருப்பார். கருணாநிதி தப்பி இருப்பார்.

MGR  இருந்து இருந்தால் முள்ளிவாய்க்கால் மட்டும் யுத்தம் போகுமட்டும் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார் .அவரின் தமிழ் உணர்வுக்கு பல உதாரணம் சொல்லலாம் .கருணாநிதி தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை இழக்க கூடாது எனும் பயத்தினால் மட்டுமே எங்களுக்கு உதவுவது போல் நடித்தவர் பெரும் ஆரவாரத்துடன்  அவர் தத்தெடுத்த ஈழத்து அகதி சிறுவன் இப்ப எங்கிருக்கிறார் என்று தெரியுமா ?

எப்படி ஒரு மனிதன் வாழக்கூடாது என்பதுக்கு தெலுங்கு கருணாநிதி சாட்சி .

  1.  2009  ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசிலிருந்து பேச வந்து போகும் பிரணாப் முகர்ஜி போன்றவர்களை கூட   ஈழப்போர் நிறுத்தம் குறித்துதான் பேச வந்ததாக கூட்டு சேர்ந்து நாடகமாடியது
  2.  ஈழப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் வகையில் சுவரொட்டி அச்சிட தடை . அப்படியே அச்சிட்டு ஓட்ட சென்றாலும் சென்றவர்களை தூக்கி சிறையிலிடுதல்.
  3.  2009  ஜனவரியில் செங்கல்பட்டில்  சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த  சட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்ததோடு முத்துகுமார் மரணத்தினால் மாணவர்கள் மத்தியில் எழுர்ந்த பேரெழுச்சியை தடுக்க கல்வி கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறையளித்தது .
  4. லிபியா, எகிப்த்து  என பிற நாடுகளின் பதிக்கப்படும் , கொல்லப்படும் செய்திகளை ஒளிபரப்பவும் ,தன் ஏடுகளில் படமாகவும்  போடும் தன் ஊடகம்  தமிழின படுகொலைகளைப்பற்றி  சிறிதும் கண்டுகொள்ளாமல் ஊடக இருட்டடிப்பு செய்தும் இன்றும் ஈழப்படுகொலைப்பற்றியே விபரம் தெரியாத மக்களாக தமிழர்கள் இருக்க காரணமாயிருப்பது
  5. தமிழினத்தை காங்கிரஸ் அழிக்கிறது அதனுடன் கூட்டு சேர்த்ததால் நீண்ட  கால பழி வரும், நாங்கள் உங்களுடன் இருக்குறோம் கவலைபடாதிர்கள் என ராமதாஸ் , திருமா, வீரமணி உள்பட பலர் காதுகிழிய சொல்லியும் அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் இவர்களுக்கெல்லாம் விபரம் பத்தாதாது போல் நினைத்து, நீங்கள் பெரிதாக நினைக்கும் ஈழ விஷயத்தை என் சாணக்கிய புத்தியால் ஒன்றும் இல்லாமல் செய்கிறேன் பார் என திட்டமிட்டு,  திரும்ப திரும்ப சீமான் போன்றவர்களை சிறை தள்ளியதோடு இனத்திற்காக வெகுண்டெழுந்து உண்ணா விரதமிருந்து தமிழ் இனத்திற்கே தனியொரு தலைவனாய் உருவெடுத்த திருமாவையும் இரண்டு சிட் கொடுத்து ..இன்று தன்னைபற்றியே குறை பேசாத நபராக மாற்றியது .
  6. இனி என்ன செய்ய போகிறோம் என்ற  குறுவட்டை பார்த்த எந்த ஒரு நபரும் ஏன்? காங்கிரஸ்காரரே கூட தன் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார் .அப்படிப்பட்ட ஈழ படுகொலையை எடுத்து சொல்லும் குறுவட்டை எங்கும் பரப்பவிடாமல் பலரை சிறை அனுப்பியதோடு ,கலைஞர் ஒரு தமிழின கொலைஞர் என்ற குறுவட்டை தயாரித்த நபரையும் சிறைதள்ளியது.
  7. ஈழபிரச்சனையில் ஊர் ஊராக சென்று கருணாநிதி , காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை முரட்டுத்தனமாக தாக்கி  தன்னை எதிர்ப்பவர் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இந்த கதிதான் என பயமுறுத்தியும். வைக்கோ உள்ளிட்ட பல தலைவர்கள் கூடி கண்டன பொதுகூட்டம் நடத்தியும் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தண்டிக்காதது. அத்தோடு திரைத்துறையினர் தனக்கு சாதகமாக  நடப்பவர்களை  உக்குவித்தும் எதிராக நடப்பவர்களுக்கு எல்லாவிதமான நெருக்கடிகளையும் தொடர்ந்துகொடுத்துவருவது  அல்லது கூடி கண்டன எதிர்த்தவர்களையே தன்வசப்டுத்தி தனக்காக பேச வைப்பது 

    இனத்திற்கு ஆதரவான போராட்டங்களை ஓடிக்கி கொண்டே .. காங்கிரசோடு கூட்டணி வேண்டம், கூட்டணி வேண்டம் என தலைபாடக அடித்து கூறிய வீரமணி போன்றவர்கள் வாயிலாகவே.. நாம் கருணாநிதியை வெற்றி பெற வைத்தால் தான் இந்தளவுக்காவது போராட முடியும் . ஜெயலலிதா வந்துவிட்டால் வாயை துறந்து இனத்திற்கு ஆதரவாக பேசமுடியாது எனும் ஒரு கூற்றை.. மீண்டும் மீண்டும் தனக்காக பிறரை பேச வைத்து நாடகமாடியது . ஏதோ மீண்டும் ஒரு முறை அதே 2008  .  அதேபுலிகள் கையில் ஈழம் .. அதே சோனியா  அதேஇந்தியபடை உதவி .. அந்த நேரம் பார்த்து இங்கு ஜெயலலிதா ஆட்சி இருக்க போவது போலவும், இவர் போலவே அவரும் துரோகம் செய்வார் போலவும், அந்த நேரம் போராடுவர்களை இவரைவிட அதிகமாக முடக்குவார் போலவும் கூறும் இவரின் கூற்றையும் சிலர் நம்பினார்களே

    நம்ப வைத்தார். இப்படி பேசினால் எப்படி முடியும் என சாணக்கியனுக்கு தெரியும்.

  8. கடலில் என்னை தூக்கி போட்டால் நன் கட்டுமரமாக உதவுவேன் வசனம் பேசிய கருணாநிதி மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்பட்டும் கொல்லப்படும் நிகழ்வுக்கு .. நம் மீனவர்கள் பேராசைகாரர்கள் அதனால் தான் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று பேட்டி கொடுத்தது .
  9.  நாம் தமிழர் இயக்கத்தினரை சம்மந்தமில்லாமல் ஈ.வி.கே.ஸ்.இவன்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு விசியதாக சிறை தள்ளியும் .. அதே இயக்கத்தை சேர்ந்த ஈழ படுகொலையின் போது செத்து கொண்டிருந்த மக்களுக்கு இரத்தபொட்டலம் கடத்தியதாக அதே இயக்கத்தை சேர்ந்த (கடத்தினால் என்ன ?) முத்துகுமார் மீது  வழக்கு பதிவு செய்து புழல் சிறையிலடைத்து .அதே இயக்கத்திலிருந்த என்னை ஜெயராம் வழக்கில் சிக்க வைத்து 16 நாள் சிறையிலடைத்து .. ஆம் 25  / 01 / 2010   தேதியே நடிகர் ஜெயராம் தமிழச்சியை கேவலமாக பேசியது குமுதம் நாளிதழில் வெழிவந்தது அதனை தொடர்ந்து  இதற்க்கு மனிப்பு கேட்பிர்களா என்று அவரிடம் கேட்க  அவர் அது தவறில்லை  என்று கூறியிருக்கிறார்  இந்நிலையில்  நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கசென்றது 5 / 2  /2010 .   ஆக இப்படி கேவலமாக தமிழச்சியை பேசிய ஒரு நடிகரை 10  நாளாகியும் கண்டிக்காதது விட்டு   விட்டது யார் தவறு?   பின் எங்களை கைது செய்ததோடு சட்டம் அதன் கடமையை  செய்யும் என்றதோடு எங்களுக்கு கண்டனம் வேறு
  10. தன் சிங்கள இனத்திற்கு விசுவாசமாக தமிழினத்தை கொன்று மீதியுள்ளோரையும் முள் வேலி முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே தமிழ் இன தலைமகனின் மகளான கனிமொழியை அனுப்பி, கைகுலுக்கி பரிசு பெற்று

    வந்த பாக்கிய முகாமில் அடைத்த ராஜபட்செவிடமே  தியை பெற்ற தந்தை.. அதே மகளை வைத்தே பின் அதே ராஜபக்சேவுக்கு எதிராக மீனவ நண்பன் போராட்டம்

  11. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்ற பெயரில் காரணமின்றி வருடக்கணக்கில் அடைத்து வைத்துள்ளவர்களின் கோரிக்கையான ஒன்று விடுவி அல்லது தண்டனை கொடு என்ற தொடர் போராட்டங்களை ஒடுக்க தமிழரல்லாத ஒரு பிகாரி அதிகாரியை போட்டு உயிர்போக அடித்த பின் வாரி திருச்சியலடைந்த்து அகதிமுகாம்களில் உள்ளவர்களையும் புலி ஆதரவு கருணாநிதி ஆதரவு என பிரித்து நடந்தும்    சூழ்ச்சி       பொய்வழக்குகள் போடுவது.

  12.  

    முத்துகுமார்  இறந்த போது தான் உடலை எடுத்து செல்ல விடவில்லை .. கட்சி சார்பற்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஏற்பாடு செய்த முத்துகுமார் முதலாம் அன்டு நினைவு துண்  வைக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து நீதிமன்றம் அலையவிட்டது

    புலிகள் ஒட்டு மொத்தமாக ஒளிந்துவிட்டோம் என ராஜபக்சேவே கூறிய பின்னும்  தடையை நீக்க, கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி கேட்டால்அதற்க்கு அனுமதி மறுத்து நிதிமன்றம் அலையவிட்டது. இது போன்ற இனம் சார்ந்த பல நிகழ்வுகள் நீதிமன்றத்திற்கு சென்றே அனுமதிபெற்று நடத்தினாலும் அடுத்த அடுத்த நிகழ்ச்சிக்கு அனுமதி  மறுப்பதை அரச வாடிக்கையாக்கியது

  13. மீனவர்களில் ஒருவன் தாக்கப்பட்டால் சிங்கள மாணவர்கள் பாதுகாப்புடன் இங்கு நடமாட முடியாது என கூறிய சீமானை கைது செய்து 5  மாதம் சிறையில் அடைத்த கருணாநிதி ,மீனவனை  கொன்ற சிங்களனை கைது செய்து தண்டிக்க வேண்டுமென   இதுவரை ஒரு வார்த்தை கூறாதது

  14.  இனத்திற்காக போரடுபவர்களிடம் பணம் கிடையாது அந்தநிலையிலும் பிச்சை எடுத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து  ஒட்டப்படும் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காவல்துறையை விட்டு தெரு தெருவாக சுற்றி கிழிக்க வைப்பது அல்லது மொத்தமாக கைப்பற்றி காவல்நிலையத்தில் போடுவது இன்னும் ஒருபடி மேலே போய் தடை செய்த இயக்கத்தை பற்றி பேசினாலோ எழுதினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என 26 / 11 / 2009  தேதி ஒரு பக்க விளம்பரம் போல அவ்வபோது அரசு செலவிலேயே அச்சுறுத்துவது 7  , 8  , பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது.

  15.  

    தமிழ்  மொழி பேசிய ஒரே காரணத்திற்காக, முள்வேளிக்குள்ளே ஆடு மாடுகளாய்  அடைத்து வைத்திருந்தவர்களை திறந்துவிட்டாவது நடத்தினால் பரவாயில்லை என்ற எந்த கூச்ச சுபாவம் இல்லாமல் இனத்துரோக அலை பரவுவதை தடுக்க ஓடிசியா மைதானத்தில் செம்மொழி மாநாடு

    அதனை தொடர்ந்து 1000 ம் ஆண்டு விழா இராஜ இராஜ சோழனுக்கு. இதில் ஒவ்வொன்றிலும் எதாவது சித்து விளையாட்டு போல கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்ததே ஆகா , அப்படி, இப்படி என மக்களே வாய்விட்டு பேச வைக்கும்  உள்நோக்கம்  இதில் யார் யாரையெல்லாம் எந்த எந்த நிகழ்ச்சிவாயிலாக பங்கெடுக்க வைக்கலாமென யோசித்து,  செம்மொழியா……. தமிழ்மொழியா ..என ஆஸ்கர்  பரிசு பெற்றவரையே கூட துரோகம் மறைக்க இசையமைக்க வைத்த செயல். அரசு நிகழ்ச்சி வாயிலாகவே   வந்தஅனைவரும்    தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற மாயையை வெழிக்காட்டவும் வராதவர்களை தனியே பிறித்தது… பிறித்துமேயத்தான் .

    செம்மொழிக்கு எதிராக

    எட்டப்பனை கட்டபொம்மனாக்க செம்மொழி மாநாடா ? என சுவரொட்டி ஒட்டியவர்கள் பேசியவர்களுக்கு கவனிப்பு

    25  ஒக்கனேக்கல் கர்நாடகாவை சேர்ந்தது என எடியுரப்பாவை எல்லை தாண்டி உள்ளே வந்து  போராட அனுமதித்து .கேரளா அமராவதி குறுக்கே அணைகட்டுவதை கண்டித்து போராடிய வைக்கோவை கேரளா எல்லையே நுழைய விடாமல்  தடுத்தது கேரளா காவல்துறையை மகிழ்வித்தது .

  16.  மத்திய அரசே அனுமதித்தும்  இங்கு வந்து சேர்ந்த அன்னை பார்வதி அம்மாவை தமிழ்நாட்டில் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு வைக்கோ போன்றவர்கள் பெரும்கூட்டமாக விமான நிலையம் சென்றதுதான் காரணம் என கூறியது. அதுவல்ல  காரணம் . தன்னை பற்றி எதாவது பார்வதியம்மாள் தவறாக கூறிவிடுவரோ  இல்லை உடல் நிலை தேறிய பிறகு கூறிவிடுவரோ .. இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டால் துரோகத்தோடு துரோகமாக   ஒன்று கூடும் என்ற உள் எண்ணம் .

    27 .https://thamukablog.wordpress.com/2017/04/17/தெலுங்கர்-கருணாநிதியின்/ தமிழ் இனத்தையே கொன்று முள்வேலிக்குள் அடைத்து வைத்தவனும், பல கோவில்களைக்கூட இடித்த  இராசபக்சே அவனது அமைச்சர்கள்    எந்த வித பயமும் இன்றி தமிழக  கோவில் குளங்களுக்கு வருவது எதற்கு ? தமிழினத்தை கொன்றதை தமிழ்நாட்டு தமிழர்கள் ஏற்று கொண்டுள்ளார்கள் என   உலகத்தாரை நம்ப வைத்து.. இனப்படுகொலை விசாரணை யிலிருந்து தப்பிக்க, அடிக்கடி தமிழகம் வந்து செல்வதை மட்டுமாவது தடுக்கலாம். அதைவிட்டு இன்னும் தமிழ் உணவாளர்கள் சுடுசுரனையுடன் தான் இருக்கிறார்ககளா? என்று அவ்வபோது பரிசோதித்து கொள்வதற்காவது அவர்களின் வருகை பயன் படட்டுமே

    வெறும் 2008 முதல்  ,2009,முதல் 2010 என வெறும் இரண்டே  ஆண்டுகளில்  வெளியில் தெரியும்படி  நடந்தது  இந்த 27  துரோக செயல்கள் . தன்னை தமிழன் என்று சொல்லி   நம்மை ஏமாற்றிய  தெலுங்கர் கருணாநிதி   2008 ஆம் ஆண்டுககு  முன் செய்த துரோகத்தின் எண்ணிக்கை என்ன ?  தெரியாமல் இருக்கும் துரோகங்களின் எண்ணிக்கை என்ன ?

  17.    1 /2 நாள் உண்ணாவிரதம் ..அதனை தொடர்ந்து போர் நின்று விட்டது என அறிவித்து, பின் தானே முடித்து கொண்ட நிலையில் போர் இன்னும் நிற்கவில்லையே என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ..  மழை நின்றும் துவானம் விடவில்லை என பேசியது .

  18.  29 / 01 / 2009  ல்  முத்துகுமார் தீக்குளித்து இறந்து போனதும் அந்த உடலை கொளத்தூரிலிருந்து புரசைவாக்க பிரதான சாலை வழியாக கூட எடுத்து  செல்ல  அனுமதிக்காதது  முத்துகுமாரின் கடைசி ஆசைப்படி என்  உடலை கருவியாக வைத்து போராடுங்கள் என்ற கூற்றுப்படி தமிழகமெங்கும் எடுத்து செல்ல வேண்டும். அப்படி போராடுங்கள் செய்தால் நம் துரோகம் அதிகமாக வெளிப்பட்டுவிடும் என பயந்து அதற்க்கு அனுமதி மறுத்தது .

  19. முத்துகுமார் செய்தி காட்டு தீயாய் தமிழ் உணர்வாளர்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையிலேயே .. தன் மகன் அழகிரியின் பிறந்த நாளை பிரியாணி பொட்டலங்களுடன் தடபுடலாய்  கொண்டாட அனுமதித்தது .

  20. முத்துக்குமாரை தொடர்ந்து அதே 2009 பிப்ரவரி மாதத்தில் இனத்திற்க்காக தீக்குளித்து இறந்த சிலரை ,குடும்ப சண்டையில் இறந்துவிட்டதாக  பொய் செய்திகளை   பரப்பி அவர்களின் தியாகத்தை கேவலப்படுத்தியது .

நன்றி அதியமான் .

இதுக்கு மேலயும் கருணாநிதி நல்லவர் வல்லவர் என்று கம்பு சுத்த வருபவர்கள் வந்து கருத்துக்களை வையுங்கள் பார்க்கலாம் !.........................

Edited by பெருமாள்
  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

 

பெருமாள் விவாத்தில் சொல்லபட்ட கருத்துகளை ஒருமுறை வாசித்து பாருங்கள். கருணாநிதி நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல இங்கு விவாதப்பொருள். 

 கருணாநிதி மட்டுமல்ல  இந்தியா இலங்கையில் உள்ள அரசியில் வாதிகள் யாரும் நல்லவர் என்று யாரும் கம்பு சுத்த முடியாது. எல்லோரும் சுயலநல வாதிகளே. சுயநல வாதிகள் எங்கும் உள்ளார்கள்.  எமக்கு அதுவல்ல பிரச்சனை. நாம் இங்கு விவாதிப்பது அது பற்றி அல்ல. 

எமது போராட்ட தோல்விக்கு கருணாநிதி மட்டும் தான் காரணம் என்று நெடுக்கர் போட்ட மீம்ஸ் பற்றி  மட்டும் தான் இங்கு விவாதிக்கிறோம். 

உங்கள் அதியமான் கருணாநிதி மீது வைத்து குற்றச்சாட்டு போல் தமிழகத்தில் வாழும்  எல்லா அரசியல்வாதி மேலும்    ஆயிரம் குற்றச்சாட்டுக்களை ஆளாளுக்கு ஒவ்வொருவரின் அரசியல் எதிரிகளால் சுமத்த முடியும். இதை எழுதியவருக்கெதிராகவும் அவரின் எதிரியால் இப்படி ஆயிரம் குற்றங்களை சுமத்த முடியும். என்ன அதியமான் யார் என்று தெரியாத‍தால் அவர் செய்த குற்றங்களை பற்றி எமக்கும் தெரியாது. அவ்வளவு தான். ஆனால் அவை அத்தனையும் பற்றி நாம் சிந்திக்கவோ அவற்றின் உண்மை தன்மை பற்றி விவாதிக்கவோ எம்மால்  முடியாது.  எமது போராட்டத்திற்கு எதிராக எமக்குள் நடந்த ஆயிரம் குற்றங்களை எமக்கு தெரிந்தும் அதை பற்றி பேச விருப்பம் இல்லாமல் அடுத்தவன் மீது குற்றம் சாட்டுவது எமது இயலாமையை மறைக்க என்பது தான் நான் சொல்லும் குற்றச்சாட்டு.  போராட்டத்தை சாட்டி மக்களை கடனாளியாக்கி மில்லியன் கணக்கான பணத்தை சூறைய  திருட்டு கும்பல்  பற்றி கூறும் போதுஅந்த திருட்டு பணம் தமிழனிடம் தானே இருக்கிறது என்ற திருட்டு கும்பலுக்கு வக்காலத்து வாங்குவோர் அக்குற்றங்களை மறைக்க கருணாநிதி என்ற அரசியல் வாதியை சாட்டி ஒழிவது பற்றி தான் விவாதிக்கிறோம். 

மீண்டும் கூறுகிறேன் 1991 ராஜீவ் கொலையில் பின்னர் முதலமைச்சராக யார்  இருந்தாலும்  இந்திய அரசை எதிர்த்து அவர்களால் ஈழ மக்களுக்கு எதையும் வெட்டிப் புடுங்க முடியாது.  அது தான் நிஜம். 

 

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

மீண்டும் கூறுகிறேன் 1991 ராஜீவ் கொலையில் பின்னர் முதலமைச்சராக யார்  இருந்தாலும்  இந்திய அரசை எதிர்த்து அவர்களால் ஈழ மக்களுக்கு எதையும் வெட்டிப் புடுங்க முடியாது.  அது தான் நிஜம். 

 

ராஜீவ் கொலைக்குப் பின்னர் தான் புலிகள் மிகப்பெரிய இராணுவ வெற்றிகளை பதிவுசெய்தனர்.

ராஜீவ் கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தோர்.. ஒருவர் பழைய சுயநல அரசியல்வாதி கருணாநிதி.. மற்றவர் தானும் தன் ஊழல்களும் என்றிருந்த ஜெயலலிதா. இவர்கள் இருவரிலும் கருணாநிதியே.. ஈழத்தமிழரை வைச்சு சுயநல அரசியலை முன்னெடுத்ததில் அதிக பங்குள்ளவர். ஜெயலலிதாவுக்கு ஈழத்தவர் பற்றி அக்கறை ஏதுமே இல்லை. அவர் கருணாநிதிக்கு எதிர்ப்பு அரசியல் செய்தாரே தவிர.. கருணாநிதியை விட மோசமாக ஈழத்தவர்களை எதிர்ப்பது எப்படி என்ற பார்பர்ணிய சித்தாந்தத்தில் இருந்தாரே தவிர ராஜீவ் படுகொலைக்கு அப்பால் சென்று தமிழகத்தில் ஈழ உணர்வூட்டலை செய்ய விளையவில்லை. அவருக்கு போட்டியா கருணாநிதியும் ஈழத்தவர் அரசியலை செய்யாமல்.. நல்ல பிள்ளைக்கு நடித்துக் கொண்டார்.

மேலும் இருவரும்..அவரவர் செய்த ஊழல்களும்.. அவர்களின் வாரிசுகள் செய்த ஊழல்களும் செய்த தொந்தரவில் இருந்து வெளிவரவே அதிக காலத்தை செலவிட வேண்டி வந்திருந்தது.

ஆனாலும்.. 2009 மே க்குப் பின் நாம் தமிழர் கட்சியின் அழுத்தங்களை அடுத்து ஜெயலலிதா அம்மையார் இனப்படுகொலை மற்றும்.. ஐநா மத்தியத்தத்தோடு பொதுவாக்கெடுப்பை வடக்குக்கிழக்கில் நடத்த கோரி இருந்தார். அதற்கான பிரேரணையையும் தமிழக சட்டமன்றில் நிறைவேற்றி இருக்கிறார். 

ஆனால்.. மத்திய அரசியல்.. வாஜ்பாய் ஆட்சியிலும் சரி.. நரசிம்ராவ் ஆட்சியிலும் சரி சோனியாவின் தனிப்பட்ட வெறுப்பை ஈழமண்ணில் பதிவு செய்ய முடியாமல் போனது. வாஜ்பேய் ஆட்சியில்.. ஜார்ஜ் பெர்னாடஸ் அவர்கள்.. பாதுகாப்பு மந்திரியாக இருந்த வேளையில் தான் புலிகள் இயக்கம் பாரிய இராணுவ தளபாட வளர்ச்சி கண்டது. ஹிந்தியா நேரடியாக உதவாவிட்டாலும்.. விடுதலைப்புலிகள் தம்மை பலப்படுத்துவதை ஹிந்தியா அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அதன் பயனாக... விடுதலைப்புலிகள்.. ஓயாத அலைகள் மூலம்.. பெரும் இராணுவ வெற்றிகளையும் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பற்ற நில விடுவிப்புக்களையும் சாத்தியமாக்கினர். 

ஆனால்.. சோனியாவின் எடுபிடிகளாக மன்மோகன் சிங் மத்தியிலும்.. கருணாநிதி தமிழகத்திலும் வந்த பின் தான் சோனியா தன் தனிப்பட்ட காழ்புணர்ச்சி நிமித்தம் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் பழிவாங்கினார். அதன் ஒரு விளைவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. சோனியாவின் அந்த தேவையோடு.. சிங்களம் சர்வதேச அரங்கில் இருந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற மேற்குலக நிலைப்பாடுகளையும் ஒரு நேர்கோட்டில் சமப்படுத்தி செய்த இனப்படுகொலை தான்.. முள்ளிவாய்க்கால் படுகொலை.

இதில் கருணாநிதியின் துரோகம் மிக முக்கியமான ஒன்று. புறக்கணிக்கப்பட முடியாத ஒன்று. 

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, tulpen said:

கருணாநிதி மட்டுமல்ல  இந்தியா இலங்கையில் உள்ள அரசியில் வாதிகள் யாரும் நல்லவர் என்று யாரும் கம்பு சுத்த முடியாது. எல்லோரும் சுயலநல வாதிகளே. சுயநல வாதிகள் எங்கும் உள்ளார்கள்.  எமக்கு அதுவல்ல பிரச்சனை. நாம் இங்கு விவாதிப்பது அது பற்றி அல்ல. 

எமது போராட்ட தோல்விக்கு கருணாநிதி மட்டும் தான் காரணம் என்று நெடுக்கர் போட்ட மீம்ஸ் பற்றி  மட்டும் தான் இங்கு விவாதிக்கிறோம். 

நீங்கள்  நித்திரையில் இருப்பது போல் நடிக்குகிறீர்கள் .எழுப்ப முடியாது .

ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக  கருணாநிதியின் தமிழருக்கு எதிரான துரோகங்கள் ஓடி ஒளிந்து விடாது மற்றவர்களை  விட கருணாநிதி தமிழ் மீது பற்று போல் நடித்த அரசியல் வியாபாரி அதை அறியாது தெலுங்கு வடுகனை தமிழின காவலர் என்று நினைத்து ஏமாந்தது தமிழ் சனம்  .

ஆனால் அம்மு ஈழத்தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் போர்க்குற்றம் இழைத்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் எடுக்க முடிந்தது இதை  எப்படி அவர்களால் செய்ய முடிந்தது ?

உங்கள் கருணாநிதி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தவர் 

மேலும் ஒரு படி மேலே போய் போர்க்குற்றமிழைத்த இலங்கைப் படையினருக்குத் தமிழ்நாட்டு மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று மனிசி பிடிவாதம் பிடித்து மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, குன்னூரிலும் தாம்பரத்திலும் பயிற்சி பெற்ற இலங்கைப் படையினரைத் கலைக்க அவரால் முடிந்தபோது தமிழின காவலாளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் வடுகன் எங்கே போனவர் ? அதற்குப் பின்னர், இலங்கைப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதையே முற்றாக இல்லாதொழித்தவர் ஜெயலலிதா அம்மா .

நாளைக்கு கனிமொழியோ சுடானிலோ   முதலமைச்சராய் வந்தால் தமிழ்நாட்டில்  மறுபடியும் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி தொடருமா தொடராதா ?

இதே கனிமொழி ராஜபக்சேவுக்கு சென்னைக்கு கூப்பிட்டு  பெரும் விழா எடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை .

அன்று கருணாநிதி ஆட்சியில்  இல்லாவிட்டால்  ஈழத்தில் போர் வேறு விதமாக போயிருக்கும் .

முதலில் புலிகளை பலமிழக்க செய்து ஒரு வலிந்த தீர்வை கொடுப்பதுக்கு இடைவிடாத போர் என்றார்கள்  மக்கள் வன்னியில் 1வருடத்துக்கு மேல்  அங்குமிங்கும் அகதியாய் ஓடிக்கொண்டு இருக்குதுகள் அப்போது சொல்லப்பட்டது அதன் பின் முகமாலை புலிகளின் முன்னரங்கு தகர்ப்படும் பொழுது முடிவு தெரிய தொடங்கியது பாரிய அழிவுகள் என்று அப்போது   அதிகாரப் பகிர்வை புலிகளிடம் தரப்போவதில்லை புலிகளை அழித்துவிட்டுத்தான் அதிகாரத்தை தமிழ் மக்களிடம்  கொடுப்போம் என்று  ராஜபக்சேவினர் சொல்லியதாக திமுக முக்கியஸ்த்தர் சொல்லிவிட்டு அதன் பின் வடகிழக்கில் இருந்தும்  உலகத்தமிழர்களிடமிருந்தும்  சென்ற ஒரு போனுக்கும்  பதில் இல்லை .டெல்லிக்கு போரை நிறுத்தச்சொல்லி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார் உங்கள் ஆள் .

Edited by பெருமாள்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  நித்திரையில் இருப்பது போல் நடக்குகிறீர்கள் .எழுப்ப முடியாது .

ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக  கருணாநிதியின் தமிழருக்கு எதிரான துரோகங்கள் ஓடி ஒளிந்து விடாது மற்றவர்களை  விட கருணாநிதி தமிழ் மீது பற்று போல் நடித்த அரசியல் வியாபாரி அதை அறியாது தெலுங்கு வடுகனை தமிழின காவலர் என்று நினைத்து ஏமாந்தது தமிழ் சனம்  .

 

பெருமாள் நீங்கள் தான் அப்படி நடிக்கிறீர்கள். நான் என்ன கூற வருகிறேன் என்று தெளிவாக கூறியும் மீண்டும்  ஒரே விடயத்திற்குள்ளையே நிற்கிறீகள்.  1986 லேயே  நம்பாத ஒருவரை 25 வருடம் கழித்து  2009 நம்பி ஏமாந்தோம் என்று கூறவது எவ்ளவு அபத்தமானது.  போலியானது. 

கருணாநிதி சுயநல வாதி என்பதும் அவர் தனது குடும்பத்தை கட்சிக்குள் வளர்க்கும் வாரிசு அரசியலில் தான் ஈடுபடுகிறார் என்பதும்  பல வருடங்கள் முன்பே தெரிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் பதவியில் உள்ளார் என்றால் அவர் எமக்கு உதவமாட்டார் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும்.  அதற்கெதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை  தகுந்த வேளையில் எடுத்து போராட்டத்தை நகர்த்தும் பொறுப்பு எங்களுடைது . அதை செய்யாமல் போரின் இறுதிவரை இருந்து விட்டு ஒரு நபரை ஒட்டு மொத்த தோல்விக்கும் ஒரு நபரை கைகாட்டுவது கோழைத்தனம்.  எமக்குள் இருந்த போராட்டத்தை சாட்டி மக்களின் பணத்தை கையாடியவர்கள் பற்றி கேட்டும்  அது பற்றி பேச நீங்கள்  பேசாமால்   இருப்பது ஏன்? போராட்டத்தை தொடங்கியது நாம். நடத்தியது நாம். தோல்விக்கு மட்டும் கருணாநிதி எப்படி காரணமாக இருக்க முடியும்.  நீங்கள் கூறிய அம்மு தான் பிரபாகரனை பிடித்து வந்து இந்தியாவில் தூக்கில் போட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.  

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

ஜார்ஜ் பெர்னாடஸ் அவர்கள்.. பாதுகாப்பு மந்திரியாக இருந்த வேளையில் தான் புலிகள் இயக்கம் பாரிய இராணுவ தளபாட வளர்ச்சி கண்டது. ஹிந்தியா நேரடியாக உதவாவிட்டாலும்.. விடுதலைப்புலிகள் தம்மை பலப்படுத்துவதை ஹிந்தியா அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அதன் பயனாக... விடுதலைப்புலிகள்.. ஓயாத அலைகள் மூலம்.. பெரும் இராணுவ வெற்றிகளையும் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பற்ற நில விடுவிப்புக்களையும் சாத்தியமாக்கினர். 

மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானித்தது.

42 minutes ago, tulpen said:

பெருமாள் நீங்கள் தான் அப்படி நடிக்கிறீர்கள். நான் என்ன கூற வருகிறேன் என்று தெளிவாக கூறியும் மீண்டும்  ஒரே விடயத்திற்குள்ளையே நிற்கிறீகள்.  1986 லேயே  நம்பாத ஒருவரை 25 வருடம் கழித்து  2009 நம்பி ஏமாந்தோம் என்று கூறவது எவ்ளவு அபத்தமானது.  போலியானது. 

கருணாநிதி சுயநல வாதி என்பதும் அவர் தனது குடும்பத்தை கட்சிக்குள் வளர்க்கும் வாரிசு அரசியலில் தான் ஈடுபடுகிறார் என்பதும்  பல வருடங்கள் முன்பே தெரிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் பதவியில் உள்ளார் என்றால் அவர் எமக்கு உதவமாட்டார் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும். 

குழந்தைப்பிள்ளைகளுக்கு கூட தெரியக்கூடியதை அறியாமல் இருக்கும் சிலர் யாழ் களத்தில் இருக்கிறார்கள் - ஆதாரம் இதோ:

1 hour ago, பெருமாள் said:

 

டெல்லிக்கு போரை நிறுத்தச்சொல்லி கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார் உங்கள் ஆள் .

😄

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, கற்பகதரு said:

குழந்தைப்பிள்ளைகளுக்கு கூட தெரியக்கூடியதை அறியாமல் இருக்கும் சிலர் யாழ் களத்தில் இருக்கிறார்கள் - ஆதாரம் இதோ:

சும்மா எதையாவது எழுதணும் என்பதுக்கு எழுதாதிங்க .

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, கற்பகதரு said:

மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானித்தது.

மட்டுமல்ல.. குறிப்பாக.. வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களுக்கு கள நிலைமையை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள்.  தமிழக முதல்வர்களாக இருந்தவர்களின் பார்வையில்.. புலிகளின் செயற்பாடுகள் கண்டும் காணாமலும் போலுமால் போய் இருந்தன. காரணம்.. அவர்களுக்கு தமது ஊழலை சமாளிக்கவே நேரம் கிடைக்கவில்லை. அதனை சரி செய்ய மத்தியை தாஜா பண்ணுவதே குறியாய் இருந்தனர். 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

மட்டுமல்ல.. குறிப்பாக.. வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களுக்கு கள நிலைமையை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள். 

வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டசுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் விளக்கித்தான்  ஜோர்ஜ் பெர்னான்டஸ் களநிலையை அறிய வேண்டிய நிலையில் இருந்தார் என்பது சாத்தியக் குறைவானதாக தெரிகிறது. இதற்கு காரணம் வை.கோ போன்றே ஜோர்ஜ் பெர்னான்டசும் தனிப்பட்ட முறையில் இலங்கைத் தமிழர் மீது இரக்கம் கொண்டவராக இருந்ததுடன், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் என்ற அளவில் செய்மதிகள் முதல் அனைத்து உளவுப்பிரிவுகளினதும் சேவைகளை பெற்றுக் கொண்டவராக இருந்தார். ஆகவே அவர் தானாகவே களநிலை பற்றி போதிய அறிவை பெற்றுக் கொண்டிருந்தார் - தமிழகத்தில் அதற்கு தங்கி இருக்கவில்லை என்றே தெரிகிறது.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

●2009 மே இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு என்ன நடந்தது
●கருணாநிதியின் தமிழீழ துரோகம் விபரிக்கிறார் அப்போதைய இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பாக இலங்கை இந்திய அரசுகளுடனும் விடுதலைப்புலிகளுடனும் தொடர்பில் இருந்தவர் சந்திரகாந்தன்
●தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அண்ணா சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் அண்ணா உட்ப்பட சரணடைந்த போராளிகளை அமர வைத்து தேனீர் அருந்த கொடுத்து சுட்டு கொண்டு இருக்கிரார்கள் அம்பலப்படுத்தினார் சந்திர நேரு அனைவரும் காணொளி பாக்கவும்
●இந்திய ரோவின் தலைமையில் பல நாடுகள் சேர்ந்து அழிக்கபட்ட ஈழவிடுதலை
 

மீள்பதிவு.

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்?   எம். காசிநாதன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 12:06   “மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ, “தலைவர்கள் தேவை” என்று விளம்பரம் மேற்கொண்டாலும், யாரும் கிடைக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பல “அறிவாளி” தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். தைரியமிக்க தலைவராகவும் மதிநுட்பம் மிகுந்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை முன்வைத்து “ நேருவின்” அமைச்சரவைக்குள் ஒரு மாற்றுத் தலைவர் போல் அவர் இருந்தார். ஆனால், காலப்போக்கில் நேருவின் கரமே வலுப்பெற்று, காங்கிரஸ் கட்சியின் “நம்பிக்கை நட்சத்திரமானார்” நேரு. அவரது மறைவு வரை, நேருவுக்கு மாற்றாக இந்திய அரசியலில் ஒரு “முக்கியமான மாற்றுத் தலைவர்” உருவாகவில்லை!     இந்திரா காந்தி, காங்கிரஸ் தலைவராக வந்த பிறகு, அக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டாலும், அவர் எமெர்ஜென்ஸியை அறிவிக்கும் வரை ஒரு மாற்றுத் தலைவர் கிடைக்காமல் இந்திய அரசியல் “ஸ்திரமற்ற” நிலையில் தவித்தது. ஜெயபிரகாஷ் நாராயண், அதல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் இருந்தாலும்- யார் இந்திரா காந்திக்கு மாற்று என்பது முடிவாகவில்லை. அதன் காரணமாகவே பல்வேறுதலைவர்கள் கொண்ட குழுவாக எமெர்ஜென்சிக்குப் பிறகு “ஜனதாக் கட்சி” உருவாகி- இந்திரா காந்தியை தேர்தலில் வீழ்த்தியது.    தலைவர்களின் திறமை- அல்லது ஒற்றை தலைமை அவரை வீழ்த்தியது என்று கூறிவிட முடியாது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருந்த நாட்டம்-நெருக்கடி நிலைமை அத்துமீறல்கள் போன்றவை நாட்டுக்கு “கூட்டுத் தலைமையை” இந்திரா காந்திக்கு எதிரான “ஒற்றைத்தலைமைக்கு” கொடுத்தது. 1977இல் ஜனதா கட்சி வெற்றி பெற்று- மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. “கூட்டுத் தலைமை”க்குள் ஏற்பட்ட பனிப்போரும்- குழப்பங்களும்- இப்படியொரு தலைமை இனி நாட்டுக்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது. மீண்டும் “ஒற்றைத் தலைமை” பக்கம்- அதாவது இந்திரா காந்தி பக்கமே இந்திய அரசியல் திரும்பியது.   பிறகு, அதல்பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மட்டுமே இந்திரா காந்திக்கு போட்டியான ஒற்றைத் தலைமையாக இருக்கும் என்று நினைத்தாலும்- அக்கட்சி தோன்றியதே 1980 என்பதால், அதற்கு எவ்வளவு வருடங்கள் பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அது, 1996 வரை தொடர்ந்தது என்பதுதான் உண்மை. இடைப்பட்ட காலத்தில், இந்திராவின் மறைவு- அவருக்குப் பதில் வந்த ராஜீவ் காந்தியும் மறைவு என்ற நிலை ஏற்பட்டு இந்திய அரசியல் “வலுவான ஒற்றை தலைமையும் இல்லாமல்” “பொறுப்புள்ள கூட்டுத் தலைமையும்” இல்லாமல் தவித்தது.  1989இல் ராஜீவுக்கு மாற்றாக உருவாகிய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் கூட காங்கிரஸுக்கு எதிராக ஒற்றைத் தலைமையைக் கொடுக்க முடியவில்லை. வி.பி.சிங், ஜோதிபாசு, அதல்பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்ட மூவர் சேர்ந்துதான் அப்படியொரு தலைமையைக் கொடுக்க முடிந்து- 1989இல் வி.பி.சிங் தலைமையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. “ஜனதா கட்சி” காலத்தில் அறிவாளிகள் கூடி இழுத்த தேர் வடம், பாதியில் அறுந்து போனது. இந்த தேரோ “ஜனதா” “ஜனதா தளம்” “மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி” ஆகியவற்று இடையிலான “கொள்கை முரண்பாட்டில்” நிலைக்குத்தி நின்று விட்டது. வி.பி.சிங் அரசும் வந்த வேகத்தில் கவிழ்ந்து போனது.   மீதிக்காலமான 1990 முதல் 1998 வரையிலான காலம், சற்று வித்தியாசமானது. மீண்டும் “கூட்டு தலைமை” அதிலும் குறிப்பாக, மாநிலக் கட்சித் தலைவர்களின் “கூட்டு தலைமை” தேசிய அளவில் காங்கிரஸுக்கு ஒரு மாற்று தலைமையைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியே “வலுவான ஒற்றைத் தலைமையை” இழந்து நின்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலில் “ஒற்றைத் தலைமை” காங்கிரஸிடமும் இல்லை. எதிர்கட்சிகளிடமும் இல்லை. தேசிய அளவில் கூட்டுத் தலைமையும் இல்லை. முதன் முதலாக மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய “கூட்டுத் தலைமை” மட்டுமே கைகொடுக்கும் என்ற நிலை தேசிய அரசியலுக்கு வந்தது.    வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் போன்ற பிரதமர்கள் பதவியேற்று-அதே வேகத்தில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. “மாநிலக் கட்சிகளின் கூட்டுத் தலைமையை” வாஜ்பாய் மட்டும் சமாளித்து நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. “மாநிலக் கட்சித் தலைவர்களின்” கூட்டுத் தலைமை தேசிய அரசியலுக்கு லாயக்கில்லை என்பதை இந்த காலகட்டத்தில் இருந்த கூட்டணி அரசுகள் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கும் பாடமெடுத்தன. இந்த நிகழ்வுகள்- படிப்படியாக முன்னேறி இந்திய அரசியலில் “உருப்படியாக” இரு கட்சி தலைமை உருவாகும் சூழலை கெடுத்து விட்டது.   விளைவு, இன்றைக்கு மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் செல்வாக்கு இழந்து நிற்கிறார்கள். பீஹாரில் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேசத்தில் முலயாம் சிங் யாதவ் ஆகியோருக்கு இருந்த “தேசிய கவர்ச்சி” இப்போது இல்லை. நிதிஷ்குமாரோ, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி ஆகியோரோ டெல்லிப் பக்கம் வர தயாரில்லை. சரத்பவாருக்கு மஹாராஷ்டிர அரசியலே தற்போது பிரதானமாகி விட்டது. காங்கிரஸுக்கோ அல்லது பா.ஜ.க.விற்கோ ஒரு மாற்று “கூட்டுத் தலைமையை” உருவாக்குவதில் முன்னணியில் எப்போதும் நிற்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது ஜோசிபாசும் இல்லை. ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும் இல்லை. ஆகவே, மாநிலக் கட்சிகளிடம் “கூட்டுத் தலைமை”யும் இப்போது இல்லை. அவர்களை தாண்டி ஒரு தேசிய அளவில் “கூட்டுத் தலைமையும்” பிறக்கவில்லை. பிரதமர் மோடிக்கு மாற்றை அளிக்க வேண்டிய காங்கிரஸிலோ இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் “காந்தி” குடும்பத்தின் தலைவர்களுக்கே மக்களின் செல்வாக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.    இரு மோசமான நாாளுமன்ற தோல்விகள் அதை நிரூபித்து விட்டன. நேருவிடமோ இந்திரா காந்தியிடமோ- ஏன் ராஜீவ் காந்தியிடமோகூட இருந்த “கொள்கைத் தெளிவு” சோனியா காந்தியிடமும் குறைவு. ராகுல் காந்தியிடமும் இல்லவே இல்லை. அதனால், இன்றைக்கு காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு மாற்று தலைமை கொடுக்கும் சக்தியை இழந்தது மட்டுமின்றி- அது போன்றதொரு தலைவரே கட்சியில் இல்லாமல் “மூச்சு” திணறிக் கொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் இப்போது பிரதமர் நரேந்திரமோடிக்கு மாற்றாக தலைவர் “ஒருவராகவும் இல்லை.” “கூட்டாகவும் இல்லை”- தேசியக் கட்சியான காங்கிரஸிடமும் இல்லை. மாநிலக் கட்சிகளிடமும் இல்லை என்பதுதான் தற்போது இந்திய அரசியலில் பிறந்துள்ள புதிய சகாப்தம்!   பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ். டி. சட்டம், இந்துத்துவா கொள்கை, கொரோனா நோய் தடுப்பு, இந்திய- சீன எல்லைப் பிரச்சினை எதிலுமே காங்கிரஸ் கட்சி “கரடியாக” கத்தினாலும் அதை மக்கள் அவ்வளவாக காது கொடுத்து கேட்பதில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம்- சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இந்தியா மீதோ- நாட்டுப் பற்று மீதோ- இந்து மதத்தின் மீதோ நல்லெண்ணத்தில் கருத்துச் சொல்வதில்லை என்ற அபிப்பிராயத்தை அடிமட்ட மக்களிடம்- குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் கொண்டு போய் சேர்த்து விட்டது பாரதீய ஜனதா கட்சி. அந்த பெருமை பிரதமர் நரேந்திரமோடியை மட்டும் சேரும். அவர் மட்டுமே அதற்கு “அறிவுசார் உரிமை” படைத்தவர்! அவர் வழங்கும் மக்களுக்கு உணர்வூட்டும் பேச்சுக்களை காங்கிரஸில் உள்ள சோனியா காந்தியாலும் எதிர்கொள்ள இயலவில்லை. ராகுல் காந்தியால் நெருங்கியே வர முடியவில்லை.    காங்கிரஸில் ப.சிதம்பரம், கபில் சிபல், கமல்நாத், அசோக் கெலட், திக்விஜய சிங் உள்ளிட்ட பல “தலைவர்கள்” “அறிவாளிகள்” உள்ளார்கள். ஆனால் அவர்களாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆகவே “காந்தி குடும்பத்துக்கு” அப்பாற்பட்ட ஒருவரை காங்கிரஸ் கட்சிக்கு தலைமைக்கு கண்டுபிடிக்க வேண்டிய மிகப்பெரும் கடமை வந்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு வலுவான “ஒற்றைத் தலைமையை” கொடுக்கும் முயற்சியில் இது முதல் படியாக இருக்கலாம். அதுவே, வெற்றிப் படியாக இருக்கும் என்று கூறிவிட முடியாது. வெற்றிப்படியாக்க மேலும் பல நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது.    நாட்டுப்பற்று, பாதுகாப்பு, அண்டை நாடுகள், இந்து மதம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சோனியாவும், ராகுல் காந்தியும் கருத்து கூறுவதை தவிர்த்து- மற்ற காங்கிரஸ் தலைவர்களை முன்னிறுத்த வேண்டும். அப்போது மட்டுமே “காங்கிரஸ்தான் பிரதமர் மோடிக்கு மாற்று” என்ற எண்ணம் மக்கள் மனதில் மீண்டும் மேலோங்கும். அது மற்ற மாநிலக் கட்சிகளையும் காங்கிரஸ் பக்கம் வரவழைக்கும். ஆனால், தொடர்ந்து சோனியாவும் ராகுல் காந்தியும் தொடர்ந்து “பாதுகாப்புப் பிரச்சினைகளில்” கருத்துத் தெரிவிப்பது- பிரதமர் மோடியை வலுப்படுத்தும். தேசிய அளவில் காங்கிரஸால் “ஒற்றைத் தலைமையையும்” “மாநிலக் கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டு தலைமையையும்” கொடுக்க முடியாமல் போகும். இந்திய அரசியலில் “ஒற்றை தலைமை”- அது பிரதமர் நரேந்திரமோடியின் தலைமை என்ற நிலையே தொடரும்!    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாற்றுத்-தலைமை-இன்றி-தவிக்கும்-இந்திய-அரசியல்/91-253148
    • சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும்   கே. சஞ்சயன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 01:04   விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.   முதல் மாவீரர் தொடக்கம், கடைசி மாவீரரின் மரணம் வரை அவர், விடுதலைப் புலிகளுடன் பயணித்தவர்.   போர் முடிவுக்கு வந்த பின்னர், அவ்வப்போது மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயங்களில் அகமுரண்பாடுகள் ஏற்பட்டபோது, ஊடக அமையத்தில், தமது கருத்துகளை முன்வைத்து, அந்த நிகழ்வுகளில் காணப்பட்ட சில தடைக் கற்களை அகற்றியவர்.   இதுவரை அரசியல் கருத்துகளை, ஊடக சந்திப்புகளில் வெளிப்படுத்தாத அவர், இம்முறை நேரடியாகவே அரசியல் ‘பந்தை’ எடுத்து ஆடியிருக்கிறார்.   ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையிலும், முன்னாள், மூத்த போராளி என்ற வகையிலும் அவர் வெளியிட்டிருக்கின்ற கருத்து, ஒரு தனிநபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே அமைந்திருக்கிறது. அவரால் இலக்கு வைக்கப்பட்டவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆவார்.   தமிழ் அரசியல் பரப்பில், சர்ச்சைகளின் நாயகன் சுமந்திரன் தான். அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருப்பது வழக்கம். அவற்றை அவ்வப்போது, அவரும் உருவாக்கிக் கொள்கிறார்; அவரைச் சுற்றியிருப்பவர்களும் உருவாக்கிக் கொள்கின்றனர்.    கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், யாழ்ப்பாணத்தில் சுமந்திரனைத் தோற்கடிப்பதை இலக்காகக் கொண்டே, பெரும்பாலான கட்சிகள் பணியாற்றின.   அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அதி தீவிர பிரசாரங்களே, அவரை இன்னும் கூடுதலாகப் பிரபலப்படுத்தியிருந்தது. அதுவே அவரது வெற்றிக்கும் காரணமாகியது.   தற்போதும் கூட, பொதுத்தேர்தலில், யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் சுமந்திரன் மட்டும் தான் பேசுபொருளாக இருக்கிறார்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தொடுக்கப்படும் விமர்சனங்கள், தாக்குதல்களுக்கு அப்பால், சுமந்திரனைத் தோற்கடிப்பது ஒரு, தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரல் போல, முன்னெடுக்கப்படுகிறது.   சுமந்திரனைத் தோற்கடித்து விட்டால், தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட்டு விடும்; தமிழ் ஈழம் கிடைத்து விடும்; சர்வதேச விசாரணை வந்து விடும்; இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டி விடும்; சமஷ்டி கிடைத்து விடும் என்பன போன்ற மாயைகள் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் ஒன்றில், பிரசாரங்களின் மூலம் இதுபோன்ற மாயைகள் கட்டியெழுப்பப்படுவது வழக்கம் தான். வாக்குறுதிகளை கொடுத்து வாக்காளர்களைக் கவிழ்ப்பது போலத் தான், இதுபோன்ற மாயைகளின் மூலம் அவர்களைக் கவர்வதும் ஒரு பிரசார உத்தியே.   எவ்வாறாயினும், சுமந்திரன் இப்போது எல்லாத் தரப்பினாலும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார். கடைசியாக அவரை இலக்கு வைத்திருப்பவர் தான், முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா.   சுமந்திரன் மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் செல்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல.  அந்தக் குற்றச்சாட்டுகளில் சில, அவரால் மட்டுமன்றி, ஏனைய பலராலும் முன்வைக்கப்பட்டு வருபவை என்பதை மறந்து விடக்கூடாது.   அவற்றை உதாசீனப்படுத்தி விடவும் முடியாது.  தேர்தல் வேளையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாடு, சுமந்திரனுக்கு உள்ளது. அதனை அவர், முறையாகச் செய்வாரா, செய்கிறாரா என்பது வேறு விடயம்.   அதேவேளை, சுமந்திரன் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அல்லது, கோருகின்ற உரிமை, பசீர் காக்கா என்ற முன்னாள் போராளிக்கு மாத்திரமன்றி, அனைவருக்கும் இருக்கிறது.   அது ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. இதில் யாரும் தலையீடு செய்ய முடியாது. அதை விமர்சனமும் செய்ய முடியாது.   அதேவேளை, யாழ். ஊடக அமையத்தில் முன்னாள் மூத்த போராளியான பசீர் காக்கா, ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில், முன்வைத்திருக்கின்ற கருத்தில் உள்ள ஆபத்தை, இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதும் அவசியமே.   தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்கு, சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று, அவர் கூறியிருக்கிறார்.   அதற்காக, மாவீரரின் பெற்றோர், தலைவர் பிரபாகரனை நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுமந்திரனுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.   ஒரு இலட்சம் வாக்குகளைப் பெறுவேன் என்ற சுமந்திரனின் கனவைத் தோற்கடிப்பது, முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோரின் கடமை என்றும், அதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.   சுமந்திரனைத் தோற்கடிப்பது துயிலுமில்லத்தில் சுடரேற்றுவதற்கு ஒப்பானது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.   சுமந்திரனைத் தோற்கடிப்பதற்காக, ஆயுதப் போராட்டமும், போராளிகளும், மாவீரர்களும், அவர்களின் தியாகங்களும், புலிகளின் தலைவர் பிரபாகரனும், பணயம் வைக்கப்பட்டிருப்பது தான் பலருக்கும் உறுத்தலாக இருக்கின்ற விடயம்.   விடுதலைப் புலிகள், தமக்கு எதிரான எவரையும், வெளிப்படையாகத் தோற்கடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததில்லை.   இயக்கத்தில் இருந்து பிரிந்து போன கருணாவைப் புலிகள் ‘துரோகி’ என்று கூறியிருந்தாலும், பிரபாகரன் அவ்வாறு ஒருபோதும் வெளிப்படையாகக் கூறியதில்லை.  அது ஒரு வகை நாகரிகம்; பண்பாடு.  கருணா பற்றிய விமர்சனங்களைப் பொதுவெளியில் முன்வைப்பதற்கு, ஒருபோதும் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை.   அதுபோலவே, பெரும் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனி வழிக்குக் கொண்டு சென்ற அதன் தலைவர் ஆனந்தசங்கரி, புலிகளை எதிர்த்துக் கொண்டு, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது கூட, அவரை வெளிப்படையாகத் தோற்கடிக்க வேண்டும் என்று புலிகள் கோரவில்லை.   டக்ளஸ் தேவானந்தாவை, அரசியல் களத்தில் இருந்து அகற்றுவதற்குப் புலிகள் பல்வேறு இரகசியத் திட்டங்களை செயற்படுத்தினாலும் அவர் மீது பகிரங்க விமர்சனங்களைக் கூறி, நேரத்தை வீணடித்ததில்லை.   தனிநபர்களுக்கு எதிரான பிரசாரங்கள், அவர்களைப் பலப்படுத்தி விடக்கூடாது, பிரபலப்படுத்தி விடக் கூடாது என்பது, அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  தமக்குச் சமதையானவர்களாக, அவர்களைக் கருதச் செய்து விடும் என்பதாலும் கூட, அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம்.   அதுபோலத் தான், சுமந்திரனைத் தோற்கடிப்பதற்கான வேலையைச் செய்வதற்கு, பிரபாகரனையோ, மாவீரர்களையோ பணயம் வைப்பது மிகையானது.   ‘அவர்கள்’ யாரும் தனிமனிதர்களும் எவருக்கும் ஒப்பானவர்களும் அல்ல; அவர்களின் இலட்சியங்கள், தனிமனிதர்களை இலக்கு வைத்ததும் அல்ல. அவர்களின் உயர்ந்த இலட்சியத்தை, தனிமனிதர் ஒருவரை தோற்கடிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்வதும், அந்தத் தோல்வியின் மூலம், அவர்களின் இலட்சியம் அடையப்பட்டு விட்டதாகத் திருப்தி காண முனைவதும், அபத்தமானது.   தனியரசுக்கான இலட்சியத்தைக் கொண்டவர்களின் தியாகத்தை, தனிநபர்களின் தோல்விக்குள் சுருக்கிக் கொள்ள முடியாது.   இவை எல்லாவற்றுக்கும் அப்பால், தேர்தலில் சுமந்திரன் வெற்றிபெற்று விட்டால், அதன் பின்னால் வரக்கூடிய ஆபத்தும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.   அவ்வாறான ஒரு நிலை வந்தால், அவமானப்பட்டு நிற்கப் போவது, இங்கு பணயம் வைக்கப்பட்டுள்ள, தலைவர் பிரபாகரனும் விடுதலைப் போராட்டமும் மாவீரர்களும் தான்.   அவர்களின் மீது பற்றுள்ளவர்களே தோற்கடியுங்கள் என்று அழைப்பு விடுத்தும், பயனற்றுப் போய் விட்டால், அது யாருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.    அரசியல் என்பது சாக்கடை. அதில் சேறு குளித்தவர்களால், குருதியில் குளித்துப் போராடியவர்களின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது.                                     அதைவிட, சுமந்திரன் வெற்றி பெற்று விட்டால், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதை, அழுத்தமாகக் கூறுபவர், இன்னும் பலமடைந்து விடுவார். அது கூட, கவனத்தில் கொள்ளப்படவில்லை.    சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டுமா- இல்லையா என்பதை விட, தமிழ்த் தேசியமும் தமிழரின் போராட்டமும் அதனை முன்னெடுத்தவர்களின் தியாகமும் போற்றப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும்.   அந்த கௌரவத்தைக் கெடுத்து விட்டு, தேர்தலில் ஒரு தனிமனித வெற்றியையோ, தோல்வியையோ கொண்டாட முனைவது மிகமிக அபத்தம்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனைத்-தோற்கடிக்கும்-அழைப்பும்-அபத்தமும்/91-253158
    • வாக்குகளுக்காக தெரிவிக்கிறார் விடுங்கோ.  எத்தனை தடவைதான்  முன்னுரிமை அளிக்கப்போகிறார்? ஒவ்வொரு தேர்தலின் போதும் உதையே சொல்லிச் சொல்லி வாக்கு கேட்ப்பார். ஏனைய மதங்களின்  உரிமைகள் பாதுகாக்கப்படுமாயின், பவுத்தத்துக்கு மட்டும் ஏன் முன்னுரிமை? அவருக்கே, தான் என்ன சொல்கிறேன் என்று விளங்கித்தான் சொல்கிறாரோ, அல்லது கதை விடுகிறாரோ?
    • தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் தேர்தல்       -க. அகரன்   கொரோனா வைரஸ் தொற்று, மீண்டும் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என, இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கும் சூழலில், தேர்தல் எவ்வாறாயினும் நடந்துவிடக்கூடிய நிலையே, இப்பத்தி எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுவரையில் காணப்படுகின்றது.   தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், இராஜாங்கனையில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.   இதற்குமப்பால், மருத்துவர் சங்கத்தின் அறிவுரைகளையும் மீறிப் பாடசாலைகளைத் திறந்து, மாணவர்கள் மத்தியில் தொற்றை ஏற்படுத்தி, மீண்டும் பாடசாலைகளை மூடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.   இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் இலங்கையில் காணப்படப்போகும் கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தையும் அதன் தாக்கத்தையும் பொறுத்தே, தேர்தலும் தீர்மானிக்கப்படப் போகின்றது என்பதே உண்மை.   எனினும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தமக்கான அலையொன்று இருக்கும் போது, இந்தத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற அவாவில் உள்ளனர். இதற்காக அவர்கள், எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸோடு போட்டி போடுவார்களா, இல்லையேல் தேர்தல் பிற்போடப்படுமா என்ற கேள்விக்கு மத்தியில், தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.   தமிழர் பிரதேசங்கள் எங்கும் தேர்தல் பிரசாரங்கள் வழமைக்கு மாறாக, ஒருவரை ஒருவர் நேரடியாக கூட்டிக்காட்டி பிரசாரம் செய்வதும், தமது கட்சிக்குள்ளேயே சக வேட்பாளரைத் தாக்கிப்பேசுவதும் என, அநாகரிக பிரசார யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.   விருப்பு வாக்குமுறைத் தேர்தல் என்பதால், மக்கள் பிரதிநிதியாகுவது யார் எனப் போட்டி காணப்பட்டாலும், தற்போதைய பிரசார யுக்தி, அதி பயங்கரமானது என்பதை மறுப்பதற்கில்லை.  இந்நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள், சகவேட்பாளர்கள் சிலரே, தமது கட்சியின் ஒரு சில வேட்பாளர்களை, மக்கள் மத்தியில் இருந்து துடைத்தெறிந்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.   இதன் ஒரு வெளிப்பாடாகவே, தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணியின் செயலாளரான விமலேஸ்வரியின் கருத்துகள் அண்மைய நாள்களாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, தமிழரசுக் கட்சிக்கு, கனடா ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட சுமார் 21 கோடி ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்ற கேள்வியாகும்.   வடக்கு, கிழக்கில் தேர்தல் களத்தில் உள்ள சுயேச்சைகள் முதற்கொண்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகப் பிரசாரம் செய்து வருகின்றனரோ, அதற்கும் மேலாக அக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளரின் கருத்து, பாரதுரமானதாக அமைந்துள்ளது.   விமலேஸ்வரி யார் என்ற கேள்வி எழலாம். இளைஞர் சேவைகள் மன்றத்தின், வவுனியா பிராந்திய உதவிப் பணிப்பாளராக இருந்து, பின்னர் மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஆளுமை மிக்க பெண். அரசியலானாலும் சரி, சமூக விடயங்களானாலும் சரி துணிந்து கருத்துகளை முன்வைக்கும் பெண் என்ற கருத்துள்ளது.  எனினும், இவர் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கீதாஞ்சலியுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதற்கப்பால், தேர்தல் பிரசாரங்களிலும் பங்குகொண்ட சம்பவங்களும் உள்ளன.    அதற்குமப்பால், நாமல் ராஜபக்‌ஷவால் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட நீலப் படையணியின் செயற்பாடுகளிலும் பணியில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் கூட, நெருங்கிச் செயற்பட்டிருக்கின்றார். இவ்வாறான நிலையில், விமலேஸ்வரியின் கருத்துகள் எந்தப் பின்புலத்தில் இருந்து, தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன என்ற சந்தேகம் எழுவது யதார்த்தமே.   தனி ஒரு வேட்பாளராக சுமந்திரனைத் தாக்குவதாக நினைத்து, அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, இன்று தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஏனெனில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எனப் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் நிதிகளுக்கு, என்ன நடக்கின்றது என்ற கேள்வி, அவர்களின் பங்காளிக் கட்சிகளுக்கு எழாவிட்டாலும் அல்லது, தமிழரசுக் கட்சியிடம் கேட்க வேண்டும் எனத் தோன்றாது விட்டாலும் கூட, தமிழ் மக்கள் மத்தியில் இந்த நிதி தொடர்பான சந்தேகம் காணப்பட்டிருந்தது.    ஏனெனில், புலம்பெயர் தேசத்தில் இருந்து, கூட்டமைப்புக்கான நிதி அனுசரணை, அதிகளவில் உள்ளதாகக் கருத்து நிலவிவரும் நிலையிலேயே, விமலேஸ்வரியின் கருத்து, புரளியைக் கிளப்பிவிட்டுள்ளது.    இதுபோன்று, வன்னித் தேர்தல் தொகுதியிலும் தமிழ் மக்களின் இருப்பு என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும் வகையிலான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பல சுயேச்சைகளும் அரசியல் கட்சிகளும் களத்தில் உள்ளன.    ஆறு ஆசனங்களைக் கொண்ட வன்னித் தேர்தல் தொகுதியில், 405 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே, வாக்குச் சிதறல் என்பது, அதிகமாகவே இடம்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளப்போகின்றனர் என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது.   வன்னி நிலப்பரப்போடு எவ்வித தொடர்புமற்ற பல சிங்கள வேட்பாளர்கள், பொதுஜன பெரமுனவுடன் களமிறங்கி உள்ளனர். அதற்குமப்பால் பாரிய நிதி வளத்துடன் சுயேட்சையாகவும் தென்பகுதியில் இருந்து சிங்கள வர்த்தகரொருவர் களமிறங்கி உள்ளார். இவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகளும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளதுடன், தமிழ் மக்கள் சிலரும் இவ்வாறான வேட்பாளர்களுக்காக வாக்குப் பெறும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   இந்நிலையில், கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தலில் சிங்களப் பிரதிநிதித்துவம் இன்றிக் காணப்பட்ட வன்னித் தேர்தல் தொகுதியில், இம்முறை ஒருவரையாவது கொண்டு வந்துவிட வேண்டும் எனச் சிங்கள மக்கள் மட்டுமன்றி அரசாங்கமும் எண்ணியுள்ளது.   இது வன்னித் தேர்தல் மாவட்டத்தை  உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அமையும் எனக் கரிசனை கொண்டுள்ளனர்.   ஆகவே, இவ்வாறான தேர்தல் சூழலில், வன்னித் தேர்தல் மாவட்டம், பாரிய இனப்பரம்பலை மாற்றியமைக்கும் களமாக மாறப்போவதைத் தமிழர்கள் உணரத்தலைப்பட வேண்டும்.    இச் சூழலிலேயே, பிரதான தமிழ்க் கட்சிகளின் வாக்குகளை உடைத்து, தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில், பல தமிழர்களும் புதிய புதிய பெயர்களைக் கொண்ட கட்சிகளில் அறிமுகமாகிப் போட்டியிடுகின்றனர்.   கடந்த காலங்களில், சுதந்திரக் கட்சியிலும் பொதுஜன பெரமுனவிலும் போட்டியிட்ட பல தமிழ் வேட்பாளர்கள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வீணடித்த நிலையில், தற்போது தம்மைத் தமிழர்கள், தமிழர்களின் கட்சி என்ற கோசத்துடன், வன்னித் தேர்தல் தொகுதியில் களமிறங்கி உள்ளமையானது, தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் வீணடிப்பதற்கேயன்றி, பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்காக இல்லை என்பதே யதார்த்தம் ஆகும்.   இதற்குமப்பால், தமிழ் அரசியல் களத்தில் வாக்குச் சிதறல் என்பது, தவிர்க்க முடியாத நிலையில், தமக்கான பிரதிநிதித்துவத்தை ஆளுமையுள்ளதாகவும் அறிவார்த்தமாகவும் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தைத் தவறவிடும் வாய்ப்புகள் உள்ளன.    கடந்த காலங்களில், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில், இன்று பல கட்சிகளாகத் தேர்தலை முகம் கொடுத்துள்ள தமிழர்கள், தற்போது தமது வாக்குச் சிதறல்களால் தமது பிரதிநிதித்துவத்தையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை பெரும் துயரமே.   இதற்குமப்பால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வாக்களிப்பு சதவீதம் குறைந்து செல்லும் என அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்பில் இருந்து தமிழ் வாக்காளர்கள் விலகுவதானது, ஆரோக்கியமற்ற செயற்பாடாக இருக்கும் என்பதை உணரத்தலைப்பட வேண்டும்.   ஆகவே, தமிழ் வேட்பாளர்களைப் பொறுத்தவரையில், தமது தேர்தல் பிரசாரப் பணியில், முக்கிய பங்காக மக்களை வாக்களிப்புச் செய்யத் தூண்டுவது முக்கியமானதாக உள்ளது.  அதிகளவான வாக்களிப்பு இடம்பெறுமாயின் பிரதிநிதித்துவ இழப்பைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. எனவே, தமிழ் மக்கள், தமது வாக்களிப்பு சதவீதத்தைத் தமது தொகுதிகளில் அதிகரிப்பதனூடாகவே தமக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெற வாய்ப்பாக அமையும்.   இவ்வாறான நிலையில், யாழ். மாவட்டத்தில் எவ்வாறு உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதோ, அதேபோன்றே வன்னித் தேர்தல் தொகுதியிலும் உட்கட்சி வெட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.   தமிழ்த் தேசிய கூட்டமைப்பில், டெலோவால் இளம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட வேட்பாளரொருவர், அக் கட்சியால் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வன்னித் தேர்தல் தொகுதியில், டெலோவுக்கு மூன்று ஆசனங்கள் கூட்டமைப்புக்குள் ஒதுக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.   இதில், மயூரன் இளம் வேட்பாளராக உள்ள போதிலும், அக்கட்சியின் பிரசாரங்களில் அவர் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், அக்கட்சியினர், “விருப்பு வாக்குத் தேர்தல் முறையில், அவ்வாறுதான் இருக்கும்” எனத் தெரிவித்து வருகின்றனர்.   எனவே, தமது கட்சிக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வீழ்த்திப் போட்டியிடும் இந்தத் தேர்தல் முறைக்குள், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு காப்பது என்ற கேள்வியும் அதிகமாகவே காணப்படுகின்றது.   எனவே, வாக்காளர்கள் தீர்க்கமானதும் திடமானதுமான முடிவை எடுக்கும் பட்சத்திலேயே, இம்முறை தமிழ் மக்கள் தமது இருப்பைத் திடமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்ய முடியும் என்பது மறுப்பதற்கில்லை.     தமிழ்க் கட்சிகள் என்ற முகமூடியுடன் போலிகள் கடந்த காலங்களில், பெரமுனவின் பங்காளிகளாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாதவர்கள், தற்போது தாம் தனித் தமிழ்க் கட்சி என்ற போலி முகமூடியைப் போட்டு, மக்களிடம் வாக்குக் கேட்கிறார்கள் என, வன்னி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.   வன்னித் தேர்தல் தொகுதி என்பது, ஒரு முக்கியமான தொகுதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், வெற்றிலைச் சின்னத்திலும் வெவ்வேறு சின்னங்களிலும் போட்டியிட்டவர்கள், தற்போது தாங்கள் தமிழர்கள்; நாங்கள் தமிழ் கட்சியிலேயே போட்டியிடுகின்றோம்; எங்களுடைய வேட்பாளர்களும் தமிழர்தான் என்கின்ற பிரசாரத்தை முன்னெடுத்துத் தங்களைத் தமிழர்களாகக் காட்டி, எமக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்கள், இந்தப் பொதுஜன பெரமுன என்று சொல்லப்படுகின்ற மொட்டுக் கட்சியினுடைய சகோதர சகோதரி வேட்பாளர்களாகவோ, அந்தக் கட்சிகள் பொதுஜன பெரமுனவினுடைய பங்காளிக் கட்சிகளாவோ அல்லது, கூட்டாளிக் கட்சிகளாகவோ இருப்பார்கள். இவர்கள், தமிழ்க் கட்சிகளில் தனித்துக் கேட்பதற்குக் காரணம், கடந்த காலங்களிலே எங்களுடைய மக்கள், அரசாங்கக் கட்சிக்களுக்குக் கணிசமான வாக்குகளைக் கொடுக்கவில்லை. ஆகவே, அவர்கள் தமிழ்க் கட்சி என்ற அந்த முகமூடியோடு, இப்போது வந்து மக்கள் முன் நிற்கிறார்கள்.   அவர்களுக்குத் தெரியும் தங்களுக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது என்று. அவ்வாறு தெரிந்தும், ஏன் நிற்கிறார்கள் என்றால், தமிழ்ப் பிரதிநிதிகளைக் குறைப்பதற்காகவும் எங்களுடைய வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவும் ஆகும். இவ்வாறு சுயேட்சைக் குழுக்களிலும் இதர கட்சிகளிலும் கேட்பவர்கள் 15,000 தொடக்கம் 20,000 வாக்குகளைச் சிதறடிப்பார்களேயானால், நாங்கள் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரை இழந்துவிடுவோம்.    வன்னித் தேர்தல் தொகுதி என்பது, இப்போது சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, இனப்பரம்பலை மாற்றுகின்ற ஒரு பிரதேசமாக, அவதானிக்கப்பட்டு வருக்கின்றது. எனவே, நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாகவே, நாம் எமது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார்.  இந்தக் கருத்து எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது, இன்றைய அரசியல் போக்கில் உணரக்கூடியதாக இருக்கிறது.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்களுக்கு-வாக்களிப்பதன்-அவசியத்தை-உணர்த்தும்-தேர்தல்/91-253153
    • மாநபி மேனி கஸ்தூரி வாசம்