Jump to content

யாழில் பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

 

 

பெருமாளிடம் ஆதாரம் இல்லாதால் அவர் எழுதியது அவராக கற்பனை செய்தது போல தெரிகிறது. பெருமாள் எழுதியதை தன்மீதான அவதூறாக கருதி சுமேந்திரன் யாழ் களத்திடமும் பெருமாளிடமும் நட்டஈடு கோரி வழக்கு தொடரும் சாத்தியம் உண்டு. மேலும் ஏற்கனவே நீதிமன்றில் ஆய்வு செய்யப்படும் ஒருவிடயத்தை பற்றிய முன் அறியப்படாத தகவலை பொதுவெளியில் பிரசுரிப்பது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடும் (perjury) சட்டவிரோத செயலாகும். மட்டுறுத்துனர்களே, பெருமாளின் மேற்படி கருத்தை விவகாரம் முற்ற முதல் அகற்றி விடுங்கள்.

ரௌடிசம் செய்தவர்கள் உங்களுக்கு வேண்டப்படடவர்களா?  உங்களது கற்பனைக்கு அவரின் கற்பனை (அப்படியாக இருந்தால்) மேல் போல் உள்ளது

1 hour ago, Rajesh said:

யாழில் படையினரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் முன்னாள் போராளி சரண்

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தினம்தினம் இராணுவத்தினர் தேடிச் சென்று பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று தனது சட்டத்தரணியூடாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் கடந்த 08/05/2020 நள்ளிரவு வேளை குறித்த முன்னாள் போராளியின் வீட்டிற்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், சிலர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கடந்த தைப் பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தர்க்கம் உருவானது. இதனைத் தொடர்ந்து பல சுற்றிவளைப்புக்கள் நடாத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனினும் தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் முறுகலில் ஈடுபட்டதாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை படையினர் தொடர்ச்சியாக தேடிவந்த நிலையில்,

குறித்த போராளி நீதிமன்றில் இரு வாரங்களுக்கு முன்னர் தனது சட்டத்தரணியூடாக முன்னிலையாகியிருந்த நிலையில் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அவ்வாறு ஒரு சந்தேகமான இளைஞனே இல்லை. அவ்வாறு ஒருவரை தேடவில்லை என கூறியிருந்தனர்.

இந்த நிலையிலேயே கடந்த 08/05/2020 நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்த நிலையில் அன்றையதினம் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவரது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டதுடன் 500 லீட்டர் மண்ணெண்ணெயும் நிலத்தில் ஊற்றப்பட்டிருந்தது.

அவரது சகோதரர்கள், உறவுகள் அண்மைக்காலமாக கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்ததுடன் பலர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலேயே இன்றையதினம்முன்னாள் போராளி பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைய சென்ற நிலையில் நீதிமன்ற கடமைநேரம் முடிந்ததை அடுத்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142975?ref=ibctamil-recommendation

ஐங்கரன் போய் இப்போ சரண் ...அவ்விரு பரல்களில் 500 லீட்டர் :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, தமிழர்களைக் கொல்லவும், தமிழிச்சிகளை பாலியல் வபுணர்வு செய்வதற்கென்றுமே சிங்கள் ராணுவ இயந்திரத்தில் இணையும் ராணுவ வீரர்கள் எப்போது தமிழிச்சிகளின் கற்பைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்?

சுமார் 11 வருடங்களுக்கு முன் முள்ளிவாய்க்கால் (பலருக்கு இப்படியொரு இடம் இருப்பதே இப்போது தெரியாது என்று நினைக்கிறேன்) எனுமிடத்தில் இதே சிங்கள ராணுவம்தான் தாம் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கத்தினை உலகம் பார்த்திருக்க நடத்திமுடித்ததென்பதை நாம் இலகுவாக மறந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். 

சிலருக்கு சிங்கள் மிருகங்கள் இதய தெய்வங்களாகத் தெரிவது எனக்கு வியப்பினை அளிக்கவில்லை.

 

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, Sabesh said:

ரௌடிசம் செய்தவர்கள் உங்களுக்கு வேண்டப்படடவர்களா?  உங்களது கற்பனைக்கு அவரின் கற்பனை (அப்படியாக இருந்தால்) மேல் போல் உள்ளது

அருமையான கேள்வி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.