கருத்துக்கள உறவுகள் ஏராளன் Posted May 11, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2020 ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனை ஏற்கமாட்டேன்; சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அதிர்ஷ்டம்: சுமந்திரன்! ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. 5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த அதிர்சசி கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதை அனுமதிக்கவும் போவதில்லை. அதை நான் யாழ்ப்பாணத்திலும் கூறுவேன். வேறு எங்கும் கூறுவேன். இதை கூறுவதால் எனக்கு அங்கு எதிர்ப்பும் உள்ளது. அவர் எங்களிற்காக போராடியவர். அவரை ஏன் ஏற்கவில்லை என பலரும் கேட்கிறார்கள். அவர் ஆயுதம் ஏந்தியதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்பதாலேயே அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. என்னுடைய 5 வயதில் இருந்து கொழும்பிலேயே வாழ்கிறேன். எனக்கு கொழும்பில் பல சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் சிங்கள மக்களுடன் வாழ்வது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறுகிறேன். இலங்கை தேசியக் கொடியை ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியில் நானும் சம்பந்தனும் மாத்திரமே தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என நினைக்கிறேன். தெற்கில் இதை கூறிவிட்டு, வடக்கில் நான் வேறுவிதமாக பேசுவதில்லை. இதையேதான் அங்கும் பேசுகிறேன். இதனால்தான் ஒரு பகுதியினர் எனக்கு எதிராக செயற்படுகிறார்கள். இம்முறை தேர்தலில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்கை பெற்று வெற்றியடைவேன் என்றார். https://www.ibctamil.com/srilanka/80/142921?ref=rightsidebar Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted May 11, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2020 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் colomban Posted May 11, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2020 புலிகள் ஆயுதம் ஏந்தியதால், அதிபர் ஆனந்தராஜா, ராஜினி போன்ற பல கல்விமான்கள் கொல்லப்பட்டர்கள். இந்த கோணத்திலும் நாம் இவரின் கூற்றை ஆராய்ந்து பார்கலாம் தானே Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted May 11, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2020 1 hour ago, colomban said: புலிகள் ஆயுதம் ஏந்தியதால், அதிபர் ஆனந்தராஜா, ராஜினி போன்ற பல கல்விமான்கள் கொல்லப்பட்டர்கள். இந்த கோணத்திலும் நாம் இவரின் கூற்றை ஆராய்ந்து பார்கலாம் தானே நீங்களும் அவரை மாதிரியே தான் அரைகுரையாக விளங்கி வைச்சுக் கொண்டு கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனந்தராஜாவை கொன்றது புலிகள் அல்ல ரெலோ. ரஜணியை கொன்றது.. ஹிந்தியப் படைக் கூலிகள்.. வரதராஜப்பெருமாளின் ஆட்கள்..! சரி.. இனி விடயத்துக்கு வருவோம்.. யாழ் நகரை அண்டி யாழ் கோட்டையிலும்.. குருநகரின் வாடிவீட்டிலும் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவம் மாணவர்கள் உட்பட பலரைக் கைது செய்து கொன்றது. இதில் சென் பற்றிஸ் கல்லூரி.. பரியோவான் கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் கந்தர்மடத்தில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் யாழ் இந்து மாணவர்கள் பலியாகினர். அதேபோல்.. யாழ் கோட்டையில் இருந்து யாழ் மத்திய கல்லூரி நோக்கி நடத்திய தாக்குதலில்.. யாழ் மத்திய கல்லூரி மாணவன் பள்ளி வளாகத்திலையே சூடுபட்டு உயிர் பிரிந்தார். இவை எவற்றிலும்.. இராணுவத்தை ஆத்திரமூட்டும் தாக்குதல்கள் நடக்கவில்லை. இந்த நிலையில்.. ஆனந்தராஜா யாழ் கோட்டை இராணுவத்தோட்டு.. நட்புறவு கால்பந்துப் போட்டிக்கு சொந்தக் கல்லூரி மாணவர்களை அனுப்ப ஏற்பாடு செய்கிறார். இதே இராணுவ முகாமில் இருந்து தினமும் செல் மற்றும் துப்பாக்கிச் சூடு (சினைப்பர் தாக்குதல்) மூலம் பொதுமக்கள் பலியாகியும் காயமடைந்தும் வரும் நிலையில்.. இந்த நட்புறவு என்பது எதற்கு..???! ரஜணி திரணகம படுகொலை என்பது அவரின் நெருங்கிய சிநேகிதர்களான கூலும்..கிருஷ்ணராஜாவும் சேர்ந்து எழுதி முறிந்த பனைகள் நூலில்.. இந்தியப் படை மற்றும் அதன் ஒட்டுக்குழுக்களின் அட்டூழியங்கள்.. மனித உரிமை மீறல்கள்.. மண்டையன் குழு செயற்பாடுகள் குறித்து சிலாகித்திருந்ததுவே முக்கிய காரணம். இதில்.. பின்னொரு காலத்தில். கூல்.. மற்றும் கிருஷ்ணராஜாவுடன் எங்களுக்கு சந்திக்க கிட்டிய நேரத்தில்.. நேரடியாக இது தொடர்பில் வினவியதுண்டு. அப்போது கிருஷ்ணராஜா இந்த விபரங்களைப் பரிமாறிக் கொண்டார்.. கிருஷ்ணராஜா.. யாழில் இருந்து இடம்பெயர்ந்து பின்னர் கொழும்பில் நீண்ட காலம் வசித்தார். இந்தக் கொலை தொடர்பில் இன்று வரை பழியை பலர் புலிகள் மீது தான் போட்டு வருகின்றனர். ஆனால்.. தாக்குதல் நடத்தியவர்கள் சர்வசாதாரணமாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நடமாடி இருக்கின்றனர். அங்கு ஹிந்திய இராணுவ கண்காணிப்பு என்பது சதா இருக்கும் ஓர் இடம். சில விடுதலைப்புலிகளோடு நட்புறவு பேணுவது போல் பேணிக் கொண்டு.. இந்தத் தாக்குதல்.. ஹிந்தியப் படைக் கூலிகளால்.. நடத்தப்பட்டிருக்கக் கூடும். அல்லது ஹிந்தியப் படை கூலிகளின் இரட்டை ஏஜென்டுகளால்.. இது நடத்தப்பட்டிருக்கக் கூடும். இதுவே ரஜணி திரணகம தலையிட்டு எழுதிய முறிந்த பனைகள் நூலில் பங்களிப்புச் செய்த கிருஷ்ணராஜா எமக்குக் கூறிய விடயம். புலிகள் எந்த நபர் மீதும் துப்பாக்கியை சும்மா நீட்டவில்லை.. எமது போராட்டத்திற்கும் மக்களுக்கும் அவர்கள் ஆற்றிய துரோகத்தனத்தின் மீது அவர்கள் பலமுறை எச்சரிக்கப்பட்டு அது தொடர்ந்த நிலையில் தான் அவர்களின் துப்பாக்கிகள் பேசி இருக்கின்றன. அது யாழ் முதல்வர் திருமதி.. யோகேஸ்வரன் விடயத்தில் கூட யதார்த்தம். அவருக்கு பல பகிரங்க எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஆனால்.. அவர்கள் சிங்கள எஜமான விசுவாசத்தில் சொந்த மக்களைப் பகடைக்காய் ஆக்கி தங்களின் செல்வாக்கை உயர்த்துவதில்.. குறியாக இருந்து செயற்பட்டனர். மக்களின் நீண்ட கால அரசியல் நலன்.. மண்ணின் உரிமை மீட்பு போன்ற பிரதான விடயங்களில் இவர்கள் அக்கறையின்றி செயற்பட்டதே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்தது. இன்று அதையே.. சுமந்திரன் செய்கிறார். சிங்களவர்களுடன் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவுக்கு விட்டுக்கொடுத்து.. அரசியல் செய்த.. தந்தை செல்வா போன்றோரால்.. கூட சிங்களவர்களிடம் இருந்து ஒரு தீர்வை பெற முடியாத போது சுண்டைக்காய் சுமந்திரன் புலிகளை வசைபாடி.. தமிழினப் படுகொலையை மறைத்து.. மழுங்கடித்து.. ஒரு மண்ணாங்கட்டியும் பெற முடியாது. சிங்களத்தை எல்லாக் குற்றங்களில் இருந்து காப்பாற்றி சுத்தவான்களாகக் காண்பித்து தன் சொந்த பொக்கற்றையும் செல்வாக்கையும் உயர்த்தி தன்னை இன்னொரு கதிர்காமர் ஆக்கத்தான் இது வழிசெய்யுமே தவிர.. இனத்துக்கு மண்ணுக்கு ஒரு நன்மையும் கிடையாது. இன்றுவரை காணாமல் போன உறவுகளின்1500 நாள் போராட்டத்தையே கணக்கில் எடுக்காத சுமந்திரன்.. வேறு எதனை மக்களுக்கு ஆற்ற முடியும். சுமந்திரன்.. ஒரு முழுக்க முழுக்க தோற்றுப்போன அரசியல்வாதி. இவரை தமிழ் மக்கள் தொடர்ந்து வாக்களித்து அரசியலில் வைத்திருப்பது.. இன்னொரு கதிர்காமரை உருவாக்கி விட்டதற்கு சமனாகும். அவ்வளவே. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted May 11, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 11, 2020 57 minutes ago, colomban said: புலிகள் ஆயுதம் ஏந்தியதால், அதிபர் ஆனந்தராஜா, ராஜினி போன்ற பல கல்விமான்கள் கொல்லப்பட்டர்கள். இந்த கோணத்திலும் நாம் இவரின் கூற்றை ஆராய்ந்து பார்கலாம் தானே அதிபர் ஆனந்தராஜா, ரஜனி திரணகம போன்றவர்களை எப்போதும் தூக்கிப் பிடிப்பதற்கான உண்மையான காரணம் என்ன ? சிங்கள அரசால் கொல்லப்பட்ட கல்வியியலாளர்களை, இந்திய அரசால் கொல்லப்பட்ட கல்வியாளர்களை இலகுவாக மறந்துபோவதற்கான (மறைத்து) என்ன காரணம் ? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் உடையார் Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 சுமந்திரன் தாம் விரும்பும் சிங்களவர்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது: விக்கினேஸ்வரன் Bharati May 12, 2020 சுமந்திரன் தாம் விரும்பும் சிங்களவர்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது: விக்கினேஸ்வரன்2020-05-11T21:35:15+00:00உள்ளூர் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அத்துடன் சிங்கள அரசாங்கங்கள் தற்போது செல்லும் பாதை சரியென்று சிங்கள மக்கள் நினைக்கவும் வாய்ப்புண்டு. என் பழைய மாணவரான சுமந்திரன் பற்றி எந்தக் கருத்தும் கூறாது இருக்கவே நான் முயன்றேன். ஆனால் நண்பர்கள் பலரின் உந்துதலால் நான் என் கருத்துக்களை வெளியிடுகின்றேன். விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார். அப்படியென்றால் தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது. தனது கருத்துக்களை வெளிப்படையாக வடமாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ மக்களுக்குக் கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது. எனது பழைய மாணவரா இவ்வாறு பேசுகின்றார் என்று வெட்கமாக இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லா மக்களும் அறிந்தது. தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் இது பற்றி தெரியும். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள்தான் உண்மையை அறியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் போல் தெரிகின்றது. இதனால் எதைச் சாதிக்கப் பார்க்கின்றார்? ஜனநாயக ரீதியாக தமிழர்களின் உரிமையை வெல்ல வேண்டும் என்ற அபிலாசையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமே இதனால் தடம்மாற்றிக் காட்டப்படுகின்றது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் உண்மை நிலைமையை மறைத்து தவறான புரிதல்களை ஏற்படுத்த சுமந்திரன் முயல்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு முந்தையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிறார். சுமந்திரனுக்கு வரலாறு தெரியவில்லையா அல்லது தெரியாததுபோல் நடிக்கின்றாரா? அப்படி நடிப்பதால் நல்லவர் என்ற பெயரை சிங்களவர்கள் மத்தியில் ஒருபோதும் அவர் பெற முடியாது. அவருக்குத் தமிழ் மக்களின் உணர்வுதான் புரியவில்லை என்றால் வரலாறுமா தெரியவில்லை. 1949இல் உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது 2001இல். 2001ல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில்தான் அவர் பேச்சாளராக இருக்கிறார் என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சிங்களவர்கள் மத்தியில் சுமந்திரனைவிட அதிக காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அத்துடன் சிங்கள மக்களை உறவாகவும் கொண்டவன் நான். அவர்களுடன் உறவாக இருப்பது வேறு. எமது உரிமைகளை அவர்களிடம் எடுத்துக் கூறுவது வேறு. சிங்களவர்கள் மத்தியில் அதிக காலம் வாழ்ந்துவிட்டுத்தான் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு வந்திருக்கின்றேன். சுமந்திரன் கூறியவை ஏதோ தனிப்பட்ட செல்வாக்கை சிங்களவர் மத்தியில் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியது போல் தெரிகின்றது. தமிழ் மக்களின் வருங்கால நலம் பற்றி சிந்திக்காது தான் அவர் அங்கு பேசியுள்ளார். மற்ற இனங்களை மதிப்பது வேறு. அவர்களின் அடிமையாக வாழ விரும்புவது வேறு. மற்ற இனங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் அடிவருடியாகக் காட்டிக் கொள்வதை திரு.சுமந்திரன் பெருமையாக நினைக்கிறார் போல் தெரிகின்றது. இது சிங்கள மக்களுக்கு எம் தொடர்பில் தவறான தோற்றப்பாட்டையே உருவாக்கும். தமிழர்கள் அடிமையாக இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும். சுமந்திரன் அவ்வாறு அடிமையாக இருப்பதை பெருமையாகக் கருதலாம். ஆனால் தமிழர்கள் சார்பில் பேசும் போது அவ்வாறு பேச அவருக்கு உரித்தில்லை. அது மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தோல்வியை தழுவிய நிலையில், விரக்தி கொண்ட தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியது வரலாறு. அதனை நாம் எம் விருப்பு வெறுப்புக்களுக்காக மாற்றிச் சொல்ல முடியாது. கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் இந்த மக்களை புரிந்து அவர்களுக்காக அவர்கள் கோரிக்கையின் பேரில் குரல் கொடுப்பது உத்தமமானது. இல்லை என்றால் விலகி இருந்து சுமந்திரன் தாம் விரும்பும் சிங்கள மக்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது. சிங்களவர்களுக்கு எமது விடுதலைப் போராட்டம் தொடர்பில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தம்பி பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்தினார் என்பதை நன்கு விளங்கிக்கொண்டுள்ள சிங்கள மக்கள் பலர் உள்ளனர். தமிழர் தம் போராட்டங்களை, நியாயங்களைப் பற்றிப் பேசுகின்ற சிங்களத் தலைவர்கள் தெற்கில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். அதே கேள்வி சிங்களத்தில் என்னிடம் கேட்டிருந்தால் பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் முற்றும் முழுதுமாக உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பேன்.” http://thinakkural.lk/article/41355 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 22 hours ago, Vankalayan said: அப்படி என்றால் எப்போது ஒரு ஜனநாயக அரசுடன் போராடப்போகிறோம்? கத்தியை மட்டும் தீட்டக்கூடாது, புத்தியையும் தீடட வேண்டும்। நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் எங்கள் அரசியற் தலைவர்கள், திருடரும் பொய்யருமாக இருக்கையில் எப்படி புத்தியைத் தீட்டுவார்கள். அப்படித் தீட்டினாலும் தனது குடும்பத்தவருக்காக மட்டும்தானே தீட்டுகிறார்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Vankalayan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 11 hours ago, ragaa said: அப்ப அவர் தோல்வியடைந்தால் என்ன செய்யிறதாய் உத்தேசம். அவர் தோல்வியடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்। அவரை அரசியலில் இருந்து வெளியற்ற வேண்டும்। இதனை முதலிலும் நான் பதிவு செய்திருந்தேன்। 12 hours ago, ampanai said: எங்களிடம் புத்தியும் ஒற்றுமையும் அவர்களை விட கூடவே உள்ளது. ஆனால், சரியான தலைமைகள் தான் இல்லை. புத்தி இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்த வேண்டும்। ஒற்றுமை இருக்குதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது। ஆயுத போராட்டத்திலிருந்து , அரசியல் போராட்டம் வரைக்கும் இதை காணலாம்। காலத்துக்கு காலம் தலைமைகள் மாறிக்கொண்டே இருக்கிறது। இனி வரும் தலைமையாவது சரியான தலையுடன் இருந்தால் சரிதான்। Link to comment Share on other sites More sharing options...
ampanai Posted May 12, 2020 Share Posted May 12, 2020 5 minutes ago, Vankalayan said: ஆயுத போராட்டத்திலிருந்து , அரசியல் போராட்டம் வரைக்கும் இதை காணலாம்। காலத்துக்கு காலம் தலைமைகள் மாறிக்கொண்டே இருக்கிறது। தலைமை என்பது வடகொரியா இல்லை சீன நாடு போன்ற தலைமை அல்ல, 100% ஆதரவு இருக்க. தந்தை செல்வா, தலைவர் அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரவை செயல்வடிவம் மூலம் தந்தனர், Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 3 minutes ago, Vankalayan said: அவர் தோல்வியடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்। அவரை அரசியலில் இருந்து வெளியற்ற வேண்டும்। இதனை முதலிலும் நான் பதிவு செய்திருந்தேன்। எங்களுக்குள்ள தெரிவுகள் மிக மிகச் சொற்பம். சுமந்திரனது ஆழுமைக்கு Personality ) நிகரான அல்லது அதிகமான ஆழுமையுள்ள யார் தமிழரது பக்கத்தில் உள்ளனர் ? (உங்கள் கவனத்திற்கு : இரண்டு அரசியல் கேள்வியுடன் Dr. நில்மினி அவர்கள் அரசியல் பக்கம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார். ஒருவராகிலும் அவரை எங்களுடன் இணைந்திருந்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்று கூறவில்லை மாறாக விலகியிருங்கள் என்று கூறியோர்தான் அதிகம் ) Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Vankalayan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 5 hours ago, nedukkalapoovan said: புலிகள் எந்த நபர் மீதும் துப்பாக்கியை சும்மா நீட்டவில்லை.. எமது போராட்டத்திற்கும் மக்களுக்கும் அவர்கள் ஆற்றிய துரோகத்தனத்தின் மீது அவர்கள் பலமுறை எச்சரிக்கப்பட்டு அது தொடர்ந்த நிலையில் தான் அவர்களின் துப்பாக்கிகள் பேசி இருக்கின்றன. ஒருவருக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்பதட்காக ஒரேயடியாக வெள்ளையடிக்க கூடாது। நான் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மன்னர் அரச அதிபராக இருந்த ஒருவரை மணடயில் போட திடடமிடடார்கள் என்றும் அதட்கான காரணத்தையும் எழுதி இருந்தேன்। மீண்டும் தேவை என்றால் பெயர் , இடம் என்பவற்றுடன் எழுதுவேன்। எனவே ஒரேயடியாக உங்களுக்கு பிடிக்குமென்பதட்காக புளுக வேண்டாம்। காக்கைக்கும் தன குஞ்சு போன் குஞ்சு Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Vankalayan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 Just now, Kapithan said: எங்களுக்குள்ள தெரிவுகள் மிக மிகச் சொற்பம். சுமந்திரனது ஆழுமைக்கு Personality ) நிகரான அல்லது அதிகமான ஆழுமையுள்ள யார் தமிழரது பக்கத்தில் உள்ளனர் ? (உங்கள் கவனத்திற்கு : இரண்டு அரசியல் கேள்வியுடன் Dr. நில்மினி அவர்கள் அரசியல் பக்கம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார். ஒருவராகிலும் அவரை எங்களுடன் இணைந்திருந்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்று கூறவில்லை மாறாக விலகியிருங்கள் என்று கூறியோர்தான் அதிகம் ) இந்த தலைமையை நானோ நீங்களோ தெரிவு செய்வதில்லை। அங்குள்ள மக்களே தெரிவு செய்ய வேண்டும்। இங்குள்ளவர்கள் தங்களுக்கு விருப்பம்போல எழுத சொல்கிறார்கள்। இல்லாவிடடாள் தமிழ் விரோதி என நினைக்கிறார்கள்। எதிர் கருத்துக்களை வாங்கிக்கொள்ள அவர்களிடம் பக்குவமில்லை। அவ்வாறே சுமந்திரனும் பேச வேண்டும், செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்। சுமந்திரனை விடடால் ஆளுமையுள்ளவர்களென்று யாருமில்லைதான்। மாத்தவர்கள் எல்லாம் பொண்ணையார்கள் என்றும் தெரியும் l இருந்தாலும் சுமந்திரன் ஒரு கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கட்ச்சியின் நிலைப்படடை அறிந்து கருத்து வெளியிட வேண்டும்। நில்மினி அக்கா இங்கு தன்னை வரவேட்ப்பார்கள் என்று கருத்து எழுத முடியாது। நானும் அப்படிதான் எழுதுகிறேன்। எனது கருத்துக்களை 90 % பேர் எதிராகத்தான் எழுதுகிறார்கள்। அதட்காக நான் சொல்லவேண்டியதை சொல்லாமல் விடவில்லை। 12 minutes ago, ampanai said: தலைமை என்பது வடகொரியா இல்லை சீன நாடு போன்ற தலைமை அல்ல, 100% ஆதரவு இருக்க. தந்தை செல்வா, தலைவர் அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது பெரும்பான்மை தமிழ் மக்கள் ஆதரவை செயல்வடிவம் மூலம் தந்தனர், இப்போது ஆதரவை தரவில்லை என்று சொல்கிறீர்களா ? அப்படி என்றால் இவர்களை தேர்தலில் தெரிவு செய்வது யார்? மக்கள் இல்லையா? இனி மேல் எப்படியான செயல் வடிவங்களை எதிர்பார்க்கிறீர்கள்।? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 38 minutes ago, Vankalayan said: 1) இந்த தலைமையை நானோ நீங்களோ தெரிவு செய்வதில்லை। அங்குள்ள மக்களே தெரிவு செய்ய வேண்டும்। இங்குள்ளவர்கள் தங்களுக்கு விருப்பம்போல எழுத சொல்கிறார்கள்। இல்லாவிடடாள் தமிழ் விரோதி என நினைக்கிறார்கள்। எதிர் கருத்துக்களை வாங்கிக்கொள்ள அவர்களிடம் பக்குவமில்லை। அவ்வாறே சுமந்திரனும் பேச வேண்டும், செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்। சுமந்திரனை விடடால் ஆளுமையுள்ளவர்களென்று யாருமில்லைதான்। மாத்தவர்கள் எல்லாம் பொண்ணையார்கள் என்றும் தெரியும் l இருந்தாலும் சுமந்திரன் ஒரு கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கட்ச்சியின் நிலைப்படடை அறிந்து கருத்து வெளியிட வேண்டும்। 2) நில்மினி அக்கா இங்கு தன்னை வரவேட்ப்பார்கள் என்று கருத்து எழுத முடியாது। நானும் அப்படிதான் எழுதுகிறேன்। எனது கருத்துக்களை 90 % பேர் எதிராகத்தான் எழுதுகிறார்கள்। அதட்காக நான் சொல்லவேண்டியதை சொல்லாமல் விடவில்லை। 1) நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் மிகச் சிறந்த உதாரணம். 2) உண்மையில் Dr. நில்மினி தனது கருத்துக்களைத் துணிவுடன் இங்கே குறிப்பிட்டு கலந்துரையாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பெரிய ஆழுமை ஒன்றை சமயல் குறிப்புடன் நிற்பதென்பது இந்த யாழ் இணையத்திற்கு வெட்கக் கேடானது. அதே தருணம் Dr. நில்மினியும் கொஞ்சம் காரசாரமான விவாதங்களைக் கண்டு ஒதுங்குவது அவரது புலமைத் தேர்ச்சிக்கு அழகு சேர்க்காது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 20 minutes ago, Kapithan said: 2) உண்மையில் Dr. நில்மினி தனது கருத்துக்களைத் துணிவுடன் இங்கே குறிப்பிட்டு கலந்துரையாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பெரிய ஆழுமை ஒன்றை சமயல் குறிப்புடன் நிற்பதென்பது இந்த யாழ் இணையத்திற்கு வெட்கக் கேடானது. அதே தருணம் Dr. நில்மினியும் கொஞ்சம் காரசாரமான விவாதங்களைக் கண்டு ஒதுங்குவது அவரது புலமைத் தேர்ச்சிக்கு அழகு சேர்க்காது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இங்கே பலருக்கு கெளரவமான முறையில் கதைக்க பேசத் தெரியாது. ஏன் எத்தனையோ திரிகளில் வெட்டு கொத்து திரி பூட்டு என்று பிரச்சனைகள் வருகிறது. அரசியல் என்பது சாக்கடை.அதற்குள் பாவம் அந்தம்மாவும் குளிக்கவா வேண்டும். ரதியைப் போல வாடா பார்ப்போம் என்று இறங்க அவவுக்கு தெரியாது. Link to comment Share on other sites More sharing options...
சண்டமாருதன் Posted May 12, 2020 Share Posted May 12, 2020 11 hours ago, ஏராளன் said: ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனை ஏற்கமாட்டேன்; சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அதிர்ஷ்டம் இனவிடுதலைப்போராட்டம் தோல்வியடைந்ததின் சூட்சுமம் இந்த கருத்தில் இருக்கும் உண்மைதான். சிங்களவர்களுக்கு அடிமையாக வாழ்வது என்பதை கௌரவமாக சேர்ந்து வாழ்வது அதிஸ்டம் என்கிறது இந்தக் கருத்து. சிங்களவர்களுன் சேர்ந்து வாழ்வது அதிஸ்டம் என்னும் போது இனவிடுதலைக்கான அவசியமே இல்லாமல் போகின்றது. பெரும்பாலான மக்கள் சிங்களவர்களை அனுசரித்து வாழுதல் அண்டி வாழுதல் முடிந்தால் உலகில் ஏதாவது ஒரு நாட்டில் போய் அந்த இனங்களுடன் (என்னைப்போல்) சேர்ந்து வாழுதல் என்ற முடிவை நோககி நகரும் போது இனவிடுதலைப்போராட்டத்திற்கான அவசியம் அற்றுபோகின்றது. போரட்டம் தோல்வியில் முடிந்தது. . இனத்துக்கான அரசியல் யாருக்கு இன விடுதலை தேவையோ அதனடிப்படையில் இனவிடுதலைக்காக யார் முயன்றாரோ அவர்களிடமே இருக்க முடியும். இதன் அடிப்படையிலேயே புலிகளின் முடிவிற்கு பின் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் என்று எதுவும் இல்லை என்ற நிலை உருவாகின்றது. எதிர்த்தோ ஆதரித்தோ விமர்சித்தோ புலிகள் என்று உச்சரிப்பதில் இருந்தே தமிழர்களுக்கான அரசியலை மறுபடியும் தேவைப்பட்டால் தொடங்க முடியும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 1 hour ago, ஈழப்பிரியன் said: இங்கே பலருக்கு கெளரவமான முறையில் கதைக்க பேசத் தெரியாது. ஏன் எத்தனையோ திரிகளில் வெட்டு கொத்து திரி பூட்டு என்று பிரச்சனைகள் வருகிறது. அரசியல் என்பது சாக்கடை.அதற்குள் பாவம் அந்தம்மாவும் குளிக்கவா வேண்டும். ரதியைப் போல வாடா பார்ப்போம் என்று இறங்க அவவுக்கு தெரியாது. இரதிக்குப் பக்கத்தில் கபிதான் என்று போட மறந்துவிட்டீர்கள் போலும் . பண்பும், மக்களில் அக்கறை உள்ளவர்களும்தான் அரசியலுக்கு துணிவுடன் வரவேண்டும். பண்பும், அனுபவமும், மக்களில் உண்மையான அக்கறையும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று நாம் கூறுவோமானால், வடிகட்டியபின் பன்னாடையில் எஞ்சுபவைகள்தான் அரசியலுக்கு வரும். அதற்கு நீங்கள் ஆயத்தமா Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 3 minutes ago, Kapithan said: பண்பும், மக்களில் அக்கறை உள்ளவர்களும்தான் அரசியலுக்கு துணிவுடன் வரவேண்டும். முன்பொரு காலம் அப்படி இருந்தது. கெளரவமாக கருத்தாடும் நீங்களே பல தடவை நொந்து போயுள்ளதை கண்டுள்ளேன். Link to comment Share on other sites More sharing options...
தனிக்காட்டு ராஜா Posted May 12, 2020 Share Posted May 12, 2020 4 hours ago, Kapithan said: 1) நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் மிகச் சிறந்த உதாரணம். 2) உண்மையில் Dr. நில்மினி தனது கருத்துக்களைத் துணிவுடன் இங்கே குறிப்பிட்டு கலந்துரையாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பெரிய ஆழுமை ஒன்றை சமயல் குறிப்புடன் நிற்பதென்பது இந்த யாழ் இணையத்திற்கு வெட்கக் கேடானது. அதே தருணம் Dr. நில்மினியும் கொஞ்சம் காரசாரமான விவாதங்களைக் கண்டு ஒதுங்குவது அவரது புலமைத் தேர்ச்சிக்கு அழகு சேர்க்காது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆண்களுக்கே அநாகரிகமாக பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் களத்தில் பாவம் அவரை இழுக்க வேண்டாம். நானும் நல்ல மரியாதையான மனுசன் என நினைத்திருந்தன் ஒருவரை அசிங்கமாக பேசியதிலிருந்து விளங்கிக்கொண்டேன் அவரை 4 hours ago, ஈழப்பிரியன் said: இங்கே பலருக்கு கெளரவமான முறையில் கதைக்க பேசத் தெரியாது. ஏன் எத்தனையோ திரிகளில் வெட்டு கொத்து திரி பூட்டு என்று பிரச்சனைகள் வருகிறது. அரசியல் என்பது சாக்கடை.அதற்குள் பாவம் அந்தம்மாவும் குளிக்கவா வேண்டும். ரதியைப் போல வாடா பார்ப்போம் என்று இறங்க அவவுக்கு தெரியாது. நுழையாமல் இருப்பது அவருக்கு நல்லது Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் tulpen Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 5 hours ago, Kapithan said: 1) நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் மிகச் சிறந்த உதாரணம். 2) உண்மையில் Dr. நில்மினி தனது கருத்துக்களைத் துணிவுடன் இங்கே குறிப்பிட்டு கலந்துரையாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பெரிய ஆழுமை ஒன்றை சமயல் குறிப்புடன் நிற்பதென்பது இந்த யாழ் இணையத்திற்கு வெட்கக் கேடானது. அதே தருணம் Dr. நில்மினியும் கொஞ்சம் காரசாரமான விவாதங்களைக் கண்டு ஒதுங்குவது அவரது புலமைத் தேர்ச்சிக்கு அழகு சேர்க்காது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 5 hours ago, Kapithan said: 1) நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் மிகச் சிறந்த உதாரணம். 2) உண்மையில் Dr. நில்மினி தனது கருத்துக்களைத் துணிவுடன் இங்கே குறிப்பிட்டு கலந்துரையாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பெரிய ஆழுமை ஒன்றை சமயல் குறிப்புடன் நிற்பதென்பது இந்த யாழ் இணையத்திற்கு வெட்கக் கேடானது. அதே தருணம் Dr. நில்மினியும் கொஞ்சம் காரசாரமான விவாதங்களைக் கண்டு ஒதுங்குவது அவரது புலமைத் தேர்ச்சிக்கு அழகு சேர்க்காது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 4 hours ago, ஈழப்பிரியன் said: இங்கே பலருக்கு கெளரவமான முறையில் கதைக்க பேசத் தெரியாது. ஏன் எத்தனையோ திரிகளில் வெட்டு கொத்து திரி பூட்டு என்று பிரச்சனைகள் வருகிறது. அரசியல் என்பது சாக்கடை.அதற்குள் பாவம் அந்தம்மாவும் குளிக்கவா வேண்டும். ரதியைப் போல வாடா பார்ப்போம் என்று இறங்க அவவுக்கு தெரியாது. ஓரி வைத்தியராக புலமை பெற்ற நில்மினியை அவரது சுதந்திரமாக கருத்துகளை பேசவிடாது சமையல் குறிப்புகளுடன் நின்று விடுமாறும் அரிசியல் பேசவேண்டாம் என்றும் அன்பு கட்டளை இடும் நாம் பச்சிளம் சின்னஞ்சிறிய இளம் பெண்பிள்ளைகள் காட்டிலும், மழையிலும், கடலிலிலும் அவர்களின் உடல் வலிமைக்கு மிஞ்சிய ஆயுதங்களை காவி கொண்டு எமக்காக போராடிய போதும் வெடிகுண்டாக வெடித்த போதும் அதை ரசித்தவர்கள் தான். எமது அரசியலுக்காக உன் உயிரைக் கொடுத்து உழை. ஆனால் அரசியல் கருத்து கூறும் சுதந்திரம் உனக்கு இல்லை. இது தான் எமது கலாச்சாரம். 29 minutes ago, தனிக்காட்டு ராஜா said: ஆண்களுக்கே அநாகரிகமாக பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் களத்தில் பாவம் அவரை இழுக்க வேண்டாம். நுழையாமல் இருப்பது அவருக்கு நல்லது Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 சரி பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை தான் நீங்கள் அங்கீகரிக்கவில்லை.. பாலகுமார் தலைமையிலான.. ஈரோஸ் பெரிய அளவில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாத அமைப்பு. மாணவர் அமைப்பு என்ற அடையாளம் அதற்கு மட்டுமே இருந்தது. அதன் தலைவர் பாலகுமாரும் புலிகளோடு இணைந்திருந்தாலும்.. கள முனையில் ஆயுதங்களோடு நின்று போரிட்ட ஆதாரங்கள் இல்லை. அவர் ஒரு அரசியல் போராளியாகவே கடைசி வரை இருந்தார். அவர் முள்ளிவாய்க்காலில்.. சிறீலங்கா சிங்களப் படைகளிடம் சரணடைந்து உயிருடன் இருக்கும் காட்சிகள் கீழே. இப்படி சரணடைந்தவர்கள் இன்று வரை விடுதலை ஆகவில்லை. 10 ஆண்டுகள் ஓடிப்போய் விட்டன. இவர்களுக்கு என்ன நடந்தது. தந்தையும் மகனும் என்னானார்கள்..???! ரணிலைக் காக்க வழக்கில் ஆஜர் ஆகும் நீங்கள்.. ரஞ்சன் ராமநாயக்காவை காக்க வழக்கில் ஆஜராகும் நீங்கள்.. முஸ்லிம்கள் சார்பில் வழக்கில் ஆஜராகும் நீங்கள்.. இன்னும் பல சமூகக் குற்றங்களைச் செய்வோர் சார்பில் ஆஜராகும் நீங்கள்.. இந்த அரசியல் போராளி மற்றும் அவரது மகன் தொடர்பில்.. இன்று வரை ஏன் ஒரு ஆட்கொணர்வு மனுவைக் கூடத் தாக்கல் செய்யவில்லை..????????! நீங்கள் மட்டுமல்ல.. 2009 க்குப் பின் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய என்று பல முன்னாள் இன்னாள் சட்டாம்பிகள் அரசியலுக்குள் நுழைந்து தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வரும் நிலையிலும்.. யாருமே.. இவர்களையும் இவர்களைப் போன்றவர்களையும் ஏன் கண்டுகொள்கிறார்கள் இல்லை..???! 7 hours ago, Vankalayan said: ஒருவருக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்பதட்காக ஒரேயடியாக வெள்ளையடிக்க கூடாது। நான் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மன்னர் அரச அதிபராக இருந்த ஒருவரை மணடயில் போட திடடமிடடார்கள் என்றும் அதட்கான காரணத்தையும் எழுதி இருந்தேன்। மீண்டும் தேவை என்றால் பெயர் , இடம் என்பவற்றுடன் எழுதுவேன்। எனவே ஒரேயடியாக உங்களுக்கு பிடிக்குமென்பதட்காக புளுக வேண்டாம்। காக்கைக்கும் தன குஞ்சு போன் குஞ்சு நீங்கள் எழுதிய காரணங்கள் பற்றி பக்கச்சார்பற்ற உண்மைகள் உங்களை விட அவர்களுக்கு கிடைத்திருக்க முடியும். பல அரசாங்க அதிபர்கள்.. அரசு உளவாளிகளாக இருந்த காலங்களும் உண்டு..குறிப்பாக வடக்குக்கிழக்கில் இருக்கும் போது ஒரு கதை.. கொழும்பு திரும்பியதும் இன்னொரு கதை. இவர்களின் இரட்டை நாக்கை கண்காணிக்க புலிகளிடமும் ஆக்கள் இருந்திருப்பார்கள். மக்களும் தகவல் கொடுத்திருப்பாகள். அரச அதிபர்களில்... சிலர் உண்மையில்.. நடுநிலையோடு.. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டும் செயற்பட்டனர். அப்படியான எவருக்கும் எந்த அச்சுறுத்தலும் எழவில்லையே. முழுப் பதவிக்காலங்களையும்.. எந்த அச்சுறுத்தல்கள் இன்றித்தானே முடித்துச் சென்றனர். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் tulpen Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 19 minutes ago, nedukkalapoovan said: சரி பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை தான் நீங்கள் அங்கீகரிக்கவில்லை.. பாலகுமார் தலைமையிலான.. ஈரோஸ் பெரிய அளவில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாத அமைப்பு. மாணவர் அமைப்பு என்ற அடையாளம் அதற்கு மட்டுமே இருந்தது. அதன் தலைவர் பாலகுமாரும் புலிகளோடு இணைந்திருந்தாலும்.. கள முனையில் ஆயுதங்களோடு நின்று போரிட்ட ஆதாரங்கள் இல்லை. அவர் ஒரு அரசியல் போராளியாகவே கடைசி வரை இருந்தார். அவர் முள்ளிவாய்க்காலில்.. சிறீலங்கா சிங்களப் படைகளிடம் சரணடைந்து உயிருடன் இருக்கும் காட்சிகள் கீழே. இப்படி சரணடைந்தவர்கள் இன்று வரை விடுதலை ஆகவில்லை. 10 ஆண்டுகள் ஓடிப்போய் விட்டன. இவர்களுக்கு என்ன நடந்தது. தந்தையும் மகனும் என்னானார்கள்..???! ரணிலைக் காக்க வழக்கில் ஆஜர் ஆகும் நீங்கள்.. ரஞ்சன் ராமநாயக்காவை காக்க வழக்கில் ஆஜராகும் நீங்கள்.. முஸ்லிம்கள் சார்பில் வழக்கில் ஆஜராகும் நீங்கள்.. இன்னும் பல சமூகக் குற்றங்களைச் செய்வோர் சார்பில் ஆஜராகும் நீங்கள்.. இந்த அரசியல் போராளி மற்றும் அவரது மகன் தொடர்பில்.. இன்று வரை ஏன் ஒரு ஆட்கொணர்வு மனுவைக் கூடத் தாக்கல் செய்யவில்லை..????????! நீங்கள் மட்டுமல்ல.. 2009 க்குப் பின் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய என்று பல முன்னாள் இன்னாள் சட்டாம்பிகள் அரசியலுக்குள் நுழைந்து தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வரும் நிலையிலும்.. யாருமே.. இவர்களையும் இவர்களைப் போன்றவர்களையும் ஏன் கண்டுகொள்கிறார்கள் இல்லை..???! நீங்கள் எழுதிய காரணங்கள் பற்றி பக்கச்சார்பற்ற உண்மைகள் உங்களை விட அவர்களுக்கு கிடைத்திருக்க முடியும். பல அரசாங்க அதிபர்கள்.. அரசு உளவாளிகளாக இருந்த காலங்களும் உண்டு..குறிப்பாக வடக்குக்கிழக்கில் இருக்கும் போது ஒரு கதை.. கொழும்பு திரும்பியதும் இன்னொரு கதை. இவர்களின் இரட்டை நாக்கை கண்காணிக்க புலிகளிடமும் ஆக்கள் இருந்திருப்பார்கள். மக்களும் தகவல் கொடுத்திருப்பாகள். அரச அதிபர்களில்... சிலர் உண்மையில்.. நடுநிலையோடு.. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மட்டும் செயற்பட்டனர். அப்படியான எவருக்கும் எந்த அச்சுறுத்தலும் எழவில்லையே. முழுப் பதவிக்காலங்களையும்.. எந்த அச்சுறுத்தல்கள் இன்றித்தானே முடித்துச் சென்றனர். நெடுக்கு சுமந்திரனை பற்றி நீங்கள் எழுதிய விடயம் சரியானது. சுமந்திரன் தனது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றவே அரசியலில் உள்ளார் என்பது உண்மை. தமிழ் மக்களின் அகிம்ஸை போராட்டம் எப்படி ஆயுத போராட்டம் ஆகியது என்பது பற்றிய அறிவு அவருக்கு இருந்தும் சுயநலத்திற்காக சுமந்திரன் கடந்த 10 வருடங்களாக அரசியல் செய்து வருவதாகவே எனக்கு படுகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை தலைவர் பிரபாகரன் என்ற ஆயுதப் போராளியின் தியாகத்திற்கு முன்பு சுமந்திரன் ஒரு தூசிக்கு சமமானவர். அவரை அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும். இரண்டாவது புலிகள் செய்த எல்லாம் சரி என்று நீங்கள் வாதாடுவது சரியானதல்ல. புலிகளும் முன்பின் யோசிக்காது பல கொலைகளை செய்தவர்கள் தான். புலிகள் செய்த பல கொலைகளுக்கு பின்னால் அதை நடத்தியவர்களின் சுய நலமும், ஆத்திரம், அறியாமையும் உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு புலிகள் செய்த எல்லா நடவடிக்கைகளுக்கும் நீங்கள் நியாயம் கற்பிப்பதுஎந்த வகையில் நியாயம். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 3 minutes ago, tulpen said: இரண்டாவது புலிகள் செய்த எல்லாம் சரி என்று நீங்கள் வாதாடுவது சரியானதல்ல. புலிகளும் முன்பின் யோசிக்காது பல கொலைகளை செய்தவர்கள் தான். புலிகள் செய்த பல கொலைகளுக்கு பின்னால் அதை நடத்தியவர்களின் சுய நலமும், ஆத்திரம், அறியாமையும் உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு புலிகள் செய்த எல்லா நடவடிக்கைகளுக்கும் நீங்கள் நியாயம் கற்பிப்பதுஎந்த வகையில் நியாயம் நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய சம்பவங்களைப் பற்றி போராட்ட சூழலில் சுமார் 18 வருடங்கள் வாழ்ந்த நாங்கள் அறிந்திருக்கவில்லை. நடந்த எல்லாச் சம்பவங்களுக்குப் பின்னும் சில பல நியாயங்கள் இருந்தன. உண்மையான புலிகள் கடைசிவரை தமது கொள்கையில் இருந்து விலகி இருக்கவும் இல்லை.. மக்களுக்கு.. மண்ணுக்கு துரோகம் இழைக்கவில்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted May 12, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted May 12, 2020 3 hours ago, தனிக்காட்டு ராஜா said: ஆண்களுக்கே அநாகரிகமாக பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் களத்தில் பாவம் அவரை இழுக்க வேண்டாம். நானும் நல்ல மரியாதையான மனுசன் என நினைத்திருந்தன் ஒருவரை அசிங்கமாக பேசியதிலிருந்து விளங்கிக்கொண்டேன் அவரை யாரது, என்னையா கூறுகிறீர்கள் . என்னைக் கூறியிருந்தால், இதோ உங்களுக்கு திரும்பவும் ஒருமுறை கூறுகிறேன். கேட்டுக் கொள்ளுங்கள். என்னை இழிவுபடுத்துவதை நான் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை ஆனால், இன்னொரு மனிதனை (அதிலும் குறிப்பாக, சக தமிழனை) சாதி, மதம் போன்ற காரணங்களுக்காக இழிவுபடுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அவர்களது ஆயுதத்தாலேயே அவர்களுக்குத் திருப்பி அடிப்பேன். இதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். Link to comment Share on other sites
Recommended Posts