Jump to content

அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்தன- ஐரோப்பிய நாடுகளில் வெகுவாகக் குறைவு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-World-Update.jpg

அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்தன- ஐரோப்பிய நாடுகளில் வெகுவாகக் குறைவு!

உலகம் முழுவதும் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் நேற்று உயிரிழப்புக்கள் சடுதியாகக் குறைந்துள்ளன.

உலக நாடுகளில் நேற்று ஒரேநாளில் 88 ஆயிரத்து 997 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 41 இலட்சத்து ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 248 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 இலட்சத்து 80 ஆயிரத்து 443 ஆக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 41 இலட்சம் பேரில் 14 இலட்சத்து 41 ஆயிரத்து 791 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் நேற்று மட்டும் ஆயிரத்து 422 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்தமாக அங்கு 80 ஆயிரத்து 37 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், அமெரிக்காவில் 89 இலட்சத்து 18 ஆயிரத்து 263 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 இலட்சத்து 47 ஆயிரத்து 309 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடும் பாதிப்புக்குள்ளாகியு்ளள நியூயோர்க் மாநிலத்தில் நேற்று 186 பேர் மரணித்துள்ளதுடன் அங்குமட்டும் மொத்தமாக 26 ஆயிரத்து 771 பேரின் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதனைவிட, நியூ ஜெர்ஸியில் நேற்று 132 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் அங்கு 9 ஆயிரத்து 118 ஆக அதிகரித்துள்ளன.

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் நேற்று மட்டும 664 பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு உயிரிழப்புக்கள் மொத்தமாக 10 ஆயிரத்து 656ஆக அதிகரித்துள்ளன.

மேலும், அந்நாட்டில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 169பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வட அமெரிக்க நாடான கனடாவில் நேற்று மட்டும் 124 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 4 ஆயிரத்து 693ஆக அதிகரித்துள்ளன.

அத்துடன் கனடாவில் 10 இலட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மொத்தமாக 67 ஆயிரத்து 702 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மெக்ஸிகோவில் நேற்று மட்டும் 199பேர் மரணித்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக 3 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் இதுவரை மொத்தமாக 16 இலட்சத்து 5 ஆயிரத்து 838 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 765 ஆகப் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு அடுத்து, உயிரிழப்புக்கள் அதிகமாகப் பதிவாகியுள்ள பிரித்தானியாவில் நேற்று 346 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 31 ஆயிரத்து 587ஆக அதிகரித்துள்ளன.

பிரித்தானியாவில் நேற்று உயிரிழப்புக்கள் குறைந்துள்ள நிலையில் 2 இலட்சத்து 15 ஆயிரத்து 260 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று 194 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 30ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளன. அந்நாட்டில் உயிரிழப்புக்கள் மற்றும் வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வருகின்றது.

இதேவேளை, பிரான்ஸில் நேற்று மட்டும் 80 பேர் மரணித்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் குறைந்த உயிரிழப்பு பதிவாகியுள்ள நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 26 ஆயிரத்து 310பேர் மரணித்துள்ளனர்.

மேலும், அந்நாட்டில் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 658 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை 56  ஆயிரத்து 38 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், அதிக பாதிப்பை எதிர்கொண்ட மற்றொரு நாடான ஸ்பெயினில் 179 பேர் நேற்று மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 26 ஆயிரத்து 478ஆக பதிவாகியுள்ளன.

அத்துடன், அதிகம் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்ட இரண்டாவது நாடாகவுள்ள ஸ்பெயினில் 2 இலட்சத்து 62 ஆயிரத்து 783 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தற்போது தீவிரமாகப் பரவிவரும் நிலையில் நேற்றும் 10 ஆயிரத்து 817 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று 104 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ளன.

இதனைவிட ஆசிய நாடுகளில் நேற்று 350 பேர் மரணித்துள்ளதுடன் அதிகபட்சமாக இந்தியாவில் நேற்று 116 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக மரணங்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்காவில்-உயிரிழப்ப/

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில், மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் நேற்று மட்டும் ஆயிரத்து 422 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்தமாக அங்கு 80 ஆயிரத்து 37 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும், அமெரிக்காவில் 89 இலட்சத்து 18 ஆயிரத்து 263 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 இலட்சத்து 47 ஆயிரத்து 309 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் கோவிட் 19க்கு எதிராக போராடுக்கொண்டு இருக்கையில், அமெரிக்கா தடுப்பூசியில் மட்டுமே நம்பிக்கை வைத்து நகருகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் பத்து, இருபது, நூறு என்று இறப்புக்கள் அதிகரித்தபோது அதிர்ச்சியாகபட்டது.

ஒரு நாளைக்கு ஆயிரம் என்று பெருகியபோது இன்னும் அதிர்ச்சியாகபட்டது.

இப்போது எங்கள் மனம் இசைவாக்கம் அடைந்து தொடர்ச்சியாக தினமும் கொரோனா சாவுகள் தொடர்கின்றபோதும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வழமையான வாழ்க்கைக்கு இயல்புநிலையில் திரும்பும் வகையில் மனம் செயற்பட தொடங்கிவிட்டது.

மருத்துவர்களுடன் உரையாடியபோது எமது அசமந்தபோக்கு, கொரனாவுக்கு எதிரான எமது எச்சரிக்கை, எமது தற்காப்பு நடவடிக்கைகள் மெது மெதுவாக குறைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என்று கூறினார்கள். 

கொரனா கிருமி அப்படியே உள்ளது தனது விளையாட்டை காட்டிக்கொண்டு.

நாங்கள் எங்கள் மனதினுள் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக எச்சரிக்கை இல்லாமல் செயற்பட்டால் எமக்கும் நாளை வெண்டிலேட்டர் பூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எங்கள் மனதை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி நாங்கள் இக்கட்டான இந்த கொரனா ஆபத்தில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

உலக நாடுகள் கோவிட் 19க்கு எதிராக போராடுக்கொண்டு இருக்கையில், அமெரிக்கா தடுப்பூசியில் மட்டுமே நம்பிக்கை வைத்து நகருகின்றது. 

அமெரிக்க அதிபரின் வெற்றிக்கு இது பெரிதும் உதவலாம்.(கண்டுபிடித்தால்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆரம்பத்தில் பத்து, இருபது, நூறு என்று இறப்புக்கள் அதிகரித்தபோது அதிர்ச்சியாகபட்டது.

ஒரு நாளைக்கு ஆயிரம் என்று பெருகியபோது இன்னும் அதிர்ச்சியாகபட்டது.

இப்போது எங்கள் மனம் இசைவாக்கம் அடைந்து தொடர்ச்சியாக தினமும் கொரோனா சாவுகள் தொடர்கின்றபோதும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வழமையான வாழ்க்கைக்கு இயல்புநிலையில் திரும்பும் வகையில் மனம் செயற்பட தொடங்கிவிட்டது.

மருத்துவர்களுடன் உரையாடியபோது எமது அசமந்தபோக்கு, கொரனாவுக்கு எதிரான எமது எச்சரிக்கை, எமது தற்காப்பு நடவடிக்கைகள் மெது மெதுவாக குறைக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என்று கூறினார்கள். 

கொரனா கிருமி அப்படியே உள்ளது தனது விளையாட்டை காட்டிக்கொண்டு.

நாங்கள் எங்கள் மனதினுள் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக எச்சரிக்கை இல்லாமல் செயற்பட்டால் எமக்கும் நாளை வெண்டிலேட்டர் பூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எங்கள் மனதை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி நாங்கள் இக்கட்டான இந்த கொரனா ஆபத்தில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ளவேண்டும்.

எல்லாம் கொரோனா சாவுகள்தானா என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் கொரோனா சாவுகள்தானா என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த 4 மாத காலத்தில் வேறு(மாரடைப்பு)நோய்களால் யாருமே இறக்கவில்லைப் போல.

Link to comment
Share on other sites

21 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க அதிபரின் வெற்றிக்கு இது பெரிதும் உதவலாம்.(கண்டுபிடித்தால்).

தடுப்பூசி கார்த்திகைக்கு முன்னராக வரும் என்பது சந்தேகம். ஆனால், பலவேறு மருந்துகள் மூலம் ஓரளவிற்கு வெற்றிகரமாக குணமாக்க முடியலாம். 

ட்ரம்ப் மக்கள் செத்தாலும் ஆட்சி ஏற விரும்புகிறார். பொருளாதராத்தை திறந்து தனது வெற்றிக்கு பாதை தேடுகின்றார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரனாவின் பாதிப்புக்கள் ஒருபக்கம் போக மறுபக்கம் வழமையான சாவுகள் மாரடைப்பு, புற்றுநோய், தற்கொலை, விபத்துக்கள் என தொடர்கின்றன.

இப்போது ஒரு சமூகமாக கொரனாவுக்கு எதிராகவே முதல் சிரத்தை எடுக்கவேண்டி உள்ளது.

மற்றும்படி அவரவர் உடல் உபாதைகளின் பிரகாரம் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றவேண்டும்.

எனக்கு தெரிந்த ஒருவர் டபயட்டிஸ், சிறுநீரக பிரச்சனை என்பன காரணமாக டயலசிஸ் சிகிச்சை எடுக்கின்றார் கிழமைக்கு நான்கு தரம். அவருடன் கதைத்தபோது டயலஸிஸ் சிகிச்சை பெறுவதற்கு வைத்தியசாலை சென்றுவரும்போது தான்படும் சிரமங்களை விபரித்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.