Jump to content

பறை அது தமிழர் மறை


Recommended Posts

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எட்டு திக்கும்  எட்டும் 
இருள் ஓலம் வெல்லப் பாடும் 
பறை பழகப்பழக ஓதம் ஏறி 
சிறை தகரும் காலம் 

எட்டு திக்கும்  எட்டும் 
மழை காற்றில் வந்து சேரும்
தோல் அதிரஅதிர காதில் மோதும் 
தமிழ் விடுதலை கேளிர் 

கண்டம் தாண்ட வேண்டும் 
பறை போதும் எங்கள் தோழா 
கையால் போடும் தாளம் போதும் 
மெய்யாய் தோழன் ஆகும் 

எல்லை ஏதும் இல்லை 
இனம் சேரவேண்டும் தோழா 
இன்பம் கூடும் காலம் வெல்வோம் 
இந்தப் பேரிகை போதும்

நெஞ்சின் நீதி மூள்கும் தீயாய் 
வானம் தீண்டலாம் 
நெஞ்சின் நீதி வேகும் தீயாய் 
பூமி தாண்டலாம் 

ஆடி செல்வோம் ஒன்றாய் பாட்டில் சொல்வோம் நன்றாய் 
வாழ வேணும் வேணும் நெஞ்சின் அனலும் ஆறுமா 
ஈரம் வைத்தோம் நெஞ்சில் வீரம் தைத்தோம் இன்றே 
வாழ வேணும் வேணும் கண்ணில் கனவும் போதுமா 

ஒன்றாய் பாடி ஆடினால் 
கண்ணீர் மாறும்தான் 
கடலாய் ஆவோம் ஆயிரமாய் 
அலைகள் போல வா 

இறங்கி ஆடு மேடையிலே 
உரிமை அடையவே 
அதிகாரமேடை ஆடிடுமே ஒருமை ஒலிக்கும் 
நமக்கு உரிமை பறையில் இருக்கு வா வா 


கூடி நிற்போம் ஒன்றாய் தேடிச் செல்வோம் செவ்வாய் 
ஆள வேணும் வேணும் அடிமை தடைகள் தாண்டுவோம் 
சூது வெல்வோம் வென்றால் சூடிக்கொள்வோம் வென்றால் 
சோகம் போதும் போதும் உரிமை உலகம் வேண்டி வா 


மலையின் மேலே ஆதவனின் 
உதயம் பார்க்கலாம் 
மண்ணின் மேலே மானுடம்
மலர்ந்து பூக்கலாம் 

சுழன்று  ஆடு மேடையிலே 
சுமைகள் நொருங்கவே 
நமது மேடை ஆகிடுமே 
துருவம் நான்குமே 
நமக்கு உயிரே பறையில் இருக்கு வா வா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறைக்கு அமெரிக்கர்களின் ஆட்டம் - கொரோணாவைப்பற்றி அச்சமேயில்லையா???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்-ல் தெரிக்கவிட்ட தமிழ் ஆட்டம் - தப்பாட்டம் - தமிழ் பாரம்பரிய ஆட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பறை என்றால் சாவுக்கு கொட்டும் பறை என்று பொருள். பறை இசைக்கருவி மனிதனின் இறப்பின் போது மட்டும் ஒலிக்கப்படும் இசைக்கருவி அல்ல பறை மனிதனின் வாழ்வியலோடு பயணித்து பல வரலாறுகளை தன்வசம் கொண்டுள்ளது.இத்தனை தொன்மையான இசைக்கருவி இன்று மனிதனின் முட்டாள்த்தனமான சாதியால் ஒதுக்கப்பட்டும் , ஒடுக்கப்பட்டும் வருகிறது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நல்ல மாற்றம் வருகின்றது சின்ன பிள்ளைகளில் இருந்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பாட்டம் கலைக்குழு தஞ்சாவூர் மாவட்டம் ஆதனக்கோட்டை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறை ஆட்டம் | மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சவுண்ட் மணி அவர்கள் தன் சொந்த முயற்சியால் இசைக்கருவி செய்து இசை அமைத்தது

 

 

இசை என்பது ஒரு கலை அது எல்லோருக்கும் வராது...! அது கடவுள் கொடுத்த கொடை...! அதற்காக பரையர்கள் அனைவரும் இசை தொழில் மட்டுமே செய்தனர் என்பது ஒரு மடமை...! பரையர்கள் அனைத்து தொழில கலைகளிலும் சிறந்தவர்களாக இருந்து வருகின்றனர்...! பரை(றை)யர் என்பது இழி சொல் அல்ல..! பரை(றை)யர்களை இழிவு படுத்துவது தமிழ் இன அழிவே...! தமிழனா பிறந்த எவனும் தாழ்ந்தவன் அல்ல...! நல்ல பதிவு...! வாழ்த்துக்கள்...! வீ.ரா.ரெ.செ.செந்தில்குமார் சாத்தன் சிவ பரையர்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.