Jump to content

எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Indian-Chinese-troops-clash-near-Naku-La-in-Sikkim.jpg

எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்!

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

Indian-Chinese-troops-clash-near-Naku-La-in-Sikkim-2.jpg

இந்தச் சண்டையில் 150 பேர் ஈடுபட்டதாகவும் அதில் 4 இந்திய வீரர்களும் 7 சீன வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உடனடியாக இந்தியப் படைகளும், சீனப் படைகளும் அங்கு விரைந்து சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளின் இராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பினரும் அமைதியான முறையில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள சமரசம் செய்யப்பட்டது. இதனால் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன படையினர் வெளியேறினர்.

இதையடுத்து குறித்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/எல்லையில்-ஏற்பட்ட-பரபரப்/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பிள்ளைத்தனமாய் இருக்கு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி குண்டுகள் இல்லைபோல் அப்ப அக்கினி அது இது என்று மேலாலை விடுறதையும் கொஞ்சம் செக் பண்ணவேணும் 😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வுகானிலிருந்து ஒரு சிலரை முன்னணியில் நிறுத்துமாறு சீன அரசிடம் தாழ்மையுடன் இரந்து நிற்கிறேன். 🙂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

ச்...சா  அருமந்த இது ஒண்டு மிஸ்சாகிட்டுது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எப்படா மாட்டுபடும்..? என வேண்டுகிறீர்கள் போலிருக்கு..!  rire-2009.gif

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1996ம் ஆண்டு மீசாலையில் நான் த‌ங்கி இருந்த‌ போது விளையாடின‌ விளையாட்டை  இப்ப‌ இவ‌ங்க‌ள் விளையாடுறாங்க‌ /

நாங்க‌ விளையாடும் போது ஆமியும் பொலிஸ்சும் என்று ம‌ண்ணாங் க‌ட்டியால் எறிந்து விளையாடுவோம் 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

துப்பாக்கி குண்டுகள் இல்லைபோல் அப்ப அக்கினி அது இது என்று மேலாலை விடுறதையும் கொஞ்சம் செக் பண்ணவேணும் 😉

3 hours ago, உடையார் said:

Quotes About Military Jokes. QuotesGram

1 hour ago, பையன்26 said:

1996ம் ஆண்டு மீசாலையில் நான் த‌ங்கி இருந்த‌ போது விளையாடின‌ விளையாட்டை  இப்ப‌ இவ‌ங்க‌ள் விளையாடுறாங்க‌ /

நாங்க‌ விளையாடும் போது ஆமியும் பொலிஸ்சும் என்று ம‌ண்ணாங் க‌ட்டியால் எறிந்து விளையாடுவோம் 😁

Indian-Chinese-troops-clash-near-Naku-La-in-Sikkim.jpg

சண்டை தொடங்கினால்...  நிறைய கற்கள், தேவைப்படும் என்பதால்,
இருவரும்,  லொறி நிறைய.. கற்களை கொண்டு வந்து, குவித்து  வைத்திருக்கிறார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

எல்லோரும் எப்படா மாட்டுபடும்..? என வேண்டுகிறீர்கள் போலிருக்கு..!  rire-2009.gif

இல்லை முன்னனியில்  நிற்பது தென்மாநிலத்தவர்கள் கூடவே பஞ்சாபியர்களும் ஹிந்தி வாலாக்கள் பின்னுக்கு நின்று சதிராடுவினம் 1989களில்  நேரடியாக பார்த்தோம் . சண்டை ஒன்று வந்தால் டெல்லிக்கு நேரே அணுகுண்டு போடணும் என்றுதான் வேண்டுதல் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

எல்லோரும் எப்படா மாட்டுபடும்..? என வேண்டுகிறீர்கள் போலிருக்கு..!  rire-2009.gif

அந்த நாள்ள்ள்ள்ள்.... எங்களில் அனேகருக்கு பொன்னாள்ள்ள்ள்ள்....

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

4 hours ago, உடையார் said:

Quotes About Military Jokes. QuotesGram

சட்டி பானையில டொங் டொங் என்று தட்ட வேண்டியது மட்டும்தான் மிச்சம். 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.