ஈழப்பிரியன்

Sourdough புளிப்பான பாண்

Recommended Posts

                எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன்.
                5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது.
                முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்பிடப் போகிறார்கள் என்று கேட்டால் இது நாளை இரவுக்கு தான் பாணாக வரும் என்றார்கள்.
               இன்று ஞாயிறு காலை உணவை முடித்து தொடங்கியவர் குழைத்து வைத்ததை எடுத்து நேரம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் குழைத்து கடைசியில் நீண்டநேரம் வைத்து அவனில்போட தயாரானார்.நாங்கள் பாண் செய்வது போலவே போடப் போகிறார் என்று பார்த்தால் போடமுதல் கூரிய கத்தியால் ஆங்காங்கே கீறி விட்டு ஒரு சட்டியில் வைத்து இன்னொரு சட்டியால் மூடி 450 F இல் 20 நிமிடம் மூடி வைத்து 20 நிமிடம் திறந்துவிட்டு இறக்கினார்.
                 முன்னர் இப்படியான பாண் சாப்பிடாதபடியால் நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம்.
                 கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.இந்த வகையான பாண் இதுவே முதல் தடவையாக செய்ததாக சொன்னார்.இரவு எல்லோரும் சந்தோசமாக சாப்பிட்டோம்.
                  அவர் செய்ததென்று யாரும் செய்ய முற்படாதீர்கள்.ரொம்பவும் சிரமம் பிடித்த வேலை.இதுவரை இந்த புளிப்பான பாண் (Sourdough)சாப்பிடாதவர்கள் தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

DE290593-D0-A1-48-C3-9932-8-F622-E3-D6-B

இது கருகிப்போய் விட்டது என்று எண்ணாதீர்கள்.இது முதலில் செய்தது.

B6546-A81-38-C4-411-E-B9-C3-63-FC9-B4-CA

இது இரண்டாவதாக செய்தது.

செய்முறை தேவையானவர்களுக்காக.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

ஒரு மாதிரி.... சிறிசுகளையும் குசினிக்குள், இறக்கி விட்டாச்சு  போலை கிடக்கு. :grin:

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

ஈழபிரியன் நல்லா மினக்கிட்டிருக்கின்றார் உங்கள் மருமகன். இங்கு கடைகிளில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன், நல்ல சுவை

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

sourdough செய்முறைகளை பற்றி முன்பு பார்த்துள்ளேன், மிகவும் மினக்கட்ட வேலை.  இருந்தாலும் உங்கள் மருமகனுக்கு நிறைய பொறுமை உள்ளது 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Sauer Teig Brot

உந்த பாண் இஞ்சை ஜேர்மன் கடைகளிலையும் கிடக்கு......நான் சில நேரம் வாங்கி சாப்பிடறனான். எனக்கு பெரிசாய் பிடிக்காது.😁

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சமையலை ரசித்து நல்லதொரு உணவு செய்ய வேண்டுமென்றால் ஒரு வாரம் என்ன ஒரு மாதம்கூட காத்திருக்கலாம்.....இது சில நாட்களுக்கு வைத்திருந்தும் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்......!   👍

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இந்தப் பாண் நாம் உண்பதுதான்

இந்தப் பாண் கறியுடன் உண்பதிலும் சலாமி சீஸ் இவற்றுடனுண்ண சுவையாக இருக்கும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம்.
                 கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.

அங்கிள், இந்த sourdough breadஉடன் spinach dip செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் நன்றாக இருக்கும்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாதிரி.... சிறிசுகளையும் குசினிக்குள், இறக்கி விட்டாச்சு  போலை கிடக்கு. :grin:

சிறி நான் வருவதற்கு முதல் மகளும் மருமகனும் தான் சமையல்.இப்போ நான் நிற்கிறபடியால் ஒவ்வொரு நாளும் வாய்க்கு ருசியாக கிடைக்குது என்கிறார்கள்.

21 hours ago, உடையார் said:

ஈழபிரியன் நல்லா மினக்கிட்டிருக்கின்றார் உங்கள் மருமகன். இங்கு கடைகிளில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன், நல்ல சுவை

நிறைய நேரமும் மிகுந்த வேலைப்பாடும்.இருந்தாலும் நாமே செய்து சாப்பிடும் போது அதிலே தனிச் சுகம்.

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, நீர்வேலியான் said:

sourdough செய்முறைகளை பற்றி முன்பு பார்த்துள்ளேன், மிகவும் மினக்கட்ட வேலை.  இருந்தாலும் உங்கள் மருமகனுக்கு நிறைய பொறுமை உள்ளது 

அவர் செய்ததை பார்த்து நான் தான் பொறுமை இழந்துவிட்டேன்.

17 hours ago, suvy said:

சமையலை ரசித்து நல்லதொரு உணவு செய்ய வேண்டுமென்றால் ஒரு வாரம் என்ன ஒரு மாதம்கூட காத்திருக்கலாம்.....இது சில நாட்களுக்கு வைத்திருந்தும் சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்......!   👍

சுவி எனக்கு வடகம் செய்த ஞாபகம் தான் வந்தது.
எனக்கு இப்போதும் வடகமென்றால் பைத்தியம்.

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் பாண் நாம் உண்பதுதான்

இந்தப் பாண் கறியுடன் உண்பதிலும் சலாமி சீஸ் இவற்றுடனுண்ண சுவையாக இருக்கும்.

ஆமா ஆமா யுரியூப்காரி சொன்னா சரியா தான் இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அங்கிள், இந்த sourdough breadஉடன் spinach dip செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் நன்றாக இருக்கும்.

நீங்கள் சொன்னதற்காகவே செய்து சாப்பிட்டுப் பார்த்தேன்.நன்றாகத் தான் இருந்தது.நன்றி.

A293-FD71-27-A7-4013-AA07-F03-F8-CC12-E6

Share this post

Link to post
Share on other sites

பகிடி என்னவென்றால்

              இவர்கள் சாப்பாடு போட்டு வளர்த்த பற்றீரியா மீதமாக இருந்தது.இன்று விடிய இதுக்கு என்ன அலுவலைக் கொடுக்கலாம் என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தேன்.

               முதல்நாள் இது செய்யும் போதே நீங்கள் தோசைக்கு மா குழைத்து வைப்பது போலவே இதுகும் என்று சொல்லி சொல்லி செய்தார்கள்.
அந்த ஞாபகம் வரவே வெள்ளை அரிசிமா ஏற்கனவே இருந்தது.சரி அப்பம் செய்து பார்ப்போம் என்று இரண்டு கப் மாவுடன் இருந்த பற்றீரியா மாவையும் போட்டு குழைத்து வைத்தேன்.
               இப்போது பிற்பகல் எடுத்து தேங்காய் பாலும் விட்டு அடித்து பாலப்பம் செய்து பார்த்தேன்.
               எல்லோரும் புழுகி புழுகி சாப்பிட்டார்கள்.
22248834-B1-A7-488-D-B077-600-C265-CD701

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

இந்த spinach dip ஒரு முறை செய்து பாருங்கள், சில சமயம் உங்களுக்குப்பிடிக்கலாம்..

Sourdough bread/ cob loaf
250g spinach 
250g creamed cheese - softened 
300 ml tub sour cream 
40g packet French onion soup mix..
மிளகு, உப்பு சுவைக்கு ஏற்ப

பாணின் மேல் பகுதியை வட்டமாக( மூடியாக பாவிக்க ஏற்றவாறு) வெட்டி உள்ளே இருக்கும் பாணையும் எடுத்தால் ஒரு வட்டபாத்திரமாக வரும்.

வேறு ஒரு பாத்திரத்தில்  கீரை, cheese, sour cream, soup mix, உப்பு, மிளகு எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்தபின்பு..

வெட்டிய பாணிற்குள் இந்த spinach mixபோட்டு  180 சூட்டில் ஒரு 20 நிமிடம்  ovenற்குள் வைத்தால், மொறுமொறுப்பான பாணும் சுவையான spinach dipம் ரெடி..

சிலபேர், சிறிதாக வெட்டிய beacon துண்டுகள் கொஞ்சம் போடுவார்கள், அதுவும் ஒரு தனிசுவைதான்.

Edited by பிரபா சிதம்பரநாதன்
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On ‎11‎-‎05‎-‎2020 at 05:07, ஈழப்பிரியன் said:

                எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன்.
                5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது.
                முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்பிடப் போகிறார்கள் என்று கேட்டால் இது நாளை இரவுக்கு தான் பாணாக வரும் என்றார்கள்.
               இன்று ஞாயிறு காலை உணவை முடித்து தொடங்கியவர் குழைத்து வைத்ததை எடுத்து நேரம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் குழைத்து கடைசியில் நீண்டநேரம் வைத்து அவனில்போட தயாரானார்.நாங்கள் பாண் செய்வது போலவே போடப் போகிறார் என்று பார்த்தால் போடமுதல் கூரிய கத்தியால் ஆங்காங்கே கீறி விட்டு ஒரு சட்டியில் வைத்து இன்னொரு சட்டியால் மூடி 450 F இல் 20 நிமிடம் மூடி வைத்து 20 நிமிடம் திறந்துவிட்டு இறக்கினார்.
                 முன்னர் இப்படியான பாண் சாப்பிடாதபடியால் நானும் மிகவும் ஆவலாக இருந்தேன்.ஏற்கனவே செய்து வைத்த பருப்பு ,சம்பல் ,வாழைப்பழத்துடன் சாப்பிட்டோம்.
                 கொஞ்சம் புளிப்பாக இருந்தது.சாதாரண பாண்போலவும் இருந்தது.அதன் சுவையே தனி சுகமாக இருந்தது.எல்லாம் நல்லபடியாக வந்ததால் அவருக்கும் மிகவும் சந்தோசம்.இந்த வகையான பாண் இதுவே முதல் தடவையாக செய்ததாக சொன்னார்.இரவு எல்லோரும் சந்தோசமாக சாப்பிட்டோம்.
                  அவர் செய்ததென்று யாரும் செய்ய முற்படாதீர்கள்.ரொம்பவும் சிரமம் பிடித்த வேலை.இதுவரை இந்த புளிப்பான பாண் (Sourdough)சாப்பிடாதவர்கள் தயவு செய்து கடையில் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்.

DE290593-D0-A1-48-C3-9932-8-F622-E3-D6-B

இது கருகிப்போய் விட்டது என்று எண்ணாதீர்கள்.இது முதலில் செய்தது.

B6546-A81-38-C4-411-E-B9-C3-63-FC9-B4-CA

இது இரண்டாவதாக செய்தது.

செய்முறை தேவையானவர்களுக்காக.

நான் இந்த பானை சாப்பிட்டதேயில்லை ...ஒருக்கால் வேண்டி சாப்பிட்டு பார்க்கோணும் 

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த spinach dip ஒரு முறை செய்து பாருங்கள், சில சமயம் உங்களுக்குப்பிடிக்கலாம்..

Sourdough bread/ cob loaf
250g spinach 
250g creamed cheese - softened 
300 ml tub sour cream 
40g packet French onion soup mix..
மிளகு, உப்பு சுவைக்கு ஏற்ப

பாணின் மேல் பகுதியை வட்டமாக( மூடியாக பாவிக்க ஏற்றவாறு) வெட்டி உள்ளே இருக்கும் பாணையும் எடுத்தால் ஒரு வட்டபாத்திரமாக வரும்.

வேறு ஒரு பாத்திரத்தில்  கீரை, cheese, sour cream, soup mix, உப்பு, மிளகு எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்தபின்பு..

வெட்டிய பாணிற்குள் இந்த spinach mixபோட்டு  180 சூட்டில் ஒரு 20 நிமிடம்  ovenற்குள் வைத்தால், மொறுமொறுப்பான பாணும் சுவையான spinach dipம் ரெடி..

சிலபேர், சிறிதாக வெட்டிய beacon துண்டுகள் கொஞ்சம் போடுவார்கள், அதுவும் ஒரு தனிசுவைதான்.

தூயா என்று ஒரு பெண் அவுசில் இருந்து முந்தி வந்தவ . அவவே நீங்கள் ?
 
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

நான் இந்த பானை சாப்பிட்டதேயில்லை ...ஒருக்கால் வேண்டி சாப்பிட்டு பார்க்கோணும் 

தூயா என்று ஒரு பெண் அவுசில் இருந்து முந்தி வந்தவ . அவவே நீங்கள் ?
 
வாங்கி சாப்பிட்டுப் பாருங்க.மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

தூயாவாக இருந்தால் சமையல்கட்டில தான் கூடுதலாக மினக்கெட்டிருப்பா.

Share this post

Link to post
Share on other sites
On 12/5/2020 at 04:43, ஈழப்பிரியன் said:

பகிடி என்னவென்றால்

              இவர்கள் சாப்பாடு போட்டு வளர்த்த பற்றீரியா மீதமாக இருந்தது.இன்று விடிய இதுக்கு என்ன அலுவலைக் கொடுக்கலாம் என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தேன்.

               முதல்நாள் இது செய்யும் போதே நீங்கள் தோசைக்கு மா குழைத்து வைப்பது போலவே இதுகும் என்று சொல்லி சொல்லி செய்தார்கள்.
அந்த ஞாபகம் வரவே வெள்ளை அரிசிமா ஏற்கனவே இருந்தது.சரி அப்பம் செய்து பார்ப்போம் என்று இரண்டு கப் மாவுடன் இருந்த பற்றீரியா மாவையும் போட்டு குழைத்து வைத்தேன்.
               இப்போது பிற்பகல் எடுத்து தேங்காய் பாலும் விட்டு அடித்து பாலப்பம் செய்து பார்த்தேன்.
               எல்லோரும் புழுகி புழுகி சாப்பிட்டார்கள்.
22248834-B1-A7-488-D-B077-600-C265-CD701

ஈழப்பிரியன்... அப்பம் நன்றாக வந்துள்ளது.
அத்துடன்... அதற்கு, நீங்கள் அதிகம் மினக்கெடவும் இல்லை.

உதாரணத்துக்கு.... நாங்கள்  திடீர் அப்பம் செய்வதென்றால், வெள்ளை அரிசி மாவுக்குள்.
பேக்கிங் பவுடர், அல்லது  ஈஸ்ட் போட்டு செய்தால்...அப்பம் வருமா?  

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... அப்பம் நன்றாக வந்துள்ளது.
அத்துடன்... அதற்கு, நீங்கள் அதிகம் மினக்கெடவும் இல்லை.

உதாரணத்துக்கு.... நாங்கள்  திடீர் அப்பம் செய்வதென்றால், வெள்ளை அரிசி மாவுக்குள்.
பேக்கிங் பவுடர், அல்லது  ஈஸ்ட் போட்டு செய்தால்...அப்பம் வருமா?  

தமிழ்சிறி உங்கள் சமையல் விசாரிப்புகளைப் பார்த்தா எப்போதும் சிரிப்பு தான் வரும்.ஏனென்றால் விசாரிக்கிற மாதிரியைப் பார்த்தா யாரும் புது ஆக்கள் ஓ இந்த மனுசன் இப்ப செய்து சாப்பிட்டுட்த் தான் படுக்கும் போல என்று நினைப்பார்கள்.

இருந்தாலும் உங்கள் ஆசைக்காக தோசை மாவு மாதிரி தான் அப்பமும் கொஞ்சம் புளிக்க வேண்டும்.

மா புளித்தால் அப்பத்துக்கு நல்லது என்று பழமொழியே இருக்கு.
அதுசரி பாஞச் வேண்டில் வாங்கிய அப்ப ரெசிப்பி என்னாச்சு தம்பி?

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On 13/5/2020 at 05:24, ரதி said:

தூயா என்று ஒரு பெண் அவுசில் இருந்து முந்தி வந்தவ . அவவே நீங்கள் ?

இல்லை ரதி.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.