Sign in to follow this  
கிருபன்

இலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்)

Recommended Posts

இலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்)

இன்று முதல் ஆரம்பமாகவுள்ள மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைகளை ஆரம்பித்தல், போக்குவரத்து சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முறை தொடர்பான பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:

கொவிட் 19 வைரசு தொற்றை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்

நாடு முழுவதிலும் கொவிட் 19 வைரசு பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் சூழ்நிலைக்கு அமைவான வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை 2020.05.11 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.

• மேல் மாகாண  மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்

1. தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைத்து அரச நிறுவனம் அல்லது அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் ஊழியர்களின் சேவை அடையாள அட்டையை அல்லது நிறுவனத்தின் கடிதமொன்றை அல்லது அந்த கடிதத்தின் இலத்திரனியல் பிரதியொன்றை அவசரகால அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்த முடியும் இதில் மாவட்ட எல்லையைக் கடந்து கடமைக்கான இடத்திற்கு வருதல் அல்லது வெளியே செல்லும் ஊழியர்களுக்காக வைத்திய அதிகாரியின் MHO  சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியமல்ல

அரச நிறுவனத்திற்கு தனிப்பட்ட வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் அர ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கு முன்னர் அலுவலக இடத்திற்கு சமூகமளித்து, கடமையை பூர்த்தி செய்து மணித்தியாளம் 15.00 இற்கும் 16.00 மணித்தியாலத்திற்குமான காலப்பகுதியில் வெளியேறுவது அவசியமாகும். அவ்வாறு இருத்த போதிலும் அரசாங்கத்தின் தொழிற்சாலைக்காகவும் சேவை அடிப்படை ரீதியில் முன்னெடுக்கப்படும் அரச நிறுவனத்திற்கு கால நேரம் பொருந்தாது.

தனியார் நிறுவனம் ஃ அலுவலகங்களில் தொழிலுக்காக தனியார் வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கும் மணித்தியாளம் 10.00 இற்கும் இடையிலான காலப்பகுதியில் தமது சேவை இடத்திற்கு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடமையை நிறைவு செய்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் வாகனம் மணித்தியாலம் 16.00 இற்கும் மணித்தியாளம் 17.00 இடையிலான காலப்பகுதியில் புறப்பட வேண்டும்.

2. பொதுப் போக்குவரத்து சேவை (ரயில் மற்றும் பஸ்)
பயணிகளின் போக்குவரத்தில் சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றி சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர், சாரதிகள் நடத்துனர்கள் செயல்பட வேண்டும்.

3. அத்தியாவசிய பொதுமக்கள் சேவையை வழங்கும் பொழுது மற்றும் உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும் பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.

4. மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது தாம் பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும்.

5. பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00 இற்கு இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு வெளியே தனியான நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்;ற தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும். இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0 சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு ஃ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.

6. சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில் காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.

7. தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம் (னுநடiஎநசல ளநசஎiஉந) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.

8. சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.

9. முச்சக்கர வண்டிகளில் ஆகக் கூடியவகையில் பயணிக்க முடிகின்றமை சாரதியைத் தவிர இருவர் மாத்திரமே ஆகும். இதே போன்று வாடகைக்கார் (ஊபர் , பிக்மீ ) வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன் இதில் பயணிப்பதற்கு சாரதியைத் தவிர ஆகக் கூடிய வகையில் 3 பேருக்கு மாத்திரமே ஆகும். இதன் போது சுகாதார பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக ஊழியர்களை அழைத்து வரும் பஸ் உள்ளிட்ட ஏனைய வாகனங்களில், ஊழியர்களை அழைத்து வரும் பொழுது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்ப விதிமுறைகளை (அதாவது முகக்கவசம் அணிதல், கிருமிஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் , உடல் வெப்பம் பரிசோதனை செய்தல் ) உரிய முறையில் கடைபிடித்து வாகனத்தின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

10. சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறந்து முன்னெடுக்க முடிவதுடன் இதில் அடிப்படையாக இந்த நிலையங்களினால் அவ்வாறு முன்னெடுப்பதற்காக பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழை பெற்றக் கொள்ள வேண்டும். மேலும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக செயல்படுவது சம்பந்தப்பட்ட நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.

11. தனியார் வைத்திய மத்திய நிலையங்களை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் நிறுவனத்தினால் அவ்வாறு முன்னெடுப்பதற்கு பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறிக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது நிறுவனங்களின் உரிமையானர்களினதும் ஊழியர்களினதும் பொறுப்பாகும்.

12. சுற்றுலா ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இருப்பினம் இந்த ஹோட்டல்களில் ரெஸ்டுரண்டுகளை திறத்தல் மீள அறிவிக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திறக்கப்படும் அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை அமைச்சினால் 2020.04.17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள COVID 19 இற்கான பதிலளித்தல் தொடர்பான செயற்பாட்டு வழிகாட்டிதொகுப்பு மற்றும் அதற்கமைவாக அடிக்கடி வெளியடப்படும் அறிவுறுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது அத்தியாவசியமாகும்.

13. பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளடங்கலாக கொழும்பு மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட மொத்த வர்த்தகத்திற்கான சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களை முன்னெடுப்பதற்கு தொற்று நீக்கு விதிகளுக்கு அமைவாகவும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதற்கு அமைவாகவும் செயல்படுவதற்கு அனுமதி கிடைக்கின்றது.

14. அனைத்து நிர்மாணப்பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதுடன் நிர்மாண தொழிற்துறைக்கான பொருட்களை (கல்,மணல்,ஓடு, செங்கல் முதலானவை) ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கிடைக்கின்றது. இருப்பினும் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் வேலைத்தளத்திற்கு அவசியம் தேவையான ஊழியர்கள் சிலறை மாத்திரம் அழைப்பது சம்பந்தப்பட்ட முகாமையாளரின் பொறுப்பாவதுடன் அழைக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியாக கடிதங்களை வழங்குவது அவசியமாகும்.

15. கீழ்கண்ட நிறுவனம் ஃ இடங்கள் மீள அறிவிக்கும் வரையில் திறப்பதற்கும் ,திறந்து முன்னெடுப்பதற்கும் அனுமதியில்லை

a. வாராந்த சந்தை, நாளாந்த சந்தை முதலான கூட்டு ரீதியில் வர்த்தகம் இடம்பெறும் இடங்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கூடும் கூட்டு வர்த்தக சந்தை (மஹாரகம, பமுனுவ போன்றவை)

b. உடற்பயிற்சி மத்திய நிலையங்கள்

c. Spa நிலையங்கள்

d . கிளப்

e . சூதாட்ட நிலையங்கள் (புக்கி)

 

http://www.samakalam.com/செய்திகள்/இயல்பு-வாழ்வுக்கு-திரும்/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது. இந்நிலையில் தற்போது நன்னீர் மீன் பிடியானது கோட்டைக்கல்லாறு ஆறு, கல்லாறு ஆறு, மட்டக்களப்பு ஆறு, கொக்கட்டிச்சோலை ஆறு, வாழைச்சேனை ஆறு உட்பட்ட பல ஆறுகள் மற்றும் பல குளங்கள் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகின்றது. இதில் கோல்டன் மீன், செப்பலி, கணையான், கொய் கொடுவா, கெண்டை விரால், சுங்கான் விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன், இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு வீச்சு வலை மற்றும் மீன் கூடுகள் மூலம் தற்போது மீன்கள் பிடிபடுவது குறைவாகவே காணப்படுகின்றது. பல மணிநேரங்கள் சென்ற பின்னரே மீன்கள் பிடிபடுவதுடன், அதுவும் குறைவாகவே பிடிபடுகின்றது. (150) https://newuthayan.com/நன்னீர்-மீன்களின்-விலை-அ/  
    • ள்யாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (27) இரவு 9 மணியளவில் நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த 4 பேர் கொண்ட குழுவினராலேயே மேற்படிச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் இனால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/மரக்காலைக்கு-தீ-வைபபு/
    • இந்திய உளவு விமானம்; பாக்., சுட்டு வீழ்த்தியது? இஸ்லாமாபாத்: இந்திய ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில், சீனா படைகளை குவித்து வருவதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், பாபர் இப்திகர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, ராக்சிக்ரி பகுதியில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான, சிறிய ரக, ஆளில்லா உளவு விமானம், பாக்., பகுதிக்குள் 650 மீட்டர் துாரத்துக்கு ஊடுருவியது. அதை, பாக்., படையினர் சுட்டு வீழ்த்தியது, என கூறியுள்ளார்.   இந்நிலையில், அந்நாட்டு ராணுவம் சார்பில் கூறப்பட்டதாவது: அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கிடையில் நிறுவப்பட்ட விதிமுறைகளையும், தற்போதுள்ள விமான ஒப்பந்தங்களையும் மீறி, இந்திய ராணுவம் இத்தகைய தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. 2003ம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய ராணுவம் செயல்பட்டுள்ளது. இவ்வாறு கூறியது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாக்., பிரதமர் இம்ரான் கான் பதிவிட்ட டுவிட்டில், 'பா.ஜ., கட்சியை சேர்ந்த இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியா மேற்கொள்ளும் விரிவாக்க கொள்கை, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது' என பதிவிட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2547718
    • ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள் ஊட்டி:கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் தற்போது ஊட்டி காந்தள் பகுதியில் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.     ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதிவழியாக வந்து ஊட்டியில் காணப்பட்டதால் அதை பாட்டிலில் அடைத்து அதை காட்டிய ஒருவர் அது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.   ஆப்ரிக்க நாடுகளான, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வந்த இந்த வெட்டுக்கிளியின் பெயர்' ஹீலிபேரா 'என அழைக்கப்படுகின்றன. அங்கிருந்து புறப்பட்டு வந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி., என படையெடுத்து விவசாயிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கேரளாவின் வயநாட்டிலும் தமிழ்நாட்டின் ஊட்டி காந்தள் பகுதியில் காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கி.மீட்டருக்கு 8 கோடி வரை படையெடுக்கும் தன்மை கொண்டதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2547304  
    • டிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டிரம்ப், வடிகட்டிய முட்டாள்,'' என, முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள, ஜோ பிடன், கடுமையாக தாக்கியுள்ளார்.     நேற்று முன்தினம், அமெரிக்காவில், போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜோ பிடன், தன் மனைவியுடன், போர் வீரர்களின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கறுப்பு கண்ணாடியும், கறுப்பு முக கவசமும் அணிந்திருந்தார். அந்த தோற்றம், அவரை சுலபமாக அடையாளம் காண முடியாதபடி இருந்தது. இந்தப் படத்தை 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பத்திரிகை நிருபர், 'இந்த படத்தைப் பார்த்த பின், பொது இடத்தில், டிரம்ப் ஏன் முக கவசம் அணிய மறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்' என கிண்டல் செய்ததை, டிரம்ப், 'டுவிட்டரில்' தன்னை பின்தொடரும், எட்டு கோடி பேருக்கு, 'ரீ டுவிட்' செய்தார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, '' ஜோ பிடன் முக கவசம் அணியலாம். ஆனால், அவர் வெளியிடத்தில், நல்லதொரு சூழலில், இதமான தட்பவெப்பத்தில், தன் மனைவியின் அருகில் இருக்கும் போது, முக கவசம் அணிந்தது, எனக்கு அசாதாரணமாக தெரிந்தது,'' என, டிரம்ப் தெரிவித்தார்.   இதற்கு, 'சி.என்.என்., டிவி'யில், ஜோ பிடன் பதில் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:உலகம் முழுதும், கொரோனா பரவலை தடுக்க, பலரும் முக கவசம் அணிகின்றனர். ஆனால் டிரம்ப், முக கவசம் அணிய மறுக்கிறார். மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அவர், கொரோனாவை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்காமல், தன் முனைப்புடன் நடந்து கொண்டதால், கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவர் ஒரு முட்டாள்; வடிகட்டிய முட்டாள்.இவ்வாறு, அவர் கூறினார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2547719