• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பெருமாள்

சுமந்திரனின் பதவியை உடன் பறிமுதல் செய்யுங்கள்! சம்பந்தனுக்கு அவசர கடிதம்

Recommended Posts

விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கடிதத்தில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுட்ச தியாகங்களை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.

இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதே போன்று கருத்து கூறியிருக்கின்றார்.

இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.

நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்.

அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும்.

இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/245767?ref=home-imp-parsely

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, பெருமாள் said:

விடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு களவாணி அரசியல்வாதியைப் பற்றி இன்னொரு களவாணி அரசியல்வாதிக்கு எழுதி ஒரு பிரயோசனமும் இல்லை.

நேர்மையாக நடக்கும் சார்ஸ்க்கு தமிழரசுக் கட்சிக்குள்ள ஆப்பு இறுக்கப்படும்.

Share this post

Link to post
Share on other sites

சுமந்திரனின் கூற்றால் கொதித்தெழுந்த இளஞ்செழியன்

விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீட்டர் இளஞ்செழியன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

பீட்டர் இளஞ்செழியனின் சகோதரர் ஒருவர் 2009 இறுதி யுத்தத்தின்போது ஆனந்தபுரம் பகுதியில் வீரச்சாவடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை வருமாறு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை மறுதலிக்க சுமந்திரனுக்கு உரித்தில்லை.

வடக்கு கிழக்கு உட்பட தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதம் ஏந்தி போரடியது.

தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்ட ஆயுத போராட்டம் அல்ல அந்த போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பெளத்த, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மேற் கொண்ட ஆயுத போராட்டம். இதை மறுதலிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு உரித்து இல்லை.

பெளத்த, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையை கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதில் இருந்து, அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு , வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு, தெற்கில் விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி கிடைத்த அதிஸ்டத்தால் வாழ்ந்தவருக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்?

சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காய் போராடிய போராளிகள் , போராடி தமது உயிர்களை காவியமாக்கிய மாவீரர்களையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே நானும் எம் மக்களும் கருதுகின்றோம்.

உலக நாடுகள் பல தமிழ் மக்களின் இன விடுதலை போராட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்திலே, யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, மாவீரர்களுக்கும், போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் துதி பாடி விட்டு, கொழும்பில் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி சிங்கள மக்களை திருப்திப்படுத்தி மகிந்த அரசிடம் மீண்டும் அதிஷ்டங்களை பெற முயற்சிப்பதாகவே நான் கருதுகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறிய கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கருத்தாகவோ கருதக்கூடாது என்றும், அவருடைய கருத்து தொடர்பாக கட்சி மிகவிரைவில் உரிய முடிவு எடுக்கும் என நம்புகின்றேன்.

அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சுமந்திரன் மீது அதிருப்தி அடைந்துள்ளதுடன் தொடர்ந்தும் சுமந்திரனுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142978?ref=ibctamil-recommendation

Share this post

Link to post
Share on other sites

சுமந்திரன் வெளியேற்றப்படவேண்டும்: புலம்பெயர் தமிழ் உணர்வாளர்கள் போர்க்கொடி!!

த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்தானது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது, தமது உறவுகளின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த பல ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும்படியாக இருப்பதாகத் தெரிவிக்கும், புலம்பெயர் தமிழ் மக்கள், சுமந்திரனை த.தே.கூட்டமைப்பை விட்டு வெளியேற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

https://www.ibctamil.com/diaspora/80/142974?ref=rightsidebar

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ragaa said:

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Rajesh said:

நேர்மையாக நடக்கும் சார்ஸ்க்கு தமிழரசுக் கட்சிக்குள்ள ஆப்பு இறுக்கப்படும்.

உள்ளவர்களினுள் சிறந்தவராக வளர்ந்துவரும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருக்க வேண்டிய இடம் தமிழரசுக் கட்சியில்லை. 

Share this post

Link to post
Share on other sites

சுமந்திரன், ஒவ்வொரு மாதமும்...  கண்டபடி  உளறி...
ஆட்களிட்டை.... வசமாக வாங்கிக் கட்டுறதையே... ஒரு வேலையாக வைத்திருக்கிறார்.   :grin:

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
18 hours ago, ragaa said:

சார்ள்ஸ் இன்டைக்கு வங்காலயானிட்ட  முன்றயா வாங்கப்போரார். ஒரு தியாக தீபத்தைப்பற்றி  தரம் குறைவா கதைச்சிருக்க கூடாது. அப்படித்தான் என்ன குற்றம் செய்தவர், வாங்கின காசுக்கு மேலால கொஞ்சம் கதைச்சவர். சின்ன வாசல் இருந்து கேக்கிறநுக்கு மேலால செய்வாராம். 

ஹாஹா அவர் நினைச்சிருப்பார் இங்கு சுமந்திரனுக்கு மட்டும் தான் வசை பாடுகிறார்கள் என்று இங்க கூத்தமைப்புகே வசைபாடுகிறார்கள் என்று போக போக புரியும் .

Edited by தனிக்காட்டு ராஜா

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன், ஒவ்வொரு மாதமும்...  கண்டபடி  உளறி...
ஆட்களிட்டை.... வசமாக வாங்கிக் கட்டுறதையே... ஒரு வேலையாக வைத்திருக்கிறார்.   :grin:

அது நம்முடைய புத்தி சாலித்தனம் .

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, Vankalayan said:

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

மீன் வியாபாரி என்டால் என்ன பிரச்சனை? நாக்கை தொங்க போட்டுக் கொண்டு மீன் வாங்க அங்க தானே போறியள்...

ஏன் அடைக்கலநாதன் மீன் பிடிக்க போக வேண்டும் ???

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, MEERA said:

மீன் வியாபாரி என்டால் என்ன பிரச்சனை? நாக்கை தொங்க போட்டுக் கொண்டு மீன் வாங்க அங்க தானே போறியள்...

ஏன் அடைக்கலநாதன் மீன் பிடிக்க போக வேண்டும் ???

நான் பிழையாக சொல்லவில்லையே। அவர் மீன் வியாபாரி என்றுதானே எழுதினேன்? நீங்கள் எதோ பிழையாக விளங்கிவிடடீர்கள் போல தெரிகிறது। மீன் வியாபாரியிடம்தான் மீன் வாங்குவோம் என்று எல்லோருக்கும் தெரியும்।

அடைக்கலம் அவர்களின் பரம்பரை தொழில் மீன் பிடிப்பது। அதுதான் அப்படி எழுதினேன்। நீங்கள் நினைப்பதுபோல மீன் பிடிப்பதோ , மீன் வியாபாரம் செய்வதோ ஒன்றும் இழிவான தொழில் இல்லை। 

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா அவர் நினைச்சிருப்பார் இங்கு சுமந்திரனுக்கு மட்டும் தான் வசை பாடுகிறார்கள் என்று இங்க கூத்தமைப்புகே வசைபாடுகிறார்கள் என்று போக போக புரியும் .

நான் அப்படி நினைக்கவில்லை। நீங்கள் நினைத்திருக்கலாம்। 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
7 hours ago, Vankalayan said:

நான் பிழையாக சொல்லவில்லையே। அவர் மீன் வியாபாரி என்றுதானே எழுதினேன்? நீங்கள் எதோ பிழையாக விளங்கிவிடடீர்கள் போல தெரிகிறது। மீன் வியாபாரியிடம்தான் மீன் வாங்குவோம் என்று எல்லோருக்கும் தெரியும்।

அடைக்கலம் அவர்களின் பரம்பரை தொழில் மீன் பிடிப்பது। அதுதான் அப்படி எழுதினேன்। நீங்கள் நினைப்பதுபோல மீன் பிடிப்பதோ , மீன் வியாபாரம் செய்வதோ ஒன்றும் இழிவான தொழில் இல்லை। 

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

Edited by MEERA
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, MEERA said:

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

சாதீய வெறி எங்கு இருக்குதென்பது முழு உலகுக்கும் தெரியும்। தமிழர் பிரச்சினையை தீர்க்கும் முதல் அதை தீர்க்க வேண்டும்। 

Share this post

Link to post
Share on other sites
On 12/5/2020 at 05:27, சுமத்திரன் said:

அது நம்முடைய புத்தி சாலித்தனம் .

உங்கள் புத்திசலித்தனத்தை கொஞ்சம் முதிர்ச்சியுடன் வெளிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம். 🙏

மிகப் பெரும்பான்மையான உங்கள் கருத்துக்கள் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களைக் காயப்படுத்துகின்றன. ☹️

Share this post

Link to post
Share on other sites
On 11/5/2020 at 22:00, Vankalayan said:

இந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் என்பவர் ஒரு மீன் வியாபாரி। மற்றவர் அடைக்கலம் துவக்கு தூக்கி இருக்கவிடடாள் மீன் பிடிக்கத்தான் சென்றிருப்பார்।

இருந்தாலும் நிர்மலனின் கருத்து பிழையானது இல்லை। சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

ஒருவரது தொழிலை இங்கே நினைவுபடுத்துவதற்கான காரணம் என்ன ? ☹️

சாதீயம் என்பது தொழிற்பகுப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே ☹️

(சிலவேளைகளில் மிக இலகுவாக நிதானத்தைத் தவற விடுவதாகத் தோன்றுகிறது ☹️ (என்னைப் போலவே 😀))

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, Kapithan said:

ஒருவரது தொழிலை இங்கே நினைவுபடுத்துவதற்கான காரணம் என்ன ? ☹️

சாதீயம் என்பது தொழிற்பகுப்பின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே ☹️

(சிலவேளைகளில் மிக இலகுவாக நிதானத்தைத் தவற விடுவதாகத் தோன்றுகிறது ☹️ (என்னைப் போலவே 😀))

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது। அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்? இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, Vankalayan said:

உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுகிறீர்கள்...

தமிழர்கள் மட்டும் சட்டம் தெரிந்தவர்களை அனுப்ப வேண்டும்.. சிங்களவர்களும் சோனகர்களும் முட்டாள்களை அனுப்ப வேண்டும்... 

சீறீலங்கா சனாதிபதிக்கே சட்டம் தெரியாது 😜

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, MEERA said:

உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுகிறீர்கள்...

தமிழர்கள் மட்டும் சட்டம் தெரிந்தவர்களை அனுப்ப வேண்டும்.. சிங்களவர்களும் சோனகர்களும் முட்டாள்களை அனுப்ப வேண்டும்... 

சீறீலங்கா சனாதிபதிக்கே சட்டம் தெரியாது 😜

ஜனாதிபதி என்பது நிறைவேற்று அதிகாரத்தை சட்ட்திட்கு உட்பட்டு நிறைவேற்றுபவர்। அவருக்கு சடடம் இயற்றவேண்டிய அவசியம் இல்லை।

பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் சட்டத்தை உருவாக்குபவர்கள்। எனவே அந்த சட்டவாக்க சபையில் ஓரளவுக்காவது சடடதை, குறைந்தது சில கல்வி தகமைகளாவது இருக்க வேண்டும்। விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன்। 😂

ஏன் மற்றைய சமூகத்தை இதுக்குள் இழுக்கிறீர்கள்। முதலில் எங்களை திருத்தி கொள்ளுவோம்। 😷

Share this post

Link to post
Share on other sites
On 11/5/2020 at 22:00, Vankalayan said:

சுமந்திரன் கட்சியின் பேச்சாளர் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும்போது கட்சியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்। அதுதான் கட்சியின் கொள்கை என்றால் சுமந்திரன் கூறியதில் பிரச்சினை இல்லை। எனவே கட்சி கூடி ஒரு முடிவை எடுத்தால் நல்லது। 

சுமந்திரன் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்றால் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.

காரணம், தலைவர் உட்பட பலரும் பல அவரின் பதில்கள் அவரின் "தனிப்பட்ட" கருத்துக்கள் என கூறியுள்ளனர். 

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, ampanai said:

சுமந்திரன் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்றால் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்.

காரணம், தலைவர் உட்பட பலரும் பல அவரின் பதில்கள் அவரின் "தனிப்பட்ட" கருத்துக்கள் என கூறியுள்ளனர். 

இப்போது அவரது கருத்தை நியாயப்படுத்தி  உள்ளனர்.

Share this post

Link to post
Share on other sites
On 14/5/2020 at 21:55, Vankalayan said:

அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது।

1) அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்?

2) இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை।

3) எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்। 

1) விவசாயம் என்கின்ற போது அதற்குள் காடு,  கடல், பயிர்ச் செய்கை (?) மூன்றும் அடங்கும்.

பயிர்ச் செய்கையில் அனேகமாக எல்லா சாதிப் பிரிவினரும் ஈடுபடுகின்றனர். ஆனால் மீன்பிடியில் (கடல்) நீரை அண்மித்து வாழும் சில குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மிகப் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். 🙂

2) மிகவும் நல்ல விடயம். வரவேற்கிறேன். 👍

3) உங்கள் ஆதங்கம் சரியானது. ஆனால் இவர்களை அனுப்புவதில் தீர்மானம் எடுப்பது கட்சித் தலைமைகளே. அவர்களை மக்கள் வழி மொளிகின்றனர். மாற்றம் தொடங்கவேண்டியது இரு பகுதியினரிடமிருந்தும்தான். ☹️

Share this post

Link to post
Share on other sites
On 13/5/2020 at 14:06, MEERA said:

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

நான் எழுதி அழித்துவிட்டேன் அந்த பதிவை நீங்கள் எழுதி இருக்குறீர்கள்  உன்மையான முகங்கள் சிலநேரம் வெளிப்படுகிறது மண்டைய மறைக்கலாம் கொண்டையை மறைக்க இயலாது 😉

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 13/5/2020 at 14:06, MEERA said:

இங்கு நான் ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை... நீங்கள் தான் பரம்பரை தொழில் என்று சாதீய அடிப்படையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவு படுத்தி உங்கள் சாதீய வெறியை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

அது எப்படி அடைக்கலநாதன் அந்த சமூகத்தில் பிறந்ததால் மீன்பிடிக்கத் தான் செல்ல வேண்டுமா,,,,,?

சுமந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் உங்கள் சாதீய வெறி வெளிப்பட்டுவிட்டது.

முழு உலகுக்கும் தெரியும் எங்கு சாதிய வெறி இருக்கிறதென்று. ஈழம் கிடைக்குமுதல் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். மீனவன் மீனவன்தான். விவசாயி விவசாயிதான். 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this