Jump to content

பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கத்தரிக்காய் நிவாரணம்


Recommended Posts

சகா

பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் வேண்டுகோளின்பேரில் மீண்டும் அம்பாறைமாவட்டத்தில் கத்தரிக்காய் இரட்டை நிவாரணச் செயற்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று பொத்துவில் பிரதேசத்துக்குச்சென்று ஊறணி விவசாயக்கிராமத்தில் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் கொள்வனவு செய்யப்பட்டது.

கிலோகிராம் 30 ரூபாய் வீதம் 1,500 கிலோகிராம் கத்தரிக்காய்களும் கிலோகிராம் 100 ரூபாய் வீதம் 200 கிலோகிராம் மிளகாய்களும் கொள்வனவு செய்யப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிப் பிரதேசசெயலாளர் க.சதீஸ்கரன் ஆகியோர் நேரடியாக வந்து இச்செயற்பாட்டில் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். இவர்கள் கூடவே நின்று கத்தரிக்காய் ஆய்வதிலும் ஈடுபட்டனர். பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றிய இணைப்பாளர் சோ.வினோஜ்குமார் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சமூகசெயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா வி.மோகன் சோ.தினேஸ்குமார் உள்ளிட்டோர் இவ்விரட்டை நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

இவ்விரட்டை நிவாரணச் செயற்பாடு கடந்த மாதத்தில் 4 தடவைகள்  தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அது பொது மக்கள் மத்தியிலும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.

பாடுபட்டு கஷ்ட்டப்பட்டு பயிர்செய்த உள்ளூர் விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்திப் பொருள்களை கொள்வனவு செய்வதன் மூலம்  நிவாரணம் வழங்கும் அதேவேளை ஊரடங்கு காரணமாக முடங்கிக்கிடக்கும் ஏழைமக்களுக்கு இலவச நிவாரணமாக கத்தரிக்காய்கள், வெண்டிக்காய், மிளகாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/அம்பாறை/பிரித்தானிய-சைவத்திருக்கோவில்கள்-ஒன்றியத்தின்-ஏற்பாட்டில்-கத்தரிக்காய்-நிவாரணம்/74-250094

Link to comment
Share on other sites

இந்த இக்கட்டான காலம் புதிய சிந்தனைகள், தேடல்கள் முக்கியமாக செயல்திட்டங்களுக்கு வழிசமைக்கும். 

1. எவ்வாறு உற்பத்தியாகும் பொருட்களை நீண்ட காலம் பழுதாகாமல் சேமிக்கலாம் 
2. எவ்வாறு உற்பத்தியார்களை நுகர்வோர்களுடன் நேரடியாக இணைக்கலாம், விநியோகிக்கலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.