Jump to content

புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது; மாணவனை நினைத்து வெட்கப்படுகிறேன்: விக்னேஸ்வரன் சூடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது. தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஷ்வரன்.

ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு தமிழ் சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புக்களும் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் வடக்கு முன்னாள் முதல்வரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த ஊடக அறிக்கையில்,

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு திரு. சுமந்திரன் அவர்கள் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் சிங்கள அரசாங்கங்கள் தற்போது செல்லும் பாதை சரியென்று சிங்கள மக்கள் நினைக்கவும் வாய்ப்புண்டு. என் பழைய மாணவரான திரு.சுமந்திரன் பற்றி எந்தக் கருத்தும் கூறாது இருக்கவே நான் முயன்றேன். ஆனால் நண்பர்கள் பலரின் உந்துதலால் நான் என் கருத்துக்களை வெளியிடுகின்றேன்.

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று திரு சுமந்திரன் கூறியுள்ளார். அப்படியென்றால் தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி பாராளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது. தனது கருத்துக்களை வெளிப்படையாக வடமாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ மக்களுக்குக் கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம். அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது. எனது பழைய மாணவரா இவ்வாறு பேசுகின்றார் என்று வெட்கமாக இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லா மக்களும் அறிந்தது. தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் இது பற்றி தெரியும். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள்தான் உண்மையை அறியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் போல் தெரிகின்றது. இதனால் எதைச் சாதிக்கப் பார்க்கின்றார்? ஜனநாயக ரீதியாக தமிழர்களின் உரிமையை வெல்ல வேண்டும் என்ற அபிலாசையில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமே இதனால் தடம்மாற்றிக் காட்டப்படுகின்றது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் உண்மை நிலைமையை மறைத்து தவறான புரிதல்களை ஏற்படுத்த திரு.சுமந்திரன் முயல்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு முந்தையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிறார். சுமந்திரனுக்கு வரலாறு தெரியவில்லையா அல்லது தெரியாததுபோல் நடிக்கின்றாரா? அப்படி நடிப்பதால் நல்லவர் என்ற பெயரை சிங்களவர்கள் மத்தியில் ஒருபோதும் அவர் பெற முடியாது. அவருக்குத் தமிழ் மக்களின் உணர்வுதான் புரியவில்லை என்றால் வரலாறுமா தெரியவில்லை. 1949இல் உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது 2001இல். 2001ல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில்தான் அவர் பேச்சாளராக இருக்கிறார் என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

சிங்களவர்கள் மத்தியில் திரு. சுமந்திரனைவிட அதிக காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அத்துடன் சிங்கள மக்களை உறவாகவும் கொண்டவன் நான். அவர்களுடன் உறவாக இருப்பது வேறு. எமது உரிமைகளை அவர்களிடம் எடுத்துக் கூறுவது வேறு. சிங்களவர்கள் மத்தியில் அதிக காலம் வாழ்ந்துவிட்டுத்தான் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு வந்திருக்கின்றேன். திரு.சுமந்திரன் கூறியவை ஏதோ தனிப்பட்ட செல்வாக்கை சிங்களவர் மத்தியில் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியது போல் தெரிகின்றது. தமிழ் மக்களின் வருங்கால நலம் பற்றி சிந்திக்காது தான் அவர் அங்கு பேசியுள்ளார்.

மற்ற இனங்களை மதிப்பது வேறு. அவர்களின் அடிமையாக வாழ விரும்புவது வேறு. மற்ற இனங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் அடிவருடியாகக் காட்டிக் கொள்வதை திரு.சுமந்திரன் பெருமையாக நினைக்கிறார் போல் தெரிகின்றது. இது சிங்கள மக்களுக்கு எம் தொடர்பில் தவறான தோற்றப்பாட்டையே உருவாக்கும். தமிழர்கள் அடிமையாக இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும். திரு.சுமந்திரன் அவ்வாறு அடிமையாக இருப்பதை பெருமையாகக் கருதலாம். ஆனால் தமிழர்கள் சார்பில் பேசும் போது அவ்வாறு பேச அவருக்கு உரித்தில்லை.

அது மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தோல்வியை தழுவிய நிலையில், விரக்தி கொண்ட தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியது வரலாறு. அதனை நாம் எம் விருப்பு வெறுப்புக்களுக்காக மாற்றிச் சொல்ல முடியாது. கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் இந்த மக்களை புரிந்து அவர்களுக்காக அவர்கள் கோரிக்கையின் பேரில் குரல் கொடுப்பது உத்தமமானது. இல்லை என்றால் விலகி இருந்து திரு.சுமந்திரன் அவர்கள் தாம் விரும்பும் சிங்கள மக்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது.

சிங்களவர்களுக்கு எமது விடுதலைப் போராட்டம் தொடர்பில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தம்பி பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்தினார் என்பதை நன்கு விளங்கிக்கொண்டுள்ள சிங்கள மக்கள் பலர் உள்ளனர். தமிழர் தம் போராட்டங்களை, நியாயங்களைப் பற்றிப் பேசுகின்ற சிங்களத் தலைவர்கள் தெற்கில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். அதே கேள்வி சிங்களத்தில் என்னிடம் கேட்டிருந்தால் பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் முற்றும் முழுதுமாக உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பேன் என்றுள்ளது.

https://www.pagetamil.com/123409/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் தினமும் காலையும் மாலையும் என சுமந்திரன் புராணம் நன்றாய் ஓடுகின்றது.

இதன் பின்னால் உள்ள சூட்சுமம் யார் அறிவாரோ?

Link to comment
Share on other sites

30 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இணையத்தில் தினமும் காலையும் மாலையும் என சுமந்திரன் புராணம் நன்றாய் ஓடுகின்றது.

இதன் பின்னால் உள்ள சூட்சுமம் யார் அறிவாரோ?

இதுவும் ஒருவகையான தேர்தல் பிரச்சாரம் தான்.

Link to comment
Share on other sites

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இணையத்தில் தினமும் காலையும் மாலையும் என சுமந்திரன் புராணம் நன்றாய் ஓடுகின்றது.

இதன் பின்னால் உள்ள சூட்சுமம் யார் அறிவாரோ?

இந்த கூட்ட்டமைப்பில் சுந்திரனை தவிர மற்றவர்களைப்பற்றி பேச ஒன்றுமேயில்லை। அவர்கள் எல்லோரும் தாங்கள் உண்டு , தங்கள் தொழில் உண்டு என்று இருக்கிறார்கள்। எனவே அவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் விழாமல் இருக்கிறார்கள்। அந்த நேரம் வரும்போது நான் , நீ எண்டு முண்டியடித்துக்கொண்டு வருவார்கள்। சுயநலமற்ற நல்ல அரசியல்வாதிகள்।

இங்கு சிலர் சுமந்திரனை தாக்குவதன்மூலம் அவரை அரசியலில் இருந்து அகற்றலாம் என்ற  நோக்கில்தான் அடிக்கடி கூறியதையும், கூறாததையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்। இது எப்படி என்றால் அவல் எண்டு நினைத்து உரலை இடித்த கதைதான்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.