Jump to content

பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Smartphone.jpg

அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது..

காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!

 

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த காணொளியில் முன்று உயர நிலைகளிலுள்ள தொட்டி போன்ற அமைப்பில் தண்ணீரை நிரப்பி கப்பலை உயர்த்தி கடத்தி ஏரியில் விட்டு, பின்னர் ஏரியின் பரப்பு முடிந்ததும் மறுபுறம் கடலில் கப்பலை விட தண்ணீர் தொட்டி அமைப்புகளில் உயரத்தை கீழிறக்கி கடத்துவதை காணலாம்.

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்ளோ தெளிவா சொன்னதுக்கு நன்றி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் விளக்கம் புரிந்திருக்குமென எண்ணுகிறேன்.

இக்கால்வாய் மட்டும் சாத்தியப்படாவிட்டால், நியுயார்க்கிலிருந்து, ஈழப்பிரியன் இருக்கும் சான்ஃப்ரான்சிஸ்க்கோவிற்கு கப்பலில் முழு தென் அமெரிக்க கண்டத்தையும் சுற்றிச் செல்ல இருபது நாட்களுக்கு மேல் பயண நேரம் பிடிக்கும்.

Shortest-trade-route-provided-by-the-Panama-Canal-Adapted-from-Council-for-Economic.png

இதற்கான பொருட்செலவு, நேர விரயம், கடலில் அபாயங்கள் மிக அதிகமாக இருக்கும். பிரான்ஸ் நாட்டு பொறியாளர்களால் 1881ல் ஆரம்பித்த இத்திட்டம் 1894ல் பாதியில் கைவிடப்பட, இந்த திட்டத்தை, பின்னர் அமெரிக்க பொறியாளர்களால்1904ல் மறுபடியும் முன்னெடுத்து தொடங்கப்பட்டு 1914ல் முடிவுற்று கப்பல் போக்குவரத்து பாவனைக்கு திறக்கப்பட்டது.

பனாமா கால்வாய் மூலம் கப்பல் போக்குவரத்தால் ஈட்டும் வருமானம் பனாமா நாட்டின் பொருளாதாரதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன்.
       அந்த அனுபவத்தை நேரே பார்ப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவன்.கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன்.

நான் இந்தக் கால்வாயின் பல காணொளிகளை பார்த்துள்ளேன். மிக 'த்ரில்லிங்'கான பயண அனுபவமாகவே இருக்கும்.

9 minutes ago, ஈழப்பிரியன் said:

..கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

கரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் நங்கூரமிட்ட கப்பலில் ஒருநாள் முழுவதும் தங்கியிருக்கிறேன். காலடியில் பூமி சுத்துவது போன்ற உணர்வுகளால் எனக்கு தலை சுத்தலும், வாந்தியும் வருவதுபோல இருந்ததால் மறுநாள் "போதும்டா சாமி ..!"என கரைக்கு திரும்பிவிட்டேன்.

சிலருக்கு கப்பல் பயணம் ஒத்துக்கொள்ளாது என நினைக்கிறேன்.

நன்றி, ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ராசவன்னியன் said:

இக்கால்வாய் மட்டும் சாத்தியப்படாவிட்டால், நியுயார்க்கிலிருந்து, ஈழப்பிரியன் இருக்கும் சான்ஃப்ரான்சிஸ்க்கோவிற்கு கப்பலில் முழு தென் அமெரிக்க கண்டத்தையும் சுற்றிச் செல்ல இருபது நாட்களுக்கு மேல் பயண நேரம் பிடிக்கும்.

சுவெஸ் கால்வாய் இதே மாதிரி இல்லாவிட்டாலும் ஆபிரிக்க கண்டத்தை சுற்றி போகிற நாட்களையும் செலவையும் குறைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அமெரிக்க பொறியாளர்களால்1904ல் மறுபடியும் முன்னெடுத்து தொடங்கப்பட்டு 1914ல் முடிவுற்று கப்பல் போக்குவரத்து பாவனைக்கு திறக்கப்பட்டது.

அமெரிக்கா 100 வருடம் டாலரை உறிஞ்சி எடுத்துவிட்டு 2014 இல்த் தான் பனாமாவிடம் கொடுத்துள்ளனர்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.