Jump to content

யாழில் போதை மாத்திரை விற்ற கில்லாடி சிறுவன் கடலுக்குள் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் போதை மாத்திரை விற்ற கில்லாடி சிறுவன் கடலுக்குள் கைது!

யாழ்ப்பாணம் – தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த கைது ஊர்காவற்றுறை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இன்று (12) மாலை சற்றுமுன் இடம்பெற்றது.

வேலணை – வெள்ளைக்கடற்கரை (சாட்டி) பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயதுச் சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்தச் சிறுவன், வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனைக் கைது செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது பொலிஸ் அலுவலகரிடமிருந்து தப்பித்த சிறுவன், பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து நீந்திச் சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார். அதனையடுத்து மண்டைதீவு கடற்படை காவலரணைச் சேர்ந்த கடற்படையினர் நீந்திச் சென்று சிறுவனை கரைக்குக் கொண்டு வந்தனர்.

சிறுவனை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். தனக்கு போதை மாத்திரைகளை வழங்குபவரை அடையாளம் காட்டுவதாக சிறுவன் தெரிவித்ததை அடுத்து சாட்டி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதி சிறுவர்களும் போதைப்பொருளுக்கு நாசம் போல.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தீவுப்பகுதி சிறுவர்களும் போதைப்பொருளுக்கு நாசம் போல.

கவலையான விடயம், பெற்றோர்கள் தான் கவனமாக பார்க்க வேண்டும் 🙄

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் கொள்ளைக்கூட்டம் இப்படியான வேலைகளுக்கு 18வயதுக்கு குறைவானவர்களை வைத்து வேலைவாங்குவது  இலகுவாக பின்னுக்கு நிற்கும் பெரியவர்களை கண்டு பிடிக்க முடியாமை சிறுவர்கள் என்றபடியால் தண்டனை குறைவு போன்ற காரணம்கள் அவர்களை மிக ஊக்கத்துடன் காலூன்ற வைக்குது . சமீபத்தில் கூட  சிறுவர்களை வைத்து களவுகள்  நடந்தது வடமராட்சியில் . படிப்பில் நாட்டம் செலுத்த வேண்டிய இளம் வயது சமூகம் குற்றவாளிகளை உருவாக்கி கொண்டு உள்ளோம் .

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டெல்லியில் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி; போலீசார் அனுமதி     :டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். புதுடெல்லி, டெல்லி எல்லையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.   18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.   இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.   குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.   இந்நிலையில், டெல்லியில் வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன.  இதற்காக விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என்றும் கூறப்பட்டது.   இந்நிலையில், டெல்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி எந்தெந்த வழியே நடத்தப்படும் என்பது பற்றி எழுத்து வடிவில் எதுவும் அளிக்கவில்லை.   வருகிற 26ந்தேதி நடத்தப்படும் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியாக செல்லும் என்பது பற்றி விவசாயிகள் எழுத்து வடிவில் எங்களுக்கு விவரம் அளித்த பின்னரே நாங்கள் அதனை ஆய்வு செய்து அதன்பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம் என கூறினர்.   இந்த சூழலில், பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியை சேர்ந்த சத்னம் சிங் பன்னு என்பவர் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள திரளான விவசாயிகள் டெல்லிக்கு வருகின்றனர்.   டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கிறார்களா அல்லது இல்லையா? என்பதெல்லாம் விசயமில்லை.  நாங்கள் டெல்லியின் வெளிவட்ட சாலையில் பேரணியை நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.   இந்நிலையில், டெல்லி போலீசின் உளவு பிரிவு அமைப்பின் சிறப்பு அதிகாரி தேவேந்திர பதக் இன்று கூறும்பொழுது, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குவது என நாங்கள் இறுதி முடிவு எடுத்துள்ளோம்.   குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க கவனத்தில் கொள்ளப்படும்.   டிராக்டர் பேரணியானது திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூர் எல்லைகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும்.  இதன்பின்னர் பேரணியை முடித்து கொண்டு பழைய பகுதிகளுக்கே அவை திரும்பும்.   சிங்குவில் புறப்படும் பேரணி கஞ்ச்வாலா, பாவனா, ஆச்சண்டி எல்லை, கே.எம்.பி. விரைவு சாலை வழியே செல்லும்.  பின்பு சிங்கு எல்லைக்கு திரும்பும் என அவர் கூறியுள்ளார்.   டிராக்டர் பேரணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய சம்பவங்கள் நடைபெற சாத்தியம் உள்ளது என கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். dailythanthi.com    
    • நாங்கள் புலி எதிர்ப்பு வாந்தி எடுப்பதிலேயும்.. சிங்கள எஜமானர்களை தாஜா பண்ணி.. பொக்கட் நிரப்புவதிலும் தான் ஐயா குறியா இருக்கிறம். இதில நீங்கள் என்னடான்னா.. ஆய்வு.. ஆவணம் என்று கொண்டிருப்பது கெட்ட கோபம் வாற செயல். வேணுன்னா.. சொல்லுங்கோ.. புலிகளை மீள் விசாரணை செய்யுறம். எங்கள் புண்ணை நாங்களே நோண்டிக்கொண்டிருக்கிறோம். சிங்களவன்... மொத்தமா வந்து குந்தினாலும் அவனும் எங்கட பிரஜை தானே.. அனுமதிப்போம். ஆனால்.. தமிழகத்தான்.. தமிழன் முன்னேறக் கூடாது. அது கொள்ளை. 
    • கவலை வேண்டாம். நான் என்னைக் குறித்து அதை எழுதவில்லை கப்ரன்! ராஜேஸ்வரியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சிங்கள ராணுவத்தின், இந்திய ராணுவத்தின் பெண்கள் மீதான அட்டூழியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஆனால், தமிழர் தரப்பை நியாயமாகச் சுட்டிக் காட்டும் போது அவர் "பிரா" குறூப் என்கிற கீழ்தரமான விபரிப்புக்குள்ளாகும் அளவுக்கு கோபம் வரும் தமிழர்கள், நீங்கள் மேலே குறிப்பிட்ட ஒருமித்த விசாரணையை எப்படி வரவேற்பர் என்று கற்பனை செய்து பாருங்கள்!😂
    • கஷ்டப் படாதீர்கள் விசுகர்! உங்கள் போலியான வரலாற்றுப் பாடம் போராட்ட காலத்தில் தாயகத்தில் இருந்த என் போன்றோருக்கு அவசியமில்லை!   கணணி வழி, செவி வழி கேட்டு ஈழவரலாற்றைப் புரிந்து கொள்வோருக்கு மட்டுமே கற்பித்தால் வரவேற்பிருக்கும்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.