Jump to content

யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

suma.jpg

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இந்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது.

நேற்று இரவின் பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர், யாரோ மர்ம நபர்கள் சுமந்திரனின் உருவப்படத்தை நாட்டி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

அரசியல்ரீதியான விவகாரங்கள் வேறு வடிவங்களை பெறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.pagetamil.com/123675/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

suma.jpg

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதிர்பார்த்த  ஒன்றுதானே.... :grin:
அதுக்கு, ஏன்... பரபரப்பு சம்பவம் என்று எழுதுகிறார்கள். 🤣

இந்த ஆளுக்காக.... நல்ல ஒரு "ஜீன்ஸை" வீணாக்கி விட்டார்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

செருப்பின் பயன் கூட அற்ற சுமந்திரனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவை தானா?

Link to comment
Share on other sites

இதனால் யாழ்ப்பாண மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் நல்லதுதான்?????  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் ☹️

எவ்வளவுதான் முரண்பாடுகளும் வேற்ருமைகளும் இருந்த  போதும் இந்த அளவுக்கு தரம் தாள்ந்து போகவேண்டிய   தேவை இல்லை. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் வைக்கப்பட்டிருந்தது.

குறித்த உருவப் பொம்மையினை யாழ்ப்பாணம் காவல்துறையினர் சற்றுமுன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ”தமிழினத்தின் துரோகி” என்ற பதாகை உருவ பொம்மையில் தொங்க விடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.இதற்கு அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் பல எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sumanthiran_kodumpavi_03.jpg

sumanthiran_kodumpavi_04.jpg

sumanthiran_kodumpavi_05.jpg

sumanthiran_kodumpavi_06.jpg

நான் ஒரு தமிழினத் துரோகி” யாழில் சுமந்திரனின் உருவப்படத்துக்குச் செருப்பு மாலை!(1ஆம் இணைப்பு)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இந்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது.

நேற்று இரவு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர், மர்ம நபர்கள் சுமந்திரனின் உருவப்படத்தை நாட்டி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

sumanthiran_kodumpavi_02.jpg

http://www.newjaffna.com/2020/05/13/14468/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்கிந்தவை சந்தித்தவுடன்  செஞ்சோற்றுக்கடனை செலுத்திவிட்டார்....மகிந்த...இனி இதுதான் நடக்கும்

Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் ☹️

எவ்வளவுதான் முரண்பாடுகளும் வேற்ருமைகளும் இருந்த  போதும் இந்த அளவுக்கு தரம் தாள்ந்து போகவேண்டிய   தேவை இல்லை. 😡

மக்களின் சனநாயக உரிமை இதுவல்லவோ ?  இதில் பெருமிதம் தான் அடைய வேண்டும். 

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் ☹️

எவ்வளவுதான் முரண்பாடுகளும் வேற்ருமைகளும் இருந்த  போதும் இந்த அளவுக்கு தரம் தாள்ந்து போகவேண்டிய   தேவை இல்லை. 😡

சிலர் நினைக்கிறார்கள் இவர் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிப்போய்விடுவார் என்றும் பின்னர் தங்கள் கட்சியை கைப்பற்றலாம் என்றும்। அதுதான் நடக்காது। 

Link to comment
Share on other sites

13 minutes ago, Vankalayan said:

சிலர் நினைக்கிறார்கள் இவர் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிப்போய்விடுவார் என்றும் பின்னர் தங்கள் கட்சியை கைப்பற்றலாம் என்றும்। அதுதான் நடக்காது। 

அப்போ வரும் தேர்த்தலில் வெல்லுவார் என்கிறீர்கள்??

Link to comment
Share on other sites

23 hours ago, பெருமாள் said:

suma.jpg

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23 hours ago, தமிழ் சிறி said:

எதிர்பார்த்த  ஒன்றுதானே.... :grin:
அதுக்கு, ஏன்... பரபரப்பு சம்பவம் என்று எழுதுகிறார்கள். 🤣

இந்த ஆளுக்காக.... நல்ல ஒரு "ஜீன்ஸை" வீணாக்கி விட்டார்கள். :rolleyes:

23 hours ago, Rajesh said:

செருப்பின் பயன் கூட அற்ற சுமந்திரனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவை தானா?

1986ல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ போராட்டத்தின் பெயரால் 47 ஆயுதக்குழுக்கள் இருந்தன. இந்த ஆயுதக்குழுக்களால் பெற்றுத்தர முடிந்ததெல்லாம் மரணங்களும்,  அழிவும், அழுகுரல்களும், தற்கொலைகளும் தான். இந்த அழிவும் ஒப்பாரியும் என்று நிற்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்த மக்கள் இறுதியில் அதெல்லாம் நின்று இன்று வெளிநாடு சென்ற உறவுகளை கூட மீண்டும் சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. 

தமிழீழம் எடுத்து தருகிறோம் தாலிக்கொடியை தா, வீட்டுக்கொரு பிள்ளை தா என்று கேட்டவர்களுக்கு நாம் பேயர்கள் கொடுத்தோம் - அவர்கள் இப்போது எங்கே என்றும் தெரியாது. இப்போது இன்னும் சில கூட்டங்கள் அரசியல்கட்சிகளக தம்மை பதிவுசெய்துகொண்டு தாம் விமோசனம் பெற்றுத் தருகிறோம் என்று ஆளுக்கொரு கூத்து காட்டுகிறார்கள். இவர்கள் பாதிக்கப்பட்டு போக்கிடமற்ற மக்களை இலங்கையில் வாழவிட மாட்டார்கள். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது:

மக்களின் மரணங்களையும் அழிவுகளையும் ஒப்பாரியையும் முடிவுக்கு கொண்டுவந்தவர் இருக்கிறார். அவருடன் சுமந்திரன் சேர்ந்து இந்த செருப்புமாலை அரசியலால் மக்களை என்றைக்கும் அழிவுவழியில் தள்ளிவிடும் காடையர்களை ஏதாவது ஆளில்லாத தீவில் நிரந்தரமாக தடுத்து வைக்க வேண்டும். சாதாரண பொதுமக்களுக்கு அப்போதுதான் விமோசனம் கிடைக்கும். மூன்று நாட்களுக்கு முன்னர் சுமந்திரன் இந்த களத்தில் இணைந்து இரண்டுவரிகள் எழுதி இருந்தார். இதை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

உங்கள் இந்தக் கருத்துக்களுடன் ஒப்பிடும்போது, சுமந்திரனது கருத்துக்கள் மிக உயர்ந்தவையாக எனக்குத் தோன்றுகிறது. 🤥

*****  இரண்டுவகையான மனிதர் இந்த அழகான பூமிப்பந்தில் உயிர் வாழ்கின்றனர்.

1) இரந்துண்டு வாழ்பவர்கள் 

2) மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் - வகையினர்

இதில்,

போராடியோர், போராடப் புறப்பட்டோர், போர் ஆடலுக்கு பொருளீர்ந்தோர், அவர்களுக்கு தோள் கொடுத்தோர் இரண்டாம் வகையினர். 

வடக்கு - கிழக்கில் வாழ்ந்தோரில் மிக மிகப் பெரும்பான்மையோர் இரண்டாம் வகைக்குள் அடங்குவர். 

மேற்கூறியவற்றிற்குள் நீங்கள் எந்த வகை என்று நிச்சயம் நான் கேட்கப்போவதில்லை 

*****

(குறிப்பு; இது  மேற் குறிப்பிட்ட உங்கள் கருத்திற்கான எதிர்வினை மட்டுமே)

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

இந்த பூமிப்பந்தில் இந்த இரண்டு வகைக்குள்ளும் அடங்காத பலர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நான் “உழைத்து வாழ்பவர்” என்ற மூன்றாம் வகை.    நீங்கள் அறிந்தவர்களில் அகதிகள் என்று கூறி உலகநாடுகளிடம் இரந்துண்டு வாழும் பலர் இருப்பது உண்மை. நீங்கள் இன்னமும் உயிரோடு இருப்பதால் உங்கள் இரண்டாவது வகைக்குள் நீங்களும் அடங்கவில்லை. முதலாவது வகைக்குள் அடங்குபவரானல் நான் ஆண்டாண்டு கட்டிவரும் எனது உழைப்பின் வரிப்பணத்தில் இரந்துண்டு வாழும் பல அகதிகளுள் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள். உழைத்து வாழ்பவர்களை நீங்கள் கருத்திலேயே கொள்ளாததனால், நீங்கள் “உழைத்து வாழ்பவர்” என்ற எங்கள் பிரிவில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, outdoor

"சிங்களத்  தமிழன் சுமந்திரனுக்கு" :grin:,  ஆர் செய்தது... என்று,  😜
அடையாளம் வேற,  வைச்சிட்டு போனாங்களே.... 
அங்க நிக்கிறாங்கள்... நம்ம ஆக்கள்.  😝

அந்த... புது சேர்ட், ஜீன்ஸ், செருப்பு மாலை.. எல்லாத்துக்கும், :grin:
"காவடி" மார்க் கற்பூரமும், டையலொக் நிறுவனமும்.. தான்,  ‼️
"ஸ்பான்சர்" பண்ணியிருக்கு போலை கிடக்கு.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

மக்களின் மரணங்களையும் அழிவுகளையும் ஒப்பாரியையும் முடிவுக்கு கொண்டுவந்தவர் இருக்கிறார். அவருடன் சுமந்திரன் சேர்ந்து இந்த செருப்புமாலை அரசியலால் மக்களை என்றைக்கும் அழிவுவழியில் தள்ளிவிடும் காடையர்களை ஏதாவது ஆளில்லாத தீவில் நிரந்தரமாக தடுத்து வைக்க வேண்டும். சாதாரண பொதுமக்களுக்கு அப்போதுதான் விமோசனம் கிடைக்கும். மூன்று நாட்களுக்கு முன்னர் சுமந்திரன் இந்த களத்தில் இணைந்து இரண்டுவரிகள் எழுதி இருந்தார். இதை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

97412131_10222998285166835_3991495231966019584_n.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=wbz5wQrjGKMAX-D-v5q&_nc_ht=scontent-frt3-1.xx&oh=869c4472dcdb357740453ac79055be37&oe=5EE1C25A

அவர் எதை பெற விரும்பினாரோ அதை மக்கள் சரியாகவே வழங்கியுள்ளனர்.
அது சுமந்திரனா அல்லது ஜனாதிபதி ட்ரம்பா எவராக இருந்தாலும் வழங்குவதற்கு அவர்கள் தயங்குவதில்லை.
ஏனெனில் மக்களே மகத்தான சக்தி.

குறிப்பு - சுமந்திரனுக்கு செருப்பு காட்டுவதை அநாகரீகம் என்று எமக்கு வகுப்பு எடுப்பவர்கள் கொஞ்சம் எட்டிப் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்புக்கு மக்கள் எப்படி மரியாதை செய்கின்றனர் என்பதை.

Tholar Balan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

இந்த பூமிப்பந்தில் இந்த இரண்டு வகைக்குள்ளும் அடங்காத பலர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நான் “உழைத்து வாழ்பவர்” என்ற மூன்றாம் வகை.    நீங்கள் அறிந்தவர்களில் அகதிகள் என்று கூறி உலகநாடுகளிடம் இரந்துண்டு வாழும் பலர் இருப்பது உண்மை. நீங்கள் இன்னமும் உயிரோடு இருப்பதால் உங்கள் இரண்டாவது வகைக்குள் நீங்களும் அடங்கவில்லை. முதலாவது வகைக்குள் அடங்குபவரானல் நான் ஆண்டாண்டு கட்டிவரும் எனது உழைப்பின் வரிப்பணத்தில் இரந்துண்டு வாழும் பல அகதிகளுள் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள். உழைத்து வாழ்பவர்களை நீங்கள் கருத்திலேயே கொள்ளாததனால், நீங்கள் “உழைத்து வாழ்பவர்” என்ற எங்கள் பிரிவில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது.

ஏன் இப்போது உங்களுக்குக் கோபம் வருகிறது ? 😀

இதே போன்றுதான் பிறர் சிந்திய இரத்தத்தை நீங்கள் கொச்சைப்படுத்தும்போதும் இரத்தம் சிந்தியவர்களுக்கு  வேதனையை உண்டுபண்ணும். ☹️

புரிந்துகொள்ளுவீர்களென நம்புகிறேன். 👍

பி.கு;

நீங்கள் விரும்பிய அளவு என்னை வசை பாடலாம்.  அதற்கு எனது பூரண அனுமதியுண்டு 😀 

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

ஏன் இப்போது உங்களுக்குக் கோபம் வருகிறது ? 😀

இதே போன்றுதான் பிறர் சிந்திய இரத்தத்தை நீங்கள் கொச்சைப்படுத்தும்போதும் இரத்தம் சிந்தியவர்களுக்கு  வேதனையை உண்டுபண்ணும். ☹️

ஆயுதக்குழு  எனது குடும்பத்தவரின் இரத்தத்தை சிந்தி உயிரையும் இழக்க வைத்தார்கள் - மே 18. அவர்களால் எங்களுக்கு கிடைத்தது அழிவும் மரணமும். இந்த உண்மையை சொன்னால், அதற்கு உங்கள் மொழியில் பெயர் “கொச்சைப்படுத்துதல்”. சுமந்திரனுக்கு செருப்புமாலை போடுவதற்கு உங்கள் மொழியில் பெயர் ஜனநாயகம். எனது குடும்பத்தவரை முள்ளிவாய்க்காலில் பலிகொடுத்தவருக்கு நான் மே-18ல் ஒரு நூறு இணையத்தளங்களை உருவாக்கி செருப்புமாலை போட்டால் ஜனநாயகம் என்பீர்களா? அல்லது கொச்சைப்படுத்துதல் என்பீர்களா? இதற்கு எனக்கு மாதம் 50 டொலர்கள் தான் செலவாகும்.   ஆரம்பசெலவு 1,200 டொலர்கள். இரெண்டு நாள் உழைப்பு.  போடவா செருப்புமாலை?   இது ஐனநாயகமா, அல்லது கொச்சைப்படுத்துதலா?   முடிவு உங்கள் பதிலில் தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

உங்கள் வீட்டில் ஆயுதக் குழு இரத்தம் சித்த வைத்தது என்றால்..

எங்கள் வீட்டையே இல்லாமல் செய்தது சிங்களமும் அதன் ஆயுதப்படையும்.

ஆயுதக் குழுக்கள் உருவாக முன்னமே எங்கள் குடும்ப உறவுகள் 1950 களில்.. கொழும்பு வீதியில்.. சிங்கள காடை ஆயுதக் குழுக்களால்.. தார் போட்டு எரிப்பட்டு விட்டனர். வீடுகள்.. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்கமுவ பகுதியில் இருந்த அவர்கள் முழுக் கடைத்தொகுதியும் கொள்ளையிடப்பட்டு தீயிடப்பட்டது.

அதேபோல்.. கொழும்பில் எம் உறவுகள் பிரேமதாசவின் கைக்கூலி ஆயுதக் கும்பலால்.. சுட்டுக் கொல்லப்பட்டனர். புறக்கோட்டையின் 40 சதவீத மொத்த வியாபாரத்தை தம் கையில் வைத்திருந்த அந்த உறவுகளின்.. உறவுகள் அனாதைகள் ஆயினர்.. அதிக காலமல்ல.. 1989 இல். 

உங்கள் அனுபவத்தில்.. நீங்கள் ஆயுதக் குழுக்களை திட்டினால்.. எங்கள் போன்று.. வடக்கிலும் கிழக்கிலும்.. மேற்கிலும் தெற்கிலும்.. மலையகத்திலும் சிங்கள ஆயுதப் படைகளால்.. கூலிகளால்.. முஸ்லிம் காடைகளால்.. ராசிக் கும்பல் கூலிகளால்.. ஊர்காவற்படை கூலிகளால்.. எம் இனத்துரோகிகளால்.. அழிக்கப்பட்ட இரத்தம் சித்தப்பட்ட எம் மக்களில் எத்தனை பேர் அவர்களை திட்ட முடியும். அது உங்கள் ஒருவரின் திட்டு அல்லது சிலரின் திட்டு அதற்கு என்றுமே ஈடாக முடியாது.

இன்றும்.. 1991 இல் 1996 இல் சிங்களப் படைகள் குண்டு வைத்த வீடுகள்... டாங்கி போட்டு உழுத வீடுகள் எத்தனை எத்தனை. வீடுகள் என்ன புலிகளாக சண்டை போட்டனவா..??! தமிழர்களின் இருப்பை அழிக்கனும் என்றே.. திட்டமிட்டு அழிக்கப்பட்ட வீடுகள் பல. இவை புரியாத உங்கள் போன்றோரின் இழிகுரல்.. மனிதமே இல்லாத ஒரு கேவலம்.

பிள்ளையை கேட்டார்கள் என்கிறீர்கள்.. எத்தனை பெற்றோர்.. 1980 களின் ஆரம்பத்தில் யாழ் நகர சுற்றிவளைப்புக்களில்.. தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து.. பூஸா முகாமுக்கு ஓடித்திருந்த... ஆறுகளில் சடலங்களாக அவற்றை கண்டபோது பொங்கித் தவித்தார்கள். 

எத்தனை பள்ளிக்கூட மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இவற்றை தடுக்க வீட்டுக்கு ஒருவர் வா என்பதில்.. என்ன அபந்தம். சிங்களப் படைக்கு ஓட ஓட ஆள் திரட்டிய போது அந்தப் பிள்ளைகளை நோக்கி ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை உங்கள் முதலைக் கண்கள்.

ஆக.. கேலவம்.. ஒரு இனத்தினை கூட்டுச் சேர்ந்து அழித்துவிட்டு அந்த இனத்தின் மீது பழிப்பையும் செய்கிறீர்கள். உங்களைப் போன்ற ஒரு மிலேச்சத்தனமான மனிதன் இந்த உலகில் இருக்கவே முடியாது. 

நீங்கள் எல்லாம் ஜேசுவை வணங்குகிறீர்களாம்..?! பாவம் அவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இருந்து வலிந்து போய்.. சிங்களவர் மத்தியில்... வாழ பேரதிஷ்டம் கிட்டிய இருவரின் நிலை... 

Link to comment
Share on other sites

யாழில் பரபரப்பு  மீன் சந்தையில் மீன் வாங்கிய ஒருவர் அதைப் பொரித்து சாப்பிட்டார்

விரைவில் தமிழ் ஊடகங்களில் இப்படி தலையங்கம் வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கற்பகதரு said:

1) ஆயுதக்குழு  எனது குடும்பத்தவரின் இரத்தத்தை சிந்தி உயிரையும் இழக்க வைத்தார்கள் - மே 18. அவர்களால் எங்களுக்கு கிடைத்தது அழிவும் மரணமும். இந்த உண்மையை சொன்னால், அதற்கு உங்கள் மொழியில் பெயர் “கொச்சைப்படுத்துதல்”.

2) சுமந்திரனுக்கு செருப்புமாலை போடுவதற்கு உங்கள் மொழியில் பெயர் ஜனநாயகம்.

3) எனது குடும்பத்தவரை முள்ளிவாய்க்காலில் பலிகொடுத்தவருக்கு நான் மே-18ல் ஒரு நூறு இணையத்தளங்களை உருவாக்கி செருப்புமாலை போட்டால் ஜனநாயகம் என்பீர்களா? அல்லது கொச்சைப்படுத்துதல் என்பீர்களா?

4) இதற்கு எனக்கு மாதம் 50 டொலர்கள் தான் செலவாகும்.   ஆரம்பசெலவு 1,200 டொலர்கள். இரெண்டு நாள் உழைப்பு.  போடவா செருப்புமாலை?   இது ஐனநாயகமா, அல்லது கொச்சைப்படுத்துதலா?   முடிவு உங்கள் பதிலில் தான் இருக்கிறது.

1) ஆயுதக் குழு ? 😀

ஆயுதப் போராட்டத்திற்கும் இத்தனை அழிவுகளுக்கும் மூலகாரணமான சிங்களம் நல்லவன் (மக்களின் மரணங்களையும் அழிவுகளையும் ஒப்பாரியையும் முடிவுக்கு கொண்டுவந்தவர் இருக்கிறார். ) ஆனால் அதனை எதிர்த்தவன் தீயவன் ☹️. உண்மையில் உங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களின் பல கருத்துக்களினூடாக நீங்கள் சாதி, மதம், பிரதேசவாதத்திற்கெதிரான ஒருவராக நினைத்திருந்த்தேன். ஆனால் பொது நோக்கத்திற்காக தமது உயிரை கொடுத்தவர்களை எதிரியாகவும் அழிவுகளுக்கும் அநீதிக்கும்  மூலகாரணமான சிங்களத்தை விடுதலையாளனாகக் காட்டும் உங்களை உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. 🤥

2) சுமந்திரனுக்கு செருப்புமாலை போடுவதை இழி செயலென  எனது கருத்தை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். ஆனால் மக்களுக்குப் பதில் கூறாது அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது இச் சூழலுக்கான விதையைப் போட்டவர் அவரேதான். ☹️

3) நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறீர்கள் ? ☹️

4) எனது நண்பர் புலிகளின் மிகத் தீவிரமான ஆதரவாளர். ஆனால் அவரின் மனைவியோ புலிகளை மிகத் தீவிரமாக எதிர்ப்பவர். ஏன் இப்படி எதிர்க்கிறார் என்பதற்கு நண்பர் கூறியது "" 1990 -1995 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மனைவியின் குடும்பத்தார் இருந்தபோது, வடபகுதியை விட்டு வெளியேறுவதற்கு புலிகளிடம் பாஸுக்கு (Pass ) விண்ணப்பித்திருந்தனர். அது புலிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது.. பின்னர் 95 இடப்பெயர்வின்போது சாவகச்சேரி சென்று, இறுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றார்கள். இந்தக் காரணத்திற்காகவே விடுதலைப் புலிகளை இன்றளவும் மிகத் தீவிரமாக எதிர்த்துவருகிறார். இத்தனைக்கும் செம்மணியில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்ப்ட்ட கிரிசாந்தி இவருடன் கூடப் படித்த்வர் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில். ""

புலிகளை எதிர்பதற்கு பல காரணங்களை பலர் கொண்டுள்ளனர். 1977 கலவரத்திலிருந்து 83 கலவரம் என பல அழிவுகளை நேரடியாக பார்த்து வளர்ந்தது என் குடும்பம். வடக்கு கிழக்கின் எல்லைக் கிராமங்களின் அழிவுகளை படுகொலைகளை  பார்த்து கண்ணீர் விட்டவர்கள் நாங்கள்.   எனது குடும்பம் போராட்டத்தை ஆதரிப்பதற்கு இவையே காரணங்கள். அத விளைவு - எனது ஐந்து சகோதரர்களில் எமது தங்கையைத் தவிர மிகுதி ஐவரும் சிறை சென்று (1மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை) வந்தோம். 

நான் கூற விளைவது  -

அற்ப காரணங்களுக்காக போராட்டத்தை வெறுப்பவர்கள் முதற்கொண்டு சிறிய பொருளாதார அனுகூலத்திற்காக  போராட்டத்தை காட்டிக் கொடுத்தோர் என உலகெங்குமே பல விதமான  மனிதர்களுண்டு. 

நீங்கள் $1200.00 செலவு செய்து May 18ல் மரணித்தவர்க்ளுக்கு அஞ்சலி செலுத்தும் இணையத்தளத்தை உருவாக்கி மாதம்  $50.00. செலவு செய்து அவர்களை நினைவு கூரலாம். அல்லது அதேயளவு பணத்தினை செலவு செய்து மரணித்தவர்களை தூற்றவும் செய்யலாம். தெரிவு செய்வது நீங்கள்தானே. 

ஆனால் உங்கள் செய்கையின் பலன் - 

உங்கள் எச்சத்தாற் பேணப்படும் 🙂

பி.கு;  மே 18 ல் உறவுகளை இழந்த உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஆன்மா அமைதியில் உறங்கட்டும். 🙏

Link to comment
Share on other sites

சுமந்திரனுக்கு செருப்புமலை அணிவித்து எனது ஜனநாயக உரிமையை நினைவுபடுத்தியவர்களுக்கு நன்றி. உங்களை பாதித்தவர்களுக்கு நீங்களும் செருப்புமாலை போடுங்கள்.

Link to comment
Share on other sites

சுமந்திரனுக்கு இந்தியாவிலும் அடி!! உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ காட்சி

சுமந்திரனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, பெட்ரோல் ஊற்றி எரித்தார் இயக்குநர் மு.களஞ்சியம்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கடந்த 8-ம் தேதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் truth with chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணலில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்.விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நான் ஏற்றதில்லை என்று விமர்சித்தார், அதோடு தான் சிங்களவர்களோடு கொழும்பில் வாழ்வது எனது பாக்கியம் என்றும் சொன்னார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை விமர்சித்துப் பேசச் சுமந்திரனுக்கு உரிமை இல்லை. வடக்கு கிழக்கு உட்படத் தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதம் ஏந்தி போராடியது.

ஆயுத போராட்டம் தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்டது அல்ல. அந்த போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பௌத்த, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட ஆயுத போராட்டம். இது குறித்துப் பேச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அருகதையில்லை. பௌத்த, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையைக் கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதிலிருந்து, அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்?

சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிய போராளிகள், போராடி தமது உயிர்களைக் காவியமாக்கிய மாவீரர்களையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவேகருதுகின்றோம்.

இவ்வாறாக விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட சுமந்திரனை வன்மையாகக் கணிக்கும் விதமாகவும் இனி எதிர்காலத்தில் இது போன்ற பேச்சுக்களைப் பேசக்கூடாது என எச்சரித்தும், ''தனி ஈழம் ஒன்றே தீர்வு'' என்கிற வீட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மே-14 தேதி,

எமது தமிழர் நலப் பேரியக்கத்தின் சார்பில் சுமந்திரனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, பெட்ரோல் ஊற்றி எரித்தோம்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/india/80/143242?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கற்பகதரு said:

இந்த பூமிப்பந்தில் இந்த இரண்டு வகைக்குள்ளும் அடங்காத பலர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நான் “உழைத்து வாழ்பவர்” என்ற மூன்றாம் வகை.    நீங்கள் அறிந்தவர்களில் அகதிகள் என்று கூறி உலகநாடுகளிடம் இரந்துண்டு வாழும் பலர் இருப்பது உண்மை. நீங்கள் இன்னமும் உயிரோடு இருப்பதால் உங்கள் இரண்டாவது வகைக்குள் நீங்களும் அடங்கவில்லை. முதலாவது வகைக்குள் அடங்குபவரானல் நான் ஆண்டாண்டு கட்டிவரும் எனது உழைப்பின் வரிப்பணத்தில் இரந்துண்டு வாழும் பல அகதிகளுள் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள். உழைத்து வாழ்பவர்களை நீங்கள் கருத்திலேயே கொள்ளாததனால், நீங்கள் “உழைத்து வாழ்பவர்” என்ற எங்கள் பிரிவில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது.

இந்தப்பிரபஞ்சத்தில் நீங்கள் ஒருவர்தான் உழைத்து வாழுவதாக நினைப்பு போல இருக்கிறது. நீங்கள் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தீர்கள் என்பதையும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

கபிதான் கூறிய இரண்டைத்தவிர இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அதுதான் பச்சோந்திக்கூட்டம். அவை இடம் பொருள் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இவர்கள்தான் ஈகை, அர்ப்பணிப்பு என்றால் அது என்ன விலை என்று கேட்பவர்கள். சுருக்கமாக சொன்னால் ******.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

இந்தப்பிரபஞ்சத்தில் நீங்கள் ஒருவர்தான் உழைத்து வாழுவதாக நினைப்பு போல இருக்கிறது. நீங்கள் இங்கு உழைத்து வாழ எப்படி எதனால் வந்தீர்கள் என்பதையும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

கபிதான் கூறிய இரண்டைத்தவிர இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அதுதான் பச்சோந்திக்கூட்டம். அவை இடம் பொருள் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இவர்கள்தான் ஈகை, அர்ப்பணிப்பு என்றால் அது என்ன விலை என்று கேட்பவர்கள். சுருக்கமாக சொன்னால் ******.

எ. தமிழா,

இரந்துண்டு  வாழ்வோர் என்று எழுதியது பிச்சையெடுத்து வாழ்தல் என்று பொருள்பட அல்ல. உண்மையில்  உணவை உண்டு, குறிக்கோள் அற்று / இலட்சியம் இல்லாமல்   வாழும் மனிதர்கள் என்கின்ற அர்த்தத்தில்தான் எழுதினேன். பொருள் திரிவுபட்டுவிட்டது. கற்பகதருவைக் கவலையுற வைத்துவிட்டேன் என நினைக்கிறேன். 🤥

கவனக் குறைவு என்னது.☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.