Jump to content

கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது- வாழ பழக வேண்டும்- கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus may never go away: WHO
 
கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது- வாழ பழக வேண்டும்- கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்.
 
மனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது; அதனுடன் வாழ பழகுவது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸை உலகத்தில் இருந்து நாம் அடியோடு அழித்துவிட முடியாது. அது எப்போது நம்மிடமிருந்து விலகி மறையும் என்பதை கணிக்கவும் முடியாது.

ஆட்கொல்லி வைரஸான ஹெ.ஐ.வி. போல கொரோனாவும் உயிர்ப்புடன் நம்முடனேயே இருக்கும். கொரோனா வைரஸ் என்பது நீண்டகாலத்துக்கு பிரச்சனையை ஏற்படுத்தவும் செய்யலாம்.
 
அதே நேரத்தில் கொரோனாவால் நீண்டகாலம் பிரச்சனை வராமலும் போகலாம். ஆனால் கொரோனா எப்போது அழியும் என்பதை யாராலும் முன்னரே கூறிவிட முடியாது.

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் இருக்கும் சூழ்நிலையில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மருந்துகள் சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் கொரோனாவுக்கு எதிரான வலிமையான மருந்து இதுதான் என ஒன்றை சுட்டிக்காட்டி உறுதி செய்வது கடினமாக உள்ளது. இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/coronavirus-may-never-go-away-who-385450.html

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

அதனுடன் வாழ பழகுவது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஏற்கனவே ஒன்டோடை  வாழபழகி  முடியலை இதுக்குள்ள இவங்கள் வேறை இரண்டாவதாய் .................................😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.