Jump to content

சுடர்கள் ஏற்றி ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!


Recommended Posts

முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று சுடர் ஏற்றப்பட்டு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் குளத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை புதுக்குடியிருப்பில் விசுவமடு தனியார் ஒருவரின் காணியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் சமூக இடைவெளிக்கு அமைவாக ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

அத்துடன் அங்கு நின்ற மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மொழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்துள்ளார்கள்.

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் தொடக்க நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இந்த நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக இந்த காலப்பகுதியில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நடவடிக்கை இடம்பெறும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளார்கள்.

https://www.ibctamil.com/srilanka/80/143215

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நடைமுறைகள்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாள் நடைமுறைகள் தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

சிங்கள-பௌத்த அரசினால் முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு தமிழினம், வயது வேறுபாடின்றி, பால் பாகுபாடின்றி துடி துடிக்கக் கொல்லப்பட்ட 11ஆம் ஆண்டு நிறைவு எதிர்வரும் 18.05.2020 அன்று முள்ளிவாய்க்கால் நின்னைவேந்தல் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் முற்பகல் 10:30 மணிக்கு நினைவுகூரப்படும் .

இது ஓர் தேசிய நினைவெழுச்சி நாள், உட்பூசல்களைத் தவிர்த்து தமிழ்த்தேசியத்தால் ஒன்றுகூடும் நாள். கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட எம்உறவுகளுக்காய் நீதி வேண்டிய பயணத்தில் தமிழராய் ஒன்றிணையும் நாள்.

அன்றய தினம் பிற்பகல் 7மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் விசேட மணி ஒலி எழுப்பி இப்பேரவலத்தை நினைவேந்துமாறும் அச்சந்தர்ப்பத்தில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூருமாறும் முள்ளிவாய்க்கால் பேரவல நிலமையை நினைவுபடுத்தும் வகையில் அன்றய தினம் கஞ்சி தயாரித்து பகிர்ந்து கொள்ளுமாறும் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143232

 

Link to comment
Share on other sites

2ம் நாள் அஞ்சலி; வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது.

1995 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் திகதி விமானப் படையினரின் விமான குண்டு வீச்சில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்ட நவாலிசென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இன்று காலையில் இருந்து 60க்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

அஞ்சலிக்காக அங்கே வந்திருந்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்தின் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோருடன் பொலிஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் அஞ்சலியை செலுத்தினர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143201

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவு மரநடுகை: மரக்கன்றுகள் வழங்குநர்களின் விபரத்தை வெளியிட்டார் சி.வி.

C.V.Vickneshwaran-1.jpg

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை அன்றைய தினம் காலையில் நாட்டுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தவகையில், மரக் கன்றுகளை யாரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கந்தையா இராஜதுரை (0718584882), வவுனியா மாவட்டத்தில் விநாயகமூர்த்தி குககேசன் (0775024784), மன்னார் மாவட்டத்தில் ஆறுமுகம் செல்வேந்திரன் (0774349363), முல்லைத்தீவு மாவட்டத்தில் நடனசாபாபதி வன்னியராஜா (0775027674), கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி பரிமளராஜ் (பாமகன்) (0776550030), திருகோணமலை மாவட்டத்தில் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) (0753113541), மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.உதயராஜ் (0779080697, 0713109938) ஆகியோரின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில், “எமது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இந்த மரம் நாட்டும் பணியில் அன்றைய தினம் ஈடுபடுவார்கள்.

கொரோனா வைரஸ் சம்பந்தமாக தரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மனதிற் கொண்டு அவற்றிற்கு அமைவாக பயன்தரு மரம் நாட்டல் செயற்பாட்டை முன்நடத்துங்கள்! அதுமட்டுமன்றி எமது மக்கள் யாவரும் வரும் மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் (18-18-18) நீங்கள் இருக்கும் இடங்களில் 2009 மே மாதம் இதே தினத்தன்று முள்ளிவாய்க்காலில் மரணித்தோர் நினைவாக விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்ய வேண்டுகின்றோம்.

அரசாங்கப் படைகள் அன்று செய்த கொடூரமான மனிதாபிமானமற்ற செயலை இன்றும் நாம் கண்டிக்கின்றோம் என்பதுடன் இந்த மனோநிலையுடன் அன்று எமது மக்கள் யாவரும் மாலையில் விளக்கேற்ற வேண்டும் என்று பணிவன்புடன் நாம் கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-8/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல்

73-3-1-300x149.jpgயாழ். பல்கலைக்கழகப் பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் நேற்றிரவு பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஏற்றப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றது.

அதனை அறிந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு தீபங்கள் ஏற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விவரங்களைச் சேகரித்த பொலிஸார் நினைவேந்தலை நடத்தியோரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு , பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகப் பண்பாட்டு வாயிலில் நேற்று வியாழக்கிழமை இரவு 7மணிக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செயப்பட்டிருந்தது

இந்நிலையில் மாலை 6 மணிமுதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்செல்லும் வாயில் முன்பாக கோப்பாய் மற்றும் யாழ். பொலிஸார் காத்திருந்தனர். பொலிஸார் அங்கு காத்திருக்க மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் திட்டமிட்டபடி இரவு 7 மணிக்கு பண்பாட்டு வாயில் முன்பாகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மாணவர்கள் அஞ்சலி செலுத்தி முடியும் தறுவாயில், பிரதான வாயிலில் நிகழ்வுகள் நடைபெறுவதை அறிந்து கொண்ட பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து நிகழ்வைத் தடுக்க முயன்றனர். அப்போது மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மூவர் தாம் நிகழ்வு முடிந்து திரும்புகிறோம் எனக் கூறிச் செல்ல முற்பட்டவேளை அவர்களைப் புகைப்படம் எடுத்த பொலிஸார் அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி விவரங்களைக் குறிப்பெடுத்து கொண்டனர்.

அத்துடன், “இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவது சட்டவிரோதமானது, மாணவர்களாக இருப்பதனால் உங்களைக் கைது செய்யவில்லை. இல்லை எனில் உங்களைக் கைது செய்து மூன்று மாத காலம் வரை தடுத்து வைக்க கூடிய அதிகாரம் எமக்குண்டு ” என கடுமையாக பொலிஸார் மாணவர்களை மிரட்டி அனுப்பினர்.

http://thinakkural.lk/article/41779

தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்; தமிழ் சிவில் சமூக அமையம்

may-18-1-300x168.jpgதமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம் என்று தமிழ் சிவில் சமூக இணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவு நாளை தமிழ் தேசம் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அனுட்டிக்கவுள்ளது. ஆழமாகிவரும் இராணுவமயமாக்கல், அச்சுறுத்தும் கொரோனோவுக்கு மத்தியில் நாம் இம்முறை இந்த நினைவு நாளை அணுக வேண்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் போராட்டம் இந்தத் தலைமுறையோடு முடிவடையாது என்பதும் தலைமுறை கடந்ததாக அமையும் என்பதும் எமக்கு கடந்த வருடம் உணர்த்திய பாடங்கள். நீண்ட, தலைமுறை கடந்த நீதிக்கான போராட்டத்துக்கான நிறுவனம் சார் ஏற்பாடுகளையும் கட்டமைப்பு சார் செயற்பாடுகளையும் நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த போராட்டத்திற்கு தேவையான கூட்டு உள வலிமையையும் ஓர்மத்தையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின் பிறந்த ஓர்தலைமுறை எமது தாயகத்தில் வளர்ந்து வருகின்றது. அந்த தலைமுறைக்கு எமது தேசத்தின் வரலாற்றையும் போராட்டத்தின் வரலாற்றையும் நாம் அனுபவித்த அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அந்த ஒடுக்குமுறையோடு வாழப் பழகாதிருக்க, அவ்வொடுக்குமுறையிலிருந்து அவர்களைத் தற்காத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறான தற்காப்பு பொறிமுறைகளில் ஒன்று நினைவேந்தல்களை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்வது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் ஏலவே கோரப்பட்டுள்ளவாறு இந்த முறை நாம் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்.

பின்வரும் மூன்று செயற்பாடுகளில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும் என அன்புரிமையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவோடு இணைந்து கேட்டுக் கொள்கின்றோம்.

மே 18 2020 அன்று இரவு 7 மணிக்கு வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரல். மே 18 2020 அன்று எமது மக்கள் போரின் இறுதி நாள்களில் உட்கொண்ட கஞ்சியை அன்றைய தினம் ஒரு வேளையேனும் உணவாகாராமாக்கிக் கொள்ளல்.

மே 18 2020 அன்று இரவு 7 மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் சிறப்பு மணி ஒலி எழுப்பி பேரவலத்தை நினைவேந்தல். இத்தகைய செயற்பாடுகள் நினைவேந்தலை சமூக மயப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம். எமக்குள் என்றும் நீங்கா அந்த நினைவு விளக்கை தூண்டி விட அனைவரும் கரம் கோர்ப்போம்” என்றுள்ளது

http://thinakkural.lk/article/41767

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை முன்னால் சுடர் ஏற்றி அஞ்சலி!

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2ம் நாளான இன்று (14) இரவு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு யாழ்ப்பாண பொலிஸார் வருகைதந்து நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்த மாணவர்களின் பெயர் விபரங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நாகர்கோவில் பகுதியில்

May 15, 2020

IMG_9279.jpg

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி  நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில்  இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நடைபெற்றது.

கடந்த 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படையின். குண்டு வீச்சுக்கு இலக்காகி நாகர் கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் 21 பேர் படுகொலையாகியிருந்தனர். அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாகவும் , முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை அஞ்சலி நிகழ்வுகள் முடிவுற்று ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்தில் இருந்து வெளியேறி சற்று தூரம் சென்ற பின்னர் பருத்தித்துறை காவல்துறையினர் வாகனங்கள் , மோட்டார் சைக்கிளில் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #முள்ளிவாய்க்கால்  #நினைவேந்தல்  #நாகர்கோவில்  #தமிழ்தேசியமக்கள்முன்னணி

IMG_9278.jpg IMG_9280.jpg
 
Link to comment
Share on other sites

veeravanakkm_large4.jpg.56c9016153c12a8c

மிக அருமையான வடிவமைப்பு!
நன்றிகள்!

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு

In இலங்கை     May 15, 2020 10:56 am GMT     0 Comments     1305     by : Litharsan

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் அனுஷ்டிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இதன்போது, மே 18ஆம் திகதி தங்கள் வீடுகளில் மாலை 06.00 மணி தொடக்கம் 07.00 மணி வரையான கால இடைவெளியில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறும் எமது உறவுகள் போர் அவலங்களுக்கு மத்தியிலே உணவுக்கு வழியின்றி வெறும் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர்காத்த கொடுமையை நினைவுகூரும் முகமாக அந்நாளில் ஒரு நேரம் கஞ்சியை அருந்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, அன்றைய தினம் ஏழு மணிக்கு, எல்லா ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலும் ஒரு நிமிடம் அல்லது இரு நிமிடங்கள் ஒலியை எழுப்பி அஞ்சலிக்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கி.துரைராசசிங்கம் மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மே 18இல் நாங்கள் வழமையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் பிரார்த்தனை, பூசை அதன்பின்னர் அன்னதானம் போன்ற நிகழ்வுகளுடன் அனுஷ்டித்து வருகின்றோம்.

இம்முறை கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டியுள்ளதால் நாமெல்லாம் ஓரிடத்தில் கூடி இந்த அஞ்சலி நிகழ்வினைச் செய்யமுடியாத நிலையிலுள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்பர்கள் உங்கள் பிரதேசங்களில் இந்நிகழ்வுகள் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து நடைபெறுவதற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

இதனை வடக்கு கிழக்கிலுள்ள எல்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிருவாகத்தினரும் கருத்திற்கொண்டு வடக்கு கிழக்கு எங்கிலும் இவ்விடயம் நடந்தேற உணர்வோடு சேர்ந்த உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-10/

Link to comment
Share on other sites

20 hours ago, போல் said:

இந்நிலையில், நினைவு நாளன்று பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதனால், மக்களின் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை அன்றைய தினம் காலையில் நாட்டுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தவகையில், மரக் கன்றுகளை யாரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கந்தையா இராஜதுரை (0718584882), வவுனியா மாவட்டத்தில் விநாயகமூர்த்தி குககேசன் (0775024784), மன்னார் மாவட்டத்தில் ஆறுமுகம் செல்வேந்திரன் (0774349363), முல்லைத்தீவு மாவட்டத்தில் நடனசாபாபதி வன்னியராஜா (0775027674), கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி பரிமளராஜ் (பாமகன்) (0776550030), திருகோணமலை மாவட்டத்தில் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) (0753113541), மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்.உதயராஜ் (0779080697, 0713109938) ஆகியோரின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரனின் உருப்படியான ஒரு வேலை!

Link to comment
Share on other sites

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: நிகழ்வு முடிந்தவுடன் விசாரணை நடத்திய பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைகூரல் வாரத்தை முன்னிட்டு, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைகழக பிரதான வாயிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிமுதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்செல்லும் வாயில் முன்பாக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் காத்திருந்தனர்.

எனினும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் திட்டமிட்டபடி இரவு-7 மணிக்கு பிரதான வாயில் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மாணவர்கள் அஞ்சலி செலுத்தி முடியும் தருவாயில் பிரதான வாயிலில் நிகழ்வுகள் நடைபெறுவதனை அறிந்துகொண்ட பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து நிகழ்வினைத் தடுக்க முயன்றனர்.

அப்போது, மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் மூவர் தாம் நிகழ்வு முடிந்து திரும்புகிறோம் எனக்கூறி செல்ல முற்பட்டவேளை அவர்களை ஒளிப்படம் எடுத்த பொலிஸார் அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி விபரங்களை குறிப்பெடுத்துக்கொண்டனர்.

அத்துடன், “இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவது சட்டவிரோதமானது. மாணவர்களாக இருப்பதனால் உங்களை கைது செய்யவில்லை. இல்லையெனில் உங்களை கைதுசெய்து மூன்று மாதகாலம் வரையில் தடுத்து வைக்கக்கூடிய அதிகாரம் எமக்குண்டு” என பொலிஸார் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Jaffna-University-Mullivaikkal-Remembran

Link to comment
Share on other sites

மே-18 தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Mullivaikkal-Remembrance-2020.jpg

மே-18, தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள் எனவும் சிறீலங்கா அரசின் நீண்ட ஒரு இனவழிப்பின் பெரு நினைவு நாளாகும்  என்றும் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பதினொரு ஆண்டுகள் கடந்தும் முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு தமது உறவுகளைத் தேடிவருவதாக உறவுகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உரிமை கேட்டுப் போராடிய தமிழினத்தின் மீது மனித மாண்புகள், விழுமியங்களை மீறி தனது வெறியாட்டத்தினை சிறீலங்கா அரசாங்கமும் படையினரும் கட்டவிழ்த்துவிட்டதினை உலகத் தமிழினம் ஆற்றாமையோடும், சோகத்தோடும் நினைவு கூரும் தேசிய துக்க நாள்.

பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், எமது சோகங்களும் கண்ணீரும் தொடர்கதையாகவே இருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் தரை, கடல் மற்றும் வான் ஆகிய முப்படையினரின் குண்டு மழையினையும்,கொத்தணிக் குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும் கடந்துவந்த நாம் எமது பிள்ளைகளையும், துணைவர்களையும், சகோதரங்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் சரணடைதலின் போது சிறீலங்காப் படையிடம் எமது கையாலேயே ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

முகாம்களில் நடைபெற்ற தொடர் கைதுகளின்போது எஞ்சியிருந்த சொந்தங்கள் பலரை சிறீலங்காப் படையினரும், புலனாய்வுத் துறையினரும் கைதுசெய்து கொண்டுசென்றனர். இவ்வாறு சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்பான எதுவிதமான தகவல்களையும் இன்றுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எமது உறவுகளைத் தேடி பல்வேறு முயற்சிகளை 2009 முதல் பல்வேறு தளங்களில் மேற்கொண்ட போதும் எமக்கு எவ்வித பலனும் கிட்டவில்லை. எமது உறவுகளின் நிலை என்ன என்ற வினாவுக்கு, விடையைத் தேடி எம்மால் கூட்டாக ஒருங்கமைக்கப்பட்ட தொடர் போராட்டம், ஆயிரத்து 181 நாட்களைக் கடந்து சென்ற பின்பும் எமது தேடுதலுக்கு எவ்வித பதில்களுமின்றி நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.

சிறீலங்காவில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டும் கூட எமது வலிகளுக்கு முடிவேதும் இல்லை. கடந்த பதினொரு வருடங்களாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களால் நாம் தொடர்ந்தும் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வந்துள்ளோம். அத்துடன் சுயநலம், கட்சி இலாபம் கருதி எமது உரிமைசார் போராட்டம் புறக்கணிக்கப்படுவத்தினையும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

ஆகவே, இனி வரவிருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு, தமிழ் இனத்தின் தற்போதைய தலையான பிரச்சினைகளில் ஒன்றான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பாக காத்திரமான பொறுப்பும், கடமையுண்டு என இங்கு இடித்துரைக்க விரும்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில், எமது தொடர் போராட்டத்தில் நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் எமது ஐந்து அம்சக் கோரிக்கைகளை மீண்டும் சிறீலங்கா அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் ஆணித்தரமாக முன்வைக்கின்றோம்.

(1) யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும்,இறுதி யுத்தம் முடிவிற்கு வந்த 2008-2009 தருணத்தில் சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாக கைது செய்யப்பட்டவர்கள், சகலரினதும் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

(2) தற்போது சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை உடனடியாக வெளியிடுவதுடன்,அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

(3) யுத்தத்தின் போதும்,யுத்தத்தின் பின்னரும் சிறீலங்கா இராணுவத்தினராலும்,காவற் துறையினராலும் கடத்தப்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்.

(4) புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இன்றுவரை விடுதலை செய்யப்படாத போராளிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்து சமூகத்துடன் இணைக்க வேண்டும்.

(5) தமிழர் பிரதேசத்தில் தொடரந்து நடைபெறும் இராணுவமயமாக்கல் உடனடியாக நிறுத்தப்படுவதுடன் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் எவ்வித அடக்கு முறைகளும் இன்றி, சுதந்திரமாகவும்,சுய கெளரவத்துடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வினை விரைவாக வழங்க வேண்டும்.

எமது இனிய உறவுகளே! எப்போதும் எமது மனங்களில் ஆறாத வடுவாகவும், நீங்காத நினைவாகவும் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தற்போதைய கொவிட்-19 பரவல் காரணமாக மிக எளிய முறையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மே மாதம் 18 திகதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு செய்து வருகின்றது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த நினைவுகூரலில் கலந்துகொள்ள முடியாதவர்கள், தத்தமது வீடுகளில் மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றி நினைவுகூரலை அனுஷ்டிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் மாறாத அடையாளமான, முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உங்கள் வீடுகளில் காய்ச்சி நினைவு தின மரபினை தொடருமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் எம்மாலும், எமது வருங்காலச் சந்ததியினராலும் தொடர்வதன் மூலமே எமது இன விடுதலையை வென்றெடுக்கும் ஆறாத அவாவினை அணையாது பாதுகாக்க முடியும் என்பதை இதில் பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும், எமது கண்ணீர் கலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றோம். இப் புனிதப் போரில் தமது அவயங்களை இழந்தவர்களுடனும், தமது உறவுகளை இழந்தவர்களுடன் கைகோர்த்து இந்நினைவு நாளை எம் மனதிலிருத்தி எமது விடுதலைப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளை எண்ணி அஞ்சலி செலுத்துவோம். காணாமல் ஆக்கப்பட் உறவுகளை எண்ணி தேடி போராடுவோம்” என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்தள்ளது.

http://athavannews.com/மே-18-தமிழர்-வாழ்வியலின்-இன/

Link to comment
Share on other sites

முக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் வரலாற்றில் முக்கிய கூட்டு நினைவாக அமையும், மே 18 துயர் தினத்தை நினைவு கூர்வதும், அஞ்சலி செலுத்துவதும் ஈழத்தமிழர்களின் கட்டாயக் கடமையாகும். முள்ளிவாய்க்கால் என்பது தமிழின அழிப்பின் வரலாற்று சாட்சியமாகும். மே 18 திங்களன்று, முள்ளிவாய்க்கால் அழிவின் பதினோராவது ஆண்டு நினைவு நாள் – பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் தமிழர் தேசம் இழந்துபோன துயர்தோய்ந்த நாள். ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சிங்களம் புரிந்த அனியாயத்தின் இரத்த சாட்சியம்தான் முள்ளிவாய்க்கால். ஈழத்தமிழ் மக்கள்மீது சிங்களம் மேற்கொண்டது போல, உலகில் வாழும் எந்த இன மக்கள் மீதும் இவ்வாறானதொரு அழிவு, நவீன வரலாற்றில் இடம்பெறவில்லை. நமது மக்கள் வாழ்வே போராகவும், போரே வாழ்வாகவும் வாழ்ந்தவர்கள். எந்த ஒரு நெருக்கடியிலும் தங்களது விடுதலை வேட்கையை துறக்காது, தாயக மண் மீட்பில் பயணித்தவர்கள். இனஅழிப்பின் பின்னரும் எமது இறைமையை மீட்பதற்கு உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள்.

may-18-mm.jpg

முள்ளிவாய்க்கால் நினைவுநாளான மே 18 திங்கள் கிழமையைத் தேசிய துக்க நாளாக அனுஷ்டிப்பது, தேசியத்திற்கான உயிர்ப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது. முள்ளிவாய்க்கால் அவலத்தை தலைமுறை தலைமுறையாக நினைவு கொள்வதும், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதும் எமது கடமையாகும். இந்த நிகழ்வை ஆண்டாண்டுகளுக்கு காவிச்செல்ல வல்ல நினைவு ஆலயங்களை அமைத்தும், அருங்காட்சியகங்களை உருவாக்கியும், நினைவுச் சின்னங்களைக் காலா காலமாகப் பாதுகாக்க வேண்டியது, இன்றைய காலத்தின் தேவையாகும். இந்தச் செயல்திட்டம் கடந்த பதினொரு வருடங்களாகச் சரிவரச் செயல்படுத்தப்படாமையானது, ஒரு கவலை தரும் விடயமாகும். அதே சமயம் தமிழ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ ஒரு நினைவாலயமாக அமைந்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த முற்றத்தை உருவாக்கி பராமரிப்பவர்களுக்குப் பாராட்டுச் செலுத்தாமல் இருக்க முடியாது.

இதேமாதிரியான ஆலயங்களும் அருங்காட்சியகங்களும் தமிழர் நிலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் விரைவில் உருவாக்கப்படவேண்டும். முள்ளிவாய்க்காலின் பின்னர், நாம் புதிய வழிகளில், புதிய வாய்ப்புகளின் அடிப்படையில் எமது அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதே, தமிழ் மக்களின் முன்னால் உள்ள ஒரேயொரு தெரிவாகும். அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழலில் நமது மக்களின் உச்சபட்ச அரசியல் அவாவை, தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்காவிடினும், சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களும் அந்நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புவோமாக! விடுதலை வேண்டிப் போராடும் மக்களும் தேசங்களும் ஒடுக்குமுறையாளர்களால் வலிகளையும் துயரங்களையும் தாங்கிப் பயணித்த வரலாறுகள் உலகிற்கு புதிதல்ல. அவை நமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றன. வலிகளும் வடுக்களும் வேதனைகளும் விடுதலை வேட்கையை முனைப்புறச் செய்வனவே ஒழிய, மழுங்கடிப்பவை அல்ல. முள்ளிவாய்க்கால் பெருந்துயரின்போது, தமிழரின் தொப்புள் கொடி உறவாகிய எட்டுக் கோடிக்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு வலையினையும், பத்து இலட்சத்திக்கும் மேற்பட்ட புலம்பெயர் உறவுகளின் கண்காணிப்பினையும் மீறித்தான், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்கிறது. இரண்டு கோடி மக்கள் கொண்ட சிங்களத்தால் எட்டுக் கோடி தமிழ் மக்களின் பலத்தையும், உலகெங்கும் சிதறி வாழும் புலம்பெயர் மக்களின் ஆதரவையும் மீறி, முள்ளிவாய்க்கால் அவலத்தை நிகழ்த்த முடித்திருக்கின்றது – இது நமக்கு ஒரு தெளிவான செய்தியாகும்.

இன்றைய உலகில் மக்கள் நலனை விட, அரசுகளின் வெளியுறவுக் கொள்கையே தீர்க்கமான சக்தியாக இயங்கி வரும் நிலையில், அரசுகளின் நலன்களுக்கு முன்னால், மனித உயிர்கள் பெறுமதியற்றுப் போகின்றன என்பதே கண்கூடு. தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தன்னைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் முனைப்பில் இருந்தபோதுதான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தது. தமிழர் தேசம் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், தொடர்ச்சியான இராணுவ பிரசன்னத்தினாலும், மேம்பாடு என்ற போர்வையிலும் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் ஏனைய முயற்சிகளாலும், தமிழ் மக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் மக்களும் ஒடுக்குமுறையின் கோரப் பற்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மக்கள் என்னும் அடிப்படையில் ஒற்றையாட்சிக்குள் வாழுமாறு நமது மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அரசியல் உடன்பாடு காண்பதற்கான முப்பது வருடகால முயற்சிகள் அனைத்தும் பேரினவாத நடவடிக்கைகளால் தோல்வியுற்றன. இந்தப் பின்புலத்தில்தான், தமிழர் இருப்புக்கு தனியாகச் செல்வதுதான் ஒரேயொரு மார்க்கம் என்று தந்தை செல்வா கூற நேர்ந்தது. தந்தை செல்வா காட்டிய திசையில் தமிழின இருப்பைப் பாதுகாப்பதற்காக தமிழ் இளைஞர்கள் தம்வாழ்வை அர்ப்பணித்து விடுதலை இயக்கங்களாக எழுச்சியுற்றனர்.

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ்நாட்டு உறவுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழகத் தொப்புள் கொடி உறவுகளின் மத்தியில் எமது மக்களின் உரிமைகள் ஆழமான கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இவ்வகையில், தமிழர் தேசம் என்னும் ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் விழுதுகளாக தமிழக உறவுகளும் உலகத் தமிழ் மக்களும் உள்ளனர். இன்றைய சர்வதேச அரசியல் மாற்றங்கள் – இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் மாற்றங்கள் என்பன தமிழர் தேசதிற்கான வாய்ப்புக்களின் கதவுகளைத் தற்போது திறந்தே வைத்துள்ளன.

இவற்றையெல்லாம் தமிழர் தேசம் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். தனித்துச் செல்வதே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஈழத் தமிழர்கள் செயற்படவேண்டும். முள்ளிவாய்க்காலில் பேரவலம் நடந்து பதினோரு ஆண்டுகள் நிறைவைடைந்துவிட்டன. இருந்தும் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை. போரால் விதவைகளாக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்த முடியவில்லை. முன்னாள் போராளிகளின் மறுவாழ்வைச் சீரமைக்க முடியவில்லை. மேலும் பதினோரு ஆண்டு நிறைவடைந்தும், தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படாமல், அநீதிழைத்தவர்களே, மீண்டும் ஆட்சியைக் கைப்பறியுள்ளமை இலங்கைத்தீவில் நீதி அழிந்துவிட்டது என்பதையே அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. எனவே எமது மக்களுக்கான தீர்வு என்பது, எம்மை நாமே தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை பெறுவது ஒன்றேயாகும். தர்மத்தின் அஸ்திபாரத்தில் நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என்ற மன உறுதியுடன் தொடர்ந்து பயணிப்போம். உலகளாவிய ரீதியில் இன்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் ஒன்று கூடிப் பொதுநிகழ்வுகளை முன்னெடுக்க முடியாதவாறு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றோம். இந்த இக்கட்டான காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பதினோராம் ஆண்டு நினைவு நாளை மே18 திங்களன்று எமது வீடுகளில் குடும்பமாகச் சுடரேற்றி நினைவேந்திக் கொள்வோம்.

அத்துடன், அந்நாளில் வேலைத்தளங்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் என வெளியில் செல்வோர், கறுப்புப் பட்டி அணிந்து, எமது மக்களின் துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம். நமது அடுத்த சந்ததியினருக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் நடக்க விடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர்வோம். கொரோனா வைரஸின் தாக்கத்தால், வழமைபோல் முள்ளிவாய்க்கால் மண்ணில் கூடி, மக்கள் தங்கள் கண்ணீரை அம்மண்ணில் புதைக்க முடியாது போகலாம். ராஜபக்சேக்களின் மீள்வருகை, எதிர்காலத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஒன்று கூடுவதற்கு இடைஞ்சலாகவே இருக்கும். மக்களும் தேசங்களும் மகிழ்வின்போது ஒன்றிணையும் கணங்களைவிட, மனத் துயரின்போது ஒன்றிணையும் கணங்களே மிகவும் கனதியானவை – வலிமையானவை. எனவே முள்ளிவாய்க்கால் அவல நினைவு நாளில், வீழ்ந்தவர்களின் நினைவுகளுடன் எமது புனிதப் பயணத்திற்காக தொடர்ந்து ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

http://thinakkural.lk/article/41924

Link to comment
Share on other sites

4ம் நாள் நினைவு நாள்; கைது செய்வோம் என அச்சுறுத்திய பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4ம் நாள் நினைவு நாள் குருநகா், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகை சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நினைவேந்தலில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உள்ளிட்ட பொலிஸாா் நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன்,

நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தவா்களையும், குறிப்பாக ஊடகவியலாளா்களையும் தனித்தனியாக தமது தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூக இடைவெளி பேணப்படவில்லை என பொலிஸாா் குற்றஞ்சாட்டியதுடன், யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் கைது செய்வோம் என அச்சுறுத்தியிருந்தனர். இதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலத்திற்கும் குறித்த பொலிஸ் அதிகாாிக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Link to comment
Share on other sites

மே 18
நடப்பில் இருந்த தமிழீழ அரசும்
அதன் மக்களும் அழிக்க பட்ட நாள்
பல மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை
சிறிலங்கா கொலைவெறி அரசு புரிந்த நாள்
ஈழ தமிழ் மக்கள்
எந்த வழியும் அற்று
பிணம் தின்னும் சிறிலங்கனிடம்
அடைபட்ட நாள்
இனப்படுகொலை நாள்

வீழ்ந்தவர் மற்றும் சிறிலங்கா அரசுக்கு இரையானோரை
நினைவு கொள்வோம்
அதே நேரம்
நீண்ட காலம் நியாயம் வேண்டி குரல்
கொடுக்க வழிகள் அறிய உறுதி கொள்வோம் !

 

=== முகநூலில் இருந்து  ====

Link to comment
Share on other sites

நல்லாட்சி அரசுடன் கூட்டுக் குடும்பம் நடத்திய கூட்டமைப்பாலும் முடியவில்லை!

நல்லாட்சி அரசுடன் கூட்டுக் குடும்பம் நடத்திய கூட்டமைப்பாலும் காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. பறனகம ஆணைக்குழு காணாமல் போனோருக்கான அலுவலகம் எல்லாமே ஏமாற்று வித்தைகள் தான் என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று மாலை அவர் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது,

இந்த நூற்றாண்டின் திட்டமிட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாகிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நினைவு கூர வேண்டியது தார்மீக கடமையாகும். 11 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் காணாமல் போனார்களோ அல்லது படுகொலை செய்யப்பட்டார்களோ என்பது தொடர்பில் இது வரை முடிவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும் பல வருடங்களை கடந்து பல உறவினர்களும் இறந்து போயுள்ளனர்.

எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் வரை சென்றும் புலம் பெயர்ந்த தேசம் எங்கும் போராட்டம் நடாத்தியும் எந்த பயனும் இதுவரை ஆகவில்லை.

நல்லாட்சி அரசுடன் கூட்டுக் குடும்பம் நடாத்திய கூட்டமைப்பாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கவில்லை.

பறனகம ஆணைக்குழு காணாமல் போனோருக்காண அலுவலகம் எல்லாமே ஏமாற்று வித்தைகள் தான். இலங்கை அரசு சர்வதேச சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள்.

எல்லாமே வெறுமையாக்கப்பட்டுள்ளன. அதனால் பலர் எதிர் காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர். ஆகவே இனப்படுகொலை நடந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டன. மீள் வாழ்வு என்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

வடக்கு, கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள், அங்கவீனர்களின் வாழ்வாதாரம் இன்னும் கேள்விக் கூறியாகவே உள்ளது. கட்டமைக்கப்பட்ட எந்த முனைவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே விடுதலை எனும் உயரிய நோக்கோடு போராடிய இனம் எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுத்தே நிமிர வேண்டும் என்பதே வரலாறு நமக்கு கற்றுத் தந்த பாடமாகும்.

தற்போதைய கோரோனா' சூழலை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை பல வழிகளிலும் தடுக்க முனைகின்றது.

தற்போதைய அரசே இனப்படுகொலையின் பிதா மகன் என்பதாலும் பிரகடனமற்ற இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பல வழிகளிலும் தடை செய்யலாம்.

புலனாய்வாளர்களைக் கொண்டு மிரட்டலாம். இவற்றைக் கண்டு அசந்து விடாதீர்கள். சத்தியத்திற்காக சாகத்துணிந்த இனம் அற்ப மிரட்டல்களுக்கு அடி பணிய முடியாது.

'கொரோனா' பிரச்சினை தொடர்வதால் பொது அமைப்புகள், தனி நபர்கள் என அனைவரும் சிறிய அளவில் என்றாலும் நினைவு கூரலை முன்னெடுங்கள்.

இன்றைய சிறார்களுக்கு அரசின் இனப்படுகொலை பற்றி தெளிவூட்டுங்கள். இது தான் காலத்தின் கடமையும் தமிழர்களின் கட்டாயமும் ஆகும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143400

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் சர்வதேச இந்து இளைஞர் பேரவை

mullivaikkal-18-720x437.jpg

முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் இனப்படுகொலை நடந்து பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டது. வரலாற்றிலும் வாழ்விலும் ஒவ்வொரு தமிழனும் இறப்பதனை இந்த உலகம் வேடிக்கை பார்த்தது என்ற உண்மை உலகம் இயங்கும் வரை அவை மறக்க முடியாத வடுக்களாகும்.

ஆண்ட ஓர் இனம் அனாதையாக்கப்பட்டு கேட்பாரன்றி கிடந்த எம்மினத்தின் வலிகளும் இழப்புக்களும் எமக்குத்தான் தெரியும். உலகின் ஒவ்வொருவரின் முகமும் எமக்கு உணர்த்தப்பட்ட நாட்கள்.

ஒன்றரைலட்சம் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்கள். எத்தனையோ படுகொலைகள் அரங்கேறியது. யாரும் நீதி தரவில்லை. எம்மால் எது முடியுமோ அவற்றை நாம் செய்யப்பழகிக் கொள்ள வேண்டும். இத்தனை காலமும் இல்லாது இவ்வருடம் பலகெடுபிடிகள் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

எனவே எமது அன்பான உறவுகளே நாம் செய்ய வேண்டியது எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்த உறவுகளை ஒரு நிமிடம் உணர்வுடன் விளக்கேற்றி அவர்களை நினைத்து அவர்களின் ஆன்மா ஆன்ம ஈடேற்றம் பெற வேண்டி ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் செய்து கொள்ளுங்கள் என அனைத்து தமிழ் உறவுகளையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என்றுள்ளது.

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-13/

 

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம்

tamil-makkal-peravai.jpg

கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு தமது வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை, “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவு தினத்தினை தமிழ் தேசமும் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளும் நாளை (திங்கட்கிழமை) நினைவேந்தவுள்ளன.

வெற்றுக்கோசமாகிப்போன பொறுப்புக்கூறல், சர்வதேச விசாரணை மற்றும் உலகப் பெரும் தொற்றாகிய கொரோனோ என்பவற்றிற்கிடையில் நாம் இம்முறை இந்த நினைவு தினத்தினை எதிர்கொள்கின்றோம்.

தமது சுதந்திரமான வாழ்வியலுக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய தமிழ் மக்களின் மூன்று தசாப்தகால விடுதலைப்போர், பல்லாயிரம் மக்களின் சாட்சிகளற்ற படுகொலைகளோடு மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் எந்தவிதமான காத்திரமான அரசியல் தீர்வுகள் இன்றி கடந்துவிட்டது.

2009 மே மாதம் 18ம் திகதியில் இந்த விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தமிழர் தாயகப் பகுதியில் பல இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பில் வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் ஓர் குறுகிய நிலப்பரப்புக்குள் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த நாட்களில் ஒருவேளை உணவுக்காக கஞ்சியுடன் உயிரைக் கையில் பிடித்தபடி தமிழ் மக்கள் பட்ட சொல்லொணாத் துன்பம் வார்த்தைகளால் வடிக்க முடியாது. இந்த வகையில் வருடா வருடம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது தமிழ் மக்களால் பேரெழுச்சியாக உணர்ச்சியுடன் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

இம்முறையும் தமிழ் மக்களாகிய நாம் கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு எமது வீடுகளில் இருந்தவாறே இந்த நினைவேந்தலை எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்க வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் பொறுப்புக்கூறலுக்காக பல இனங்கள் சமூகங்கள் நீண்டகாலம் காத்திருக்க போராட வேண்டியிருந்தமை கண்கூடு. அதே போலவே நாமும் எமக்கான நீதி கிடைக்கும்வரைக்கும் காத்திருக்கவும், கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும், வளங்களையும் சிறந்தமுறையில் பயன்படுத்தி மாறுகின்ற பூகோள ஒழுங்கிற்கமைய அகிம்சை வழியில் போராடவும் வேண்டும்.

இதை அடையும் வரையும் இனத்திற்கான நியாயம் கிடைக்கும் வரைக்கும் ஓயாது செயற்படவும் இவ்வகையான நினைவேந்தல்கள் அவசியமானவையும் வரலாற்றை ஊடு கடத்துபவையாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அடுத்த தலைமுறையினருக்கும் எமது வரலாற்றை கடத்துவது எதிர்காலத்தில் இவ்வாறான சூழல்களை அவர்கள் எவ்வாறு அணுகவேண்டும் அவற்றை எவ்வாறு கையாண்டு எமது நியாயங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும்.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினாலும் ஏனையோராலும் வேண்டப்பட்டவாறு அன்றைய தினம் நாம் அனைவரும் ஒற்றுமையாகவும் ஒருமித்த உணர்வோடும் வலிமிகுந்த நாட்களில் தமிழ் மக்கள் பட்ட வலிகளின் அடையாளமாக ஒரு வேளை உணவாக கஞ்சியை குடித்து அந்த மக்கள் அன்றைய நாட்களில் பட்ட துன்பத்தை நினைவுகூர்வதுடன் மாலை 06 மணி தொடக்கம் 07 மணி வரையான காலப்பகுதியில் சுடரேற்றி நினைவேந்தலினை மேற்கொள்வோம் என தமிழ் மக்கள் பேரவையினராகிய நாம் வேண்டி நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-14/

Link to comment
Share on other sites

நாளை காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - என்ன செய்யவேண்டும்?

நாளை காலை 10 மணிக்கு முள்ளிவாய்கால் நினைவேந்தல் எவ்வாறு, எங்கு எப்டி நடைபெறும் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு சார்பாக கத்தோலிக்க பங்குத் தந்தை லியோ ஆம்ஸ்ரோங் விளக்குகின்றார்:

https://www.ibctamil.com/srilanka/80/143464?ref=imp-news

Link to comment
Share on other sites

மன்னார் நகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்காக கருப்பு பட்டி அணிந்து அஞ்சலி!

In இலங்கை     May 18, 2020 2:02 pm GMT     0 Comments     1207     by : Benitlas

DSC_0730-720x450.jpg

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம்(திங்கட்கிழமை) மன்னார் நகர சபையின் அமைர்வின் போது தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னார் நகர சபையின் 27 ஆவது அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையில், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு தீபம் ஏற்றப்பட்டு பின்னர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் நகர சபையின் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

DSC_0749.jpg

DSC_0719.jpg

DSC_0722.jpg

DSC_0744.jpg

உலகத்திலுள்ள தமிழர்களுக்கு மே 18 துக்கநாள் -தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளர் டுவிட்

மே 18-ம் நாள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் துக்க நாளாகும் என இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டு மே 18-ம் நாள் முடிவுற்றதாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இறுதி யுத்தத்தின் போது சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள், தளபதிகள் உள்ளிட்டோரும் இந்த யுத்தத்தில் உயிரிழந்தனர். முள்ளிவாய்க்கால், நந்திக்கடலில் யுத்தம் முடிவடைந்தது. எனவே ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஆங்காங்கே தீபங்கள் ஏற்றி மலர் தூவி போரில் உயிரிழந்தவரகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் 11-ம் ஆண்டு நினைவையொட்டி பிரபல இசையமைப்பாளர் டி.இமான் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

“மே18 உலகம் முழுக்கவுள்ள தமிழர்களின் துக்க நாளாகும். தங்களுடைய வாழ்வைத் தியாகம் செய்த வீரத்தமிழர்களுக்கு வீர வணக்கம். வாழ்க தமிழ், வாழ்க மனிதம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

May 18th A day of deep grief for Tamils around the globe. Royal salute to all Veerathamizhargal who had sacrificed their lives.
வாழ்க தமிழ்!
வாழ்க மனிதம்!
- D.Imman pic.twitter.com/3lmxt8M3IP

— D.IMMAN (@immancomposer) May 18, 2020

https://www.ibctamil.com/india/80/143533

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால்… தமிழர்களின் உணர்விலும் உதிரத்திலும் கலந்துள்ள ஒரு அறச்சொல்!

In இலங்கை     May 18, 2020 5:05 am GMT     0 Comments     1415     by : Benitlas

வீரம் செறிந்த மண்ணிலே பிய்தெறியப்பட்ட சதைகளும், சிந்தப்பட்ட இரத்தங்களும் இற்றை வரைக்கும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் கதைகளை காற்றோடு காற்றாகக் கூறிக்கொண்டு தான் இருக்கின்றன.

ஆம். அந்தக் கொடூரம் அரங்கேறி இன்றுடன் 11 வருடங்கள் கடந்து விட்டன… ஓர் இனமே திட்டமிடப்பட்டு கருவருக்கப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்துவிட்டன… நீதி கேட்டு ஓலமிட்ட ஒரு கூட்டம், நிர்க்கதியாக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்டன…

இலங்கை மண்ணில் 30 வருட காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற யுத்தம் அமைதிக்குக் கொண்டுவரப்பட்ட தினமாக கருதப்படும் இதுபோன்றதொரு தினத்தில்தான், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இன்னுயிர்கள் தியாகம் செய்யப்பட்டன.

எனினும், இந்தத் தியாகத்திற்கான நீதி வெளிச்சம், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கோரி நிற்கும் கூட்டத்திற்கும் இதுவரை பாய்ச்சப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதியளித்த அப்போதைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்களின் அரசியல் தீர்வாக 13 ப்ளஸை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

அத்தோடு, இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சர்வதேசத்திற்கு உறுதியளித்திருந்தார். சர்வதேச நாடுகளும் இதனைத் தான் வலியுறுத்தின. இப்போதும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன…

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் சர்வதேசத்தின் கோரிக்கையாகும்.

இதற்காக கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

ஏன், கடந்த நல்லாட்சி அரசாங்கம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, சர்வதேசத்தின் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதோடு, சர்வதேச பொறிமுறையிலான நீதி விசாரணையொன்று இலங்கையில் தமது ஆட்சிக் காலத்திலேயே முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தது.

ஆனால், இந்த உறுதி மொழிகளும், அழுத்தங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் பகல் கனவாக மட்டும்தான் இருந்து வருகிறது. இறுதி யுத்தத்தின்போது, இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் நீதிப் பேராட்டங்கள் ஒரு புறம்…

படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என நீதிப் போராட்டங்கள் ஒரு புறம்… யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அரசாங்கங்கள் மார்த்தட்டிக் கொண்டாலும், இராணுவத்தின் கெடுபிடிகள் வடக்கில் அதிகமாக உள்ளதாக மக்கள் போராட்டங்கள் ஒரு புறம்…

இவ்வாறு, ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் வாழ்க்கை என்பது போராட்டங்கள் சூழ் படலமாகத் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் அரசியல் ஓடையில் தமிழர்களின் அறப்போராட்டங்கள் எப்போது கலந்ததோ, அப்போதே இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் அரசியல் சாயம் பூசப்பட்டு விட்டது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் கோரி நிற்கும் குறைந்த பட்ச விமோட்சனத்தையேனும் வழங்க முடியாத திராணியற்ற நிலையில் தானா தமிழ் அரசியலும், இலங்கை அரசாங்கங்களும் இருக்கின்றன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எது எப்படியோ, சூரியல் மேற்கில் மறைவது ஒன்றும் சூரியனின் வீழ்ச்சியாக எவரும் கருதிவிட முடியாது.

அதுபோன்றுதான் தமிழர்களின் இந்த உரிமைப் போராட்டங்களும்… இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் கிழக்கில், அந்தச் சூரியனின் ஒளிக்கதிர்கள் வானை நிச்சயம் அலங்கரிக்கும் என்பதுதான், ஒவ்வொரு தியாகத்திற்கு பின்னாலும் ஒழிந்திருக்கும் பெருங்கதை.

இதே நம்பிக்கையுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள எம் உறவுகளுக்கு எமது இதய அஞ்சலி…!

http://athavannews.com/முள்ளிவாய்க்கால்-தமிழர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கஸ்டங்கள் மிரட்டல்கள் மத்தியிலும் சிங்கள இனவாத அரசினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் அஞ்சலி செலுத்திய அத்தனை உள்ளங்களையும் தலைவணங்குகிறேன்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு கஸ்டங்கள் மிரட்டல்கள் மத்தியிலும் சிங்கள இனவாத அரசினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் அஞ்சலி செலுத்திய அத்தனை உள்ளங்களையும் தலைவணங்குகிறேன்.

உண்மை!

சொறிலங்கா அரச போர்குற்றவாளிகளின் கடுமையான அடக்குமுறைகள்/மிரட்டல்கள், ஒருபக்கச் சார்பாக நீதிமன்ற தலையீடுகள் என்டு எல்லாத் தடைகளையும் மீறி உணர்வுபூர்வமாக தாயக மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னெடுத்தனர்.

பொலிஸாரின் தடையையும் மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

In இலங்கை     May 18, 2020 4:28 am GMT     0 Comments     1226     by : Benitlas

யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழில் இருந்து முல்லைத்தீவு செல்வதற்காக  யாழ் – மன்னார் வீதியூடாக  பயணித்த போது, சங்குப்பிட்டி பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி யாழ்.செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாக கூறி நிகழ்வினை தடை செய்தனர்.

இதன் போது, நீதிமன்ற உத்தரவை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.

அவர் புறப்பட்டு ஒரு சில நிமிடத்தில் வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன் உள்ளிட்ட குழுவினர் பொலிசாரின் தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

212144.jpg

2154544.jpg

Link to comment
Share on other sites

ஆலயங்களிலும் இடர் விளைவிக்கும் அரச புலனாய்வாளர்கள்: அதிருப்தியில் மக்கள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டவர்களை ஆலயத்திற்குள் நுழைந்து புலனாய்வாளர் ஒருவர் புகைப்படமெடுத்துள்ளார்.

தமிழினப்படுகொலையின் 11ஆவது ஆண்டு நிகழ்வினை நினைவேந்தும் வகையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதன்போது அரசியல்வாதிகள் மற்றும் அந்தணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்துகொண்டு பிரார்த்தனையை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னரே பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆலயத்திற்கு வெளியில் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆத்ம சாந்தி பூஜை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் திடீரென நுழைந்த புலனாய்வு பிரிவு அலுவலர் ஒருவர் நிகழ்வினையும், நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களையும் தொலைபேசியில் புகைப்படம் எடுத்திருந்தார்.

ஆலயத்திற்குள் நுழைந்து புகைப்படம் எடுத்தமை அங்கிருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/143489

 

 

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு!

In இலங்கை     May 18, 2020 4:23 am GMT     0 Comments     1151     by : Benitlas

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் இந்து இளைஞர் பேரவையின் தலைவர் மயூரசர்மாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்ததுடன் நினைவுத்தீபங்களும் ஏற்றி இறந்த ஆத்மாக்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதன்போது நகரசபை உறுப்பினர்களான சுமந்திரன், ஜானுயன் உட்பட தமிழருவி த. சிவகுமாரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

DSC08538-scaled.jpg

Link to comment
Share on other sites

மே 18 இல் வெளியான படம்! வல்வெட்டித்துறையில் இருந்து விமானத்தில் பயணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்

இலங்கையில் தான் தூதரக அதிகாரியாக இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இந்திய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான நேற்று முன்தினம் அந்த பதிவை அவர் இட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் நான் இள நிலை அதிகாரியாக இருந்தபோது இலங்கையில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அமைப்பினருக்கும் இடையில் உள்நாட்டு போர் உச்ச கட்டத்தில் இருந்தது.

அப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகளை அவருக்கு எடுத்துக்கூறி டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் பிரபாகரனுடன் தான் பயணம் செய்தார் எனத் தெரிவித்துள்ள ஹர்த்திப் சிங் பூரி, அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரும் அமைதி ஏற்படத் துணையாக இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்த போதிலும் அது பயனளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

I was a young First Secy (Political) at the Indian High Commission in Colombo in 1987 when I met V. Prabhakaran several times to persuade him to come to New Delhi & understand the peace pact that India & Sri Lanka were to sign to end the ethnic strife. pic.twitter.com/at6cUl108s

— Hardeep Singh Puri (@HardeepSPuri) May 18, 2020
https://www.ibctamil.com/srilanka/80/143627?ref=home-imp-parsely
https://pbs.twimg.com/media/EYQ_AYoVcAY5FR3?format=jpg&name=900x900
Link to comment
Share on other sites

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு -சிவகரனிடம் இரண்டுமணிநேரம் விசாரணை நடத்திய ரி ஐ டி

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லங்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு மேற்கொண்டமை தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினுடைய தலைவர் சிவகரனிடம் இன்றைய தினம் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இரண்டு மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது

குறித்த விசாரணையின் போது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் நிகழ்வை தொடர்சியாக அரசாங்கத்துக்கு எதிராக நடாத்திவருகின்றமை தொடர்பாக சிவகரனிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளதுடன் குறித்த விடையம் தண்டனைக்குரிய குற்றம் எனவும் இனி வரும் நாட்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வோம் எனவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த திடீர் விசாரணை தமிழ் உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143666

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.