-
Tell a friend
-
Topics
-
0
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
50 நாளில்... 74 வருட அரசியலின், முகமூடியை கழட்டிய, காலிமுகத்திடல் போராட்டம். -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தேசபந்து தென்னகோனின்... தொலைபேசி இதுவரை, கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்? சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. https://athavannews.com/2022/1284258 -
By ஏராளன் · பதியப்பட்டது
இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை Getty ImagesCopyright: Getty Images தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமுன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.இதனையடுத்து, சஷி வீரவன்ச தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை (30) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச, சில காலங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அவரும் அவருடைய சகாக்களும், அரசாங்கத்தை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/topics/cz74k7p3qw7t?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=6290c7a84259031cb5a254a5%26இலங்கை எம்.பி விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை%262022-05-27T14%3A16%3A12.027Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:b16f4de9-5392-4cff-b7c7-f0bce521bdd9&pinned_post_asset_id=6290c7a84259031cb5a254a5&pinned_post_type=share
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.