Jump to content

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் நினைவுகளும்


Recommended Posts

இறுதிப்போர் நடந்த இரவுகளில் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருந்ததால் எந்த நாளென்று தெரியவில்லை...

நாங்கள் இரண்டு நாட்களாக எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை...சில மிடறுகள் தண்ணீர் கிடைத்ததோடு சரி...

இரண்டு நாட்களாக எங்களை சுற்றி மக்கள் பதுங்கியிருந்த ஆழம்குறைந்த பல பதுங்குகுழிகளுக்குள் கையெறி குண்டுகளை வீசி "புலிகள் இருக்கிறார்களா" என இராணுவத்தினர் சோதித்து கொண்டிருந்தார்கள்...!!

அன்று இரவு மட்டும் நான் 50 முறைகளுக்கும் மேலாக ஜெபம் செய்திருப்பேன்...எங்கள் பதுங்குகுழிகள் இராணுவத்தினர் கண்ணில் பட்டு விடக்கூடாதென்று...!!

இறுதியில் அணிந்திருந்த வௌ்ளை உடையை உயர்த்தி பிடித்தவாறு வௌியேற முற்பட்டோம்...இராணுவத்தினர் சிரித்துக்கொண்டே எங்களைநோக்கி துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர்...!!

நாங்கள் சரணடைய வந்திருக்கிறோம்...எங்களை சுடாதீர்கள் என்றவாறு கைகளை உயர்த்தினோம்...

அருகே வந்த இராணுவ வீரன்..."நீங்கள் விடுதலைப்புலிகள்...உங்களை மட்டுமல்ல தமிழர்கள் எல்லாரோயும் அழிக்கச்சொல்லி தான் எங்களுக்கு உத்தரவு"...!! என்றவாறு எங்களில் வயதுகுறைந்த மதபோதகர் ஒருவரை எட்டி உதைத்தான்...!!

பிறகு சில இராணுவத்தினர் வந்து கதைக்க..."சரி உங்களை சோதிக்கப்போகிறோம்...உடைகளை கழற்றுங்கள்" என்றான்...!!

எங்களுடன் வந்திருந்த 40 குழந்தைகள் பெண் மதபோதகர்கள் உட்பட சோதித்த பிறகு....பேருந்துகளில் ஏற்றி புதுக்குடியிருப்புக்கு எங்களை மாற்றினார்கள்...

போகிற வழியில் சீருடைகள் அகற்றப்பட்ட போராளிகளின் உடலங்கள் குவிக்கப்பட்டு மக்கள் பார்ப்பதற்காக "ட்யூப்லைட்" வௌிச்சம் பாய்ச்சப்பட்டிருந்தது...!!

கொண்டாட்டம் போல இராணுவத்தினர் களித்துக்கொண்டிருந்தார்கள்...!!

(கிறித்துவ மதகுரு ஒருவரின் இறுதி சாட்சியம்)

#ஈழம்
#இனஅழிப்பு

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

சுற்றி ஆர்ட்டிலெறி குண்டுகள் விழுந்து கொண்டிருந்தபோது....

நிமிடத்திற்கு 60 எறிகணைகளை கக்கித்தள்ளுகிற உந்துகணைகள் நிலம் துளைத்து உயிர்குடித்த போது...

அண்ணாந்து பார்க்கப்பார்க்க பாஸ்பரஸ் மழைபொழிந்து உயிரோடு உடல் துடிக்கத்துடிக்க எரிந்து செத்தபோது...

கையில் குழந்தையை காவிக்கொண்டு எறிகணைகளிலிருந்து தப்பியதாய் எண்ணிய அடுத்தநொடி தன் மீது குண்டு விழப்போவதை அறிந்த போது...

சுற்றி மக்கள் பதுங்கியிருக்கிற அத்தனை பதுங்கு குழிகளுக்குள்ளும் அந்த பேராண்மை கொண்ட இராணுவம் கையெறி குண்டுகளை வீசி "புலிகளை தேடுவதாய்" கூறி கொன்று குவித்த போது....

"அடுத்தது நாமாக இருக்கக்கூடாது" என நெஞ்சு துடித்து மீளாப்பயம் சூழும்போது...

சோதனை செய்வதாக அண்ணன் தம்பி அப்பா முன்பே தடவுகிற போது....

தாய்மண்ணிலேயே இராணுவ மிருகங்களால் கை கால் முறிக்கப்பட்டு வன்புணரப்பட்டபோது...

மாதப்போக்கு காலங்களில் "மாற்றுத்துணி"யின்றி வழிகிற ரத்தக்கறையோடு உயிர்பயத்தில் ஓடியபோது...

மொத்தத்தில் அவர்களின் கதறல்களுக்குள் சத்தமில்லாமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட போது....

அவர்கள் மனம் எதையெல்லாம் சிந்தித்திருக்கும்...

"எங்கள் தொப்பூற்கொடியென 18 மைல் தள்ளி கோடிப்பேர் இருந்தும் எங்களை கைவிட்டுவிட்டீர்களே என நிச்சயம் ஒருநொடியாவது தோன்றியிருக்கும்"...!!

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இதுவரையில் இம் மாவீரரை அனைவரும் முகமறியா மாவீரர் என்று குறிப்பிட்டீர்கள். இப்போது அவரது நிலையுடன் பெயரையும் பதிவிடுகிறேன்.

லெப்டினன்ட் இனியவன்
யோகராசா கயூரதன்
பிறப்பு 28.12.1986
வீரச்சாவு. 2009.

வீரமே மண்டியிட்டு வணங்கிய மாவீரனுக்கு வீர வணக்கம். 14.05.2020

வீரவணக்கம் வீரவணக்கம்🙏💐💐

Link to comment
Share on other sites

2009 மே மாதம் கிட்டத்தட்ட இதே தேதிகளில் தான் இந்த சந்திப்பு

#சோனியாவும், வெளியுறவுத்துறை செயலாளரான #சிவசங்கர்_மேனனும் டெல்லியில் இருந்தபடி #தமிழின_அழிப்பிற்கான கோடுகளை வரைந்துகொண்டிருக்க, #சதீஷ்_நம்பியாரும், #விஜய்_நம்பியாரும் கொழும்பிலேயே தங்கிக்கொண்டு #சிங்கள_ராணுவத்திற்கு சாலை அமைத்துக் கொண்டிருந்தார்கள். .

அந்த நிலையில்தான் மே மாதம் முதல் வாரத்திலேயே சிங்கள ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்தது. போர் விதிமுறைகளை மீறி!.

இங்கே #தமிழகத்தில் ‘போர் நிறுத்தம் வேண்டும்’ என்ற போராட்டமும் வெடித்தது. திமுக-வின் நிலைய வித்துவான்களும், மடைமாற்றிகளும் அதை நீருற்றி அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு பரபரப்பான வேளையில்தான் #வெளியுறவுத்துறை அமைச்சர் #பிரனாப்_முகர்ஜி இலங்கை செல்கிறார். போகும் வழியில் சென்னையில் இறங்கியவர் சி.ஐ.டி. நகர் வீட்டில் இருந்த #கலைஞர்_கருணாநிதியை சந்திக்கின்றார். அது முக்கிய ஆலோசனை.

அமைச்சர்களின் பதவி ஏற்பின் போது ‘ரகசியம் காப்பு’ உறுதிமொழியை மீறி, அங்கே #கனிமொழியையும் நிறுத்திக் கொண்டார்கள். அது என்ன சதியாலோசனை என்பதை இன்றுவரை வெளியில் சொல்லவில்லை. போகட்டும்.

இந்த வெளியுறவு செயலாளர் #சிவசங்கர்_மேனன் இருக்கின்றாரே, அவர் பின்னாடி ஒரு புத்தகத்தை எழுதினார். அதில், “தமிழகத்தில் உள்ள தலைவர்களிடத்தில் பேசிக்விட்டுதான் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

#செல்வி_ஜெயலலிதா அவர்களையும், முதல்வர் #கருணாநிதியையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அதுகுறித்து பேசினேன். அவர்கள் யாரும் புலிகள் இயக்கம் இருப்பதை விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

இது அப்படியே இருக்கட்டும்.

நம் #இந்து_நாளேடு ஆசிரியரான ‘#இந்துராம்’ அவர்கள் #BBC-க்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில்..

"கருணாநிதியும் நானும் குடும்ப உறவினர்கள் என்பதைத் தாண்டி அவரும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம். என்னிடம் மனம் விட்டுப் பேசக் கூடியவராக அவர் இருந்தார். #இலங்கைப் பிரச்சினைக் குறித்து நானும் அவரும் பலமுறை விவாதித்திருக்கிறோம்!

#தனித்தமிழீழத்தையும், #விடுதலைப்_புலிகளையும் வெளியே அவர் ஆதரிப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும் அவர் அதனை ஒரு போதும் மனதார விரும்பியதில்லை!

ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்று வாழ்வதையே அவர் விரும்பினார்.

விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் #பிரதிநிதியாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை!" என்று பேட்டியளித்திருந்தார்.

இப்போது விடயத்திற்கு வருகிறேன். #பிரனாப்_முகர்ஜியிடம் அன்று கலைஞர் என்ன பேசினார்.?

உடனிருந்தவர்களும், திமுக-வின் #நிலைய_வித்துவான்களாக இருப்பவர்களும் இதற்கு பதில் சொல்வார்களா?

இப்போது தெரிகிறதா, ஈழத்தின் தமிழின அழிப்பு #சூத்திரதாரிகள் யார் என்று?

#மறக்க_முடியுமா?

பா.ஏகலைவன்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர்

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இதுவரையில் இம் மாவீரரை அனைவரும் முகமறியா மாவீரர் என்று குறிப்பிட்டீர்கள். இப்போது அவரது நிலையுடன் பெயரையும் பதிவிடுகிறேன்.

லெப்டினன்ட் இனியவன்
யோகராசா கயூரதன்
பிறப்பு 28.12.1986
வீரச்சாவு. 2009.

வீரமே மண்டியிட்டு வணங்கிய மாவீரனுக்கு வீர வணக்கம். 14.05.2020

வீரவணக்கம் வீரவணக்கம்🙏💐💐

 

வீரவணக்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இதுவரையில் இம் மாவீரரை அனைவரும் முகமறியா மாவீரர் என்று குறிப்பிட்டீர்கள். இப்போது அவரது நிலையுடன் பெயரையும் பதிவிடுகிறேன்.

லெப்டினன்ட் இனியவன்
யோகராசா கயூரதன்
பிறப்பு 28.12.1986
வீரச்சாவு. 2009.

வீரமே மண்டியிட்டு வணங்கிய மாவீரனுக்கு வீர வணக்கம். 14.05.2020

வீரவணக்கம் வீரவணக்கம்🙏💐💐

இந்த‌ மாவீர‌னின் ப‌ட‌ம் ப‌ல‌ரின் ம‌ன‌சை க‌ல‌ங்க‌ வைச்ச‌து /
22வ‌ய‌தில் வீர‌ச்சாவு / பெரும் க‌ண்ணீருட‌ன் வீர‌ வ‌ண‌க்க‌ம்  😓🙏

உண்மையை சொல்ல‌ சொல்லி க‌த்தியால் உட‌ம்பில் கீறி கொடுமை ப‌டுத்தி சாக‌டித்தார்க‌ள் , அப்ப‌வும் க‌ண்ணில் இருந்து சிறு க‌ண்ணீர் கூட‌ வ‌ர‌ வில்லை , உண்மையையும் சொல்ல‌ வில்லை , இந்த‌ போராளி ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் என்றும் வாழுவார் /

இந்த‌ மாவீர‌னை நானும் ப‌ல‌த‌ட‌வை நினைத்த‌ உண்டு , ஏன் இப்ப‌டி கொடுமை ப‌டுத்தி சாக‌டித்தாங்க‌ள் என்று 😓

என்றும் உன் பெய‌ர் வாழும் 🙏
என்றும் உன் புக‌ழ் வாழும் 🙏

Link to comment
Share on other sites

தமிழினப்படுகொலைக் குற்றவாளி #யசூசிஅகாசி

தமிழீழத்தின் வளங்களைக் கொள்ளையிடும் நோக்கில், புரிந்துணர்வு உடன்படிக்கையில் இணைத்தலைமை நாடுகளோடு இணைந்து (Co chairs) ஒன்றாக உட்புகுந்த யப்பானின் சூழ்ச்சியைப் புரிந்து, தேசியத்தலைவர் அதற்கு இடமளிக்காத போது, தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் “#ProjectBeacon” என்ற அனைத்துலக நாசகாரத் திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டது யப்பான். குறிப்பாக யசூசி அகாசி இதில் பிரதான பாத்திரம் வகித்தார்.

அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்களில் இவரும் ஒருவர்.

== முகநூல் ==== 

Link to comment
Share on other sites

ஒரு போர் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

இரு வல்லரசுகளுக்கிடையிலான போரில்லை. தமக்கென விடுதலைக் காற்றை விரும்பிய சுயமரியாதை கொண்ட எளிய மக்களுக்கும் வல்லரசுகளுக்கும் இடையிலான போர். வெற்றி தோல்வி நிர்ணயங்களுக்குள் இந்த போரைப் பொருத்திப் பார்ப்பது போல முட்டாள்தனம் ஒன்றில்லை.

ஆனால் அந்த போரில் வல்லரசுகளின் கோரப்பற்கள் எப்படிப்பட்ட ரத்த வெறியுடன் அலைந்துக்கொண்டிருந்தன என்பதற்கு ஒரேயொரு புகைப்படம் காலத்தால் அழிய முடியாத சாட்சியாக இருக்கிறது. பாலச்சந்திரனின் புகைப்படம். பால் மணம் மாறாத ஒரு பிள்ளை நெஞ்சில் குண்டு ஏந்தி இறந்து கிடப்பதை பார்த்தும் வல்லரசுகளுக்காக உங்கள் வாய் நியாயம் பேசுமென்றால், தொட்டுப் பாருங்கள். உங்கள் வாயிலும் கொஞ்சம் ரத்தம் ஒட்டியிருக்கும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

இத்தனைக்கு பிறகும் சொல்வேன், ஈழம் என்பது முடிந்து போன கனவல்ல. சிதறிக் கிடக்கும் மக்களிடம் எஞ்சியிருக்கும் நினைவு மட்டுமல்ல. ஒரு நாள் அது உயிர்பெறும். தோற்றவனின் பிதற்றலாக நீங்கள் அதை இன்று கடக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கனவு எப்பாடுபட்டாவது தன்னை நிறைவேற்றிக் கொள்ளும் என்பதுதான் வரலாறு சொல்லும் சேதியும் நீதியும்.

இப்போதும் சொல்கிறேன், ஈழம் என்பது வரைப்படம் அல்ல. அது வாழ்வியல் நெறி. எங்கள் நெஞ்சங்களில் வாழும் நெருப்பு அது. அணையாது காப்போம். தலைமுறைகளுக்கு கடத்துவோம்.

=== முகநூல் ======= 

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் பரிசோதனை கூடமானது

உலக நாடுகள் தம் கண்டுபிடிப்புக்களை பரிசோதனை செய்தது

வேடிக்கை பார்த்தது உலகம் சமாதானப் புறாக்கள் சட்டைப்பையில் ஒளிந்து கொண்டன

நமக்காக இருந்தவர்கள் நம் கண்முன்னே எரிந்து போயினர் மீண்டு வந்தோம்

அவர் தம் கனவுகளை சுமந்து

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கானதே இன்று வெற்றியோ தோல்வியோ அல்ல மக்கள் போராட்டத்தின் மறுவடிவம் உயிர் பெற்ற நாள்

அமைதியை விரும்புகின்றோம் என்று முத்திரை குத்திக் கொண்டவர் முகங்களில் மனிதம் காறி உமிழ்ந்திடும் நாள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வெளிப்புறம் மற்றும் இயற்கை

Link to comment
Share on other sites

கஞ்சி கொட்டில்கள்

அப்பொழுதெல்லாம் எங்கேனும் கஞ்சி கொட்டில்கள் போடப்பட்டால் அதை நோக்கி ஓடும் கால்கள் எண்ணற்றவை. படையணிகள், TRO போன்ற கட்டமைப்புக்கள் மக்கள் செறிந்துவாழும் இடங்களுக்கு அருகில் கஞ்சி கொட்டில்களை அமைத்து இலவசமாக கஞ்சிகளை வழங்கும். சிறுவர்களுக்கு பயறு போட்ட கஞ்சியும் பெரியவர்களுக்கு உப்புக்கஞ்சியுமாக வழங்கப்பட்டன.

சிங்கள பௌத்த பேரினவாத இனப்படுகொலை அரசால் அனைத்து வழிகளிலும் உணவுப்பொருட்கள் வழங்கல் மறுக்கப்பட்ட நிலையில், தமிழீழ நடைமுறை அரசால் செயற்படுத்தப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் இனப்படுகொலை அரசின் வான்படைக்கு சொந்தமான வேவு விமானங்களால் அடையாளப்படுத்தப்பட்டு எறிகணைத்தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது. சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட உயர் தொழிநுட்ப வேவு விமானங்கள் வானில் தொடர்ச்சியாக வட்டமிட்டபடி இத்தாக்குதல்களை நெறிப்படுத்தியபடி இருந்தன.

படுகாயமடைந்தமையால் ஏற்பட்ட குருதி இழப்பால் சோர்வடைந்த உறவினருக்கும், மாதக்கணக்கில் சீரான உணவுகிடைக்காத தனது பிள்ளைக்கும், கொண்டிருந்த பொருளாதாரம் அத்தனையும் இழந்து இடப்பெயர்வு அலைச்சலால் ஏற்பட்ட சோர்வை போக்கவும் என ஒரு வேளைக்கான மட்டுப்படுத்தப்பட்ட அளவு கஞ்சிக்காக சமையல்காரர்கள் வருமுன்பே வரிசைகட்டி காத்திருந்தவர்கள் பலர் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், உரை மற்றும் வெளிப்புறம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தமிழினப்படுகொலைக் குற்றவாளி #யசூசிஅகாசி

தமிழீழத்தின் வளங்களைக் கொள்ளையிடும் நோக்கில், புரிந்துணர்வு உடன்படிக்கையில் இணைத்தலைமை நாடுகளோடு இணைந்து (Co chairs) ஒன்றாக உட்புகுந்த யப்பானின் சூழ்ச்சியைப் புரிந்து, தேசியத்தலைவர் அதற்கு இடமளிக்காத போது, தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் “#ProjectBeacon” என்ற அனைத்துலக நாசகாரத் திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டது யப்பான். குறிப்பாக யசூசி அகாசி இதில் பிரதான பாத்திரம் வகித்தார்.

அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்களில் இவரும் ஒருவர்.

== முகநூல் ==== 

இந்த‌ ச‌ப்பை மூக்க‌னின் ந‌ம்ப‌க‌ த‌ன்மையை தலைவ‌ர் சீக்கிர‌மே க‌ண்டு விட்டார் , ஆண்டு வ‌டிவாய் நினைவில்லை , இவ‌ர் வ‌ன்னிக்கு இர‌ண்டாவ‌து த‌ட‌வை வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை ச‌ந்திக்க‌ விரும்பினார் , இவ‌ரை த‌லைவ‌ர் ச‌ந்திக்க‌ ம‌றுத்து விட்டார் , பிற‌க்கு த‌மிழ்செல்வ‌ன் அண்ணாவோடு க‌ல‌ந்துரையாடி விட்டு சென்ற‌வ‌ர் /

எல்லாம் குள்ள‌ ந‌ரிக‌ள் தான் 

Link to comment
Share on other sites

தமிழீழ நினைவொலி - மே-18 மதியம் 1:00-1:02

சர்வதேச நாடுகளின் துணையோடு முள்ளிவாய்க்காலில் தமிழர் இனத்தை கருவறுத்ததை தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் நினைவு கூர வேண்டியது நமது கடமை.மே மாதம் 18 ஆம் நாள், தமிழீழத் தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பை நினைவு கூரும் பொருட்டு, இனி வரும் காலங்களில், ஒவ்வொரு வருடமும் மதியம் 1 மணி க்கு தமிழகம் எங்கும், தமிழர்கள் வாழும் நிலப்பகுதிகள் எங்கும் #தமிழீழ_நினைவொலி எழுப்பப்பட வேண்டும்!. இதற்கென, நாம் இருக்கும் இடத்திலேயே மெளனமாக 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவோம்! நமக்கான அரசு அமையும் வரை நினைவொலியை நாமாமகவே எழுப்ப கடமைப்பட்டுள்ளோம்; நாம் நமது கைபேசியில் மே மாதம் 18, 1மணிக்கு அலாரம் வைத்து நமது கைபேசியில் ஒலியை தூவக்குவோம்

(கீழே உள்ள காணொளியில் வரும் காட்சி யூதப் படுகொலையை நினைவு கூற இஸ்ரேலில் வருடம் தோறும் நடக்கும் நினைவேந்தல், அவரவர் நின்ற இடத்திலே இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவார்கள்)

865367847628019

 
Link to comment
Share on other sites

இடப்பெயர்வின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் அமைத்து கொண்ட கிணறு இது .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி மற்றும் வெளிப்புறம்

முள்ளிவாய்க்காலின் கடற்கரையை அண்டிய பிரதேசம் மணல் திட்டுக்களால் ஆன மண் நிரம்பிய இடம் குழி தோண்டினால் உடனேயே மூடி விடும் மணல் ஆகையால் கூரை தகரங்களை வளைத்து குழியை தோண்டி அதற்குள் மண் மூடி தூர்ந்து போகாதவாறு அணைத்து கிணறு அமைத்தோம் நீர் 5 -10 அடிகள் ஆழத்தில் கிடைத்துவிடும் .

அவ்வாறு அமைக்க பட்ட கிணறு ஒன்று போர் உச்சம் பெற்ற நாட்களில் துப்பாக்கி சன்னங்களாலும் குண்டு சிதறல்களாலும் சல்லடை இடப்பட்டிருக்கும் தோற்றம் இது 11 ஆண்டுகளாகியும் அந்த மண்ணில் இருக்கும் இனப்படுகொலையின் எச்சம் |

#11years_of_tamils #remembermay2009 #may18

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 14:20, ampanai said:

இறுதிப்போர் நடந்த இரவுகளில் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருந்ததால் எந்த நாளென்று தெரியவில்லை...

நாங்கள் இரண்டு நாட்களாக எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை...சில மிடறுகள் தண்ணீர் கிடைத்ததோடு சரி...

இரண்டு நாட்களாக எங்களை சுற்றி மக்கள் பதுங்கியிருந்த ஆழம்குறைந்த பல பதுங்குகுழிகளுக்குள் கையெறி குண்டுகளை வீசி "புலிகள் இருக்கிறார்களா" என இராணுவத்தினர் சோதித்து கொண்டிருந்தார்கள்...!!

அன்று இரவு மட்டும் நான் 50 முறைகளுக்கும் மேலாக ஜெபம் செய்திருப்பேன்...எங்கள் பதுங்குகுழிகள் இராணுவத்தினர் கண்ணில் பட்டு விடக்கூடாதென்று...!!

இறுதியில் அணிந்திருந்த வௌ்ளை உடையை உயர்த்தி பிடித்தவாறு வௌியேற முற்பட்டோம்...இராணுவத்தினர் சிரித்துக்கொண்டே எங்களைநோக்கி துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர்...!!

நாங்கள் சரணடைய வந்திருக்கிறோம்...எங்களை சுடாதீர்கள் என்றவாறு கைகளை உயர்த்தினோம்...

அருகே வந்த இராணுவ வீரன்..."நீங்கள் விடுதலைப்புலிகள்...உங்களை மட்டுமல்ல தமிழர்கள் எல்லாரோயும் அழிக்கச்சொல்லி தான் எங்களுக்கு உத்தரவு"...!! என்றவாறு எங்களில் வயதுகுறைந்த மதபோதகர் ஒருவரை எட்டி உதைத்தான்...!!

பிறகு சில இராணுவத்தினர் வந்து கதைக்க..."சரி உங்களை சோதிக்கப்போகிறோம்...உடைகளை கழற்றுங்கள்" என்றான்...!!

எங்களுடன் வந்திருந்த 40 குழந்தைகள் பெண் மதபோதகர்கள் உட்பட சோதித்த பிறகு....பேருந்துகளில் ஏற்றி புதுக்குடியிருப்புக்கு எங்களை மாற்றினார்கள்...

போகிற வழியில் சீருடைகள் அகற்றப்பட்ட போராளிகளின் உடலங்கள் குவிக்கப்பட்டு மக்கள் பார்ப்பதற்காக "ட்யூப்லைட்" வௌிச்சம் பாய்ச்சப்பட்டிருந்தது...!!

கொண்டாட்டம் போல இராணுவத்தினர் களித்துக்கொண்டிருந்தார்கள்...!!

(கிறித்துவ மதகுரு ஒருவரின் இறுதி சாட்சியம்)

#ஈழம்
#இனஅழிப்பு


நினைவுகளைப் பதிவிட்ட உங்களுக்கு நன்றி!

சுழற்காற்றாய் அசைந்த தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தைத்   தனது நலன்களைத்தாங்கி இந்த உலகு அதனைத் தலைமைதாங்கியோரை அகற்றியிருக்கலாம். ஆனால் அங்கு புதையுண்ட மக்களும் மாவீரர்களும் காலத்தால் அழியாது விடுதலைக்காகத் தொடர்ந்து ஒளிர்வர் என்பதை உலகெங்கும் வாழும் தமிழர் ஒளியேற்றி வணங்குவதூடாகப் பதிவாகியே வருகிறது. 

மனிதம் சிந்திக்காத மாபெரும் படுகொலைத் தருணங்களின் பதிவுகளை வாசிக்கவே முடியவில்லை. ஒருகொலைகார அரசோடு கூடிவாழக்கூறும் உலகு கிட்லர் முதல் சதாம்உசேன்வரை ஏன் நடவடிக்கையில் இறங்கியது. உலகுக்கு ஒரு நியாயம். தமிழருக்கு ஒரு நியாயம் என்று இந்தக் கேடுகெட்டு உலகப்பெரும் வல்லரசுகள் செய்த கொடும் துரோகம் ஒருநாள் அவர்களை நோக்கியும் திரும்பும். உலக எல்லைகள் நிரந்தரமானதல்லை என்பதை வரலாறு தன்வழியில் பதிவுசெய்தவாறே நகர்கிறது. அந்த வழியிற் தமிழரின் விடியலும் ஒருநாள் இந்த உலகோடு இணையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 23:38, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இதுவரையில் இம் மாவீரரை அனைவரும் முகமறியா மாவீரர் என்று குறிப்பிட்டீர்கள். இப்போது அவரது நிலையுடன் பெயரையும் பதிவிடுகிறேன்.

லெப்டினன்ட் இனியவன்
யோகராசா கயூரதன்
பிறப்பு 28.12.1986
வீரச்சாவு. 2009.

வீரமே மண்டியிட்டு வணங்கிய மாவீரனுக்கு வீர வணக்கம். 14.05.2020

வீரவணக்கம் வீரவணக்கம்🙏💐💐

குருதிவழியக்  கொடுமைகள் சுமந்து - நின்
குருதியால் தாய்மண்ணை நனைத்து
ஈகியரான தேசப்புதல்வனே
வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

#போரின்_வடுக்களை_தாங்கிய_ஒருவரின் #(லி)ரிகள்

2009 மே 16 இதே போன்றதொரு சனிக்கிழமை உறவுகள் , உடமை ,உறையுள் இழந்து கட்டி காத்த கனவு தேசத்தை விட்டு உயிர்வலிக்கும் பொழுதொன்றில் இதே வட்டுவாகல் பாலத்தின் வழியே எம்மை கொன்று தின்றோரிடம் எமது குடும்பத்தோடு சரணடைந்தோம் .

எனக்கு அப்ப 15 வயசு கறுப்பில் வெள்ளை கட்டம் போட்ட ஷேர்ட் தலைலை தொப்பி தோய்த்து பல நாட்களான சாரம் தலையையும் கைலையும் இரண்டு பாக் (bag) அம்மா நான் தம்பி அக்கா அண்ணாவின் குடும்பம் எல்லோரும் நடக்க ஆரம்பித்தோம்.

இதே போன்ற ஒரு சனிக்கிழமை அன்று துப்பாக்கி ரவைகளில் சத்தம் காதின் அருகே மிக நெருக்கமாக இடைவெளி இன்றி கேட்டு கொண்டே இருந்தது காதுக்கு அருகே வைத்து சுடுவது போன்ற ஓசை அது ஒவ்வொரு வெடியிலும் உடலை துளைப்பது போன்ற சத்தம் அது "டம் லம் " என்று சொல்லும் துப்பாக்கி ரவை சூடு அது என்று நினைக்கிறன் தூரத்திலிருந்து சுட்டாலும் இடையில் வந்து இன்னொருமுறை வெடித்து செல்லும் துப்பாக்கி ரவை கிலி கொள்ள செய்யும் சத்தம் அது , பதுங்கு குழிக்குள்ளேயே அடங்கி கிடந்தோம் வெளியில் என்ன நடக்கின்றது என்று ஊகிக்க முடியவில்லை எல்லா இடமும் புகை மூட்டமாக இருந்தது . நாங்கள் இருந்த இடம் எல்லாம் வெடி ஓசையில் அதிர்ந்தது . உண்டியல் சந்தி பிள்ளையார் கோவிலிலிருந்து உள்ளே செல்லும் ஒழுங்கையில் இறுதியாக புலிகளின் குரல் வானொலி இயங்கிய இடத்துக்கு அண்மையாக நாங்கள் மே 16 அன்று இருந்தோம் .

சொந்த வீட்டிலிருந்து கழட்டி கொண்டு சென்ற கதவுகளை பதுங்கு குழியின் மேல் போட்டு மறைப்பாக மூடி விட்டு நான் அம்மா ,தலையில் காயமடைந்த தம்பி பிறந்து 30 நாட்கள் கூட அடையாத போராளி ஒருவரின் குழந்தை உடலெங்கும் பொஸ்பரஸ் இரசாயன குண்டின் தாக்கத்தால் எரிந்த எரிகாயங்களுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்து சிகிக்சை பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் அந்த போராளி அம்மாவுக்கு மிகவும் தெரிந்தவர் என்ற முறையில் எங்கள் குடும்பத்திடம் தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு தந்து விட்டு சென்றுவிட்டார். கொளுத்தும் வெயிலுக்கு பதுங்கு குழிக்குள்ளே வேர்த்து கொட்டும் நிலையில் எரிந்த புண் ஆறாத அந்த குழந்தை எரிவு தாங்காது வெடி ஓசையின் சத்ததையும் விஞ்சும் அளவுக்கு வீலிட்டு கத்துவான் சாப்பிடும் கோப்பையால் அவனின் உடலை நோக்கி காற்று படுமாறு விசுக்கி கொண்டு வாயாலும் அவனின் உடலெங்கும் காற்றை ஊத்துவேன் காற்று எரி காயங்களில் பட அழுகை குறையும்,16 ஆம் திகதி மதியம் 1 மணி இருக்கும் அந்த போராளி அண்ணா மீண்டும் வந்து குழந்தையை வாங்கி கொண்டார் .

என்ன செய்வது என்று சிந்திக்க கூட நேரம் கிடைக்கவில்லை கையில் கிடைத்த முக்கிய ஆவணங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு சற்று தள்ளி போய் இருப்போம் என்று கிளம்பி விட்டோம்.

துப்பாக்கி ரவைகளுக்கு தப்பி பதுங்கி பதுங்கி நிலத்தில் விழுந்தும் எழும்பியும் ஓடி சென்று வட்டுவாகல் பாலத்தை நோக்கி செல்லும் பிரதான வீதியின் ஓரத்தில் சரிந்து கிடக்கும் புளிய மரத்தின் கீழ் இருந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முதலே அந்த வீதி எல்லாம் வட்டுவாகல் பாலத்தை நோக்கி செல்வதற்காக மக்கள் வெள்ளம் குவிந்து கொண்டிருந்தது .

துப்பாக்கி ரவைகள் பட்டு கண்ணெதிரே பலர் செத்தும் படுகாயமடைந்தும் விழுந்து கொண்டிருந்தனர். காயமடைந்த குடும்பத்தை தொலைத்தவர்களும் போராளிகளும் வீதியின் ஓரத்தில் நிறுத்த பட்டிருந்த வாகனங்களின் கீழே கிடந்தது உதவி கேட்டு முனகி அழுது கொண்டிருந்தார்கள். தங்களையும் கூட்டி செல்லுமாறு அவர்கள் கேட்பது முகத்தை பார்க்கும் போது உணர முடிந்தது ஆனால் என்ன செய்ய எங்களை நாங்களே காப்பாற்றி கொள்ளும் சூழல் கூட அங்கு இல்லை ஒவ்வொருவரின் உயிரும் அவரவரின் கைகளிலேயே தங்கியிருந்தது . இதில் இன்னொருவரை எப்படி காப்பாற்றுவது அந்த சூழல் அங்கே இருக்கவில்லை .நடந்து கொண்டிருந்தோம் கொஞ்ச தூரம் போன பிறகு நந்திக்கடல் பக்கமா நிலத்தில் அமர்ந்துகொண்டோம். அமர்ந்த இடமெல்லாம் பிணங்கள் அடக்கம் செய்ய கூட முடியாத நிலை அது சிலர் பிணங்களோடு அழுதுகொண்டிருந்தனர் .

முள்ளிவாய்க்கால் பக்கம் நோக்கி திரும்பி பார்த்தால் வானம் தெரியவில்லை அவ்வளவும் கரும் புகை தண்ணீர் தாகம் வாட்டி வதைக்க என்ன செய்ய என்று அங்குமிங்கும் ஓடி அலைந்து தண்ணீர் தேடினேன் வெட்டிய ஒரு பதுங்கு குழிக்குள்ளே மழைக்கு தேங்கிய தண்ணீர் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் கிடைத்தது . எடுத்து குடித்தால் ஒரே உப்பாக இருந்தது . மாலை 4 மணி இருக்கும் நேரம் நெருங்க நெருங்க அந்த வீதியே நிறைந்து வழிந்தது அருட்தந்தை ஒருவர் வீதியின் நடுவிலே நின்று கொண்டிருந்தார்.அவரின் பின்னால் மக்கள் வெள்ளம் இராணுவ கட்டு பாட்டுக்குள் செல்ல திரண்டு கொண்டிருந்தது நாங்களும் அவருக்கு அண்மையாக சென்று கொண்டோம் . நேரம் 5மணியை நெருங்க வட்டுவாகல் பக்கமாக நந்திக்கடல் பக்கத்திலிருந்து சுட்டுக்கொண்டே வந்த இராணுவம் மக்களை நோக்கி பாலத்தை நோக்கி பிரதான வீதியில் ஏறி நடக்குமாறு சைகை காட்டுவது புரிந்தது மக்களோடு சேர்ந்து நடக்க கூட இடம் இல்லாது நெருக்கமாக வீதியில் நடக்க ஆரம்பித்தோம் . வீதியின் மறு கரையில் சீருடையில் இருந்த போராளி ஒருவர்அம்மாவை பார்த்து அம்மா உவங்களிட்ட போகாதீங்கோ ஐசி ஆர் சி கப்பல் வருது எல்லாரும் அதிலை போகலாம் நீங்கள் அதில் போகலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் .ஆனாலும் மக்கள் பாலத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தனர் .
நாங்களும் சேர்த்தே நடந்துகொண்டிருந்தோம் .

வீதியின் இடது புறத்தில் கனரக துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினர் மறு கரையை நோக்கி சுட்டு கொண்டிருந்தனர் . வீதியின் நடுவால் சென்று கொண்டிருந்த மக்களை நோக்கி நிலத்தில் அமருமாறு சைகை காட்டி மிரட்டிய பின்னர் எதிர் திசையில் இருந்த மக்களையும் போராளிகளையும் நோக்கி சுட்டுக்கொண்டிருந்தார்கள் ஒவ்வொரு சைகைக்கும் நிலத்தில் கூட்டமாக அமர்ந்து கொள்வதும் பின்னர் மீண்டும் எழுந்து நடப்பதுமாக நடந்து பாலத்தை அடைந்து விட்டோம் பாலத்துக்கு அண்மையாக உள்ள மண் அரணில் உள்ள காவலரண் ஒன்றில் பெண் ஒருவரின் உள்ளாடைகள் உடைகள் என்பன வெளியில் தெரியுமாறு காவலரணுக்கு மேலே போடபட்டிருப்பது கண்ணில் பட்டது நான் நினைக்கிறன் இதற்க்கு முன்னர் படையினரிடம் சரமடைந்த அல்லது அந்த காவலரணில் நின்று சண்டை செய்து மடிந்த பெண் போராளி ஒருவருடையதாக இருக்கோணும் அதை வேண்டும் என்றே காட்சி படுத்தி வைத்திருப்பது போன்று இருந்தது பாலத்தின் ஆரம்ப முனையில் நின்ற மரங்கள் எல்லாம் இலைகள் எதுவும் இன்றி கிளைகள் எல்லாம் குண்டடி பட்டு முறிந்து கருகி போயிருந்தது மூன்று யுத்த தாங்கிகள் முள்ளிவாய்க்காலை நோக்கி நிறுத்தியிருந்தது அந்த தாங்கிகளின் மேல் வெற்றியின் இறுமாப்புடன் படையினர் பலர் ஏறி அமர்ந்திருந்தனர் . பாலத்தின் ஆரம்பத்தில் எல்லோரையும் நிலத்தில் அமருமாறு படையினன் ஒருவர் கொச்சை தமிழில் பேசிக்கொண்டு தடி ஒன்றை வைத்து அடித்து அமர வைத்துக்கொண்டிருந்தான் . ஒவ்வொருவராக பெயர் சொல்லி படையணியையும் சொல்லி போராளிகள் பலரை வடி கட்டி கொண்ருந்தான் .

மீண்டும் எழுந்து பாலத்தால் நடக்க ஆரம்பித்தோம் தண்ணி தாகம் வாட்டியது பாலத்துக்கு மேலாக முட்டி வழியும் அளவுக்கு நீர் நிறைந்திருந்தது . தண்ணியை கண்டதும் முட்டி போட்டு பாலத்தின் அருகே அமர்ந்து தண்ணியை குடித்து விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்து சில அடிகள் தான் வைத்திருப்பேன் பாலத்தின் இரண்டு மருங்கிலும் உள்ள ஆற்று நீரில் ஊதிய நிலையில் வெள்ளையாக ஆங்காங்கே சடலங்கள் மிதந்து கொண்டிருந்தது . சப்த கன்னிமார் கோவிலுக்கு அருகே இருந்த கட்டிடத்துக்குள் தண்ணீர் போத்தலும் பிஸ்கட்டும் படையினர் கொடுத்து கொண்டிருந்தார்கள் . நாங்கள் கிட்ட நெருங்கியதும் முடிந்து விட்டதாக கூற பட்டது 15000 மக்கள் தான் வருகின்றார்கள் என்று கணிப்பிட்டு அதே அளவு பிஸ்கட்டு பைகளும் தண்ணீர் போத்தல்களும் கொண்டு வரப்பட்டதாக சொல்ல பட்டது .

செல்வபுரத்தின் பின் பக்கமாக வயல் வெளிகளூடாக நடந்து சென்று வயல்களுக்கு நடுவே நான்கு பக்கமும் முள்ளு கம்பியால் அடைக்க பட்ட கூண்டுக்குள்ளே அடைக்க பட்டோம் சுற்றி ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்த பட்டனர் . 17 திகதி முழுவதும் அதற்குள்ளேயே அடைக்க பட்டோம் மக்கள் கூடிக்கொண்டே இருந்தார்கள் இருக்கக்கூட இடம் இல்லாத நிலை அவ்வளவு கூட்டம் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இல்லை குடிநீர் இல்லை குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் அனைவருமே இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலப்பரப்பினுள் அடைக்க பட்டிருந்தோம். குடி தண்ணீருக்காக ஜே சி பி இயந்திரம் மூலம் இரண்டு கிடங்குகளை வெட்டியது அந்த கிடங்கில் சேறு கலந்த தண்ணீரே தேங்கி நின்றது வேறு வழி இன்றி தாகம் எடுத்தவர்கள் அந்த கிடங்கில் இரங்கி சேற்று நீரை அள்ளி பருகினர் . எல்லோரும் வடி கட்டபட்டனர் .

18ஆம் திகதி நள்ளிரவு பேருந்துகளில் ஏற்றபட்டு எங்கோவோ கொண்டு செல்ல பட்டோம் எதுவும் எமக்கு சொல்ல படவில்லை 19 ஆம் திகதி காலையில் பேரூந்து ஓமந்தையில் நின்றது ஒரு பகல் பொழுது அந்த இடத்திலேயே கழிந்தது இரவு நேரம் நெருங்க ஓமந்தை சோதனையை சாவடியை கடந்து மெனிக்பாம் கொண்டு செல்ல பட்டோம் . 2009 .மே 20 தொடக்கம் 2011 டிசம்பர் வரை முகாம் வாழ்க்கை .

வலிகளையும் வடுக்களையும் சுமந்த பாலம் இது ஒரு தேசக்கனவை சுமந்த இனத்தின் வீர வரலாறு வீழ்த்த பட்ட இடம் இது அடிமை வாழ்வை வாழ தொடங்கிய இடம் இது ஒரு புனித போரின் சாட்சியாக எஞ்சி நிற்கும் இந்த இடம் நினைவுகளை சுமந்து நிற்கின்றது ஆனால் எம் இருப்பை சிதைக்க நடக்கும் காட்சிகளை தாங்கி நிற்கிறது . வரலாறு வீழ்ந்த இடத்தில் இன்று புத்த பெருமான் அமர்ந்து கொண்டார் . 11 ஆண்டுகள் கடக்க முன்னர் என் தேசம் காட்சி இழக்கின்றது . ஏதேதோ வரலாறு எழுத படுகிறது யார் யாரோ எல்லாம் எமக்கு தலைவர் என்கிறார்கள் .மேய்ப்பன் அற்ற மந்தைகள் நாம் என்ன செய்ய முடியும் ? கை கட்டி வேடிக்கை மட்டும் பார்க்க முடிகின்றது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், வெளிப்புறம், இயற்கை மற்றும் தண்ணீர்

Link to comment
Share on other sites

Remembering Velupillai Prabhakaran, Leader of Tamil Eelam. He died 11 years ago on 17 May 2009. This is something that I wrote on 18th June 2009 - 31 days after his death -

“I have never met Velupillai Prabhakaran. Neither have I ever spoken to him. I did not know him personally. Again, it is not that I have agreed with everything that he said or did. Yet, when he died on 17 May 2009, I felt a deep sense of personal loss. I grieved. In my grief I was moved to revisit the words of Fidel Castro Ruz at his trial in October 1953 -

'...The man who abides by unjust laws and permits any man to trample and mistreat the country in which he was born is not an honorable man. When there are many men without honor, there are always others who bear in themselves the honor of many men. These are the men who rebel with great force against those who steal the people's freedom, that is to say, against those who steal honor itself. In those men thousands more are contained, an entire people is contained, human dignity is contained ... "

Velupillai Prabhakaran rebelled with great force against those who stole his people's freedom. In him, something of the honour and dignity of an entire people, an entire nation was contained. It is not surprising therefore that his death evoked a deep sense of personal loss amongst those who feel - and who feel deeply - that they belong to that people and to that nation. It would have been surprising if it had not….” more.. https://tamilnation.org/saty/090618vp.htm

 

“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்.”
Kaviarasu Kannadasan

 

Link to comment
Share on other sites

இலங்கை இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன..!? மருத்துவரின் நேரடி சாட்சி

Dr. Varadharajan | Tamil

 

Link to comment
Share on other sites

ஏ ஆர் ரகுமான் டொரொன்டோவிலும், லண்டனிலும் ஈழத்தமிழர் மத்தியில் தனது 'உந்தன் தேசத்தின் குரல்' பாடலில்..

'அயல்நாடுந்தன் வீடல்ல வீடல்ல விடுதியடா தமிழா' என உருகுவதும்..

'உந்தன் தேசத்தின் குரல் தொலைதூரத்தில் அதோ.. உன் செவியில் விழாதா' என அறைகூவல் விடுப்பதும்.. வெறும் பாடல் வரிகள் அல்ல.

அது 'Voice Of Tigers' இல் ஒலித்த புலிகளின் குரல்.

'புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்' என புலிகள் போர்ப்பரை அடித்ததை 'உந்தன் தேசத்தின் குரல்' என இசைப்படுத்தி இருக்கிறான் ரகுமான். அவ்வளவே! மீண்டும் கேளுங்கள்!

#May18 #TamilsGenocide #IndiaBetrayedTamils #TamilsDeserveCountry

Krishna Muthukumarappan

Link to comment
Share on other sites

புலிவீரக்களுக்கு சமைக்கும் புண்ணிய வேலை செய்த ஈழத்து தாய், முள்ளிவாய்க்கால் கடந்து வந்தவரின் அனுபவ வாக்கு.

"போன புலி மகள் இறந்துவிட்டாள் என அதிகாரப்பூர்வமாக செய்தி வந்தது. பிணக்குவியல்களுக்குள் ஒளிந்திருந்த நானும் விரைவில் செத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் அழவில்லை நான்.

புலிகள் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் போர்சூழலில் தற்காப்பு பயிற்சி வழங்கி இருந்தனர். தினமும் சாதாரண மக்களும் தற்காப்பு பயிற்சிற்கு செல்வது கட்டாயமாக இருந்தது. குழந்தைகள் முதல் அணைவருக்கும் குண்டுவிழும்போது தம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என பயிற்சி அளிக்கப்பட்டது. இல்லையெனில் இச்சொற்பமாக நாங்களும் மிஞ்சி இருக்க மாட்டோம்.
பங்கறுக்குள் இருந்து அவசரத்துக்கு வெளியேபோக எட்டிப்பார்த போதுகூட சிதைந்த உடல்கள் மட்டும் தான் எல்லா திசைகளிலும் கண்ணில் பட்டது.

காயப்பட்டு இறந்த ஒருவரின் உடலுடன் பங்கறுக்குள் ஒருநாள் முழுவதும் இருந்திருக்கிறோம்.

இறுதி நாளன்று பெண்கரும்புலி வந்து எங்களை சரணடைய செல்லுமாறு பாதை காட்டினார். எனது மகளின் உடையணிந்து எங்களுடன் வருமாறு அவளிடம் கெஞ்சினேன் நான். மறுத்துவிட்டாள்.
"ஆமி வரும்போது நான் இங்கிருந்து வெடிக்க வேணும் நீங்கள் கெதியா போங்கோ" என இருட்டில் எங்களை அனுப்பிவைத்தாள்.

பலநாள் வறண்டுபோய்இருந்த நா நீரோடை ஒன்றைப்பார்ததும் ஓடிச்சென்று கைநிறைய நீரள்ளி குடித்துவிட்டு நிமிர்ந்த போது தான் தெரிந்தது. குடித்தது நீரல்ல இரத்தம் என்று.. ஓடை முழுமையும் எம்மவர் உடல்கள் மிதந்தது.

பின் ஒருவழியாக கொடூரர்களின் முள் வேலிக்குள் சிக்கிக்கொண்டோம்.

தலைவர் இறுதியாக இருந்த போராளிகளை மூன்றாக பிரித்தாராம். மக்களுடன் சேர்ந்து சரணடய சிலர். இறுதிவரை நின்று போராட சிலர், கரும்புலிகளாக சிலர்.

தலைவரை காப்பாற்றுவதே கரும்புலிகளின் நோக்கம். நிச்சயம் அவரை சூழ்நது சென்று கடத்திவிட்டிருப்பார்கள் அவர்கள். அவர் நிச்சயம் திரும்பி வருவார் இவ்வளவு அழிவை செய்தவங்களை சும்மா விடுவாரா அவர்.

நிச்சயம் வருவார் திருப்பி அடிப்பார்.

இது அந்த அம்மாவின் வாக்கு.

Niruja Thavanesan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.