Jump to content

ஒட்டாவா வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி


Recommended Posts

கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி.

இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் கொல்லப்பட்டுள்ளார். மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ottawa-suresh1-1.png

ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.

கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.

ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் எண்பது (1980s) காலப்பகுதி முதல் 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.

ottawa-suresh2-e1589609575418.jpeg

2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவர் சுரேஷ் அவர்கள்.

2000 ஆண்டு இறுதியில் கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), மற்றும் டொரோண்டோவில் இயங்கிவரும் TVI, CMR வானொலி ஆகியவற்றின் ஆரம்ப உருவாக்கத்தில் சுரேஷின் பங்களிப்பு பெரியது.

ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கேமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியவர் சுரேஷ் அவர்கள். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் படையணிகள் முதல், தேசியத்தலைவர் வரை புகைப்பட தொகுப்புகளை உருவாக்கியவராவார்.

ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தாயகம் நோக்கிய செயல்பாடுகளில் உள்வாங்கி இன்றும் அவர்கள் சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக இருக்க சுரேஷின் பங்களிப்பு மிகப்பெரும் காரணமாகும்.

கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

சுரேஷ் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரின் பணிகளுக்கு எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

https://ottawa.ctvnews.ca/mobile/52-year-old-from-nepean-dies-in-fatal-crash-south-of-smiths-falls-1.4942314

https://www.torontotamil.com/2020/05/15/ottawa-suresh-dies-in-fatal-crash-south-of-smiths-falls/

Link to post
Share on other sites
13 minutes ago, ampanai said:

ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கேமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியவர் சுரேஷ் அவர்கள். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் படையணிகள் முதல், தேசியத்தலைவர் வரை புகைப்பட தொகுப்புகளை உருவாக்கியவராவார்.

இன்று இந்த களத்தில் உள்ள புகைப்படம் உட்பட பல நிழல் மற்றும் வீடியோ பதிவுகள், பல புத்தகங்களில், நாட்காட்டிகளில்  இவரின் கை திறமை கொண்ட படங்கள் என பல ஆயிரங்கள். 

Link to post
Share on other sites
16 minutes ago, ampanai said:

2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவர் சுரேஷ் அவர்கள்.

எந்த கடினமான பயணத்திலும் முதலில் பாதை போடுவது கடினம். போட்ட பாதையில் பயணிக்கும் மக்களுக்கு அதை போட்டவர் யார் என தெரிவதில்லை. போட்டவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. 

'அவர்கள்' கேட்டார்கள் என்ற ஒரு ஒற்றை சொல்லை வைத்து பம்பரமாக சுழன்று முதலாவது நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்த அடித்தளம் போட்டவர். பல இரவுகள் பகல்கள் என உழைத்த செயல்வீரன். அதனால், ' என்றும் அவர்களின்' நம்பிக்கைக்கு உரியவரானார்.   

Link to post
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கேமரா, 'Nikon' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

பதின்ம வயதில் கனடா வந்தும் ஏதோ ஒரு வழியில் தாயகத்தின் பால் அதீத ஆழமான அதற்கும் மேலாக 'முடியும்' என்கின்ற ஓர்ம வைராக்கியம் உடையவர். 

பல வேறு தொழில்நுட்பங்களை இரவிரவாக தானே தேடி கற்றுக்கொண்டு பலருக்கும், தாயக உறவுகள் உட்பட கற்றும் கொடுத்தார்.

புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் உலகிலேயே வீத அளவில் அதிகளவில் பல்கலைக்கழகம் சென்று வாழுபவர்கள் கனடாவின் தலைநகரத்தில் தான் உள்ளார்கள். இவர்கள் மத்தியில் மனம் சோராமால், பலவேறு அவமானங்கள் மத்தியிலும், எதிர்பார்ப்புக்களையும் மீறி செயலில் காட்டியவர். 

கனடாவில் 'தடை' விதிக்கப்பட்ட பொழுது அதை 'உடை' என திட்டங்கள் தீட்டி பல பல வழிகளில் முயன்றார்.  

மேலாக, "உன்னால் முடியும்" என அடிக்கடி கூறி இன்றும் உலகமெல்லாம் பல உணர்வாளர்களும் செயல்பாட்டாளர்களையும் உருவாக்கி சென்றுவிட்டார். 

வீர வணக்கங்கள் !

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

  இவரை இழந்து துயருறும் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites

தமிழ் செயற்பாட்டாளர் சுரேஷ் தம்பிராஜா அவர்களின் மறைவிற்கு ஒட்டாவா தமிழ் ஒன்றியம் விடுக்கும் இரங்கல் செய்தி.

சுரேஸ் அண்ணாவின் இழப்பு ஒட்டாவா தமிழர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!

May 15, 2020 ஒட்டாவாவிற்கு அண்மையில் உள்ள Smith Falls என்ற நகரில் பயணித்து கொண்டு இருந்தவேளை விபத்துக்குள்ளான இன்னுமொரு வாகனத்தில் இருந்தோருக்கு உதவிசெய்யும் போது ஏற்பட்ட விபத்தில் மறைந்தார் என்ற செய்தி, ஒட்டாவா தமிழர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியது.

ஒட்டாவா சுரேஸ் அண்ணா என்று தமிழீழ ஆதரவாளர்களாலும், தமிழ் தேசிய உணர்வாளர்களாலும் அன்பாக அழைக்கப்படும் திரு சுரேஸ் தம்பிராஜா, ஒட்டாவாவில் நீண்ட நாள் தமிழ் செயல்பாட்டாளர். கனடிய தமிழ் பேரவையை (Canadian Tamil Congress - CTC) 2008 இற்கு முன்னர் பலவருடங்கள் முன்னெடுத்தவர். கனடிய தமிழர் பேரவை 2000 இல் ஆரம்பிக்கப்பட்ட போது அதை உருவாக்கியதிலும் முன்னின்றவர். கனேடிய தமிழர்களில் ஈழ தமிழர்களின் விடுதலையில் தொடர்ச்சியாக முன்னின்று உழைப்பவர்கள் மிக குறைவு. சுரேஸ் அண்ணா அவர்கள் 90 களிலிருந்து 2009 வரை தொடர்ச்சியாக ஈழதமிழர்கள் உரிமைகள் சார்ந்து பல செயல்பாடுகளை முன்னெடுத்தவர்.

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் 2014 காலப்பகுதியில் ஆரம்பித்த போதும், சுரேஸ் அண்ணாவுடன் ஈழ தமிழர் உரிமை விடுதலை விடயங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய பலருக்கு அவரின் நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. நமது இனத்தை ஆழமாகக் காதலித்து தனது வாழ்வின் பெரும்பகுதியை தமிழ் இனத்திற்காக அர்ப்பணித்தவர்களில் அண்ணாவுமொருவர். பலரை தனது பேச்சாலும் செயலாலும் நமது இனத்திற்காக செயல்பட வைத்தவர்.

சுரேஸ் அண்ணா ஏனையவர்களுக்கு உதவி செய்வதில் என்றும் பின்நின்றதில்லை. ஆதனால் தான் ஈழ தமிழர்களின் நிலை அறிந்து அந்த அறம் சார் உரிமை மீட்பு போராட்டத்திற்கு முன்னின்று உழைத்தார். பலரும் அஞ்சி பின்னிற்கும் பல தமிழர்சார் விடயங்களை 2009 இற்கு முன்னர் துணிந்து செய்த கடின உழைப்பாளி அவராவார். தமது தொழில் நுட்ப முழு நேர வேலைகளையும் குடும்பத்தையும் கவனிக்கும் அதே நேரம், ஈழ தமிழர் உரிமை சார் கடின பணிகளில் சலிப்போ சோர்வோ அடையாமல் பல வருடங்கள் தொடர்ந்து செயல்பட்ட இவர், கனடா மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் உள்ள தமிழர்களால் அன்புடன் நினைவுகூரப்படுபவர்.

ஒரு சிறந்த, அயராத செயல் வீரர் ஆன அவர், ஒரு சிறந்த புகைப்பட கலைஞரும் ஆவர். பல ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர். இவரின் இழப்பு ஒட்டாவா தமிழர்களுக்கு மட்டுமல்ல கனடிய, புலம்பெயர் தமிழ் உலகத்துக்கே ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அவரின் குடும்பத்தினருக்கும் இந்த தாங்கமுடியாத இழப்பை தாங்கும் பலத்தை கொடுக்க இறைவனை வேண்டுகிறோம். அவர்களின் துயரில் ஒட்டாவா தமிழ் ஒன்றியம் பங்கு கொள்கிறது.

ஒட்டாவா தமிழ் ஒன்றியம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் ..

Link to post
Share on other sites

விடுதலைப்பறவையை ”கிளிக்” செய்த சுரேஷ்!

 

கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் ந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றுக்கு உதவுவதற்காக தனது வாகனத்திருந்து மனைவியுடன் இறங்கி உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிற்பிடமாகக் கொண்டவர். கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவர்.

ஒட்டாவா மாநிலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவு தளத்தை விதைக்கவும் தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்பவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகச் 2009 ஆண்டு வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியிருந்தவர் சுரேஷ்.

இவரின் விடுதலைச் செயற்பாடுகளை நன்கறிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவரின் விடுதலைப் பற்றை மதிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வன்னிக்கு வந்த சுரேஷ் அவர்களை வெளிநாட்டிலிருந்து வருவோரை வரவேற்கும் கிளிநொச்சியில் அமைந்த நந்தவனம் வரவவேற்றது. அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து விசுமடு புளியடியில் அமைந்துள்ள அனைத்துலகத் தொடர்பகத்தில் பொறுப்பாளர் வீ.மணிவண்ணனுடன் (கஸ்ரோ) சந்திப்பும் விருந்தோம்பலும் நடைபெற்றன. கனடாவில் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து பல மணி நேர உரையாடல்கள் நடைபெற்றன.

சுரேஷ் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்காக 2004 ஆண்டு காலகட்டத்தில் உலகத் தரத்தில் மிக விலையுயர்ந்த கனோன் புகைப்படக் கருவியை (Canon Camera) வாங்கி வந்திருந்தார்.

தேசியத் தலைவருடனான சிறப்பு சந்திப்பும் மறுநாளே ஒழுங்கு செய்யப்பட்டது. தேசியத் தலைவர் அனைத்துலகத் தொடர்பகத்திற்கு வருகை தந்து சுரேஷை சந்திக்கிறார். ஒரிரு மணி நேர உரையாடலும் விருந்தோம்பலும் தேசியத் தலைவரால் வழங்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் தேசியத் தலைவருக்காக சுரேஷ் கமெரா எடுத்து வந்த விடயத்தைக் கஸ்ரோ அவர்கள் தேசியத் தலைவரிடம் குறிப்பிட்டார். தலைவரும் அக் கமெராவை எடுத்து வரும்படி கஸ்ரோவிடம் தெரிவித்துக்கொண்டு சந்திப்பை முடித்து கொட்டகையிலிருந்து தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் செல்வதற்கு கதைத்துக்கொண்டு வெளியேறினார்.

அப்போது போராளி ஒருவர் கமெராவை எடுத்து வருகிறார். வரும் வழியில் தேசிய தலைவரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இம்பிரான் – பாண்டியன் படையணிக்குப் பொறுப்பாகவும் இருந்த ரட்ணம் மாஸ்டர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட (பெயர் குறிப்பிட முடியாது) போராளி ஒருவராலும் குறித்த கமெரா பாதுகாப்பு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அக்கமெரா சுரேசின் கைகளில் போராளியால் வழங்கப்பட்டது. குறித்த கமெராவை தலைவர் அவர்களிடம் கையளித்த சுரேஷ், கமெராவின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஆர்வமாக சுரேசிம் தலைவர் கேட்கவே நின்றநிலையில் உரையாடல் மீண்டும் ஒரு மணி வரை தொடர்ந்தது. கமெராவோ மிகப் பொியது, எடையும் கூடியது, லென்சுகளும் பிரமாண்டமானவை.

இயக்கத்திடமே அத்தரத்தில் கமெரா இல்லை என்பதை தேசியத் தலைவர் தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் குறிப்பிடுகின்றார். அதன் பிறகு அக்கமெராவை இயக்குவது குறித்த விளக்ககும் சுரேசால் செய்முறையில் செய்து காண்பிக்கப்பட்டது. தலைவரும் அதை ஆர்வமாகக் கேட்டறிந்தார்.

Screenshot_2020-05-17-06-22-08-73-200x30

அதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் ”என்னை எடுங்கள்” உங்கள் கமெராவின் தரத்தைப் பார்ப்போம் என்று கூறவே சுரேஷ் மிக உச்சாகத்துடன் தலைவரை மாமரத்தின் கீழ் நிறுத்தி படத்தினை எடுத்தார். ஒரு கிளிக் படபடபடபட என சந்தம் சுற்றியிருந்தவர்களை வியக்க வைத்தது. சுரேசும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக படங்களை எடுத்தார்.

பின்னர் எடுத்த படங்களை தலைவரிடம் கமெரா திரையில் சுரேஷ் காண்பிக்கிறார். படங்கள் மிகத்தெளிவாகவும் மிகத் துல்லியமாகவும் இருந்ததைப் பார்த்து தலைவரும் வியந்தார். வியந்தது மட்டுமல்லாமல் சுரேசையும் பாராட்டினார்.

தேசியத் தலைவரை சுரேஸ் எடுத்த படம் அன்றை ஆண்டே அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவால் புலம் பெயர் நாடுகளில் வெளிவரும் தமிழ் தாய் நாட்காட்டியில் பிரசுரிக்கப்பட்டது மட்டும் அல்லாம் இன்று வரை அப்படம் வெளியீடுகளிலும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசியத் தலைவரும் சுரேசும் இணைந்து நிற்க அக்கமெராவால் போராளி ஒருவர் படம் எடுத்தார்.

தொடர்ந்து உரையாடிய தேசியத் தலைவர்கள் அவர்கள் இக்கமெராவை நிசாமிடம் (அருச்சுனா புகைப்படப் பிரிவுப் பொறுப்பாளர்) கொடுக்கும் படி கஸ்ரோவிடம் கூறி சிறிது நேரத்தின் பின் அங்கிருந்து வெளியேறினார்.

பின்னர் வெளிநாட்டிலிருந்து செல்வோர் தேசியத் தலைவருடனான சந்தித்திப்பில் புகைப்படம் எடுக்கும் டிஜிட்டல் மயமான புதிய கலாச்சாரமும் அவ்விடத்திலேயே ஆரம்பமாகியது.

தங்கியிருந்த ஒவ்வொருநாளும் தமிழீழ கட்டுமானங்களை பார்வையிட போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் சுரேஷ். அவர் அங்கிருந்த நாட்களில் தமிழர் தாயகத்தின் இயற்கை அழகுகள், மக்கள், வாழ்வியல், புலிகளின் கட்டுமானங்களை புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தினார்.

தாயகத்திலிருந்து திரும்புப் போது தனது சொந்த தேவைக்காக எடுத்து வந்த அதே மாதிரியான மற்றொரு கமெராவையும் கஸ்ரோ அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தார். அக்கமெரா வெளிநாடுகளிலிருந்து சென்ற தழிழர் ஒருங்கிணைப்புக்குச் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தேசியத் தலைவருடனும், கஸ்ரோ அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதற்கு நிலவன் என்ற போராளியால் இறுதி வரை பயன்படுத்தப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

கனடா திரும்பியதும் தாயக நோக்கிய வேலைத் திட்டங்களை இறுதி வரை முன்னெடுத்தார். 2004 ஆம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக Queens park முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவரும் சுரேஷ் அவர்களே.

தாயகத்தில் எடுத்த புகைப்படங்களை சுரேன் என்ற இணையத்தில் மக்கள், வாழ்வியல், செஞ்சோலை, அறிவுச்சோலை, நவம் அறிவுக்கூடம், மயூரி இல்லம், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பொதுவெளியில் பார்வையிடக்கூடிய படங்களை தரவேற்றம் செய்திருந்தார்.

தமிழீழ கனவை சுமந்து பணியாற்றிய தேசப்பற்றாளனான சுரேஷ் அவர்களின் இழப்பு என்பது பேரிழப்பாகும். அவர் ஆற்றிய விடுதலைப் பணிக்கு தலை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம்.

மீளும் நினைவுகளுடன்
-அகராதி-

http://eelamurasu.com.au/?p=27662

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

//

சுரேஸ் அவர்கள் பற்றிய விரிவான பல தகவல்களை இணைத்தமைக்கு நன்றி அம்பனை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2020 at 13:03, நியாயத்தை கதைப்போம் said:

சுரேஸ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

//

சுரேஸ் அவர்கள் பற்றிய விரிவான பல தகவல்களை இணைத்தமைக்கு நன்றி அம்பனை.

வட்ஸப் வீடியோ ஒன்று பார்த்தேன் சி.டி.வி இன். விபத்தில் சிக்கிய இன்னோர் சாரதிக்கு உதவி செய்ய சென்றபோது மறைந்தார் என. பிள்ளைகளும் கதைக்கின்றார்கள். மிகவும் கவலை தரும் செய்தி. பலமான ஓர் தூணாக நின்று உள்ளார் தமிழ் சமூகத்துக்கு. ஆழ்ந்த அனுதாபங்கள்.

https://ottawa.ctvnews.ca/family-friends-remember-ottawa-man-killed-while-helping-crash-victim-1.4945801

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.