Jump to content

தமிழ்க் கூட்டமைப்பு யாருடைய பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது - சுமந்திரன் செவ்வி

Recommended Posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகின்றவர் என்றால் அது அதன் ஊடக பேச்சாளர் சுமந்திரன்தான். உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அவர் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். அந்தவகையில் மிக அண்மையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சிக்குள்ளேயே பல விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருக்கின்றார். தமிழர் அரசியல் பரப்பின் சர்வதேச அரசியல் வகிபாகத்தில் சுமந்திரனின் பங்களிப்பு கடந்த காலங்களில் முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில் என்ன நடந்தது என்றும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வீரகேசரி சார்பில் அவருடன் செய்த பிரத்தியேக செவ்வியின் விபரம் வருமாறு,

suma.jpg

கேள்வி - கடந்த சில தினங்களை எவ்வாறு கடந்துகொண்டிருக்கின்றீர்கள்?
பதில் - இந்நாட்களில் மிக முககியமாக வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் கூடுதல் நேரம் கடக்கின்றது. அத்துடன் கடந்தவாரம் நான் வழங்கிய நேர்காணல் சம்பந்தமாக தேவையற்ற சர்ச்சை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த சில விடயங்களிலும் ஈடுபடவேண்டியுள்ளது.

கேள்வி - அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகின்றீர்கள். சர்ச்சையில் சிக்கி பிரபலமடையும் தேவை ஏதும் உள்ளதா? அல்லது என்ன நடக்கின்றது?
பதில் - நான் சர்ச்சையை கிளப்ப விரும்புவதில்லை. ஊடகங்கள் சர்ச்சையை கிளப்புகின்றன. நான் சொல்லுகின்ற கருத்துக்கள் கடந்த 10 வருடங்களாக ஒரே விதத்தில் உள்ளன. அதில் மாற்றமில்லை. 10 வருடங்களாக நான் கூறுபவற்றை தற்போதாவது விளங்கிக்கொள்ளவேண்டும். அது ஒரு புது சர்ச்சையாக வரவேண்டிய தேவை இல்லை. அது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

கேள்வி - ஐந்து வயதிலிருந்து கொழும்பில் வாழ்கின்றீர்கள். உங்கள் சிங்கள அறிவு எத்தகையது? சிங்கள மொழிலியில் எதனையாவது கேட்டால் அதனை புரிந்து பதிலளிக்க முடியுமா?
பதில் - ஆம் முடியும். அண்மைக்காலத்தில்தான் சிங்கள மொழியை நான் . உள்வாங்கினேன். அதாவது கடந்த 10 வருடங்களாக சிங்கள அறிவு அதிகரித்தது. அரசியலில் உள்ளதால் சிங்களம் மட்டும் தெரிந்தவர்களுடன் உரையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்தசில வருடங்களாக மேடைகளில் சிங்களத்தில் பேசியிருக்கின்றேன். சிங்களம் விளங்கும்.

கேள்வி - நீங்கள் சிங்களத்தில் கூறுவது சரி என்ற நம்பிக்கை உள்ளதா?
புதில் - நிச்சயமாக இருக்கின்றது.

கேள்வி - நீங்கள் சிங்களத்தில் கூற முற்பட்ட ஏதாவது தவறாக சமூகத்தில் விளங்கப்பட்டுள்ளதா?
பதில் - நான் சிங்களத்தில் கூற முற்பட்டது சிங்கள சமூகத்தில் தவறாக விளங்கப்படவில்லை.

கேள்வி - அண்மையில் நீங்கள் வழங்கிய செவ்வியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து நீங்கள் கூற முற்பட்டது என்ன?
பதில் - கேள்விகளோடு முழுமையாக நேர்காணலை பார்த்தால் அது புரியும். அந்த கேள்விகள் அனைத்தும் கேள்விகளாக அன்றி குற்றச்சாட்டுக்களாகவே குறித்த ஊடகவியலாளர் முன்வைத்தார். சிங்கள மக்கள் மத்தியில் கூட்டமைப்பினர் தீவிரவாதிகள் என காண்பிக்க முயலும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய செவ்வியே அதுவாகும். ஆரம்பத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளினால் உருவாக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால் நான் நேரடியாக அந்த கேள்விக்கு முகம் கொடுக்காமல் சற்று விலகி எங்களுடைய கட்சி 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு பெயர்களுடன் பரிணாம வளர்ச்சியடைந்து தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவெடுத்துள்ளது என்று கூறினேன்.
நான் கேள்வி விளங்காமல் தமிழரசு கட்சி குறித்து பேசுவதாக சிலர் நினைக்கலாம். கேள்வி விளங்கியது. ஆனால் புலிகளினால் ஒரு அரசியல் கட்சி தேவை என்ற ரீதியில் உருவாக்கப்பட்டதல்ல தமிழ்க் கூட்டமைப்பு என்றே நான் கூற முற்பட்டேன்.
பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றதாக அவர் கூறினார். ஆனால் நான் அதனை இல்லை என்று கூறினேன். காரணம் எனக்கு தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் திரு வடிவேற்கரனின் கொழும்பில் உள்ள வீட்டில் நடைபெற்றது என்பது எனக்கு தெரியும். அப்போது நான் கூட்டமைப்பில் இல்லை. ஆனால் இது எனக்கு தெரியும். எனவே கொழும்பில் நடந்தக் கூட்டத்துக்கு பிரபாகரன் தலைமைதாங்கியிருக்க வாய்ப்பில்லை.

கேள்வி - ஆனால் கூட்டு கட்சிகள் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது 2001 ஆம் ஆண்டு புலிகளின் தலையீட்டுடன் அல்லது அவர்களின் ஆலோசனையுடன் தானே உருவாக்கப்பட்டது? புலிகள் தானே இதற்கு அடித்தளம் இட்டனர்?
பதில் - அதனை பற்றிய சரியான விளக்கம் என்னிடம் இல்லை. காரணம் அந்நேரம் அரசியலில் இல்லை. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொலைக்காட்சியில் ஒரு தடவைக்கு மேல் அளித்த பேட்டிகளில் இந்த கேள்வி எழுப்பப்பட்டபோது கூட்டமைப்பு புலிகள் உருவாக்கியது அல்ல என்று பதிலளித்திருக்கிறார். புலிகளின் ஈடுபாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப நாட்களில் இருந்தே இருந்தது என்பது எனக்கு தெரியும். அதனை நான் குறித்த செவ்வியிலும் கூறியிருக்கின்றேன்.

கேள்வி - புலிகளின் ஈடுபாடு இருந்தது. ஆனால் அவர்களினால் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படவில்லை. அப்படியா?
பதில் - அதுவும் எனக்கு தெரியாது. ஆனால் அதனை கூட்டமைப்பின் தலைவர் கூறியிருக்கின்றார். ஆனால் சேர்ந்து இயங்கியது என்பது தெரியும். இந்த செவ்வியிலும் 2001 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர்பு இருந்தது என்று நான் கூறியிருக்கின்றேன்.
கூட்டமைப்பு யாரின் பின்னணியில் உருவாகியது என்று எனக்கு தெரியாது. ஆனால் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து புலிகளுடன் சேர்ந்து இயங்கினார்கள் என்பது எனக்கு தெரியும்.

கேள்வி - இந்த கேள்விக்கு நீங்கள் இராஜதந்திரமாக பதில் கூறுகின்றீர்களா? அல்லது இது உங்கள் நேர்மையான பதிலா?
பதில் - இது என்னுடைய நேர்மையான பதில்

கேள்வி - பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை ஏற்கமாட்டேன் என்று ஏன் கூறுகின்றீர்கள்?
பதில் - பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை ஏற்கமாட்டேன் என்று நான் எப்போதும் கூற மாட்டேன். நான் அவ்வாறு இந்த செவ்வியிலும் கூறவில்லை. புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை நீங்கள் ஏற்கின்றீர்களா? ஆல்லது உடன்படுகின்றீர்களா? என்பதே குறித்த செவ்வியில் எழுப்பப்பட்ட கேள்வியாகும். நான் அதற்கு இல்லை என்று கூறிவிட்டு உடனடியாகவே நானாகவே அதற்கான காரணத்தையும் கூறினேன். நான் எப்போதுமே வன்முறைகளை வெறுப்பவன். ஆயுத முறைமையை நான் ஏற்கமாட்டேன். ஆயுதத்தினால் செய்யப்படுகின்ற வன்முறையை நான் ஏற்கமாட்டேன். எதனையும் அடைவதற்கு ஆயுத முறையை பிரயோகிப்பதை ஏற்பனவன் அல்ல நான். வன்முறை பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு முறையாக இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி - சரி புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் - புலிகளுடைய மட்டுமல்ல தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டம் தொடர்பாக நான் பல இடங்களில் பேசியிருக்கின்றேன். இந்த சர்ச்சை வந்ததால் இதனை கூறுகின்றேன் என்று யாரும் நினைக்கக்கூடாது. இது தொடர்ச்சியாக நான் கூறிவருகின்ற விடயமாகும். 2011 இல் வந்தாறுமூலையில் தந்தை செல்வாவின் நினைவு பேருரையை நான் நிகழ்த்தியபோது பகிரங்கமாக இது குறித்து சில விடயங்களை குறிப்பிட்டேன். அது குறித்து தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோர் எனக்கு ஆதரவாக பேசினர். செய்திகள் வரும்போது முழுப் பிம்பமும் வராது. ஒரு தலைப்புத்தான் வரும். ஈழத்து காந்தி என்று தந்தை செல்வா அழைக்கப்பட்டார். காந்தியடிகள் விடுதலைக்காக அல்லது தனக்கு ஆதரவாக யாராவது ஆயுத போராட்டத்தை நடத்தினால் தனது சாத்வீக போராட்டத்தை நிறுததிவிடுவார். காரணம் தன்னுடைய சாத்வீக போராட்டத்துக்கு களங்கம் வரக்கூடாது என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். அதுதான் காந்திய வழி. அதைத்தான் தந்தை செல்வா செய்தார். எனவே வன்முறை தகாதது. வன்முறை தவிர்க்கப்படவேண்டியது. நீதி கேட்டு போராடுகின்ற நாங்களும் மற்றவர்கள் விடயத்தில் நீதியாக இருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்றே அந்தக் கூட்டத்தில் கூறியிருந்தேன்;.
நடராஜா ரவிராஜ் 2014 ஆம் ஆம் ஆணடு நவம்பர் மாதம் நடராஜா ரவிராஜின் நினைவு பேருரையை நிகழ்த்தியிருந்தேன். அதன் தொனிப்பொருள் மென்வலு என்பதாகும். அதில் நான் இந்த விடயத்தை விபரமாக கூறியிருந்தேன். அதில் மென்வலுவை விபரித்து சொல்லும்போது வன்வலு இருக்கக்கூடாது என்று கூறினேன்.
புலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்கவேண்டும். ஆனால் அந்த அர்ப்பணிப்பு வீணாகாமல் இருக்கவேண்டுமானால் நாங்கள் இன்றைய நாளில் ஆயுதத்தை தொடக்கூடாது. புலிகளின் அர்ப்பணிப்பு வீணாகாதவாறு எமது உரிமையை வென்றெடுக்கவேண்டும் என்று கூறினேன். ஆயுத வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனினும் நான் தவறு என்று நினைக்கும் பாதையில் வேறு வழியின்றி மக்களுக்காக உயிரைக் கொடுத்த அந்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது என்று கூறியிருக்கின்றேன்.
யாழில் வாள்வெட்டு குழுக்கள் இயங்கியபோதும் நான் பேசியிருக்கின்றேன். வன்முறை கலாசாரம் எமது சமூகத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டும். வன்முறையை நாங்கள் போற்றுகின்ற காரணத்தினால் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நான் கூறியிருந்தேன். இவற்றை நான் தொடர்ச்சியாக பேசியுள்ளேன்.
அன்று புலிகள் எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று நாம் இன்று விவாதிக்க முடியாது. ஆனால் இன்றைய நிலையில் தமிழர்கள் யாரைக் கேட்டாலும் ஆயுத போராட்டம் வேண்டாம் என்றே கூறுவார்கள். இன்று நாங்கள் ஆயுத போராட்டம் வேண்டாம் என்று கூறுவதானது அன்றைய தீர்மானம் தவறு என்று பொருள்படாது.

கேள்வி - அப்படியானால் புலிகளின் அர்ப்பணிப்பை நீங்கள் மதிக்கின்றீர்கள்?
பதில் நிச்சயமாக நான் மதிக்கின்றேன். அதனை இந்த சர்ச்சை எழுந்ததால் கூறவில்லை. கடந்த 10 வருடங்களில் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.

கேள்வி - புலிகளின் போராட்டம் காரணமாகவே தமிழர் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டது என்பது குறித்து ?
பதில் - அது எங்களுக்கு நன்மையளிக்கும் வகையில் சர்வதேசமயப்படுத்தப்பட்டதா? அல்லது தீமையளிக்கும் வகையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகளைக் கொண்டது. அதனால் இலாபமான நிலையும் ஏற்பட்டது. அது எனக்கு தெரியும். எதிரான நிலைப்பாடுகளும் ஏற்பட்டன. 30 க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை தடை செய்தன. இன்றும் அந்த தடை உள்ளது. எனவே இது சர்வதேசத்தில் எமது போராட்டத்தை முன்கொண்டு சென்றதா? பின் கொண்டு சென்றதா என முடிவுக்கு வருவது கஷ்டமாகும்.

கேள்வி - தேர்தல் காலத்தில் இவ்வாறான ஒரு சர்ச்சை ஏற்பட்டமை தொடர்பில் ?
பதில் -இல்லை. தேர்தல் காலத்தில் சர்ச்சை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணுபவன் நான அல்ல. அவ்வாறு நினைப்பவர்கள் பலர் இருக்கலாம். எனது கட்சியிலும் இருக்கலாம். எல்லாவற்றையும் பூசி மொழுகி இந்த காலத்தை கடந்துவிடவேண்டும் என்று நினைக்கின்ற அரசி;யல்வாதிகள் உள்ளனர். நான் அப்படியல்ல. வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் உண்மையை பேசவேண்டும் என்று நினைப்பவன்.

கேள்வி - பங்கரில் தூங்காத ஒருவர் எமது போராட்டத்தை பற்றி பேச அருகதை இல்லை என்று உங்கள் கட்சியை சேர்ந்தவர் கூறுகிறார்.
பதில் - இன்றைய நிலையில் தமிழ் மக்களில் யாரைக் கேட்டாலும் ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்றுதான் கூறுவார்கள். பங்கரில் தூங்கியவர்களும் அதைத்தான் கூறுவார்கள். எனவே எனக்கு தகுதி இருக்கின்றதா என்றால் இருக்கின்றது. இந்த விடயத்தில் நான் கூறுவதைத்தான் எவரும் சொல்வார்கள் என்பது தெரியும். இதில் சவால் விடவும் நான் தயார். நேரடியாக பாதிக்கப்படவேண்டும் என்று இல்லை. தென்னிலங்கையில் நான் பாதிக்கப்பட்டவன். வடக்கில் இந்திய அமைதிப் படையிடம் நான் அடி வாங்கியவன். எனவே நான் பாதிக்கபபடவில்லை என்று கூற முடியாது. பாதிக்கப்பட்டால்தான் பேச முடியும் என்பதனை ஏற்க மாட்டேன்.

கேள்வி - சம்பந்தனை தவிர கூட்டமைப்பு பிரதிநிதிகள் 99 வீதமானவர்கள் உங்களை எதிர்க்கின்றனரே? ஏன் இந்த நிலை?
பதில் - அப்படியல்ல. பலர் பகிரங்கமாக வெளியில் பேசாவிட்டாலும் அமைதியாக இருக்கின்றனர். ஏன்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளனர். 99 வீதமானவர்கள் எதிர்ப்பதாக நான் ஏற்கமாட்டேன்.

கேள்வி - இந்த சர்ச்சையின் பின்னர் தலைவர் சம்பந்தன் உங்களுடன் தொடர்புகொண்டாரா?
பதில் - என்னுடன் பல விடயங்கள் சம்பந்தமாக பேசியிருக்கின்றார். இந்த சர்ச்சையை பற்றி இதுவரை பேசவில்லை.

கேள்வி - உங்களை கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்கவேணடும் என்று தலைவருக்கு கடிதம் ஒன்றை ஏனைய பிரதிநிதிகள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னரும் நீங்கள் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருப்பீர்களா?
பதில் - நான் கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் தான் இப்போதும் பேச்சாளர். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கேள்வி - நீங்கள் பேசியது உங்கள் தனிப்பட்ட கருத்து என்று தமிழரசுக் கட்சி தலைவர் மாவை கூறியுள்ளாரே?
பதில் - தனிப்பட்ட கருத்து என்று கூறுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும் கூறுகின்றனர். அது தவறானது. அப்படியானால் கட்சியின் நிலைப்பாடு ஒன்று என்றும் நான் வேறு நிலைப்பாட்டை கூறுகின்றேன் என்றும் சொல்வர். அத ஏற்புடையதல்ல. என்னுடைய நிலைப்பாடு என்னுடைய கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறானது அல்ல. வன்முறைக்கு ஆயுதத்துக்கு எதிரானவன் என்று நான் கூறும்போது அது எனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாது அல்ல.

கேள்வி - கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். உண்மையில் சம்பந்தனின் தலைமைத்துவத்தில் சுமந்திரனின் அழுத்தம் இருக்கின்றதா?
பதில் - சம்பந்தன் சேனாதிராஜா ஆகிய இருவரும் கூட்டமைப்பின் தீர்மானங்கள் தொடர்பில் என்னுடன் கலந்துபேசாமல் முடிவெடுப்பது கிடையாது. அது உண்மையாகும். சும்பந்தன் என்னுடைய ஆலோசனையை கேட்பார். ஆனால் எல்லா முடிவுகளும் நான் கூறும் விதத்தில் நடந்தது கிடையாது. உதாரணமாக 2015 இல் தேர்தல் முடிந்ததும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்கர் விக்கினேஸ்வரனை கட்சியைவிட்டு நீக்கவேண்டும் என்று நான்பிரேரித்தேன். ஆதனை யாரும் ஏற்றுக்காள்ளவில்லை. நான் தீர்மானிப்பவன் அல்ல. என்னுடைய பங்களிப்பு இருக்கும். விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டபோது யாழிலிருந்து நொடிக்கு ஒருதடவை சேனாதிராஜா என்னுடன் உரையாடினார். ஆனால் நான் சொன்னது நடக்கவில்லை.

கேள்வி - 2013 ஆம் ஆண்டு விக்கினேஸ்வரனை கொண்டுவந்து முதலமைச்சராக்கியது தவறு என்று கருதுகின்றீர்களா?
புதில் ஆம். அது தவறான முடிவு. தவறான தெரிவு. அதில் எனக்கும் பங்கு உள்ளது. நாங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.
கேள்வி - சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்தவை சந்தித்தீர்கள். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது எமக்கு தீர்வு கிடைத்தால் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்போம் என்று கூறியிருந்தீர்களே?
பதில் - தமிழ் மக்களின் அபிலாஷைகளை மதிக்கும் விதமாக ஒரு தீர்வுக்கு வந்தால் அந்த தீர்வு செயற்பாட்டில் அரசுக்கு நாங்கள் ஆதரவாக செயற்படுவோம். புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது நியாயமான தீர்வுக்கு வந்தால் அதனை செயற்படுத்த நாம் ஆதரவு வழங்குவோம்.

கேள்வி -கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் தலைவர்களும் உங்களை விமர்சித்துள்ளனர். இதன் பின்னணியில் கட்சியின் பேச்சாளராக தொடர்வது யதார்த்தமா?
பதில் -ட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக நான் செயற்படவில்லை. அதனை தெளிவுபடுத்தியுள்ளேன். அவர்கள் அனைவரும் குறித்த செவ்வியை முழுமையாக பார்த்து சரியாக விமர்சித்தார்களா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக நான் கூறியதாக அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் அதனை முழுமையாக பார்க்கவில்லை என்பது தெரிகின்றது. அதனை நான் விளங்கப்படுத்துவேன்.
குறித்த செவ்வி இணையத்தில் வந்தது. அது தமிழ் மக்களுக்கு தெரியாது. அந்த செவ்வியை நானே எனது முகப்புத்தகத்தில இட்டேன். கடுமையான நேர்காணல் என்று பதிவிட்டிருந்தேன். மூன்று நாட்களுக்கு பின்னர்தான் அதில் உள்ள ஒரு சில பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு ஒரு ஊடகத்தில் வெளியிடப்பட்டன. அப்போதுதான் சர்ச்சை எழுந்தது. இந்த செவ்வி சிங்கள மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
எங்களை குறித்த நல்லெண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. அதனை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறு தவறான மொழிப்பிரயோகத்துடன் ஒளிபரப்பு செய்தார்கள்.
இந்த செவ்வி வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் கூட தவறு விடப்பட்டிருந்தது. போராட்டம் என்ற சொல் கேள்வியில் இருக்கவில்லை. எமது அரசியல் போராட்டம் முக்கியமானது. ஆத்மீகமானது. பல வடிவங்களை எடுத்திருந்தது. குறித்த ஊடகவியலாளர் போராட்டம் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. மாறாக வியாபாரய என்ற சொல்லை பயன்படுத்தினார். வியாபாரய என்றால் செயற்பாடு என்று பொருள். ஆயுத செயற்பாடு அல்லது நடவடிக்கைகள் என்றுதான் கேள்வியெழுப்பினார். அங்கு தவறான மொழிப் பெயர்ப்பு இடம்பெற்றது.

கேள்வி - விமர்சிப்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?
பதில் - குறித்த காணொளியை முழுமையாக பாருங்கள் என்பதையே நான் அவர்களிடம் கோருகின்றேன். என்னுடைய கட்சியை சேர்ந்த சிலர் என்னுடன் பேசினர். அவர்கள் இதுவரை இது குறித்து பொதுவெளியில் பேசவில்லை. ஒருவருக்கு நன்றாக சிங்களம் தெரியும். அவர் இதனை முழுமயாக பார்த்ததாகவும் எந்தவிதமான தவறையும் காணவில்லை என்றும் கூறினார். மற்றுமொருவருக்கு சிங்களம் தெரியாது. சுர்ச்சை வெடித்தவுடன் இந்த காணொளியை சிங்கள ஆசிரியரிடம் எடுத்துச் சென்று மொழிப் பெயர்ப்பு செய்து பார்த்திருக்கின்றார். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.
அதுமட்டுமல்ல அந்த செவ்வியின் நோக்கம் என்ன என்பது அதனை பார்க்கின்றவர்களுக்கு தெரியும். அந்த பின்னணியுடன் அதனை பார்த்தால் அதனை பாராட்டுவார்களே தவிர விமர்சிக்கமாட்டார்கள்.

கேள்வி - ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று இம்முறை வெற்றிபெறுவதாக குறிப்பிட்டிருந்தீர்களே? அவ்வாறு முடியுமா?
பதில் - அந்த பதிலையும் கேள்வியுடன் சேர்த்துத்தான் நாம் பார்க்கவேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் வாக்குகளை எடுப்பதென்றால் ஒரு தீவிரவாதியாக பிரிவினைவாதியாக இருந்தால்தான் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அவர் கூற முற்பட்டார். அதாவது மோசமான படம் ஒன்றை சிங்கள மக்களுக்கு காட்ட முயற்சித்தார். தமிழ் வாக்காளர்களை பற்றி அவர் ஒரு செய்தியை கூற முற்படுகின்றார். எனவே இம்முறை உன்னால் இவ்வாறு வாக்குகளை எடுக்க முடியுமா? ஏன்று அவர் கேட்டார். அதற்கு பதிலளிக்கும்போது தான் 58000 அல்ல இரண்டு மடங்கு எடுப்பேன் என்று குறிப்பிட்டேன். வாக்குகளை எடுப்பேன் என்பது அங்கு முக்கியமல்ல. எங்களுடைய மக்கள் நாட்டை துண்டாட நினைப்பவர்கள் அல்ல என்பதனை நான் எடுத்துரைத்தேன்.

கேள்வி - இந்த சர்ச்சையினால் உங்கள் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது?
பதில் - அதனை பற்றி நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை. கவலைப்பட்டதில்லை. தேர்தலில் வெல்வது வெற்றிபெறாததை பற்றி எண்ணி நான் அரசியலில் ஈடுபட்டதில்லை.
கடந்த தேர்தலின்போது முதலாவது பிரசாரக் கூட்டம் கரவெட்டியில் நடைபெற்றது. அதில் என்னுடன் ஏனைய வேட்பாளர்களான சித்தார்த்தன் சிறிதரன் மற்றும் அருந்தவபாலன் ஆகியோரும் இருந்தனர். அதில் நான் உரையாற்ற எழுந்தபோது சட்டத்தரணி நடராஜா என்ற மூத்த உறுப்பினர் எழுந்து நான் சம்பந்தனுடன்

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றது தவறு என்றும் அது தங்களை வெகுவாக பாதித்துள்ளாகவும் அதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் எனக்கு வாக்களிக்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டார். எனது உரையில் நானும் சம்பந்தனும் சுதந்திர தினத்தில் பங்கேற்றமைக்கான காரணங்களை விளக்கினேன். நாங்கள் அதில் பங்கேற்றது சரியென்று கருதுகிறோம். அது சரி என்பதால் மன்னிப்பு கேட்க முடியாது. நான் செய்தது தவறு என்று நினைப்பவர்கள் எனக்கு வாக்களிக்கவேண்டாம். கட்சிக்கு வாக்களித்துவிட்டு ஏனைய வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை அளியுங்கள். நான் செய்தது தவறு என்று நினைக்கும் எவரினதும் வாக்கு எனக்கு வரவே கூடாது என்று குறிப்பிட்டேன். கூட்டம் முடிந்தும் இம்முறை தான் ஒரு விருப்பு வாக்கையே அளிப்பதாகவும் அதனை சுமந்திரனுக்கே அளிப்பதாகவும் நடராஜா தெரிவித்திருந்தார். தேர்தலில் நான் கட்சி தலைவர் எடுத்த வாக்குகளுக்கு அண்மித்த வகையில் வாக்குகளை பெற்றேன். ஆனால் மாவை சேனாதிராஜா எனக்காக பிரசாரம் செய்தார். தனக்கு வாக்கு கேட்டு அவர் பிரசாரம் செய்யவில்லை.
எனவே இம்முறை தேர்தல் வரும்போது பார்ப்போம். மக்கள் மற்றுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்புகின்றனரா? இல்லை வன்முறையற்ற முறையில் போராட்டத்தை நடத்தி செல்ல விரும்புகின்றனரா? என்பதனை தீர்மானிக்கட்டும். வன்முறைதான் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் எனக்கு அவர்கள் வாக்களிக்கக்கூடாது.

 நேர்கண்டவர் - ரொபட் அன்டனி

https://www.virakesari.lk/article/82146

Link to comment
Share on other sites

ஒற்றையாட்சி தீர்வை சமஸ்டி என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்ற நினைத்த ஒரு மோசமான பேர்வழி இந்த சுமந்திரன். தற்போது தமிழின படுகொலைகாரர்களின் எடுபிடியாக மாறியுள்ளதால் வெள்ளையடிக்க பல எடுபிடிகள் முயல்கின்றனர்.

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

கேள்வி - புலிகளின் போராட்டம் காரணமாகவே தமிழர் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டது என்பது குறித்து ?
பதில் - அது எங்களுக்கு நன்மையளிக்கும் வகையில் சர்வதேசமயப்படுத்தப்பட்டதா? அல்லது தீமையளிக்கும் வகையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகளைக் கொண்டது. அதனால் இலாபமான நிலையும் ஏற்பட்டது. அது எனக்கு தெரியும். எதிரான நிலைப்பாடுகளும் ஏற்பட்டன. 30 க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை தடை செய்தன. இன்றும் அந்த தடை உள்ளது. எனவே இது சர்வதேசத்தில் எமது போராட்டத்தை முன்கொண்டு சென்றதா? பின் கொண்டு சென்றதா என முடிவுக்கு வருவது கஷ்டமாகும்.

இந்த சர்வதேச முயற்சியை குழப்பியடிப்பதில், சொறிலங்கா அரச கொலைகாரர்களுக்கு சார்பாக மாற்றுவதில் முன்னின்ற ஒருவர் இந்த எடுபிடி சுமந்திரன் என்பதை எல்லோரும் அறிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு சுமந்திரன் அவர்களே நீங்கள் மிகவும் ஒரு அறிவாளியாக இருக்கலாம் இருந்துவிட்டுப்போங்கள் ஆனால் அது ஒரு தமிழ்ப் பொதுமகனுக்கும்கூட பிரயோசனமில்லை ஆகவே ஐந்துவயதுச் சிங்கள நண்பர்களைத் தேடிப்பிடித்து அதனுடன் தற்போதைய சிங்கள நண்பர்களுடனும் மிகுதிக்காலத்தைக் கடந்துவிடுங்கள் ஒரு நியமன பராளுமன்ற உறுப்பினராகப் பதவிவகிக்க இப்போதுள்ள சிங்கள விசுவாசத்தைவிட பாதிக்குக் குறைவாக இருந்தாலே போதும் அதைவிட அப்படி இருப்பதால் உங்களுக்கு மனக்களைப்பு இருக்காது (ஸ்ரெஸ்) 

நல்லாச் சம்பாதிச்சு வைத்திருக்கிறியள் போதாக்குறைக்கு அல்லேலுயாக் கொச்டிக்கு ஆள்பிடித்தால் தலைக்கு ஒரு லட்சம் உங்கள் மனைவிக்குக் கொடுக்கிறார்கள் (இதை நான் சொல்லவில்லை மருவன்புலவு சச்சிதானந்தம் சொன்னது) உங்கட பிள்ளைகள் சிறீலங்கா அரசினால் கொடுக்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்தில் வெளிநாடுகளில் படிக்கிறார்கள் இதைவிட என்னய்யா உங்களுக்கு வேண்டும்.

தமிழர் அரசியலுக்கு அதுக்குச் சரிப்படமாட்டீர்கள்

சாதாரணமாக புலத்துத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் இணைத்து ஒரு சமாந்தரமான அரசியல் கொள்கைத்திட்டத்திடன் கூடிய தாயகம் தொடர்பான பயணமே இப்போது தேவை ஆனால் நீங்கள் மாயைக்குள் சிக்கியுள்ளீர்கள் அதாவது ஆரிய மாயைக்குள் எங்களுக்குத் தெரியும் இந்திய உளவுத்துறையும் தெற்குமாடமும் "நாங்கள் சொன்னபடி அரசியல் செய்யுங்கள் இல்லையேல் வுடுதலைப்புலிகளை அழித்ததுபோல் உங்களையும் அழித்துவிட்டு அவ்விடத்தில் யாரையும் அமர்த்தும் திறன் எம்மைடத்தில் இருக்குது எனக் கூறியது" விடுதலைப்புலிகள் இல்லாதுபோனபின்பு தமிழர்தரப்பு பலவீனமடைந்தது உண்மையே ஆனால் அப்படியான சூழல் தொடர்ந்தும் இருந்துவிடாது, காலம் எல்லாவற்றையும் காலக்கிரமத்தில் மாற்றிவிடும் எமக்கான தன்னிகரற்ற தலைமை திடீரென வந்துவிடுவதில்லை உங்களைப்போலான போலிகள் காலம்காலமாக வந்தபின்பே பலம்மிக்க ஒரு தலைமை அதுவும் எநதவித விட்டுக்கொடுப்புகளும் இல்லாது சுயநலம் பார்க்காத அதற்காகத் தனது சொந்தபந்தங்கள் உறவுகள் அனைத்தும் ஒழிந்துவிட்டாலும் ஓந்துவிடாத தலைமை காலம் பல கடந்துபோனாலும் வந்தே தீரும் முள்ளிவாய்க்காலில் சரித்ததுபோல் அதனை உங்களால் இலகுவில் சரிக்கமுடியாது காரணம் கடந்தகாலப் பட்டறிவு அவர்களுக்குப் பாடமாக அமையும் அததலைமையயும் சிலர் சரிக்கலாம் அப்போது விடுதலை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் இன்னுமொரு மைல்க்கல் தூரத்துக்கு அத்தலைமை எம்மைக் கொண்டுபோயிருக்கும்.

இப்படியான காத்திரமான பயணங்களுக்கு இடையில் நாடகக் கோமளிகளாக நீங்கள் தப்பாட்டம் ஆட வந்திருக்க்கிறீர்கள்  ஆடுங்கள் அடுதத் ஆட்டம் தொடர்வதற்குள் அவர்களது அசுவாசம் கலைவதற்குள் மேடையில் சற்று நிதானமாகவே ஆடுங்கள் கவனம் இடுப்பில் கட்டியியுக்கும் வேட்டியை சிங்களவனும் இந்தியனும் உருவிவிடப்போகிறான் காரணம் நீங்கள் கோமாளிகள்தானே மேடைக்குக் கீழே இருப்பவர்களுக்கு அதுவும் நல்ல பகிடியாகத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

கேள்வி - புலிகளின் போராட்டம் காரணமாகவே தமிழர் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டது என்பது குறித்து ?
பதில் - அது எங்களுக்கு நன்மையளிக்கும் வகையில் சர்வதேசமயப்படுத்தப்பட்டதா? அல்லது தீமையளிக்கும் வகையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகளைக் கொண்டது. அதனால் இலாபமான நிலையும் ஏற்பட்டது. அது எனக்கு தெரியும். எதிரான நிலைப்பாடுகளும் ஏற்பட்டன. 30 க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை தடை செய்தன. இன்றும் அந்த தடை உள்ளது. எனவே இது சர்வதேசத்தில் எமது போராட்டத்தை முன்கொண்டு சென்றதா? பின் கொண்டு சென்றதா என முடிவுக்கு வருவது கஷ்டமாகும்.

சிங்களம், வெளியக அடிப்படையில் புலிகளை “பயங்கரவாதிகள்” என்ற முத்திரை குத்தி முடக்கிய பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இது குறித்த ஒரு சிந்தனையும் இல்லாத, போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம்’ (Human shield) மற்றும் சிறுவயதினரை போரில் இணைத்தல்  (Child soldiers)  என்ற பதத்தை பயன்படுத்தியதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த உலகளாவிய சதிக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 

நாடு நாடாக சென்று ஆயுத பயிற்சி, தளவாட மற்றும் பலவேறு உதவிகளை சிங்களம் பெற்றது. கடன்களையும் வாங்கியது. இந்தியா, அளவிற்கு மேலாக உதவியது. 

ஆகவே, எமது ஆயுத போராட்டத்தை சிங்களம் தான் சர்வதேசமயப்படுத்தியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பே  உயிருக்கு ஊசலாடும்பொழுது
அதை யார் உருவாக்கியது என்பது இப்போது தேவையில்லாத ஒரு விடையம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதற்கான விளக்கக்கட்டுரை உள்ளது. பத்திரிகையாளர்களின் முயற்சியினால்தான் உருவாக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

சிங்களம், வெளியக அடிப்படையில் புலிகளை “பயங்கரவாதிகள்” என்ற முத்திரை குத்தி முடக்கிய பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இது குறித்த ஒரு சிந்தனையும் இல்லாத, போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம்’ (Human shield) மற்றும் சிறுவயதினரை போரில் இணைத்தல்  (Child soldiers)  என்ற பதத்தை பயன்படுத்தியதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த உலகளாவிய சதிக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 

நாடு நாடாக சென்று ஆயுத பயிற்சி, தளவாட மற்றும் பலவேறு உதவிகளை சிங்களம் பெற்றது. கடன்களையும் வாங்கியது. இந்தியா, அளவிற்கு மேலாக உதவியது. 

ஆகவே, எமது ஆயுத போராட்டத்தை சிங்களம் தான் சர்வதேசமயப்படுத்தியது. 

அம்பனை எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதற்கு ஶ்ரீலங்கா அரசாங்கங்கள் போராட்டம் தொடங்கிய 1980 காலப்பகுதியிலேயே ஆரம்பித்து விட்டன. எங்கெல்லாம சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதைப்பயன்படுத்தி சிறப்பான பரப்புரைகளை ஶ்ரீலங்கா அரசு செய்தே வருகிறது. அது இயல்பானது. ஆகவே  அது பற்றி நாம் விவாதிப்பதோடு அவர்களின் அவ்வாறான பரப்புரைகளுகு எமது தரப்பில் எப்படியெல்லாம் எம்மையறியாது  நாம்  உதவி செய்தோம் என்று எம்மிடையே கலந்துரையாடுவதன் மூலம்  எதிர்கால சந்திதி அத்தவறுகளை அறிந்து அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும். அதை விடுத்து முழுத்தவறும் அடுத்தவன் மீது போட்டு எமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மீண்டும் அப்படியான நச்சு வளையத்திற்கு எம்மை அழைத்து செல்லலாம். 

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதற்கான விளக்கக்கட்டுரை உள்ளது. பத்திரிகையாளர்களின் முயற்சியினால்தான் உருவாக்கப்பட்டது. 

இது பற்றி , யார் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பை உருவாக்கியது என்பது சம்பந்தமாக நேற்றைய Daily  Mirror பத்திரிகையின் Opinion பக்கத்தில் திரு D B S ஜெயராஜ் என்பவர் நல்லதோர் விளக்க கட்டுரை எழுதி இருக்கிறார். முடியுமென்றால் யாரவது அதை இதில் பதிவிடுங்கள். அங்கு எல்லாமே விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று சுமந்திரன் இல்லை என்றால் செய்திக்கே பஞ்சம் ஏட்படும்போல இருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதற்கான விளக்கக்கட்டுரை உள்ளது. பத்திரிகையாளர்களின் முயற்சியினால்தான் உருவாக்கப்பட்டது. 

கூட்டமைப்பின் பேச்சாளருக்கே யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை...

சம்பந்தன் மாவை இருவரும் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறார்கள், யாராவது ஒருவர் அல்லது சுமந்திரன் 

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லை ஆனால் 2001 அல்லது 2004 இல் இருந்து 2008/2009 வரை அவர்களுடன் இணைந்து அல்லது அவர்களின் வற்புறுத்தலால் ( எமது உயிர்களுக்கு அஞ்சி) அவர்களின் வேண்டுகோளின்படி செயற்பட்டோம் ஆனால் தற்போது அவர்களின் ஆயுத போராட்டத்தை ஆதரிக்கவில்லை கொள்கைகளையும் ஆதரிக்கவில்லை

என்று அறிக்கை விடலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தெரிவித்தால் எப்போதுமே ஒரு பிரச்சனைகளும் எழாது....

Link to comment
Share on other sites

30 minutes ago, tulpen said:

அம்பனை எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதற்கு ஶ்ரீலங்கா அரசாங்கங்கள் போராட்டம் தொடங்கிய 1980 காலப்பகுதியிலேயே ஆரம்பித்து விட்டன. எங்கெல்லாம சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதைப்பயன்படுத்தி சிறப்பான பரப்புரைகளை ஶ்ரீலங்கா அரசு செய்தே வருகிறது. அது இயல்பானது. ஆகவே  அது பற்றி நாம் விவாதிப்பதோடு அவர்களின் அவ்வாறான பரப்புரைகளுகு எமது தரப்பில் எப்படியெல்லாம் எம்மையறியாது  நாம்  உதவி செய்தோம் என்று எம்மிடையே கலந்துரையாடுவதன் மூலம்  எதிர்கால சந்திதி அத்தவறுகளை அறிந்து அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும். அதை விடுத்து முழுத்தவறும் அடுத்தவன் மீது போட்டு எமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மீண்டும் அப்படியான நச்சு வளையத்திற்கு எம்மை அழைத்து செல்லலாம். 

எமது மத்தியில் உள்ள பிரிவினைகள் எமது போராட்டங்களை அழித்தன என்றாலும், உலக சக்திகள் எமக்கு எதிராக இருந்தது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. 9/11 ஒரு முக்கிய எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்தது. ஒரு நாடான ஈராக்கே அழிந்தது. 

இதுவரை உலகம் காணாத ஒரு வரலாற்றை உலகின் இன்று கண்டு கொண்டிருக்கின்றது. யாருக்குமே தெரியாது என்ன நடக்கும்? என. இதில், புதிய உலக வரலாற்றில் புதிய மாற்றங்கள் நிகழும். அதில் நாடுகள் உருவாகவும் கூடும்.  

Link to comment
Share on other sites

15 minutes ago, ampanai said:

இதுவரை உலகம் காணாத ஒரு வரலாற்றை உலகின் இன்று கண்டு கொண்டிருக்கின்றது. யாருக்குமே தெரியாது என்ன நடக்கும்? என. இதில், புதிய உலக வரலாற்றில் புதிய மாற்றங்கள் நிகழும். அதில் நாடுகள் உருவாகவும் கூடும்.  

நிச்சயமாக ஈழம் உருவாகாது. இப்போது எல்லா வல்லரசு  நாடுகளுக்கும் இலங்கை தேவைப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

Just now, Vankalayan said:

நிச்சயமாக ஈழம் உருவாகாது. இப்போது எல்லா வல்லரசு  நாடுகளுக்கும் இலங்கை தேவைப்படுகின்றது. 

எவ்வாறு ஜெர்மனி இரண்டானது இல்லை கொரியா இரண்டானதோ ... 

Link to comment
Share on other sites

Just now, ampanai said:

எவ்வாறு ஜெர்மனி இரண்டானது இல்லை கொரியா இரண்டானதோ ... 

அப்படி என்றால் தென் சூடான் உருவாகியபோது, எரித்திரியா உருவாக்கியபோது, கிழக்கு திமோர் உருவாக்கியபோது ஏன்  ஈழம் உருவாகவில்லை?. 

Link to comment
Share on other sites

2 minutes ago, Vankalayan said:

அப்படி என்றால் தென் சூடான் உருவாகியபோது, எரித்திரியா உருவாக்கியபோது, கிழக்கு திமோர் உருவாக்கியபோது ஏன்  ஈழம் உருவாகவில்லை?. 

நீங்கள் கூறினீர்கள் : "நிச்சயமாக ஈழம் உருவாகாது. இப்போது எல்லா வல்லரசு  நாடுகளுக்கும் இலங்கை தேவைப்படுகின்றது. "

நான் கூறினேன் : எவ்வாறு ஜெர்மனி இரண்டானது இல்லை கொரியா இரண்டானதோ ... "

இரு  வல்லரசுகளின் பிடிகளில் ஒரு நாடு அகப்படும்பொழுது அவை பிரியலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Vankalayan said:

அப்படி என்றால் தென் சூடான் உருவாகியபோது, எரித்திரியா உருவாக்கியபோது, கிழக்கு திமோர் உருவாக்கியபோது ஏன்  ஈழம் உருவாகவில்லை?. 

ஈழம் யாருக்கு தேவை என்பது தான் பிரச்சனை.
தமிழர்களுக்கு தேவையில்லாது விட்டாலும் இந்தியா அமெரிக்கா இப்போது சீனா இவர்களுக்கு தேவை என்றால் தமிழீழம் பிறந்தே தீரும்.

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதற்கான விளக்கக்கட்டுரை உள்ளது. பத்திரிகையாளர்களின் முயற்சியினால்தான் உருவாக்கப்பட்டது. 

ஒரு பத்திரிகையாளர் தன்ர கண்களால் மேலோட்டமாக காண்பவற்றை மட்டுமே சொல்ல முடியும். அதை மீறி தான் கண்ட சம்பவங்களின்ட அடிப்படையில தனக்கு எல்லா உண்மையும் தெரியும் என்பது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணி குண்டை வெடிக்கவைத்து இறந்தவர்கள் மட்டுமே என்டு சொல்றதைப் போலத் தான் அமையும். அத தான் அன்டனி நிக்சன் பின்னணிகள் தெரியாம இங்க சாட்சியம் என்கிற வகையில உளறிக் கொட்டியுள்ளார். இதை வாசித்து பலர் ஏமாறலாம்.  
 
ஒரு பத்திரிகையாளராக கண்ட சம்பவங்கள் பற்றி சொல்லப்படுகிற விஷயங்கள் உண்மையான பின்னணிகளை வெளிப்படுத்த முடியாதவை. அத மீறி தாங்கள் கண்டவற்றை அதுதான் உண்மை என்ட கோதாவில் பதிவு செய்ய ஓர் அரைவேக்காட்டு பத்திரிகையாளரால தான் முடியும்.
 
காலம் காலமாக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சேர்ந்து இயங்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது வரலாறு.

அக்காலத்தில வன்னியில் வாழ்ந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்குவதற்கு (பின்புலமாக) தமிழீழ விடுதலைப் புலிகளும் சிவராமும் தான் மூல காரணம். அந்த முயற்சியை நிறைவேற்ற ஆரம்பத்தில பொது வெளியில் ஈடுபட்ட ஆட்கள் குமார் பொன்னம்பலம், பரராஜசிங்கம், நீலகண்டன் ....... முதல் பலர். இதன் காரணமாகவே சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

கொழும்பில சந்திப்புக்கள் நடந்தபடியா அதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமே இல்லை என்று முழுமுட்டாள்களால் மட்டுமே முடிவெடுக்க முடியும். அதுவும் இப்பிடியான கூட்டங்களில் சில அரசியல்வாதிகள் துவக்குகளை காட்டி பேசினவை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்புல நெறிப்படுத்தல் இல்லாதிருந்தால் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி கூட்டமைப்பு உருவாகி இருக்காது என்கிறது தான் உண்மை. இதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்ககளில ஊடகங்களில வெளிப்படுத்தப்பட்டிருக்கு.

97201535_2286238535004359_82381537236630

97292439_2286238528337693_69023153300606

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

இது பற்றி , யார் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பை உருவாக்கியது என்பது சம்பந்தமாக நேற்றைய Daily  Mirror பத்திரிகையின் Opinion பக்கத்தில் திரு D B S ஜெயராஜ் என்பவர் நல்லதோர் விளக்க கட்டுரை எழுதி இருக்கிறார். முடியுமென்றால் யாரவது அதை இதில் பதிவிடுங்கள். அங்கு எல்லாமே விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று சுமந்திரன் இல்லை என்றால் செய்திக்கே பஞ்சம் ஏட்படும்போல இருக்குது. 

DBS ஐ இன்னமுமா நம்புகிறீர்கள். 😂

இவருடன் ஒப்பிடும்போது Dayan Jeyathilaka எவ்வளவோ மேலானவர். அவர் கூறுவது உண்மையோ பொய்யோ , ஆனால் அவர் தனது இனத்திற்கு விசுவாசமாக இருக்கிறார். 🙂

ஆனால் இந்த மனிதனை சொந்த மனைவி பிள்ளைகளே நம்பப் போவதில்லை. ☹️

1 hour ago, Vankalayan said:

அப்படி என்றால் தென் சூடான் உருவாகியபோது, எரித்திரியா உருவாக்கியபோது, கிழக்கு திமோர் உருவாக்கியபோது ஏன்  ஈழம் உருவாகவில்லை?. 

பூகோள அரசியலைக் கொஞ்சம் கவனியுங்களப்பூ. எல்லாம் புரியும் 😀

1 hour ago, Vankalayan said:

நிச்சயமாக ஈழம் உருவாகாது. இப்போது எல்லா வல்லரசு  நாடுகளுக்கும் இலங்கை தேவைப்படுகின்றது. 

மாற்றம் ஒன்றே மாறாதது. 😎😎😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

கேள்வி - இந்த சர்ச்சையினால் உங்கள் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது?

பதில் - அதனை பற்றி நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை. கவலைப்பட்டதில்லை. தேர்தலில் வெல்வது வெற்றிபெறாததை பற்றி எண்ணி நான் அரசியலில் ஈடுபட்டதில்லை.

கடந்த தேர்தலின்போது முதலாவது பிரசாரக் கூட்டம் கரவெட்டியில்
எனவே இம்முறை தேர்தல் வரும்போது பார்ப்போம். மக்கள் மற்றுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்புகின்றனரா? இல்லை வன்முறையற்ற முறையில் போராட்டத்தை நடத்தி செல்ல விரும்புகின்றனரா? என்பதனை தீர்மானிக்கட்டும். வன்முறைதான் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் எனக்கு அவர்கள் வாக்களிக்கக்கூடாது.

 நேர்கண்டவர் - ரொபட் அன்டனி

https://www.virakesari.lk/article/82146

வெற்றி தோல்வி பற்றி கவலை வராது தானே! தோற்றால் தேசியப்பட்டியல் மூலம் வருவாரே.

தான் தேர்தலில் தோற்றால் வாக்களித்த மக்கள் வன்முறையை/ ஆயுதப்போராட்டத்தை விரும்புபவர்களாம், என்னமா கண்டுபிடிக்கிறார்?!

Link to comment
Share on other sites

8 minutes ago, ஏராளன் said:

தான் தேர்தலில் தோற்றால் வாக்களித்த மக்கள் வன்முறையை/ ஆயுதப்போராட்டத்தை விரும்புபவர்களாம், என்னமா கண்டுபிடிக்கிறார்?!

சுமந்திரன் மிக மிக மிக மிக மோசமான ஏமாற்றுப் பேர்வழி என்கிறதுக்கு இதைவிட வேறென்ன வேணும்?

Link to comment
Share on other sites

20 hours ago, ampanai said:

கேள்வி - பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை ஏற்கமாட்டேன் என்று ஏன் கூறுகின்றீர்கள்?
பதில் - பிரபாகரனின் ஆயுத போராட்டத்தை ஏற்கமாட்டேன் என்று நான் எப்போதும் கூற மாட்டேன். நான் அவ்வாறு இந்த செவ்வியிலும் கூறவில்லை. புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை நீங்கள் ஏற்கின்றீர்களா? ஆல்லது உடன்படுகின்றீர்களா? என்பதே குறித்த செவ்வியில் எழுப்பப்பட்ட கேள்வியாகும். நான் அதற்கு இல்லை என்று கூறிவிட்டு உடனடியாகவே நானாகவே அதற்கான காரணத்தையும் கூறினேன். நான் எப்போதுமே வன்முறைகளை வெறுப்பவன். ஆயுத முறைமையை நான் ஏற்கமாட்டேன். ஆயுதத்தினால் செய்யப்படுகின்ற வன்முறையை நான் ஏற்கமாட்டேன். எதனையும் அடைவதற்கு ஆயுத முறையை பிரயோகிப்பதை ஏற்பனவன் அல்ல நான். வன்முறை பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு முறையாக இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

எல்லாக் காலங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் போராடாமல் இருப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கவே செய்யும். சுதந்திரமடையாமல் இருப்பதற்கும் அதுதான் ஒரே வழி. #பிடல்காஸ்ட்ரோ

போராடாமல் சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எப்போதும் வளர்த்துக் கொள்ளக்கூடாது #சேகுவேரா.

போராடினால் மட்டுமே வாழ்வு. #வேலுப்பிள்ளைபிரபாகரன்.

Link to comment
Share on other sites

14 hours ago, Vankalayan said:

அப்படி என்றால் தென் சூடான் உருவாகியபோது, எரித்திரியா உருவாக்கியபோது, கிழக்கு திமோர் உருவாக்கியபோது ஏன்  ஈழம் உருவாகவில்லை?. 

தேசிய இனங்களும் பிரிந்த நாடுகளும்

2007ல் செர்பியாவிலிருந்து எட்டுலட்சம் மக்கள் தொகை கொண்ட மொன்ரேநேக்கிறோவும், 2008ல் இருபது இலட்சம் மக்கள் தொகையுடன் கொசொவோவும் பிரிந்து சென்று தனித்தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக விளங்குகின்றன.

1923 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியம் இறையாண்மையுள்ள ஓர் நாடாக விளங்கிற்று. தேசிய இனங்களின் இறையாண்மை அரசியல் சட்டப்படியே ஏற்பளிக்கப்பட்டிருந்தது. 1991ல் தேசிய இனங்கள் பிரிந்து இறையாண்மையுள்ள குடியரசுகளை நிறுவிக் கொண்டன.

Link to comment
Share on other sites

15 hours ago, tulpen said:

அம்பனை எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிப்பதற்கு ஶ்ரீலங்கா அரசாங்கங்கள் போராட்டம் தொடங்கிய 1980 காலப்பகுதியிலேயே ஆரம்பித்து விட்டன. எங்கெல்லாம சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதைப்பயன்படுத்தி சிறப்பான பரப்புரைகளை ஶ்ரீலங்கா அரசு செய்தே வருகிறது. அது இயல்பானது. ஆகவே  அது பற்றி நாம் விவாதிப்பதோடு அவர்களின் அவ்வாறான பரப்புரைகளுகு எமது தரப்பில் எப்படியெல்லாம் எம்மையறியாது  நாம்  உதவி செய்தோம் என்று எம்மிடையே கலந்துரையாடுவதன் மூலம்  எதிர்கால சந்திதி அத்தவறுகளை அறிந்து அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும். அதை விடுத்து முழுத்தவறும் அடுத்தவன் மீது போட்டு எமது பொறுப்பை தட்டிக்கழிப்பது மீண்டும் அப்படியான நச்சு வளையத்திற்கு எம்மை அழைத்து செல்லலாம். 

ஒரு இனத்துக்குத்தான் இறையாண்மை சொந்தமானது.  அந்த இறையாண்மை, அது வாழும் நாட்டினுடையதாக உணரப்படும்.

ஒரு இனம் நிலையான நாடு என்பது அழியக்கூடியது, மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியது. ஒர் இனம் தனது நாட்டை இழந்து அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் கூட அதன்; இறையாண்மை அதனுடனேயே இருக்கிறது. அந்த இனம் மீண்டும் ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ளும் போது, அந்த நாடு இறையாண்மை மிக்க நாடாக விளங்குகின்றது.

தங்கள்தாயகத்தை இழந்து, உலகம் முழுவதும் உரிமைகள் இழந்தவராகப் பரவிக் கிடந்த யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948ல் வல்லாதிக்க நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் என்ற அதுவரை உலக வரைபடத்தில் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். இஸ்ரேல் இன்று ஒரு இறையாண்மை மிக்க நாடு. இந்த இறையாண்மை, உலக வரைபடத்தில் இல்லாதிருந்த இஸ்ரேலுக்கு எங்கிருந்து வந்தது, அது ஒரு இனத்திற்கே உரித்தான, பிரிக்கவியலாத பண்பு ஆகும். 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமது தாயகக் கனவை சுமந்து வந்துள்ளார்கள் யூதர்கள். இவர்கள் எந்த மொழி பேசி எங்கு வாழ்ந்தாலும் தமது தாயகக் கோட்பாட்டை மறந்ததும் இல்லை, தமது இளம் சமூகத்திற்கு கடத்தத் தவறியதுமில்லை.

இஸ்ரேலிடம் தமது நாட்டை இழந்துவிட்ட பாலஸ்தீனியர்கள், 1967ல் யோர்த்தானிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட யோர்த்தான் நதியின் மேற்குக்கரை மற்றும் எகிப்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட காசா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அது ஒரு தேசிய இனமாக ஏற்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அவையில் முழு உறுப்பினராக இல்லாவிடிலும் பார்வையாளர் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் தனது நாட்டைப் பிரகடனம் செய்யும் போது அது ஒரு இறையாண்மையுள்ள நாடு ஆகும். இந்த இறையாண்மை பாலஸ்தீன தேசிய இனத்திடமிருந்து வருகிறது.

மேற்காணும் இவ் உவமைகள் ஈழத்தமிழர் அரசியலிற்கும் பொருந்தும். ஆனால் இவ்விரண்டு நாட்டினரின் சூழலில் நாம் இல்லை என்பது வருத்தமான உண்மை. இனப்படுகொலையின் 11 ஆண்டுகளைக் கடந்து நினைவேந்தி நிற்கும் இவ்வேளை எமது இனத்தின் உரிமைகளை அறவழியில் வென்றெடுக்க உலகில் உள்ள அனைத்துத்தமிழ் அமைப்புக்களும் செயலாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பமே தெரியாத ஒருவருக்கு தமிழ்த் தேசிய வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. அவ்வாறு இருக்கையில் இவருக்கு த்மிழர் வரலாறும் தமிழீழ விஒதலைப் போராட்டமோ அல்லது போராட்டத்திற்கான காரணங்களோ அதிலுள்ள நியாயங்களோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ☹️

ஆகவே,

இவர் எப்படி எமக்கான நியாயத்தைப் பெற்றுத்தரப் போகிறார்🤔

பாவம் சம்பந்தர் ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.