Jump to content

சீன - அமெரிக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து இலங்கையின் அவதானம்

Recommended Posts

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் இரு முக்கிய தொலைப்பேசி உரையாடல்களில் கலந்துக்கொண்டிருந்தார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரது தொலைபேசி அழைப்புகள் இலங்கையில் மாத்திரமல்லாது பிராந்திய அரசியலில்  முக்கியத்தும் மிக்கதாக அமைந்துள்ளது

இந்த கலந்துரையாடலின் போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபட் ஓ பிறைன் இலங்கைக்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்து தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தொலைபேசியல் தொடர்புக்கொண்டார்.

gptabaya.gif

மேலும் அமெரிக்கா - இலங்கைக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்புமானது நீண்ட வரலாற்றைக் கொண்டமைந்தது என்றும் அவர் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன் இந்த உரையாடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முயற்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடியதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பகுதியாகும் என்பதை ரொபட் ஓ பிறைன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மறுப்புறம் கொவிட் -19 இன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் அதேவேளையில் சீனாவும் இலங்கையும் பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோதபாயவுடன் இடம்பெற்ற உரையாடலின் போது சீன ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இரு நாடுகளும் முக்கிய ஒத்துழைப்பு திட்டங்களை ஒழுங்காக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன் புதிய பட்டு வழிப்பாதை திட்டத்திற்காக உச்ச முக்கியத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன் போது கேட்டுக் கொண்டிருந்தார்.

இரு நாடுகளுமே மிக தெளிவான தமது எதிர்கால திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து ஜனாதிகதி கோதாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளனர். அதாவது புதிய பட்டுவழிப்பாதை திட்டத்திற்கு இலங்கை முன்பை விட வலுவாக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை சீன ஜனாதிபதி வலியுறுத்துகையில் , இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை முக்கியமான பகுதி என்பதை அமெரிக்கா மிக அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கையுடன் நட்பை கொண்டாடும் சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கு சவாலாகி விட கூடாது என்பதே உணர்த்தப்பட்டுள்ளது.தென்சீன கடலில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை மையப்படுத்தியே அமெரிக்க இந்த விடயத்தை முன்கூட்டியே இலங்கைக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/82191

Link to comment
Share on other sites

மகிந்த அண்ட் கோவின் வெளிவிவகார கொள்கை அண்மைக்கலாமாக இலங்கையை சீன வழியிலேயே இட்டு செல்கின்றது. 

சீனாவையும் கைவிட சீன அரசு விடாது. 

ஆகவே, அவர்கள் அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் 'நாங்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல, எமது நலன் சார்ந்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்' என்ற அணுகுமுறை சாத்தியமாகாமல் போகலாம். காரணம் - கோவிட்19 ன் பின்னராக மாறும் உலக ஒழுங்கு. 

Link to comment
Share on other sites

இன அழிப்பினூடாகத் தமிழீழ நடைமுறை அரசை அழிப்பதில் பங்கு வகித்ததனூடாக இந்தியா/அமெரிக்கா  சாதித்தது என்ன? 

மேற்குலக / இந்திய வெளியுறவு கொள்கைள் 'பயங்கரவாதம்' என்ற சுயநலத்திற்குள் சென்றிவிட, சீனா அந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டது. 

கோவிட் 19 இன்றொரு புதிய சந்தர்ப்பத்தை தந்து நிற்கின்றது. 

இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் முட்டாள்தனத்தினால் ஒரு வலுக் குறந்த நாடான சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமது வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டிய நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது இந்தியா.

இது இராஜதந்திர மட்டத்தில் மீளவே முடியாத ஒரு அவமானகரமான தோல்வி.

இது இந்திய மக்களுக்கு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தில் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு காரணங்களின் சிறப்பால் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக திருகோணமலைத் துறைமுகம் விளங்குகிறது.

ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதன் மூலம் திருகோணமலைத் துறைமுகத்தை தனது பாதுகாப்பிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் இந்திரா காந்தி.

அதுதான் எமக்கு ஆதரவளிக்க காரணமேயொழிய வேறு ஒன்றும் கிடையாது.

இன்று புலிகளை அழிக்க துணைபோனதனூடாக அதை அமெரிக்காவிடம் தாரை வார்க்கும் நிலைக்கு வந்தது மட்டுமல்ல பிராந்திய அரசியலில் – இருப்பில் பாதுகாப்பற்ற ஒரு ஸ்திரத்தன்மைக்குள்ளும் வந்து சேர்ந்து விட்டது இந்தியா.

பிராந்திய அரசியலில் – இந்து சமுத்திர பரப்பில் இந்தியாவின் வகிபாகம் கேள்விக்குட்படுத்த முடியாமல் அப்படியே இருந்தது. ஆனால் இன்று சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற் படையினரின் தங்குமிடங்களாக இலங்கை தீவின் துறைமுகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

இது தமிழர்களை  அழிப்பதற்காக எழுதிய அடிமை சாசனத்தின்படி சிங்களமும் – தமது முட்டாள்தனத்தினால் இந்தியாவும் சேர்ந்து கொடுக்கும் விலை இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ampanai said:

101 % ..👌

Link to comment
Share on other sites

18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

101 % ..👌

நன்றி தோழர். 

மாலைதீவில் இந்தியா அரச மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது என்கிறார்கள். 

ஒரு பக்கம் ஐரோப்பா வரை பாகிஸ்தான் ஊடாக பட்டுப்பாதை மறுபக்கம் செயற்கை தீவுகள் என சங்கிலி வலையை போடுகின்றது சீன அரசு. கைவசம் உயிர்க்கொல்லி வைரசுகளையும் வைத்துள்ளது. 

இலங்கையிலும் கொழும்பில் செயற்கை தீவை கட்டிமுடித்துள்ளதுடன் அம்பாந்தோட்டைக்கு அருகிலேயே கட்தடவும் உள்ளதாம். 

அமெரிக்க நாடு தென் சீன கடலில்  இருந்த கவனத்தை தற்பொழுது மற்றைய இடங்களுக்கும் திருப்பி கொண்டு வருகின்றது. 

Link to comment
Share on other sites

On 17/5/2020 at 10:36, ampanai said:

எனவே இலங்கையுடன் நட்பை கொண்டாடும் சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கு சவாலாகி விட கூடாது என்பதே உணர்த்தப்பட்டுள்ளது.தென்சீன கடலில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை மையப்படுத்தியே அமெரிக்க இந்த விடயத்தை முன்கூட்டியே இலங்கைக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

சிங்களம் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று கூற வைத்தமைக்கு கூறியதற்கும் இந்த இரண்டு தொலை பேசி அழைப்புக்களும் இடையில் சம்பந்தம், ஒரு சரித்திரம் உள்ளது.  

Link to comment
Share on other sites

'இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை ஆத்திரமூட்டும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளில், சீன அரசு ஈடுபட்டு வருகிறது' என, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டி உள்ளது' - 'சீனா மீதான, அமெரிக்காவின் அணுகுமுறை' என்ற தலைப்பின் கீழ், வெள்ளை மாளிகை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2544386

Link to comment
Share on other sites

அமேரிக்கா, சீனாவை அடுத்தது இந்தியாவும் அதி உயர் மட்ட அளவில் சிங்களத்துடன் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 

சிங்கள தலைமைகள் எடுக்கும் முடிவுகள் அதன் தலைவிதியையும், தமிழினத்தின் விடிவையும் நிர்ணயிக்கலாம். 

அடுத்த அமெரிக்க தலைவர் தொடர்ந்தும் ட்ரம்ப்பாக இருந்தால், சீனா மீதான அழுத்தங்கள் அதிகமாக  தொடரும். ஜோ பைடன் வென்றாலும், இந்திய - பசுபிக் கடல்பரப்புக்களில் அமெரிக்க - சீன  அரசியல் - இராணுவ போட்டிகள் தொடரும். 

Link to comment
Share on other sites

100937543_1612122675617403_9110158215055671296_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=7oa04Rv1k6IAX8aIc4L&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=43a06e059c42c25c5627624605733645&oe=5EF11E75
 
சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக தொடர்புகள் இறுக்கமான நிலையை அடைந்த நிலையில், அமெரிக்காவின் வழியை தொடர்ந்த அவுஸ்திரேலியா மீதும் இறுக்கமான வர்த்தக வரிகளை அந்நாடு விதித்துள்ளது.
 
எனினும், அவுஸ்திரேலியாவின் ஒரு மாநிலமான விக்ரோறியா மீது அந்த நெருக்கடிகள் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அந்த மாநிலம் சீனாவுடன் மேற்கொண்ட வர்த்தக உடன்படிக்கை தான் காரணம்.
 
பட்டுப்பாதை திட்டம் எனப்படும் சீனாவின் இந்த திட்டத்தில் இதுவரை 100 இற்கு மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
 
அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற பெயரில் இலகு கடன்களை வழங்கி கடனாளியாக்கி விடுவார்கள் மட்டுமல்ல. புலனாய்வு ரீதியாக பலவீனமடைந்துவிடுவோம் என்றும், அதனால் அமெரிக்கா அவுஸ்மிரேலியாவை கைவிடவேண்டிவரும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கிறது.
 
இதனால், அவுஸ்திரேலியா சில நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும். ஏற்கனவே மாநில முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, அவுஸ்திரேலிய சமஷ்டி அரசும் கேட்கிறது.
 
இப்போது இந்த திட்டத்தில் இலங்கையும் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறது. இலங்கை போன்ற பொருளாதார ரீதியாக சிறிய நாடுகளுக்கு இது சிக்கலான நிலை. இதனால் அமெரிக்கா சீனா என்ற போட்டியில் பல அழுத்தங்கள் வரலாம். அவற்றுக்கு சில துருப்புச்சீட்டுகள் அவற்றுக்கு தேவைப்படும்.
 
அங்கும் பயன்படுத்தப்படுபவர்களாக இல்லாமல் பயன்படுபவர்களாக தமிழர்கள் இருக்கவேண்டும்.
 
அந்த நிலையில் இருக்கிறோமா என்பதே கேள்வி.
 
நன்றி- கீதன் இளையதம்பி
 
Link to comment
Share on other sites

56 minutes ago, ampanai said:

அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற பெயரில் இலகு கடன்களை வழங்கி கடனாளியாக்கி விடுவார்கள் மட்டுமல்ல. புலனாய்வு ரீதியாக பலவீனமடைந்துவிடுவோம் என்றும், அதனால் அமெரிக்கா அவுஸ்மிரேலியாவை கைவிடவேண்டிவரும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கிறது

இந்த நிலமை இலங்கையில் வந்தமைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பாக இந்தியாவும் காரணம். 

விடுதலைப்புலிகளை அவர்களின் மேற்குலக / இந்திய ஆதரவான அரசை அழித்து இன்று முழு தீவையும் சீனாவிடம் இழக்கும் நிலை. 

13ஆவது திருத்த சட்டத்தையாவது இந்தியா இறுக்கமாக அமுல்படுத்தாவிடடால், இந்தியாவை சீன அரசு சுற்றி வளைத்துவிடும்.  
 
Link to comment
Share on other sites

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்... தமிழ் ஈழமும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.