Jump to content

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட 11 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட 11 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்…

May 17, 2020

Covid-19-Quar.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார்.

யாழில்.கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

நீதவானின் கட்டளையை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிசார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் கைகளில் கையளித்துள்ளனர்.
 

http://globaltamilnews.net/2020/143076/

Link to comment
Share on other sites

சொறிலங்கா சிங்கள அரச பயங்கரவாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் உட்பட 11 பேர் தனிமைப்படுத்தல் – நீதிமன்றம் பரபரப்பு கட்டளை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஸ், வரதராஜா பார்த்தீபன் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் நீதிமன்றம் ஊடாக பொலிஸாரால் கட்டளை பெறப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி நினைவேந்தல்களை அனுஷ்டித்ததாக குறித்த 11 பேரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கண்காணிக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கட்டளையிடுவதாக குறித்த நீதிமன்ற கட்டளையில் நீதிபதி பீட்டர் போல் தெரிவித்துள்ளார்.

  • கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
  • செல்வராஜா கஜேந்திரன்
  • விஸ்வலிங்கம் மணிவண்ணன்
  • கனரட்ணம் சுகாஷ்
  • நடராசா காண்டீபன்
  • வரதராஜன் பாா்த்திபன்
  • தனுசன்
  • கிருபாகரன்
  • கனகசபை விஸ்ணுகாந்
  • சுதாகரன்
  • தமிழ்மதி

ஆகியோருக்கே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வந்த அஞ்சலி நிகழ்வுகளின் எதிரொலியாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றமசுமத்தியுள்ளது.

  • FB_IMG_1589735842530.jpg?189db0&189db0
  • or1-1-696x934-1.jpg?189db0&189db0
 
 

 

 

Link to comment
Share on other sites

எல்லோரும் சடடத்தை மதிக்க வேண்டும். இது சடடப்படி எடுத்த நடவடிக்கை என்பதால் சொல்வதட்கு ஒன்றுமில்லை. இடை வெளியை பின்பற்றி நிகழவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்குப்பிட்டியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன்; ‘தனிமைப்படுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்

Bharati May 18, 2020 சங்குப்பிட்டியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன்; ‘தனிமைப்படுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்2020-05-18T07:45:50+00:00Breaking news, உள்ளூர்


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் சங்குப்பிட்டியைச் சென்றடைந்த போது நிறுத்தப்பட்டதாக விக்கினேஸ்வரன் அங்கிருந்து தெரிவித்தார். அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தம்மைத் தடுத்து வைத்துள்ள படையினர், தம்மிடம் “தனிமைப்படுத்தல் றிப்போர்ட்” கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


 
தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே இருப்பதாகவும், உரிய சுகாதார முறைப்படிதான் முள்ளிவாய்காலுக்குச் செல்வதாகவும் தெரிவித்த விக்கினேஸ்வரன், நேற்றிரவே இதற்கான அனுமதியை பொலிஸாரிடமிருந்து தான் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் பதிலளித்திருக்கின்றார். இருந்த போதிலும், மேலிடத்துடன் தொடர்புகொள்வதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக தினக்குரலுக்குத் தெரிவித்த விக்கினேஸ்வரன், தாம் அனைவரும் உரிய சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்த வாறு, ஒரே வாகனத்தில் வராமல் பல வாகனங்களில் பத்துப் பேர் மட்டுமே வந்ததாகவும் குறிப்பிட்டார். விக்கினேஸ்வரனுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், சிற்பரன் உட்பட சுமார் பத்துப்பேர் மட்டுமே வந்திருப்பதாகத் தெரிகின்றது.

http://thinakkural.lk/article/42181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-court-720x447.jpg

நீதிமன்றம் கட்டளை தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து, மன்றிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் நேற்று கட்டளையிட்டிருந்தார்.

யாழில்.கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ, தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதவான், 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணிக்கப்பட்டு மன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://athavannews.com/நீதிமன்றம்-கட்டளை-தொடர்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

 

  •  
  • or1-1-696x934-1.jpg?189db0&189db0

யாழ்ப்பாணத்தில் உள்ள.... நீதவானின் உத்தரவிலேயே... 
எத்தனை எழுத்துப் பிழைகள்... உள்ளதை கவனித்தீர்களா?

ஆக  மிகப் பெரிய தவறு, கீழே... நீதிமான் நீதிமன்றம்  என்று எழுதுவதற்கு பதிலாக...
நிதிவான் நிதிமன்றம்   என்று  எழுதப் பட்டுள்ளது. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் உள்ள.... நீதவானின் உத்தரவிலேயே... 
எத்தனை எழுத்துப் பிழைகள்... உள்ளதை கவனித்தீர்களா?

ஆக  மிகப் பெரிய தவறு, கீழே... நீதிமான் நீதிமன்றம்  என்று எழுதுவதற்கு பதிலாக...
நிதிவான் நிதிமன்றம்   என்று  எழுதப் பட்டுள்ளது. 😲

இதில் என்ன பிழையை கண்டு பிடித்தீர்கள்.நடைமுறைக்கு ஏற்றவாறு எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நீதி வழங்கவும் நிதி வேண்டும் என்பதை புரியாதவரா நீங்கள்......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Court-Order.jpg

11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்றது யாழ் நீதிமன்றம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

“தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும்

அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது” என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகளும் பொலிஸ் தரப்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்வைத்த நீண்ட சமர்பணத்தினை முன் வைத்திருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் நேற்று கட்டளையிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் செயலாளர் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதிவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைக்கப்பட்டு மன்றிடம் விண்ணப்பம் விடுத்தனர். அதனடிப்படையில் வழக்கு திறந்த மன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் அழைக்கப்பட்டே குறித்த கட்டளை வழங்கப்பட்டது.

http://athavannews.com/11-பேரையும்-வீடுகளில்-தனிம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் உள்ள.... நீதவானின் உத்தரவிலேயே... 
எத்தனை எழுத்துப் பிழைகள்... உள்ளதை கவனித்தீர்களா?

ஆக  மிகப் பெரிய தவறு, கீழே... நீதிமான் நீதிமன்றம்  என்று எழுதுவதற்கு பதிலாக...
நிதிவான் நிதிமன்றம்   என்று  எழுதப் பட்டுள்ளது. 😲

பிள்ளை அவசரத்தில் டைப்பண்ணியிருப்பா, பெரிசு பண்ணி வேலைக்கு ஆப்பு வைச்சிடாதையுங்கோ... 😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் உள்ள நீதிபதிகளுக்கு என்ன பைத்தியமா..

சொறீலங்கா இராணுவம் அல்லது பொலிஸ் சொல்வதற்கு எல்லாம் ஆமாப் போடுவது என்றால்.. எதற்கு நீதிமன்றம். 

திட்டமிட்டு.. கொரோனா தனிமைப்படுத்தலை.. தவறாகப் பயன்படுத்தும் சொறீலங்கா இராணுவம் பொலிஸ் மற்றும் அரசுக்கு எதிராக நீதிமன்றம் எந்த கூற்றையும் பிறப்பிக்காதது கவலை அளிக்கிறது.

எந்த மருத்துவச் சான்றும் இன்றி..  அரச ஏவலுக்கு பொலிஸ் செய்யும் தில்லுமுல்லுக்கு ஏற்ப நீதிமன்றம் எப்படி கட்டளை பிறப்பிக்க முடியும்..???! 

இதில் நீதிபதியின் தவறும் உள்ளது.  இருந்தாலும் மீளாய்வு மனுவில்... அதனை வெளிப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணிகளை பாராட்டியே ஆக வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

சொறீலங்காவில் உள்ள நீதிபதிகளுக்கு என்ன பைத்தியமா..

சொறீலங்கா இராணுவம் அல்லது பொலிஸ் சொல்வதற்கு எல்லாம் ஆமாப் போடுவது என்றால்.. எதற்கு நீதிமன்றம். 

திட்டமிட்டு.. கொரோனா தனிமைப்படுத்தலை.. தவறாகப் பயன்படுத்தும் சொறீலங்கா இராணுவம் பொலிஸ் மற்றும் அரசுக்கு எதிராக நீதிமன்றம் எந்த கூற்றையும் பிறப்பிக்காதது கவலை அளிக்கிறது.

எந்த மருத்துவச் சான்றும் இன்றி..  அரச ஏவலுக்கு பொலிஸ் செய்யும் தில்லுமுல்லுக்கு ஏற்ப நீதிமன்றம் எப்படி கட்டளை பிறப்பிக்க முடியும்..???! 

இதில் நீதிபதியின் தவறும் உள்ளது.  இருந்தாலும் மீளாய்வு மனுவில்... அதனை வெளிப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணிகளை பாராட்டியே ஆக வேண்டும். 

சரியான கருத்து. நீதியை தொலைத்துவிட்டு நிதிபதியாகிவிட்டதால் வந்த வினை.

திரு ஜயந்த குணரட்ன மற்றும் கிஷாலி, ஜெஹான் ஆகியோர் சுதந்திரத்துக்கு பின் இலங்கையின் நீதி துறையால் சிறுபான்மையினர் தொடர்பான வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் கூடுதலான சந்தர்ப்பங்களில் அந்த சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்ததை ஆதாரத்துடன் புத்தகமாக எழுதியிருந்தனர். (The Judicial Mind In Sri Lanka; Responding To The Protection Of Minority Rights By Jayantha de Almeida Guneratne, Kishali Pinto-Jayawardena and Gehan Gunatilleke). எனவே இந்த நீதித்துறை கலாச்சாரம் நன்றாக ஊறிப்போன ஒன்று.

இன்றைய இந்த உதாரணத்தில் சட்ட வல்லுநர்களை பாவித்து தீர்ப்பை இவர்கள் மறுபரிசீலிக்க வைத்துளார்கள். ஆனால் ஒரு தனிமனிதன் அதுவும் நிதி/பொருள் வளம் இல்லாத அப்பாவி தமிழ் குடிமகனால் அநீதிகளை சுமந்து வாழ்வுதான் ஒருவழி. இந்த நிலை மாறவேண்டும் என்ற காரணத்தால் தான் அன்று நார்வே பேச்சுவார்த்தை நேரத்தில் ஸ்தாபிக்கப்படட  சர்வதேச புலமையாளர் குழு (The International Independent Group of Eminent Persons (IIGEP)) பேராசிரியர் ஐவன் சேரர் (Prof. Ivan Sherer) சாட்சியாளர்களும் வழக்குத்தொடுநர்களுக்கும் நிதி மற்றும் சட்ட உதவிக்கு ஒரு கட்டமைப்பு தேவை என்று வலியுறுத்தியிருந்தார்.

இதோபோல தான் அமெரிக்காவிலும் நீதிமன்றுகளின் தீர்ப்புகள் கறுப்பினத்தவருக்கு எதிரான இனவாதத்தை கூர்மைப்படுத்தியது என்று பல ஆய்வுகள் உள்ளன. இப்படியான அடிப்படை காரணிகளின் (root causes of a conflict) தாக்கத்தால் ஒடுக்கப்படட ஒரு இனம் தன்னை மீட்க எல்லாவழிகளையும் தேடி தனது பயணத்தை தொடர்கிறது. ஆனால் சிலர் மற்றவர்கள் கடந்தது வந்த அநீதிகளையும் அதன் விளைவுகள், எதிர்வினைகளை புறக்கணித்துவிட்டு எழுந்தமானமாக பேட்டி கொடுப்பதும் அதட்கு பின்னர் விளக்கம் கொடுப்பதிலும் தம்மை திருப்திபடுத்திக்கொள்வது தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிக்கல்  நேற்றுத் தெரியாத நீதிபதிக்கு இன்றுதான் தெரிந்திருக்கின்றது
எல்லாம் அவன் செயல்
அவன் என்றால் யாரும் இல்லை
அவனேதான்

Link to comment
Share on other sites

அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம், பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கின்றோம் கஜேந்திரகுமார்

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல் சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றன.

எனவே எமது உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம் பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில்  இன்றுவரை நாம் சோரம் போகாமல் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாலும் எம்மை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதாலும் எமக்கு பல்வேறு முட்டுக்கடடைகளை போட்டு எம்மை அழிக்க துடிக்கின்றனர்.

அதற்காக சட்ட விரோதமாக சட்டத்தை பாவிக்கின்றனர், எனினும் எமது பயணம் ஓயாது. நாம் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பலரும் பல இடங்களில் நினைவு கூர்ந்தனர். எனினும் எமது கட்சியையும் எமது உறுப்பினர்களையும் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினை காரணம் காட்டி அரசு அரசியல் பின்நோக்கத்திற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மேலும் எமது கட்சியின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மீது இராணுவத்தினரும் பொலிஸாரும் பல வழிகளில் அச்சுறுத்தல்களை பிரயோகித்துள்ளனர்.

சிலர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண் உறுப்பினர்களை இராணுவத்தின் ஊடாக சுடுவோம் எனவும் பொலிஸார் மிரட்டியுள்ளனர்.

எனவே எமது உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம், பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம். மிக விரைவில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/அச்சுறுத்தல்களை-மேற்கொண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Bild

கொரோனாவை காரணம் காட்டி தமிழர்களை  முள்ளிவாய்க்கால்  நினைவு நாளை அனுஷ்டிக்க விடவில்லை. அதே நேரம் போர் வெற்றி கொண்டாட எவ்வித தடையுமில்லை.

சிங்களவருக்கு ஒரு நீதி/சட்டம்
தமிழருக்கு ஒரு நீதி/சட்டம்

கண்ணுக்கு முன்னால் இவ்வளவு நடக்கும் போதும்  சிங்களத்துக்கும் சம்சும் கோஷ்டிக்கும் வக்காளத்து வாங்கும்  ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

Bild

கொரோனாவை காரணம் காட்டி தமிழர்களை  முள்ளிவாய்க்கால்  நினைவு நாளை அனுஷ்டிக்க விடவில்லை. அதே நேரம் போர் வெற்றி கொண்டாட எவ்வித தடையுமில்லை.

சிங்களவருக்கு ஒரு நீதி/சட்டம்
தமிழருக்கு ஒரு நீதி/சட்டம்

கண்ணுக்கு முன்னால் இவ்வளவு நடக்கும் போதும்  சிங்களத்துக்கும் சம்சும் கோஷ்டிக்கும் வக்காளத்து வாங்கும்  ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

சம் சும் மாவை கும்பல் கூவித்திரிந்த நல்லாட்சி சனாதிபதி மைத்திரியும் கூட உட்கார்ந்திட்டார்.

அடிப்படையில் தமிழனை அழிப்பதில் அடிமைப்படுத்துவதில் சிங்களவர்கள் ஒத்தகருத்தில் இருக்கின்றனர்.

ஆனால்.. தமிழர்களின் விடுதலையில் உரிமை மீட்பில்.. தமிழர்களிடையே ஒத்த கருத்தில்லை.. ஒற்றுமையும் இல்லை.

இதுதான் தமிழர்களின் சாபக்கேடு. இதுவே அவர்களை சிங்களவர்களிடம்.. அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

 

Bild

கொரோனாவை காரணம் காட்டி தமிழர்களை  முள்ளிவாய்க்கால்  நினைவு நாளை அனுஷ்டிக்க விடவில்லை. அதே நேரம் போர் வெற்றி கொண்டாட எவ்வித தடையுமில்லை.

சிங்களவருக்கு ஒரு நீதி/சட்டம்
தமிழருக்கு ஒரு நீதி/சட்டம்

கண்ணுக்கு முன்னால் இவ்வளவு நடக்கும் போதும்  சிங்களத்துக்கும் சம்சும் கோஷ்டிக்கும் வக்காளத்து வாங்கும்  ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

97313238_879053229224828_1345837451129651200_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=WwFpwBSUOQ4AX-3yAZO&_nc_ht=scontent-frx5-1.xx&oh=84e6319bb803b34138c48d0822699485&oe=5EE9BA7C

98343036_879051832558301_4048866554702462976_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=XwIFo8k0vUkAX_4selV&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1698ac1be54a3017b7ccd717da9ad2a6&oe=5EE9D67D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.