Jump to content

கோவிட்-19 | நாய்களைக் கொண்டு நோயை முகர்ந்தறிய ஆராய்ச்சி!


Recommended Posts

கோவிட்-19 | நாய்களைக் கொண்டு நோயை முகர்ந்தறிய ஆராய்ச்சி!

 
 

கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளவர்களை நாய்கள் முகர்ந்தறியுமா எனப் பரிசோதனை செய்வதற்கு பிரித்தானிய விஞ்ஞானிகள் தயாராகிறார்கள். இது வெற்றி பெறுமாயின், விரைவாகவும், உடலைத் தொடாமலும் நோயாளிகளைக் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல நோய்களுக்கான கல்வி நிறுவனம், டுர்ஹாம் பல்கலைக்கழகம், மருத்துவப் பாவனையில் நாய்கள் ஆகிய அமைப்புகளுக்கு, பிரித்தானிய அரசு 500,000 ஸ்டேர்லிங் பவுண்டுகளை வழங்கியிருக்கிறது.

சில வகையான புற்றுநோய்களை முகர்ந்தறிவதில் ஏற்கெனவே நாய்களைப் பாவிக்கும் வழக்கம் உண்டு. அதை விரிவுபடுத்தி கோவிட்-19 நோயை விரைவாகக் கண்டுபிடிக்க முடியுமா என ஆராய்வதே இந்த முயற்சி” என புதுமைகளுக்கான அமைச்சர் (Innovation minister) ஜேம்ஸ் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

லப்ரடோர் மற்றும் கொக்கெர் ஸ்பானியெல் ரக 6 நாய்களுக்கு கோவிட்-19 நோயாளிகளின் மணத்தை ஊட்டுவதன் மூலம், அந்த மணமற்றவர்களை வேறுபடுத்துவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம். நோயறியும் நாய்கள் (Medical Detection Dogs) என்ற ஒரு அற நிலையம் இப்படியான பயிற்சிகளை வழங்கிவருகிரது. புற்றுநோய், மலேரியா, பார்க்கின்சன்ஸ் ஆகிய சில நோய்களை முகர்ந்தறிவதற்கு நாய்களை இன் நிலையம் பயிற்றுவித்திருக்கிறது.

 
 

இப் பயிற்சியில் வெற்றி பெற்றால், பொது இடங்களிலும், விமான நிலையங்கள் போன்ற இடங்களிலும் இந்நாய்களைப் பணிக்கமர்த்துவதன் மூலம் ஒரு மணித்தியாலத்தில் 250 பேரை முகர்ந்தறியக்கூடிய வாய்ப்புகளுண்டு.

அமெரிக்காவிலும், பிரான்சிலும் நாய்களை நோயறியப் பயிற்றுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதே வேளை, அமெரிக்கா, நெதர்லாந்து, ஹொங் கொங் ஆகிய நாடுகளில் நாய்களுக்கு அவர்களது எசமான்களிலிருந்து கோவிட்-19 தொற்றியிருக்கின்றது எனவும் தெரியவருகின்றது.

https://marumoli.com/கோவிட்-19-நாய்களைக்-கொண்டு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு பரவி நோயில்லாமல் இருப்பவனுக்கு நோயை கொடுக்காமல் இருக்கனும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.